7/14/2011

டோண்டு பதில்கள் - 14.07.2011

 pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தயாநிதி ராஜினாமா:காங்கிரஸ் மவுனம்

பதில்: ஸ்பெக்ட்ரமில் திமுக மட்டும் ஊழல் செய்யவில்லை. காங்கிரசும்தான். ஆகவே ரொம்பவெல்லாம் அதனால் அலட்டவெல்லாம் முடியாது.

கேள்வி-2. கோபாலபுரம்தான் முதலில் பிடிபடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
பதில்: இதை ஒரு காங்கிரஸ்காரர் போய் சொல்வது தமாஷாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

கேள்வி-3. சன் டி.விக்கு அனுமதியின்றி கேபிள் கனெக்க்ஷன்: விரைவில் நடவடிக்கை- ஜெயலலிதா
பதில்: தமிழ் சினிமாக்களில் கடைசியில் போலீஸ் வந்து எல்லோரையும் அரெஸ்ட் செய்வது போலத்தான் இங்கும்.

கேள்வி-4. கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு
பதில்: எது பற்றி அப்பேச்சு இருக்கும் என நினைக்கிறீர்கள்?

கேள்வி-5. கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்
பதில்: வீடியோக்களை போட்டவர் தமது மடத்துக்கு காப்புரிமை ஃபீஸ் தரவில்லை என்னும் கோபத்தால் இருக்குமோ?

கேள்வி-6. சிதம்பரத்துக்கு எதிராக சதி: கபில் சிபல்
பதில்: அவர் அப்படித்தான் சொல்லோணும் என இத்தாலிய எஜமானி கூறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று ப.சி. நாளை தான் என்னும் பயமாகவும் இருக்கலாம்.

கேள்வி-7. வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்
பதில்: அப்படி செய்யோணும்னா தங்கள் ஆட்சி காலத்தில் சட்டப்படியே எல்லா காரியங்களும் செஞ்சிருக்கோணுமே.

கேள்வி-8. கூட்டணி குறித்து தங்கபாலு பேச அதிகாரம் இல்லை: யுவராஜா
பதில்: யுவராஜாவுக்குத்தான் அந்த அதிகாரமா அல்லது அதுக்கும் இத்தாலிய எஜமானிதான் வரணுமா?

கேள்வி-9. தயாநிதி மாறனுக்கு மாற்று கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு
பதில்: இதில் பல விஷயங்கள் உள்:ளன. டி.ஆர். பாலுவை யாரும் ஏற்க மாட்டார்கள். கலைஞரின் உறவினர்கள் வேறு யாரும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு சாதாரண திமுக எம்.பி. பதவிக்கு வந்து விடக்கூடாது என்ற நல்லென்ணம் நிரம்பியவர் தலைவர். அந்த நிலையில் வேறு எம்மாதிரித்தான் பேசுவார்களாம்?

கேள்வி-10. சமச்சீர் கல்வி: நிபுணர் குழு அறிக்கை பாரபட்சமானது: கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் மனு
பதில்: அதில் சொல்லியிருக்கும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ள வேண்டியவையே.


ரமணா
கேள்வி-11.  அடுத்தது சி.தா னவா?
பதில்:  சிதம்பரமா எனக் கேட்கிறீர்களா? சிதம்பரமோ, கபில் சிபலோ அல்லது மன்மோகன் சிங்கோ யார் மாட்டிக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

கேள்வி-12.  மத்திய அமைச்சர்களில் வாய் சாமர்த்தியசாலி யார்?
பதில்: அப்பெயரை பெறுவதற்கு கபில் சிபல் முயற்சி செய்து வருகிறார் என நினைக்கிறேன்.


கேள்வி-13. கடைசியில் காங்கிரஸ் திமுகவிடம் சரண்டரா?
பதில்: திடீரென திமுக அப்ரூவராக மாறி விட்டால் என்ன செய்வது என்ற கவலை இருக்குமோ என்னவோ.

கேள்வி-14. டி.ஆர் பாலுவின் மேல் பிரதமருக்கு என்ன கோபம்?
பதில்: கொள்ளை அடித்ததில் அவரவருக்கான பங்கைத் தரவில்லை என்ற கோபம் கருணாநிதிக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் உண்டு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி-15. திடீர் நில மோசடி வழக்குகள் பற்றி?
பதில்: பல நாள் திருடர்கள் நிஜமாகவே அகப்படுகிறார்கள் போலிருக்கிறதே.

கேள்வி-16. மத்திய மந்திரி சபை மாற்றம் என்ன செய்தி சொல்கிறது?
பதில்: மந்திரியாக இன்றிருப்பார் நாளை இல்லை.

கேள்வி-17. கர்நாடகாவில் முன்னாள் முதல்வரின் உண்ணாவிரதம்?
பதில்: அதை கைவிட்டு விட்டதாக டிவியில் கட்டினார்களே.

கேள்வி-18. அர‌சு கேபிள் டீவி வரவு வரமா ?
பதில்: ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்தால் பயனர்களுக்கு நலம் விளையும்.

கேள்வி-19. சமச்சீர் கல்வி விவாதம் எப்போது முடிவுக்கு வரும்?
பதில்: எல்லோரையும் பைத்தியமாக்கியதற்கு பிறகு?

கேள்வி-20. அதி நவீன செல்போன்களினால் இளைஞர்களின் வாழ்வுமுறை திசை மாறுகிறதா?
பதில்: திசை மாற உதவுகின்றன என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.


Surya said...
கேள்வி-21. சமச்சீர் கல்வி பற்றி "அருள்" அவர்கள் (அதாங்க நம்ம ராமதாசுக்கு அறிவிக்கப்படாத கொ.பா.செ. வாக செயல்படும் மகானுபாவன்) அவர் தளத்தில் கீழ்க் கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.
(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)"
நியாயமான கேள்விதான். ஆனால் இவர் ஏன் தன் மகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்? சமச்சீர் கல்விக்காக வாதிடுபவர்கள் ஏன் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக தனியார் பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடத் திட்டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்? தனியார் பள்ளிகளை நன்றாகத் திட்டுவார்கள். ஆனால் இவர்கள் (அன்புமணி, கலைஞர் குடும்பம் உட்பட) மட்டும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்த லாஜிக் உங்களுக்குப் புரிகிறதா?
பதில்: இது சம்பந்தமாக நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இட்ட இப்பதிவைப் பார்க்கவும்.

கேள்வி-22. இன்னொரு அட்வைசும் அவர் கொடுக்கிறார் " தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான். எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது."இவர் கட்சியில் ஏன் அன்புமணிக்கு மட்டும் ராஜ்ய சபா வாய்ப்பு? கட்சியில் வேறு யாருக்குமே திறமை இல்லையா? இவர்கள் நடத்தும் டீ.வி.யிலோ அல்லது கலைஞர் குடும்பம் நடத்தும் டீ.வீ.யிலோ அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கலாமே? தமிழன் என்றுதான் இந்தப் பச்சோந்திகளைப் புரிந்து கொள்ளப் போகின்றான்?
பதில்: அன்புமணி மட்டுமல்ல ராமதாசும் நல்லத் தந்தையே.

கேள்வி-23. ராசாவும் ராசாத்தி அம்மாளும் "லட்டு" சாப்பிட்டு மாறன் ராஜினாமாவைக் கொண்டாடினார்களாமே?
பதில்: ஹா ஹா ஹா ஹா.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி
2.போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
3.இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
4.மும்பையை குறிவைத்து, பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் மீது, அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்
5.சாதிக் மரணம் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி

periyar said...

ஒரு கேள்வி.

மஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைர முத்து,வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களே?இவர்கள் எதிர் காலம்?

ரமணா said...

1.சுவாமி நித்யாணாந்தா சொல்வது உண்மையா அல்லது ?
2.கலாநிதிக்கும் சிக்கலா?
3.திமுகவில் மீண்டும் சகோதரர் கலகமா?
4.அடிக்கடி தமிழகத்தில் அதிகாரிகளை இப்படி மாற்றுவது பற்றி?
5.முரசு டீவி வருகிறதாமே?

vettiblogger said...

Please write a post on http://www.rediff.com/business/slide-show/slide-show-1-what-others-must-learn-from-gujarat-about-agriculture/20110715.htm

ezhil arasu said...

/periyar said...

ஒரு கேள்வி.

மஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைர முத்து,வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களே?இவர்கள் எதிர் காலம்?/

பகுத்தறிவுப் பகலவன்,மக்களின் மூட நம்பிக்கைகளை எல்லாம் மறைந்து போகும் விதமாய் வியத்தகு சாதனை பல்லாயிரம் புரிந்து ஒடுக்கபட்ட அத்துணை மக்களின் வாழவில் ஒளியேற்றிய தியாகச் சுடராம் ஈரோட்டு சிங்கம் பெரியார் என்ற பெயர் வைத்து கொண்டு ஆதிக்க சகதிகளுக்கு துணை‌போகும் கொடுமை கண்டு தமிழன்னை கண்ணீர் வடிக்கின்றாள்.வாலி,வைரமுத்து போன்ற சாதணை கவிகளை இப்படி பகடி பேசுவது தமிழர் நாகரிகமன்று.அவர்கள் வாழ்வாங்கு வாழும் வல்லவர்கள்.பொய்
உரைக்கா புனிதர்கள்.அவர்கள்பால் பொறாமை கொண்டோர் முப்புரி நூல் வல்லுணர்கள் பல் வேறு விதமாய் மாசு கற்பித்து மகிழ்வர்.அதுவும் கவிப்பேரரசு
சாமானியக் குடும்பத்தை சேர்ந்தவர் எனபதாலே இப்படி புழுதி வாறி தூற்றுவர்.
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தலைவர் கூட்டும் பொதுக்குழு வரை பொறுத்திருப்போம்.இந்திய அரசியலுக்கு வழிகாட்டும் தலைவரை வாழ்த்துவோம்.

தமிழ் இனம் காக்க‌
தமிழ் மொழி காக்க‌
தமிழ் பண்பு காக்க‌
தமிழ் கலை காக்க‌

தலைவரின் கட்டளைப்படி நடப்போம் தமிழர் அனைவரும்.

periyar said...

//தமிழன்னை கண்ணீர்//

எழில்,

ஆ தமிழன்னை கண்ணீர் வடிக்க்ன்றாளா?எந்த தமிழன்னை?தமிழர் தாய்# 1 தெலுங்கு நாகம்மையா அல்லது தமிழர் தாய் #2 கன்னட மணியம்மையா?

இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ?
எழில் தான் விளக்கமாக சொல்ல வேண்டும்.

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
7.கடலாடியில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சி
8.2ஜி விவகாரம்: ப. சிதம்பரத்திடம் விசாரியுங்கள்: சிபிஐ இயக்குநரிடம் பாஜக மனு
9.2-ஜி ஊழலை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை எனது வாதத்தைத் துவங்க விரும்பவில்லை: ராசா
10.தெலங்கானா விவகாரம்: பிரிவினைக்கு எதிராக ஆந்திரா, ராயலசீமா பகுதி தலைவர்கள் போர்க்கொடி

radhakrishnan said...

டோண்டுசார்,எனக்கு ஒரு சந்தேகம்.
வருடக்கணக்கில்சி.பி,ஐ.புகாரின் மீது
நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார்களே.எப்படி?

dondu(#11168674346665545885) said...

CBI itself is not free of blame in this regard.

The present situation is solely due to Supreme Court.

But then this is an abnormal situation. Courts cannot be doing this unceasingly. It is not their function.

Regards,
N. Raghavan

ரமணா said...

6. அநியாய கொள்ளை லாபம் பார்க்கும் உணவு விடுதிகள்,கல்விச் சாலைகள்,மருத்துவ மனைகள் நாம் எங்கே போகிறோம்?
7.பெங்களுர் வழக்கு அதிமுக தலைவிக்கு தலைவலியா?
8. ஒரு பகுதி நீதிபதிகளே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுவது பற்றி?
9.திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்?
10.இந்த வருடம் 10ம் வகுப்பு மாணவர்களின் எதிர் காலம்?

ezhil arasu said...

காவி உடை தரித்து கொஞ்சம் யோகக்கலை,கொஞ்சம் தியானம்,கொஞ்சம் வாழ்வியில் வெற்றிச்சூத்திரங்கள் இவைகளை வைத்துக் கொண்டு இந்து மத ஆண்டவன்களின் துதி பாடிக் கொண்டு அனைத்து தர மக்களை ஏமாற்றி அவர்தம் செல்வத்தை எல்லாம் கவர்ந்து கபட நாடகம் ஆடிக் கொண்டே கறுப்புப்பண முதலையை ஒழிக்க கிளம்பிய அவதராமாய் வலம் வரும் போலிகளை வணங்கி மகிழும் சில ஆர்வல‌ர்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பகுத்தறிவு மகா புருடர்களை இழித்தும் பழித்தும் பேசுவதும் எழுதுவதும் தமிழர் பண்பாடுக்கு இழுக்கன்றோ!அதுவும் இயற்கையோடு இயற்கையாய் ஆகிவிட்ட அந்த பெருந்தகையின் புகழுக்கு கழங்கம் கற்பிக்க நினைப்பது தமிழை பழிப்பதாகும்.அதிலும் கண்ணியிமில்லாச் சொற்களை பயன் படுத்துவது தவிர்ப்பது யாவருக்கும் நலம் பயக்கும்.

pt said...

//ரமணா said...


9.திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்?//

கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி

http://www.voicetamil.com/?p=33867

RS said...

//அதிலும் கண்ணியிமில்லாச் சொற்களை பயன் படுத்துவது தவிர்ப்பது யாவருக்கும் நலம் பயக்கும்.//

Yes yes... we have been saying this to Karunanidhi for long and he is not listening, what to do, he is the follower of the person who does not deserve Kanniyamana Sorkal.

If you want to know what "கண்ணியிமில்லாச் சொற்களை" karunanidhi used, kindly ask him because he is old and has no "Other work", so he can
let his thinking horse and give you new innovative words.

pt said...

1)சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

2)இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.


WHAT NEXT?

dondu(#11168674346665545885) said...

//இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ?//

None of these propositions is true. EVR and Nagammai had a daughter, who died at a very early age.

As for Maniyammai, EVR was too old when he married her.

This is just to set the record straight.

Kindly refrain frm such comments against the 2 ladies in question.

Regards,
Dondu N. Raghavan

dondu(#11168674346665545885) said...

@pt
Your guess is as good as mine.

Regards,
N. Raghavan

ezhil arasu said...

/dondu(#11168674346665545885) said...

//இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழரின் இரண்டு அன்னைகளும் மலடிகள் என்பது தான்.அல்லது மலட்டுத் தன்மை பெற்றது தமிழரின் தந்தை தானோ?//

None of these propositions is true. EVR and Nagammai had a daughter, who died at a very early age.

As for Maniyammai, EVR was too old when he married her.

This is just to set the record straight.

Kindly refrain frm such comments against the 2 ladies in question.

Regards,
Dondu N. Raghavan/

பெரியவ்ர் டோண்டு அவர்களின் இந்த உன்னதமான கருத்துக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் கோடான கோடி.உங்களின் நேர்மையான தெளிந்த மனதை இந்த பதிலால் உணர்த்தியுள்ளீர்கள்.நீவீர் வாழ்க பல்லாண்டு.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது