டிஸ்கியை கடைசியில் தருகிறேன்.
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
1. குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
2. ஓட்டுக்கு பணம் கிடையாது.
3. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
4. கரண்ட் கட் கிடையாது.
[இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது].
5. மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
6. இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
7.இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
8. TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
9. இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)
நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும். (நல்ல வேளையாக இப்போதைக்கு மஞ்சத் துண்டு குடும்பத்துக்கு மக்கள் செக் வைத்துள்ளனர். சீக்கிரம் பட்டா பட்டி டிராயரை போட்டுவிட்டு அவிங்களை களி திங்க வச்சாத்தான் தமிழர் மனம் ஆறும்).
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
(சம்மட்டி அடி கொடுத்தாயிற்று, மேலே சொன்னதை எல்லாம் மக்களும் நினைத்திருக்க வேண்டும்).
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் (நல்ல வேளை அவ்வாறு செய்யவில்லை).
உலகம் நம்மை காரி உமிழும் [அதுவும் இப்போதைக்கு இல்லை:))].
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! (அதற்கான அடி எடுத்து வைத்தாயிற்று).
டிஸ்கி: இதை நான் ஏப்ரல் மாதத்தில் டிராஃப்டில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். இன்று எதேச்சையாக பார்த்தேன். இற்றைப்படுத்தி இப்போது போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுவனப்பிரியனுக்காக சேர்த்தது. அவருக்கான பதிலை பின்னூட்டப் பெட்டியில் போட இயலவில்லை. ஆகவே இச்சேர்க்கை:
@சுவனப்பிரியன்
மோதிக்கு எதிராக பேசுங்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம் என ப. சிதம்பரம் வகையறாக்கள் கூறியாகி விட்டது. இன்னும் அவருக்கு பயப்படுகிறார்கள் என உதார் விட்டால் எப்படி?
2002, மற்றும் 2007 பொது தேர்தலில் எலெக்ஷன் கமிஷனும் அதன் அப்போதைய கோமாளி கமிஷனர்களும் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதை மறந்தீர்களா?
பின்னே எப்படி மோதியின் மிரட்டல் பற்றிப் பேசுகிறீர்கள்?
அது சரி கோத்ரா கரசேவகர்களை எரித்த விஷயம் பற்றி மூச்சே இல்லை? அதை ஆதரிக்கிறீர்களா?
அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே முதன் மந்திரியாக இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்குமே.
மோதியின் மேல் ஊழல் புகார் கூற முடியாமல் பொய்யையே கூறினால் அது உண்மையாகுமா?
மற்றும் ஏழை முஸ்லிம் வாக்காளர்?
மோதி பற்றி சுஹேல் சேத் என்னும் பிற மாநில இசுலாமியர் எழுதியதை கீழே தருகிறேன். இதில் நான் என வருவது சுஹேல் சேத்.
”முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.
விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.
மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.
இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.
ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.
நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.
மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.
YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.
மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை”!
மீண்டும் டோண்டு ராகவன். இதையெல்லாம் நான் எப்போதோ பதிவாக போட்டாகி விட்டது:
சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள்.
ஹாஜியார் நலமா? அவருக்கு என் வணக்கங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சித்தாந்தம்- சைவ இதழ் தொடக்கம்
-
உளம் கனிந்த ஆசிரியருக்கு, “ சிறைப்பட்டு கிடக்க எவருக்கும் உரிமை இல்லை. அது
முன் நகரும் வாய்ப்புகள் அனைத்தையும் அளித்த வல்லமைக்கு நாம் செய்யும் சிறுமை”
என்...
12 hours ago
12 comments:
நல்லவேளையாக மஞ்சள் துண்டு கும்பலுக்கு மே மாதத்தில் ஆப்பு வைத்தாயிற்றே!
இப்போதுதான் அம்மாவின் அருளாட்சி ஆரம்பமாகி விட்டதே, இனி தமிழகத்தில் தேனும்,பாலும் வழிந்தோடும். அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் அம்மாவின் பொற்கால ஆட்சியில் தமிழகம் ஜப்பானை மிஞ்சிவிடும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அம்மா செய்யப் போகும் சாதனைகளின் முன்னால் மோடி கால் தூசாக தெரிவார்.மிக நிச்சயமாக மகர நெடுங்குழைக்காதன் இதற்கு உதவுவார் என நம்புகிறேன்.
அப்போது அம்மாவின் ஐந்தாண்டு சாதனைகளை, இப்போது இந்த சாதனைப் பதிவை ட்ராப்டில் போட்ட மாதிரி போடாமல் உடனே பதிவிடுவீர்கள் என நம்புகிறேன்.
:)
இன்றைக்குக் கூட மகா கனம் பொருந்திய அம்மா நூலகத்தை குழந்தைகள் மருத்துவ மனையாக மாற்றும் அற்புதமான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
இவை எல்லாம் நல்ல திசையில் அம்மா செயல்பட ஆரம்பித்திருப்பதையே காட்டுகிறது.
அந்த மகர நெடுங்குழைக்காதன் நம்மை எல்லாம் நிச்சயம் காப்பாற்றுவார்.
:)
இப்பதிவு மோதியை விதந்தோதும் பதிவு. மஞ்சத் துண்டு ஒரு காண்ட்ராஸ்ட் என்றால் ஜெயும் அவ்வாறு சொதப்பினால் இன்னொரு காண்ட்ராஸ்ட் ஆக அவரும் ஆவார், அவ்வளவே.
இருவருமே மோதிக்கு ஈடு இல்லை என்பதை நான் இன்னொரு முறை வலியுறுத்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
…..1990 களில் சிறு விவசாயிகளே பெரும் பண்ணையாளர்களிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு நவீன பண்ணையாளர்கள், சிறு விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் பண்ணை ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன உழுபடைக் கருவிகள் மூலம் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், கூலி விவசாயிகளுக்கும் வேலை கிடைப்பதில்லை. மேலும் ஒப்பந்த விவசாயத்தின் ஓரினப் பயிர் சாகுபடியால், மண் வளம் இழப்பும் பாசன வசதிகள் சூறையாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமாகி வருகின்றன……
……..மேலும், உயிர்ம எரிபொருள் விவசாயத்திற்கு என்கிற பெயரில் , ரிராயல் எனர்ஜி, டாட்டாலையன்ஸ், எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்தின் கணிசமான தரிசு நிலங்கள் கட்ச், சௌராஷ்டிரம் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் குஜராத்தின் மக்கள் தொகையில் 5 முதல் 8 சதமாக உள்ளனர்; சுமார் 25 முதல் 40 இலட்சம் குடும்பங்கள் இந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் நிலத்தின் அனுபோக உரிமை பறிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிவாழ் மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு நகர்புறங்களில் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர்.
……குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இலாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை…..
…..இவை தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் வளர்ச்சி மையங்கள் என்ற பெயரில் வெளிப்படையாக நிலப்பறிப்பிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. நிர்மா லிமிடெட் என்ற சிமெண்ட் நிறுவனத்திற்கு பாவ்நகர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டர் வளமிக்க விவசாய நிலத்தைப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, டாடா நானோ கார் உற்பத்தி உதிரிப் பாக உற்பத்திக்காக ஏழு கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலம் பறிக்கப்படவுள்ளது….
…..பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது, உலகமயமாக்கலுக்கு ஏற்ப விவசாயத்தை ஏற்றுமதிக்கானதாக மாற்றுவது, ஏழை நடுத்தர விவசாயிகளை நிலமற்ற கூலிகளாகச் சிதறடிப்பது, பன்னாட்டு ஏகபோக விவசாயக் கம்பெனிகளின் தரகுப் பெருமுதலாளிகளின் வரம்பற்ற ஆதிக்கத்தை நிறுவுவது, இதற்காகப் பெயரளவில் இருந்துவந்த தடைகளை நீக்குவது என்பதுதான் மோடி அரசு செய்துவரும் ‘முன்னுதாரணமிக்க சாதனைகள்’…..
- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011
//இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..//
இவ்வளவு பிரச்னைகள் இருக்க அந்த விருதை எப்படி கொடுத்தார்கள் என்பது அந்த மகர நெடுங்குழைநாதனுக்கே தெரியும்.
புதிய ஜனநாயகம் போன்ற கட்சி சார்பு பத்திரிகைகள் அவ்வாறு எழுதாவிட்டால்தான் ஆச்சரியம்.
அதே பத்திரிகை சீனாவில் கிராமங்களில் இதற்கு மேல் நடக்கும் விஷயங்கள் பற்றி மூச்சு விட மாட்டார்கள்.
மற்றப்படி குஜராத்தில் எலெக்ஷன் எவ்வாறு நடத்தப்படுகிறது தமிழகத்தில் எவ்வாறு நடத்தப்படுகிறது (பதிவின் அடிநாதம்) என்பதைப் பார்த்து விட்டு பேசவும்.
2007, 2011 (உள்ளாட்சித் தேர்தல்) ஆகிய ஆண்டுகளில் குஜராத் அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாமல் பிரதான எதிர்கட்சிகள் பேய் முழி முழித்ததை பார்த்தீர்கள்தானே.
பல முஸ்லிம் வேட்பாளர்களையும் தனது கட்சி சார்பில் நிற்க வைத்து மெம்பர்களாக்கியிருக்கிறாரே. இசுலாமியரின் கணிசமான ஓட்டு வங்கி இப்போது மோதிக்குத்தானே ஆதரவு அளிக்கிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Jayalalitha is capable of throwing up surprises, whatever the consequences may be. I wish she takes a bold step of introducing prohibition and save the womenfolk/families of Tamil Nadu. By this one daring action, she could underwrite her re-election. Would she do it?
டோண்டு சார், குஜராத்துக்கு டிக்கெட் நான் ஸ்பான்சர் செய்கிறேன், ஒரு எட்டு பார்த்துட்டு வந்து, பதிவு போடுங்க.
இந்த கரண்ட் கட் சமாசாரம் லிங்க் மீண்டும் பாருங்க. http://nunippul.blogspot.com/2008/06/blog-post.html
டாஸ்மாக் இல்லை, ஆனால் இர்ண்டு வயசு குழந்தையில் இருந்து ஊரே, முக்கியமாய் ஏழைகள் மாவா, பான்பராக் போன்றவைகளை மென்னு துப்பி தீர்க்கிறார்கள். தெருவில் எங்கு பார்த்தால் காலி பான்பராக் பாக்கெட்டுகள் கொட்டி கிடக்கும்.
சரசரமாய் கடைகளில் தொங்கும், வாய் கான்சர் மிக சாதாரணம். பசி மந்தித்து, ஒல்லி ஒல்லியாய்
பஞ்ச பரதேசியாய் அலையும் குழந்தைகள் . மக்களை போதைக்கு பழக்கி அடிமைப்படுத்துவது
அதே அரசாங்கம்தான்.
ஊரில் மிக மிக குழந்தை தொழிலாளர்கள் அதிகம். மருத்துவமனைகளில் கூட பன்னிரெண்டு வயசு பிள்ளைகள், (அழுக்கு) வெள்ளைக் கோட்டு போட்டுக் கொண்டு டாக்டருக்கு உதவும்.
இதே கூத்து, பார்மசிகளிலும்.
தமிழகத்தில் ஏழைகள் உண்டு, ஆனால் பஞ்ச பரதேசிகள் குஜராத்தில்தான். பரம ஏழைகள்,
கூலி வேலை, ரோடு போடும் வேலைக்கு வரும் பழங்குடி இன மக்கள். அத்தனையும் ஃளோடிங்க்
பாபுலேஷன். கல்லு, மண்ணில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கும்.
சின்ன சின்ன குழந்தைகள் கூட கூட்டமாய் ரயில்வே ஸ்டேஷன், சிக்னல்களில் பிச்சை எடுக்கும்.
நான் பார்த்தவரையில் நல்ல விஷயமாய் நினைப்பது, சீரான ரோடுகள். ஆனால் வண்டி ஓட்டுபவர்கள், எந்த போக்குவரத்து விதியையும் மதிக்க மாட்டார்கள். சின்ன சின்ன பிள்ளைகள் கூட ஸ்கூட்டர், பைக் ஓட்டும். டிராபிக் போலீஸ்க்கு நல்ல வரும்படி .
//டாஸ்மாக் இல்லை, ஆனால் இர்ண்டு வயசு குழந்தையில் இருந்து ஊரே, முக்கியமாய் ஏழைகள் மாவா, பான்பராக் போன்றவைகளை மென்னு துப்பி தீர்க்கிறார்கள். தெருவில் எங்கு பார்த்தால் காலி பான்பராக் பாக்கெட்டுகள் கொட்டி கிடக்கும்.
சரசரமாய் கடைகளில் தொங்கும், வாய் கான்சர் மிக சாதாரணம். பசி மந்தித்து, ஒல்லி ஒல்லியாய்
பஞ்ச பரதேசியாய் அலையும் குழந்தைகள் . மக்களை போதைக்கு பழக்கி அடிமைப்படுத்துவது
அதே அரசாங்கம்தான்.//
அதாவது டாஸ்மாக் ரேஞ்சுக்கு அரசு நிர்வாகமே பான் பராக் ஆகிய பாக்கெட்டுகள் விற்பனையை ஸ்பான்சர் செய்கிறது என்கிறீர்களா? நம்பும்படியாக இல்லையே.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சுட்டியில் அப்போதே நான் பின்னூட்டமிட்டு விட்டேன். பவர் கட் ஒரு நிமிடம் இருந்தாலும் சரி, பத்து மணி நேரம் இருந்தாலும் சரி ஒன்றுதான் என வாதிட்டால் பதில் ஏதுமில்லை. கம்பேர் செய்யுங்கள்.
அரசு நிர்வாகம் லஞ்ச ஊழலுடன் இருந்தால் பத்திரிகைகள் சும்மா விட்டிருக்குமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு டோண்டு!
//பல முஸ்லிம் வேட்பாளர்களையும் தனது கட்சி சார்பில் நிற்க வைத்து மெம்பர்களாக்கியிருக்கிறாரே. இசுலாமியரின் கணிசமான ஓட்டு வங்கி இப்போது மோதிக்குத்தானே ஆதரவு அளிக்கிறது?//
மோடியை எதிர்த்த பாஜக அமைச்சரின் முடிவு என்ன என்பது உங்களுக்கு தெரியும். கலவரத்தில் மோடிக்கும் நேரடி பங்குண்டு என்று சமீபத்தில் கூறிய காவல்துறை உயர் அதிகாரியின் நிலைமை தற்போது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். நிலைமை இவ்வாறிருக்க அன்றாடங்காய்ச்சிகளாக காலம் தள்ளும் பெரும்பான்மை ஏழை முஸ்லிம்கள் மோடியை எதிர்த்து எதை சாதித்து விட முடியும்? எதிரியின் பலத்தை நினைத்து முஸ்லிம்கள் அடங்கி விட்டனர் என்பதே யதார்த்தம். மோடியின் ஆட்சி அகற்றப்படும்போதுதான் மோடி செய்த கொலைகளும், தகிடுதத்தங்களும் வெளிவரும். அதுவரை பொறுப்போம்.
@சுவனப்பிரியன்
2002-க்கு பிறகு இப்போது 9 ஆண்டுகளாக மதக்கலவரம் குஜராத்தில் இல்லை. அதற்கு முன்னால் காங்கிரசார் ஆட்சியில் ரொட்டீனாக அது அவ்வப்போது நடைபெற்றதை மறக்கலாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதக் கலவரங்களை முன்னின்று நடத்துபர்களே ஆட்சியில்
எப்படி ஐயா மதக் கலவரங்கள் நடக்கும்!
இந்த சுட்டியைப் பாருங்கள்:
http://news.oneindia.in/2011/05/26/anna-hazare-says-gujarat-corrupted-modi-gandhi-state-aid0101.html
http://indiatoday.intoday.in/story/gujarat-is-riddled-with-scams-says-anna-hazare/1/139425.html
Post a Comment