7/28/2011

டோண்டு பதில்கள் - 28.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சூரிய மின்சக்திக்கு முதலீடு தாருங்கள்: அமெரிக்காவுக்கு முதல்வர் அழைப்பு
பதில்: இது ஆரம்பம் மட்டுமே. மேற்கொண்டு பல விஷயங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். இல்லாவிட்டால் பல யோசனைகள் போல இதுவும் ஏட்டளவிலேயே நின்றுவிடும் வாய்ப்பும் உண்டு.

கேள்வி-2. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதே நிலப் பறிப்பு புகார்
பதில்: நேற்றைய கட்டைப் பஞ்சாயத்தார் இன்றைய மந்திரி என்றிருப்பது இரு திராவிட கட்சிகளிலும் நிலை பெற்றிருப்பது விசனத்துக்குரியதே.

கேள்வி-3. உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்மம்: சுவாமி தயானந்த சரஸ்வதி
பதில்: இது உலகுக்குத் தெரியுமா? சற்றே சீரியசாக, நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்லை. மற்றவர்கள் அதைச் சொன்னால் நல்லது.

கேள்வி-4. கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் விஸ்வநாதன் எம்.பி. ஆய்வு
பதில்: அதே சமயம் அப்பகுதி மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டியது அவசியம். (அப்பகுதியில் வசிக்கும் மக்கள், "கடல் நீரை குடிநீராக்கும் பணியால் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள உப்பு நீரை மீண்டும் கடலுக்குள் விடும் பட்சத்தில் கடல் மேலும் அதிக உவர்ப்பு தன்மை அடையும். அதனால் மீன்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எங்கள் தொழில் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்).

கேள்வி-5. சுயநிதி எம்.பி.பி.எஸ்.: 182 முதல் தலைமுறை மாணவர்களுக்கு தலா ரூ. 1.25 லட்சம் சலுகை
பதில்: அப்பணத்தை பட்டுவாடா செய்யும்போது மாணவர்களிடம் கமிஷன் கேட்காமல் இருப்பது முக்கியம்.

கேள்வி-6. தி.மு.க.,வை அசைக்க முடியாது: கருணாநிதி
பதில்: அதைச் செய்யவும் கருணாநிதிதான் வரவேண்டும் என்கிறாரோ அவர்?

கேள்வி-7. கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ. நடைபயணம்
பதில்: சம்பந்தப்பட்டக் கலைஞரின் ஆதங்கம் புரிந்தாலும், அதற்காக கட்டைக் காலில் ஊர்வலமாக வருவது ரொம்பவுமே ஓவர்.

கேள்வி-8. அரசு கேபிளுக்கு கட்டுப்பாட்டு அறைகள்
பதில்: சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே.

கேள்வி-9. வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை: வைகோ பேச்சு
பதில்: அவசியமான பேச்சு பேச வேண்டிய இடத்தில் பேசிய வைகோ பாராட்டுக்குரியவர்.

கேள்வி-10. டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிப்பு: பொதுமக்கள் புகாரில் எம்.எல்.ஏ. அதிரடி
பதில்: கேட்டால் தபால்காரருக்கு சம்பளம் போதவில்லை என்பார்கள். அது உண்மை என்றாலும் இவ்வாறு செய்த தபால்காரர் கண்டிக்கப்பட வேண்டியவரே. மேற்கொண்டு என்ன செய்வார்கள்? வேலையை விட்டு நீக்குவார்கள்? அதனால் என்ன பயன்? அதுதான் ஏற்கனவேயே சிறையில் இருக்கிறாரே?

ஊர் மக்களின் பாசத்துக்கு பாத்திரமாகி சேவை செய்த பல தபால்காரர்கள் இருக்க இம்மாதிரி புல்லுருவிகளும் இருப்பது கொடுமையே.


ரமணா
கேள்வி-11. அதிமுக அரசு அவசர அவசரமாய்அச்சடித்த பழைய முறை பாடப்பத்தகங்கள் இனி ?
பதில்: வேறென்ன, எள்ளுதான். அதிமுகாவுக்கு இது சருக்கலே.

கேள்வி-12. அழ‌கிரி வராத திமுக மாநாடு கோவையில்?
பதில்: திமுகவின் முடிவு ஆரம்பமாகி விட்டதாகவே தோன்றுகிறது.

கேள்வி-13.சமச்சீர் கல்வியை மெட்ரிக் பள்ளிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்?
பதில்: இப்போதைக்கு நிச்சயமற்ற நிலை முடிந்ததே என்ற நிம்மதி -பெருமூச்சுடன்.

கேள்வி-14. ஆங்கில பள்ளிகளெல்லாம் சிபிஎஸ்இ முறைக்கு மாறிவிட்டால்?
பதில்: அதனால் என்ன பலன் வரும் என நினைக்கிறீர்கள்?

கேள்வி-15. அதிமுகவின் தலைவி என்ன செய்வார் சமச்சீர்கல்வி அமுல்படுத்த உச்ச நீதி மன்றமும் சொல்லிவிட்டதே?
பதில்: தடை உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொள்ளாததன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தின் நிச்சயமற்றத் தன்மையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே.

கேள்வி-16. அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சியாமே?
பதில்: பிரச்சினையை தீர்க்காமல் சொதப்பலாகக் காரியம் செய்தால் வீழ்ச்சிதானே.

கேள்வி-17. 2ஜி விவாகரத்தில் அடுத்து யார்?
பதில்: இதில் பெரிய பெட்டிங் நடந்தால் வியப்படைவதற்கில்லை.

கேள்வி-18. சூரிய சக்தி மின்சாரம் சாத்யமா?
பதில்: மற்றவகை மின்சக்திகளைப் போல பலமடங்கு விலை தரவேண்டிய நிலை இன்னும் உள்ளது. இப்போதைக்கு அதன் பரவலான உபயோகத்துக்கு இன்னும் நாள் இருக்கிறது.

கேள்வி-19.கேஸ் விலை ரூபாய் 800 ஆகப்போகிறதாமே?
பதில்: இது பற்றி நான் இட்டப் பதிவுகள் 1 மற்றும் 2-ஐ  பார்க்கவும். மிகவும் தவறான பயன்பாடுகளை ஊக்குவிக்கும் இந்த சப்சிடி ஒழிவது அவசியமே.

கேள்வி-20. தமிழக முதல்வரின் ஆட்சி இது வரை எப்படி?
பதில்: சமச்சீர் கல்வி விஷயத்தில் சொதப்பியதை ரிபீட் செய்யாமல் இருந்தால் தேவலையான ஆட்சிதான். 




BalHanuman
கேள்வி-21. டோண்டு ஸார், ஒரு சிறிய சந்தேகம்.
>>காகித ஓடம் கடலலை மீது
>>போவது போலே மூவரும் போவோம்
யார் அந்த மூவர் ?
1. கருணாநிதி - தயாளு - ராஜாத்தி
2. கருணாநிதி - அஞ்சாநெஞ்சன் - தளபதி
3. 
கருணாநிதி - கனிமொழி - ஆ.ராசா
4. கருணாநிதி - தயாநிதி - கலாநிதி
5. கனிமொழி - ஆ.ராசா - சரத்குமார் ரெட்டி 



பதில்: எல்லோருமே மாட்டட்டுமே, சந்தோஷம்தானே.



மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.
2.ஆ. ராசாவின் உத்தரவுப்படியே நடந்தேன்: சித்தார்த்த பெகுரா

3.சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்
4. எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக ரூ.30 கோடி நன்கொடை: சந்தோஷ் ஹெக்டே
5.திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக இருந்துவந்த திருப்பூர் சாய ஆலைக் கழிவுநீர் பிரச்னைக்குக் கடைசியாக ஓர் இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளது.
7.மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு
8.ஆகஸ்ட் 18-லிருந்து லாரி ஸ்டிரைக்
9.மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
10.ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

ezhil arasu said...

இனமானம் காக்கும் தமிழர் தலைவனின் தவப் புதல்வனை வருங்கால முதல்வரை ஆற்றல் மிகு ஸ்டாலின் அவர்களை காவல்துறையின் துணை கொண்டு திருவாரூரில் கைது எனும் செய்தி கேட்டதும் கொதித்தெழுந்த தமிழரின் இன உணர்வுக்கு ஆதிக்க சக்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் டோண்டுவின் பதில் என்ன?
ஏழை பாழைகள் ஏற்றம் பெற்றிட ஆய்ந்து தலைவர் அறிவித்த‌ முத்தான திட்டமாம் சமச்சீர் கல்வியை கல்வியாள‌ர்களால் பெரிதும் போற்றப்படும் போது பிற்போக்கு சக்திகளின் ஆதரவோடு பிடிவாதம் செய்யும் போக்கை பற்றி தெளிவான கருத்து தெரிவிக்க டோண்டுவால் முடியுமா?

Itsdifferent said...

Though too radical in thoughts, nevertheless very good points on the need of a Hindu Unity.
http://www.dnaindia.com/analysis/analysis_how-to-wipe-out-islamic-terror_1566203

pt said...

ezhil arasu said...

/இனமானம் காக்கும் தமிழர் தலைவனின் தவப் புதல்வனை வருங்கால முதல்வரை ஆற்றல் மிகு ஸ்டாலின் அவர்களை காவல்துறையின் துணை கொண்டு திருவாரூரில் கைது எனும் செய்தி கேட்டதும் கொதித்தெழுந்த தமிழரின் இன உணர்வுக்கு ஆதிக்க சக்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் டோண்டுவின் பதில் என்ன?/

திருவாரூர்: தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வரும், கட்சியின் பொருளாளருமான மு.க., ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். தீக்குளிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்று மதியம் ஒரு மணியளவில் மாஜி அமைச்சர் கே.என்., ‌நேருவும் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. தமிழக போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க,. தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 2 மணியளவில் ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக அனைவரும் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
courtesy-dinamalr dated 31.7.2011

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
11.ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
12.காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்'
13.அமெரிக்க கடன் உச்சவரம்பு விவகாரம்: குழப்பம் நீடிக்கிறது
14.1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்
15.எதிர்க்கட்சிகளும் யோக்கியமில்லை: பிரதமர்

சுழியம் said...

//...நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்லை. மற்றவர்கள் அதைச் சொன்னால் நல்லது...//

நாம் சொல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும் ?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
16.கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்
17.பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு
18.ஏ.டி.எம்.,மிஷின் அலேக்:நூதன திருடர்கள் கைவரிசை
19.அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
20.ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்

ezhil arasu said...

அடக்குமுறை அராஜாக ஆட்சிக்கு ஒரு முடிவு செய்யும் முகமாய் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட அவரின் அரசியல் வாரீசுவின் எழுச்சி கண்டு தமிழினமே பெருமை கண்டது கண்டு தமிழன்னை பெரு மகிழ்ச்சிக் கடலில்.வரும் தேர்தலில் இனி கழகமே வெற்றி வாகை சூடிடும் எனும் கருத்துக்கு பொது மக்களின் பேரதரவு கண்டு ஆதிக்க சக்திகள் மிரண்டு போயுள்ள‌து தெளிவாய் தெரிகிறது.தர்மத்தின் வாழவுதன்னை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்.
இது பற்றி அகில உலகமே வியந்து பாரட்டிடும் அர்த்த மிகு,பொருள் மிகு,க‌ருத்து மிகு,புகழ் மிகு கேள்வி பதில் பதிவுகளில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராய் மிளிரும் டோண்டுவின் பதில் என்ன?

Anonymous said...

/நாம் சொல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும் ?

//

வாழ்ந்து காட்டலாம்.

ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?
2. நில அபகரிப்பு வழக்குகள் சரியா?
3. மத்திய அரசு இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்?
4. அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
5. அரிசி,ஆடு,மாடு,கிரைண்டர்,
மிக்ஸி,பேன்,
லேப்டாப்,
தாலிக்கு தங்கம் அடுத்து?

dondu(#11168674346665545885) said...

@ரமணா
உங்கள் கேள்விகள் இத்தொடரின் அடுத்த பகுதியின் வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

pt said...

//ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//

சமச்சீர் கல்வி பற்றி சோ

http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post.html

thenkasi said...

/pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
16.கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்/


சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

Venkat said...

Sir,

The team of India Against Corruption (IAC) headed by Shri.Anna Hazaare has started an online referendum to collect the opinion of citizens of India about the different points of contention between the two versions of LokPal bill -
• one version drafted by GOI(Government of India) in secrecy without taking in public opinion.
• the other by a team of civil society members after an exhaustive public consultation process.

Please find the link to the online voting form below :
https://spreadsheets.google.com/spreadsheet/viewform?formkey=dFBnOUNHbHpsRndzSF9xZlBTeTRnbmc6MQ&theme=0AX42CRMsmRFbUy1lZDQ5MzdmZC03OTA5LTQyNTEtOTAyNS1lYjJiMThlYmVlZjM&ifq


Request you to voee in this referendum along with your family and also spread to your relatives and friends. This is a wonderful opportunity for us to convey our views to our MPs and effectively participate in law making process.


Respectfully,
Venkat

Anonymous said...

//ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//

சமச்சீர் கல்வி பற்றி சோ

http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post.html//

அங்கு போடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கவும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது