8/23/2011

திமுக அரசின் கோமாளித்தனமான ஆணை ரத்தானது மனதுக்கு நிறைவைத் தருகிறது

இனி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இனி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின் பொழுது தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதை ரத்து செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எனவே வழக்கம்போல் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இச்செய்தி எனது மனதுக்கு நிறைவைத் தருகிறது. புலவர்களை கேட்டுத்தான் தான் அம்மாதிரி செய்ததாக கருணாநிதி அவர்கள் இப்போது முனகி வருகிறார்.
எனது இப்பதிவில் குறிப்பிட்டது போல, “தமிழ்ப்புத்தாண்டு அதனுடைய சரியான தினத்துக்கு வைக்கப்படுமா? இந்துக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கலைஞர் தோற்றதற்கு நான் மகிழ்வது இந்த விஷயத்துக்காகவும்தான்”, என நான் அப்போது வைத்த கேள்விக்கு ஜெயலலிதா அவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

அன்புடன்,

டோண்டு ராகவன்

88 comments:

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

நண்பரே இந்த லிங்கையும் பாருங்கள் http://yogicpsychology-research.blogspot.com

குலசேகரன் said...

ஒரு எக்ஸ்ட்ரா விடுப்பு அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு. தை முதனாள் என்றால் பொங்கலுக்கும் கொடுக்கும் விடுமுறையோடு புத்தாண்டு விடுமுறையும் சேரும். இப்பொது தனித்தனியாக.

மு.சரவணக்குமார் said...

தமிழ் வருடப் பிறப்போடு இந்துக்களை ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்?

அந்தக் காலத்தில் இந்து என்கிற மதமே கிடையாதே?

சைவத்துக்கு வைணவம் குலவைரியாக இருந்த வரலாறெல்லாம் உங்களுக்கு தெரியாதா?

பௌத்தமும்,சமணமும் வந்த பின்னர்தானே பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தார்கள் இந்த இரு பிரிவினரும்.

மதகுருக்களின் பிடியில் சிக்கிய அரசர்களைப் போல இப்போது இந்த அம்மையார் உங்களவர்களுக்கு வாய்த்திருக்கிறார்.

கொண்டாடுங்கள்...காலம் காலமாய் தமிழனின் தலையில் மஞ்சள் அரைத்தே வாழ்ந்தவர்கள்தானே...மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கொண்டாடித் தீருங்கள்.

Unknown said...

தான் யார் என்ற புரிதல் இல்லாமல்,சூழ்ச்சி சக்திகளை அறியாமல் தமிழன் மடையனா இருக்கிறவரைக்கும் மிளகாய்,மஞ்சள், மல்லி எல்லாமே அறைப்பார்கள் சரவணகுமார்.

வஜ்ரா said...

தமிழனின் தலையி ல் மஞ்சள், மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, லவங்கம், பட்டை, கிராம்பு என்று அனைத்தையும் அரைத்தது யார் என்று தெரியாதாக்கும்! அதுக்குத் தான் சொல்றது...மண்டையில மசாலா வேண்டும் என்று!

Indian said...

//"திமுக அரசின் கோமாளித்தனமான ஆணை ரத்தானது மனதுக்கு நிறைவைத் தருகிறது"//

ஏன் அது கோமாளித்தன ஆணை என்று சொல்ல முடியுமா?

Indian said...

//புலவர்களை கேட்டுத்தான் தான் அம்மாதிரி செய்ததாக கருணாநிதி அவர்கள் இப்போது முனகி வருகிறார்.//

புலவர்களா அறிஞர்களா?

D. Chandramouli said...

There was no reason for any government to tinker with the age-old beliefs and customs. Let the government focus on real development, generation of more electricity, more jobs, less unemployment etc. instead of renaming streets, states, or changing the new year date. It looked as though JJ was bent on reversing the earlier government's decisions, but on Chithirai, I have no hesitation to give thumbs up to JJ.

Philosophy Prabhakaran said...

என்னுடைய மைனஸ் ஓட்டை பதிவு செய்து இந்த இணைப்பை உங்கள் படிப்பினைக்காக அளிக்கிறேன்...

http://puduvairamji.blogspot.com/2011/08/blog-post_23.html

thenkasi said...

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நல்ல முடிவினை பெருவாரியான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

Simulation said...

தமிழர்கள் "பொங்கல்" தவிர என்னென்ன பண்டிகைகள் கொண்டாடலாம், இணையத் தாசில்தார்களின் சான்றிதழ் பெறுவதற்கு? - சிமுலேஷன்

Unknown said...

மனு தர்ம ”மசாலா” எங்களுக்கு தேவையேயில்லை.மசாலா வேண்டுமென்றால் பிலாசபி பிராபகரன் கொடுத்துள்ள இணைப்பை பார்க்கவும்.சித்திரை தொடங்கும் அறுபது வருடங்கள் எப்படி பிறந்தது?ஆபாசத்தின் உச்சகட்டம்.இதற்கு மேல் வேண்டாம்.

thenali said...

//தமிழ் வருடப் பிறப்போடு இந்துக்களை ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்?"
மு.சரவணக்குமார்


ஆம்,இந்துக்கள் என்று சொல்வதைவிட தமிழர்கள் என்று சொல்வதே சிறந்தது.
தமிழ் வருடப்பிறப்பு அணைத்து தமிழர்களுக்கும் உள்ளது தானே . //

இந்துக்கள் சித்திரை கனி எனக் கொண்டாடுகிறார்கள். மற்ற மதத்தவர் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா?

இப்படித்தான் பொங்கல் என்ற இந்து பண்டிகையை தமிழர் திருநாள் என கதை விடுகிறார்கள். ஆனா எந்த கிருத்துவரோ அல்லது முகமதியரோ சூரியனுக்கோ அல்லது மாட்டிற்கோ நன்றி சொல்ல தயாரில்லை! (அதில் எந்த தவறுமில்லை).

dondu(#11168674346665545885) said...

ஆபாசம் என்பதெல்லாம் இக்கால என்ணங்களை பழங்காலத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பு கூறுவது. அது காரியத்துக்காகாது.

திமுக அரசின் ஆணை கோமாளித்தனம் என்பதை இதையெல்லாம் வைத்து மறைக்க இயலாது.

இந்துக்களின் பஞ்சாங்கத்தில் அவர் கைவைக்க என்ன உரிமை அவருக்கு?

தைரியம் இருந்தால் மற்ற மதங்களின் நாட்காட்டிகளில் போய் கைவைக்கட்டுமே. வெட்டிவிடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ConverZ stupidity said...

// Indian said...
//"திமுக அரசின் கோமாளித்தனமான ஆணை ரத்தானது மனதுக்கு நிறைவைத் தருகிறது"//

ஏன் அது கோமாளித்தன ஆணை என்று சொல்ல முடியுமா?//

இனிமேல் சிற்றப்பனை அப்பான்னு கூப்பிட அரசானை போட்ட எப்படி இருக்குமோ அப்படி இருந்தாதால்.. அது முட்டாள்தனமாக மட்டும் இல்லை, மு.க.-வின் ஆணவத்தை, பதவி மமதையும் சேர்த்தே பிரதிபலித்தது.

ConverZ stupidity said...

//தைரியம் இருந்தால் மற்ற மதங்களின் நாட்காட்டிகளில் போய் கைவைக்கட்டுமே. வெட்டிவிடுவார்கள்.//

எல்லாவற்றையும்...

periyar said...

//புலவர்களை கேட்டுத்தான் தான் அம்மாதிரி செய்ததாக கருணாநிதி அவர்கள் இப்போது முனகி வருகிறார்.//

புலவர்கள் என்றால் யார்?கவிதாயினியா?

aotspr said...

\\ “தமிழ்ப்புத்தாண்டு அதனுடைய சரியான தினத்துக்கு வைக்கப்படுமா? இந்துக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கலைஞர் தோற்றதற்கு நான் மகிழ்வது இந்த விஷயத்துக்காகவும்தான்”, என நான் அப்போது வைத்த கேள்விக்கு ஜெயலலிதா அவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்//.

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown said...

தீபாவளி ஆரியப் பண்டிகை! தமிழர்கள் அதை கொண்டாடகுடாது என்று கலைனர் ஏன் தடை செய்யவில்லை? தீபாவளி செலவை நினைத்தால் இப்போதே கலக்கமாக இருக்கிறது!

bala said...

//தமிழனின் தலையில் மஞ்சள், மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, லவங்கம், பட்டை, கிராம்பு என்று அனைத்தையும் அரைத்தது யார் என்று தெரியாதாக்கும்! அதுக்குத் தான் சொல்றது...மண்டையில மசாலா வேண்டும் என்று//
வஜ்ரா அய்யா,
மசாலா இல்லாத தமிழனின் மண்டை வாடகைக்கு விடப்பட்ட அம்மிக்கல்லா அல்லது மிக்ஸியா அவனவன் வந்து மசாலா அரைத்துப் போக?
பாருங்களேன்,முதலில் வடநாட்டான் வட் மொழி பேசி ஆரிய மோகினி ஆட்டம் ஆடி மணடையில் ஆரிய மசாலா அரைத்தானாம்.
பிறகு உருதும் இல்லாத தமிழும் இல்லாத மொழி பேசிய துலுக்கர்கள் முஜ்ரா ஆட்டம் ஆடி கஜல் பாட்டுப் பாடி தமிழனை மயக்கி மண்டையில் முகலாய மசாலா அரைத்தார்கள்.
அப்புறம் வெள்ளைக்காரன் ஆங்கில காபரே மோகினி ஆட்டம் ஆடி மசாலா அரைத்துப் போனான்,
அப்புறம் நீதிக்கட்சி திருடர்கள் + பெரிய வெள்ளை தாடி திராவிட மோகினி வேஷம் போட்டு ரெகார்ட் டான்ஸ் ஆடி திராவிட மசாலா அரைக்க ஆரம்பித்தாங்க இன்னும் ஷோக்கா அவங்க வாரிசு கும்பல் அரைச்சிட்டிருக்காங்க.
இப்படி இத்தனை மசாலா அரைத்தும் மசாலா உட்புகா மண்டையுடைய திராவிட தமிழ் மண்டையனை "விளாங்கா மண்டையன்" அல்லது "விளங்கா மண்டையன் என்று அழைத்தால் என்ன? R . Elan அய்யா தான் விளக்கமாக சொல்லவேண்டும்.

பாலா

மு.சரவணக்குமார் said...

அறுபது தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் எல்லாமே சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது.

தமிழ் வருடங்களுக்கு எதற்கு அய்யா சமஸ்கிருதப் பெயர்கள்?இந்துக்களுக்காக சந்தோஷப் படும் நீங்கள் அதை ஏன் யோசிக்கவே இல்லை?

தமிழில் பேர் வைக்க மாட்டோம், தமிழில் அர்ச்சனை செய்ய மாட்டோம்,சமஸ்கிருதம் தேவபாஷை,தமிழ் நீசபாஷை....என்ன கொடுமை இது!

கேட்டால் இந்துக்களின் மனம் மகிழ்கிறது என பூசி மொழுகுவீர்கள்.

தன் பிள்ளைக்கு பக்கத்து வீட்டுக்காரனின் இனிஷியலை வைப்பது போலிருக்கிறது உங்களின் மதாபிமானம்.

காவ்யா said...

இந்துக்களின் பஞ்சாங்கத்தில் அவர் கைவைக்க என்ன உரிமை அவருக்கு?

தைரியம் இருந்தால் மற்ற மதங்களின் நாட்காட்டிகளில் போய் கைவைக்கட்டுமே. வெட்டிவிடுவார்கள்//

இந்துக்களுக்கல்ல புத்தாண்டு. தமிழர்களுக்கு.

இந்துக்கள் பஞ்சாங்கம் என்று சொல்வது தப்பு. பிராமணர்களின் பஞ்சாங்கப்படியே சித்திரை 1 புத்தாண்டு. அது பிராமண்ர்களுக்குப் புத்தாண்டு என்றுதான் இருக்கவேண்டும். அதையேன் மொத்த தமிழர்கள் மேல் திணிக்கவேண்டும்? அப்படியே பிற இந்துத் தமிழர்களுக்கென்றாலும் அது அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் சேர்த்தே. இந்துக்கள் புத்தாண்டு என்றிருக்க வேண்டும். கருனானிதி இந்துக்கள் புத்தாண்டில் கை வைக்கவில்லை. தமிழர் புத்தாண்டைத்தான் தமிழர்கள் பஞ்சாங‌கப்படி மாற்றினார்!

வேண்டுமென்றால் பிராமணர்கள் தாங்கள் தனியாக சித்திரை 1 யே புத்தாண்டாகக் கொண்டாடட்டும். அப்படித்தான் செய்தும் வருகிறார்கள். அதை எவரும் தடுக்கவில்லை. தனியாகப்பூணுல், தனியாக வடமொழி மந்திரங்கள் என்று நீங்கள் இருப்பதை யாரும் தடுக்கவில்லை. இருந்துவிட்டுப்போங்கள். ஏன் , தமிழர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் தலையிடுகிறீர்கள் ?

இசுலாமியரும் கிருத்தவரும் எங்கள் மதப்பஞ்சாங்கத்தில் இன்ன தேதிதான் புத்தாண்டு. இதைத்தான் எல்லாத் தமிழர்களும் ஏற்க வேண்டும் இதுவே தமிழ்ப்புத்தாண்டு என்றார்களா ? இல்லை.

உங்கள் பஞ்சாங்கம் வேறு. அது பிராமணப்புத்தாண்டு சித்திரை 1. எங்கள் பஞ்சாங்கத்தின் படி தை 1தான் புத்தாண்டு. உங்கள் மீது நாங்கள் திணிக்கவில்லை. எங்கள் மீது திணிக்காதீர்கள். ஜெயலலிதா என்ன பிராமணருக்கு மட்டுமா முதலமைச்சர் அவாளுக்கு வேண்டியதைத் தமிழர்கள் கலாச்சாரம் என்று பீலா விட ?

காவ்யா said...

தமிழர்கள் என்றால் பிராமணர்கள் எழுதிய பஞசாங்கத்தை ஏற்றுக்கொண்ட இந்துக்கள் மட்டுமா ? கிருத்துவர்கள் முசுலீம்க்ள் மற்றும் பலர் எல்லாம் சேர்ந்துதானே தமிழர்கள் ?

சித்திரை 1 இந்துக்கள் புத்தாண்டு? ஓகே. அது எல்லாத்தமிழர்களுக்கும் சேர்த்து தமிழர் புத்தாண்டாக எப்படி ஆகும் ?

ஏன் தமிழர் புத்தாண்டை இந்துக்கள் பஞசாங்கத்திலிருந்து எடுக்க வேண்டும்? தமிழறிஞர்கள் காட்டும் வழியில்தானே எடுக்கவேண்டும்?

இல்லை...எல்லாத்தமிழர்களுக்கும் பிராமணர்கள்தான் வழிகாட்டியா ?

Unknown said...

சித்திரை நாள் கொண்டாடுவது பிராமனீயம் எனில், எந்த வடநாட்டுப் பண்டிகைகளும் இங்கு தடை செய்யலாமே! கூடுதலாக அந்நிய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய மத பண்டிகைகளையும்!

புதிதாக புலவர்களை அழைத்து சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து தமிழ் பண்டிகைகளை கண்டுபிடித்து , இவைகளைத்தான் கொண்டாட வேண்டும்! என ஆணை பிரப்பிக்கலாமே!

ஏன் தமிழ் புத்தாண்டை மட்டும் தண்டிக்க வேண்டும்!
தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாகக் கொண்டாடும் சித்திரை நாளாகவே தொடர்வது தண்டனைக்குரிய செயலா என்ன?

பண்டிகைகளை அரசாங்கம் கட்டாயப்படுத்தி மாற்றி அமைக்கலாம் என நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல!

கலைனரின் முதல் ஆட்சிக்காலத்தில் தான், அதுவரை தண்டனைக்குரிய செயலான மதுக்குடி, கண்ணியத்துக்குரிய செயலாக மாற்றப்பட்டது என்பதை சபையோருக்கு நினைவுட்டுகிறேன்!

மதுவிலக்கை நீக்குமாறும், புத்தாண்டை மாற்றுமாறும் மக்கள் கும்பலாக கலைனரிடம் சென்று முறையிட்டதாக சரித்திரம் இல்லை! ஆனால் மின்வெட்டை அகற்றுங்கள் என்று மக்கள் கதறியும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்தார் என்பதற்கு சரித்திரம், பூகோளம் ..அதாங்க கெமிஸ்ட்ரி ...உண்டு!

முதலில் மாற்றியவர் துக்ளக்கா இல்லை அடுத்து வந்து திருத்தியவரா?

periyar said...

//அதையேன் மொத்த தமிழர்கள் மேல் திணிக்கவேண்டும்? //

தமிழர்கள் என்றால் வெள்ளை தாடியின் வீண் திராவிடம் பேசி பிரிவினை வளர்க்கும் கருப்பு சட்டை வெறியர்களும் தி மு க சொறியர்களும் தானா?காலம் காலமாக கடை பிடிக்கப்படும் வழக்கத்தை மாற்ற இந்த மூஞ்சிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

காவ்யா said...

//சித்திரை நாள் கொண்டாடுவது பிராமனீயம் எனில், எந்த வடநாட்டுப் பண்டிகைகளும் இங்கு தடை செய்யலாமே! கூடுதலாக அந்நிய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய மத பண்டிகைகளையும்!//

ரம்மி சார், உங்களுக்கு நான் சொல்வது புரிபடவில்லை.

சித்திரை 1 ஐ இந்துக்கள் பண்டிகையாக கொண்டாட யாரும் தடுக்கவில்லை. அதை அனைத்து இந்துக்களும் பிராமணப்பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொண்டாடி வருகிறார்கள். தமிழகரசு தை 1 தான் புத்தாண்டு என்றாலும் இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் சித்திரைதான்.

பிர்ச்சினை எங்கென்றால், சித்திரை 1ஐ தமிழ்ப்புத்தாண்டு எனச்சொல்ல வேண்டும் எனபதுதான். தமிழர்கள் என்றால், பிராமணரும் மற்ற இந்துக்களும் மட்டும்தானா ? கிருத்துவர் இசுலாமியர் தமிழரில்லையா ? அவர்கள் ஏன் ஒரு இந்துப்பண்டிகையைப்போய் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டும் ? தமிழரறிஞரகள் காட்டும் நாளை ஏற்றுக்கொள்வதற்கு, இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் ஏன், உங்களுக்கும்கூட தடையிருக்காதல்லவா ?

அன்னிய தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்ப்பட்ட பண்டிகைகளை அந்தந்த மதத்தினர்தானே கொண்டாடுகிறார்கள் ? ரம்ஜான் இந்துக்கள் கிருத்துவர்கள் மீது திணிக்கப்படுகிறதா ? கிருஸ்துமஸ் உங்கள் மீதோ, இசுலாமியர் மீதோ திணிக்கப்படுகிறதா ? இவற்றுள் எவையேனும் தமிழர் திருநாள் என்று திணிக்கப்படுகிறதா ? இல்லையே ?

அப்படியிருக்க, ஏன் இந்த இந்துப்பண்டிகையான சித்திரை 1 அனைத்துத் தமிழர்கள் மீது திணிக்கப்படவேண்டும் ? இதற்கு ஏன் அரசு துணை போக வேண்டும் ?

செகுலரிசம் என்று வேறிடங்களில் கத்துபவர்கள் இங்கே ஏன் கத்தவில்லை நண்பரே ?

dondu(#11168674346665545885) said...

//பிர்ச்சினை எங்கென்றால், சித்திரை 1ஐ தமிழ்ப்புத்தாண்டு எனச்சொல்ல வேண்டும் எனபதுதான். தமிழர்கள் என்றால், பிராமணரும் மற்ற இந்துக்களும் மட்டும்தானா ? கிருத்துவர் இசுலாமியர் தமிழரில்லையா ? அவர்கள் ஏன் ஒரு இந்துப்பண்டிகையைப்போய் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டும் ? தமிழரறிஞரகள் காட்டும் நாளை ஏற்றுக்கொள்வதற்கு, இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் ஏன், உங்களுக்கும்கூட தடையிருக்காதல்லவா ?//
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சித்திரை முதல் தேதிதான் பாரம்பரியமாக தமிழர் புத்தாண்டு.

மதத்திலிருந்து அதை பிரிக்கவியலாது. அதிலும் இந்துக்களை திருடர்கள் என்று சொன்ன பெருந்தகைகள் அதை செய்யக் கூடாது.

தை முதல் தேதி கூட சங்கராந்தி என்னும் பொங்கல். அதுவும் இந்து பண்டிகையே. கோமாளித்தனமாக மார்றியவர்களுக்கு ஒரு தகுதியும் இல்லை, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காவ்யா said...

கரெக்ட். தை முதல் நாளும் இந்துக்களின் பண்டிகை. பொங்கலும் சித்திரை முதனாளும் தமிழர்களுக்கு பொதுவான பண்டிகை நாளாக எடுக்கக்கூடாது. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் இந்துக்கள் கொண்டாடத்தான் போகிறார்கள். தமிழ் இசுலாமியர்களும் கிருத்துவரும் பொங்கலை - அது தமிழர் திருனாள் என்று சொல்பவர் சொன்னாலும் - கொண்டாடுவதில்லை.

அரசு இவ்விரண்டு நாட்களையும் இந்துகளிடமே கொடுத்துவிட்டிருக்கலாம். தமிழறிஞர்கள் என்றால் அவர்களும் இந்துக்களே. கருனானிதி சொல்லும் அந்த அறிஞர்களில் எவரும் இசுலாமியரோ கிருத்துவரோ இல்லை. எனவே அவர்கள் கூற்றும் மதம் சார்ந்ததே.

இன்றைய அரசாவது அந்த தப்பைச்செய்யாமலிருந்திருக்கலாம். தமிழ்ப்புத்தாண்டு என்று தேவையேயில்லை. தமிழர் திருனாள் என்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதற்கு ஒரு வேற நாளை தேர்ந்தெடுத்துத்தான் அறிவிக்கவேண்டும். பலமானிலங்களில் 'மானில நாள்' என்று அவர்கள் தனிமானிலமாக அறிவிக்கப்பட்ட நாளைக்கொண்டாடுகிறார்கள்.

அரசு இந்துக்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் என்பது தெரிகிறது: அது கருனானிதியானாலென்ன ஜெயலலிதாவனாலென்ன ?

Pseudo-secularism !

காவ்யா said...

//தமிழர்கள் என்றால் வெள்ளை தாடியின் வீண் திராவிடம் பேசி பிரிவினை வளர்க்கும் கருப்பு சட்டை வெறியர்களும் தி மு க சொறியர்களும் தானா?காலம் காலமாக கடை பிடிக்கப்படும் வழக்கத்தை மாற்ற இந்த மூஞ்சிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?//

தமிழர்கள் என்றால் மதம், குலம், என்ற பிரிவினைகள் இல்லாதபடி, எவரெல்லாம் தமிழ் மொழி பேசி, தமிழை விரும்பி, தன் தாய்மொழியாகக்கொண்டு தமிழ்நாட்டில் வாழ்கிறார்களோ அவர்கள்தான். இதன்படி, பிராமணரும், இசுலாமியரும், கிருத்துவரும், பிராமணரல்லாத ஹிந்து ஜனங்களும் தமிழர்களே. திராவிடம் பேசுபவரும் பேசாதவரும் வெள்ளைத்தாடி வைத்தவரும் வைக்காதவரும் கருப்புச்சட்டை போட்டவரும் போடாதவரும் எல்லாரும் தமிழர்களே தமிழைத்தாய்மொழியாகக்கொண்டு, அதை விரும்பி வாழ்பவராக மட்டும் இருந்தால் போதும். தமிழ்ப்புத்தாண்டு என்று சொன்னால் அது இப்படிப் பிரிவினையில்லா மக்களைப் பிரித்து விடும். தமிழ்ப்புத்தாண்டே வேண்டாம். அதை தமிழிந்துக்கள் மட்டும் கொண்டாடினால் போதும் அரசு தலையிடத்தேவையில்லை.

periyar said...

// வெள்ளைத்தாடி வைத்தவரும் //

இல்லீங்க.பெரிய வெள்ளை தாடி கன்னடம்.ஆகையால் கருப்பு சட்டையினர் வெள்ளை தாடியின் பிள்ளைகளானதால் கன்னடர் ஆகின்றனர்;தமிழர்கள் அல்லர்.

virutcham said...

@காவ்யா
தை முதல் நாளை இந்துக்கள் அல்லாதோர் உழவர் திருநாள் என்றோ அறுவடை திருநாள் என்றோ கொண்டாடுகிறார்களா ? அதுவும் பொங்கல் பானை வைத்து சூரியனை தொழுது இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே ஒரு காரணத்துக்காக கொண்டாடப்படும் பண்டிகைக்கு எத்தனை காரணங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே.
அதற்கு சித்திரையை கொண்டாடக் கூடாது என்று சொல்ல என்ன அவசியம்?

தை முதல் நாளை தமிழர் திருநாளாக நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் அதற்கு ஒரு அரசாங்க தீர்மானம் வேண்டும் என்று இந்துக்கள் அல்லாதோர் யாராவது போராடினார்களா அல்லது அறிக்கை விடுத்தார்களா ? அப்படி யாராவது விரும்பினால் அதற்கு அரசு வந்து கொண்டாடித் தர வேண்டுமா என்ன ? எல்லோரும் கொண்டாடத் துவங்கினால் தானாக அது பழக்கமாக மாறி விடாதா? பிறகு யார் தடுக்க முடியும்?

தை முதல் நாளை விளக்கு ஏற்றி தமிழ் புத்தாண்டாக கொண்டாட விடுக்கப் பட்ட அழைப்புக்கு சென்ற ஆண்டுகளில் எத்தனை இந்துக்கள், இந்துக்கள் அல்லாதோர் வீட்டில் இருந்து விளக்கேற்றி ஆதரவு அளிக்கப்பட்டது ?
அப்புறம் எதுக்கு இந்த வீண் விதண்டாவாதம்?
தமிழர்கள் கொண்டாடலாம் என்று அனுமதி அளிக்கப்பட பண்டிகைப் பட்டியலைக் கொஞ்சம் தந்தா தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கலாம்.

இது என்ன இரணிய ராஜ்யமா, நாராயணன் நாமத்தை சொன்னால் சிரச்சேதம். என் நாமத்தை தான் சொல்ல வேண்டும் என்று சொல்ல?
ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தை மதிப்பது. சித்திரை, தை முதல் நாள் தினங்களில் தமிழர்கள் வீடுகளில் சென்று பார்த்து யார் கொண்டாடுகிறார்கள் என்று கணக்கெடுத்து பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

காவ்யா said...

விருட்சம்.

சித்திரையை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் தடுக்கப்படவில்லை. கருனானிதி என்ன சொன்னாலும் அதைத் தமிழ்ப்புத்தாண்டாகத்தான் தமிழ் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவார்கள். அதுவல்ல என் பிரச்சினை. சித்திரை 1 அல்லது தை 1ஐ ஏன் அரசு தமிழ்ப்புத்தாண்டு என அறிவிக்க வேண்டும் ? கருனானிதி செய்வாராம். ஜெயலலிதா மாற்றுவாராம். இவர்கள் வெல் டன் என்பார்களாம். ஏன் இந்த வேலையத்த வேலை ஒரு மதம்சாரா அரசுக்கு ?

தமிழர்கள் என்றால் இந்துக்கள் மட்டுமா ? தமிழ்நாட்டில் வாழும் கிருத்துவரும் இசுலாமியரும் தமிழர்கள் இல்லையா ? அவர்கள் ஏன் தமிழ்ப்புத்தாண்டை பிராமணப்பஞ்சாங்கத்தின் படி ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? என்பதுதான் என் கேள்வி. உடனே கிருத்துவரும் இசுலாமியரும் அன்னியர்கள் என்று விடாதீர்கள். அவர்கள் தமிழர்கள் அன்னிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள். எப்படி தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள் அன்னிய மதமான வைதீக மதத்தை ஏற்றுக்கொண்டார்களோ அப்படி.

இன்னொரு கேள்வி: இந்துக்கள் என்றால கட்டாயமாக பிராமணப்பஞ்சாங்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டால்தானா ? ஏன் அவர்கள் கருனாணிதி அல்லது கருனானிதி சொல்லும் தமிழறிஞர்கள் சொன்னப் பஞ்சாங்க முறைப்படி தை 1 ஐ ஏற்றுக்கொண்டவர்களாக இருக்ககூடாது? தமிழறிஞர்கள் சொன்னதென்னவென்றால், தமிழர்களுக்கென்ற பஞ்சாங்கம் தமிழகத்தில் வரையப்பட்டது. அதன்படி தை 1யே தமிழ்ப்புத்தாண்டு. சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக வரைந்தவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் அல்ல. அன்னியர்கள். அது வைதீக முறைப்படி வடநாட்டில் வரையப்பட்டது. வைதீக முறைகள் வடவிந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவையே. வைதீக மதம் தமிழ்நாட்டு மதமல்ல. அது கிமு ஒன்றிலேயே வந்துவிட்டது என்று சொல்லிவிட்டால் அது தமிழர்கள்தான் படைத்தார்கள் என்றாகுமா ? பேண்டு சட்டையை நூறாண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அணிந்து வருகிறார்கள். உடனே அது தமிழரின் உடையென்று சொல்லிவிடுவோமா ? சல்வார் கம்மீசை எல்லாரும் அணிகிறார்கள். இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்குப்பின் அது தமிழ்ப்பெண்களில் உடையே எனச்சொல்லிவிடுவீர்களா ?

இரு திணிப்புவேலைகள் இங்கே:
1. அரசு இந்துக்கள் பண்டிகைகளை - பொங்கல், சித்திரை ஒன்று - எல்லாத்தமிழர்கள்மேலும் திணிப்பது.
2. வைதீகப் பிராமணர்கள் தங்கள் பஞ்சாங்கத்தை எல்லாத் தமிழர்களின் மீது திணிப்பது.

இரண்டில் முதலே கொடுமை. அரசைத்தட்டிக்கேட்க முடியாதல்லவா ? Psudo-secularism !

dondu(#11168674346665545885) said...

கருணாநிதி அரசு கோவில்களுக்கும் ஆணை பிறப்பித்தது, சித்திரை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்து பூஜைகள் செய்யக்கூடாது என்று.

எது எப்படியானாலும் ஒரு பாரம்பரியத்தை மாற்ற நினைக்கும் முன்னால் பல முறை யோசிக்க வேண்டும். இந்துக்களை திருடர்கள் எனக்கூறிய பெருந்தகைக்கு அந்த யோசனைகள் எல்லாம் இருந்திருக்க முடியாது.

அவர் செய்த தவறை ஜெயலலிதா சரி செய்தார். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காவ்யா said...

தொன்மை, பாரம்பரியம் என்பதெல்லாம் ஒரு தவறைத் தொடர்ந்து செய்ய பயன்படுத்த உதவும்.
தகுதி உள்ளவந்தான் அத்தவறைச் சரி செய்யவேண்டும்பென்பதும் அத்தவறை அப்படியே விடுவதற்கு ஏதுவாகும்.

கருனானிதி இந்துக்களைத் திருடன் எனச் சொன்னதால் தகுதியில்லெய்ன்றால், வெள்ளைக்காரன் இந்தியர்களைக்காட்டுமிராண்டிகள். இவர்களுக்கு நாம்தான் நாகரிகம் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆங்கில வழிக்கல்வியே அதற்குச் சரியென்றான். அவன் இந்துக்கள் பழக்கங்களை நிறைய மாற்றினான். உடன்கட்டையேறுதல் ஒரு உ.ம்

அவன் தகுதியானவனா ?

உடன்கட்டையேறுதல் தொன்று தொட்டுவரும் ஒரு பாரம்பரியம் அதில் தலையிடக்கூடாதென்றார்கள். ஆனால் வெள்ளைக்காரன் விடவில்லை.

விட்டிருந்தால், இன்றும் பெண்களை எரித்துக்கொன்று கொண்டிருப்பார்கள்.

எனவே தொன்மை, பாரம்பரியம், இன்னார்க்குத்தான் தகுதி என்பதெல்லாம் சால்ஜாப்புக்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்ய.

காவ்யா said...

மக்களின் ஏகோதிபித்த அனுமதியைப்பெற வேண்டுமென்பதும் முழுக்கச்சரியல்ல. மக்கள் என்றுமே கன்செர்வேட்டிவ்கள்தான். அவர்கள் தொன்மையையும் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் என்றுமே போற்றிப்பாதுகாப்பார்கள் தவறேயென்றாலும்.

உலகில் நடந்த சமூக,மத, கலாச்சார சீர்திருத்தங்கள் மக்களின் ஆதரவோடு நிகழ்ந்தவை இல்லை. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து வெற்றிகொண்டே நிகழ்ந்தவை.

இந்து மதத் தொன்மங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் எல்லாம் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழகத்திலும் அப்படித்தான். எனவே அவர்கள் எதிர்க்கிறார்கள்.

virutcham said...

@காவ்யா
தடுக்கவில்லை என்று சொல்வது தவறு. தடுக்க முயற்சி நடந்தது. மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. சித்திரை முதல் நாளில் கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு சில அத்து மீறல்களும் நடந்ததாக செய்திகள் வந்ததே.
மக்களைக் கேட்காமல் மக்களுக்காக என்று ஒன்றை முன் வைத்தால் அதை நிராகரிக்கவோ ஏற்கவோ மக்களுக்கு உரிமை உண்டு.

வைதீகம் என்பது மதம் என்றும் அது அந்நிய மதம் என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்கவில்லை. முதலில் இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளும் அவரவர்க்கென்று சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு இருந்தாலும் அது முற்றிலும் தனித் தனியானவை அல்ல. பல புள்ளிகளில் இணைந்து செல்லுகிறது. அதனால் அந்நிய மதம் என்பது தவறான பார்வை.

அடுத்து வைதீககர்கள் பஞ்சாங்கம் தமிழர்கள் மேல் திணிக்கப்படுவதாக சொல்லுவது. வைதீகர்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் அதை பின்பற்றுகிறார்கள். வேண்டாம் என்பவர்களை யார் தடுத்தார்கள்?

வைதீகம் அல்லாத தமிழ் பஞ்சாங்கம் எங்கே யாரால் பின்பற்றப்படுகிறது என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். அப்படி ஒன்றை பாரம்பரியமாக பின்பற்றி வருபவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தால் அது பழக்கத்தில் இருக்குமே. இப்படி ஒரு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியங்கள் இருக்காதே.

காவ்யா said...

கோயில்களின் கொண்டாடப்படுவது தடுக்கப்பட்டது. ஆனால், நான் 'தடுக்கப்படவில்லை' என்று சொன்னது பொது இந்து ஜனங்கள் தத்தம் வீடுகளில் கொண்டாடப்படுவதை. அதை தடுக்க எந்த சட்டமும் போடமுடியாது. அது சர்வாதிகார ஆட்சியில்தான் முடியும்.

//வைதீகம் என்பது மதம் என்றும் அது அந்நிய மதம் என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்கவில்லை. முதலில் இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளும் அவரவர்க்கென்று சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு இருந்தாலும் அது முற்றிலும் தனித் தனியானவை அல்ல. பல புள்ளிகளில் இணைந்து செல்லுகிறது. அதனால் அந்நிய மதம் என்பது தவறான பார்வை.//

விருட்சம் ! தமிழ்நாட்டில் எத்தனை இந்துப்பிரிவுகள் உள்ளன? எனக்குத்தெரிந்தவை: சைவம் , வைணவம், மட்டுமே. இது தவிர நாட்டார் சிறுதெய்வ வழிபாடுகள். இம்மூன்றுமே வைதீகச்சடங்குகளை ஏற்றுக்கொண்டவை. நாட்டுப்புறத்தில் குறைவாக இருக்கலாமே ஒழிய இல்லையென்று சொல்லலாகாது. எவரும் இவ்வைதீகச்சடங்குகளை வேண்டாமென்று சொல்லவில்லை. இறைவழிபாட்டில் மட்டுமில்லாமல், சமூகச்சடங்குகள் - திருமணம், கருமாதி, புதுவீடுக்குடியேறல், இத்தியாதி - எல்லாவற்றிலும் வைதீகச்சடங்குகள் நீக்கமற நிறைந்துள்ளன. வைதீக மதம் என்று இன்று தனியாகச் சொல்லமுடியாது. அப்படியே சொன்னாலும் ஒரு சில பழமையான வைதீகப்பிராமணர்கள் இருக்கலாம். இவ்வைதீகச்சடங்குகள் தமிழர்களால் எழுதப்பட்டவையல்ல. வைதிக மதக்கொள்கைகள் எவையும் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இந்துமதக்காப்பியங்கள், வேதங்கள், உபனிடத்துக்கள் எவையும் தமிழில் எழுத்பபட்டவை அல்ல. இவையெல்லாம் வட நாட்டில் வாழ்ந்தவர்களாலே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இங்கே வந்தவை. சமஸ்கிருதம் தமிழர் மொழியல்ல. எனவே வைதீகம் அல்லது வைதீகச்சடங்குகள், அல்லது வைதீக மதம் - இவை தமிழைத்தாய்மொழியாகக்கொண்டவருக்கு அன்னியமே.

எனவேதான், கிருத்தவரின் விவிலியமும் இசுலாமியரின் குரானும் எப்படி தமிழ்மக்களுக்கு அன்னியமோ அப்படி வைதீகமும் அன்னியமே. இன்று தமிழர்களில் கோடிக்கணக்காணோரால், விவிலியம் படிக்கப்படுகிறது; குரான் ஓதப்படுகிறது; வைதிக வழிபாட்டு, சமூக முறைகள் அனுஸ்டிக்கபபடுகிறது என்ற காரணத்தால் அவை அன்னியமில்லையென்றாகா. புள்ளிகள் இணைந்தால் அவை ஒற்றுமையாக இருக்கலாம். ஆனால் ஒற்றுமை அப்புள்ளிகள் வேறெங்கோ தோன்றியவை என்பதை மறுக்கமுடியுமா ? சல்வார் கமீஸ் தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையோடு ஒட்டிவிட்டதால் அது தமிழரின் உடையா ? ஆங்கிலம் பேசாத்தமிழரே இல்லயென்றால், அது தமிழரின் தாய்பாசையா ?

காவ்யா said...

//அடுத்து வைதீககர்கள் பஞ்சாங்கம் தமிழர்கள் மேல் திணிக்கப்படுவதாக சொல்லுவது. வைதீகர்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் அதை பின்பற்றுகிறார்கள். வேண்டாம் என்பவர்களை யார் தடுத்தார்கள்?//

திணித்தல் என்பதை எப்படி புரியவேண்டும் விருட்சம் ? குழந்தையின் வாயில் வைத்து மிரட்டினால்தான் திணித்தலா ? இல்லை வாயில் வைக்காமல்" இதைச்சாப்பிடாவிட்டால் அம்மா உங்கூட பேசமாட்டேன்" என்பது மட்டும்தான் திணித்தலா ? இவையெல்லாம் நெகட்டிவான திணித்தல் முறைகள்.

பாசிட்டிவ் என்னவென்றால், "வீட்டில் வேற பண்டமேயில்லை. இதைச்சாப்பிடாவிட்டால் பட்டினிதான் எல்லாரும்" என்பதும் திணித்தலே. குழந்தையுணர்ந்து சாப்பிடும்.

எவரும் வைதீக முறைகளை அனுஸ்டிக்க கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அவையே மேலானவை அவையே மோட்சத்துக்கு வழி காட்டும் என்று 'சொல்லாமல்' சொல்லி அவர்களை அருகே வரவைத்தலும் திணித்தல் ஆகும். அதைத்தான் பிராமணர்கள் செய்தார்கள். பிராமணர்கள் செய்தனைத்தையும் - பெரியார் காலத்துக்குமுன்பு வரை - தமிழர்கள் " ஙே... " என்றுதான் பார்த்தார்கள். வெள்ளையக்கண்டு கருப்பு ஏங்கும் தனக்குள் !

காவ்யா said...

//வைதீகம் அல்லாத தமிழ் பஞ்சாங்கம் எங்கே யாரால் பின்பற்றப்படுகிறது என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். அப்படி ஒன்றை பாரம்பரியமாக பின்பற்றி வருபவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தால் அது பழக்கத்தில் இருக்குமே. இப்படி ஒரு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியங்கள் இருக்காதே.//

விருட்சம்!

அப்படி இருக்கிறதா இல்லையா என்றெனக்குத் தெரியாது. தமிழறிஞர்கள் சொன்னதாக கருனானிதியும் அவர் ஆட்களும் சொல்கிறார்கள். நான் கருனானிதிக்குச் சார்பாக எழுதவில்லை. என் பொதுப்பார்வையில் என்ன படுகிறதே அதைத்தான் எழுதுகிறேன். கருனானிதி சார்பாக பலர் எழுதுகிறார்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்லலாம்.

சித்திரை ஒன்றா தை ஒன்றா என்று எனக்கு கவலையில்ல அது என்னைப்பாதிக்காததால். இந்துக்களுக்குப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லிக்கொண்டு கருனானிதியிடன் சண்டைப்போடுங்கள் அல்லது திட்டுங்கள். தமிழ்ப்புத்தாண்டு என்று மட்டும் சொல்லாதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//சித்திரை ஒன்றா தை ஒன்றா என்று எனக்கு கவலையில்ல அது என்னைப்பாதிக்காததால். இந்துக்களுக்குப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லிக்கொண்டு கருனானிதியிடன் சண்டைப்போடுங்கள் அல்லது திட்டுங்கள். தமிழ்ப்புத்தாண்டு என்று மட்டும் சொல்லாதீர்கள்.//

உங்களுக்கு இதில் தெரியாத விஷயங்கள் பல உண்டு என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

தமிழ் பஞ்சாங்கம் என எனக்குத் தெரிந்து கிடையாது. சித்திரை முதல் தேதியைத்தான் தமிழ் புத்தாண்டு என சொல்லி வந்திருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் அழைப்போம். அது கூடாது என்பதைச் சொல்ல நீங்கள் யார்?

அது கிடக்கட்டும். பிரச்சினைகள் பல இருக்க இதை கையில் எடுத்தது கருணாநிதி செய்த கோமாளித்தனமே. அதுவும் இந்துக்களை திருடர்கள் எனக்கூறிய அப்பெருந்தகை இதை செய்ய முற்றிலுமே அருகதையற்றவர்.

இதுக்காகவே அவரை முக்காடு போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்ததை நான் வரவேற்கிறேன். அதுதான் இப்பதிவின் சாரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காவ்யா said...

//இதுக்காகவே அவரை முக்காடு போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்ததை //

தவறான கணிப்பு. மக்கள் கருனானிதி செய்த இம்மாதிரியான‌ விடயங்களுக்காக அவரைத் தோற்கடிக்கவில்லை. மாறாக அவர் செய்த ஊழலகளுக்காகவும், தன் குடும்பத்தார் ஊழல் செய்து பணம்பெருக்க வசதிகளைச் செய்து கொடுத்ததற்காகவுமே தேர்தலில் அவரை மண்ணக்கவ்வ வைத்தார்கள். பிராமணீயம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு என்றுமே ஆதரவோ எதிர்ப்போ தமிழக மக்கள் கொடுத்தது கிடையாது.

கொடுக்கவேண்டுமென்றால், மதக்கலவரத்தைத் தூண்டி உயிர்ப்பலிகளை உண்டாக்கி அதற்கு கருனானிதியின் கிருத்துவ இசுலாமிய ஆதரவும், இந்துமத எதிர்ப்புமே காரணம் என்று சொல்லிவிட்டால் மக்கள் எதிர் வோட்டு போடுவார்கள். கன்னியாகுமரியில் மண்டைக்காட்டு கலவர‌த்துக்குப்பின், கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப்பின், பி.ஜே.பிக்கு அம்மக்கள் அவ்விருவூர்களிலும் வாக்குகளித்து வெற்றிபெறச் செய்ததைப்போல.

காவ்யா said...

// உங்களுக்கு இதில் தெரியாத விஷயங்கள் பல உண்டு என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். தமிழ் பஞ்சாங்கம் என எனக்குத் தெரிந்து கிடையாது. சித்திரை முதல் தேதியைத்தான் தமிழ் புத்தாண்டு என சொல்லி வந்திருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் அழைப்போம். அது கூடாது என்பதைச் சொல்ல நீங்கள் யார்? கருணாநிதி செய்த கோமாளித்தனமே..//

எனக்குத் தெரியா விசயங்கள் என்பது தமிழறிஞர்கள் என்ன சொன்னார்கள் என்றுதான். ஆனால் அதன் சாரம்சம் பல பதிவர்களால் எழுதப்பட்டிருக்கிறது அங்கு தேடுங்கள் என்றேன். Click here http://www.envazhi.com/?p=28061 அவற்றைப்படித்தால் புரியும் தமிழர்களுக்கென தமிழ்ப்பஞ்சாங்கம் இருந்தது; அது பிராமணப் பஞ்சாங்கத்தால் இருட்டில் தள்ளப்பட்டது.

எனவே உங்கள் வரி: "நாங்களும் அப்படித்தான் அழைப்போம். அது கூடாது என்பதைச் சொல்ல நீங்கள் யார்?" என்பதில் 'நாங்கள்" என்ற பதம் பிராமணப்பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோரை மட்டுமே குறிப்பிடும். ஆனால் அவர்களே தமிழர்கள் பெரும்பகுதி இந்துக்கள். அவர்களை விருப்பத்துக்கு மாறாக இந்துக்களின் புத்தாண்டை மாற்றக்கூடாது. அதே வேளையில் தமிழர்களின் பஞ்சாங்கத்தை விரும்புவோர் விருப்பத்தையும் அரசு மதிக்க வேண்டும். அரசு எவரெவருக்கு எந்த தியதி வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கவேண்டும். இங்கு பிரச்சினை என்னவென்றால் அரசு விடுமுறை அறிவிக்கவேண்டுமென்பதே. அது அந்த ஆட்சியின் தலைவரின் விருப்பம்தான். ஆனாலும் அத்தலைவர், தை முதல் தியதியை அரசு கெஜடட் விடுப்பாகச் செய்து விட்டு, சித்திரை முதலை விருப்ப விடுப்பாக (ஆர் ஹெச்) ஆக விட்டிருக்கவேண்டும். மத்திய அரசு இம்மாதிரி செய்கிறது. தீபாவளி இரண்டு. ஒன்று வடநாட்டுத் தியதி. மற்றொன்று தென்னாட்டுத் தியது. அடுத்தடுத்த நாட்களில் வரும். வடநாட்டுத் தியதி கெஜட்ட் விடுப்பு. தென்னாட்டுத்தீபாவளி விருப்ப விடுப்பு. சென்னை அலுவலகங்கள் மாற்றியமைத்துக்கொள்ளலாம். சி பி டபள்யூ எஞ்ஜினியருக்கு நான் சொல்லவேண்டுமா ?


ஜெயலலிதா இப்போதைய அரசின் தலைவர். அவர் விருப்பத்தின் படி இவ்விடுப்புக்கள் மாற்றிவைக்கப்படலாம். ஆனால் இரு சாராருக்கும் நீதி வழங்கப்படவேண்டும். தை முதல் தியதி விருப்ப விடுப்பு; சித்திரை கெஜட்டட் விடுப்பு என்று மாற்றியிருக்கலாம். பிரச்சினையில்லை. அவரின் சுபாவம் - வைதீக முறையைப்போற்றுவது - என்பதைக்காட்டும் எப்படி கருனானிதியின் சுபாவம் - தமிழர் முறையைப் போற்றுவது - என்பதைக்காட்டுவது போல.

எங்கள் விசயத்தில் இவர் எப்படி தலையிடலாம் எனபதற்குப் பதில் இரண்டு தியதிகளுக்குமே விடுப்பு கிடையாது. என்று செய்து விட்டால் சரியாகி விடும். வைதீகமுறைப்படியான பெருங்கோயில்களில் வைதீக முறையிலான சித்திரை ஒன்றுக் கொண்டாட்டத்தைத் தடுத்தது நியாயமாகாது. இசுலாமியர், கிருத்துவர் விசயத்தில் கை வைப்பாரா என்ற கேள்வியே வைதீக இந்துமதத்தை ஏற்றுக்கொண்டோரின் கோழைத்தனத்தைப் பறைசாற்றுகிறது. உங்கள் கோழைத்தனத்தை நீங்களே ஊர்முழுக்கச்சொல்கிறீர்கள். நீங்கள் எதிர்க்கவில்லை சரியான முறையில். அதற்குக் காரணம் தமிழக இந்துக்கள் அனைவரும் உங்களைப்போல இவ்விசயத்தைப் பார்க்கவில்லை. நீங்கள் இதை எதிர்த்துப்போராடினால் உங்களுக்குத் துணைவருவோர், இந்து முன்னணி, பி ஜே பி, மற்றும் பல இந்துத்வா அமைப்புக்கள் மட்டுமே. இந்த இந்து அமைப்புக்கள் வைதீகமுறைப்படியிலான இந்து மதத்தைக்காப்பதே தங்கள் கடப்பணியெனச் செயல்படுகிறார்கள்.

ஆக, இறுதியில் இது பிராமணர்கள், மற்றும் வைதீக இந்துமதக்காவலர்கள் பிரச்சினையே என்றுதான் பார்க்கப்படும். எனவே பொது இந்துக்கள் விலகி நின்றுதான் வேடிக்கைதான் பார்ப்பார்கள். இது மாதிரி கிருத்துவத்திலும் இசுலாமிலும் நடக்காது.

கோயிலில் பிரதோசம் என்றும் பிரமோத்சவம் என்றும் கும்பிடப்போவார்கள் தவறாமல். ஆனால் அதெல்லாம் ஏமாற்றுவேலையென்றால் பிராமணரையும் இந்துத்வாவினரையும் தவிர வேறெவரும் எதிர்க்க மாட்டார்கள். எனவே சித்திரை ஒன்று பிரச்சினை பிராமணர் மற்றும் இந்துத்வாவினர் பிரச்சினையே. கருனானிதி செய்தது ஒரு கோமாளிதனம் என்பது உங்களிருவருக்கு மட்டுமே.

dondu(#11168674346665545885) said...

//இதுக்காகவே அவரை முக்காடு போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்ததை நான் வரவேற்கிறேன். அதுதான் இப்பதிவின் சாரம்.//

நான் கூறியதன் உண்மை அர்த்தம், அவரை முக்காடு போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்ததை நான் இதுக்காகவே வரவேற்கிறேன். அதுதான் இப்பதிவின் சாரம்.

இப்போ ஓக்கேயா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

காவ்யா said...

//நான் கூறியதன் உண்மை அர்த்தம், அவரை முக்காடு போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்ததை நான் இதுக்காகவே வரவேற்கிறேன். அதுதான் இப்பதிவின் சாரம்.

இப்போ ஓக்கேயா?
//

OK

virutcham said...

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ரொம்பக் கவலைப்படும் திரு காவ்யா
குறைந்தபட்சம் உங்கள் ப்ரோபைலில் கூட தமிழ்க் கலையை போட முடியவில்லையே.
காவ்யா என்பது தமிழ் பெயர் தானா?

தமிழ்ப் பஞ்சாங்கம் என்ற முதலில் எழுதி வெளியிடட்டும். பிறகு மக்கள் ஏற்பதா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள்.

periyar said...

//அது பிராமணப் பஞ்சாங்கத்தால் இருட்டில் தள்ளப்பட்டது.//

ஆ அப்படியா?நம்ம மரம் வெட்டி அய்யாவுக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் திராவிட பஞ்சாங்கத்தை மீட்ட்டெடுத்து ஒரு 100 watt பல்ப் போட்டு காவ்யாவுக்கு காண்பித்திருப்பாரே.

காவ்யா said...

விருட்சம்

நான் என் புரொபைலை மாற்றிவிட்டேன். புரொபலுக்குத் தமிழென்ன ? எனக்குத்தெரியாது. படமும் மாற்றிவிட்டேன். ஆப்பிரிக்காப் பெண்ணும் குழந்தையும். உடனே அவர்கள் தமிழர்களா என்று கேட்டுவிடுங்கள். கருத்தைப்படித்து மறுகருத்தை முன்வைக்கவியலாதவர்கள் செய்யும் சால்ஜாப்பு வேலைகளில் புரொபைல் நோட்டமிடுவதும் ஒன்று. 3 பேர் சேர்ந்தெழுதும் பதிவு எங்கள் தென்னைமரக்கீற்றினிலே...

பெரியார் என்ற பெயரில் எல்லாப்பதிவுகளிலும் பார்ப்ப்னீயத்துக்குச் சார்ப்பாக உணர்ச்சிகரமாக ஆபாசப் பின்னூட்டமிட்டு வருபவரும், விருட்சமும் நான் கொடுத்த லிங்கைப் படிக்கவும்.

சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட மொழி கிடையாது. பிராமணர்கள் அனுஸ்டிக்கும் முறைகள் வைதீக முறைகள் சமஸ்கிருதத்தை மொழியாகக்கொண்டு மட்டும் எழுதப்படவில்லை. அம்மொழிக்கு மட்டுமே தெய்வசக்தியுண்டு என்றும் திண்ணமாக பிராமணர்கள் நம்புகிறார்கள். அது வடநாட்டு மொழி. இதிகாசங்களும் வேதங்களும் உபனிசத்துக்களும் ஸ்மிருதிகளும் தமிழ்நாட்டில் வரையப்பட்டவை கிடையவே கிடையா. அவை வடநாட்டில் வாழ்ந்தோரால் சமஸ்கிருதத்தில் வரையப்பட்டவை. கடவுள் எழுதினார் என்பதெல்லாம் கப்சா.

வைதீக முறைப்படியே சித்திரை ஒன்று தமிழ்ப்பிராமாணருக்கும் மற்ற இந்துக்களுக்கு வைதீக முறைகளை ஏற்றுக்கொண்டதாலே அவர்களுக்கும் புத்தாண்டு ஆகும்.

தமிழ்ப்பஞ்சாங்கம் இருக்கிறதா இல்லையா எனபது கருனானிதியின் பிரச்சினை. என் தலைமேல் வைக்காதீர்கள்.
என் பிரச்சினை என்னவென்றால் சித்திரை வைதீக இந்துமதத்தினருக்கும், அம்மதத்தை ஏற்றுக்கொண்ட பிராமணரல்லா இந்துத்தமிழருக்கு மட்டுமே புத்தாண்டு. இந்துகளல்லாத் தமிழர்கள் இருப்பதனால், தமிழ்ப்புத்தாண்டு எனப் பெயரிட்டு அழைப்பது pseudo secularism

தாங்கள் வைத்தவையே உண்மை. அனைவரும் அதைத்தான் பின்பற்றவும், எதிர்த்தவர்கள் எங்கள் துரோகிகள் என்பதல்லாம் அராஜகம். எல்லாருடைய உணர்ச்சிகளும் மதிக்கப்படவேண்டும்.

kaavya

virutcham said...

காவ்யா
உங்க பெயரை என்ன செய்வதாக உத்தேசம்?
சமீபத்திலே தான் எழுத வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
சமஸ்க்ரிததுக்கும் பிராமணர்களுக்கும் இங்கே ஏற்கனவே ரொம்ப வருடமா பலரும் வரலாறு சொல்லி நாங்க படிச்சுகிட்டு தான் இருக்கும். இணையத்திலே வேற நிறைய நல்ல விஷயங்கள் படிக்கக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திலே சுழன்று நேரம் விரயம் செய்து பிறர் நேரத்தையும் விரயம் செய்வதை தவிர்க்கலாமே.

பிராமணர்கள் மேல் புதுசா பழி போட உங்களை மாதிரி யாரவது முளைச்சுகிட்டே தான் இருப்பாங்க. ஏன்னா தமிழனுக்கு அப்படித் தான் வரலாறு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்படி கிளிப் பிள்ளை போல் மொழிந்து அதை சுய சிந்தனை என்று சொல்லிக் கொண்டு பாவம் உங்களைப் போல் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். தோத்துப் போன கட்சியும் இப்போவும் எப்போவும் அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த சுயக் கழிவிரக்கம் ஒரு நோய் போல் தமிழ் நாட்டை ஆடிப் படைக்கிறது. பாவம்

எங்கே இருந்தாவது ஒரு சிறு கூட்டம் வந்து எதை சொன்னாலும் அதை அப்படியே கேட்பவன் தமிழன், வெள்ளந்தி. சிந்திக்கக் கூடத் தெரியாதவன். எப்படி எப்படி சிந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் அப்படியே கேட்பவன் என்று தமிழன் சிந்தனையை மூளை சலவை செய்ய இன உணர்வை சிறிது தூண்டினாலும் போதும்.

எண்ணிக்கையில் மிகச் சிறிய ஒரு கூட்டம், அதிலும் கோவில் கைங்கர்யத்தில் இருப்பவர்களுக்கு வேறு படிப்பு கூட கிடையாது. நாலு வார்த்தை சமஸ்க்ரிதத்தில் சொல்லி ஒரு மாநிலத்தையே கைக்குள் வைக்க முடியும் என்றால் எத்தனை பெரிய விஷயம்? ஏன்தான் இப்படி தட்டில் விழும் சில காசுகளுக்கு காற்றே புகாத கோவில் கற்பக்கிரகத்தில் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார்களோ?

periyar said...

//தமிழ்ப்புத்தாண்டு எனப் பெயரிட்டு அழைப்பது pseudo secularism//
காவ்யா,
மஞ்ச துண்டு தை முதல் நாளை திராவிட தமிழர்,திராவிட தமிழ் பேசும் இஸ்லாமியர்.திராவிட தமிழ் பேசும் கிறித்துவர் புத்தாண்டு தினமாக அறிவிக்கலாமே.திராவிட தமிழ் ப்ஞ்சாங்கத்தை அன்றைய தினம் இலவசமாக் விநியோகம் செய்யலாமே?ஒட்டு மொத்த தமிழர் புத்தாண்டு தினமாக ஏன் அறிவிக்கவேண்டும்?

அது சரி,திராவிடம் என்று சொன்னாலே "ஆபாசம்" என்று ஏன் சொல்கிறீர்கள்.விளக்கமாக சொல்லவும்.

bala said...

//புரொபலுக்குத் தமிழென்ன ? எனக்குத்தெரியாது. படமும் மாற்றிவிட்டேன். ஆப்பிரிக்காப் பெண்ணும் குழந்தையும். உடனே அவர்கள் தமிழர்களா என்று கேட்டுவிடுங்கள்//

காவ்யா அம்மா,

அப்படி கேட்டு விட முடியாது.ஏனென்றால் பிரிவினை போதிக்கும் திராவிட தீவிரவாதம் பேசும் கருப்புசட்டை, கும்பல் ஆப்ரிக்கா, குறிப்பாக சொமாலியாவிலிருந்து வந்தேறிய கும்பல் என்பது அவர்களின் குணாதிசியங்கள் வைத்தே தெளிந்து கொள்ளலாம்.

பாலா

காவ்யா said...

இசுலாமியர் தைமுதனாளைத் தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக்கொள்ள தடையென்னவென்றால். அது இந்துக்களின் பண்டிகை. உழவர் திருநாள் என்ற பெயரில் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களைப்போலில்லாமல் அவர்களுக்கு மதமே முதலில்.

கிருத்துவர்கள் கொஞ்சம் லிபரல். பொங்கல் கொண்டாடுகிறார்கள். உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்று. தமிழ்ப்புத்தாண்டு என்றல்ல. காரணம் தமிழறிஞர்கள் சொல்வதும் இந்துமுறையே.

எனவேதான் அனைத்துத் தமிழ்ர்கள் மேல் தை ஒன்றையோ, சித்திரை ஒன்றையோத் திணித்தல் pseudo secularism.

காவ்யா said...

விருட்சம் எழுதியிருப்பதைப்படித்தால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் மட்டுமே வாழ்வதாக நினைக்கிறார் போலும். தவறு. மக்களில் அவர்கள் ஒரு சாரார் மட்டுமே. எல்லாரும் பிராமணீய வாழ்க்கை வாழவில்லை. தேவையுமில்லை. பிராமணீயம் என்பது வைதீக வழிமுறைகள். அதை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டும் என்பது பாசிசம். இந்துத்வாவினர் தென்மாவட்டக்கிராமங்களில் அம்மக்கள் வழிபாட்டுமுறைகளையெடுத்துவிட்டு வைதீகமுறைகளைத் திணிக்கிறார்கள் என்று ஞானி 'ஓ பக்கத்தில்' எழுதினார்.

சித்திரை ஒன்றையே புத்தாண்டு எனக்கொள்ள வேண்டுமென்பதும், தை ஒன்றையே புத்தாண்டு எனக்கொள்ள வேண்டுமென்பதும் - இரண்டு கொள்கைகளுமே பாசிசம் அவை ஒட்டு மொத்தமாக அனைத்துத் தமிழர்கள் மேலும் திணிக்கப்பட்டால். ஜெயலலிதா செய்தால் என்ன ? கருனானிதி செய்தால் என்ன ? டோண்டுவின் சொல்லில், கோமாளித்தனம். என்சொல்லில் பாசிசம் அல்லது அராஜகம்.

காவ்யா said...

//அப்படி கேட்டு விட முடியாது.ஏனென்றால் பிரிவினை போதிக்கும் திராவிட தீவிரவாதம் பேசும் கருப்புசட்டை, கும்பல் ஆப்ரிக்கா, குறிப்பாக சொமாலியாவிலிருந்து வந்தேறிய கும்பல் என்பது அவர்களின் குணாதிசியங்கள் வைத்தே தெளிந்து கொள்ளலாம்.
//

Original and interesting.

dondu(#11168674346665545885) said...

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, வேண்டுமென்றே குடுகுடுவென போய் ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் எண்ணங்களை புண்படுத்தினார் கலைஞர்.

ஜெயலலிதா பழைய நிலையை திரும்பக் கொணர்ந்தார், அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காவ்யா said...

//எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, வேண்டுமென்றே குடுகுடுவென போய் ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் எண்ணங்களை புண்படுத்தினார் கலைஞர்.

ஜெயலலிதா பழைய நிலையை திரும்பக் கொணர்ந்தார், அவ்வளவே.//


க்ரெகட் டோண்டு ராகவன்.

'குறிப்பிட்ட மதத்தாரின்' என்ற சொல்லே முக்கியம். அதை உரக்கச் சொல்லுங்கள்.

மேலும் ஏன் ஒரு மதத்தாரின் விசயத்தில் கருனானிதி தலையிட்டார் ? ஏன் அம்மதத்தார் வாளாவிருந்தார்கள் ? ஏன் அம்மதத்தாருக்கு நியாயம்கொடுக்க இன்னொரு ஆட்சி அமைய வேண்டும் ?

இக்கேள்விகளுக்கெல்லாம் டோண்டு ராகவன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

periyar said...

//இசுலாமியர் தைமுதனாளைத் தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக்கொள்ள தடையென்னவென்றால்//

காவ்யா,
திரும்பவும் தவறு செய்கிறீர்கள்.நான் ஒட்டு மொத்தமாக தமிழ் பேசும் கிறித்த்வர்கள்,தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்று சொல்லவில்லை;திராவிட "தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்"....என்று தான் சொன்னேன் .இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
தமிழர்கள் என்று சொல்வது ஒன்று ,பாலா சொன்னது போல பிரிவினை போதிக்கும் திராவிடம் பேசும் தீவிரவாத தமிழர்கள் என்பது வேறு.

Indian said...

தை 1 தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடாலாம் எனக் கூறுவதற்கான பின்புலம் வானியலில் உள்ளது.

தமிழர் பஞ்சாங்கம், பிராமனர் பஞ்சாங்கம் என்பதை ஒதுக்கிவிட்டு இந்திய வானியல் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுழற்சி சார்ந்த வானியல் கால நிலைகளையொட்டி அமைந்தவை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அவ்வகையில் சூரியமான மாதம், சந்திரமான மாதம், சூரிய சந்திரமான மாதம் என மூவகை மாதங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்வேறு மாநிலங்களும் தங்களின் புத்தாண்டைப் பின்பற்றி வருகின்றன.

பார்க்க

http://valavu.blogspot.com/2008/02/blog-post_18.html

bala said...

//ஏன் அம்மதத்தாருக்கு நியாயம்கொடுக்க இன்னொரு ஆட்சி அமைய வேண்டும்//

காவ்யா அம்மா,

நியாயம் கிடைக்க ஏன் ஆட்சி மாற வேண்டும்?நீங்களே பதில் சொல்லிவிடுங்கள்.ஒருவேளை அநியாயம் செயத ஆட்சி மாறினால் ஒழிய நியாயம் கிடக்காது என்பதாலா?இருக்கும் இருக்கும்.ஒட்டு மொத்த தமிழர்கள் ஏன் அநியாயம் செய்த ஆட்சியை தூக்கு எறிந்தார்கள் என்று திராவிடம் பேசும் கருப்பு சட்டை காவ்யாவின் ஆதங்கம்,புலம்பல் புரிந்து கொள்ளக்கூடியது தான்.அநியாயம், ஓசி பிரியாணீ/சோறு போட்டு வளர்ந்த கும்பல் தானே திராவிட கருப்பு சட்டை கும்பல்.

பாலா

Indian said...

மேலும் பொங்கல் திருநாள் சமயம் சார்ந்த கொண்டாட்டமல்ல. அது வானியலையும், பருவ மாற்றங்களையும் வரவேற்கும் நிகழ்ச்சி என்பதை கீழ்கண்ட இடுகையில் திரு. இராம.கி விளக்கியுள்ளார்.

http://valavu.blogspot.com/2007/01/blog-post.html

தமிழறிஞர்கள்/புலவர்கள் தை ஒன்றை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாட விரும்புவது இந்தப் பின்புலத்தில்தான்.

Indian said...

மேலும் காலங்கள், இந்திய நாட்டின் பருவ நிலைகள், இந்திய வானியல் கணக்குகள் பற்றி அறிய கீழ்கண்ட இடுகைகளைப் படித்துப் பாருங்கள்.

காலங்கள் - 1

http://valavu.blogspot.com/2003/08/blog-post_31.html


காலங்கள் - 2

http://valavu.blogspot.com/2003/09/2.html

காலங்கள் - 3

http://valavu.blogspot.com/2003/09/3.html

காலங்கள் - 4

http://valavu.blogspot.com/2003/09/4.html

காலங்கள் - 5

http://valavu.blogspot.com/2003/09/kaalangal-5.html

நீயென்ன சொல்வது, நானென்ன கேட்பது என்று பிடிவாதம் பிடிப்பது பகுத்தறிவல்லவே?

காவ்யா said...

//பிரிவினை போதிக்கும் திராவிடம் பேசும் தீவிரவாத தமிழர்கள் என்பது வேறு.//

நான் எழுதியது இப்பதிவுக்குப் பொருந்தும். தமிழ்ப்புத்தாண்டு என்ற பதமே பாசிசம் என்பதுதான் அது.

நீங்கள் எடுத்துக்கொண்ட "பிரிவினை போதிக்கும் திராவிடம் பேசும் தீவிரவாத தமிழர்கள்" என்பது பதிவைத் திசை திருப்பும்.

அப்படியே சொன்னாலும் உங்கள் அடிப்படைப் பார்வையே தவறானதாகும். விருட்சம் செய்த அதே தவறு.

தமிழர்கள் என்றால் சமஸ்கிருதத்தை ஆதாரமாக வைத்த வைதீக நெறிகளைத்தம் வாழ்க்கை அல்லது இறைவழிபாட்டுக்கொள்கையாகக்கொண்ட பிராமணர்கள் என்ற ஒரு சாரார் மட்டும்தானா ? அதைத் தவறென்கிறேன். தமிழர்கள் ஒரு சிறிய பிரிவினரே அவர்களே ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதினிதி என்றும் அவர்கள் வாழ்க்கைக்கொள்கைகளே அனைத்து இந்துத்தமிழர்களின் மேலும் திணிக்கப்பட வேண்டுமென்பதும் என்ன நீதி ?

உங்களை மாடசாமியையும் பேச்சியையும் புலமாடனையும்தான் வழிபடவேண்டும்; அதுவும் எங்கள் முறைப்படி - சாமியாடி, பட்டைச்சாரயமும் அருவாளையும் கருவாட்டுக்கறியையும் படையலாக வைத்து - என்று அவர்கள் திணித்தார்களா ? அப்படித் தமிழர்கள் வாழ்கிறார்களா ? இல்லையா ?

"பிரிவினை போதிக்கும் திராவிடம் பேசும் தீவிரவாத தமிழர்கள்" என்பதற்குப் பதிலடி என்னவென்றால் "இன்னொரு பிரிவினரின் இறைவழிபாட்டையொழித்து ஆங்கே தமது இறைவழிபாட்டில் (வேண்டியது மட்டும்) திணிக்கும் தீவிரவாத தமிழ் பேசும் பிராமணர்கள்" என்பதே. உங்கள் உணர்ச்சிகள் எப்படி உங்களுக்கு முக்கியமே அப்படி அவர்கள் உணர்ச்சிகள் அவர்களுக்கும் என்பதை ஏன் மறக்கிறீர்கள் ?

இரண்டும் இருக்கிறது அன்று முதல் இன்று வரை. மக்கள் பேசப்பயப்படுகிறார்கள். பேசினால் "பிரிவினை போதிக்கும் திராவிடம் பேசும் தீவிரவாத தமிழர்கள்" என்ற முத்திரை வரும். உங்கள் காட்டில் தற்போது மழை.

இங்கே இவ்விவாதங்கள் திசை திருப்பும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Y don't u write in Iqbal selvan's new post on Brahmins. U can write the same subject there. I will b there shortly.

Indian said...

அய்யா இராம.கி அவர்களின் இடுகையிலிருந்து.

***
பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல வேண்டுமால், சரியானபடி அறிய இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இந்த விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும் இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முன்னால் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.
***
பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.
***
பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.
***
பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா.
***
பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

பொங்கலோ பொங்கல்!
***

bala said...

//தமிழறிஞர்கள்/புலவர்கள் //

இந்தியன் அய்யா,

திராவிட தமிழறிஞர்கள்/புலவர்கள்,மற்றும் மஞ்ச துண்டு,வீரமணி,கவிதாயினி & புன்னகை காவ்யா, தை முதல் நாளை புத்தாண்டு தினமாக இராம.சாவி அய்யாவின் பின்புலத்தில் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே.யார் தடுத்தார்கள்?

பாலா

thenkasi said...

வாலிப பருவத்தில் நாத்தீகனாயிருந்து இப்போது கோவில் கோவிலாய் சாமி கும்பிடும் நவீன பகுத்தறிவு சிங்கங்கள்
அம்மன் கோவில்களில் அடிக்கடி தென்படும் திராவிடக் குடும்பத்தார்
குரு பலம் வேண்டி மஞ்சளாடை பிரியர்கள்
கால சர்ப்ப தோஷம் நீங்க காள‌கஷ்தி சென்று ராகு கால புஜை செய்த கோபலபுரத்து சொந்தங்கள்
ஆகியோருக்கு எது தமிழ்ப் புத்தாண்டு?

Indian said...

//திராவிட தமிழறிஞர்கள்/புலவர்கள்,மற்றும் மஞ்ச துண்டு,வீரமணி,கவிதாயினி & புன்னகை காவ்யா, தை முதல் நாளை புத்தாண்டு தினமாக இராம.சாவி அய்யாவின் பின்புலத்தில் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே.யார் தடுத்தார்கள்?
//

அனுமதியளித்தற்கு மிக்க நன்றி பாலா அய்யா.

Indian said...

//
ஆபாசம் என்பதெல்லாம் இக்கால என்ணங்களை பழங்காலத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பு கூறுவது. அது காரியத்துக்காகாது.
//

இக்காலம்னா இந்த சமஸ்கிருதப் பெயர்களை வைத்து என்ன ஒரு பத்து பதினைந்து வருடங்கள் இருக்குமா?

அப்படின்னா நமக்குத் தெரியாம யார் செய்திருப்பார்கள்?

நம் தலைமுறைக்குத் தெரிந்தது இந்தத் தொன்மக் கதைதானே?

இந்த விஷ்ணு-நாரதர் உறவு, 60 பிள்ளைகள் புராணத்தை தமிழர்கள்தான் உருவாக்கிக் கொண்டார்களா?

இதை நீங்கள் நம்பவில்லை, வேறொரு பிண்ணணி உண்டென்றால், உங்களுக்குத் தெரியுமென்றால் சொல்லுங்கள் அதையும்தான் கேட்போம்.

Indian said...

திரு இராத.கி அய்யாவின் இடுகையிலிருந்து

***
நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும்.

இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள்.
***
ஒவ்வோர் அமையுவாவிலும் #அமாவாசையிலும்# (அல்லது பூரணையுவாவிலும் #பௌர்ணமியிலும்#) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும்.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே! அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்கத்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள்.

இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.

****

புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும்.

****

தமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது.

****

Indian said...

திரு. இராம.கி அய்யா அவர்களின் இடுகையிலிருந்து....

*****

சூரியச் சந்திரமான மாதம் தான் இந்த நாவலந்தீவின் பைஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) எல்லாவற்றிற்கும் அடிப்படை. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாவலந்தீவின் #இந்தியாவின்# வானியலைப் புரிந்து கொள்ள முடியாது. சூரியன், நிலவு, புவி என்ற மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதில் இரண்டு விதமான ஒழுங்குகள் இருக்கின்றன. சூரியனுக்கும் புவிக்கும் இடையில் நிலவு வந்து விட்டால், நமக்கு அந்த நேரத்தில் நிலவின் மேல் மறுபளிக்கப் பட்ட ஒளி தெரிவதில்லை. நமக்கு நிலவு ஒளியற்றதாகத் தெரிகிறது. மாறாக சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் புவி இருந்தால் நிலவு மிகுந்த ஒளியுள்ளதாகத் தெரிகிறது. நிலவிற்கு இன்னொரு தமிழ்ப் பெயர் உவா என்பது. ஒளியற்ற நிலவை அம(ந்த) உவா (விளக்கு அமந்து போச்சு என்றால் ஒளியில்லாமற் போயிற்று என்றுதானே பொருள்?) என்றும் ஒளி மிகுந்த நிலவை பூரித்த உவா>பூரணை உவா என்றும் சொல்லுகிறோம். அமை உவாவை அம உவை>அமவாய்>அமாவாய்>அமாவாஸ்>அமாவாசை என்றும் பூரணை உவாவை பௌர்ணவி>பௌர்ணமி என்றும் வடமொழியில் திரித்துச் சொல்லுகிறார்கள்.

நிலவு அமை உவாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி பூரணை உவாவில் முழுதாகிப் பின் குறைந்துகொண்டே வந்து மீண்டும் அமை உவாவாகிறது. இந்த மாற்றத்திற்கான நாட்கள் தான் 29.5305888 நாட்கள். சூரியச் சந்திர மான மாதங்களை இப்படி அமை உவாவில் தொடங்கி அமை உவாவில் முடிவதாக கருதுவது அமைந்த கணக்கு. பூரணையில் தொடங்கி பூரணையில் முடிவதாகக் கருதுவது பூரணைக் கணக்கு.

அமைந்த கணக்கு கருநாடகம், ஆந்திரம், மராட்டியம் என்ற மூன்று மாநிலங்களிலும், பூரணைக் கணக்கு பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தானம், அரியானா, காசுமீர் போன்ற மாநிலங்களிலும் பின்பற்றப் படுகின்றன. குசராத்தும் ஒரு வகையில் அமைந்த கணக்கையே ஆனால் சில வேறுபாடுகளுடன் பின் பற்றுகிறது. திரிபுரா, அசாம், வங்காளம், தமிழ்நாடு, மாற்றும் கேரள மாநிலங்கள் பொதுக் காரியங்களுக்குச் சூரிய மாதத்தையும் (30.43803 நாட்கள்) விழாக்கள், சமயக் காரியங்களுக்கு சந்திரமானத்தையும் பின்பற்றுகின்றன. பழைய பஞ்ச திராவிடப் பகுதிகளும், இவர்களின் தாக்கம் இருந்த நாவலந்தீவின் கிழக்குப் பகுதிகளும் அமைந்த கணக்கையே பின் பற்றுவது ஒரு வரலாற்றுச் செய்தியைச் சொல்லுகிறது. அதை இங்கு விரிப்பின் பெருகும் என்பதால் விடுக்கிறேன்.

அமைந்த கணக்கின் படி சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும் வரை உள்ள காலம் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் அழைக்கப் படுகிறது.

****

Indian said...

திரு இராம.கி அய்யா அவர்களின் இடுகையிலிருந்து...

****
இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு உடன் அயன முறை (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தைக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precision correction) கொண்ட நில்லயன முறை என்பது விதப்பாகப் #சிறப்பாக# பின்பற்றப்படுகிறது. நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவை நில்லயன முறையின் படி சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது உடன் அயன முறையின் படி, இந்த வடசெலவு தொடங்குவது இந்தக் காலத்தில் திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது. இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த ஆண்டு கி.பி. 285 ஆகும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் முற்செலவச் சுற்று தொடங்கிய நாளும் இந்திய வானியலின் படி கி.பி.285 க்கு அண்மையில் தான்.

இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த நிலையை நினைவு படுத்தி, பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் ஒன்று சேர்ந்திருந்தன என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவார்கள். மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)

பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.
****

Indian said...

//
இனிமேல் சிற்றப்பனை அப்பான்னு கூப்பிட அரசானை போட்ட எப்படி இருக்குமோ அப்படி இருந்தாதால்.. அது முட்டாள்தனமாக மட்டும் இல்லை, மு.க.-வின் ஆணவத்தை, பதவி மமதையும் சேர்த்தே பிரதிபலித்தது.
//

இவ்வளவு தரவுகளுக்குப் பின்னாலும் மேற்சொன்னவாறுதான் எண்ணுகிறீர்களா?

Indian said...

//
இப்படித்தான் பொங்கல் என்ற இந்து பண்டிகையை தமிழர் திருநாள் என கதை விடுகிறார்கள்.
//

பொங்கல் எப்படி இந்துப் பண்டிகை என்று விளக்குவீர்களா?

Indian said...

பொங்கலைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள்.

****
Saturday, January 12, 2008 11:45:00 PM
koothanalluran said...
//பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.//

இராமகி அய்யா பொங்கல் வாழ்த்துகள்.
தஞ்சை மாவட்டத்தில் மிராசுதார்கள் எனச் சொல்லப்படும் முஸ்லிம்கள் பொங்கலை இஸ்லாமிய நெறிமுறையோடு கொண்டாடுவதுண்டு. தை முதல் நாளன்று, அறுவடை செய்துவரும் முதல் நெல்லை அவசர அவசர்மாக காயவைத்து, பின் பதம் பார்த்து அவித்து சோறு சமைப்போம். இச்சோறு 'புது அரிசி சோறு' என அழைக்கப்படும். கொஞ்சமாக 3 மரக்கால் அல்லத் 6 மரக்கால் சோறாக்கி அச் சோற்றை மூன்று பகுதியாக பிரித்து ஒரு பகுதி உற்றம் சுற்றம் சூழ உண்டு களித்து, இரண்டாவது பகுதியை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து விட்டு, மூண்றாவது பகுதி 'மத்ராசா' வில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.இதில் பூசை புனஸ்காரம் கிடையாது.

புது அரிசி சோறு சமைத்தவுடன் கொஞ்சம் பிசு பிசு வென களி போல இருக்கும் அதனாலென்ன 'தால்ச்சா' எனப்படும் குழம்போடு கலந்து சாப்பிடுவோம். மாட்டுப் பொங்கலன்று மிராசுதார் வீட்டு மாடுகள் (கறவை+உழவு) அனைத்திற்கும் விடுமுறை, பண்னையாட்கள் முதல்நாளே மாட்டை ஓட்டிச் சென்று விடுவார்கள்.

பொங்கலன்று பண்னையாட்கள் வரிசை வரிசையாக வந்து மிராசுதார்களூக்கு கரும்பு வாழை சேவல் கொடுத்து விட்டு பகரமாக மிராசுதார் வழங்கும் வேட்டி சட்டை புடவை வாங்கிச் செல்வார்கள்.

பொங்கலன்று ராவூத்தர் வீட்டில் சமைக்கப்படும் சமையலை சாப்பிடமாட்டார்கள் கேட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்பார்கள்
***

Indian said...

பொங்கலைக் கொண்டாட விரும்பும் கிறித்தவர்.

Friday, January 19, 2007 4:55:00 PM
சிறில் அலெக்ஸ் said...
இராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.

தகவல்களுக்கு மிக்க நன்றி

Indian said...

//
இந்துக்களின் பஞ்சாங்கத்தில் அவர் கைவைக்க என்ன உரிமை அவருக்கு?
//

கருணாநிதி பஞ்சாங்கத்தில் கை வைக்கவில்லை. பஞ்சாங்கத்தின்படி அடிப்படையான வானியல் தரவுகளின்படிதான் தை 1ல் புத்தாண்டை கொண்டாடச் சொன்னதை ஆதரித்தார்.

காவ்யா said...

//திராவிட தமிழறிஞர்கள்/புலவர்கள்,மற்றும் மஞ்ச துண்டு,வீரமணி,கவிதாயினி & புன்னகை காவ்யா, தை முதல் நாளை புத்தாண்டு தினமாக இராம.சாவி அய்யாவின் பின்புலத்தில் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே.யார் தடுத்தார்கள்?//

Brilliant point.

This s what I hav been saying here in many mges. Let ppl choose either one of the two proposed days as their New Year, according to their own side.

Thank u. Well done. Bala.

bala said...

//Let ppl choose either one of the two proposed days as their New Year, according to their own side.//

காவ்யா அம்மா,

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாதிரி நச்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லியிருக்கீங்க.எதுக்கும் உங்க் தீர்ப்பை மஞ்ச துண்டு காதுல போட்டு வச்சுருங்க.

பாலா

PS அது சரி காவ்யா அம்மா உங்க உண்மையான பெயர் ஜோ.அமலன்.ராயன்.கோவா.டையு.டாமன்.டிஸூஜா.ஃபெர்னாண்டோ தானே?பேர் கொஞ்சம் பெருசா இருக்கறதாலத்தானே சுருக்கி செல்லமா காவ்யான்னு வச்சுருக்கீங்க?

virutcham said...

@kavya/punnagai
//விருட்சம் எழுதியிருப்பதைப்படித்தால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் மட்டுமே வாழ்வதாக நினைக்கிறார் போலும். தவறு. மக்களில் அவர்கள் ஒரு சாரார் மட்டுமே. எல்லாரும் பிராமணீய வாழ்க்கை வாழவில்லை. தேவையுமில்லை. பிராமணீயம் என்பது வைதீக வழிமுறைகள். //
சரியாப் போச்சு. எழுதுவதைப் பொங்கிப் பொங்கிப் பொங்கி வழிந்து கொண்டே இருந்ந்தால் என்ன செய்வது.
சிறு எண்ணிக்கையிலான
ஒரு கூட்டம் ஒரு மாநிலத்தை தன பிடிக்குள் வைத்திருப்பதாக மூளை சலவை செய்யப்பட ... இப்படி அர்த்தப்படும் வகையில் தானே எழுதி இருக்கிறேன்.
இந்தியன் அய்யா சொன்னதற்கு சபாஷ் போட்டது சரி. ஆனால் யோசிச்சீங்களோ. அப்படி மத சார்பில்லாமல் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடினால் யார் தடுக்கப் போகிறார்கள்? ஆங்கிலப் புத்தாண்டைக் கூட இந்துக்கள் இந்து மத பாணியில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
அது தான் பாயிண்ட் . கொண்டாட ஆரம்பிங்க. அதற்கு அரசானை தேவையில்லை. பழக்கத்தில் வந்தால் தானே நடைமுறையில் வரும்.

அதை விட்டுட்டு சமஸ்க்ரிதம் பிராமணன் என்று பொங்குவதானால்
நீங்க தைப் பொங்கல் வரை பொங்கிகிட்டே இருங்க. எனக்கு வேற வேலை இருக்கு.

காவ்யா said...

//PS அது சரி காவ்யா அம்மா உங்க உண்மையான பெயர் ஜோ.அமலன்.ராயன்.கோவா.டையு.டாமன்.டிஸூஜா.ஃபெர்னாண்டோ தானே?பேர் கொஞ்சம் பெருசா இருக்கறதாலத்தானே சுருக்கி செல்லமா காவ்யான்னு வச்சுருக்கீங்க?

//

நல்ல நகைச்சுவை உணர்வு. மகிழ்ச்சி.

காவ்யா said...

//அதை விட்டுட்டு சமஸ்க்ரிதம் பிராமணன் என்று பொங்குவதானால்
//

virutcham

சமஸ்கிருதமும் பிராமணரும் பிரிக்கமுடியாதவை. இதுவே அவர்களை பிற மக்களுடன் இணைந்து வாழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இரு கைகள் சேர்ந்தால்தானே ஓசை ? இணைய என்ன வழி? அதற்கான கண்ட வழியே சமஸ்கிருதமயமாக்கல். இந்து மதத்தில் வைதீக சடங்குகள் சேர்த்துச்சேர்த்து. பின்னர் மொத்த சமூகமே ஆகிவிடும். நாம் வேறல்ல! இவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உணர்வை சமஸ்கிருதமயமாக்கல் உருவாக்கும். உருவாக்கியது. வந்து கெடுக்க முயன்றாr ஈ.வெ.ரா. விடுவோமா ? மக்கள் எங்கள் பக்கம். மாக்கள் மட்டுமே அவர்கள் பக்கம்!

உலகப்புகழ்பெற்ற சோசியாலஜிஸ்ட் எம்.என்.சீனிவாஸ்தான் சமஸ்கிருதமயமாக்கல் Sanskritisation என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர்.. அவரின் “ஒரு தென்னிந்தியக் கிராமம்” என்ற சோசியாலஜி நூலில் முதலில் இது விளக்கப்பட்டது. பரபரப்பாக பேசப்பட்டது இவர் ஒரு மைசூர் ஐயங்கார். தம் இனத்தவர் அதிகம் வாழும் மைசூர் கிராமம் ஒன்றை இவர் களப்படிப்பு பண்ண தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வதிந்தார். முடிவில் எழுதிய நூல் இது. A breakthrough. இவரின் மற்றொரு மாபெரும் தலைப்பு “ஜாதிகள்.” தன் இனத்தாரையே அவர்களுக்குத் தெரியாமல் தன் ஆராய்ச்சிக்குட்படுத்தியவர்.

பிராமணர் – சமஸ்கிருதம் – இந்து மதம் – சமஸ்கிருதமயமாக்கல் – பிற மக்களோடு வாழ்வு – இவையெல்லாம் கற்றோர்க்கு சோசியாலஜி. கல்லார்க்கு மட்டமான அரசியல்.

சித்திரையா? தையா? – எனபதும் சோசியாலஜிஸ்டுக்குக் கரும்பு சாப்பிடுவதைப்போல.

விருட்சம், இந்தியன், பாலா போன்றோருக்கு வெறுக்கப்பட வேண்டிய ‘பொங்கியெழும்’ காழ்ப்புணர்ச்சிகளிறைந்த அரசியல்.

காவ்யா said...

சிறில் அலெக்ஸ் said...
இராமகி ஐயா.. இனிமேல் பொங்கலையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.

Indian

Beware of Roman catholics. Their strategy is called acculutration or inculturation. Their aim is to make ppl to come to their religion via Hindu rituals.

அதன்படி அனைத்து கத்தோலிக்கர்களுக்கு இந்துவழி மரபுகள் சொல்லிக் கொடுக்கப்படும். அவர்கள் முன்னாள் இந்துக்கள் என்பதை உணர்ந்து. மேலும் அவர்கள் இன்று இந்துக்கள் மத்தியில் வாழ்வதால். மேரிக்கு முளைப்பாரி வைத்து கும்மியடிப்பதும், பேய் விரட்டல், வேம்பு கட்டுதல், பொங்கலிட்டுக் குலையிடுதல் என்பனவெல்லாம் கத்தோலிக்க குருமார்களால் தமிழகத்தில் அங்கீரிக்கப்பட்டவை.
சிரில் அலெக்ஸ் முட்ட்த்தைச் சேர்ந்தவர். 100 விகிதம் கத்தோலிக்கர்கள் வாழும் கடற்கரைக் கிராமம். கடலோரக்கவிதைகள், கடற்பூக்கள், அலைகள் ஒயவதில்லை திரைப்படங்களில் பிற்புலமே இக்கிராமம். 45 minutes from Nagarcoil. அலெக்ஸ் இன்றுதான் சொல்கிறார் உங்களுக்குத் தெரிந்தவரை. ஆனால் தைப்பொங்கல் கொண்டாடலாம் என்று தமிழ்கத்தோலிக்கருகளுக்கு சொல்லப்பட்டு, கொண்டாட ஆரம்பித்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

periyar said...

//மேரிக்கு முளைப்பாரி வைத்து கும்மியடிப்பதும், பேய் விரட்டல், வேம்பு கட்டுதல், பொங்கலிட்டுக் குலையிடுதல்//

சபாஷ் புன்னகை காவ்யா.அப்படியே இவங்க அலகு குத்திக்கிட்டு,காவடி எடுத்து பெரிய வெள்ளை தாடி சூர சம்ஹாரம் செய்து மேரியை வணங்கினாக்க சூப்பரா இருக்காது?

காவ்யா said...

//சபாஷ் புன்னகை காவ்யா.அப்படியே இவங்க அலகு குத்திக்கிட்டு,காவடி எடுத்து பெரிய வெள்ளை தாடி சூர சம்ஹாரம் செய்து மேரியை வணங்கினாக்க சூப்பரா இருக்காது? //

இருக்காது என்பது சரியில்லை. இருக்கிறது என்பதே சரி.

கத்தோலிக்க மதம் ஏறக்குறைய இந்து மதம்போல; ஆப்பிரிக்காவிலும் லட்டின் அமெரிக்க நாடுகளிலும் இம்மதம் மேரியை அப்படித்தான் பில்லி சூனியம் பேய் விரட்டு என்பதெற்கெல்லாம் பயன்படுத்துகிறது. அவர்கள் அப்படிச்செய்ய தடையில்லை. கத்தோலிக்க மதத்தின் அடிப்படை - மதம் கடைபிடிக்கும் வழிகளில் அன்னாட்டு மக்களின் ஆதிவழிபாட்டுவழக்கத்தின்படி இருத்தலே நல்லது என்பதாகும். மேரிக்கு, மேரியுடன் கத்தோலிக்க செயிண்ட்ஸ்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்தோணி, சேவியர், தொம்மை, ஜியார்ஜ் என்று - சப்பரம், பவனி, அலகு, காணிக்கை, முடிகாணிக்கை என்றெல்லாம் இருப்பது பிறமத்தினருக்குத் தெரியாது. அவை இருக்கின்றன.

bala said...

//இருக்காது என்பது சரியில்லை. இருக்கிறது என்பதே சரி.

கத்தோலிக்க மதம் ஏறக்குறைய இந்து மதம்போல; ஆப்பிரிக்காவிலும் லட்டின் அமெரிக்க நாடுகளிலும் இம்மதம் மேரியை அப்படித்தான் பில்லி சூனியம் பேய் விரட்டு என்பதெற்கெல்லாம் பயன்படுத்துகிறது. அவர்கள் அப்படிச்செய்ய//

காவ்யா அம்மா,
நீங்க சொல்றது சரி தான்.நான் இருக்கும் ஆந்திர ஊரில்,இப்படித்தான்;மேரியம்மா சிலைக்கு மூக்குல வளையம் மாட்டி,குங்குமம் அடித்து,வேப்பிலை சாத்தி,எலுமிச்சை மலை போட்டு :"யம்மா மேரி காளியம்மா"ன்னு மெய்சிலிர்க்க கொண்டாடுவாங்க.

ஆனா பாருங்க,இப்படி கொண்டாடறது தலித் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தான்.ஓ பி ஸி கத்தோலிக்க கும்பல் ரேஞ்சே தனி;அவங்க இந்த பக்கம் வந்தா முகத்தை சுளிச்சுக்கிட்டு போவாங்க.கொளுத்தும் ஆந்திர வெய்யிலிலும் கோட்/டை மாட்டி பெரம்பூர் ஆப்பம் மாதிரி நாசுக்கா சர்ச் வந்து போவாங்க.

பாலா

காவ்யா said...

//மேரியம்மா சிலைக்கு மூக்குல வளையம் மாட்டி,குங்குமம் அடித்து,வேப்பிலை சாத்தி,எலுமிச்சை மலை போட்டு :"யம்மா மேரி காளியம்மா"ன்னு மெய்சிலிர்க்க கொண்டாடுவாங்க.
ஆனா பாருங்க,இப்படி கொண்டாடறது தலித் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தான்.//

மண்டைக்காடு கலவரத்தில் மண்டைக்காட்டுக்கருகிலுள்ள கத்தோலிக்க மீனவகிராமமான புதூர் மிகவும் பாதிக்கப்பட்டது. காரணம் அவ்வூர் மாதா கோயிலுள்ள மேரிக்கு இன்னொரு பெயர் கண்ணாம்பாள். ஆங்கு பாலா சொன்ன எல்லாமே நடந்ததால் மாதாவுக்குப்பேர் பரவ ஆரம்ப்பித்தது. இதற்கு மேல் நான் சொல்ல வேண்டுமா?

தலித்துகளுக்கும் பி.சிகளுக்கும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடில்லை. இந்துமதக் கிராமிய‌ வ‌ழிபாட்டில் இருவரும் ஒன்று. இவரல்லா மற்றவருக்கே வேறுமுறை.

இந்துமதத்தில் - ஒரு எ.காவுக்காக - வன்னியரையும் நாடாரையும் எடுத்துக்கொள்வோம். இவர்கள் அம்மனைக்கும்பிடுவதும், தலித்துக்கள் செய்வதும் ஒன்றே. பெரியபாளையம் ஒரு நல்ல எ.கா. இங்கு தலித்துகள் மட்டுமா போகிறார்கள்? அங்கு போய் அசைவம் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். ஆடிக்குக் கூழ் - கருவாட்டுக்குழம்போடு. கோயில் கொடை உத்ச‌வ‌ம், கிடா வெட்டு, கும்ப‌ம் க‌ர‌க‌ம் எல்லாம் ஒன்றே. ப‌ண‌மிருந்த‌தால் ப‌டாடொப‌மாக‌ இருக்கும். அவ்வ‌ள‌வுதான்.

பார்ப்பனரையும் பார்ப்பனர் வேடம் போடும் சில சமூகக்குழுக்களைத் தவிர மற்றெல்லாரும் ஒன்றே: முளைப்பாறி, வேம்படி, கூழ் ஊற்றுதல் என்று எல்லாமே தலித்துகளும் செய்வார்கள். பிசிக்களும் செய்வார்கள்.மதுரை மாவட்டத்தில் பல தேவர்குடும்பங்களுக்குக் கருப்பசாமி குலதெய்வம். தலித்துகளும் கருப்பசாமி உண்டு. மதுரை வீரன், அய்யனார், எல்லாம் இப்படியே. இந்துமதத்தில் தலித்துகளுக்கும், பார்ப்பனரல்லா பிற மக்களுக்கும் இறை வழிபாட்டில் வேறுபாடில்லை. இதில் ம‌ட்டும். மற்றவற்றில் உண்டு. இதைக்கெடுக்க‌ சில இந்துத்வா அமைப்புக்க‌ள் முய‌ன்று வ‌ருகின்ற‌ன‌. வைதீக‌ முறைக‌ளை த‌லித்தல்லா த‌மிழ‌ர் கிராமிய‌ வ‌ழிபாட்டில் புகுத்திவ‌ருகிறார்க‌ள். இச்செய‌ல‌க‌ள் த‌லித்துக‌ளை வில‌கி நிற்க‌ வைக்கும். முழுவ‌துமாக‌ இது ந‌ட‌ன்தேறிவிட்டால் த‌லித்துக்க‌ளைப்பிரித்து விட‌லாம். பார்ப்பனருக்கும் அம்மன் குலதெய்வம் உண்டு. வேம்படி, முடிகாணிக்கை எல்லாம் உண்டு. எனினும் கருவாடு, சாராயம், சாமியாடுதல் என்றெல்லாம் கிடையா.

இதே போல‌ க‌த்தோலிக்க‌ இறைவ‌ழிபாட்டில் கிராமம், நகரம், பெருந்தெய்வம், சிறு நாட்டார் தெய்வங்கள் என்றெல்லாம் கிடையா. ஒரே வழிபாடு எங்கேயும். பிசிக்க‌ளுக்கும் த‌லித்துக‌ளுக்கும் வேறுபாடு கிடையா. இதை ஒன்றும் செய்யாம‌ல் அப்ப‌டியே வைத்தும் தீண்டாமை ப‌ண்ணலாமே. "இங்கே வ‌ராதே ப‌ற‌ப்ப‌ய‌லே" என்று சொன்னாலே போதுமே. எப்ப‌டி வ‌ருவான்? அருவாள் இருக்கே. போட்டுத்த‌ள்ளிட‌மாட்டோமா ? தாசில்தாரே நாஙகதானே !

It is a very ticklish subject. U cant discuss it sarcastically.

How does this connect to the topic of this blog post?

DR will allow it as he want to increase the number of comments.

For further discussions, u can come via email

நெல்லை கபே said...

பேசாம தமிழ் அறுபது வருடங்களுக்கான பெயர்களை தயாநிதி, உதயநிதி, கலாநிதி, கனிமொழி என்று கருணாநிதி குடும்பப்பெயர்களாக வைக்கலாம்...நிச்சயமா அறுபதுக்கும் மேல இருக்கும்...ஒருவேளை ஆட்சிக்கு மறுபடியும் வந்திருந்தா அதை கண்டிப்பா செய்திருப்பார்...அதுக்கும் ஒரு ஐநூறு தமிழறிஞர் கூட்டம் 'ஒரு தமிழினத்தின் தலைவன் வீட்டுப்பெயர்கள் வைப்பதில் தவறே இல்லை' என்று சொல்லியிருக்கும்...

Indian said...

//பேசாம தமிழ் அறுபது வருடங்களுக்கான பெயர்களை தயாநிதி, உதயநிதி, கலாநிதி, கனிமொழி என்று கருணாநிதி குடும்பப்பெயர்களாக வைக்கலாம்...நிச்சயமா அறுபதுக்கும் மேல இருக்கும்...ஒருவேளை ஆட்சிக்கு மறுபடியும் வந்திருந்தா அதை கண்டிப்பா செய்திருப்பார்...அதுக்கும் ஒரு ஐநூறு தமிழறிஞர் கூட்டம் 'ஒரு தமிழினத்தின் தலைவன் வீட்டுப்பெயர்கள் வைப்பதில் தவறே இல்லை' என்று சொல்லியிருக்கும்...
//

நீங்கள் சொல்வது அவதூறு. இவ்விதயத்தில் கருணாநிதி அறிஞர்கள் பரிந்துரையைத்தான் ஆமோதித்தார்.

ஒரு தகாத உறவில் (கிருஷ்ணர்+நாரதர் = 60 குழந்தைகள்) பிறந்த குழந்தைகளின் பெயர்களை வருடங்களின் பெயர்களாக வைத்தபோது இப்படித்தான் பொங்கினீர்களா?

Ramki said...

எனக்கு தெரிந்து கிருத்துவர்களோ இசுலாமியரோ தமிழ் புத்தாண்டையோ பொங்கலையோ கொண்டாடுவதில்லை.ஆகவே எல்லா தமிழர்களும் அதை கொண்டாடுவதில்லை பகுத்தறிவு
செம்மல்களுக்கு எப்படிக்கொண்டாடினால் என்ன?கலைஞர் கூற்றுப்படி 1921 ல் 500 கூடி தமிழ் புத்தாண்டை தை முதல் தேதியில்தான் கொண்டாட வேண்டும் என்று சொல்லுகிறார்.1967 லிருந்து தி மு க மாறி மாறி ஆட்சியில் இருந்திக்கிறது.அதுவும் 1969 ல் கலைஞர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.ஏன் அப்போதே தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றி இருக்கலாமே.ஏன் அதற்க்கு நாற்பது ஆண்டுகள்?எதற்கு இந்த கேலி கூத்து?

Indian said...

//ஏன் அதற்க்கு நாற்பது ஆண்டுகள்?எதற்கு இந்த கேலி கூத்து?//

Better late than never.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது