8/25/2011

டோண்டு பதில்கள் - 25.08.2011

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 18.08.2011":

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ஊழல் புரிந்தவர்களுக்கும் திகார்; அதை எதிர்ப்பவர்களுக்கும் திகாரா?
பதில்: ஊழலை நிறுவனப்படுத்திய இப்போதைய ஆட்சியாளர்கள் பார்வையில் அன்னா ஹசாரே குற்றவாளிதானே.

கேள்வி-2. திராவிடக் கட்சிகளுடனான கூட்டணிக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: ராமதாஸ்
பதில்: யாரிடம் மன்னிப்பு கேட்கிறார்? ஒரு வேளை மகனிடமா? அதாகப்பட்டது,
“மகனே உனக்கு ராஜ்யசபை உறுப்பினர்/மந்திரி பதவி வாங்கி தராததற்கான மன்னிப்பு கேட்கிறேன்” என்பதாக இது இருக்குமோ?

கேள்வி-3. முதல்வருடன் சேர்ந்து நிற்போம்: வைகோ
பதில்: கொஞ்ச நாட்கள் கழித்து சேர்ந்து நிற்போம் என்பது சோர்ந்து நிற்பதாக ஆகாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-4. ஊழலை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை: பிரதமர்
பதில்: ஊழலை ஒழிக்க எந்த முயற்சியுமே செய்யாமல் இருப்பவருக்கு இந்தப் பேச்சும் ஒரு கேடா?

கேள்வி-5. வெளிநாட்டவர் பணிபுரிய சிங்கப்பூரில் கடுமையான விதிமுறைகள்
பதில்: ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் நம் நாட்டில் பங்களாதேஷியினர் பிரச்சினை செய்வது போல அங்கும் வருமே?

கேள்வி-6. DO YOU THINK ANNA HAZARE'S ANTI-GRAFT CRUSADE WILL BE RESOLVED SATISFACTORILY?
பதில்: ஆம் என்று இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது, ஆனால் அவ்வாறு ஆக அரசியல்வாதிகள் விட்டுவிடுவார்களா?

கேள்வி-7. DO YOU SEE GOLD PRICES HEADING FOR A CORRECTION IN NEAR FUTURE?
பதில்: தங்கம் விலை உயர்ந்தது உயர்ந்ததுதான். குறைய வாய்ப்பே இல்லை.

கேள்வி-8. AFTER RATING DOWNGRADE, IS THE US NOW LOOKING FOR AN OVERNIGHT MIRACLE?
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அமெரிக்கா இருக்கிறது. அதன் நம்பிக்கைகளுள் இதுவும் ஒன்று.

கேள்வி-9. SHOULD ALL POLITICAL PARTIES CLARIFY THEIR STAND ON JAN LOKPAL BILL?
பதில்: 6-ஆம் கேள்விக்கான பதில்தான் இங்கும்.

கேள்வி-10. IS THE EUROZONE DEBT CRISIS A BIGGER WORRY THAN US?
பதில்: ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை அவை.


ரமணா
கேள்வி-11. ஊழல் எதிர்ப்பு வலுக்கிறதே நாடு முழுவதும் என்னவாகும்?
பதில்: நல்லதே நடக்கும் என எண்ணுவதைவிட நாம் வேறென்ன செய்ய முடியும்?

கேள்வி-12. கபில் சிபில் அவர்களின் சமீபத்திய பேட்டிகள் பற்றி?
பதில்: அவர் யாருக்கெல்லாம் ஆதரவாக நின்று பேட்டிகள் கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் சந்தியில் நிற்கிறார்கள், உதாரணம் ராசா.

கேள்வி-13. அதிமுக தலைவியின் திடீர் குற்றச்சாட்டு மத்திய அரசு மீது சரியா?
பதில்: மத்திய அரசு குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டதல்ல.

கேள்வி-14. காங்கிரசின் அதிரடி தலைவர் இளங்கோவனின் அதிரடி சமீபத்திய பேச்சுகள்?
பதில்: சோனியா முறைத்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகிறவர்தானே அவர்?

கேள்வி-15. ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?
பதில்: வடிக்கட்டிய முட்டாள்தனம்.

கேள்வி-16. லாரி ஸ்டிரைக் வாபஸ் யாருக்கு வெற்றி?
பதில்: பயனர்களுக்கு.

கேள்வி-17. இளங்கலை படிப்புக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு சரியா?
பதில்: சரி இல்லை.

கேள்வி-18. தமிழ் புத்தாண்டு மாற்றம் பற்றிய கருணாநிதி கருத்து சொல்லும் போது ?
பதில்: இந்துக்களின் நம்பிக்கையில் கை வைப்பதற்கு இவர் யார்? கோவில்களுக்கு வேறு ஆணையிடுகின்றனர், ஏப்ரல் 14 அன்று புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என்று.

இந்துக்களை திருடர்கள் எனக்கூறிய இவர் இந்து மதத்தில் இருக்க வேண்டும் என யார் அழுதார்கள்?

கேள்வி-19. செப்டம்ர் 15ல் இலவச மழை போலுள்ளதே?
பதில்: யார் வீட்டு துட்டை யார் இலவசமாக தருவது? இது கண்டிக்கத் தக்கது.

கேள்வி-20. கருணாநிதிகட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவ மனையாக்கும் ஜெ. யின் திடீர் முடிவு எப்படி?
பதில்:மருத்துவமனை என்றால் அதன் முன்வரைவிலேயே அதற்கான சாத்தியக்கூறுகளை மனதில் வைத்து கட்டுமானம் செய்திருக்க வேண்டும். பொறியாளனாகிய எனக்கு இது சரி வருமா என்பதில் ஐயம் உண்டு. வேறு ஏதாவது அரசு அலுவலகங்களை அமைத்திருக்கலாம்.

thenkasi has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 18.08.2011":
கேள்வி-21. இந்தப் பாடல் வரிகளுக்கு நிகழ்கால அரசியல்/பொருளாதார‌ சூழ்நிலையின் அடிப்படையில்டோண்டு அவர்களின் விளக்கம் என்ன?
“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்” 
பதில்: ராமதாஸ் மற்றும் கலைஞரை வைத்து காமெடி கீமெடி ஏதும் செய்யலைதானே?


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

18 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.கருணாநிதிக்கு சட்டம் தெரியாது: பேரவையில் ஜெயலலிதா
2.மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை
3.தில்லியில் நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்
4.அரசை விமர்சிக்க 6 மாத காலம் தேவை: விஜயகாந்த்
5.சிறை நிரப்பும் போராட்டம்: ஹசாரே அழைப்பு

aotspr said...

டோண்டு பதில்கள் மிகவும் அருமை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

BADRINATH said...

//இந்துக்களின் நம்பிக்கையில் கை வைப்பதற்கு இவர் யார்? ///
அதே போல தமிழர்களின் உரிமையில் தலையிட நீர் யார் என்று கேட்கலாமே...? பிரபவ விபவ என்பதெல்லாம் சமஸ்கிருதம்தானே... மறைமலை அடிகள் ஈறான தமிழ் புலவர்கள் ஏற்கவில்லையே... அதைப் பற்றி சுத்தமாக நீர் குறைந்த பட்ச மரியாதை கொடுக்கதாதது தவறு என்றே ஏற்க மாட்டீரா...?

KANTHANAAR said...

..இந்துக்களின் நம்பிக்கையில் கை வைப்பதற்கு இவர் யார்? ..
அதைப் போல மறைமலை அடிகள் ஈறான பல தமிழ்ப் புலவர்க்ள் பிரபவ விபவ என்று ஆரம்பிக்கும் புத்தாண்டை ஏற்காமல் இருப்பது அவரது தனிப்பட்ட உரிமை என்பது புரியவில்லையா... உரிமை என்றால் அது மத உரிமை மட்டும்தானா..? என் மொழி உரிமை என்பதெல்லாம் உம் அகராதியில் கிடையாதா..?

ரமணா said...

1.அதிமுக அரசின் 100 நாள் ஆட்சி பற்றி?
2.இந்தியப் பிரதமரின் நிகழ் கால நிலை?
3.அழகிரி ஸ்டாலின் யார் முந்துகிறார்கள்?
4.2 ஜி வழக்கு எந்தத் திசையில்?
5. குஜராத் முதல்வர் மோடி பாரத பிரதமரானால்?

BalHanuman said...

டோண்டு ஸார் Full form-ல் உள்ளார் போலிருக்கிறது. பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி....

thenkasi said...

மின் அஞ்சலில் வந்த சுவை/கடி ஜோக்குகள்.
மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

மூன்று வயோதிகர்கள் தங்களது நினைவுத்திறனைபரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் முதல் வயோதி கரிடம் மூன்றும் ஏழும் எவ்வளவு என்றார். அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு 274 என்றார். மருத்துவர் அடுத்ததாக இரண்டாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்து விட்டு செவ்வாய்க்கிழமை என்று பதில் அளித்தார். மருத்துவர் மூன்றாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டபோது அவர் உடனே 24 என்று பதில் அளித்தார். மருத்துவர் சபாஷ் எப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் 274லிருந்து செவ்வாய்க் கிழமையைகழித்துச் சொன் னேன் என்று பதில் சொன்னார்.


புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்.மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

ஒரு ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்

thenkasi said...

ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்

ரமணா said...

6.அஜித் நடிக்கும் மங்காத்தா சன் டீவியின் கைக்கு மாறியதன் மர்மம் என்ன‌ என்ன?
7.தமிழக முதல்வரின் அதீத சலுகைகள் (இலவச புத்தகம்,இலவச சீருடை,இலவச மடிக்கணனி,இலவச பை,இலவச உபகரண‌ங்கள்,இலவச பஸ் பாஸ், சுத்தமான சூழல், ஆண்டுத்தேர்வு இல்லா நிலை உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு‍: என்ன காரணம் ?
8. சட்ட சபையில் பன்ருட்டியாரின் ஜால்ரா கொஞ்சம் ஓவராயில்லை?
9. கலைஞரின் சோர்வுற்றிருக்கும் முகம் மலரும் வகையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமா?
10. முன்னாள் தமிழர் தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரின் சினிமா தயாரிப்பு இப்போது?

pt said...

DEAR ALL ,

KINDLY SHARE THIS INFORMATION TO ALL OF YOUR FRIENDS AND CONTACTS.

BRUSHING FOR ORAL HEALTH

ORAL HEALTH BEGINS WITH CLEAN TEETH. CONSIDER THESE BRUSHING BASICS FROM THE AMERICAN DENTAL ASSOCIATION:

BRUSH YOUR TEETH AT LEAST TWICE A DAY.WHEN YOU BRUSH, DON'T RUSH. TAKE ENOUGH TIME TO DO A THOROUGH JOB.

USE THE PROPER EQUIPMENT.USE A FLUORIDE TOOTHPASTE AND A SOFT-BRISTLED TOOTHBRUSH THAT FITS YOUR MOUTH COMFORTABLY. CONSIDER USING AN ELECTRIC OR BATTERY-OPERATED TOOTHBRUSH, ESPECIALLY IF YOU HAVE ARTHRITIS OR OTHER PROBLEMS THAT MAKE IT DIFFICULT TO BRUSH EFFECTIVELY.

PRACTICE GOOD TECHNIQUE.HOLD YOUR TOOTHBRUSH AT A SLIGHT ANGLE AGAINST YOUR TEETH AND BRUSH WITH SHORT BACK-AND-FORTH MOTIONS. REMEMBER TO BRUSH THE INSIDE AND CHEWING SURFACES OF YOUR TEETH, AS WELL AS YOUR TONGUE. AVOID VIGOROUS OR HARSH SCRUBBING, WHICH CAN IRRITATE YOUR GUMS.

KEEP YOUR EQUIPMENT CLEAN.ALWAYS RINSE YOUR TOOTHBRUSH WITH WATER AFTER BRUSHING. STORE YOUR TOOTHBRUSH IN AN UPRIGHT POSITION, IF POSSIBLE, AND ALLOW IT TO AIR DRY UNTIL USING IT AGAIN. DON'T ROUTINELY COVER TOOTHBRUSHES OR STORE THEM IN CLOSED CONTAINERS, WHICH CAN ENCOURAGE THE GROWTH OF BACTERIA.

KNOW WHEN TO REPLACE YOUR TOOTHBRUSH.INVEST IN A NEW TOOTHBRUSH OR A REPLACEMENT HEAD FOR YOUR ELECTRIC OR BATTERY-OPERATED TOOTHBRUSH EVERY THREE TO FOUR MONTHS — OR SOONER IF THE BRISTLES BECOME FRAYED.

HAPPY BRUSHING

வால்பையன் said...

//ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?
பதில்: வடிக்கட்டிய முட்டாள்தனம்.//

இது வடிகட்டிய முட்டாள்தனம்,
கடவுளுக்கு கோவில் கட்டுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்!

ரமணா said...

வால்பையன் said...

//ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?
பதில்: வடிக்கட்டிய முட்டாள்தனம்.//

இது வடிகட்டிய முட்டாள்தனம்,
கடவுளுக்கு கோவில் கட்டுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்!

மீண்டும் வால்பையன் !

வருகைக்கு நன்றி.

காவ்யா said...

"//ரசிகனால் கட்டபட்டுள்ள எம்ஜிஆரின் கோவில் பற்றி?
பதில்: வடிக்கட்டிய முட்டாள்தனம்.//:

பார்க்காத கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதைவிட பார்த்த மனிதனுக்கு அவனின் பக்தர்கள் கோயில்கட்டி வழிபடுவது ஒரு முட்டாள்தனமா ? அவன் பக்தர்கள்தானே கட்டினார்கள்? மக்கள் அனைவரும் சேர்ந்தா கட்டினார்கள்?

ஆனால் பார்க்காத கடவுளுக்கு கோயில்களை மக்கள் பெயரால் மன்னனும், இன்று மக்களிடமிருந்து பணம் பிரித்தும் பிறரும் க‌ட்டுகிறார்கள். ஒரு தனிமனிதனுக்குக் கோயில் கட்டுபவர்கள் இப்படிச்செய்கிறார்களா ?

மேலும் பார்க்காத கடவுளுக்குக்கோயில்கள் கட்டியவர்கள் அதோடு விட்டுவிடவில்லை. அக்கடவுளை அனைவரும் நம்ப வேண்டும். கோயிலுக்கு வந்து தொழ வேண்டும் என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்கிறார்கள்: விளம்பரம், டிவி யில் உரை, காலட்சேபங்கள், புராண இதிகாசங்கள் எழுதுதல் என்றெல்லாம். இல்லையா ? இப்படி மக்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். கடவுள் ஏதோ ஒரு பிராண்ட் போல.

தனிமனிதனுக்கு எழுப்பப்படும் கோயிலுக்கு இப்படி பிராண்ட் வால்யூ இன்னும் வரவில்லை. அவனின் பக்தர்கள் மட்டுமே அக்கோயிலுக்குப்போவார்கள். கதைகள் இன்னும் எழுதப்படவில்லை. பிற்காலத்தில் எழுதப்படலாம்.

முட்டாள்தனம் என்று துள்ளிக்குதித்துத் திருவாய்மலர்ந்த டோண்டு ராகவன் இதையும் பார்க்கவேண்டும். தனிமனிதர்களுக்கு, அதாவது உண்மையிலே மக்களிடையே வாழ்ந்தவர்களுக்குத் தமிழர்கள் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். மதுரை வீரன் மற்றும் ஏரல் சேர்மதுரை. இரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டுகள்.

மதுரை வீரன் ஒரு எளிய செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன். ராஜகுமாரியின் அன்புக்குப் பாத்திரமானான். பின்னர் அவர் ஒரு லெஜன்ட் ஆனான். அவன் காலத்துக்குப்பின் அவன் இனத்துமக்கள் அவனைத் தெய்வமாக்கினார்கள்; கோயில் கட்டினார்கள். அது பின்னர் விரிவடைந்து பிற ஜாதிமக்களும் - குறிப்பாக மதுரைத் தேவர்கள் - அவனைத் தொழ, இன்று அவன் பல குடும்பங்களுக்கு அவந்தான் குலதெய்வம். அது மட்டுமல்ல டோண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுள்ளும் அவனுக்கு சன்னதியுண்டு.

டோண்டு காரையெடுத்து பெட்ரோல் செலவு செய்து மகரனெடுங்குழைகாதனைப்பார்க்கப்போகும்போது அப்படியே தேனி மாவட்டக்கிராமங்களுக்கும் சென்றிருந்தால், மதுரைவீரன் கோயில்களை வழினெடுகவும் பார்த்திருக்கலாம்.

ஏரல் சேர்மதுரை கிட்டத்தட்ட ஐம்ப‌தாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்தாம். அவர் பெரிய பணக்காரர். ஆனால் மக்களுக்குப் பல உதவிகளைச்செய்து பேர் வாங்க அவர் இறந்த பின் மக்கள் அவருக்குக் கோயில் கட்டி விழாக்கள் நடத்த, அக்கோயிலுக்குச் சென்றதால் தங்கள் துயரங்கள் போனதாகப் பலரும் சொல்ல அக்கோயில் புகழ்பெற்றது. முடி காணிக்கை, காவடி, கொடையென்றெல்லாம். The distance between Eral and Srivaikuntam of Lord Magara Nedungkulaikaathar, is just half an hour, Mr Dondu.

எம்ஜிஆருக்குக் கோயில் முட்டாள்தனமென்றால், எல்லாத்தெய்வங்களுக்குக் கோயில்களும் அதே.

--- kavya

ராஜரத்தினம் said...

தமிழக அரசின் இலவசங்களுக்கு உண்டான காரணத்தை அவரே சட்ட சபையில் சொல்லியிருப்பதை பார்க்கும்போது அவருக்கே திமுகவின் பணபலத்தின் மீதான பயத்தை காட்டியிருக்கிறது. அதையும் மீறி இவரை வெற்றி பெற மக்களுக்கு treat வைக்கிறார் அவ்வுளவுதான். இது வாக்காக மாறாது என்று அவருக்கு தெரிந்தே இருக்கிறது என்பது என் அபிமானம்.

bala said...

//மதுரை வீரன் ஒரு எளிய செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன். ராஜகுமாரியின் அன்புக்குப்//

காவ்யா அம்மா,

நீங்க சொல்ற அந்த கதையில வர்ற ராஜகுமாரி சாவித்திரி அம்மா தானே?ஏழை வீரன், மக்கள் திலகம் தானே?சூப்பர் சினிமாங்க அது.

பாலா

காவ்யா said...

//நீங்க சொல்ற அந்த கதையில வர்ற ராஜகுமாரி சாவித்திரி அம்மா தானே?ஏழை வீரன், மக்கள் திலகம் தானே?சூப்பர் சினிமாங்க அது.

//

சிவாஜி படத்தைப் போட்டுக்கிட்டு, எம்ஜிஆர் படத்தை சூப்பர்ன்னு சொல்லி சிவாஜி இரசிகர்கள் மானத்தை வாங்கலாமா?


மதுரை வீரன் தலித்து. அவனைச் சாமியா கும்பிட்டால் பாப்பானுகளுக்குப் பொறுக்காது. எப்படி தலித்து சாமியாவான்? அவந்தான் பூணுல் போடலியே? நம்மவாதானே சாமியாகி மத்தவா நம்மவாளைக் கும்பிடனும்.
கதையை மாத்து ஓய் மாமா ! இதோ மாத்திட்டேன். “மதுரை விரன் ராஜ குடும்பத்தில் பிறந்து ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியால் எடுத்து வளக்கப்பட்டான்.”
இப்போ சந்தோசமா ?

உண்மையில் மதுரை வீரனின் கதை அப்படித்தான் போகிறது. கதையைப் படிக்கவும்.

சித்திரையில் தொடங்கி தையில் முடிந்தாலும் தையில் தொடங்கி சித்திரையில் முடிந்தாலும் என்றுமே தமிழகம் பிராமணருக்கு அடிமை.

காவ்யா said...

எம் ஜி ஆர் படத்தின் கதாநாயகி பானுமதி ராமகிருஷ்ணா

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.தூக்கு தண்டனையை நிறுத்த அதிகாரம் இல்லை: முதல்வர் விளக்கம்
7.இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை: விரைவில் அமலுக்கு வருகிறது திருத்தச் சட்டம்
8.தூக்கு தண்டனயை ரத்து செய்து திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும்: கருணாநிதி
9.சாயத்தொழில் முடக்கத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு
10.சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது