5/10/2012

ஈவேரா அவர்களது வழியை சரியாக பின்பற்றுபவர் அண்ணாவா அல்லது கலைஞர் வீரமணி முதலானோரா?

உண்மையைக் கூற வேண்டுமானால் கலைஞர் மற்றும் வீரமணிதான் ஈவேரா அவர்களை சரியாக பின்பற்றுபவர்கள் எனக்கூறுவேன். அது பற்றித்தான் இப்பதிவு.

முதலில் ஈவேரா அவ்ர்களின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்.

2. த்னது சீடர்கள் தன்னைவிட அதிக புகழ் பெறுவதை பொறுக்காதவர்.

3. தனது வாரிசுக்குத்தான் தனது அறக்கட்டளையின் மேனேஜ்மெண்ட் செல்ல வேண்டும் என்பதற்காகவே தனது 76-வது வயதில் அதுவரை தான் எதிர்த்த பொருந்தாத் திருமணத்தை செய்து, கட்சியினரின் முகத்தில் கரி பூசியவர்.

4. அதற்காக நான் அதுவரை பலருக்கு செய்வித்த சுயமரியாதை திருமணத்தை விலக்கி பதிவுத் திருமணம் செய்து கொண்ட்வர்.

5. தன்னைப் பின்பற்றுபவர்கள் பகுத்தறிவை கழட்டி வைக்க வேண்டும் என எதிர்பார்த்தவர்.

இப்போது அண்ணா அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர். அவரது காலகட்டத்தில் திமுக ஒன்றில்தான் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது என்றால் அது மிகையாகாது.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஊக்குவித்து அவர்களை அணைத்துச் சென்றவர்.

3. வாரிசா? மூச்? அவரது வளர்ப்பு ம்கன்களோ, மனைவியோ அவரது கால கட்டத்திற்கு பிறகு அரசியலிலேயே இல்லை.

4. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றவர். மதுவிலக்குக் கொள்கையை ரத்து செய்ய மறுத்தவர். அக்கால கட்ட்டத்தில் பலர் அவரிடம் கூறினார்கள், புதிதாக மதுவிலக்கு செய்தால் மத்திய அரசு கிராண்ட் கிடைக்கும், ஆனால் ஏற்கனவேயே மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் மதுவிலக்கை ரத்து செய்து சிலகாலம் கழித்து அதை அமல்படுத்தினால் துட்டு கிடைக்கும் என்று. அப்படிப்பட்டப் பாவப்பணம் தமது மாநிலத்துக்கு வேண்டாம் என அழகாகக் கூறினார்.
 ஆக இவர் ஈவேரா வழியில் சென்றவர் அல்ல.

கருணாநிதி அவர்களை அவதானிப்போம்.
1. உட்கட்சி ஜனநாயகம் இல்லை.

2. எம்ஜிஆர், வைக்கோ போன்ற்அவர்கள் தன்னைவிட அதிகப் புக்ழ் பெற்றபோது அவர்களைக் கட்சியிலிருந்து விலக்கி வைத்தவர்.

3. வாரிசு அரசியலுக்கு புது இலக்கணங்கள் வகுத்தவர். தனது மூன்று மனைவியரின் குழந்தைகளுக்கும் கட்சியில் பல உயர் பதவிகளை அளித்தவர்.  அவர்களுக்கு இடம் தர மற்றவரை ஓரம் கட்டியவர். இப்போது முறை அன்பழகனுடையது.

4. கொள்கை? ஹா ஹா ஹா. மாநில சுயாட்சி, ஈழவிடுதலை இத்யாதி இத்யாதி ஆகியவை கால நேரத்துக்கு ஏற்ப வரும்.

வீரமணி அவர்களை இப்போது பார்ப்போமா?
1. உட்கட்சி ஜனநாயகம் கோவிந்தா.

2. அடுத்த கட்டத் தலைவர்களை ஓரம் கட்டியவர்.

3. தனது மகனையே வாரிசாக நியமித்தவர்.

ஆக அண்ணா அவர்கள் ஈவேராவை பின்பற்றவில்லை. கருணாதி, வீரமணி ஆகியோர் பின்பற்றுகின்றனர்.

பதிவு முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Madhavan Srinivasagopalan said...

Short but good analysis..

Gopal said...

Simply Superb comparison.

Gopal said...

Simply superb. The factors for comparison are very relevant.

ஒசை said...

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியதால் தான் கலைஞரின், மானமிகு கி.வீரமணியின் பிள்ளைக்குட்டிகள் சீரும் சிறப்புமா இருக்க வாழுறாங்க. பெரியார் கொள்கைகளை பின்பற்றாததால் தான் அண்ணாவின் வாரிசு அட்ரஸ் இல்லாம்ம போனார்? சும்மாவா சொன்னாங்க. "பெரி(யார்)யோர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி"ன்னு.

NAGARAJAN said...

ஒன்று விட்டு விட்டீர்களே?

ஈ வே ராவின் கடவுள் மறுப்பிற்கு எதிர்ப்பாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் அண்ணா மட்டுமே

ராஜ நடராஜன் said...

டோண்டு சார்!நலமா? முன்னாடியெல்லாம் தூங்கி எழுந்தா உங்க பதிவுதான் கண்ணில் தெரியும்.ஒய்ந்துட்டீங்க போல இருக்குது!

உங்க ஒப்பீடு எப்படியிருந்த போதிலும் பெரியார் என்ற பெருசுனாலதான் உங்க மாதிரி பெருசுக கூட மல்லுக்கட்டுவதற்கும் சில ஆட்கள் உருவாகியிருக்கிறாங்க என்பதும் உண்மைதானே?

vizzy said...

கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணாதுரை என்பதை படித்தபோது எனக்கு ஏனோ தனி தமிழ்நாடு,திராவிடநாடு,மூணு படி அரிசியெல்லாம் நினைவில் வந்து தொந்தரவு செய்கிறது.

அமர பாரதி said...

டோண்டு சார், மகர நெடுங்குழை காதனை விட பெரியாரை அதிகம் நெனைக்கறீங்க போல ;-)

Anonymous said...

Very Nice. 100% True.

baleno said...

எப்படியானது தமிழகத்தின் கடந்த காலம்? தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியது.

Ganpat said...

பத்த வச்சுட்டய பரட்ட!!

Arun Ambie said...

Pretty superb analysis. My salute Dondu Sir!

//கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணாதுரை என்பதை படித்தபோது எனக்கு ஏனோ தனி தமிழ்நாடு,திராவிடநாடு,மூணு படி அரிசியெல்லாம் நினைவில் வந்து தொந்தரவு செய்கிறது.// மிகச் சரி. ஆனால் வீரமணி காசுக்காகக் கழகத்துக்குக் கழகம் தாவிய வரலாறு கொண்டவர். இரண்டாவது பொண்டாட்டிக்கு 2 ரூபாய் நாணயத்தின் அளவு பொட்டு வைத்து அழகு பார்த்துக் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, பொட்டு வைத்தவன் காட்டுமிராண்டி, சாமி கும்பிடுபவன் மூடன் என்று கட்சிக்காரனுக்கு கொள்கை விளக்கம் அளிக்கும் நாத்திகோத்தமர் கருணாநிதி. ஆகவே, கொண்ட கொள்கையில் ஒப்பீட்டளவில் ஓரளவு உறுதியாக இருந்தவர் அண்ணா என்று சொல்லலாம்.

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,

எப்டி இன்னும் அதே உற்சாகத்தோடு விடாம பதிவிடுகிறீர்கள் ? பயங்கரமான மோட்டிவேஷன் உங்களுக்கு :-) Hats off !

அன்புடன்
பாலா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது