8/11/2011

டோண்டு பதில்கள் - 11.08.2011

thenkasi
கேள்வி-1. ஸ்டாலினுக்கு கோவையில் எதுவுமே கிடைக்க​வில்லையே?
பதில்: அழகிரி என்னும் செக் இருக்கும் வரையில் அவருக்கு எதுவும் கிடைக்காது.

கேள்வி-2. ஆ.ராசா, கனிமொழி சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறார்களா? அவர்களுக்கு பொழுது எப்படிப் போகிறது ?
பதில்: திகார் தலைமை அதிகாரிக்கு போக வேண்டிய கேள்வி இது.

கேள்வி-4. தயாநிதி மாறனின் திஹார் விஜயம் தள்ளிப் போவதன் மர்மம் என்ன?
பதில்: விஜயம் எந்த அடிப்படையில் என கருதுகிறீர்கள்? விசிட்டராகவா அல்லது சிறைவாசியாகவா?

கேள்வி-6. திஹார் சிறை கண்ட தியாகி கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளதா ?
பதில்: அடுத்த தேர்தலில் திமுக ஜெயித்தால், அழகிரி ஸ்டாலின் அனுமதித்தால், why not?

கேள்வி-7. மனைவி, துணைவி என்று இந்தக் கிழவர் எத்தனை காலம் தான் ஊரை ஏமாற்றுவார் ?
பதில்: மனைவி, துணைவி எல்லாம் அவரது சொந்த விஷயம்.
:
கேள்வி-9. தா.கி. வழக்கில் நீதி கிடைக்குமா ? அஞ்சா நெஞ்சன் சிறை புகும் காலம் எப்போது ?
பதில்: இதில் சட்டச் சிக்கல்கள் உண்டு. நான் அறிந்தவரை double jeopardy என்று ஒரு விஷயம் இருக்கிறது.

கேள்வி-10. அண்ணா நகர் ரமேஷ் வழக்கு என்னவாயிற்று ? இதில் தளபதியின் பங்கு என்ன ?
பதில்: நான் என்ன புலன் விசாரணை பத்திரிகையாளரா, இதையெல்லாம் தெரிந்து கொள்ள?

BalHanuman
 கேள்வி-11. சிகிச்சைக்கு அமெரிக்கா போன சோனியா பொறுப்பை ராகுல் காந்தியிடம் கொடுக்கிறார்.. ஆனால் இந்தக் கருணாநிதி ஸ்டாலினுக்கு அல்வா தவிர வேறு எதுவும் கொடுப்பதாகத் தெரியவில்லையே ?
பதில்: ராகுல் அவர் அன்னையின் ஒரே பிள்ளை. ஆனால் ஸ்டாலின்?

கேள்வி-12. ஜாபர் சேட்டுக்குப் பரிந்து பேசும் கருணாநிதி "இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான ஜாபர் சேட்" என்று புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த ஆள் திருந்தவே மாட்டாரா ? தலித் என்ற அடை மொழி கொடுத்து ஆ.ராசவைக் காப்பாற்ற முயன்றவர் தானே இவர் ?
பதில்: கோமணத்தை இறுக்கக் கட்டி, மலத்தை அடக்க முயலுகிறார்.

கேள்வி-13. ஜூனியர் விகடனில் வெளியாகி உள்ள கருணாநிதி குடும்பத்தின் சொத்து விவரங்களைப் பார்த்தீர்களா ? சொக்கா... கண்ணைக் கட்டுதே.....
பதில்: திரைக்கதை வசனம் எழுதித்தானே இத்தனையையும் சம்பாதித்ததாக அவர் கூறுவார்?

கேள்வி-14. அஞ்சா நெஞ்சனிடம் இருந்து மதுரையை மீட்க முடியுமா ?
பதில்: அஞ்சாநெஞ்சன் வெத்துவேட்டு என்பது தெரிந்த பின்னுமா இந்த கேள்வி?

கேள்வி-15. சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவர் பற்றி உங்கள் கருத்து ?
பதில்: அந்த ஏரியாவில்தான் எங்கள் பொறியியல் கல்லூரியின் அலும்னி கிளப் உள்ளது. பழைய மாணவர்கள் கெட் டுகதர்களுக்கு செல்வதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட சுவரை நான் பார்த்ததாக நினைவில்லையே.

pt
 டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-16. தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு

பதில்: தமிழ் ஈழம் பெறுவதில் இலங்கையில் உள்ள தமிழரிடமேயே கூட ஒத்த கருத்து இல்லை. மேலும் அது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பது இங்குள்ளவர் கருத்து.

கேள்வி-17. மும்பை: மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு
பதில்: கவலை தரும் செய்தி.

கேள்வி-18. நியூயார்க்கில் சோனியாவுக்காக பிரார்த்தனை
பதில்: நல்லபடியாக பிழைத்து வரட்டும் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்?

கேள்வி-19. அமெரிக்க போர் விமானங்கள் அனுமதியின்றி பிரவேசம்: இலங்கை கண்டனம்
பதில்: கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-20. 2ஜி முறைகேடுகளுக்கு பிரதமரை பொறுப்பாக்க முடியாது: மான்டேக்
பதில்: ஆம், அவரை பொறுப்பாக்க முடியாதுதான். ஏனெனின் அவர் பொறுப்பற்றவர்.

கேள்வி-21. ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு
பதில்:


கேள்வி-22. விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி 
பதில்: எல்லா முதன் மந்திரிகளும் அதைத்தான் கூறுகிறார்கள், இதில் என்ன புதுசு?


கேள்வி-23. ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'
பதில்: ஆண்டுக்கு 4 சிலிண்டருக்கு மேலே என்றால் மானியம் கட் என்றுதானே படித்தேன்.


கேள்வி-24. அதிகம் பால் கொடுக்கும் வெளிமாநில கலப்பின பசு இறக்குமதி : ஒரு பசு ரூ.30,000
பதில்:  அவ்வளவுதானா?


கேள்வி-25. கைதாகாமல் தவிர்க்க "வாஸ்து' உதவியை நாடிய நேரு
பதில்: தப்பிச்சுப்போக, வீட்டின் பின்னால் வேறு ஏதாவது வாசல் அமைத்திருப்பாரோ?



மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள கடைசி பாதாள அறையை திறந்தால், கோயில் பொக்கிஷங்கள் கொள்ளை போகும் ...
2.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி விலை ஏற்றத்தால் எரிச்சல்
3.லண்டனில் ஆரம்பித்த கலவரம் மற்ற ஊர்களுக்கு பரவி, இங்கிலாந்து தேசமே எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் ஒளிபரப்பாகின்றன.
4.புத்தகங்களில் கிழித்தல், திருத்தல் தீவிரம் 16ம் தேதி முதல் சமச்சீர் பாடம்
5.
தெலுங்கானா மாநிலம் அமைக்க தற்கொலைக்கு தயார் - விஜயசாந்தி

ரமணா said...

August 02, 2011 10:20 AM
Blogger ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?
2. நில அபகரிப்பு வழக்குகள் சரியா?
3. மத்திய அரசு இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்?
4. அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
5. அரிசி,ஆடு,மாடு,கிரைண்டர்,
மிக்ஸி,பேன்,
லேப்டாப்,
தாலிக்கு தங்கம் அடுத்து?

August 02, 2011 8:08 PM
Blogger dondu(#11168674346665545885) said...

@ரமணா
உங்கள் கேள்விகள் இத்தொடரின் அடுத்த பகுதியின் வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 02, 2011 8:18 PM

தஞ்சை இரா.மூர்த்தி said...

இதைக் கொஞ்சம் பாருங்க:

சமச்சீர் கல்வி: முதல்வரை ஏமாற்றியது பத்திரிகைகளா? பார்ப்பனக் கூட்டமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post.html

baleno said...

கேள்வி-16. தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு
இலங்கை தமிழர்களை தீர்த்து கட்டும் திட்டம் இது.

dondu(#11168674346665545885) said...

@baleno
தமிழ் ஈழம் இந்தியாவின் நலத்துக்கு விரோதமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BalHanuman said...

டோண்டு ஸார்,

ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை ராசாத்தி அம்மாளும், அஞ்சா நெஞ்சனும்தான் என்று நாம் எல்லாம் நினைக்க, சோ இங்கு வேறு விதமாக சிந்திக்கிறார்....

கே : மு.க. ஸ்டாலினிடம் தி.மு.க. தலைவர் பதவியைத் தர கருணாநிதி தயக்கம் காட்டுவது ஏன்?

ப : முன்பே இது பற்றி நான் எழுதியிருக்கிறேன். சிலர் தங்களிடம் உள்ள சொத்தை, தங்களுக்கு வயதாகிறபோது, தங்கள் சந்ததியினருக்கு எழுதி வைத்து விடுவார்கள்; இதற்குப் பெயர் செட்டில்மென்ட். வேறு சிலர் இப்படிச் செய்யாமல், தங்களுக்குப் பிறகுதான், தங்கள் சந்ததியினர் தங்கள் சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், உயில்தான் எழுதுவார்கள்; அதாவது அவர்கள் காலத்திற்குப் பிறகு, தன் சந்ததியினருக்குச் சொத்துப் போய் சேருவதற்கு ஏற்பாடு செய்வார்கள். இதில் கருணாநிதி இரண்டாவது ரகம்.

Anonymous said...

அஞ்சாநெஞ்சன் வெத்துவேட்டு என்பது தெரிந்த பின்னுமா இந்த கேள்வி//
செம பதில்...முதலில் ஜெ..விடமிருந்து அஞ்சாநெஞ்சனை மீட்க முடியுமா என தெரியவில்லை..குடும்பத்துடம் டில்லியில் பம்மி கிடக்கிறாராம்

pt said...

6.IS INDIA HEADED INTO A RECESSION?
7.CAN TECHNOLOGY BE BLAMED FOR THE LONDON RIOTS?
8.DO YOU THINK ANNA WILL WIN THE WAR AGAINST 750 PARLIAMENT MEMBERS ON LOKPAL BILL?
9.RAJA'S REVELATIONS IN 2G SCAM: IS PM'S INTEGRITY QUESTIONED?
10.DO YOU THINK INDIANS ARE MORE INFLUENCED BY WESTERN BRANDS?

Venkat said...

Respected Dondu Sir,

An event is being organised in chennai from Aug-16th in solidarity with
Shri.Anna Hazare to demand the withdrawal of Govt's JokePal(Govt's
version of Lokpal bill reads like a cruel joke played on citizens)
from parliament & to introduce an effective Lokpal bill.Mr.Kalyanam,the last Private secretary to Mahatma Gandhi is starting his indefinite fast for demanding effective lokpal bill.

Please attend the event and spread news to your friends.
Venue :
Surendra Builders,#153,Lattice Bridge Road, Thiruvanmiyur,Chennai-41.

Anna Hazaare has also requested all citizens to switch off lights(If
we are lucky to get power supply) from 8 PM - 9 PM on Independence Day
to demand an effective LokPal.


Request you to please spread news to your friends.
Thanks,
Venkat

BalHanuman said...

அஜீத் நடித்துள்ள 'மங்காத்தா' படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கலந்து கொள்ளவில்லையாம். அவர் எதனால் தலை மறைவாகி விட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

dondu(#11168674346665545885) said...

@பாலஹனுமான்
கைப்பூணுக்கும் கண்ணாடி வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

thenkasi said...

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

- கண்ணதாசன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது