மீண்டும் மகரநெடுங்குழைகாதன்
தமிழ்பதிவுலகில் குறுக்கெழுத்துப் போட்டி வைத்தால், கொடுக்கப்படும் பல சமிக்ஞைகளில் மிகச் சுலபமானது “மகரநெடுங்குழைகாதனின் பக்தர் (மூன்றெழுத்து) என்பதாகும். எல்லோரும் சுலபமாகவே “டோண்டு” என்னும் விடையை அதற்கான கட்டங்களில் பூர்த்தி செய்து விடுவார்கள்.
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை தரிசித்து விட்டு நேற்றுதான் சென்னை திரும்பினேன்.
2005-ல் அவனை முதன்முதலாக தரிசித்த பிறகு மீண்டும் ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்றாலும், அச்சமயம் நாங்கள் கோவிலை அடையும் தருணம் நடை சாத்தும் நேரம். அவசர அவசரமாக ஓடிச் சென்று தரிசிக்கவும், திரை போடவும் சரியாக இருந்தது. என் மனம் மிகச் சஞ்சலம் கொண்டது. அடுத்த நாளைக்கு வர இயலாத அளவு வேறு நிகழ்வுகள்.
ஆகவே இம்முறை நான் மிகப்பிடிவாதமாக முதலிலேயே கூறிவிட்டேன், அவன் ஆலயம்தான் முதல் பிரையாரிட்டி என்று. அதே போல தரிசிக்கவும் முடிந்தது. இப்போதுதான் மனம் அமைதி கொண்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று (16.08.2011) காலை 9.30 மணியளவில் எனது காரில் புறப்பாடு. மாலை நாலரை மணியளவில் மதுரை. ஷட்டகர் வீட்டுக்கு செல்லும் முன்னால் போகும் வழியிலே ஒத்தக்கடை நரசிம்மர், கள்ளழக்ர் ஆலய தரிசனம். அடுத்த நாள் காலை மதுரையிலேயே கூடலழகர் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில். பிறகு 11 மணியளவில் கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி. ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு, அங்கிருந்து நவதிருப்பதிகளுக்காக புறப்பாடு. முதலில் ரெட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன், திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி தரிசனங்கள். பாக்கியிருந்தவை ஸ்ரீவைகுண்டம், நத்தம் மற்றும் திருப்புளிங்குடி. ஆனால் அப்போது (மாலை 6 மணியளவில்) திடீரென பெய்த பேய்மழையில் மின்சாரம் அந்த ஏரியா முழுக்க கட். ஆகவே திருநெல்வேலிக்கே திரும்பினோம்.
வியாழன்று காலைக்கு விட்டுப்போன அந்த 3 கோவில்களுக்கும் சென்று திரும்பினோம். பிற்பகல் இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள், பத்ரசாயி கோவில்களுக்கு சென்றோம். அங்கிருந்து மதுரை. நேற்று காலை 10 மணியளவில் மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு மாலை வந்து சேர்ந்தோம்.
மடிக்கண்iனி மற்றும் ரிலையன்ஸ் டேட்டா கார்டின் உபயத்தால் அவ்வப்போது எனது மொழிபெயர்ப்பு வேலைகளையும் பார்க்க முடிந்தது. விட்டுப்போன சீரியல்களையும் (முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தென்றல் ஆகியவை) பார்த்துக் கொள்ள முடிந்தது.
இண்டேன் கேஸ் புக்கிங் செய்தல்
இப்போதெல்லாம் கேஸ் புக்கிங் செய்வது எளிமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு சிலிண்டர் தரும் கம்பெனிக்கு போன் செய்யும் தொல்லை இல்லை. இண்டேனின் மையப்படுத்தப்பட்ட சேவை மையத்துக்கு போன் செய்தால் போதும். என்ன, அதை செல்பேசி மூலமாகத்தான் செய்ய வேண்டும்.
நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் புக் செய்யலாம். இண்டெர்-ஆக்டிவ் முறையில் அது நிகழ்கிறது. முதன் முறையாகச் செய்யும்போது, உங்களுக்கு சிலிண்டர் தரும் ஏஜென்ஸியின் ஏதேனும் ஒரு டெலிஃபோன் எண்ணை அழுத்தச் சொல்வார்கள். பிறகு அவர்களே கம்பெனியின் பெயரைக் கூறி, சரி பார்ப்பார்கள். பிறகு உங்கள் பயனர் எண்Nணை அழுத்த வேண்டும். அதையும் சரிபார்த்த பிறகு, உங்கள் புக்கிங்கை ஏற்று புக்கிங் எண்ணைக் கூறி, பிறகு அதையே எஸ்.எம்.எஸ் ஆகவும் அனுப்புவார்கள். தேவைப்பட்டால் உங்கள் செல்பேசி எண்ணையே ரிஜிஸ்தர் செய்து கொள்ளலாம். ஆனால் அடுத்த முறைக்கு அதே செல்பேசியிலிருந்துதான் புக் செய்ய வேண்டும். இரண்டே ஸ்டெப்புகளில் உங்கள் புக்கிங் நடந்து முடிந்து விடும்.
இதில் நான் இடைஞ்சலாகப் பார்ப்பது செல்பேசி தொலைந்து போனால் வரும் சிக்கல்களே. அவற்றுக்கும் ஏதேனும் வழிவைத்திருப்பார்களாக இருக்கும். இப்போது நல்ல விஷயம் என்னவென்றால், டெலிவரி பையன்கள் சிலிண்டர்களை டீக்கடைகளுக்கு தரும் ஓல் பஜனை வேலைகள் நடக்காது. நமது புக்கிங்கை சிலிண்டர் தரும் வரைக்கும் மானிட்டர் செய்கிறார்கள்.
ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்குமா? அதை இயக்கத் தெரியாதவர்கள் கதி?
பேரறிவாளன் ஆகியோருக்கான தூக்கு தண்டனை
எப்போதோ பைசல் செய்திருக்க வேண்டிய விஷயம். அப்படி இப்படி என எல்லோருமாக இழுத்து விட்டார்கள். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதோ அல்லது ஆயுள் தண்டனையாக அதை ஆக்குவதோ உடனடியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். 20 ஆண்டுகள் எல்லாம் டூ மச்.
அது என்ன எல்லோரும் சோனியா காந்தி மனது வைக்க வேண்டும் என்கிறார்கள்? ராஜீவ் மட்டுமா கொல்லப்பட்டார்? கூடவே பலரும் இறந்தார்கள்தானே. அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலும் தேவைதானே. யாருமே இதை யோசித்ததாகத் தெரியவில்லையே.
எனக்குள்ள ஒரே வருத்தம் என்னவென்றால், முதல் குற்றவாளியான பிரபாகரன் தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்ததுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
23 hours ago
13 comments:
கேள்வி பதில் பதிவு வாராவாரம் தவறமால் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பிரசுரம் ஆவது போல் நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவையும் பதிவாக திங்கள் அன்று வெளிவருமாறு செய்தால் நன்று.
With respect to the Indane gas booking, once you book the cylinder once, you can easily book then on by just sending REFILL to the IVRS no. I just verified this 2 times so far.
Regards
Venkatramanan
@வெங்கடரமணன்
நானும் அதையேதான் கூறுகிறேன். ஆனால் அந்த செல்பேசி தொலைந்தால் என்ன செய்வது? ஆப்ஷன் 2-ஐ உபயோகிக்க வேண்டியிருக்குமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்குமா? அதை இயக்கத் தெரியாதவர்கள் கதி?//
Booking Process
* Book Gas Through WEB
* Book Gas Through IVRS
* Book Gas Through SMS
kindly click the following link for full details.
http://www.tomogas.com/iocl/BookingProcess.aspx
நக்கீரன் பாண்டியன் இந்த மெயிலையும் அனுப்பியுள்ளார்.
Sir,
If mobile phone is broken or missed , one can get dummy sim-subscriber identity module- form the mobile service provider with the original -msisdn-unique mobile number alredy used -.the new dummy sim will be paired to your original mobile number and can be used in any new mobile instrument.Hereafter the gas booking via sms will be done as ususal as the server verifies the mobile number only.
with regards,
pandiyanakkiran.
நன்றி நக்கீரன் பாண்டியன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிருஷ்ண ஜெயந்தி
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை அறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மாமதீ! மகிழ்ந்து ஓடி வா.
_பெரியாழ்வார்.
6.DO YOU THINK ANNA HAZARE'S ANTI-GRAFT CRUSADE WILL BE RESOLVED SATISFACTORILY?
7.DO YOU SEE GOLD PRICES HEADING FOR A CORRECTION IN NEAR FUTURE?
8.AFTER RATING DOWNGRADE, IS THE US NOW LOOKING FOR AN OVERNIGHT MIRACLE?
9.SHOULD ALL POLITICAL PARTIES CLARIFY THEIR STAND ON JAN LOKPAL BILL?
10.IS THE EUROZONE DEBT CRISIS A BIGGER WORRY THAN US?
அன்புள்ள தென்காசி,
பெரியாழ்வார் பாசுரப் பகிர்வுக்கு நன்றி...
land line kum gas book pannalaam.PCO vilum book panna vasathi undu.
அவர்கள் குற்றமிழைத்ததற்கு தண்டனையை சிறைத்தண்டை ரூபத்தில் அடைந்துவிட்டார்கள்.
அவர்களை மனிதாபிமான நோக்கில் விடுதலை செய்வதுதான் சரியானது என்பது என் கருத்து. அவர்கள் வெளியே வந்து இது போன்று ஒரு வேலையை செய்யப்போவதில்லை. செய்வதற்கு வாய்ப்பும் இல்லை. அமைப்பும் இல்லை.
ஆகவே அவர்களை விடுதலை செய்வதில் தவறில்லை.
http://pagadu.blogspot.com
ஒரு முறை வீடு மாறி விட்டு இண்டேன் கேஸ் கனெக்ஷனை மாற்றுவதற்குள் படத பாடு படுத்தி விட்டார்கள். ஆதி காலத்தில் அம்மா அவர் பெயரில் வாங்கி விட்டார். கலியுகத்திற்கு தகுந்த ஐடி ப்ரூஃப் எதுவும் இல்லை எனக்கூறி மாற்றித் தரமாட்டேனென்று அடம் பிடித்து விட்டார்கள். பேங்க பாஸ்புக்கை அட்ரஸ் ப்ரூஃப் ஆக ஏற்க மாட்டார்களாம். ரேஷன் கார்டையும் ஏற்கமாட்டார்களாம், பிறகு ஏதேதோ செய்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. இந்த ல்ட்சனத்தில் 4 ஸிலிண்டர் தான் இனி வருடத்திற்கு கிடைக்குமாம்! என்ன கொடுமை சரவனா? அரசாங்கத்தால் அத்தியாவசிய பொருளுக்குக் கூட மக்கள் தேவைக்கேற்ப கொடுக்க முடியலைன்னா நாம ஏன் எல்லாத்துக்கும் வரிகட்டுறோம்னு தெரியலை..
@ஹேராம்
கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம். கிட்டத்தட்ட 50%. இதனாலேயே இதில் இத்தனை தில்லுமுல்லுகள் நடக்கின்றன.
நான் இது பற்றி ஏற்கனவேயே எழுதியுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/03052009.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
///கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம்/// இருந்து விட்டுப் போகட்டுமே! அத்தியாவசிய தேவைகளின் அளிப்பை அரசுதான் சீராக அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஒன்றின் கண்டுபிடிப்பிற்கு முனைந்து மக்களிடம் அதை செலுத்த வேண்டும். இவர்கள் பெட்ரோலியத்திற்கு மாற்று கண்டுபிடிக்க மாட்டார்கள், சப்சிடியையும் குறைப்பார்கள், மக்களாகவே மின்சார அடுப்பு (இண்டெக்ஷன்) வாங்கி சமைத்தால் மின்சார கட்டணத்தையும் கட்டுக்குள் வைக்க மாட்டார்கள். மிடில்க்ளாஸ் என்ன தான் செய்வதோ??
Post a Comment