நான் ஏற்கனவேயே ஒரு பதிவில் குறிப்பிட்ட குழந்தையும் தெய்வமும் படத்தின் ஒரிஜினல் ஜெர்மானிய படமான Das dopplete Lottchen-ன் ஒரு படக்காட்சி கீழே தந்துள்ளேன். பாஷை புரியாவிட்டால் என்ன, குழந்தையும் தெய்வமும் படம் பார்த்தவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ள கஷ்டம் இருக்கலாகாது. சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி.
நான் ஏற்கனவேயே சொன்னது போல, தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்களை நான் அவை முதன் முதலாக வந்த சமயம் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் வெர்ஷன்களில் சம்பந்தப்பட்ட குழந்தை நடிகைகள் இரட்டை பாத்திரத்தில் வந்தனர். ஆனால் சமீபத்தில் 1950-ல் Erich Kaestner-ராலேயே திரைக்கதை எழுதப்பட்ட Das doppelte Lottchen படத்தில் நிஜ இரட்டையரே நடித்தனர். இப்போது அந்த சகோதரிகளின் வயது 74-க்கு மேல் இருக்கும்.
ராமானந்த் சாகரின் உத்தர ராமாயணத்தில் வந்த லவன் குசனும் இரட்டை பிறவிகள். அப்படி இருந்தால் பல ட்ரிக் ஷாட்டுகள் மிச்சம்தானே.
என்ன தமிழ் படத்தில் வரும் அன்புள்ள மான்விழியே பாடல்கள் எல்லாம் வராது. அந்த சிசுவேஷனே கிடையாது. அதெல்லாம் இந்திய சூழ்நிலைக்கான மசாலா சேர்ப்பு. ஆனால் எனக்கு பிடித்த மசாலா சேர்ப்பு.
போகிற போக்கில் இப்படத்தின் ஆங்கில ரூபத்தையும் பாருங்கள், படம் Parent trap. காட்சி: சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணும் நேரம். இங்கு ஹேய்லி மில்ஸ் இரட்டை பாத்திரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்னறம் இலக்கிய விருது 2025
-
தன்னறம் இலக்கிய விருது 2025 எழுத்தாளர் சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு…
மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எழுத்தாளர் பா. வெங்கடேசன் கவிஞர் பரமேசுவரி
முன்னிருப...
1 week ago

5 comments:
டோண்டு சார், குழந்தையும் தெய்வமும் படம் ஏவிஎம் தயாரிப்பு. சில வருடங்களுக்கு முன்பு
ஏவி.எம், சரவணன் அவர்களின் தொடர் ஒன்று கல்கியில் வந்தது. கையில் கிடைத்த இதழில்
இப்படி எழுதியிருந்தார். ஆங்கில படம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. டிவோர்ஸ் நம் கலாசாரத்தில்
இல்லாததால் கதையை, ஏவிஎம் கதை குழு தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றினார்களாம்.
.
கதை, இசை என்று எத்தனை காப்பிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் இதில் தவறு ஒன்றும் கிடையாது இதை பொதுவில் ஒத்துக்கொள்வதற்கு தைரியம் வேண்டும். அதை கேஷீவலாய்
சொன்ன சரவணன் அவர்களின் தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டத்ததான் வேண்டும்.
மிகவும் நல்லபடம் ஆங்கில படமும் பார்த்திருக்கேன் தமிழிலும் கூட பகிர்வுக்கு நன்றி
நல்ல தகவல். படம் பார்த்ததில்லை. அந்த காலத்திலேயே காப்பி அடிக்க தொடங்கி விட்டார்கள்.
ஆங்கில படத்திலும் சரி ஜெர்மன் மூலத்திலும் சரி, தாய் தந்தையர் சுய விருப்பத்துடனேயே பிரிந்தனர். ஆனால் தமிழ் மர்றும் ஹிந்தி வெர்ஷ்ன்களில் கணவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மனைவியை தவறு செய்த பார்ட்டியாகக் காட்டினர்.
ஆண்களின் ஈகோவுக்கு தீனி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1998-இல் கூட ஒரு முறை "The Parent Trap" ரீமேக் செய்யப்பட்டது.. அது தான் நான் பாத்திருக்கேன்.. இப்போ பிரபலமா இருக்க Lindsay Loghan தான் அதுல சின்ன பொண்ணா நடிச்சிருப்பாங்க..
Post a Comment