என்ன, டோண்டு ராகவனா இதைக் கூறுவது என்று ஓடிவருபவர்களுக்கு முதலில் நான் கூற விரும்புவது, இதை நான் கூறவில்லை. இப்பதிவில் நான் குறிப்பிட இருக்கும் முனிசிபல் கமிஷனர் ஜயராஜ் பாடக் (Jairaj Phatak) கூட இதை கூறினார் என்று கூறமாட்டேன். ஆனால் இதுமாதிரி சில எண்ணங்கள் அவரது மனதில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். கனிகா தத்தா அவர்கள் எழுதிய Rain of terror என்ற கட்டுரைதான் இப்பதிவுக்கு காரணம். அதை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய ஜயகமலுக்கு நன்றி
மும்பையில் இருக்கும் அமெரிக்க கான்ஸுலேட் அமெரிக்கர்களை மழை காலத்தின்போது மும்பைக்கு வரவேண்டாம் என அறிவுரை கூறியுள்ளது நம்மவர்களின் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது, சிலருக்கு எரிச்சலாக உள்ளது. இந்த அமெரிக்கர்களுக்கு வேறுவேலையே இல்லை. முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் அல்லது பயந்தாங்கொள்ளிகள் என்றெல்லாம் பலர் முணுமுணுக்கின்றனர்.
மும்பை நகராட்சி ஆணையாளர் அளிக்கும் எதிர்வினை கவனிக்கத் தக்கது. "மும்பையில் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கின்றனர், அவர்களெல்லாம் பத்திரமாகத்தானே இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் அவர். ஆனால் அதே சமயம் இன்னொரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் அவரே மழைகாலத்தில் தனது உறவினர்களை மும்பைக்கு வருமாறு அழைக்க மாட்டார் என்பதையும் கூறிவிடுகிறார். பேஷ்.
Phatak ஒரு முக்கிய விஷயத்தை கோட்டை விட்டார் (மும்பையின் ஜனத்தொகை அவர் சொன்ன அளவுக்கும் மேல் அதாவது ஒரு கோடியே எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் வரை என்பதை இப்போதைக்கு மறப்போம்). அமெரிக்க கான்சுலேட் இம்மாதிரி எச்சரிக்கையை அளிப்பது இரண்டாம் முறை. மும்பையின் கட்டுமான வசதிகளை சாடும் அறிவிப்பு இது. இன்னும் பார்க்கப் போனால் இந்தியாவின் நகர அபிவிருத்தியின் நிலையையும் அது பிரதிபலிக்கிறது என்றும் கூறலாம்.
மோசமான வானிலை என்பது உலகில் உள்ள பெருநகரங்களில் சர்வ சாதாரணமே. உலக அளவில் உள்ள இரு பொருளாதார மையங்களில் ஒன்றான லண்டனில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் நசநசவென்று எரிச்சல் மூட்டும் மழை.
சரி, ஐரோப்பாவை பார்க்க வேண்டாம், ஆசியாவுக்கே வருவோமா? நவம்பர் மற்றும் டிசம்பரைத் தவிர்த்து சிங்கப்பூரில் எப்போதும் மோசமான வானிலைதான். மலேரியா காய்ச்சல் எப்போது வேண்டுமானாலும் மழைக்காலங்களில் பெருமளவில் வரும் அபாயம் உண்டு. துபாயில் கோடைகாலங்களில் வெப்பம் ஐம்பது செல்சியஸை சுலபமாகத் தாண்டும். பலர் சன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கபடுகிறார்கள். பெய்ஜிங்கில் குளிர்காலங்களில் பாலைவனத்திலிருந்து பனிக்காற்றும் பனிப்பொழிவுகளும் சகஜம். ஆனால், இதற்காகவெல்லாம் அங்குள்ள அமெரிக்க கான்சுலேட்கள் இம்மாதிரி அறிவுரைகளை தங்கள் குடிமக்களுக்கு தருவதில்லையே. அங்கெல்லாம் அமெரிக்கர்கள் அதிக அளவில் வந்து போகின்றனரே. ஏனெனில் அந்த நகர நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுத்துமோசமான வானிலையிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன(ஏர் கண்டிஷன் என்ற வசதி இல்லாதிருந்தால் சிங்கப்பூருக்கு சங்குதான் என்று லீ க்வான் யூ கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!)
Phatak அவர்கள் மும்பையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்று கூறினால், அவர் மேட்டுக்குடியினரை மட்டும்தான் பார்க்கிறார், அதே சமயம் அவரது ஞாபகசக்தியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றுதான் எடுத்து கொள்ளவேண்டும். ஆனால் தாராவி போன்ற இடங்களின் நிலைமை என்ன. அம்மாதிரி இடங்களில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பத்திரமாகவே இல்லை. சாக்கடி அடைப்புகளினால் நீரின் மூலம் பரவும் நோய்களுக்கு அவர்களில் பலர் இரையாகின்றனர். இது எப்போதுமே இருக்கும் பிரச்சினை, மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். மழையின் சீற்றத்தில் வீடுகளை இழப்பவர்கள் தனி.
ஜூலை 2005-ல் பம்பாயே ஸ்தம்பித்தது. பலர் மின்சாரம் தாக்கி, மண்சரிந்து இறந்தனர். அவர்கள் எண்ணிக்கை அதற்கு சில மாதங்கள் கழித்து லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகளின் போது இறந்தவர்களை விட அதிகம்.
மும்பை நகரவாசிகள் இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டுவிட்டதால் தங்களை ஓரளவுக்கு பாதுகாத்து கொள்ள இயலலாம். ஆனல் வெளிநாடுகளிலிருந்து வரும் விசிட்டர்கள் இந்த பயங்கர அனுபவங்களுக்கு பழக்கமில்லாதவர்கள். அங்கெல்லாம் நகராட்சி செய்து தரும் வசதிகள் taken for granted. திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகள் ஒன்றே போதுமே ஆபத்தை விளைவிக்க.
மும்பை இந்தியாவின் வணிகத் தலைநகரம். ஆசியாவின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சந்தைகள் மும்பையில்தான் உள்ளன என்று நம்ம ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால் மோசமான மாநகராட்சி சேவைகள் இவை எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றனவே. மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இதுதான் நிலை. இந்தியாவின் பொருளாதார நிலை உயர உயர இந்த சேவைகளும் நிலையும் மோசமாகிக் கொண்டே போகின்றன.
இந்தத் தருணத்தில் அமெரிக்க கான்சுகேட்டின் அறிவுரையை நாம் இருவகைகளில் எதிர்க் கொள்ளலாம். Phatak மாதிரி பேசலாம். அல்லது சீர்திருத்தங்களுக்கான தூண்டுகோலாக அதை பார்க்கலாம். என்ன செய்யப் போகிறோம் நாம்?
இப்போது டோண்டு ராகவன். சமீபத்தில் 1971 -74-ல் மும்பைவாசியாக இருந்த நான் மேலே கூறியதெல்லாம் மிகைப்படுத்தப்படவில்லை என உறுதியாகக் கூறுகிறேன். நல்ல மழை பெய்யும் நாட்களில் high tide காரணங்களால் கடல் நீர் வேறு சாக்கடை குழாய்கள் வழியாக மும்பை நகருக்குள் வந்து நகரமே தண்ணீரில் மிதக்கிறது.
இன்னொரு விஷயம். நண்பர் ஜயகமலின் மின்னஞ்சல் போன மாதமே வந்து விட்டது. அதை பதிவாக்குவதற்காக வைத்திருந்தேன், இப்போதுதான் அதற்கு விமோசனம். இந்த ஒரு மாதத்தில் பாடக்கின் நிலையில் ஏதேனும் மாற்றம் அல்லது முன்னேற்றம் உண்டா என்பதை யாராவது மும்பைவாசிகள்தான் கூற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
18 hours ago
20 comments:
I live in Mumbai. What you said is absolutely 100% true. ie., the BMC guys always play blame game and try to pass the buck when they are not able to handle infrastructure issues such as bad roads, overflowing drainages, uncleared garbage, spitting & littering, pollution, proper sanitation etc etc.
Ram
Dear Sir, What you have mentioned is very correct. It is not only applicable to Mumbai but also to all the Metros and to the District capitals. Not only Americans even Indian expats living in abroad do not like to visit India with their children during rainy season. We have a bad culture to criticise foreigners with out knowing the reality. The problem with us is we do not have the experience of living in a clean environment before . Thank you for your article.
நீங்கள் சொல்லும் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்ளுகிறேன். ஒரு நாடு நம்மை பார்த்து இப்படி சொல்வதை நாம் அவமானமாக கரூதாமல் சவாலாக ஏற்று இந்த அவல நிலையை மாற்ற நினைக்கலாமே? அதை விட்டு இதை அமரிக்க திமிராக பார்த்து அரசியல் செய்வதால் அரசியல்வாதிகளைத்தவிர வேறு யாருக்கும் லாபம் இல்லை.மக்கள் எல்லாம் அமரிக்காவை திட்டிக்கொண்டே அதே ஆபத்தான சூழ்நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். இந்திய அரசு தன் நாட்டு மக்களின் உயிரை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, முக்கியமாக ஏழை மக்களின் உயிரை.
It's curse bestowed upon us that we are thurst on the leaders who are least bothered about the well being of the people and normal,if not above average,civic standards.
It's a shame that we call mumbai as our financial capital;there is no wonder americans issue such guidelines for their citizens.
How our great fin.min & cabinet works on projects improving mumbai's standards,pl read my post on this covering some of these topics.
//இந்திய அரசு தன் நாட்டு மக்களின் உயிரை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை, முக்கியமாக ஏழை மக்களின் உயிரை//
I can see some 'Komana' flavour in this statement.
Ram
வேணும்னா அமெரிக்காகிட்ட நாட்ட கொடுத்து ஆட்சி நடத்த சொல்லலாமா
வால்பையன்
//மும்பை இந்தியாவின் வணிகத் தலைநகரம். ஆசியாவின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சந்தைகள் மும்பையில்தான் உள்ளன என்று நம்ம ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால் மோசமான மாநகராட்சி சேவைகள் இவை எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றனவே. மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இதுதான் நிலை. இந்தியாவின் பொருளாதார நிலை உயர உயர இந்த சேவைகளும் நிலையும் மோசமாகிக் கொண்டே போகின்றன//
இந்த இழி நிலைக்கு காரணம், நம் நிதி நிர்வாகத்தில் புரையோடி கிடக்கும் லஞ்ச லாவண்யம் தான்.
இதை எத்தனை திரைபடங்களில் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு அரசின் வேலை ,காண்டிராக்ட் விடும் போது அதன் திட்டச் செலவு ரூபாய் 100 என்றால்
அலுவலக் பணியாளர்களின் பங்கு 15%
(டெண்டரில் சலுகை,பில் ,காசோலை தருதல்..etc)
பொறியாளரின் பங்கு 20%
(தரக் கட்டுபாட்டை கண்டு கொள்ளாததற்கு)
அரசியல் சொந்தங்களுக்கும் 15%
காண்டிராக்டரின் லாபம் 20%
மிச்சம் உள்ளது 30 ரூபாய்தான் .ரூபாய் 100 க்கு செய்ய வேண்டிய வேலையை ரூபாய் 30 க்கு செய்தால் என்ன தரத்தை எதிர் பார்க்க முடியும்.
அதிலும் ஏதாவது தடங்கல் வந்து கட்டுமானப் பொருட்களி விலை கூடினால் நமது வேலையின் நிலை அதோ கதிதான்.
-இது ஒரு புத்தகத்தில் படித்த செய்தி.
கொஞ்சம் மிகைபடுத்தப்பட்டுள்ளது போல் இருந்தாலும்.
நடைமுறையில் அரசுத் துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்கம்,பாலங்கள் அமைத்தல்,பிர கட்டுமானப் பணிகளின் தரத்தை பார்க்கும் போது அந்த பத்திரிக்கை சொல்வ்து உண்மையாய் இருக்குமோ என சந்தேகம் வருவதி தடுக்க இயலவில்லை.
மேலும் அரசியல் வாதிகளின் திடீர் பண வசதியும் இதை உறுதி செய்வது போல் உள்ளது.
இது எல்லாத்துக்கும் விடிவுகாலம் எப்போது வரும், யார் புணைக்கு மணி கட்டுவார்கள் அதுவரை பிற நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கு நமது நாடு ஆளாவதை தடுக்கு முடியுமா தெரியவில்லை
டோண்டு அய்யா
உங்க ப்ளாக்கோட பீச்சாங்கைப் பக்கமா "தமிழ் இந்து" என்று ஒரு லிங்க் வைத்திருக்கிறீர்களே. அதைத் தொடர்ந்து போனா ஒரு தளம் ஓப்பனாகி "தமிழரின் தாய் மதம்" என்று பீதியூட்டித் தொலைத்து விட்டது.
அதற்கு முழுக்காரணி நீர் தான். ;-)
எனவே எனது கருத்துக்கள் சில -
"தமிழரின் தாய்மதம்" எது இந்து மதமா?
தமிழர் என்பதை ஒரு இனம் என்று ஒப்புக் கொள்கிறீர்களா என்ன?
அப்படியென்றால், இந்த இனம் உருவாகும் போது கூடவே இந்த மதமும் உருவாகிவிட்டதா?
மதம் என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கம் தான் என்ன?
இந்து "மதம்" என்று எப்படிச் சொல்வீர்கள்? சிலர் இதை மதம் என்று சொல்லாமல் தர்மம் என்று சொல்கிறார்களே?
எவருக்குமே "தாய்" மதம் என்று ஒன்று இருக்க முடியாது என்பது என் கருத்து. குழந்தையாய் பிறக்கையில் வெற்றுத் தாளாகத் தான் பிறக்கிறார்கள்.அவரவர் பெற்றோரும் சூழலும் அந்த அப்பாவிக் குழந்தையின் மேல் தினிப்பது தான் மதம் மொழி எல்லாம்.
நானும் தமிழன் தான்... எனக்கெல்லாம் இந்து மத லேபிள் ஒட்டித் தொலைத்து விடாதீர்கள் அய்யா.. அதைவிடக் கேடு கெட்டக் கேவலம் வேறு எதுவும் கிடையாது. அந்த லேபிளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் பதிலைப் பொருத்து மேலும் கேள்விகள் கேட்க உத்தேசம்
//நானும் தமிழன் தான்... எனக்கெல்லாம் இந்து மத லேபிள் ஒட்டித் தொலைத்து விடாதீர்கள் அய்யா..//
அந்த லேபிள் எனது பதிவில் எனது இச்சைக்கேற்ப உள்ளது. உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்த லேபிள் எனது பதிவில் எனது இச்சைக்கேற்ப உள்ளது. உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?//
அந்த தளம் தமிழருக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்று சொன்னதை வைத்துக் கேட்டேன். நீங்கள் வைத்துக் கொள்வது உங்கள் உரிமை என்பதை நான் மறுக்கவில்லை
//அந்த தளம் தமிழருக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்று சொன்னதை வைத்துக் கேட்டேன்.//
அந்தத் தளம் சொல்வதையெல்லாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொள்வேன். அந்த இணைப்பு முழுக்க முழுக்க எனக்காகவே கொடுத்து கொண்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//அந்த தளம் தமிழருக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்று சொன்னதை வைத்துக் கேட்டேன்.//
அந்தத் தளம் சொல்வதையெல்லாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொள்வேன். அந்த இணைப்பு முழுக்க முழுக்க எனக்காகவே கொடுத்து கொண்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ்க் குடி எனபது உண்மையென சரத்திர ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளபட்டாதாக ஒரு தகவல் அடிக்கடி அரசியல் மேடைகளிலும்,தமிழ் இலக்கிய மேடைகள்லும் பேசப்படும் செய்தி.
தற்போது தமிழகத்தில் இருக்கின்ற மதங்கள் இந்து,இஸ்லமிய,கிருத்துவ மட்டுமே. பிற இருந்தாலும் எண்ணிக்கையை அளவில் குறைவு தான்.
வரலாற்றை பார்ப்போமே !ஆனல்,புத்த மதம்,ஜைன மதம் போன்றவை, இந்துமதக் கொள்கைகளிலும்,சில நடைமுறைகளையும் பிடிக்காமலும்( அதுவும் குறிப்பாக ஜாதிய ரீதியாக உயர்வு தாழ்வு பார்த்து அதை கோவில்கள்லும் கடை பிடித்தது ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது)தோன்றியது அதாவது இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்றது.அந்த மதத்தை தழுவியவர்களின் முதாதையர்கள் இந்துக்கள் தான் என்று சொல்லப்படுகிறது
அதே போல் இந்தியாவில் முகலாயர் படையெடுப்புக்கு பின்னர்தான் இஸ்லாமியம் பரவியது.
இயெசுவின் சீடர்களும்,மத போதகர்களும் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக வழி கண்டு
கல்வி,மருத்துவம் போன்ற சேவைகளை எல்லோரும் பாராட்டும் வகையில் தன்னலமற்று செய்ததால் இந்து மததிலிருந்து வேதத்துக்கு (கிருஸ்து) மாறினார்கலள்
தமிழகத்திலும் இது தான் நடந்திருக்கலம்.இதை பற்றி ஆய்வாளர்கள் தான் ஆய்ந்து முடிவு சொல்லவேண்டும்
தமிழ்கத்தை பொருத்தவரை
இங்கே உள்ள கிருத்துவ சகோதரர்களும் ,இஸ்லாமிய சகோதரர்களும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் இந்து மதத்தில் இருந்திருப்பாதாக சொல்லப் படுகிறது,.
இந்த கருத்தின் அடிப்ப்டையில் அந்த தளம் அப்படி சொல்லியிருக்கலாம்.
இதனை ஆய்ந்து யாரவ்து சொன்னால் தெளிவு பிறக்கும்.
டொண்டு ஐயா ஒரு பதிவை போடலாம்.அதிலும் ஏகபட்ட லின்ங் கொடுக்க நல்ல விசய்ம்.
பொதுவாக இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை எனபார்கள்
இந்து மதம் இல்லையென்றால் ஆதி தமிழன் மதம் இல்லாமல் இருந்திருப்பானா?
இந்தியாவை பொருத்தவரை இந்து மதம் தான் பழைய மதம்.
இதிகாசங்களும் புரணங்களும் உப்நிஷத்துகளும் அதை தான் சொல்வதாக ஆன்மீக சான்றோர் சொல்கிறர்கள்.
இது பதிவுக்கு சுத்தமாக பொருத்தமில்லாத பின்னூட்டம். உமது கருத்து நிலைக்கும் புறம்பான விடயங்களைக் கொண்டிருக்கும் பின்னூட்டம். எனவே நிராகரிக்கும் உரிமையை உங்களுக்கு அளித்துவிட்டு தொடர்கிறேன்..
//அந்த மதத்தை தழுவியவர்களின் முதாதையர்கள் இந்துக்கள் தான் என்று சொல்லப்படுகிறது//
இது தவறு என்று நினைக்கிறேன்..
//பொதுவாக இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை எனபார்கள்
இந்து மதம் இல்லையென்றால் ஆதி தமிழன் மதம் இல்லாமல் இருந்திருப்பானா?//
இது ஓரளவு சரி என்றே யூகிக்கிறேன்.. இன்று நாம் அடையாளப்படுத்தும் "இந்து" என்பது முழுக்க நிறுவனப்படுத்தப்பட்ட ஒன்று. பல சமயங்களை ஒன்றினைத்து இன்றைய வடிவத்துக்கு வந்திருக்கிறது.. அதாவது நாம் ஆபிரகாமிய மதங்கள் என்று மூன்று மதங்களை இனைத்துப் பார்க்கிறோமல்லவா அதுபோல..
சரி அப்படியானால் தமிழ்நாட்டில் எந்த மதம் இருந்திருக்கும்? நிச்சயம் மனித கலாச்சாரம் இங்கே தோன்றியபோது மதம் இருந்திருக்க வாய்ப்பில்லை.. அதே போல முதன் முதலில் இயற்கைக்கு பயந்த மனிதன் அதைத்தான் வணங்கியிருக்க சாத்தியமிருக்கிறது..
அப்படியென்றால் இன்ஸ்டிட்யூஷனலான மதமாக முதன் முதலில் இங்கே பரவியது என்னவாக இருந்திருக்கும்?
ஆராய்ச்சியாளர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி இது என்றாலும் எனது சொந்த யூகத்தின் படி எனது கருத்து என்னவெனில்,
வேத தர்மம் வடக்கே தோன்றியது தான். அதே போல் ஜைனமும் பௌத்தமும் கூட வடக்கே தோன்றியது தான். ரிக் வேதத்தை கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட ஒன்று என்பதை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். எனவே வேத தர்மத்தின் நிறுவனமயமாக்கல் துவங்கியது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று கருத இடமிருக்கிறது.. அதே போல் புத்தரின் காலமும் மகாவீரரின் காலமும் கூட ஆறாம் நூற்றாண்டு தான்.
எனது கருத்துப்படி சிதறிக்கிடந்த பழக்கங்களையும் (ஹோமம் செய்வது போன்ற உலகியல் நியமங்களையும், வேதாந்தம் {உபநிசத்து}போன்ற தத்துவ விவரனைகளையும்) ஒரே மாலையாகக் கோர்த்து வேத மதம் உருவானதையும், அது சாமாணியர்களை ஏமாற்றிச் சுரண்டும் தன்மை கொண்டதாக இருப்பதைக் கண்டறித்ததும் தான் பௌத்தத்தின் துவக்கமாக இருந்திருக்க வேண்டும்.
பௌத்தம் தன்னியல்பிலேயே நிறுவனத்தன்மை கொண்டதாகும். இன்றைய இந்து மடங்களின் முன்னோடி பௌத்த சங்கங்களும் சமனப் பள்ளிகளும் என்பதை பலர் ஒப்புக் கொள்கிறார்கள்.
இம்மூன்றும் ஒரே காலகட்டத்தில் தான் இங்கே புகுந்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இந்த தத்துவங்கள் தமக்குள் முட்டி மோதிய பின் இறுதியாக இன்றைக்கு நாம் ( தமிழர்கள் ) அடைந்து கிடக்கும் பட்டி = ஷன்மார்க்கங்கள் = இந்து மதம்.
எவராவது ஆராய்ச்சியாளர் வந்து மறுத்துச் சொல்லும் வரை இதை நம்புவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்..
//வேணும்னா அமெரிக்காகிட்ட நாட்ட கொடுத்து ஆட்சி நடத்த சொல்லலாமா//
வால் பையன் சார்,
அமெரிக்க வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நம்ம ஊரிலேயே பல முறைகள் இருக்கிறது சரியாக பொது சேவைகளை அளிக்க.
எல்லா நகர சம்பந்தாமான பொறுப்புகளுக்கு ஒரே ஒரு மேயர் கீழ் இருக்க வேண்டும்.
தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்வதும், எது தவறாக நடந்தாலும் அதை சரி செய்வது மேயரின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
சொளவிக் சக்கிரவர்த்தி அவர்கள் சொல்வது இதோ.
//.... how Mumbai flooded up as soon as the first (highly predictable) monsoon rains hit the city.
This happens in Mumbai year after year.
And no one is “responsible”.
The buck, as it were, stops nowhere.
There are politicians, there are bureaucrats, there is a corporation, there are other authorities – but there isn’t anyone responsible for Mumbai.
....
Every habitation with a population above 500 shall elect a Mayor, who will be responsible for the smooth conduct of all business in his area.
We need not write more than that in the Constitution for “smooth conduct of ALL business” means no flooding, no garbage, and the protection of street hawkers and vendors.//
http://sauvik-antidote.blogspot.com/2008/07/this-is-not-progress.html
//எவராவது ஆராய்ச்சியாளர் வந்து மறுத்துச் சொல்லும் வரை இதை நம்புவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்..
//
Please check my posting தமிழும் சிவமும் இன்னபிறவும்..
இந்து மதம் என்ற கட்டமைப்பு ஆரியர்களின் வருகைக்குப் பின்பே நிறுவப்பட்டது..காலம் கி.மு 2'ம் நூற்றாண்டளவில்...
அதற்கு முன்பு தமிழர்கள் சிவம்,மாயோன்,சேயோன்,கொற்றவை போன்ற வழிபாடுகளையே கொண்டிருந்தார்கள்.
//I can see some 'Komana' flavour in this statement.
Ram
//
இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. நான் எழுதியதில் என்ன குற்றம் கண்டீர் அனானி?
//இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. நான் எழுதியதில் என்ன குற்றம் கண்டீர் அனானி?
//
There is a person called Komanakrishnan, who seems to be a communist favorite, who will always write in favor of poor.... thats why.
Ram
//There is a person called Komanakrishnan, who seems to be a communist favorite, who will always write in favor of poor.... thats why.
Ram//
A person doesn't have to be Komanakrishnan to write in favor of poor, a good heart is more than enough.
கயல்விழி said...
//There is a person called Komanakrishnan, who seems to be a communist favorite, who will always write in favor of poor.... thats why.
Ram//
A person doesn't have to be Komanakrishnan to write in favor of poor, a good heart is more than enough.
WELL SAID.
RAMAN
// good heart is more than enough.//
On the face of it nothing wrong in the remark.
But Mr. Ram means something else. If for any post such comments come irrelevantly, they sound contrived. Please go through the comments of the cited person in my previous posts.
Just open my concerned posts put the name of the person in (control+F) option and see the fun.
Regards,
Dondu N. Raghavan
Post a Comment