11/10/2011

டோண்டு பதில்கள் - 10.11.2011



ரமணா
கேள்வி-1. கனிமொழி இனி?
பதில்: ஒரு தகுதியுமின்றி மஞ்சத் துண்டின் மகள் என்ற ஒரு காரணத்துக்காகவே தூக்கி நிறுத்தப்பட்ட அவர் இப்போது அதே காரணத்துக்காகவே சிறுமைபடுவதும் காலத்தின் விளையாட்டே.

கேள்வி-2. திமுகவில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பா?
பதில்: அது எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது, நீறு பூத்த நெருப்பாக. மேலே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி-3. கமாடிடி ஆன்லயின் டிரெடிங் தடை செய்யப்படுமா?
பதில்: வால் பையன் பதில் சொல்லட்டும் இக்கேள்விக்கு.

கேள்வி-4. மீண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றி?
பதில்: ஜெயலலிதா அப்படியேதான் இருக்கிறார். மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கைவல்ய நீதியை அவர் பயன்படுத்துகிறார். அது திருதிராஷ்டரனுக்கு கூறப்பட்டது. உலகில் உள்ள எந்த அநீதியாக இருந்தாலும் அது உனக்கு சாதகமாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள் என்ற ரேஞ்சில் போகும் அது. சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் வெர்ஷனில் அது வருகிறது.

அதே நீதிதான் அரசன் தன்னைச் சுற்றியிருப்பவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், யாரும் தான் சாஸ்வதம் என நினைக்கும்படி விட்டுவிடக்கூடாது எனக் கூறுகிறது. ஜெ செய்வதும் அதுதான்.

5. அதிகாரிகளின் அடிக்கடி மாறுதல் பற்றி?
பதில்: கைவல்ய நீதி, முந்தைய கேள்வியை பார்க்கவும்.

கேள்வி-6. பெங்களூர் வழக்கு என்னவாகும்?
பதில்: நீதி தன் கடமையை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி-7. அடுத்து மம்தா என்ன செய்வார்?
பதில்: அவருக்கே அது தெரியாது. டோண்டு ராகவனுக்கு எப்படி தெரியும்?

கேள்வி-8. சீமானின் புரட்சிப் பேச்சு மக்களை கவர்கிறதா?
பதில்: எங்கே சினிமாவிலா?

9. கூடன்குளம் சுமுகமாய் முடியுமா?
பதில்: சுமுகமாக முடிவதை விட, மக்களது தேவை, பாதுகாபு ஆகிய இரண்டும் ஊர்ஜிதம் செய்யும் நிலைதான் வேண்டும்.

கேள்வி-10. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க திடீர் எதிர்ப்பு ஏன்?
பதில்: மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகும் என நினைக்கிறேன்.


pt
KINDLY ANSWER THE FOLLOWING QUESTIONS IN DONDU'S STYLE:
கேள்வி-11. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
பதில்: முட்டையை எப்படி, எவ்வளவு உயரத்திலிருந்து போட்டாலும் கான்க்ரீட் தரை விரிசல் விடாது.

கேள்வி-12. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
பதில்: அதான் அந்த சுவரை ஏற்கனவேயே எட்டு பேர் கட்டிட்டாங்களே, இப்போ நாலு பேர் எதுக்கு அதை மறுபடியும் கட்டணுமாம்? கொழுப்பா?

கேள்வி-13. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
பதில்: Two full hands.

கேள்வி-14. How can you lift an elephant with one hand?
பதில்: முதலில் ஒரு கையாவது இருக்கும் யானையை கொண்டு வாருங்கள், நான் அதை தூக்கிக் காண்பிக்கிறேன்.

கேள்வி-15. How can a man go eight days without sleep?
பதில்: இரவில் மட்டும் தூங்கினால் போகிறது. எப்படியும் பகலில் தூங்கக் கூடாது என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளதாக முரளி மனோகர் எனக்கு சொல்கிறான்.

கேள்வி-16. If you throw a red stone into the blue sea what it will become?
பதில்: முழுகிப் போகும்.

கேள்வி-17. What looks like half apple?
பதில்: The other half.

கேள்வி-18. Bay of Bengal is in which state?
பதில்: In liquid state.

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-19. பெட்ரோல் விலை உயர்வு சரியே: மன்மோகன்

பதில்: அவர் வேறு என்ன கூற முடியும்?

கேள்வி-20. நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு
பதில்: வேறு பல பிரச்சினைகள் இருக்கும்போது அண்ணாவின் பெயரை இழுப்பது உளறலாகத்தான் படுகிறது.

கேள்வி-21. மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்: மம்தா பானர்ஜி
பதில்: சரியான அரசியல்வாதியின் பேச்சு. பாம்பு கீரி சண்டை விடுவேன் எனக் கூறிக் கொண்டே கடைசி வரை போக்கு காட்டும் போங்கு.

கேள்வி-22. டீசலுக்கும் விலைக் கட்டுப்பாடு கூடாது: முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கருத்து
பதில்: காலத்தின் கட்டாயம்.

கேள்வி-23. லோக்பால் மசோதாவை சிதைக்காதீர்கள்: ஹசாரே குழு
பதில்: அவ்வாறு செய்யாவிட்டால் ஊழல்வாதிகளின் வாழ்வு சிதைந்து விடுமே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: பதிவை பார்டருக்குள் போட எனக்கு உதவியது இப்பதிவின் சொந்தக்காரர். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

3 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை
2.90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை
3. இந்தியா&பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்
4. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை : மோடி கவலை!
5. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ரமணா said...

1.கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா?
2.பொதுத்துறைகள் இனி?
3.இந்தியா வங்கிகளின் எதிர்காலம்?
4.அதிமுக காங் கூட்டணி கனியுமா?
5.அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை?
6.பெட்ரோலிய நிறுவனங்கள்‍‍‍... நஷ்டம் என்பது போலி கணக்கா?
7.ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி?
8.2ஜி வழக்கு என்னவாகும்?
9.கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்?
10.அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்?

Anonymous said...

அரசியல் முதல் அனைத்து சப்ஜெக்ட் வரை கையாளும் விதம் அருமை!
http://atchaya-krishnalaya.blogspot.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது