இதை போட தேவையிருக்கும் என நினைக்கவில்லை. என்ன செய்வது, வேறு வழியில்லை.
ஒரு போர் அறிவிப்பாக நான் வெளியிட்ட இப்பதிவிலேயே கூறியிருந்தேன், தனிமனித தாக்குதல்கள் உள்ள பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று.
இப்போது சற்றே மாற்ற வேண்டியுள்ளது, கேள்விகள் விஷயத்தில். பொது வாழ்க்கையில் உள்ள சிலரது தனிப்பட்ட வாழ்க்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றை வெளியிடுவேன், ரொம்பவும் ஆபாசமாக இல்லாதிருந்தால். ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேச இயலாது என்பது போன்ற பதில்கள்தான் அவற்றுக்கு. கலைஞரோ அல்லது வேறு தலைவரோ பலதாரங்களை மணந்து கொள்வது சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினை. வெளி ஆட்கள் அதில் வந்து குழப்பம் செய்யாது இருத்தல் நலம்.
கேள்வி பதில்களை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன். இப்போது அவற்றில் ஒரு ஒழுங்கை கொண்டு வர நினைக்கிறேன். இந்த விஷயங்களில் எனது ரோல் மாடல் சோ அவர்களே. அவர் அளவுக்கு நேர்மையான பதில்கள் தர முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.
அதற்காக கும்மிகள் இல்லை என அஞ்ச வேண்டாம். அவை உண்டு, ஆனால் மேலே சொன்ன கட்டுப்பட்டிற்குள்.
சிறு யோசனை. அனானியாக வந்தாலும் பெயரையாவது கூறுங்கள். இல்லாவிட்டால் பலான தேதி, பலான நேரம் கேல்வி கேட்ட அனானி என எழுத வேண்டியுள்ளது. பிளாக்கராகவே வந்து கேள்வி கேட்டால் உத்தமம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
2 hours ago

3 comments:
டோண்டு சார் சரியாக 1 மணி நேரம் ஆச்சுங்க. முழு பதிவுகளையும்,அதனுடைய பின்னூடங்களையும் படித்தால் முழு உண்மையும் புரிகிறது.
ஒரு கருத்து :
தனிமனித சுதந்திரம் என்பது
அடுத்தவர் மூக்கின் நுனிவரை கரம் கொண்டு செல்வது வரை தான்.
தொட யாருக்கும் உரிமையில்லை
தனிமனிதத் தாக்குதல்களை அறவே நீக்குதல் நன்மை பயக்கும்.
அறிவியல் புரட்சி வரமாய்த் தந்திட்ட
நல்ல வாய்ப்பான, வழமான அறிவுப் பரவலாக்க தளத்தை
மனித சமுதாய மேம்பாடுக்கும்,சுமுகமான பரஸ்பர நல்லுணர்வை வளர்க்க உதவிடும் சாதனமாகப் பயன்படுத்தி மகிழ்ந்திடுவோம்.
1.உள்ளதைச் சொல்வேன்
நல்லதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது
2 நாடு காக்க வேண்டும் - முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!
3.தமிழும் வாழ வேண்டும் - மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும்
4.ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!
5.உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
6.உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
//dondu(#11168674346665545885) said...
இதை நுகர்வோரின் எதிர்ப்பு என கூறுவார்கள். தில்லியில் பால்விலை திடீரென அதிகரிக்க, ஒரு இயக்கம்போல மக்கள் பால் வாங்குவதை மிகவும் மட்டுப்படுத்தினர். பால் அபரிதமாக தேங்கி போயிற்று. முதலிக் கேக்குகள், தயிர், வெண்ணெய், நெய் என்றெல்லாம் அதை மாற்றினார்கள். பிறகு அவையும் தேங்க ஆரம்பிக்க, ஓசைப்படாமல் பால் விலை கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இது அறுபதுகளில் நடந்ததாக அக்காலக் கட்டங்களில் பேப்பர்களில் படித்துள்ளேன்.
சிவாஜியையோ தசாவதாரத்தையோ முதல் நாள் முதல் ஷோ போய்த்தான் பார்க்க வேண்டுமா? சில வாரங்கள் பொறுமையாக இருந்தால் டிக்கெட் விலை தானே குறையாதா.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
டோண்டு சாரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.
supply-demand விகிதம் தான் ஒரு பொருளின் விலையை நிர்ணியப்பதை, தலைநகர் டில்லியில் நடந்த பால்விலையேற்றத்தை காரனம் காட்டியததற்கு நன்றி.
பாலில் சாதித்தை பெட்ரோலிலும் சாதித்து காட்டுவோம்.
அன்புடன்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
அடுத்த கேள்வி - பதில் பிரிவுக்கு எனது சில கேள்விகள் :-
1. டோண்டு சார் ஆதரிக்கும் republican அரசாங்கம் மோடி அவர்களுக்கு விசா அளிக்க மறுக்கிறதே ? இதனால் தங்களுது ஆதரவின்றி US அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளதா ? இல்லை வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க கூடுமா ?
2) இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் மாணவனை போல் மோடி அவர்கள் மறுபடியும்/மறுபடியும் விசா அப்ளை செய்வதன் நோக்கம் என்ன ? இதைதான் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்று கூறுகிறோமா ?
3) தாங்கள் சமீபத்தில் குஜராத் சென்றது உண்டா ?
4) சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த நெல்சன் மண்டேலாவுக்கான open air concert தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததா ? Amy Whitehouse performance எப்படி இருந்தது ?
5) தாங்கள் தவறாக Translate செய்தமையால், என்றாவது contract இழந்தது உண்டா ?
6) Blog எழுத ஆரம்பித்த பிறகு தங்களின் கொள்கையை/நம்பிக்கையை பிறரின் பின்னூட்டத்தை பார்த்து என்றாவது மாற்றி கொண்டது உண்டா ? இருந்தால் ஒரு எடுத்துக்காட்டு கூறுங்களேன்.
௭) ஏன் எனக்கு உங்கள் எழுத்துக்களை படித்தால் generation gap எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது ?
Post a Comment