7/21/2008

கலைவாணர் அரங்கம் - ஒரு முழு சுற்று


வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடிக்கப் போவதாக இன்றைய ஹிந்துவில் வந்த செய்தி எனக்குள் பல நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டன. (மேலே உள்ள படத்தை எடுத்தது திரு. வி.கணேசன் அவர்கள்) ஒரு புது சட்டசபை வளாகம் கொண்டு வருவதற்கான வேலை இது என அறியப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் இடிக்கும் வேலை துவங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புது சட்டசபை வளாகத்தை கட்ட மாநில அரசு முடிவு செய்தபோது இடிப்பதற்காக தெரிவு செய்த கட்டிடங்களின் பட்டியலில் கலைவாணர் அரங்கம் இல்லை. அரசு எஸ்டேட்டில் ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம், Tamil Nadu Public Services Commission Office மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் குடியிருப்பைத் தவிர்த்து மீதி எல்லாவற்றையும் இடிக்கப் போவதாகத்தான் முதலில் இருந்த திட்டத்தில் இருந்தது.

பிறகு கலைவாணர் அரங்கம் மற்றும் TNPSC அலுவலகத்தை நீக்க முடிவு அரசு செய்தது. காரணம் புது சட்டசபை வளாகத்துக்கு செல்லும் வழியை எளிதாக்குவதாகும். எப்படியாயினும் இப்புது சட்டசபை வளாகத்தின் ஒரு பகுதியாக ஓர் அரங்கமும் கட்டப் போவதாக திட்டம். அதன் பெயரும் கலைவாணர் அரங்கம் என்றுதான் இருக்கும் போலிருக்கிறது.

சிர்க்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவையை தாராளமாக வழங்கிய அமரர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பெயரில் இருந்த இந்த அரங்கத்தை ஜனவரி 1974-ல் திறந்து வைத்தவர் முதல்வர் கருணாநிதி அவர்கள். 1039 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் அவருக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.

இது வரை மேலே கூறப்பட்டது இன்றைய (21.07.2008) ஹிந்துவில் வந்த செய்தி.

என்ன வேடிக்கை பாருங்கள்! இக்கலைவாணர் அரங்கம் முதலில் பாலர் அரங்கம் (Children's Theater) என்னும் பெயரில் சமீபத்தில் 1959-ல் துவக்கப்பட்டது. அதற்கு முன்னால் அது பழைய சட்டசபை. இப்போது ஒரு முழு சுற்று வந்து சட்டசபை முன்பு கோட்டை விட்டதை இப்போது பிடிக்க எண்ணுகிறது போலும்!

பாலர் அரங்கம் துவங்கிய முதல் நாள் அனுமதி இலவசம். அரங்கம் முழுக்க குழந்தைகள் பாட்டாம்பூசிகள் போல அங்கும் இங்கும் பாய்ந்த வண்ணம் இருந்தனர். ஓரிரு அறுவை டாகுண்டரி படங்களுக்கு பின்னால் சில கார்ட்டூன் படங்கள். பிறகு சோவியத் படம் "சிட்டியும் சுட்டியும்" திரையிடப்பட்டது.

பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறன்று பிற்பகல் மூன்றிலிருந்து நான்கு வரை கார்ட்டூன் படங்கள். கட்டணம் 12 பைசா சிறுவர்களுக்கு (16 வயது வரை), பெரியவர்களுக்கு 25 பைசா. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை ஆறு மணியளவில் டாகுமெண்டரி படங்கள் மற்றும் லேட்டஸ்ட் நியூஸ் ரீல். சனி அல்லது ஞாயிறன்று கையில் 12 பைசா எடுத்து கொண்டு திருவல்லிக்கேணி வெங்கடாசல செட்டித் தெருவிலிருந்து, பைக்றாஃப்ட்ஸ் சாலை, பெரியதெரு, வாலாஜா தெரு வரைக்கும் பொடிநடையாக வந்து படம் பார்ப்பதை நான் கல்லூரி செல்லும் காலக்கட்டம்வரை தவறவிட்டதே இல்லை.

பாலர் அரங்கம் கலைவாணர் அரங்கமாக உருவெடுத்தபிறகு ஒரே முறை டணால் தங்கவேலு அவர்களின் நாடகம் காணச் சென்றுள்ளேன். அவ்வளவே. அப்போதே பிடிப்பு விட்டுப் போயிற்று. இன்று இச்செய்தி.

இந்த விஷயத்தில் எனக்கு சில சந்தேகங்கள். அரங்கத்தை இடிக்க எவ்வளவு செலவாகும்? பிறகு மறுபடியும் வேறு இடத்தில் கட்ட இன்னும் எவ்வளவு செலவாகும்? இதெல்லாம் யார் பணம்? முதலில் அரங்கத்தை அப்படியேதானே விடுவதாக இருந்தது? பிறகு என்னவாயிற்று? இதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிவரலாம். நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த பிராஜக்டுக்கான ஏஜன்ஸிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லையென்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Anonymous said...

டோண்டு சாரின் கவலை நியாமானதே. பொதுவாகவே அரசுத் துறைகளில் இது மாதிரி சிவில் வேலைகளில் குளறுபடிகள் ஏராளம்.மக்களின் வரிப் பணம் பாழவதை பற்றி யாரும் கவலை படுவதாகவே இல்லை.

இந்த பழமொழியை ஞாபகப் படுதுகிறதோ!

சுண்டைக்க கால் பனம்
சுமை கூலி முக்கால் பனம்.

S.Lankeswaran said...

சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவானரின் பெயரில் உள்ள ஒரு பழைய அரங்கத்தை இடிப்பது என்பது நாம் பெற்றெடுத்த குழந்தையை பெரியவனாக்கி நாமே கொலை செய்வது போன்றது.

நான் தற்போது வவுனியாவில் இருந்தாலும் சில தடவைகள் அந்த கலைவாணர் அரங்கிற்கு சென்றுள்ளேன்.
இவர்களுக்கு ஏன் நமது பொக்கிசங்களை இடிக்க மனம் வருகின்றததோ தெரியவில்லை.

manikandan said...

அரங்கம் கட்டினா ஒரு சமயம் இடிச்சு தான் ஆகணும். புது அரங்கத்துக்கு அவர் பெயர வச்சிட்டா நம்ப கலைவாணர் சொன்ன கருத்துக்கள் எல்லாத்தையும் கேட்டு பிரமாதமா வாழ்வோம். கவலைபடாதீங்க.

யார் பணத்துல கட்டராங்கன்னு தெரியாதா ? இவ்வளவு பெரிய முட்டாளா நீங்க ?

thenkasi said...

விடுகதைகள் டோண்டு அவர்களின் விடை என்ன


1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?

2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?

3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?

4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?

5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?

6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?

7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?

8. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

9. சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?

10. ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன?

11. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?

12. உடன்வருவான் உதவிக்கு வரமாட்டான் அவன் யார்

Anonymous said...

1.Do you agree the tricks played by congress on 21.07.08 episode?

2.is it possible for congress to play the number game till the end of their rule?

3.is it real rule bythe people for the people ,by the people.


4. what the world will think about ugly game conducted in parliament?

5.is it not the moral resposibilithy for the pm to step down ,respecting the money deal for horse riding play?( video proff is shown by media)

ramakrishan hari.

Anonymous said...

என‌து விடுக‌தை..... த‌மிழ் மீது ப‌ற்றுள்ள‌து போல‌ ந‌டிப்பார். பிற‌மொழிக‌ளை வைத்து பிழைப்பார். இந்து ம‌த‌ குப்பைக‌ளை அவ்வ‌ப்போது வாரியிறைப்பார். ஏழைக‌ளை வெறுப்பார். ப‌ண‌க்கார‌னுக்கு ஜால்ரா அடிப்பார். இந்தியா வெளினாட்டு க‌ம்பெனிக‌ளுக்கு அடிமையாவ‌தை ஆத‌ரிப்பார். ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளை கிண்ட‌ல‌டிப்பார்.

இவ‌ர் யார்?

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

Anonymous said...

To
கோம‌ண‌கிருஷ்ண‌ன்

//த‌மிழ் மீது ப‌ற்றுள்ள‌து போல‌ ந‌டிப்பார். //
கருணாநிதி - பதவிக்காக வந்த தமிழ் பற்று
//பிற‌மொழிக‌ளை வைத்து பிழைப்பார்.
கருணாநிதி - ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி அரசியலில் பிழைக்கிறார்

//இந்து ம‌த‌ குப்பைக‌ளை அவ்வ‌ப்போது வாரியிறைப்பார்.
கருணாநிதியே தான் - குப்பைகளுக்கும், இந்து மதம் என்னும் கோபுரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்.


// ஏழைக‌ளை வெறுப்பார். ப‌ண‌க்கார‌னுக்கு ஜால்ரா அடிப்பார்.
கருணாநிதி - ஒரு ஏழையாவது இதுவரை அவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளாரா..

//இந்தியா வெளினாட்டு க‌ம்பெனிக‌ளுக்கு அடிமையாவ‌தை ஆத‌ரிப்பார்
கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் - எ.கா. வெள்ளையர் ஆட்சியே சிறந்தது என்று பலமுறை உளறியுள்ளனர்.

//ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளை கிண்ட‌ல‌டிப்பார்.
இது மட்டும் கோமணகிருஷ்ணன் - டோண்டு ராகவன் அவர்களை அறியாமல் கிண்டலடித்தல்..

நான் யார் ?
அடியேன் இராமானுஜ தாசன்

Kanchana Radhakrishnan said...

கலைவாணர் அரங்க்கில்..20 வருடங்க்களுக்குமுன் சில சபாக்கள் தங்கள் அங்கத்தினர்களுக்கு நாடகம் போட்டுள்லனர்.
மாலை படக்காட்சி முடிந்ததும்..மாலை நாடகம்.என்னுடைய பல நாடகங்கள் அங்கே நடந்துள்ளன.உங்கள் இந்த பதிவு
என்னை அந்த நாட்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது.அதுசரி..பிரதாப முதலியாரும்..டோண்டுவும் என்று ஒரு பதிவு
போட்டிருந்தேனே படித்தீர்களா?
உங்களிடம் ஒரு கேள்வி..
நாடகங்கள்,அரசியல் இரண்டிலும் வக்கீல்கள் பங்கு எப்போதுமே அதிகமாக உள்ளதே..அது ஏன்?

Anonymous said...

Dondu sir, have u taken some loan amount from Mr.Komanakrishnan and not returned yet?

Ram

K.R.அதியமான் said...

expensive new buildings for enlarging govt bureaucracy and largely useless legislature.

Cost/ benefit analysis pattri yaarum kavalai paduvathillai.

anyway 200 crores is peanuts when compared to other govt expendiutres and freebies.

Will MuKa spend his personal money like this. and govt revenues are rising excellently. hence all this vaariyiraithal.

Anyway, if there is a 'genuine' need for a new legislature and secratariat, it could have been located near the airport or Tambaram (near a railway station) ;
Traffic jams for VIPs within city may be less then. CMs resdience and ministers residences too may be built within that compound.

and public may live in peace in the city...

Anonymous said...

டோண்டு சார் கவலை வேண்டாம், நானும் பல முறைகள் கலைவாணர் அரங்கம் சென்றுள்ளேன். அது சிறிய அரங்கம். பொதுவாக கலைஞர் வந்தால் நாம் அந்த அரங்கத்தில் செல்ல முடியாத படி வெளியே தான் நிற்க வேண்டும்.

Anonymous said...

thamizhaka muthalvar announced that the kalaivanar hall will be
protected aT ANY COST.

ராஜ நடராஜன் said...

கலைவாணர் அரங்கம் ஒரு கால் இறுதிக்கும் மேலான வரலாற்று நிகழ்வுகளை அமைதியாக தன்னுள் அடக்கிக் கொண்ட இடம்.

Anonymous said...

Please give your answers in " dondu's style."(as on 26-07-2008)

1.Don't cry before you're hurt.

2.Dog does not eat dog

3.Bad news travels fast.

4.Do as you would be done by.

5.A deaf husband and a blind wife are always a happy couple.

6.Delays are dangerous.

7.Birds of a feather flock together.

8.A cat in gloves catches no mice.

9.Appearances are deceptive

10The devil is not so black as he is painted.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது