7/13/2008

டோண்டு ராகவனிடமிருந்து ஒரு ஜோசியப் பதிவு!

ஜோசியம் பற்றி பல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. சில ஆதரித்தும், பல எதிர்த்தும் வருகின்றன. டோண்டு ராகவனின் நிலை என்ன? அதைப் பற்றி கூறும் முன்னால் நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த அமரர் கல்கியின் தங்கச் சங்கிலி என்னும் தலைப்பில் வந்த கதையை இங்கே குறிப்பிடுகிறேன். அது இவ்வார கல்கி இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. கல்கி இணைய பக்கத்தில் வந்துள்ள அக்கதையின் லிங்க் அப்படியே இருக்குமா என்ற சந்தேகம் உள்ளதால் அதை நகலெடுத்து இங்கே ஒட்டுகிறேன். முதலில் அமரர் பேராசியர் கல்கி!

"என்னுடைய மனைவியின் நற்குணங்களையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் விகடனில் இடம் போதாது. ஆகையால் துர்க்குணங்கள் இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அவளுக்கு நகைப் பைத்தியம் அசாத்தியம். ஜோதிடத்தில் பைத்தியமோ அதைவிட அதிகம். என்ன காரியமானாலும் நாள் நட்சத்திரம் பாராமல் செய்யமாட்டாள். அதிலும் அண்ணாசாமி ஜோசியர் நாள் பார்த்துச் சொன்னால்தான் அவளுக்குத் திருப்தி.

என் மனைவியின் கல்யாணத்தின்போது, அவளுக்குக் கழுத்தில் ஒரு வடம் தங்கச் சங்கிலி செய்து போட்டிருந்தார்கள். சென்ற வருஷத்தில் எனக்கு சம்பளம் 50 ரூபா யிலிருந்து 60 ரூபாய்க்கு பிரமோஷன் ஆனதும், ஒற்றை வடம் சங்கிலியை இரட்டைவடமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனைவி பிரேரணை செய்தாள். அதை அவளே ஆமோதித்து, ஆதரித்தும் விட்டாள். வாக்கெடுக்கும்போது நான் நடுநிலைமை வகித்தபடியால் பிரேரணை நிறைவேறிவிட்டது. எனவே, அதைக் காரியத்தில் நடத்தி வைப்பதைத் தவிர, எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.

அதாவது, அந்த மாதம் முதல் மாதம் 10 ரூபாய் மீதி செய்து பாங்கியில் போட்டுவரத் தொடங்கினேன். சென்ற மாதத்தில் இது 120 ரூபாய்க்கு வந்தது. மற்றொரு வடம் சங்கிலிக்கு எட்டு பவுன் வேண்டும். பவுன் பதிமூன்றரை ரூபாய் வீதம் எட்டு பவுனுக்கு 108 ரூபாயும், கூலிக்கு பாக்கி 12 ரூபாயும் போதுமாகையால், ஒரு நாள் நகைக் கடைக்குப் போய் வருவதென்று தீர்மானித்தோம். செப்டெம்பர் 20ஆம் தேதி எனக்கு அவகாசமிருந்தது. “இன்றைக்குப் போகலாமா? பாங்கியில் போய்ப் பணம் வாங்கி
வரட்டுமா?” என்று கேட்டேன். “ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில் லையா? நாலு நாள் போகட்டும்” என்றாள் என் மனைவி. எனக்கு இது மிகவும் அதிசயமாயிருந்தது. ஆனால், காலையில் அண்ணாசாமி ஜோசியர் வந்துவிட்டுப் போனது ஞாபகம் வந்ததும் அதிசயம்
போய்விட்டது. “ஓகோ! நாள் நன்றாயில்லையோ? என்றைக்குத்தான் நன்றாயிருக்கிறது?” என்று கேட்டேன். “அடுத்த வெள்ளிக்கிழமை நகை பண்ணுவதற்கு ரொம்ப நல்ல நாளாம்” என்றாள் என் மனைவி.

பத்திரிகை, கித்திரிகை படிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன என்று என்பாட்டில் இருப்பேன். எனவே, வியாழக்கிழமை பாங்கிக்குச் சென்ற போது, சென்ற நாலு நாட்களாக பாங்கி மூடியிருக்கிறதென்று அறிந்து திடுக்கிட்டுப் போனேன்.
‘பிச்சைக்காரன் குடிசையில் சனீசுவரன் புகுந்தது போல’ என்னுடைய சொற்பப் பணத்துக்கு மோசம் வந்துவிடுமோ என்று பீதி அடைந்தேன். நல்லவேளையாக மறு நாள் காலையில் பாங்கி திறந்து பணமும் கொடுத்தார்கள். முதல் நாள் இரவு கலங்கியிருந்த என் மனைவி இப்போது, “பார்த்தயளா? பார்த்தயளா? தட்டாமல் கிடைத்ததே! பெரியவாள் நாள் பார்த்துச் சொல்றது வீண் போகுமா?” என்று சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டாள்.

சாயங்காலம் நகைக் கடைக்குப் போனோம். எட்டு பவுனில் மனதுக்குப் பிடித்ததாய்ப் பார்த்து, என் மனைவியே ஒரு சங்கிலியை எடுத்துக்கொண்டாள். கடைக்காரன் பில் எழுதிக் கொடுத்தான். அதில் மொத்தம் 145 ரூபாய் போட்டிருந்ததைக் கண்டு நான் புன்சிரிப்புடன், “செட்டியாரே! கணக்கு தவறாகப் போட்டிருக்கிறீர்களே!” என்றேன். செட்டியார் வாங்கிப் பார்த்து விட்டு, “தவறு ஒன்றும் இல்லையே” என்றார். “தவறு இல்லையா? எட்டு பவுனுக்கு பதிமூன்றரை ரூபாய் வீதம் 108 ரூபாய் தானே. 136 ரூபாய் போட்டிருக்கிறீர்களே?” என்றேன். செட்டியார் சிரித்துவிட்டு, “பவுன் விலை 17 ரூபாய்” என்றார். “இது என்ன கூத்து?” என்றாள் என் மனைவி. “என்ன செட்டியாரே! என்னைப் பட்டிக்காட்டான் என்று நினைத்துக் கொண்டீரா?” என்று கோபமாய்க் கேட்டேன். “இல்லை... ஸார்! நீங்கள் பட்டணத்து மனிதர்தான். ஆனால், வாசலில் போர்டில் எழுதியிருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார் செட்டியார்.
சங்கிலி வாங்காமலே நாங்கள் வீடு திரும்பவேண்டியதாயிற்று. வீடு சேரும் வரையில் வாயை மூடிக்கொண்டு வந்த என் மனைவி, வீட்டுக்குள் நுழைந் தோமோ இல்லையோ, தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் அண்ணாசாமி ஜோசியர் மீது காட்டத் தொடங்கினாள். “அந்தக் கட்டேலே போற பிராமணன் இனிமேல் இங்கே வரட்டும். காப்பியா காப்பி! கழுநீரைக் கரைத்துக் கொடுக்கிறேன்” என்றும், இன்னும் பலவிதமாகவும் அவரை வசை மொழிகளால் அலங்கரிக்கத் தொடங்கினாள்.

“ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகிறாய்? நாளை தினம் வேண்டுமானால் 30 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வருகிறேன். சங்கிலி வாங்கிக்கொண்டு வந்துவிடலாமே!” என்றேன்.

“நன்றாய்ச் சொன்னீர்கள், இதுதான் புருஷாள் அசட்டுத்தனம் என்பது. நேற்று பதிமூன்றரை ரூபாயா இருந்த பவுனை இன்றைக்கு 17 ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா? அப்படி என்ன வந்தது இப்போது? பாங்கியில் பணம் இருந்தாலும் வட்டியாவது கிடைக்கும்” என்றாள் என் மனைவி. அண்ணாசாமி ஜோசியரை என் மனதுக்குள் வாழ்த்தினேன்.

“இன்னொரு வடம் சங்கிலி இல்லை என்று என் கழுத்து ஒன்றும் காத்துக் கிடக்கவில்லை. பிழைத்துக் கிடந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அந்தக் கட்டேலே போற பிராமணன் ஜோசியம் பார்க்கிறானே, ஜோசியம்? பவுன் விலை இப்படி ஏறப்போறது என்று ஜோசியத்தில் பார்த்துச் சொல்கிறதுதானே! அன்றைக்கு எட்டு பவுன் வாங்கி வைத்திருந்தால் இப்போது 28 ரூபாய் லாபத்துக்கு விற்கலாமே?” என்றாள்.

அப்பொழுதுதான், என்னுடைய மனைவி கேவலம் ஓர் ஆபீஸ் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டது பெருந்தவறு என்பதை அறிந் தேன். பெரிய பாங்க் முதலாளியையாவது, பொக்கிஷ மந்திரியையாவது அவள் மணம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்! - நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்"?

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். எங்கோ இருக்கும் கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க இயலும் என்பதுதான் எனக்குள் வெகு நாட்களாக இருக்கும் கேள்வி. அவற்றின் கதிரியக்கங்கள் வந்து தாக்குமாம். வாதத்துக்கு அப்படியே வைத்து கொண்டாலும் அது எந்த விதமாகத் தாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள் யார்? ஏதேனும் பரிசோதனை செய்து பார்த்தார்களாமா? சூரியனும் ஒரு பாதையில் நகர்கிறது. அது மூடிய பாதை என்பதையும் படித்துள்ளேன். ஆகவே சில ஆண்டுகள் வித்தியாசத்தில் அது பழைய இடத்தை அடையலாம். இது ஒரு சுழற்சி முறை என்று வைத்து கொள்ளலாம் என்பதே ஜோசியத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது மிக குழப்பமான அடிப்படை என்பதே என் குழம்பிய மனதுக்கு படுகிறது. அதே பழைய கேள்விதான் மீண்டும். இந்த பாதையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்? அப்படியே பாதிப்பதாக வைத்து கொண்டாலும் அதை துல்லியமாக கணித்து சொல்வதாக கூறிக்கொள்ளும் ஜாதகத்தின் அடிப்படை ஞானம் எங்கிருந்து வந்தது? யாராவது எக்காலத்திலாவது அதை கண்டறிந்து குறித்து வைத்துள்ளார்களா?

மற்றப்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே கிரகங்கள் இல்லை எனக் கூறினாலும் ஜோசியக்கலையில் அவற்றை கிரகங்களாகவே பாவிக்கின்றனர். உதாரணத்துக்கு சில மொழிகளில் எல்லா பெயர்ச் சொற்களுக்கும் ஆண்பால், பெண்பால் என்றெல்லாம் கூறுவார்கள் (ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு முதலியன). ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புகளிலேயே நிஜமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அச்சொற்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் கூறிவிடுவார்கள். அதே போல இங்கும் கிரகங்கள் எனப் பெயரிடுவதை கன்வென்ஷன் என்னும் பெயரில் ஏற்பதில் பிரச்சினை இருக்கக் கூடாது.

அதை விடுங்கள். இந்த எண்கணிதத்தை எடுத்து கொள்வோம். ஐயா நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த தேதிகள் என்பது என்ன? இப்போதிருக்கும் தேதிகள் முறையும் 1600-ஆம் ஆண்டிலிருந்துதான் செல்லும். அது பற்றி நான் போட்ட மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை என்னும் பதிவின் ஒரு பின்னூட்டத்திலிருந்து சில வரிகள் இங்கே.

"சிலர் கேட்கலாம். அப்படியே கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வந்தால் என்ன என்று. அவர்களுக்கு கூறும் ஒரே பதில் காலண்டர் என்பது முதலில் விவசாயிகளை மனதில் இருத்தித்தான் உருவாக்கப்பட்டது என்று. பலான பலான தேதிவாக்கில் விதையிட வேண்டும் என்று இருப்பது சூரியன் பூமி சம்பந்தத்தை வைத்தே. ஆக, அது வேளை கெட்ட வேளையில் நடந்தால் கெட்டது குடி நிஜமாகவே.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 வருவது ஒரு ஃபைன் அட்ஜஸ்ட்மெண்ட்தான். நானூறால் வகுபடாத நூற்றாண்டுகள் லீப் வருடம் இல்லை என்பதும் சற்று finer adjustment என்று காண்க. எழுபதுகளில் 2000-க்கு பிப்ரவரி 30 நாட்கள் என்று கூறப்பட்டது. அது இன்னும் finer adjustment. ஆனால் அது நடைபெறவில்லை. அது வேறு விஷயம். எண்ணம் அதுதான், அதாவது விவசாய அடிப்படை அப்படியே உள்ளது".

அவ்வளவுதான் விஷயம். அதாவது தங்கள் சௌகரியத்துக்காக வைத்து கொண்டது காலண்டர். தேவையானால் அதை மாற்றவும் செய்யலாம். அதை வைத்து கொண்டு என்ன ஜோசியம் கூறுவதாம். இதில் நம்பர்கள் வேறு. ஒன்றாம் தேதி பிறந்தவர்கள், இரண்டாம் தேதி பிறந்தவர்கள் என்று இம்சைகள். ஐயாமார்களே, எனக்குத் தெரிந்து தேதிகள் சில விஷயங்களில் படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒரு மாதத்தில் இரண்டாம் தேதி பிறந்த ஒரு அரசு ஊழியர் இப்போதைய சட்டப்படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி தேதி அன்றுதான் ரிட்டயர் ஆகிறார். அவர் ஜூலைமாதம் இரண்டாம் தேதி பிறந்தால் 31-ஆம் தேதி ரிட்டயர் ஆகிறார். ஆக, 29 நாட்கள் லாபம். இதுதான் அதிகப் பட்சம் அதுவே 31-ஆம் தேதி பிறந்தால் அதே தேதியில்தான் ரிட்டயர் ஆகவேண்டும். அதாவது 0 நாட்கள்தான் லாபம். ஆனால் இது குறைந்த பட்சம் அல்ல. ஒன்றாம் தேதி பிறந்தால் அதற்கு முந்தைய மாதத்தின் கடைசி தேதியிலேயே ரிட்டயர் ஆகவேண்டியதுதான். அதாவது மைனஸ் ஒரு நாள். நிஜமாகவே ஆப்புதாண்டி அவருக்கு. அதைத்தவிர தேதிகள் ஒன்றும் கழட்டாது என்பதே உண்மை. ஆனாலும் நான் மேலே சொன்ன பதிவில் கூறியிருந்தபடி எனக்கு மட்டும் இந்த தேதிகளும், அவற்றின் கிழமையைக் கூறும் திறமை மெல்ல வந்து ஒட்டிக்கொண்டதன் பலனை கீழ்க்கண்ட வரிகளில் கூறியுள்ளேன்.

"என் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் தேதி மற்றும் கிழமையுடன் எனக்கு ஞாபகம் இருக்கும். அதை வைத்து மற்றவர்கள் ஏதாவது தேதி சொல்லும் போது கிழமையைக் கூற ஆரம்பித்தேன். பலர் ஆச்சரியப்பட்டனர், சிலர் எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று கூட நினைத்து விட்டனர். ஒரு 19 வயது ஃபிகர் தன் கையை நீட்ட அவளிடம் உண்மை கூற மனமில்லாது கையை சிறிது நேரம் பிடித்துப் பார்த்து, (மெத்து மெத்தென்று இருந்தது. கையைத்தான் கூறுகிறேன் ஐயா) பாவ்லா காட்டியதை இந்த நேரத்தில் மறந்து விடுவோம்".

கமல் இந்த நம்பர் மேட்டரை வைத்து வசூல்ராஜாவில் தூள் கிளப்பியதையும் பார்த்து ரிலேக்ஸ் ஆகிவிடுங்கள்.

நான் கூறுகிறேன், எனக்கு திடீரென நல்லது நடந்தால் சந்தோஷப்படுவேன். எதேச்சையாக கீழே 260 ரூபாய் கிடைத்தால் (நிஜமாகவே சமீபத்தில் 1996-ல் காஜியாபாத்தில் நடந்து கொண்டிருந்த போது கிடைத்தது) சந்தோஷப்படுவேன். அதையே நான் சில நாட்களுக்கு முன்னால் ஜோசியம் மூலம் தெரிந்து கொண்டிருந்தால் அவ்வளவு சந்தோஷப்படுவேனா என்பதை நிச்சயமாகக் கூற இயலாதுதானே.

ஜோசியம் பார்ப்பதற்கு ஆதரவான வாதங்களையும் பார்ப்போமா? பலர் கூறுகிறார்கள், ஜோசியம் என்பது பிற்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது என்று. அப்போது முன்கூட்டி நடவடிக்கை செய்து வைத்து கொண்டால் அவற்றின் விளைவுகளை குறைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்குத்தான் பரிகார பூஜைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே.

மாமன் மகள் என்னும் படத்தில் ஜெமினி கணேசன் கோழையாக இருக்க, அவருடைய பாட்டி தனது கணவன் உபயோகித்தது என்று கூறி தாயத்து போன்ற ஒன்றை அவரிடம் தர, அவரும் தைரியம் பெற்று வெற்றி பெறுகிறார். கடைசியில்தான் பாட்டி அப்பொருள் தாத்தாவின் பொடி டப்பி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

அதனால் என்ன, விளைவு என்னவோ நல்லதுதானே? ஆகவே, ஏதேனும் கோவில் பிரகாரங்களை குறிப்பிட்ட அளவுக்கு தினமும் சுற்றுங்கள் எனக் கூற அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றும்போது வாக்கிங் செய்த பலனும், அதனால் மூச்சுவிடுவது சீராகி, உடல் நலம் பெற்று தன்னம்பிக்கை வருவதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் தைரியம் ஏற்பட்டு வெற்றியும் அடையலாம். கோவில், கடவுள் எனக் கூறினால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்னும் மனோதத்துவக் காரணமே இங்கு ஆட்சி செய்கிறது.

அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.

"நீ என்ன செய்தாய் உன் வாழ்நாளில், ஜோசியமே பார்த்ததில்லையா இதுவரை நீயி" என்று என்னைக் கைநீட்டிக் கேட்கும் முரளிமனோகருக்கு, "பார்த்துள்ளேன்" என்பதுதான் பதில். என்ன செய்வது, நான் ஒன்றும் பெரிய பகுத்தறிவுவாதி என்று பீற்றிக் கொண்டதில்லையே. என் அம்மாவழி தாத்தா பிரசித்தி பெற்ற ஜோசியர். எனது ஜாதகத்தை கணித்து பலன்கள் போட்டு 1970-லேயே என்னிடம் தந்து விட்டார். 2000-க்கு பிறகு நடக்கப் போகும் பலன்களையும் கூறியுள்ளார். பல சரியாகவே உள்ளன. இருப்பினும் எனக்கென்னவோ நான் மேலே கேட்ட பகுத்தறிவு கேள்விகள் அப்படியே இருப்பதாகத்தான் படுகின்றன.

எவ்வளவு பகுத்தறிவுவாதியும் ஒரு ஜோசியன் கெட்டது நடக்கும் எனக் கூறினால் மனம் கலங்குவது மனித இயற்கையே.

நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன் என்னும் எனது பதிவில் இப்பின்னூட்டம் இட்டேன். "அறுபதுகளின் இறுதியில் விடுதலையில் ஒரு செய்தி வந்தது. அதாவது ஒரு ஜோசியர் விடுதலைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்கடிதம் கிடைத்த அடுத்த அமாவாசையன்று (அப்போது அமாவாசை வருவதற்கு இன்னும் பத்து தினங்கள் இருந்தன) பெரியார் அவர்கள் ஜாதகப்படி அவர்களுக்கு மாரடைப்பால் மரணம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இக்கடிதத்தை விடுதலை பிரசுரித்து, ஜோசியரை கேலி செய்தது. என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))"

ஆக, இப்போது மீண்டும் அமரர் கல்கி எழுதிய சில வரிகளை இங்கு நினைவிலிருந்து தருகிறேன், அவரது ஏட்டிக்கு போட்டி என்ற புத்தகத்திலிருந்து. "ஜோசியர்களே கவலைப்படாதீர்கள், இது போன்று இன்னும் 999 கட்டுரைகள் வந்தாலும், உங்கள் பிழைப்புக்கு பங்கம் வராது"

அன்புடன்,
டோண்டு ராகவன்

64 comments:

Anonymous said...

ஸீசனுக்குத் தகுந்த பதிவு. காமக்கதைகள், சட்டிக்கதைகள் மாதிரி ஏதாவது போட்டிருக்கலாமே?

Anonymous said...

பராவாயில்லையே சார் தாங்கள் ஒரு முற்போக்குவாதி என்பதை அனவருக்கும் விளக்கியுள்ளிர்கள்.

பின்ணுட்டம் களைக்கெட்டப்போகிறது.
அடுத்த எனது கேள்வி செட் ஜோசியம்,கைரேகை,etc பற்றித்தான்.


பாண்டிய நக்கீரன்.

வெண்பூ said...

நல்ல பதிவு.. நல்லன எடுத்து தீமையை விலக்கு என்கிறீர்கள்... நீங்கள் உண்மையிலேயே பகுத்தறிவுவாதிதான் :))))

Expatguru said...

பல வருடங்கள் நானும் ஜோதிடத்தின் மேல் ஈடுபாடில்லாமல் இருந்தேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மறக்க முடியாது. இதை பற்றி எனது வலைப்பதிவில் விபரமாக எழுதியுள்ளேன் இந்த சுட்டியை பார்க்கவும்
http://madrasthamizhan.blogspot.com/2008/01/blog-post_8441.html
ஜோதிட‌த்தை ந‌ம்புவ‌தும் ந‌ம்பாத‌தும் ஒவ்வொருவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கை. அகையால், 'இது ச‌ரி' என்றோ 'இது த‌வ‌று' என்றோ கூறாம‌ல் அவ‌ர‌வ‌ர் ந‌ம்பிக்கைக்கு விட்டுவிடுவ‌து ந‌ல்ல‌து அல்ல‌வா? One should not be judgemental, though one can have an opinion on anything!

dondu(#11168674346665545885) said...

இப்பதிவின் நோக்கம் ஜோசியத்தை கேள்வி கேட்பது மட்டுமல்ல. அப்படியே அதெல்லாம் உண்மை என வாதத்துக்காக வைத்து கொண்டாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்றும் கூற வந்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோசப் பால்ராஜ் said...

டோண்டு ஐயா,
எனக்கு இந்த நல்ல நேரம் கெட்ட நேரங்களைப்பற்றி ஒரு சந்தேகம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 வரை ராகு காலம், இது இந்திய நேரப்படியா? சிங்கப்பூரில் ராகு காலத்தை கணக்கிடுவது எப்படி? இந்திய நேரப்படி 4.30 மணி என்பது சிங்கப்பூரில் 7மணி. அப்போ சிங்கப்பூர்ல ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை 7.00 முதல் 8.30 வரையா?

இதற்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஜோசியம் அறிந்தவர்களிடம் கேட்டோ, பதிலளிக்கவும்.

Anonymous said...

ungalidam josiyam aanmeegam patri ellam kelvi ketpadharku karanam neengal vayadhana iyengar enbadhalaiye. Aanal vayandhukum, kulam gothrathirukum aanmeegathukum sambandham kidayadhu. Indha mathir jothida sasthram mattumillamal ellam sasthrathirkum ethirana mano bhavame kondu irukireer. Illa vittal "karpu neri" patri ipdi ellam perumaiyaga pottu kolla mudiuma ungalal? Sasthrangal ellam padika migundha arivum porumaium vendum. Kudharkamaga kelvi ketpavargal kaala kalathirukum irukirargal. Avargalaium thaandiye aanmeegam indrukiradhu. Indha mathiri kelvigalai neer mattum dhan ezhupi irukirargala? 1000 nootrandugalaga irukum sasthrathai ethanai per kelvi ketrupan.

dondu(#11168674346665545885) said...

//ungalidam josiyam aanmeegam patri ellam kelvi ketpadharku karanam neengal vayadhana iyengar enbadhalaiye.//
அப்படின்னாக்க வயதான ஐயரா இருந்தா கேட்டிருக்க மாட்டீங்க அப்படித்தானே.

நல்ல தமாஷான பின்னூட்டம். எழுப்பிய கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுஇங்கள். அதை செய்யாது காலம் காலமாக இக்கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறினால் மட்டும் போதுமா. அவற்றுக்கு பதில் என்ன கொடுத்தார்கள் என்பதை மட்டும் கூற மாட்டீர்களா.

அதுசரி, பதில்களை வைத்து கொண்டா வஞ்சனை செய்கிறீர்கள். ஆனால் ஒன்று இதையே சரியான பெயருடன் வந்து கூறாமல் அனானியாக முகமூடி இட்டு ஏன் வர வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் பால்ராஜ் அவர்களே,

ராகு காலம் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் கூறுவதை இங்கு சுருக்கமாகக் கூறுவேன். (அவர் இவ்வரிகளை 1930-களில் எழுதியுள்ளார்)

"எனக்கு ஒரு சந்தேகம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் ராபர்ட் க்ளைவ் ஒரு வாலிபன் இங்கிலாந்திலிருந்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து புறப்பட்டான். அவன் என்ன ராகுகாலம் எல்லாம் பார்த்தா புறப்பட்டான்? இருந்தாலும் அவன் இந்தியாவில் அடிகோலிய சாம்ராஜ்யத்தை காங்கிரசாரால் அசைக்க முடியவில்லையே. அதுவே தினம் தினம் பஞ்சாங்கம் பார்த்து காரியம் ஆற்றிய சுதேச மகாராஜாக்கள் சீரழியவில்லையா"?

இப்போது கூறுங்கள், ராகு காலமே புருடா என்கிறேன். இதில் உங்கள் கேள்விக்கு என்ன பதில் கூறுவதாம்? ஆனால் ஒன்று, இம்மாதிரி ராகு காலம் பார்ப்பது எல்லாம் நாம் இல்லாவிட்டாலும் நம் வீட்டிலுள்ளவர் பார்க்கலாம், அங்கெல்லாம் போய் அவர்களை கேலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை உள்ளவர் ராகு காலத்தில் காரியம் ஆற்றும்போது பயத்திலேயே காரியத்தை கோட்டை விடுவர். அவர்களது நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Subbiah Veerappan said...

டோண்டு ஐயா,

//////எனக்கு இந்த நல்ல நேரம் கெட்ட நேரங்களைப்பற்றி ஒரு சந்தேகம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 வரை ராகு காலம்,
இது இந்திய நேரப்படியா? சிங்கப்பூரில் ராகு காலத்தை கணக்கிடுவது
எப்படி? இந்திய நேரப்படி 4.30 மணி என்பது சிங்கப்பூரில் 7மணி.
அப்போ சிங்கப்பூர்ல ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை
7.00 முதல் 8.30 வரையா?

இதற்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஜோசியம்
அறிந்தவர்களிடம் கேட்டோ, பதிலளிக்கவும்.//////


ராகு என்பது இந்தியாவில் வந்து படுத்துக்கொண்டிருக்கும்
கிரகம் அல்ல!

அனைவரும் இந்திய நேரத்தை வைத்துத்தான் ராகுகாலத்தைக்
கணக்கிட வேண்டும் என்று யார் சொன்னது?

சிங்கப்பூர் என்றால் சிங்கப்பூர் நேரப்படி - ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.30 முதல் 6.00 வரை ராகு காலம்,

டோக்கியோ என்றால் டோக்கியோ நேரப்படி - ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.30 முதல் 6.00 வரை ராகு காலம்,

விளக்கம் போதுமா நண்பரே!

Anonymous said...

Respected dondu sir,
I am very much shocked to read your article about

டோண்டு ராகவனிடமிருந்து ஒரு ஜோசியப் பதிவு!"

I respect your opinion.

please read the following links and then anaswer my questions set no:1.

http://scssundar.blogspot.com/2008/06/blog-post.html

http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html

http://truetamilans.blogspot.com/2008/07/blog-post_12.html

1.ராகுகாலம் சும்மா o.k அப்போ எமகண்டம்? ( ராகு கேது சம்மபந்தபட்ட விசயம்)?

2.பகுத்தறிவு பேசுகிறவர்களில் எத்தனைபேர் ராகுகாலத்தில்.எமகண்டத்தில் தனது,தனது வீட்டு நற்காரியங்களை செய்துள்ளார்கள் ,பட்டியல் தரவும்?

3.தேர்தல் சமயத்தில் அத்துனை கட்சிகளும் ஜோதிடர் வாசலில் தவம் இருப்பது உங்களுக்கு தெரியாத ஒன்றா?
(நாத்தீக கட்சிகள் உட்பட-திரை மறைவில்)
4.கட்சிகளின் தேர்தல் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள யாகங்களை நடத்துவதில்(மறைமுகமாக- முற்போக்கு வாதிகள்) உள்ள உண்மையை மறுக்கமுடியுமா?


5. அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறிர்கள் ?

6. இதில் திருவாளர் முரளி மனோகருக்கு உடன்பாடா?அவர் கருத்து?

7. கல்கியும் உங்கள் கட்சி போல் உள்ளதே?

8.இதேபோல் இறை நம்ம்பிக்கை,பூஜை,புனஸ்காரம்,மறுபிறப்பு,வேத உபநிஷத்துக்கள்,மனு சாஸ்திரம் நம்மபிக்கை உள்ளவர்களின் உங்கள் ஆணியில் இன்னும் யார் யார் உள்ளனர்? தெரிவிக்கவும்.

9. கோயில்களில் கூட்டம் குவிவதைப் போல் ஜோதிடப் புத்தகங்கள்,ஜோதிட வார,மாத இதழ்கள், செல் பெசிகள் கூட தினப் பலன் இப்படி களை கட்டும் போது தாங்கள் மட்டும் ?

10.காக்கும் பெருமாள் மேல் மிகுந்த பக்தி உடையவரிடமிருந்து இப்படியா எனக் கேட்பவர்க்கு உங்கள் பதில்?
( பக்தி வேரு-ஜோதிடம் வேறு எனும் பதில் தவிர்து -சான்றுகளுடன் தங்களின் பதில்)
ராமகிருஷ்ணஹரி

( துணை கேள்விகள் தங்களின் சான்று பூர்மான பதில்களை பார்த்த பிறகு)

Anonymous said...

//சிலர் கேட்கலாம். அப்படியே கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வந்தால் என்ன என்று.//

சார் பதிவு நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் கோடையில்தான் வரும்னு நினைக்கிறேன்.

சரவணன்

dondu(#11168674346665545885) said...

//சார் பதிவு நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் கோடையில்தான் வரும்னு நினைக்கிறேன்.//

உங்களைப் போல கூறுபவர்களுக்காகவே அந்த சம்பந்தப்பட்ட பதிவில் (மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை) இவ்வரிகளை சேர்த்திருந்தேனே.

"இன்னொரு விஷ்யம், வருடத்துக்கு 364 நாள் என்றிருந்தால் மேலே கூறிய தொல்லைகள் ஒன்றும் கிடையாது. ஒரே காலண்டர் அத்தனை ஆண்டுகளுக்கும் வரும். ஆனால் என்ன, அவ்வாறு செய்தால் வேறு தொல்லைகள் வரும். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வரும். இப்போதே அப்படித்தான் என்று துளசி அவர்கள் கடுப்படிக்கக் கூடாது. நீங்கள் இருப்பது பூமத்திய ரேகைக்குக் கீழே. இது வேறு ஆட்டம்".
பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_26.html

துளசி அவர்கள் நியூஸிலாந்தில் வசிக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இதில் ஜோசியம் ஆதரிப்போர் எதிர்ப்போர் இரண்டு பக்கத்திலிருந்தும் அடுத்த பக்கத்துக்கு சில கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல முடியாது, இரண்டு பேருமே அந்த விடை சொல்ல முடியாத கேள்விகளை வைத்து கொண்டு வாதாடலாம்.

நல்ல செயல்கள் மட்டுமே நினைப்பவன் செய்பவன் கடவுளை வணங்கினாலும், இல்லை என்றாலும் அவன் இறைவனுக்கு ப்ரியமானவனே. அதே போல் நெஞ்சுல தில் இருக்கரவனுக்கு ஜோசிய நம்பிக்கை தேவையில்லை. உங்களுக்கு ஏன் ஜோசியத்துல நம்பிக்கை இல்லைனு இப்ப தெரியுதா.

மற்றபடி ஜோசியம், நுமெராலஜி (இதுல நீங்க சொன்னத விட நிறைய காமெடி இருக்கு), ஜெம்மாலஜி, வாஸ்து, குட்டிசாத்தான் வச்சு குறி சொல்லுறது (இதை வச்சு சென்னைல ஒருத்தன் பெரிய லட்சாதிபதி ஆயிட்டாருங்கோ) எல்லாம் உண்மையே நம்புபவனுக்கு மட்டும். :-)

மரத்தில் மறைந்தது மாமத யானை.

சரவணன்

ரமணா said...

தவறான வழிகளில் வரும் பணம் தவறாமால் துன்பத்தை தரும் .

இது ஹேமலதா நினைவு அறக்கட்டளை,தருமபுரி636702 யின் கருத்து.

இது இப்போ அணுசக்தி விவகாரத்தில் ஆடு புலி ஆட்டம் ஆடப் போகும் அம்பானிகளின் விசயத்தில் உண்மையாகுமா?


தங்களின் ஆத்மார்த்த விருப்பம்.

Anonymous said...

//அதே போல் நெஞ்சுல தில் இருக்கரவனுக்கு ஜோசிய நம்பிக்கை தேவையில்லை. உங்களுக்கு ஏன் ஜோசியத்துல நம்பிக்கை இல்லைனு இப்ப தெரியுதா.//

Adra sakka! Adra sakka!

manikandan said...

"இப்பதிவின் நோக்கம் ஜோசியத்தை கேள்வி கேட்பது மட்டுமல்ல. அப்படியே அதெல்லாம் உண்மை என வாதத்துக்காக வைத்து கொண்டாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்றும் கூற வந்துள்ளேன்."

ஜோசியம் உண்மையா/பொய்யா என்று ஆராய்வது அவசியமற்றது.
அது விரும்பத்தக்கது அல்ல என்பதே உண்மை. அதை நான் ஆமோதிக்கிறேன்.

"ராகுகாலம்" :-

இதை பற்றி எனக்கு நடந்த சுவையான அனுபவத்தை கூறுகிறேன். நான் எனது சித்தி மற்றும் அவர்களின் குடும்பத்தோடு சமீபத்தில் (1992) ஒரு ஞாயிறன்று சினிமாவுக்கு சென்றோம். நாங்கள் முன்னதாகவே (4:45) மணியளவில் கிளம்பி சென்றோம். படம் ஆரம்பித்து (6:00 மணி இருக்கும் என்று நினைக்கிறேன்) சிறிது நேரம் கழித்து மெதுவாக ஆட்டோவில் வந்து இறங்கினார். ஏன் சித்தி இவ்வளவு லேட் அப்படின்னு கேட்டேன். இல்லடா ராகுகாலம் முடிஞ்ச உடன கிளம்பினேண்டா என்று சாதாரணமாக கூறினார். "இது எல்லாம் கொடுமை சித்தி" எவனாவது சினிமாவுக்கு போகறதுக்கு எல்லாம் ராகு காலாம் பாப்பானா ?" என்று கேட்டதற்கு "ஏன்டா நீ ராகுகாலத்துல கிளம்பின, உன்னால முதலேந்து சினிமா பாக்க முடிஞ்சதா" ? எனக்கு அடித்து நொறுக்க வேண்டும் போன்று வெறி தான் வந்தது !

Anonymous said...

//என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))"//

விடுத‌லை மீது ஏன் ச‌ந்தேக‌ப்ப‌டுகிறீர்க‌ள்? ம‌ற்ற‌ க‌ட்டுரைக‌ள் நிறைய‌ இருந்திருக்க‌லாம். இட‌மின்மை கார‌ண‌மாக‌ இக்க‌டித‌த்தை இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து பிர‌சுரித்திருக்க‌லாமே!!


கோம‌ண‌கிருஷ்ண‌ன்

Anonymous said...

ரெண்டு சூப்பர் ஜோக்கு

1.//, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். ?
பதில்: இடமின்மை காரணமாக இக்கடிதத்தை இரண்டு நாட்கள் கழித்து பிரசுரித்திருக்கலாமே!!//

2.//"ஏன்டா நீ ராகுகாலத்துல கிளம்பின, உன்னால முதலேந்து சினிமா பாக்க முடிஞ்சதா" ? எனக்கு அடித்து நொறுக்க வேண்டும் போன்று வெறி தான் வந்தது !//

நன்றி கோமணம் மற்றும் அவனும் அவளும்

வால்பையன் said...

//என்னுடைய மனைவியின் நற்குணங்களையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் விகடனில் இடம் போதாது.//

இது உங்களின் நற்குணமா

வால்பையன்

வால்பையன் said...

//சென்ற வருஷத்தில் எனக்கு சம்பளம் 50 ரூபா யிலிருந்து 60 ரூபாய்க்கு பிரமோஷன் ஆனதும்,//

கழுத தேஞ்சு கட்டெறும்பு ஆனா கதையா
சமீபம் தேஞ்சு சென்ற வருடம் சென்ற மாதம் ஆகிவிட்டதா

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//என்னுடைய மனைவியின் நற்குணங்களையெல்லாம் விவரிக்க வேண்டுமானால் விகடனில் இடம் போதாது.//
//இது உங்களின் நற்குணமா//

இவ்வரிகள் கலியுடையது. அவரது கதாநாயகன் சொல்வதாக கதை அமைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//நான் நடுநிலைமை வகித்தபடியால் பிரேரணை நிறைவேறிவிட்டது.//

இன்னைக்கு வரைக்கும் நீங்கள் எதிர்த்து பேசுவதில்லையாமே!
அம்புட்டு நல்லவரா நீங்க

வால்பையன்

வால்பையன் said...

//அந்த மாதம் முதல் மாதம் 10 ரூபாய் மீதி செய்து பாங்கியில் போட்டுவரத் தொடங்கினேன்//

இப்போ கொண்டு போய் பத்து ரூபாய பேங்க்ல போட்டு பாருங்க!
கீழ்ப்பக்கம் அட்ரஸ் கொடுப்பாங்க

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

பதிவை சரியாகப் படியுங்கள். அது கல்கியின் கதை, சென்ற நூர்றாண்டு முப்பதுகளில் எழுதப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அடுத்த வெள்ளிக்கிழமை நகை பண்ணுவதற்கு ரொம்ப நல்ல நாளாம்//

சரியா தான் சொல்லியிருக்கார்
நகைக்கடைகாரருக்கு நல்ல நாள் தானே

வால்பையன்

வால்பையன் said...

//பத்திரிகை, கித்திரிகை படிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது.//

அதென்ன கித்திரிக்கை சமீபத்தில் முற்றிலும் அழிந்து விட்டதா

வால்பையன்

வால்பையன் said...

//பிச்சைக்காரன் குடிசையில் சனீசுவரன் புகுந்தது போல//

சனி போல கொடுப்பதுமில்லை என்று சொல்கிறார்களே
நேர்மறையாக சொல்லுங்களேன்

வால்பையன்

வால்பையன் said...

//எட்டு பவுனுக்கு பதிமூன்றரை ரூபாய் வீதம் 108 ரூபாய் தானே//

வாங்கி போட்டிருந்தால் இன்று அது மட்டும் ஒரு லச்சத்துக்கு போகும்

வால்பையன்

வால்பையன் said...

//காப்பியா காப்பி! கழுநீரைக் கரைத்துக் கொடுக்கிறேன்” //

இதெல்லாம் கூட நடக்குமா
என்ன பத்தி கொஞ்சம் நல்ல விதமா சொல்லி வையுங்கள் சார்
கழுநீரை எல்லாம் என்னால் குடிக்க முடியாது

வால்பையன்

வால்பையன் said...

//நாளை தினம் வேண்டுமானால் 30 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வருகிறேன். //

பல வருடங்களுக்கு முன்னாள் உங்களுக்கு சமீபத்தில்
அதே போல் இந்த நாளை என்பது எத்தனை வருடம் கழித்து வருமோ என்று பயந்து விட்டார்களோ என்னவோ

வால்பையன்

வால்பையன் said...

//பவுன் விலை இப்படி ஏறப்போறது என்று ஜோசியத்தில் பார்த்துச் சொல்கிறதுதானே! //

அதானே
அப்படி சொல்லமுடியும் என்றால் நானெல்லாம் மாதம் பத்து லட்சம் சம்பாரிப்பேன்

வால்பையன்

வால்பையன் said...

//அப்பொழுதுதான், என்னுடைய மனைவி கேவலம் ஓர் ஆபீஸ் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டது பெருந்தவறு என்பதை அறிந் தேன்.//

அந்த நினைபுலேயே தான் வேலையை விட்டுடீர்கள் என்று நினைக்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//ஒரு 19 வயது ஃபிகர் தன் கையை நீட்ட அவளிடம் உண்மை கூற மனமில்லாது கையை சிறிது நேரம் பிடித்துப் பார்த்து, //

இது தான் டோண்டு குசும்புங்கறது.

வால்பையன்

வால்பையன் said...

//அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே. //

அதைத்தான் நானும் காட்டு கத்தா கத்திகிட்டு இருக்கேன்

வால்பையன்

வால்பையன் said...

//அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.//

அப்படியும் வரலைனா
உங்க கூட ஒரு மணி நேரம் பேசினால் வரும்

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//அப்படியும் வரலைனா
உங்க கூட ஒரு மணி நேரம் பேசினால் வரும்//
இதை கூறியதற்காகவே உங்களை சீறி திட்ட ஒரு கோஷ்டி அலைவதாக கேள்வி. :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//2000-க்கு பிறகு நடக்கப் போகும் பலன்களையும் கூறியுள்ளார். பல சரியாகவே உள்ளன. //

இடமாற்றம், மூட்டுவலி போன்ற பலன்கள் வயதான காலத்தில் அனைவருக்கும் பொதுவாக கூறப்படுவது, அவர் சொன்னவற்றில் எது நடந்தது என்று கூறமுடியுமா.
(இரண்டாவது கல்யாணம் போன்ற மறைக்க வேண்டிய விசயங்கள் நாம் போனில் பேசிக்கொள்வோம்)

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

வால்பையன் அவர்களே,
நீங்கள் இப்பதிவை பார்க்கவில்லையோ என எண்ணி உங்களுக்கு போன் செய்த முயற்சித்தேன் லைன் கிடைக்கவில்லை. இப்போ என்னடான்னா உண்மைத் தமிழனே பயப்படும் அளவுக்கு பின்னூட்டம் இடுகிறீர்கள்! :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள்.//

பெரியாரின் கொள்கை வாரிசுகள் இன்று பெரும்பாலம் ஆத்தீகவாதிகள் தான். கட்சியின் நலன்!? கருதி அதை நடத்தி கொண்டிருக்கிறார்கள்

வால்பையன்

வால்பையன் said...

//ஜோசியர்களே கவலைப்படாதீர்கள், இது போன்று இன்னும் 999 கட்டுரைகள் வந்தாலும், உங்கள் பிழைப்புக்கு பங்கம் வராது"//

அதுவேன்னவோ உண்மைதான்

வால்பையன்

வால்பையன் said...

//பகுத்தறிவு பேசுகிறவர்களில் எத்தனைபேர் ராகுகாலத்தில்.எமகண்டத்தில் தனது,தனது வீட்டு நற்காரியங்களை செய்துள்ளார்கள் ,பட்டியல் தரவும்?//

ஜோதிடத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லும் பகுத்தறிவுவாதிகள் ஒரு காரியம் செய்ய எமகண்டம் வரை காத்திருப்பது அதை விட முட்டாள் தனம்.

நண்பர்களுக்காக காத்திருக்கலாம் நம்பருக்கு அல்ல

வால்பையன்

வால்பையன் said...

//தேர்தல் சமயத்தில் அத்துனை கட்சிகளும் ஜோதிடர் வாசலில் தவம் இருப்பது உங்களுக்கு தெரியாத ஒன்றா?
(நாத்தீக கட்சிகள் உட்பட-திரை மறைவில்)//


எல்லோரும் பரிகாரம் செய்து ஜெயிக்க வேண்டியது தானே

வால்பையன்

வால்பையன் said...

//கட்சிகளின் தேர்தல் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள யாகங்களை நடத்துவதில்(மறைமுகமாக- முற்போக்கு வாதிகள்) உள்ள உண்மையை மறுக்கமுடியுமா?//

அப்படி செய்தவர்களின் டவுசர் அடுத்த தேர்தலில் அவுந்த கதையை உங்களால் மறுக்க முடியுமா

வால்பையன்

வால்பையன் said...

//அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறிர்கள் ?//

மிகச்ச்சரியாக!??

தெளிவா தானே இருக்கிங்க
சரியாக என்பதே ஓவர் இதில் மிகச்சரியாக

வால்பையன்

வால்பையன் said...

//கோயில்களில் கூட்டம் குவிவதைப் போல் ஜோதிடப் புத்தகங்கள்,ஜோதிட வார,மாத இதழ்கள், செல் பெசிகள் கூட தினப் பலன் இப்படி களை கட்டும் போது தாங்கள் மட்டும் ?//

"ஊரே முட்டாளா இருக்கும் போது நீங்கள் மட்டும்" என்பது போல் இருக்கிறது இந்த கேள்வி

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள்.//

//பெரியாரின் கொள்கை வாரிசுகள் இன்று பெரும்பாலம் ஆத்தீகவாதிகள் தான். கட்சியின் நலன்!? கருதி அதை நடத்தி கொண்டிருக்கிறார்கள்//
இல்லை, அப்போது பெரியாரும் இருந்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

//வால்பையன் said...
//அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறிர்கள் ?//

மிகச்ச்சரியாக!??

தெளிவா தானே இருக்கிங்க
சரியாக என்பதே ஓவர் இதில் மிகச்சரியாக

வால்பையன்//

).

வாலிப வயதில் கழகங்கள் பின்னால் (1965-1975)சென்ற இளைஞர்களில் 90 % மேல் இப்போது வயது 50க்கு மேல்.

கழகத்தின் கொள்கையில் ஆழ்ந்திருந்த சமயம் நாத்திகம் பேசிய பலர் இன்று கோவிலே கதி என்றும்,பழைய ஆத்திக வாதிகளைவிட பூஜை புனஸ்காரங்களில் தங்களை மறந்து உள்ளதை " வால் பையன்" அவர்கள் அவரது 50 வது வயதில் அறிவார்
வால்பையன் பதிவுகளைப் படிக்கும் போது நாங்கள் கல்லுரிக் காலங்களில் மாணவர் தி.மு,க வில் இருந்த உறுப்பினர்கள் மிகத் தீவிரமாகக் கடைபிடித்த ( பிராமீன் உட்பட)பகுத்தறிவுக் கொள்கையைப் போலுள்ளது.

வால்பையன் அவர்கள் வயதில்( வாலிப) இப்படித்தான் சொல்வார்கள்.
அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்

இதைவிட வேகமாகப் பேசிய கவியரசு கண்ணதாசன்,புரட்சி எழுத்தாளர்கள்
இதே 50 வயதுக்கு பிறகு எப்படி இருந்தார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம்.

( இது தான் இன்றய நிலை.அதனால் தான் சிவன் கோவில்களில் பிரதோஷம்
அன்று கூடும் பெரும் கூட்டம் இதே 50 வயதை கடந்த பழைய நாத்திக வாதிகளால்தான்." )

உண்மையில் வயது ஐமம்பதை தாண்டும் போது
உடலின் குருதி ஓட்டம் குறையும் போது

கடவூளை நம்ப ஆரம்பிக்கிற போது
நல்ல நேரங்களின் மதிப்புகூடும் போது

கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.

கவியரசு சொன்னது மாதிரி
இந்த உலகில்
எதுவும் உண்டு என்றால் உண்டு
எதுவும் இல்லையென்றால் இல்லை.

dondu(#11168674346665545885) said...

//கழகத்தின் கொள்கையில் ஆழ்ந்திருந்த சமயம் நாத்திகம் பேசிய பலர் இன்று கோவிலே கதி என்றும்,பழைய ஆத்திக வாதிகளைவிட பூஜை புனஸ்காரங்களில் தங்களை மறந்து உள்ளதை " வால் பையன்" அவர்கள் அவரது 50 வது வயதில் அறிவார்//
சமீபத்தில் 1971-லிருந்து மனத்தளவில் 25 வயது வாலிபனாக வாழும் டோண்டு ராகவனுக்கு எப்போது ஐம்பது வயதாகுமாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//நாத்திகம் பேசிய பலர் இன்று கோவிலே கதி என்றும்,பழைய ஆத்திக வாதிகளைவிட பூஜை புனஸ்காரங்களில் தங்களை மறந்து உள்ளதை " வால் பையன்" அவர்கள் அவரது 50 வது வயதில் அறிவார்//

ஐம்பது என்பது என்ன கணக்குன்னு தெரியல
ஏதாவது நியூமரலாஜிய இருக்கும்.

ஐம்பதை தாண்டியும் எனக்கு வழிகாட்டியாக இருக்கும் முத்த ஸாரி மூத்த பதிவர் தருமி ஒருவரே உங்களின் இந்த வாதத்திற்கு பதில்

//கஷ்டங்கள் கழுத்தை நெருக்கும்போது
கட்டிவைத்திருந்த ஜாதகக் சுவடிகளை
பிரிக்கிறான்.//

நாங்கள் பிரச்சினையின் ஆணிவேரை பிடிக்க சொல்கிறோம்

//கவியரசு சொன்னது மாதிரி
இந்த உலகில்
எதுவும் உண்டு என்றால் உண்டு
எதுவும் இல்லையென்றால் இல்லை.//

கவியரசு சொல்லிவிட்டார்
அதனால் இல்லாததை இருக்கு என்று ஒத்து கொள்ளவும்
இருப்பதை இல்லை என்று மறுப்பதற்கும்
எல்லோரும் கூட்டமாக ஓடிவாருங்கள்

வால்பையன்

thenkasi said...

//ஐம்பதை தாண்டியும் எனக்கு வழிகாட்டியாக இருக்கும் முத்த ஸாரி மூத்த பதிவர் தருமி ஒருவரே உங்களின் இந்த வாதத்திற்கு பதில்//

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையால் ஈர்க்கப் பட்ட அண்ணா ,தி.க விலிருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வந்து (1950-1955)தனியாக தி.மு.க கண்ட பின்.தேர்தலில் வெற்றிகள் குவிய ஆரம்பித்ததும் " ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்".
பின்னர் அ.தி.மு.க தொடங்கிய "புரட்சித்தலைவர்"( திரைப் படங்களில் கூட கடவுளை கும்பிடுவது போல் காட்சி அமைக்க மறுத்தவர்)
பின்னாளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள "மூகம்பிகை கோவிலுக்கு காணிக்கை செலுத்தியாதாக செய்திகள் சொல்லப் பட்டன. அவரது வாரிசாக வந்த அம்மையாரின் இறை பக்தி நாடறிஞ்ச விசயம்"( அதிலும் சோதிடர் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டார்).

50 வயது என்பது பொத்தம் பொதுவாகச் சொன்னது.எண்கணிதம் இல்லை.
( ஒரு சிறு ஓட்ட்டெடுப்பு ந்டத்துங்கள் குறிப்பாக 50 வயதை கடந்தவர்களிம் கடவுளை நம்புகிறிர்களா? இல்லையா, பின் முடிவைச் சொல்லுங்கள்)

மதுரை முத்த பதிவாளரின் உறுதியான கொள்கைபிடிப்புக்கு நல் மதிப்பு கொடுக்கும் போது வெகுஜனக் கண்ணொட்டத்தை ,பார்க்கும் நிகழ்வுகளை தான் பதிந்துள்ளேன்.

கவி அரசு " நாத்தீகம் பேசி" பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறியதால் அவரது அனுபவ வரிகளை சொன்னேன்.

இது எல்லத்துக்கும் மேல ஆந்திர மாநிலத்தில் உள்ள "திருமலை திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டத்தை பார்க்கவும்.

தமிழகத்தில் கோலோச்சிய நாத்திகம் மெல்ல மெல்ல மறந்து ஆத்தீகம் பரவலாய் உள்ளதற்கு
சாட்சிகள்
1.கோவில்களில் குடும் பக்தர் கூட்டம்

2.ப்ழனி மலை முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல பாகங்களில் இருந்து பாத யாத்திரை வரும் ப்கத கோடிகள்
3, திருவண்ணாமலை கிரி வ்லம் வரும் மக்களின் கூட்டம்

4, மருவத்தூர் ஆதிப்ராசக்தியை வழிபடும் சிவப்பு சட்டை/சேலை பக்தர்களின் கூட்டம்

5.ஐயப்பன் பக்தர்களிம் பெருக்கம் ஆண்டுக்கு ஆண்டுக்கு கூடுகிறது.

6.இதே போல் நமது சகோதர மதங்களான இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களின் பக்தியும் கூடியுள்ளது.( மெக்காவிற்கு செல்லும் இஸ்லாமிய சகோதரர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது, அன்னை வேளாங்கணிக்கு செல்லும் கிருஸ்துவ சகோதரர்களின் எண்ணிக்கயும் கூடி வருவதாக அரசுச் செய்திகள் கூறுகின்றன)

பக்தி வரும் போது ஜோதிட நம்பிக்கையும் தானாக வருகிறது.

இது ஏன் இந்து மததை தவிர பிற மததினரிம் ஒரு பகுதியினை நமது ஜாதக முறைகளை நம்ப ஆரம்பித்து விட்டார்கள் என்பது செவி வழிச் செய்தி)

மற்றொன்றை வேடிக்கையாய் சொல்வார்கள்

தந்தை பெரியார் அவர்கள் " பிள்ளயார் சிலையை உடை" எனப் போராட்டம் தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் பிள்ளையார் கோவில்கள் கூடியதாச் சொல்லப் படுகிறது)

பின்னர் வட இந்தியாவை போல் பிள்ளையர் சதுர்த்தி ஊர்வலங்கள் புகழ் பெற ஆரம்பித்தன.

வால் பையன் சார் கல்லுரிக் காலத்தில் நாங்களும் இதே போல் தானிருந்தோம்.
இதே போல் தான் எல்லம் சுத்த ஹம்பக் என்று வாதிட்டுக் கொண்டிருந்தோம்.ஆனா அண்ணாவின் பகுததறிவுப் பாசறையில் படித்தும்,தி,மு,க மாநாடுகளில் கலந்தும், தேர்தல் பிரச்சாரங்களில் (சிங்கில் டி மட்டும் குடித்துக் கொண்டு - அப்போ 0.10 ரூபாய் )தீவீரமாய்க் கலந்தும் இருந்த நான் இப்போது நடு நிசி சரியா 1200 மணி உங்களுக்கு பதில் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன் இது காலம் தந்த மாற்றம்)
(என்ன இது மாதிரி நவின ஊடகங்கள் கிடையாது. எங்களுக்கு இருந்தது எல்லாம் பத்திரிக்கைகள்,வானொலி, அரசியல் தலைவர்களின் கூட்டங்கள் மட்டுமே)

பின் குறிப்பு" டோண்டு சாருக்கு."

தங்களின் இந்த பதிவை தாங்கள் பதிந்ததன் நோக்கம் ஒரு மாதிரி நிறைவேறிக் கொண்டிருக்கா? அல்லது திசை மாறுகிறதா?

Raghav said...

//வால்பையன் said...
ஐம்பது என்பது என்ன கணக்குன்னு தெரியல
ஏதாவது நியூமரலாஜிய இருக்கும்.
//

அது சரி ஐம்பதாவது பின்னூட்டத்துல இத கேட்டுரிக்கீங்களே ஏன்?. இதுக்கும் நியுமராலஜிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

Raghav said...

ஜோசியத்த நம்புறீங்களோ இல்லையோ, ஜோசியக்காரர நம்பாதீங்க. இதுதான் நம்ம கருத்து.

ரமணா said...

வால்பையன் சார் ஒரு உண்மை இப்போ தெரிஞ்சு போச்சு.!

தமிழ்மண பதிவுகளின் தலைப்புகள் பல சமிப காலமாக " மலையாள படத்திற்கு தமிழக திரை களில் " "ரா........." என வால்போஸ்ட் அடித்து கூட்டத்தை கூட்ட வது போல் " சுண்டி இழுக்கும் காமத்துபால் தலைப்புகளும் ,ஜ... கதைகளும் இருக்கும் போது
வாசகர்களின் மன ஒட்டத்தை திருப்ப எடுத்த முயற்சியும், உங்கள் பகுத்தறிவு கொள்கை பிரச்சாரம்( இப்போ தமிழகத்தில் முன்பிருந்த வலு இப்போ இல்லாதது மாதிரி தோற்றம்)யுக்தியும் தானே

"ஒரு கல்லில் இரு மாங்காய்"

பதிவாளர்களுக்குள் இது ஒரு நல்ல ஆரோக்கிய போட்டி

"சாபாஸ் சரியான போட்டி"
(வஞ்சிக் கோட்டை வாலிபன் வீரப்பா பாணியில்)

வாசக அன்பர்களுக்கு நல்ல அறிவுச் செய்தி வேட்டை.பாரட்டுக்கள்

இப்போ வலைத்தளத்தில் " on line voting " இருக்கே
(protection againast second voting by the same person)

வாசகர் எண்ணம் என்ன என்று அறிய செய்தால் தமிழக இன்றய நிலையின் பிரதி பலிப்பை ( ஒரளவுக்கு)
தெரிய வாய்ப்பு.

தேர்தல் வேற வந்திடும் போலுள்ளதே!

அதுவும் இப்போ என்ன நடக்கப் போவதுன்ன பல பெரியவங்க விரும்பினமாதிரி இரு கட்சி ஆட்சி முறை ( மேல் நாடுகளில் உள்ளது மாதிரி
--please vist dondu.blogspot.com for further details about other nations( usa,u.k,france,germany ...etc)

ஆனால் என்ன அது இரு கம்பெனி
ஆட்சிமுறையாய் மாறும் திக்கில் செல்கிறது.

1.அண்ணன் ராமனின் இடது சாரி அணி
2.தம்பி லக்குமனனின் வலது சார் அணி.

1.அணுசக்தி ஒப்பந்தம் எதிர்ப்பு அணி

2.அணுசக்தி ஒப்பந்தம் ஆதரவு அணி

என்ன திடிரென்று கருத்து வேறு பக்கம் செல்கிறதே என்றா?

இதுவும் ஜோதிடம் சம்பந்தமாக( அதவது எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆருடங்கள்)
பற்றிதான்.
நாஸ்டர்டாம் போல் ஒரு கணிப்பு ( படித்த உண்மைச் செய்தி)
"வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உலகில் எந்தப் பகுதியில்
வாழும் மனிதனும் தான் மாதம் பெரும் மொத்த ஊதியத்தையும்( total monthly income form all sources)
தனது குடுப்பத்தின் மாதாந்திர உணவுத் தேவைக்கு மட்டும் செலவளிக்க வேண்டியது வரும் எனவே அது சமயம் மற்ற பொருடகளை (consumer goods) வாங்க ஆளில்லாமல் பணப்புழக்கம் குறைந்து( பணவீக்கம் பணம்புழங்காச் சூழலாய் மாறி) real estate வணிகம் "பேய்கள் வாழும் மாளிகயாய் மாறும்( பேய் என்பதுகூட ஒரு கற்பனைதான் சண்டைக்கு வரவேண்டாம்- வால் பையன் சார்)

இதுக்கு பங்கு வணிகத்தில் நல்ல அளுமை உள்ளவர் என "டோண்டு ராகவன் சாரால்" வெகுவாய்ப் பாரட்டப்பட்ட வால்பையன் சார் என்ன சொல்கிறார்.

விவாதம் இந்த திசையில் செல்லட்டுமே
வரும் காலத்தில் பொருளாதார எருக்கடிக்கு ஆலாகப் போகும் "வெகுஜனம்" காரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்

நல்லது அல்லவா.

இது நடக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உலகில் கட்டியங் கூற அரம்பித்துவிட்டன்

1.பணக்கார அமெரிக்காவின் பொருளாதர வீழ்ச்சி

2.கச்சா எண்ணெயின் உயர்ந்து வரும் அதீத விலையுர்வு( 200 டாலரை தொடும் என்பது கணிப்பு)

3. இந்தியாவின் பனவீக்கம் 20 ஐ நோக்கி நகர்வதாக தகவ்ல்.

4.உலக் வெப்பமாதலின் காரனத்தல்,
ஏற்படும் இழப்புக்கள் அனைத்து துறைகளிலும்( எரி சக்தியில் குறிப்பாக)

5.விவசாய நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு விவசாயப் பரப்பு வேகமாய் குறைந்து வரும் அபாயகரம்

6.நம்மைவிட வேகமாக வளர்ந்துவரும் "சைனாவின்" பொறாமை(வில்லத்தனம்)நரித் தனங்கள்

7. 2010ல் அரிசியை இறக்குமதி செய்தால்தான் அனைவருக்கும் சோறிட முடியும் எனக் கணிப்பு( அரசுத் துறை)

8.குறுக்கு வழியில் பனம் குவிக்கும்" வல்லான் பணம் குவிக்கும்" என்று பாரதி தாசன் பாடியதை மெய்பிக்கும் விதமாக செயல் படுவோர்

9.பெருகிவரும் மக்கட் தொகை பெருக்கம்

10.அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு( லஞ்ச, லாவண்யம், கட்சி மாரும் போக்குகள்)

11.மக்களின் புரிந்தும் புரியாத் தன்மைகள்

12.மரங்கலை வெட்டுதல் ,பிளாஸ்டிக் பொருட்களை உலகின் தரை,வானவெளிகள்,நிர் நிலைகள், காற்று மண்டலம் முழுவதும் பரப்பி நீர்,நிலம்,காற்று ஆகிய மனித ஜீவாதாரங்களை வேகமாய் கெடுத்து இயற்கயின் சமன் சூநிலையை பாழ்படுத்தும் நாம்.


இந்த 12 ம் தான் இந்திய ஜாதகத்தில் 12 ராசிக் கட்டத்தில் உள்ல கிரகங்கள் போல்--முக்கியாமன 9 பவர் கூடியது எனவும்-மற்றவை காலிக் கட்டம்- அதாவது சிலதை சரி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்))


copy to

1.http://dondu.blogspot.com/
2.http://classroom2007.blogspot.com/
3.http://scssundar.blogspot.com
4.http://truetamilans.blogspot.com/

Anonymous said...

ஹெல்லோ இங்க என்ன நடக்குது, நேத்து சாயங்காலம் பார்த்துட்டு போகும்போதுகூட 16 கமென்ட்தான் இருந்துச்சு, அதுக்கு அப்புறம் பயங்கர கும்மி போல இருக்கு.

தாங்கள் இந்த பதிவுப் போட்டுள்ளது, சர்வதாரி வருடம் ஆனி மாதம் 29 தேதி ஞாயிற்று கிழமை வளர்பிறை ஏகாதசி திதி, விசாக நஷத்திரம். காலை நல்ல நேரத்தில் ஆரம்பித்து எமகண்டம் பகல் 12 மணி வருவதற்குள் பதிவேற்றிவிட்டதால் உங்கள் இஷ்ட தெய்வம் மகரநெடுங்குழை காதணின் தாசன் அனுமாரின் அருள் பெற்ற வாலுடையவர்களால் பதிவில் நல்ல பின்னூட்டம் கிடைக்கும் என்று நமீதா நாடி ஜோசியத்தில் உள்ளது. அதுவும் இல்லாமல் நமீத இரட்டை நாடி சாரீரம் உள்ளவர் என்பதால் மற்ற அகஸ்தியர் பொன்ற ஒற்றை நாடி ஜோதிடத்தை நாடவேண்டாம் என்றும் கூறிக்கொள்கிறேன்.

சரவணன்

Anonymous said...

ஆஹா கோபகிருஷ்ணன் வந்திருக்காரு கவனிக்கவே இல்லையே.. வாங்க வணக்கம்.

////என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))"//

விடுத‌லை மீது ஏன் ச‌ந்தேக‌ப்ப‌டுகிறீர்க‌ள்? ம‌ற்ற‌ க‌ட்டுரைக‌ள் நிறைய‌ இருந்திருக்க‌லாம். இட‌மின்மை கார‌ண‌மாக‌ இக்க‌டித‌த்தை இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து பிர‌சுரித்திருக்க‌லாமே!!

கோம‌ண‌கிருஷ்ண‌ன்//

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடி தோழி
அவர் வாய்ச்சொல்லில் வீரரடி...

சரவணன்

Anonymous said...

வணக்கம் தென்காசி அவர்களே,

ஒரு மனிதனுக்கு ஜோதிட நம்பிக்கை உள்ளது என்று கூறுங்கள் அது அவர் பாடு இப்படி பக்தி வரும்போது ஜோதிட நம்பிக்கை வருகிறது என்ற பொதுக்கருத்து தவறு.

//பக்தி வரும் போது ஜோதிட நம்பிக்கையும் தானாக வருகிறது.//

பக்தியா ஜோதிடமா?

ஜோதிடம் உண்மை என்றால் ஒருவனின் விதி நிர்ணயிக்கப்பட்டது என்றால் அவனுக்கு கடவுளை கும்பிட வேண்டிய அவசியமே இல்லை, அவனுக்கு தெய்வமே அவசியம் இல்லை. இங்கு பக்தி தோற்கிறது.

இல்லை ஒருவனின் பக்தி அவனை பாதுகாக்கிறது என்றால், நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற ஒருவனுக்கு ஜோதிடம் தேவையற்றது எதற்கு அவன் ஜோதிடத்தை நம்ப வேண்டும் இங்கு ஜோதிடம் தோற்கிறது

இரண்டையும் கலப்பது ஒரு பயங்கலந்த மரியாதையை ஜோதிடத்திற்கு தரவே என்பது என் கருத்து. அதற்காகவே பக்தியும் பரிகாரங்களும் ஜோதிடத்தில் பரிமாறப்படுகின்றன

சரவணன்

Anonymous said...

//சரவணன் said...
வணக்கம் தென்காசி அவர்களே,

ஒரு மனிதனுக்கு ஜோதிட நம்பிக்கை உள்ளது என்று கூறுங்கள் அது அவர் பாடு இப்படி பக்தி வரும்போது ஜோதிட நம்பிக்கை வருகிறது என்ற பொதுக்கருத்து தவறு.//

அருமைத்திரு சரவணன் அவர்களே!

வணக்கத்தோடு பின்னூட்டம் தொடங்கிய பண்புக்கும் வார்த்தை உபயோகத்தின் பண்புக்கும் முதலில் பிடிங்க மலைர்க் கொத்தை.
நெஞ்சுநிறை நன்றிகள்..

தமிழர் பண்பாட்டு நாகரிகத்துக்கு பேர் பெற்றவர்கள்.
ஆனால் இங்கே வலைப்ப்பதிவில் ஒரு சிலரால் மற்றுக் கருத்தை பதியும் போது
உப்யோகிக்கும் வார்த்தை பிரயோகங்கள்,வசவுகள்,தனி மனித தூற்றல்கள்
( ஜாலியான கிண்டல்கள்,தமாசுகள்,கிச்சு கிச்சு மூட்டுதல் o.k)
கண் கொண்டு பார்க்க முடியாதாதாய் உள்ளது.
வலைதளம் ஒரு அருமையான அரங்கு. அதை நல்ல படியாக உப்யோகித்து அறிவு பூர்வமாகவும், பண்பு பாராட்டியும் ,பிறர் நலத்தை தன்நலம் போல் நினத்து, பகைவனுக்கும் அருள்வாய் என கருத்துக்களைம், மாற்றுக் கருத்துக்களையும் பதிந்து வரவேண்டும் என்பதுதான் தமிழ் கூறும் நல்லுகிற்கு வளமான எதிர் காலத்தை அளிக்கும்.

பதஞ்சலி முனிவரும் அவறைப் பின்பற்றி வந்த உண்மையான யோகிகள்(போலி பித்தலாட்டம்,ஜிம்மிக்ஸ் பண்ணுபவர்கள் தவிர்க்கவும்) போன்ற சான்றோர்களின் கருத்துப் படி இந்த உலகின் உள்ள ஜீவராசிகள் அனத்தும்
ஒன்றே ( மனிதன்,மிருகங்கள்,பறவைகள்,புழு,பூச்சி இனங்கள்,செடி கொடிகள் ,நிர்,நிலம்,ஆகாயம்,நெருப்பு,காற்று அனத்தும் பரண்ட பிரபஞ்சத்தில் ஒன்றே)

இப்போ நம்ம இடத்துக்கு வாங்க !

நாம் ஒருவரை பாராட்டினால்,பண்புடன் நன்றி பாராட்டினால் அது நம்மை நோக்கி செய்தாகத் தான் அர்த்தம்.இது தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும்,ஆனந்தத்தையும் கொடுக்கிறது.

இப்படி இருக்கும் போது கடும் சொற்களை அம்பென எய்து மனத்தை நோகடிக்கும் போக்கு என்ன பலனைத் தரும் என்பது உலகறிந்த உண்மை.

ஆன்ந்த அலையை தமிழ் வலைப்பதிவுலகில் பரப்ப அனைவரும் உறுதி கொள்வோம்.
அந்த நல்ல நாளுக்கு காத்திருக்கும்

உங்கள் நண்பன்

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

இறையாற்றல் கருணை புரியட்டும்

வாழ்த்துவோம் வனங்குவோம்
வளருவோம் வளம்பெருவோம்
வாழ்வோம் வாழ்வங்கு.


இக் கருத்துக்கு முன்பே வலியுற்த்துஅவர் பெருமக்களிள்
பொய்யா மொழிகள்:

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யெ!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!


--------------------------------------------------------------------------------


If your eyes are positive, you would like all the people in the world.
If your tongue is positive, all the people in the world will like you.

புரட்சிகவியின் தெய்வீகக் கனவு

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்!

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

thenkasi said...

//ஜோதிடம் உண்மை என்றால் ஒருவனின் விதி நிர்ணயிக்கப்பட்டது என்றால் அவனுக்கு கடவுளை கும்பிட வேண்டிய அவசியமே இல்லை, அவனுக்கு தெய்வமே அவசியம் இல்லை. இங்கு பக்தி தோற்கிறது.

இல்லை ஒருவனின் பக்தி அவனை பாதுகாக்கிறது என்றால், நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற ஒருவனுக்கு ஜோதிடம் தேவையற்றது எதற்கு அவன் ஜோதிடத்தை நம்ப வேண்டும் இங்கு ஜோதிடம் தோற்கிறது

இரண்டையும் கலப்பது ஒரு பயங்கலந்த மரியாதையை ஜோதிடத்திற்கு தரவே என்பது என் கருத்து. அதற்காகவே பக்தியும் பரிகாரங்களும் ஜோதிடத்தில் பரிமாறப்படுகின்றன

சரவணன்//


மாற்றுக் கருத்தை மாண்புடன் பதிந்தமைக்கு தென்காசியின் பாரட்டுகளும் உங்களுக்கு.

இது பற்றி பெரியவர்கள் தான் கருத்து சொல்லமுடியும்.
இருந்தாலும் என் சொந்த அனுபவம் உங்களோடு பகிர்தல் ஒரு தன்னிலை விளக்கம் போல் .
பாரதியாரின் அன்பு மனைவியின்
சொந்த ஊரின் உயர் நிலப் பள்ளியில் படிக்கும் போது எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவ்ர்( அரசின் விதி முறைப்படி அதுவும் சுமுதாய அளவுகோலின் படி).எந்த வசதியும் இல்லாக் கிராமத்தில் ஏழையாய் இருந்து பிற உயர் வகுப்பினரானால்( நமது சினிமாக்களில் வரும் வில்லன்கள் போல்) மிகவும் துன்பப்பட்டு மிகவும் சிரமப் பட்டு இந்த வேலைக்கு வந்தவர்.

பகுத்தறிவும்,பொதூடைமையும் கலந்த ஒரு நல்ல பண்பாளர். அவர் தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களையும் இன்னல்கலையும்,அவமானங்களையும் தினம் சொல்லிவந்ததால் எங்களுக்கும் அவர் பாதிப்பு இருந்து வந்தது.
அதாவது நாத்தீக உணர்வு,ஜாதகத்தின் மீது அவநம்பிக்கை,சுயநலக் கும்மப்லின் மீது சீற்றம்.
இது நிற்க.

காலங்கள் (சுமார் 35 வருடங்கள்)உருண்டோடிவிட்டன்.எவ்வளவோ மாற்றங்கள்,கலப்பு திருமனங்கள்,ந்கர விரிவாக்கம் பகுதிகளில் உண்மையான சம்த்துவ புரங்கள்.( இன்னும் அநீதிகள் முழுமையாய் தீர்க்கப் படவில்லை- ஆனலும் ஒரு நாள் இல்லவிட்டால் ஒரு நாள் அந்த தமிழக்ம் மல்ரும் நம்புவோம்).

சரி நம்ம் கதையை தொடர்வோம்.

வாழ்வில் 40ன் தொடக்கத்தில் வாழ்வுச் சவால்கள் நம்மை நெருக்குகிறன.
உடலின் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமய் மக்கர் செய்ய ஆரம்பிக்கின்றன.

இதுவரை எதிர்வாதம் பேசியவ்ர்கள் நல்ல் ஆன்மீக புதகங்களையும் படிக்கவும்,ஆன்மிகக் கூட்டங்களுக்கு சொல்ல ஆரம்பிக்க தலை படுகின்றனர்.

அவநம்பிக்கை நீங்கி அவனே சரணம் என மனம் எண்ண தொடங்குகிறது.
இது பொதுவாக 95% மக்களுக்கு தனது 50 வயதில் தொடங்கும்.

இறை நம்பிக்கயை ஒரு ஆத்ம பலம் என உணர்வோம்;
எல்லம் மனம் சார்ந்த விசயம்.
மேலும் யோகிகளின் கருத்துபடி ஆகம்விதிப்படி கட்டப் பட்ட பல் கோவில்களில் சித்தர்களின் சமாதி உள்ளதகாவும் நல்ல எண்ண அதிர்வுகள் நம்மை பரசவப் படுத்தும் என்பதிலும் உண்மை இருக்கிறது.

மன்ம் ( துன்பம் காரணமாக்)அலைபாயும் போது உங்கள் ஊரில் உள்ள் கோவிலுக்கு சென்று கண்ணை மூடி உங்கள் சுவாசத்தை கவ்னியுங்கள் அது மென்மையாக ஒரு அழகான் புல்லங்குழல் நாதம் போல் மெதுவாக மென்மையாய் மாறி இன்பத்தைம் அமைதியும் ஆனந்தத்தையும் அளிக்கும்.
ஒரு முறை முயற்சி செய்து விட்டு உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

இந்த உலகில் நம்மை கூன்,கண்பார்வையில் குறைபாடுகள் ,செவிகேளாத் திரனின்மை, கை கால் பழுது ஆகியவை இல்லாமல் நல்
அறிவோடு படைத்த இறவனுக்கு(இயற்கையின் இறை யாற்றலுக்கு)நன்றி சொல்வதே அவன் தாள் பணிந்து வணங்குதல்.
கடவுளை நம்புவது
நம்க்கு ஒரு moral support

இதிதா த்ய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லியுள்ளர்.

ஜோதிடத்தி எப்படி இருந்தலும் கடவுள் நினைத்தால் அவர் விதித விதியை அவ்ர் மற்றுவார் எனற எண்ணமே உங்களுக்கு யானை பலம் கொடுக்க கஷ்டங்கள் கரைந்து எதையும் தாங்கும் மனப் பக்கும் வந்து வாழ்வை எந்தச் சூழ்நிலையிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.

இது பல பெரியவ்ர்கள் சொல்ல கேட்டு அனுபவத்த உண்மை உணர்வு

மீண்டு சந்திப்போம்
நல்ல கருத்தை பரிமாறிக் கொள்ள.

வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.நன்றி

ஒரு வேண்டு கோள்:
ஒருமுறை ஆசிரியர் சுப்பையா அவ்ர்களின் classroom2007.blogspot.com க்கு வரவும். அவர் வகுப்பில் உங்கள் எல்லச் சந்தேகங்களுக்கும் நல்ல முழு விளக்கம் கிடைக்கும்.

dondu(#11168674346665545885) said...

மிகவும் சத்தியமான வார்த்தைகள். இந்த எண்ணமே எனது இரண்டாம் யோம் கிப்பூர் பதிவில் இவ்வாறு எழுத வைத்தது:
"இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் பார்க்க வேண்டும். மேலே கூறியது எல்லாம் மைனஸ் பாயிண்டுகள். ப்ளஸ்ஸில் என்ன இருக்கிறது? முதலில் எனக்கு பக்கபலமாய் இருப்பது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன். அதே போல லட்சக்கணக்கில் ராமநாமத்தை எழுதும் என் மகளுக்கோ, லட்சுமிநரசிம்மரின் பக்தையான என் மனைவிக்கோ ஒரு கேடும் வராது. அடுத்த ப்ளஸ் பாயிண்ட் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவனின் மனவுறுதி. அந்த உறுதி அவன் சாகும்வரை அவனுடனேயே இருக்கும்".

62 வயதிலும் அவன் நிலைமை மாறவில்லை. என்னை நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் நாமம் இருக்கையிலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

//62 வயதிலும் அவன் நிலைமை மாறவில்லை. என்னை நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் நாமம் இருக்கையிலே.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

மிகவும் நன்றி ஐயா.

பொதுவாக தற்காலத்தில் முன்பு இருந்ததுபோல்( 1950-1970)கடவுள் மறுப்புக் கொள்கையும் தெய்வ நிதனைகளும் இல்லச் சூழ்நிலைதான் நிலவுகிறது . இது உள்ளங்கை நெல்லிக்கனி.

அதுவும் குறிப்ப்பக தாங்களும்,ஆசிரியர் சுப்பையா அவ்ர்களும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை
பதிந்து அந்த எண்ணங்களுக்கு வலு கூட்டுவதற்கு பாரட்டுக்கள்.

இறைவன் மிது நம்பிக்கையும்,பாவ புண்ணியங்கள் மேல் நம்பிக்கையும்,பரஸ்பர சகோதர நல்லுணர்வுச் சிந்தனைகளும் நிச்சயம் எல்லோருக்கும் ஆனந்தத்தையும் நிம்மதியையுமே கொடுக்கும்.

இது சான்றோர் வாக்கல்லவா!

Anonymous said...

//அருமைத்திரு சரவணன் அவர்களே!

வணக்கத்தோடு பின்னூட்டம் தொடங்கிய பண்புக்கும் வார்த்தை உபயோகத்தின் பண்புக்கும் முதலில் பிடிங்க மலைர்க் கொத்தை.
நெஞ்சுநிறை நன்றிகள்..//

வணக்கம் அனானி அவர்களே, உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. பெயர் சொல்லமால் போயிட்டீங்களே சார். எனிவே மிக்க நன்றி.

இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை; மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்; மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

அப்படிப்பட்ட திருக்குறளை உலகுக்கு கொடுத்தது நாம். சக மனிதனிடம் அன்பும் பண்பும் பாராட்டுவது என்பது நம் கடமையாய் கொள்வோம்.

//நாம் ஒருவரை பாராட்டினால்,பண்புடன் நன்றி பாராட்டினால் அது நம்மை நோக்கி செய்தாகத் தான் அர்த்தம்.//
இது சூப்பர்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கு ஈந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

சரவணன்

Anonymous said...

வணக்கம் தென்காசி அவர்களே, நீண்ட நிறைவான் பின்னூட்டத்துக்கு நன்றி

//மாற்றுக் கருத்தை மாண்புடன் பதிந்தமைக்கு தென்காசியின் பாரட்டுகளும் உங்களுக்கு.//

நன்றி அய்யா, மாற்று கருத்துக்களை அமைதியாக கவனிக்கும்போது, அவற்றை பற்றி சிந்திக்கும் மற்றும் மாற்று கருத்து உள்ளவர்களிடம் விவாதிக்கும்போது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம்.

//எங்களுக்கும் அவர் பாதிப்பு இருந்து வந்தது.
அதாவது நாத்தீக உணர்வு,ஜாதகத்தின் மீது அவநம்பிக்கை,சுயநலக் கும்மப்லின் மீது சீற்றம்.//

நிறைய பேர் அனுபவித்தது, என் தந்தயாரே நடுவில் நாத்திகராய் இருந்து அவரது நாற்பது வயதுக்குப்பின்னரே ஆத்திகரானார்.

//இறை நம்பிக்கயை ஒரு ஆத்ம பலம் என உணர்வோம்;//
சரி

//மன்ம் ( துன்பம் காரணமாக்)அலைபாயும் போது உங்கள் ஊரில் உள்ள் கோவிலுக்கு சென்று கண்ணை மூடி உங்கள் சுவாசத்தை கவ்னியுங்கள் அது மென்மையாக ஒரு அழகான் புல்லங்குழல் நாதம் போல் மெதுவாக மென்மையாய் மாறி இன்பத்தைம் அமைதியும் ஆனந்தத்தையும் அளிக்கும்.//
சரி

இப்ப ஜோதிடம் இதில் எங்கு வருகிறது. கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்பது என் கொள்கை. ஜோதிடம் உண்மையா பொய்யா என்பதல்ல என் வாதம் அது உண்மயாய் இருந்தாலும் அதை என்னால் பொய்யாக்க முடியும் என்ற மனவுறுது வேண்டும் என்பதே.

ஜோதிடம் மூலம் வர இருக்கும் இடையூறுகளை அறிந்து களைந்துவிடலாம் என ஆரம்பித்து கடைசியில் அதன் மேல் உள்ள அதீத ஈடுபாட்டால் நிறைய பேர் வாழ்வில் பல சிக்கல்களை அனுபவிக்கிறார்கள் என்பதும் நாம் தினம் காண்பதே.

//ஒரு வேண்டு கோள்:
ஒருமுறை ஆசிரியர் சுப்பையா அவ்ர்களின் classroom2007.blogspot.com க்கு வரவும். //
தகவலுக்கு நன்றி, வருகிறேன்

சரவணன்

Anonymous said...

வணக்கம் டோண்டு சார்,

//என்னை நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் நாமம் இருக்கையிலே.//

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்
நமச்சிவாய நாமம் நாவில் இருக்கையிலே !

ஒரு பனிரெண்டாம் நூற்றாண்டுல பிறந்திருந்தாலாவது நாம் சைவ வைணவ சண்டையாவது போட்டிருக்கலாம். ;-)

சரவணன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது