பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம், ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது. பதிவுக்கு போகும் முன்னால் சில வார்த்தைகள். முதலில் இந்த வரிசையை துவக்கக் காரணமே எனது கேள்வி பதில் பதிவுக்கு செட்டியார் சமூகம் பற்றிய வந்த சில கேள்விகளால்தான். அவற்றுக்கு பதில் கூற இணையத்தை நாடியதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அக்கேள்விகளுக்கென தனி பதிவே போட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு.
நாடார்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன். தமது சொந்த முயற்சியால் முன்னுக்கு அவர் வந்ததது யூதர்கள் 2000 ஆண்டு காலம் போராடி யூத நாட்டை அடைந்ததற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல எனது எனது அசைக்க முடியாத கருத்து. ஆகவே அவர்கள் பற்றியும் பதிவு வந்தது.
இந்த இரு பதிவுகளுக்குப் பிறகு ஒரு மாதிரி வேகம் வந்து விட்டது. இந்த அவசர உலகில் ஒரு ஒழுங்குடன் நிலைத்து நிற்பவை என்பன சிலவே. அவற்றில் நமது பாரம்பரியமும் ஒன்று. இயற்கையில் வேறுபாடுகள் அனேகம் உண்டு. எல்லாவற்றையும் ரோடு போடுவது போல சமன்படுத்துவது என்னும் செயல்பாட்டில் பல பாரம்பரியங்கள் அழியும் அபாயம் எப்போதுமே தொக்கி நிற்கிறது. அவற்றை கட்டிக் காப்பதில் பல சாதி சமூகங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்.
ஓக்கே, இந்த முறை நான் கூறப்போவது பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம் பற்றித்தான்.
இம்முறையும் வழக்கம்போல நன்றி இரா. மணிகண்டன் அவர்கள் மற்றும் குமுதம் 14.01.2009, 21.01.2009 மற்றும் 28.01.2009 இதழ்கள். வழமைபோல குமுதத்தில் வந்ததை பார்த்த பிறகு டோண்டு ராகவனும் வருவான். முதலில் ஓவர் டு குமுதம்.
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.
``கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி'' என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.
கட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்' என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.
கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.
தென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்' தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
தொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
சேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.
பிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.
அன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம்.
இதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.
வேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.
இவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.
திருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.
இவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.
இன்று அவர்களின் நிலை என்ன?.
இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.
இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.
பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.
திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.
முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.
மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்' என்கின்றனர்.
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.
மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.
பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.
பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்' அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.
விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.
கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.
உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.
நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.
அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
அன்றைய சென்னைப் பட்டினம் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடந்தது. திடீரென பொழிந்த வெடிகுண்டு மழையில் ஜனங்களைவிட வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்கள் நடுக்கத்துடன் உச்சரித்த ஒரே பெயர் ஜெய்ஹிந்த் செண்பகராமன். ஏன்?
1914-ல் செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எம்டன் நீர்முழுகிக் கப்பலில் பயணித்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன். இந்தியாவைவிட்டு வெள்ளையர்களை வெளியேற்ற, இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசீய தொண்டர் படையை (ஐ.என்.வி.) ஆரம்பித்தவர். அதன் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷார் கலக்கம் அடைந்தனர். சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ.வுக்கு முன்னோடி அது.
இப்படி தன்னலம் கருதாத வீரர்களை தாய்மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்ததன் விளைவு, பிள்ளைமார் சமூகத்தின் மேல் மற்ற சமூகத்தார்க்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கூடியது.
பழங்காலந்தொட்டே, தம் சமூகத்தாரையும் தம்மை சுற்றியுள்ள பிற சமூகத்தாரையும் கல்வியும் பக்தியிலும் சிறந்து விளங்க வைக்க பிள்ளைமார் சமூகத்தார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை.
பிள்ளைமார்களின் சமயப் பற்றுக்கும் அருள்நெறித் தொண்டிற்கும் சான்றாய் விளங்குவதுதான் பதினெட்டு சைவ ஆதீனங்கள். அவை சைவ சமய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுவையாக இல்லாமல், கல்வியையும் நீதிநெறிகளையும் மக்களுக்கு கற்றுத் தரும் மடங்களாக விளக்குவதுதான் அவற்றின் சிறப்பு. சைவ சித்தாந்த நூல்களை தமிழுக்குத் தந்தார்கள். அதன் மூலம் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்தார்கள்.
மனித சமூகம் வாழ வழிகாட்டிய வடலூர் வள்ளல் பெருமான் இச்சமூகத்தாரின் பெருமைகளை நிலை நாட்டியதில் முன்னவராய்த் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
சைவத்தையும் தமிழையும் வளர்த்திடும் குறிக்கோளுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பித்ததன் மூலம் திருவரங்கம் பிள்ளையும் திரு. வ. சுப்பையா பிள்ளையும் வரலாற்றுச் சாதனை படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள்.
தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்.
சைவர்களாக இருந்த பலர் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பங்குபெற்ற வரலாறும் உண்டு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஏ.சி.பி. வீரபாகு, இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்த தியாகி எம்.சி. வீரபாகு, சுயமரியாதை இயக்கத்தில் பெரும் பங்காற்றிய சி.டி. நாயகம் என்று பலர் பாடுபட்டுள்ளனர்.
தோழர் ஜீவா போன்றவர்களால் இம்மன்ணில் கம்யூனிசக் கோட்பாடுகள் மலர்சி கண்ட வரலாற்றை மறக்க முடியாது.
இன்று மேயர்கள், மந்திரிகள் என்று அரசியலில் வலம் வரும் இச்சமூகத்தாரின் எண்ணிக்கை அதிகம்.
சமயம், கல்வி, இலக்கியம், சமூகப்பணி, பதிப்புப் பணி, பத்திரிகை, வணிகம், அரசியல் என்று இச்சமூகத்தார் கால் பதிக்காத துறையே இல்லை.
“தமிழகத்தின் ‘பொற்காலம்’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாடுபடுவோர் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களே” என்கிறார் சைவநெறி காந்தி.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. கணபதி சந்தானம் கூறுகிறார், “தமிழகத்தின் தொன்மையான இனம் வேளாளர் இனம். சைவமும் தமிழும் வளர பெரும்பணி செய்து வருகிறார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் வாக்கிற்கும், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளையும் வ.உ.சி. போன்றோரின் தேசபக்தியையும் கடைபிடித்து வருபவர்கள். நாம் நல்லவர்கள்; நமக்கு அனைவரும் நல்லவர்களே என்ற அடிப்படையில் பணி செய்து வருபவர்கள்.”
இப்போது சில பிள்ளைமார் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.
எம்.சி. வீரபாகு: சுதந்திரப் போராட்ட தியாகி. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தவர். அரசியல் சட்ட ஒப்புமையில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்தவர். வ.உ.சி.க்குப் பின், அவரது பெயரில் கப்பல் கம்பெனியை நிறுவியவர்.
பரலி. சு. நெல்லையப்பர்: பாரதியாரின் உற்ற தோழர். அவரது நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். பாரதியாரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்த தேசத் தொண்டர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இவரது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” பாடலைத்தான் வழிநெடுக முழக்கமிட்டார்கள்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்: தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ‘தமிழர் மாநாடு’ கூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர்களைத் தட்டி எழுப்பியவர். ‘தமிழ் மருந்துகள், தமிழ்ச் செல்வம்’ உள்ளிட்ட 25 நூல்கள் எழுதியவர். 96 வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தவர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: பொதுவுடைமை கருத்துக்கள் ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடையும்படி பாடல்களை எழுதியவர். குறுகிய காலத்தில் அவர் அடைந்த புகழ் திரையுலகில் யாரும் அடையாதது.
கணிதமேதை எஸ்.எஸ். பிள்ளை: உலகப் புகழ் பெற்ற கணித மேதை. 300 ஆண்டுகளாக விடை காணாத கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் வாரிங் என்பவரின் கணிதப் புதிருக்கு விடை கண்டு பிடித்தவர். 1950-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலக கணித விஞ்ஞானிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சென்றபோது விமான விபத்தில் உயிர் நீத்தவர்.
அகிலன்: தமிழ் மொழிக்கு சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்தவர். இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடவிருதை தமிழில் முதன் முதலாகப் பெற்று சரித்திரம் படைத்தவர்.
வல்லிக்கண்ணன்: தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர். நாடகம், புதுக்கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு தளங்களில் தமிழை வளர்த்தவர்.
ஜெயகாந்தன்: நாவல், சிறுகதை உலகின் புரட்சி மன்னர். சிறந்த மேடைப் பேச்சாளர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எழுதும் வல்லமை படைத்தவர். பல விருதுகளைப் பெற்ற இவரை ‘ஞானபீட விருது’ தேடிவந்து பெருமை கொண்டது.
(இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்களை இச்சமூகம் தந்து வரலாறு படைத்துள்ளது).
மீண்டும் டோண்டு ராகவன். சமீபத்தில் அறுபதுகள் வரைகூட தமிழ்த் திரைப்படங்களில் சாதிப் பெயர்கள் சர்வ சாதாரணமாக புழங்கி வந்தன. முக்கால்வாசி படங்களில் கதாநாயகன் பிள்ளை சாதியை சார்ந்தவராகவே காட்டப்படுவார். அவரது தந்தையை எல்லோரும் மரியாதையாக பிள்ளவாள் என அழைப்பார்கள். இலங்கையில் இந்த சாதியினர் தமிழர்களில் மிகவும் முன்னேறியதாக வரையறுக்கப்பட்டவர்கள்.
மேலே சொன்ன பட்டியலில் விட்டு போனவர்களில் ஒருவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. “யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதை தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்தவர்” என அவரைப் பற்றி எழுதுகிறார், குன்றக்குடி பெரிய பெருமாள் என்பவர்.
உவேசா அவர்களது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை மடத்தின் ஆதரவில் இருந்தவர். அம்மடமும் அவரும் இல்லாவிட்டால் உவேசா அவர்களது தொண்டும் தமிழுக்கு கிடைக்காமல் போயிருக்கக் கூடும்.
மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமது தேவைகள், நமது பாவனைகள்
-
அன்புள்ள ஜெ, இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது.
வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு
பேரிய...
9 hours ago
57 comments:
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.
Good Compilation Dondu Sir !
I heard that there are 21 sects in Pillaimaar. Karkartha Pillai, Tirunelveli Saiva pillai, Illathu pillai, Kodika pillai, Thuluva pillai, Isai Pillai, Namathari Pillai, Nanjil Nattu pillai.....
I am not sure somebody has to confirm. Karunanidhi is a "Isai Vellalar /Pillai".
Famous film personalities like Sundar C., Mettioli Gobi, Jai Shankar, T.S Ballaya are all Pillais / Vellalars. I also heard that Actor Vijay's dad S.C Chandrasekar is also a pillai (Christian).
சாதியை குறித்த தகவல்களை பேசுவது வீண் வம்போ.. தெரியல.
ஆனால் நீங்க சொல்லியிருக்கிற பிள்ளை சாதிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
சம்பந்தம் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டர்கள். மேலும் இணையத்தில் ஆராய்ந்து பாருங்கள்.
பூரானையோ தேளையோ பார்க்கிறது போல சங்கடமாய் உள்ளது சாதி பற்றி எழுத ;(
உத்தப்புரம் பெருமைகளையும் நீங்கள் சேர்த்திருக்கலாம்.
யாரும் தங்கள் பெருமையை சொல்லிக்கொள்ளட்டும், அதே அளவுக்கு தலித் சமுதாயத்தை உயர்த்த வேண்டிய கடமை அவர்களை மட்டந்தட்டிய குற்றவாளிகள் அனைவருக்கும் உண்டு.
சாதிகளைப் பற்றி எழுதுகிறீர்கள். மனிதன் குழு மன்பான்மை உள்ளவன் என்பதால்
அவற்றை ஓவ்வொரு குழுக்களின் வாழ்க்கை முறையும் அதன் சிறப்பும் என விட்டு விடலாம்.
ஆனால் சு.பாராதியார் , பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், போன்றவர்களை எல்லாம் அவர்கள் அந்த ஜாதியில் பிறந்தார்கள் என்பதால் அதில் அடைப்பது அறிவுடைய செயல் தானா ? தெரியவில்லை.
சாதியால் அவர்களுக்கு என்ன பெருமை. எந்த சாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் இது போலத்தான் இருந்திருப்பார்கள்.
சாதிச் சங்கத் தலைவர்கள் பெயர்களை வேண்டுமானால் இது போன்ற இடங்களில் குறிப்பிடாலாம். அவர்கள் சாதியாலேயே பெயர் பெற்றவர்கள்.
தங்கள் திறமையால் உயர்ந்த அவர்களை சாதியுடன் அடையாளப்படுத்துவது அருவருப்பைத் தருகிறது.
சைவப் பிள்ளைமார் சமுகம் பற்றிய பல அரிய தகவல்கள்.பலர் அறியாத் தகவல்கள்.தங்களின் தொகுப்பு பிரமாதம்.நன்றி.
பண்டைய கேரள மன்னர்கள் பர்ப்பனருக்கு இணையான அறிவுத் திறமையும்,உடல் வலிமையுள்ளதை தெரிந்து கொண்டதால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுகத்தை கேரளாவுக்கு அழைத்துச் சென்று பல அரசாங்கப் பணிகளில் அமர்த்தி அழகு பார்த்தனர்.
இன்றும் அங்கே பல பிள்ளைமார் குடும்பங்கள் வாழ்கின்றன .
கிராம கர்ணம்,க.பிள்ளை பதவிகள் M.G.R ல் ஒழிக்கப் படும் வரை
கிராம கர்ணத்தின் பெரும்பாலான பதவிகள் சைவ முதலியார் சமுகத்தாலும்,கணக்கப்புள்ளை வேலைகள் பெரும்பாலும் சைவப் பிள்ளைமார் சமுகத்தாலும் மிகத் திறைமயாக நிறுவகிக்கபட்டது.
இப்போது கிரமங்களில் உள்ள நிலப் பட்டா குழப்பங்கள் .ஒருவர் சொத்தை மற்றொருவர் விற்கும் நிலை,ஒருவர் சொத்தை பல பேருக்கும் விற்கும் நிலை இதற்கு காரணம் இந்தப் பதவிகளை ஒழித்ததுதான். பரம்பரை பரம்பரை யாக இருந்த கெளவரவ பதவிகள் நியமனத்தில் அரசாங்கம் நுழைந்த பின்னர் தமிழகத்துக்கே உரித்தான லஞ்சம், லாவணயம் நில நிர்வாகத்தில் தாண்டவமாடிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிந்த உண்மை.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் தமிழக ரெவினு(taluk office) நிர்வாகத்தில் உள்ள பெரும்பகுதி பதவிகள் பிள்ளமார் சமுகத்தால் திறமையாய் நிர்வாகிக்கப்பட்டது.
அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் அரசுப் பதவிகளில் இவர்களின் பங்களிப்பு இப்போது மிகக் குறைந்து காணப் படுகிறது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையால்(69 % reservation in schools,colleges,government jobs) தாங்கள் பாதிக்கப் படுவதை உணர்ந்த பிளைமார் சமுகம், பிற ஜாதிகள் குறிப்பாக நாடார் சமுகம் இட ஒதுக்கிட்டால் அடந்துள்ள முன்னேறம் கண்டு கடந்த 40 வருடங்களாக அரசிடம் தங்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க போராடி வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதால் எந்தக் கட்சியும் கண்டு கொள்வதில்லை.
ஆனால் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் ,குறிப்பாக நெல்லையில் இந்த வாக்குறுதி (to add saivap pillaimaar in backward cast list)கொடுக்கபட்டு பின்னர் காற்றில் பறக்க விடப் படுவது வாடிக்கை.
R.M வீரப்பன்,நாவலர் நெடுஞ்செழியன்
போன்றோர் நெல்லையில் தேர்தலில் அதிமுக சார்பில் நிற்கும் போதும், சரத் குமார் திமுக சார்பில் நிற்கும் போது இது தான் நிலை.
வெற்றி பெற்று போனவுடன் கதை அவ்வளவுதான்
A.L.S என்று திமுக வினரால் அன்போடு அழைக்கப் படும் திரு ஏ.எல் சுபிரமணியம் சைவப் பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர். திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர்.
அவரின் கட்சி விசுவாசத்தை மெச்சி திருநெல்வேலி மாநகரத் தந்தையாக பதவி கொடுத்து பெருமை செய்துள்ளார்கள்.
//குடுகுடுப்பை said...
உத்தப்புரம் பெருமைகளையும் நீங்கள் சேர்த்திருக்கலாம்.
யாரும் தங்கள் பெருமையை சொல்லிக்கொள்ளட்டும், அதே அளவுக்கு தலித் சமுதாயத்தை உயர்த்த வேண்டிய கடமை அவர்களை மட்டந்தட்டிய குற்றவாளிகள் அனைவருக்கும் உண்டு.//
please see the old postings of dondu about dalits.
\\இட ஒதுக்கீட்டுக் கொள்கையால்(69 % reservation in schools,colleges,government jobs) தாங்கள் பாதிக்கப் படுவதை உணர்ந்த பிளைமார் சமுகம், பிற ஜாதிகள் குறிப்பாக நாடார் சமுகம் இட ஒதுக்கிட்டால் அடந்துள்ள முன்னேறம் கண்டு கடந்த 40 வருடங்களாக அரசிடம் தங்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க போராடி வருகின்றனர்.\\
தலைவர் கலைஞர் அவர்கள் பிள்ளைமார் சமூகத் தலைவர்களிடம் சைவ முதலியார் சமுகத்தோடு இனைந்து அரசிடம் இந்தக் கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கிறேன் என்று சொன்னதாகவும்,இந்த இரு சமுக மக்களிடமும் உள்ள யார் பெரியவர் ஈகோ பிரச்சனையால் சாத்யமாகவில்லை என்றும் சொல்வார்கள்.
பிள்ளமார் சமுகத்தை போலவே சைவ முதலியார் சமுகமும் பல சிறப்புகளை கொண்டிருந்தது.
பெரிய புராணம் எழுதிய சேக்கிழார்
தளவாய் அரியநாத முதலியார்
மேடை தளவாய் சுப்பிரமணிய முதலியார்.
வெள்ளக்கால் சுபிரமணிய முதலியார்
ரசிகமணி டிகேசி
தமிழக முதல்வர் பக்தவச்சலம்
பி.டி.ராஜன்
நாவலர் நெடுஞ்செழியன்
பேராசிரியர் அன்பழகனார்.
பழனிவேல் ராஜன்
சைவர்களில் இவர்கள் முதன்மையானவர்கள் எனவே முதலியார் எனும் ஜாதி அமைப்பு உருவனது என்று ஒரு தகவல் உண்டு.
விஜய நகர சாம்ராஜ்ய கிருஷ்னதேவராயரிடம் அமைச்சராகவும்,படைத்தளபதியாகவும் இருந்த அரியநாதர் வமசத்தில் வந்த சைவ முதலியார் தளவாய் என்ற சிறப்புப் பெயருடன் இன்றும் நெல்லை மாவட்டத்தில் அழைக்கப் படுகின்றனர்.
தளவாய்= தலைமை அமைச்சர் & படைத் தளபதி
அடுத்து தங்களின் சைவ முதலியார் பற்றிய பதிவு
பல தகவல்களை பதிவுலக்குக்கு தரட்டும்.
கண்ணியம் மிக்க கவுண்டர் சமூகம்
நாடாண்ட நாயக்கர் சமுகம்
நாணயமிக்க ரெட்டியார் சமூகம்
ராஜ கம்பீர ராஜாசமூகம்(ராஜபாளையம்)
கடமை போற்றும் கரையாளைர் சமூகம்
காலம் போற்றும் கார்காத்தார் சமூகம்
வலிமையான வன்னியர் சமூகம்
லிச்டு போய்க் கொண்டே இருக்கும் போலிருக்கு!
//krishnamoorthy said...
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.
//
என்னுடைய கருத்தும் இதே தான்.
கல்கியின் புகழ் பெற்ற எழுத்தாளைர் ரா.சு
நல்ல பெருமாள் கடையம் பகுதியை சேர்ந்த, இந்த சமூகத்தை சேர்ந்தவர்.
intha mathiri matathanamana post(athuvum kumutham mathiri oru matamana ithazh la irunthu) poruki podaratha niruthuna thevalam!!
சாதிகளைப் பற்றிப் பேசினால் அருவருப்பாக இருக்கிறது என்கிறார்கள். சாதிகளைப் பற்றிச் சொன்னால் பூரான் ஊருவது போல் இருக்கிறது என்கிறார்கள்.
உங்களுக்கு ஊருவது அருவருப்பாக இருக்கு என்பதற்காக பூரான் ஊராமல் இருந்தால் நசுங்கிச் சாகவேண்டியது தான்.
பிறப்புச் சான்றிதழ் முதல் சுடுகாடு வரை அனைத்திலும் சாதி இருக்கு அங்கெல்லாம் அது அருவருப்பாகவும், அசிங்கமாகவும், சங்கடமாகவும் தெரியவில்லையா ?
தனக்குத் தேவை என்கிறபோழுது பூரான் ஊருவதும் பூ போல் சுகமாக இருக்கும். ஆனால் ஊருக்கு உபதேசம் என்றால் பூரான் ஊருவது அசிங்கமாகிவிடும். ஏன் இந்த hypocrisy ?
சாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது இன்றய நடைமுறை கட்டாயம்.
//தங்கள் திறமையால் உயர்ந்த அவர்களை சாதியுடன் அடையாளப்படுத்துவது அருவருப்பைத் தருகிறது.//
அது உங்கள் கண்ணோட்டம். உதாரணத்துக்கு வ.உ.சி. அவர்களையே எடுத்து கொள்ளுங்கள். அவர் காலக்கட்டத்தில் அவர் மரியாதையாக பிள்ளைவாள் என்றுதான் அழைக்கப்பட்டிருப்பார். அவரைப் போய் அழுத்த்ம் திருத்தமாக சிதம்பரம் என யாராவது அவரை அழைத்திருந்தால் அது அவரால் அவமரியாதையாகத்தான் கருதப்பட்டிருக்கும்.
நீங்கள் சொல்லும் கண்ணோட்டம் இக்காலத்தின் புரிதலில் வருகிறது. ஆனால் அக்காலத்தில் புரிதல் வேறுமாதிரி இருந்தது.
சாதிகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சரித்திர உண்மை. அதில் குறைகள் இருக்கலாம். ஆனால் நிறைகளும் உண்டு. இப்பதிவு சம்பந்தப்பட்ட சாதிகளின் பின்புலனை மிகவும் சுருக்கமாகத் தருவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
ஏதேனும் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளாது இருக்கும் ஏற்பாடுகளை தூக்கி எறிந்ததாலேயே பிரெஞ்சு புரட்சி பொய்த்தது என்பதும் சரித்திர உண்மையே.
//பூரானையோ தேளையோ பார்க்கிறது போல சங்கடமாய் உள்ளது சாதி பற்றி எழுத ;(//
படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டில் திருமணம் அரேஞ்சுடு மேரேஜாக செய்யும்போது ஜோடிகளை தேடும்போது மட்டும் இது தேவைப்படுகிறதே, என்ன செய்ய? மற்ற ஜோடிகளுக்கு கலப்பு திருமணம் செய்விக்கும் முற்போக்கு தலைவர் தன் மகனுக்கு தன் சகோதரியின் பெண்ணைத்தான் மணமுடித்து கொள்கிறார்!
இப்பதிவில் உள்ள தகவல்களில் ஏதேனும் பிழை இருந்தால் கூறுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Famous film personalities like Sundar C., Mettioli Gobi, Jai Shankar, T.S Ballaya are all Pillais / Vellalars. I also heard that Actor Vijay's dad S.C Chandrasekar is also a pillai (Christian).//
JaiSankar is an iyer, related to Sir C.V.Raman and his cousin, also a nobel prize winner, Chandrasekar.
//உத்தப்புரம் பெருமைகளையும் நீங்கள் சேர்த்திருக்கலாம்.
யாரும் தங்கள் பெருமையை சொல்லிக்கொள்ளட்டும், அதே அளவுக்கு தலித் சமுதாயத்தை உயர்த்த வேண்டிய கடமை அவர்களை மட்டந்தட்டிய குற்றவாளிகள் அனைவருக்கும் உண்டு//
பிள்ளைமார்கள் சேர்ந்து ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்களாம். தலித்துகளை அடக்க. தினமலர் வெளியிட்ட செய்தி.
//பிள்ளமார் சமுகத்தை போலவே சைவ முதலியார் சமுகமும் பல சிறப்புகளை கொண்டிருந்தது.
பெரிய புராணம் எழுதிய சேக்கிழார்
தளவாய் அரியநாத முதலியார்
மேடை தளவாய் சுப்பிரமணிய முதலியார்.
வெள்ளக்கால் சுபிரமணிய முதலியார்
ரசிகமணி டிகேசி
தமிழக முதல்வர் பக்தவச்சலம்
பி.டி.ராஜன்
நாவலர் நெடுஞ்செழியன்
பேராசிரியர் அன்பழகனார்.
பழனிவேல் ராஜன்//
அண்ணாவை மறந்துவிட்டீர்களே!
\\பூரானையோ தேளையோ பார்க்கிறது போல சங்கடமாய் உள்ளது சாதி பற்றி எழுத ;(//
படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டில் திருமணம் அரேஞ்சுடு மேரேஜாக செய்யும்போது ஜோடிகளை தேடும்போது மட்டும் இது தேவைப்படுகிறதே, என்ன செய்ய? மற்ற ஜோடிகளுக்கு கலப்பு திருமணம் செய்விக்கும் முற்போக்கு தலைவர் தன் மகனுக்கு தன் சகோதரியின் பெண்ணைத்தான் மணமுடித்து கொள்கிறார்\\
ஜாதியில்லை,ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்லும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர் தேர்வு சமயத்தில்,அந்த தொகுதியில் பெரும்பான்மையாய் உள்ள சமூகத்தை சேர்ந்த வேடபாளரையே தேந்தெடுப்பது ஏன்?
திருமங்கலத்தில் என்ன நடந்தது?
இதை விடுங்க இப்போது அமையும் கூட்டணிகளே ஜாதியின் அடிப்படையிலாம்.
ஒரளவுக்கு அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் இந்த ஜாதி கணக்குகளை பொய்யாக்கினார்.
பசும்பொன் தேவரின் ஜெயந்தி அன்று பசும்பொன் கிராமத்திற்கு செல்லாத தலைவர் உண்டா?
வை.கோ கட்சி ஆரம்பித்ததும் அவரது சமூகம் பொருளதவி தந்து உதவி செய்ய வில்லையா?
சரத் கட்சி ஆரம்பித்ததும் எந்த அடிப்படையில்?காமராஜின் விருது நகரில் அந்த பெரு விழா ஏன்?
பா.ம.க வின் பலம் எந்த அடிப்படையில்?
உண்மையில் பெயருக்குப் பின்னால் இப்பொது ஜாதியில்லை ஆனால் வாழும் மனிதர்களின் பெரும்பான்மையோரின் ஒவ்வொரு செயலும் ஜாதி என்னும் கொடும் அரக்கனின் பிடிக்குள் இருப்பதை, மறுப்பது சுலபமல்ல
ஜாதி இல்லாமலிருந்தால் நல்லாயிருக்கும்
ஆனால் நம்மவர்கள் உடும்புப் பிடியை விடுவார்களா?
முதலியார்கள் வரிசையில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த எல். லட்சுமணசாமி முதலியார், அவரது இரட்டை சகோதரர் எல். ராமசாமி முதலியார், நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரையும் சேர்க்க வேண்டும்.
அதற்காக பிரதாப முதலியாரை சேர்க்கலாமா என்றால் வேதநாயகம் பிள்ளையைத்தான் எகேட்க வேண்டும். :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் சொல்லும் கண்ணோட்டம் இக்காலத்தின் புரிதலில் வருகிறது. ஆனால் அக்காலத்தில் புரிதல் வேறுமாதிரி இருந்தது.//
இக்காலம், அக்காலம், எக்காலமானாலும், தமிழர்கள் சாதிப்பிரிவினைகளை விடமாட்டார்கள். வாழ்ந்தாலும் செத்தாலும் சாதிக்குள்தான் செய்வார்கள்.
எனவே, உங்கள் சாதிவாரியான பதிவுகள் வரவேற்கத்தகுந்தந்ததே.
எல்லாரும் மாறவில்லை. ஏன் தொண்டு இராகவன் மட்டும் மாறவேண்டும்.
//us said...
//பிள்ளமார் சமுகத்தை போலவே சைவ முதலியார் சமுகமும் பல சிறப்புகளை கொண்டிருந்தது.
பெரிய புராணம் எழுதிய சேக்கிழார்
தளவாய் அரியநாத முதலியார்
மேடை தளவாய் சுப்பிரமணிய முதலியார்.
வெள்ளக்கால் சுபிரமணிய முதலியார்
ரசிகமணி டிகேசி
தமிழக முதல்வர் பக்தவச்சலம்
பி.டி.ராஜன்
நாவலர் நெடுஞ்செழியன்
பேராசிரியர் அன்பழகனார்.
பழனிவேல் ராஜன்//
அண்ணாவை மறந்துவிட்டீர்களே!//
முதலியார் சமூகத்தில் பல பிரிவுகள் உள்ளது,பிள்ளைமார் சமூகத்தைப் போல .
சைவ முதலியார்
அசைவ முதலியார்
என்று இரு பிரிவுகள் உண்டு
சைவ முதலியார்:
தொழில் வேளாண்மை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இவர்கள் பரவலாய் வாழ்கிறார்கள்.
தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படுபவர்கள்.
இம்மாவட்டத்தில் உள்ள மெய்ப்பெடு கிராமத்தில் பிறந்த தளவாய் அரியநாதர் நெல்லயை ஆண்ட நாயக்க மன்னரின் கார்டியனாய் இருந்த போது ,தனது சொந்தங்களை மதுரை சோழ வந்தான் ஊரில் குடி அமர்த்தினார்.அவரது வம்சா வழியினர் தளவாய் முதலியார் என அழைக்கப் பட்டனர்.இவர்களது முன்னோர்கள் காசியிலிருந்து கன்யாக் குமரி வரை அன்னதான சத்திரங்கள் கட்டி பெரு வாழ்வு வாழ்ந்தனர்.இன்றும் திருநெல்வேலியில் இவர்களது வீடு தளவாய் அரண்மனை என்று அழைக்கப் படுகிறது.
சத்யராஜ் நடித்த "வேலை கிடைச்சுடுச்சு",
மாதவன் நடித்த "டும் டும்"
திரை படங்களில் பெரும்பகுதி இந்த அரண்மனையில் எடுக்கப் பட்டது.
அசைவ முதலியார்:
செங்குந்த முதலியார்
ஜவுளித் தொழில் செய்பவர்கள்.
ஆடை நெய்யும் திறமை சாலிகள்.
காஞ்சிபுரம் மாவட்டம்,ஈரோடு மாவட்டம்,நெல்லை மாவட்டம் ஆகியவற்றில் பரவலாய் வாழ்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா இந்த பிரிவை சேர்ந்தவர் எனச் சொல்வார்கள்.
மூப்பனார் சமுகத்தினரும் நெல்லை மாவட்டதில் முதலியார் என்றே சொல்வார்கள்
ஒரு கொசுறுச் செய்தி
பல சைவ முதலியார்கள் செங்குந்தர் என ஜாதிச் சான்று பெற்று ,அரசின் இட ஒதுக்கீட்டுச் சலுகை பெறுகிறார்கள் என்று சொல்வார்கள்.(குமுதம் இதழ் கூட இப்படி போலி ஜாதி சான்றிதள் தமிழகத்தில் கன ஜோராய் இருப்பதாய் எழுதியது)
இரு பிரிவுக்களுக்கிடையே சில கல்யாண சம்பந்தங்கள் கூட நடக்க ஆரம்பித்து விட்டதாம்.
எம்மதமும் சம்மதம்
எல்லாச் ஜாதியும் ஒரே ஜோதியில்
வாழ்க வளமுடன்
திருநெல்வேலி தளவாய் முதலியாரின் அரண்மனை மற்றும் தளவாய் அரிய நாதர் பற்றி இந்து நாளிதழில் வந்த செய்தியின் தொகுப்பு
( நன்றி-இந்து நாளிதழ்)
news about dalavoi hall from hindu.
Inspired by a house of 1,000 windows
SUGANTHY KRISHNAMACHARI
Built in 1911, Medai Dalavoi House is a landmark in Tirunelveli.
A treat to behold: Medai Dalavoi House.
“I think this interest in architecture runs in the family,” says M.D.Shanmuganathan, as he shows me round Medai Dalavoi house. Built in 1911, the house is a landmark in Tirunelveli.
“My grandfather Medai Dalavoi Tirumalaiappa Mudaliar saw a house with a 1,000 windows in Karaikkudi. He wanted to build a house with at least some of the features of the Karaikkudi house. The result was this house,” explains Shanmuganathan who adds, “But this house doesn’t have 1,000 windows.”
Imposing structure
The carved wooden panels on top of the windows are a treat to behold. The first floor has a durbar hall, which looks imposing, with its high ceiling and stained glass panels.
During the days of the British, every new Collector to the district would first dine with the Dalavoi family in the durbar hall, before he took charge.
The manually operated lift in perfect working condition.
The walls of the house are covered with a plaster made of eggshells, lime and kadukkai. So smooth is the plaster that it would put to shame the modern day emulsion paints. “And the beauty is that all you have to do is wash the walls when they get dirty. No painting is required. Maintenance free walls!” exclaims Shanmuganathan.
“Another wing was added to the house in 1914. Here even the floor is of Burma teak. But the piece de resistance is a manually operated lift, installed in 1928. My grandfather, while bathing in the Courtallam Falls, slipped, and fractured his hip. But he wanted to continue his practice of meeting his accountants in the first floor. So a friend of his designed this lift for him,” he explains. The lift consists of a wooden platform made of teak wood, with iron meshes fixed to wooden frames on the sides. It is hoisted by operating a pulley.
There is a counterweight that provides the balance. When the counterweight goes down, the lift goes up, and vice versa. The lift still works!
Shanmuganathan points to a chair and says, “This was specially designed for grandfather. A wooden plank is tucked away beneath the chair, and it can be pulled out to rest one’s feet upon. The back rest can be adjusted so that one can recline at any angle one chooses! One can even lie supine in it! The carpenter had thought of everything!”
But none of these explained Shanmuganathan’s statement made earlier that an interest in architecture ran in the family. Shanmuganathan then tells the story of his ancestor Ariyanatha Mudaliar. “Ariyanatha Mudaliar was born in a poor family in Meippedu village, Kanchipuram district. A teacher in the village taught him mathematics and Tamil for free. Ariyanatha spent his spare time mastering martial arts like silambam, sword fight, and wrestling.
When Ariyanatha was 16 years old, a discerning soul persuaded him to go to Krishnadevaraya’s court and find himself a job there. At Vijayanagar, Ariyanatha soon rose to prominence, and became the chief accountant of the empire. Later when the Vijayanagar Empire fell, and Viswanatha Naicker became the ruler with Madurai as his capital, Ariyanatha became his minister and the general of his army. Dalavai means general,” clarifies Shanmuganathan.
It was Ariyanatha Mudaliar who built the hall of 1,000 pillars both in the Nellaiappar temple and in the Madurai Meenakshi Amman temple. (Taylor’s Oriental History Vol II, page 90). According to the Madras District Gazette - Madurai Vol I, the statue of a man on horseback seen at the entrance to the hall in the Madurai Meenakshi temple is that of Ariyanatha.
Protective cordon
Ariyanatha built forts at Satyamangalam, Kaveripuram, Salem, Omalur, Sendamangalam, Anantagiri, Mohanur, Sankaridurg, Namakkal, Tiruchengode, Madurai, Dindigul, Azhagar hills, and stationed armies in all of these forts. Thus he threw a protective cordon around the Pandya kingdom. He built a total of 99 rest houses in pilgrim centres from Kasi to Kanyakumari. He streamlined the administration by dividing the kingdom into 72 palayams, with one palayakarar in charge of each. Ariyanatha’s son Kalathinatha Mudaliar built the seven-storied gopuram in the Meenakshi temple.
Ariyanatha’s grandsons, Nayina Mudaliar and Viraraghava Mudaliar, also added many structures to the Meenakshi temple. Incidentally, the house has starred in films. Director P. Vasu, shot the film ‘Velai Kidachaachu’ here. ‘Dum Dum Dum,’ and ‘Sundara Purushan’ were also filmed here.
As I take leave of Shanmuganathan and his family, my thoughts are of the 16-year-old boy, who walked all the way to the banks of the Tungabhadra and rose to dizzying heights of power. I turn for a last look at the house that his descendant built four centuries later. The house cannot be seen from the main road. Only the twin turrets of the house are visible, standing haughtily and aloof from the dust and the noise of the town.
(courtesy- The Hindu)
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2008040451220300.htm&date=2008/04/04/&prd=fr&
ஒன்னும் சொல்லுருதுக்கில்ல!
Dondu Sir,
The identity of people like V.O. Chidambaram Pillai is not that they are from the Pillaimar caste. Their identity transcends the caste they were born in. These articles on castes seem to be trying to restrict them to the much narrower circle of their caste identity. I am sure that is not the intention, but that's how it comes across - to me, at least.
//சாதிகளைப் பற்றிப் பேசினால் அருவருப்பாக இருக்கிறது என்கிறார்கள். சாதிகளைப் பற்றிச் சொன்னால் பூரான் ஊருவது போல் இருக்கிறது என்கிறார்கள்.
உங்களுக்கு ஊருவது அருவருப்பாக இருக்கு என்பதற்காக பூரான் ஊராமல் இருந்தால் நசுங்கிச் சாகவேண்டியது தான்.
பிறப்புச் சான்றிதழ் முதல் சுடுகாடு வரை அனைத்திலும் சாதி இருக்கு அங்கெல்லாம் அது அருவருப்பாகவும், அசிங்கமாகவும், சங்கடமாகவும் தெரியவில்லையா ?
தனக்குத் தேவை என்கிறபோழுது பூரான் ஊருவதும் பூ போல் சுகமாக இருக்கும். ஆனால் ஊருக்கு உபதேசம் என்றால் பூரான் ஊருவது அசிங்கமாகிவிடும். ஏன் இந்த hypocrisy ?
சாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது இன்றய நடைமுறை கட்டாயம்//
மிகச் சரியாய் சொல்றீங்க.
\\http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2008040451220300.htm&date=2008/04/04/&prd=fr&
தமிழில் இது பற்றிய தகவல் உள்ள லிங் கொடுக்கவும்.
\\http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2008040451220300.htm&date=2008/04/04/&prd=fr&
தமிழில் இது பற்றிய தகவல் உள்ள லிங் கொடுக்கவும்.//
http://groups.google.ci/group/minTamil/msg/5486f991b6a7afc2
திடீரென வெளியே செல்லும் வேலை வந்து விட்டது. திரும்ப இரவாகி விடும். ஆகவே பின்னூட்டங்கள் அப்போதுதான் மட்டுறுத்தப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு வட்டார பழமொழி:
கள்ளர்,
மறவர்'
கனத்தோர்,
அகமுடையார்
மெல்ல மெல்லவே
வெள்ளாளரானார்.
Dear Dondu sir, This post is absolutely useless but will ensure you good number of hits, if that is what you are interested in.(I know you will refute) I also wonder your comment on arranged marriages, when people go in for the same caste match. That I believe! is due to the general belief that people in the same caste will have the same kind of brought up, and MAY BE able to lead life peaceful as they may have more things in common and with lesser misunderstandings. (I am sure you would agree). The Article from Kumudam is no better. Politicians hold on to it for Votes. Unless we eachone ignore it wont die.
//க. கா. அ. சங்கம் said... //
தனக்குத் தேவை என்கிறபோழுது பூரான் ஊருவதும் பூ போல் சுகமாக இருக்கும். ஆனால் ஊருக்கு உபதேசம் என்றால் பூரான் ஊருவது அசிங்கமாகிவிடும். ஏன் இந்த hypocrisy ?//
வழக்கமாக உங்கள் சங்கம் பின்னூட்டங்களில் “கம்யூனிஸ்ட் பட்டம்” தருமே .(தமிழ் இன துரோகி மாதிரி).
//dondu:
அது உங்கள் கண்ணோட்டம். உதாரணத்துக்கு வ.உ.சி. அவர்களையே எடுத்து கொள்ளுங்கள். அவர் காலக்கட்டத்தில் அவர் மரியாதையாக பிள்ளைவாள் என்றுதான் அழைக்கப்பட்டிருப்பார்.//
நான் சாதியை நாளை காலை முதல் ஒழிப்போம் என்ற ரீதியில் எதுவும் எழுதவில்லை.
ஒரு குழுவின் பழக்கவழக்கங்களைப் பற்றி பேசுவதே தவறு என்று நான் சொல்ல வரவில்லை.
பகத்சிங், திலகர், நேதாஜி, பரம்ஹம்ஸர்,விவேகாநந்தர், இவர்களைப் போன்ற என்னற்ற பிறரின் சாதி எல்லாம் என்ன என்று எனக்குத் தெரியாது. அவர்களுடைய செயல்களால் அவர்களை வராலாறு பதிவில் கொண்டுள்ளது.
நேதாஜியை செட்டியார் முதலியார் என்று அடையாளப்படுத்தினால் நன்றாகவா இருக்கும்.
என் பார்வையில்
வ.உ.சி. காலத்தில் சரி ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கு அவரை ஒரு தேசியத் தலைவராய் விடுவது தான் சரி
அய்யா பாவப்பட்ட நாவிதர்களை பற்றியும், சாம்பவர்களைப்பற்றியும், சக்கிலியர்களைப்பற்றீயும் பதிவிடுங்கள். யார் உயர்ந்தவன், உயர்பதவியில் இருப்பவர் என்ன ஜாதி என்றெல்லாம் பதிவிடுங்கள். ரொம்ப புண்ணியமாப்போகும்
சாதிப்பிரிவினிலே தீயை முட்டுவோம்- பாம்பாட்டி சித்தர்
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக்காலம் - பத்திரிகிரியார்
சாதி இரண்டொழிய வேறில்லை - ஓளவையார்
சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம் - பாரதியார்
சாதிகளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் - பாரதியார்
//Dear Dondu sir, This post is absolutely useless but will ensure you good number of hits, if that is what you are interested in.(I know you will refute) //
appadi podu ARUVLAI
We should not look at caste or religion, All human beings in this land
- whether they be those who preach the vedas or who belong to other castes - are one.
///ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்.///
உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?
//உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?//
கண்டிப்பாக தரலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\ krishnamoorthy said...
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.//
வழிமொழிகிறேன்!
என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையது
// dondu(#11168674346665545885) said...
//உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?//
கண்டிப்பாக தரலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாய் இருந்து முதல் தற்கொலைப் படையாய் மாறி, தன் இன்னுயிரை வீரத் தியாகம் செய்த வீரன் சுந்தரலிங்கம் பற்றி எழுதவும்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள RMKV எனும் மிகப் பெரிய ஜவுளி நிறுவனத்தை நடத்தி வரும் திரு விஸ்வநாதன் குடும்பத்தார் இந்த சமூகத்தை சேர்ந்தவர்.
பட்டுச் சேலைக்கு புகழ் பெற்ற நிறுவனம்.ஜனாதிபதியின் விருது பெற்ற நிறுவனம்.
சென்னையிலும் தி.நகரில் கிளை வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் தரமான ஜவுளிகளை நியாயமான் விலையில் கொடுக்கும் நிறுவனங்களில், RMKV முதன்மையானது.
திருநெல்வேலி அல்வாவுக்கு பேர் பெற்றது என்பதை அனைவரும் அறிவர்.
இங்கு பல கடைக்காரார்களாலும் உபயோகிக்கப் படும் "சாந்தி அல்வா" என்ற பிராண்டின் உண்மையான உரிமையாளர் வள்ளியாப் பிள்ளை ஆவார்கள்.
இவர்கள் நடத்தும் பலசரக்குக் கடை தரமான பலசரக்கை நியாயமான விலையில் கொடுப்பதால் ஜங்சன் பகுதியில் மிகப் பிரபலம்.
பொருட்களில் கலப்படம் செய்து கொள்ளை லாபம் அடிக்கும் தற்காலப் போக்கில் இவர் ஒரு சிறந்த நேர்மையாளர்.
இந்த நேர்மையும், கடவுள் பக்தியும்,தொண்டுள்ளமும்,பரோபகாரச் செயல்களும் சைவைப் பிள்ளைமார் சமூகத்தின்
சொத்து.
\\ யாழ்/Yazh said...
\\ krishnamoorthy said...
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.//
வழிமொழிகிறேன்!
என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையது\\
what next?
//என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையது//
அடுத்து யார் புராணம்?
கவுண்டரா?
நாயக்கரா?
நாயுடுவா?
விஷ்வகர்மவா?
வன்னியரா?
தேவரினமா?
கம்மவார் மகாஜனமா?
பதிவர் மலர்மன்னனின் கருத்தை அனைவரும் படிக்கவும்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901083&format=html
கலைஞர் அவர்களுக்கு தைத்திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த செயலைப் பாராட்டி கனிமொழி கருணாநிதி நடத்திய வள்ளுவர்கோட்ட பாரட்டு விழா நிகழ்ச்சிபற்றி உங்கள் கருத்து என்ன?
இலங்கை தமிழர் நலம் காக்க ஆட்சியை துறக்கவும் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறாரே?
கழகத் தொண்டர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?
அதிமுக ஐயங்கார் ஜெ.வசம்.மீண்டும் திமுகவில் பதவி பெற்றுள்ள தயாநிதி ஐயர் திமுகவை வசப்படுத்துவாரா?
கலைஞர் உண்மையான பாசத்தோடு செய்த கட்சிப் பதவி பங்கீட்டை பார்த்தபிறகு, திமுக ஒரு குடும்பம் என்பதை இப்போதாவது எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா?
தமிழக முதல்வர் கலைஞரும் ஒரு பிள்ளைவாள் தான்.
திமுகவில் தான் பார்த்த கணக்கப்பிள்ளை (பொருளாளர்)வேலையை தனது வருங்கால வாரிசுக்கு கொடுத்துவிட்டார்.
வருங்கால முதல்வர்(மதுரை அழகிரி மனது வைத்தால் மட்டும்)ஸ்டாலின் திமுக பொருளாளராய் நியமிக்கப் பட்டுள்ளார்.
பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகத்தின் சேவை தொடர்கிறது.
//தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்//
ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்
அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.
தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.
ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.
எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?
அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?
அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!
உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.
நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.
அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,
‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து
சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.
வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.
பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.
நீங்கள்..........?
தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.
முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.
தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?
நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.
எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.
பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க
உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?
உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.
நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.
பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...
(நன்றி-காட்டாமணக்கு)
ஜாதி பற்றிய உங்களின் பதிவுகளுக்கு கண்டனக் கணைகள் பல தரப்பிலிருந்தும் அதிகம் வருகிறதே.
இந்த தொடர் பதிவுகள் இனி வருமா?இல்லை வராதா?
உங்கள் கொள்கையில் மாற்றம் உண்டா?
1.பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரனம் யாது?
2.காவிரிப்பிரச்சனை தற்போதைய நிலை என்ன?
3.இராணுவ ஆட்சி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எப்போதாவது இருந்ததா?இனி வருமா?
4.நடக்கும் தேர்தல் ஊழல்களை பார்க்கும் போது சில பெரியவர்கள் இராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்களே?உங்கள் நிலை என்ன?
5.தமிழக முதல்வர்,பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு .இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி?இலங்கை தமிழினத்தின் எதிர்காலம்?
யாதவர்களிலும் பிள்ளை என்ற சாதி அமைப்பு உண்டு
Pillai samoogatthaal payan adaintha thamizhargal, tham egovinaal pillai samoogatthinarai uriya muraiyil gauravikka thavari vittanar. Enavae ippadiyoru blog avasiyamthan...
nandri ketta thamizharkalae... intha katturai veenperumaikkaaga alla..ungalai uyarttha vellalar samoogam evvalavu uzhaitthullathu enbathai oorukku gnabagapadutthuvatharkkaagavae..
kumudam manigandanum Or thavaru seythullaar. pillaimaarkalin poorveegam thenthamizhagam enbathu thavaraanathu. sozha naattu vellaalarkalaana karikaal cholan mudhal maraimalai adigal varai neenda paarampariyamum undu !!
I am amazed to know that dondu is an ayyangaar. ayyangaar is the great tamil caste.notable ayyangaars are azhwaargal,kanitha methai raamaanujam,sri raamaanujar,writer sujatha,madhan,etc. Its interesting to see that many vellalars also became ayyangaars ! e.g.,Nammaazhvaar
Dr.Pillai
DEAR, YOU ARE USING MY V.O.C. NAME BUT U MISSED CHOLIYA VELLALAR IN THE LIST, CHANGE IT. AND MOST IMPORTANT THING LOT OF VELLALARS LIVING IN TRICHY , THANJAVUR, VURAIYUR, KARUR, THEY CALLED AS' CHOLIYA VELLALARS' THEY PREDOMINENTLY LIVED IN SRILANKA. METHAGU PRABHAKARAN COMES TO THIS COMMUNITY. OTHER FAMOUS
PEOPLES IN
CHOLIYA VELLALARS ARE,
K.A.P. VISWANATHAN PILLAI,
G.VISWANATHAN PILLAI- FOUNDER G.V.N TRUST.
VIJAY- ILAYA THALAPATHI
S.A.C.-DIRECTOR
VIJAYAKUMAR- ACTOR
ARUN VIJAY- ACTOR.
SUNDAR.C - ACTOR
GOINATH - VIJAY TV(NEEYA?NANAA?)
GOPI- METTI OLI
BOSS- METTI OLI
SO DONT MISS CHOLIYA VELLARS . THEIR LIFE IS LINKED WITH CHOLAS, CHERAR, AND ALSO THONDAIMAN.
IF YOU HAVE ANY DOUBT CONTACT ME . I WILL SEND YOU PROOFS.
CHOLIYAN KUDUMI SUMMA ADATHUPPA
VETHALA KODIYUM VELLALA JATHI YUM ONUPPA.
BY
CHOLAN VALITHONDRALKAL,
V.O.C PERAVAI,
ANAITHU VELLALAR KUTTAMAIPPU.
TRICHY
சாதியம் ஒரு ஒழுங்கு முறை. அதுவே பிற்காலத்தில் அடக்குமுறையானது வேதனையானது. இன்று ஆட்சிமுறையில் அத்தியாவசியமான ஒன்றாக அது மாறிவிட்டது.
தலைவர்களின் புகழை மீட்டெடுக்கவாவது சாதியங்கள் இப்போது உதவும். எம்.ஜி.ஆர் எனக்குத்தான் சொந்தமென அடித்துக்கொள்ளும் அதிமுக, தேதிமுக நிலை கூட வரலாம். ஆனால் கி.ஆ.பெ.விஸ்வநாதம் யாரென்று தெரியாமல் போவதை இதுதடுக்கும்.
வரலாற்றை மீட்டெடுக்கும் போது சாதியம் தேவைப்படுகிறது. சாதியமில்லா காலம் வரும்போது எல்லோரும் அதையே ஏற்கப்போகின்றார்கள்.
பிள்ளைமார் இலக்கியப்பட்டியலில், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, விக்ரமாதித்ய நம்பிராஜன் இளையபாரதி, இயக்குநர் விக்கிரமன்... என்று ஒரு லிஸ்டிருக்கிறது....
Post a Comment