Explain with reference to context (ERC) என்று அழைக்கப்படும் சில வினாக்கள் நான் பள்ளியில் படித்த காலத்தில் மொழி பாடங்களில் கேட்பார்கள். ஒரு வாக்கியத்தை கொடுத்து அதன் இடம் பொருள் ஏவலுடன் விவரிக்கச் சொல்வதே அக்கேள்விகளின் நோக்கம்.
மகத்தான நோக்கம்தான் அது என்பதை நான் இன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதை உணர்த்தியது ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதை சம்பந்தமாக அவரது வலைப்பூவில் வந்த கடிதம்தான்.
தியாகையரின் எந்தரோ மகானுபாவுலு என்னும் கீர்த்தனை மிக பிரசித்தம். பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்று. தியாகையர் ஆராதனை உற்சவத்தில் திருவையாற்றில் பல இசைமேதைகள் ஒன்றாக இருந்து பாடுவதைக் காணக் கண்கோடிகள் வேண்டும். அதே பாடலை மேற்சொன்ன ஜயமோகன் பதிவில் கொடுக்கப்பட்ட யூ ட்யூப் சுட்டியை இங்கு தருவித்து எம்பெட் செய்திருக்கிறேன்.
நாகய்யா தியாகய்யாகவே மாறி இருப்பதை இதைக் கண்டுதான் அனுபவிக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டு வெளி வந்த அப்படத்தில் இப்பாடல் வந்த பின்னணியை இப்படம் காட்டுகிறது. இங்குதான் அந்த erc என்றால் என்ன என்பது புரிகிறது.
இதற்கு முன்னாலும் இதை பல தருணங்களில் பார்த்துள்ளேன். உதாரணத்துக்கு நடிகர் ராஜேஷ் திருவள்ளுவராக நடித்த சீரியல். அது திருவள்ளுவரின் சரிதம், பொதிகை டிவியில் வந்தது என நினைக்கிறேன். அதில் ஒரு காட்சி. அவரது நண்பனே அவருக்கு நஞ்சளிக்க அவரும் அதை அறிந்தே உண்ணும் காட்சியில் அதற்கான குறளை கூறுவது மிக இயல்பாகவே வந்தது (நானும் தேடிப் பார்த்து விட்டேன், இக்கணம் அக்குறள் சட்டென பிடிபட மாட்டேன் என்கிறது. தெரிஞ்சால் யாராவது சொல்லுங்கப்பூ).
அது போலவே ஒரு சீரியல் மிர்ஜா காலிப். சீரியல் முதல் சுதந்திரப் போர் தோல்வியுற்ற காலத்தில் (1857) இருந்து மிர்ஜா காலிப்பின் பழைய நினைவுகளுடன் ஆரம்பிக்கிறது. அவரது அமரத்துவம் வாய்ந்த பல கவிதைகள், அவரால் கூறப்பட்ட பல வாக்கியங்கள் ஆகியவை அவை இயல்பாக வந்த முதல் தருணங்களை குல்ஜாரின் இந்த சீரியல் அமர்க்களமாக காட்டுகிறது.
ஆயிரக்கணக்கானவர் வெள்ளை அரசால் தூக்கிலிடப்பட்டனர். அப்போது காலிப் மனம் கசந்து கூறினார், “பல பிணங்களை நான் சுமந்தேன். இப்படியே நிலைமை நீடித்தால் நான் இறக்கும்போது என்னைச் சுமக்க யாருமே மிஞ்ச மாட்டார்கள் என அஞ்சுகிறேன்”. இதன் erc-யை இங்கு காணலாம்.
1946-ல் தியாகய்யர் படம் வந்ததாக நான் சொன்னேன் அல்லவா. அப்படத்தைக் காண தன் கணவர் மற்றும் சுமார் மூன்று வயது பெண், 10 மாதங்களே நிரம்பியிருந்த மகன் ஆகியோருடன் சென்றார் ஒரு பெண்மணி. குழந்தைகள் இருவரும் படத்தைப் பார்க்க விடாமல் அழுது ரகளை செய்ய, அப்பெண்மணியின் கணவர் அவற்றை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணிக்கு இது பற்றி கழுத்து மட்டும் குறை. அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அதை அவர்களிடம் கூறியுள்ளார். அப்படத்தின் நல்லனுபவத்தை அனுபவிக்க விடாமல் அந்த துஷ்டப் பையன் எவ்வளவு படுத்தினான் என்பது இப்போதுதான் புரிகிறது.
இந்த டோண்டுவை மன்னித்துவிடு அம்மா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
17 hours ago
12 comments:
//1946-ல் தியாகய்யர் படம் வந்ததாக நான் சொன்னேன் அல்லவா. அப்படத்தைக் காண தன் கணவர் மற்றும் சுமார் மூன்று வயது பெண், 10 மாதங்களே நிரம்பியிருந்த மகன் ஆகியோருடன் சென்றார் ஒரு பெண்மணி. குழந்தைகள் இருவரும் படத்தைப் பார்க்க விடாமல் அழுது ரகளை செய்ய, அப்பெண்மணியின் கணவர் அவற்றை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணிக்கு இது பற்றி கழுத்து மட்டும் குறை. அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அதை அவர்களிடம் கூறியுள்ளார். அப்படத்தின் நல்லனுபவத்தை அனுபவிக்க விடாமல் அந்த துஷ்டப் பையன் எவ்வளவு படுத்தினான் என்பது இப்போதுதான் புரிகிறது.//
யார் இந்த குடும்பத்தினர் என்ற மர்மத்தை கடைசி வரை சொல்லாமல் suspense ஆகவே வைத்துவிட்டீர்களே டோண்டு சார்?
(என்று நிச்சயமாக ஒரு மொக்கைப்பின்னூட்டம் வரும்!என்ன சரியா?)
:-))
இட்லிவடையில் எஸ் வி சேகர் பேட்டியயப் பார்த்தீர்களா? தமிழ் சினிமாவில் பிராமணர்கள் மோசமாக சித்தரிக்கப்படுவத் பற்றிய கேள்வியை இட்லிவடைக்கு அனுப்பி இருந்தேன். அது கேட்க்கப்பட்டது. கேள்வி முழுமை பெறுவதற்குள் நீண்ட பதிலை அளித்து விட்டார். அந்த பதில் பற்றி தங்களது கருத்தை அறிய ஆவல்!
(குறிப்பு: கேள்வி கேட்டவர்கள் பற்றிய விபரம் பற்றி எதுவும் கூறப்படாததாலும் என்னைத் தவிற வலைதளத்தில் இது பற்றி யாரும் கேட்பதில்லையோ என்கிற யூகத்தாலும் அந்தக் கேள்வி நான் அனுப்பியதாகத் தான் இருக்கும் என யூகித்துக்கொண்டேன்!)
NAGAYYA HAS SUNG IT IN HIS OWN VOICE.
brahmins actually are
http://hayyram.blogspot.com/2011/02/blog-post_4543.html
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - அப்படின்னு ஒரு குறள் ஒன்று உண்டே அதை நினைத்தீர்களா. சட்டநாதன் - கழுகுமலை
எனக்கு வந்த பின்னூட்டம்: ஒரு தகவல் பரிமாற்றமாக இங்கே அளிக்கிறேன்.
Dear Mr.hayyram,
There is a different school of its kind which is run in Chennai (Rajakilpakkam, East Tambaram). It is www.srikanchimahaswamividyamandir.org
Today, I visited that school. It has combination of Veda (taught during morning & evening) and during day time (CBSE syllabus) to brahmin boys (free of cost). I was to refer those boys who are of age 7 to 12 to avail both the system of education simultaneously. It is very fine buildings (built at a cost of 8 crores rupees). I request you to publish this in your blog and also refer to friends of yours and other bloggers also (so that it can be published in their blogs).
For more info:
Sri Kanchi Swami Vidya Mandir welcomes enquiries from a parent(s), guardian(s) or sponsor(s).
Before any boy or girl can be considered for admission, parents are requested to submit the required documents and follow the admission procedure.
For further details contact :
The Admissions Desk,
Sri Kanchi Mahaswami Vidya Mandir,
Rajakilapakkam, Tambaram, Chennai, INDIA
Contact Person : Mr. V. Gowrishankar
Tel : +91 9941627330
E mail : admissions@srikanchimahaswamividyamandir.org
நன்றி டோண்டு சார்!
தற்பொழுது அரபு உலகத்தில் நடந்துவரும் புரட்சிகள் பற்றி..
1. இந்த புரட்சிகள் எல்லாம் அல் கைதா தீவிரவாதிகளின் செயலாக இருக்குமோ ?
2. இப்புரட்சிகள் மூலம் நாளை உருவாகும் நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத, யூத வெறுப்பு கொண்ட ஆனால் ஜனநாயக நாடுகளாக (ஈரான் போல்) இருக்காது என்பது என்ன நிச்சயம் ?
There was another movie on Thyagayya. Sankarabaranam-famous Somayajulu acted as Saint Thyagaraja. I took my entire family (including my step-mother)for the movie. My stepmother, even at 82 years now sings Carnatic songs enthusiastically. The movie had great music but was not too successful at the box office - perhaps due to high expectation after the stupendous success of Sankarabaranam, which was a wholesome treat.
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் குறைத்து 27 சதவீதம் மட்டும் வசூலிக்க முடிவுசெய்துள்ளது.
pt:இவரல்லோ யாரும் நினக்ககாததையும் கொடுக்கும் தர்மப் பிரபு.தேர்தல் சாமிக்கு ஒரு ஓ போடு!
டோண்டு:?
2.இன்றைய பொன்மொழிஉதிர்த்தவர் ப.சிதம்பரம்பட்டமரம் துளிர்க்காது; பச்சை மரம்தான் துளிர்க்கும்! காங்கிரஸ் பச்சை மரம். ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் !-
pt:அப்படி போடு அருவாளை!
டோண்டு:?
3. லிபியா மக்கள் எனக்காக உயிரைக் கொடுப்பார்கள்: கடாஃபி
pt: அண்ணன் கடாஃபி லிபியாவின் கலைஞர்!
டோண்டு:?
4. குட்டக் குட்ட குனியக்கூடாது: தி.மு.க.வுக்கு கி. வீரமணி வேண்டுகோள்
pt:மே23 க்கு பிறகு பாருங்கள் வீரமணியின் அந்தர் பல்டியை அம்மா முன்னால்!
டோண்டு:?
5.2ஜி ஊழல் விசாரணைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு: மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார் கபில் சிபல்
pt:வரவேற்போம் இருகரம் கூப்பி
டோண்டு:?
@pt
உங்களது கேள்விகள் 10-ஆம்தேதிக்கான முன்வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Pl listen to Dr. Swamy's recent talk in Mangalore about 2G Spectrum Scam.
http://www.ustream.tv/recorded/12954399#utm_campaigne=synclickback&source=http://www.daijiworld.com/tvdaijiworld/tvhome.asp?category=live&tv_id=1767&medium=12954399
Post a Comment