இதற்காகவெல்லாம் மெனக்கெட்டு நான் ஏதாவது மென்பொருளை உபயோகிப்பேன் என்றால் சாரி. இல்லை. ஆனாலும் இது சம்பந்தமாக பல பதிவுகள் வந்து விட்டன. அவற்றை மேலோட்டமாக ஆய்வதே எனது இப்பதிவின் நோக்கம்.
1. ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் பிரத்தியேகக் கடவுச்சொல்லை வைத்துக் கொள்ளவும்.
நடக்கிற காரியமா அப்பு? எந்தக் கடவுச்சொல்லை எந்த அப்ளிகேஷனுக்கு வைத்துக் கொண்டோம் என எவ்வாறு நினைவில் வைத்திருப்பதாம், ஏனெனில் அவற்றை எல்லாம் எங்கும் எழுதி வைத்துக் கொள்ளக் கூடாது என வேறு பயமுறுத்துகிறார்கள்.
2. கடவுச்சொற்கள் குறைந்த பட்சம் 15 கேரக்டர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவும் @, \, %, # என்றெல்லாம் நடுவில் இருக்கவேணுமாம். அடப்போடாங், @#$%^&* @#$%^&* @#$%^&*
3. சில அப்ளிகேஷன்களில் அவர்களாகவே நம்மை கடவுச்சொல்லை மாற்றும்படி வாரத்துக்கு ஒரு முறை கழுத்தில் துண்டு போட்டு இருக்குகின்றனர். ஏதோ அவர்களுக்காக இரு கடவுச்சொற்களை மாற்றி மாற்றி பாவிக்கலாம் என்றால் அதுவும் கூடாதாம். புதிதாக வரும் கடவுச்சொல் முந்தைய மூன்று அல்லது நான்கு கடவுச்சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டுமாம். படுத்துகிறார்கள் சாமி.
4. கடவுச்சொல்லை மாற்றுவது நமது முடிவாக இருக்க வேண்டும். கண்ட சும்பன்கள் இதில் உள்ளே நுழையலாகாது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல அப்ளிகேஷன்களுக்கு கடவுச் சொற்களை பாவிக்கும் நான் கண்டறிந்தது என்னவென்றால், ரொம்பவெல்லாம் மெனக்கெட்டு காம்ப்ளிகேட்டடாக கடவுச்சொற்கள் அமைத்துக் கொண்டு சந்தியில் நிற்கலாகாது என்பதே.
நாம் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.
நமது கடவுச் சொற்கள் நமக்கு மட்டுமே தேரியும் என்ற நிலையில்தான் அவை உபயோகமானவை. வேறு யாருக்கும் தெரியலாகாது. இந்த எளிமையான விதியை ஃபாலோ செய்யாது பல பதிவர்கள் சந்தியில் நின்றது பற்றி நான் அறிவேன்.
ஃபிஷிங் மின்னஞ்சல்களை கண்டதுமே அழிக்க வேண்டும்.
எனது ஜிமெயிலை ஹேக் செய்ய முயன்றான் ஒரு இழிபிறவி. அது பற்றி நான் இட்ட பதிவு இதோ.
அதே போல அவனது அல்லக்கை ஒருவன் என்னை தனது ஜீ டாக்கில் கொண்டுவர முயற்சித்தான். அதையெல்லாம் புறம் தள்ளியதால் நான் காப்பாறப்பட்டேன்.
பதிவை முடிக்கும் முன்னால் நான் கேட்ட ஒரு அசைவ ஜோக் இங்கே.
மலை வாசஸ்தலத்துக்கு பாய்பிரெண்டுடன் வந்த அப்பெண்ணுக்கு ஒரு பிரச்சினை. கருத்தடை மாத்திரைகளை கொண்டு வர மறந்து விட்டாள். கடைகள் ஏதும் சமீபத்தில் இல்லை. ஹோட்டல் மருத்துவரிடம் அன்றைய இரவை சமாளிக்க அவரிடம் மாத்திரை இருக்குமா எனக்கேட்க, அவரோ கருத்தடை மாத்திரை இல்லை, ஆஆனால் தலைவலி மாத்திரை தருவதாகக் கூறினார். அதை எவ்வாறு பயன்படுத்துவது இந்தத் தேவைக்கு என அப்பெண் மயங்க, அவர் கூறினார்.
கால் நீட்டி படுத்துக் கொள். தலைவலி மாத்திரையை இரண்டு முழங்காலுக்கு நடுவில் நிறுத்தி வைக்கவும். இரவு முழுவதும் அது கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
11 hours ago
5 comments:
If you prefer, you can get password corral to save all your passwords in your PC, with one password.
http://www.cygnusproductions.com/freeware/pc.asp
வணக்கம் டோண்டு ஸார், நலமா?
நிறைய நாட்களாயின, தங்கள் தளத்திற்கு வந்து.
கடவுச் சொற்களைப் பற்றிய இந்த பதிவினைப் பார்த்தவுடன் நான் சமீபத்தில் எழுதிய (ஆம், 'சமீபத்தில்' வார்த்தைக்கு மேற்கோள் குறிகள் இல்லை, தெரியும்!) ஒரு கட்டுரை - உங்கள் பார்வைக்கு!
(அதிலும் என்னை அறியாமலேயே உங்களையும் குறிப்பிட்டிருப்பேன்|
http://www.panbudan.com/story/kadavuch-sollayiram
சிவா கிருஷ்ணமூர்த்தி
எனக்கு எப்போதும் ரோபோபார்ம் தான் துணை
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் என்றால் உங்கள் ஃபயர்பாக்ஸ் அல்லது கூகிள் குரோம் இணைய உலாவியிலேயே உங்கள் வெவ்வேறு கடவுச்சொற்களை நீங்கள் நினைவுவைத்துக்கொள்ளலாம்.
ஃபயர்பாக்ஸில் ஏற்கனவே உங்கள் பாஸ்வர்ட் நினைவு வைத்துக்கொள்ள நீங்கள் சொல்லியிருந்தால் அதை நீங்களே மறந்துவிட்டால்...tools->options சென்று password tab ஐ கிளிக்கிவிட்டு பார்க்கலாம். தனி ஜன்னலில் எந்த வலைத்தளத்துக்கு எந்த கடவுச்சொல் என்று பட்டியல் காட்டும். show password என்ற பொத்தானை கிளிக்கினால் பாஸ்வர்ட் தெரியும்.
கூகிள் குரோம் உலாவியில் கூட இப்படி நினைவு வைத்துக்கொள்ளலாம்.
டோண்டு சார்,
இந்த வீடியோவை போட்டதும் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது... பிடிங்க லிங்க்கை... இந்த பாட்டு என் கையில் பல ஆண்டுகள் வெறும் ஆடியோவாக இருந்தது...கொஞ்சம் துல்லியமான ஆடியோவுக்காக காத்திருந்தேன்... கிடைக்கவில்லை..சரி என்று இப்பதான் அதை வீடியோவாக மாற்றியிருக்கிறேன்...
http://www.youtube.com/watch?v=dwaw1uSOcqU&feature=youtu.be
Post a Comment