7/07/2012

பதிவர் தருமி அவர்களுக்கு நன்றி

அவரது இப்பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரிய வந்தது. முதற்கண் அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. கூகளில் தேடி நிகச்சியின் வீடியோவை பிடித்தேன். 22-06-2012 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை கீழே எம்பெட் செய்கிறேன். அந்த வாரம் முழுக்கவே அக்கிரகாரம் ஸ்பெஷல் என எண்ணுகிறேன். பார்ப்போம்.

 

பைதிவே அவரது பதிவின் முதற்பகுதி பற்றி நோ கமெண்ட்ஸ். அந்த விளம்பரத்தின் முழு பின்புலன் தெரியாமல் நான் கூற ஒன்றும் இல்லை.

மற்றப்படி ஜூனியர் சூப்பர் சிக்கர் நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.

தருமி அவர்கள் தனது பிடித்தமின்மையை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அதே போல எனக்கு பிடித்ததையையும் நான் கூறிவிட்டுப் போகிறேனே.

என்ன செய்வது தருமி சார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கர்நாடக சங்கீதத்தை ஆதரிப்பவர்களில் அதிக பட்சம் பார்ப்பனர்களே. ஆகவேதான் அக்கிரகாரம் ஸ்பெஷல் இயற்கையாகவே சோபித்தது. பார்ப்பனர்கள் தமது குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் காட்டும் அக்கறையை மற்ற சாதியினர் செய்ய வேண்டாம் என யார் தடுத்தது?

தமிழ்ழிசை சம்பந்தமாக ஜெயமோகன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு கோட் செய்கிறேன். மீதி வரிகளை அங்கு போய் படித்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஓர் விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல். திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் நண்பர்.
அந்த சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ்மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அந்த தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.
நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்? மரபிசைக்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இசைக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா? 

இப்போது நிகழ்ச்சி பற்றி மேலும் பேசுவேன்.

அடுத்தாத்து அம்புஜம் பற்றிய பாடல் சூப்பர் தூள். சக போட்டியாளர்களில் ஒருத்தியான அப்பெண் அதற்கு தன்னிடத்தில் அமர்ந்தவாறே பிடித்த அபிநயம் பலே ஜோர். சவுக்கார் ஜானகி கெட்டார் போங்கள்.

பலர் பிராமண பாஷை பேச கஷ்டப்பட்டாலும் முயற்சி பாராட்டத் தக்கதே. கீப் இட் அப்.

அன்புடன்,
டோண்டு ராகவன்  

7 comments:

தருமி said...

//அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. //

அப்போ நானிந்த சொற்றொடரை நீக்கி விடலாம் போல் தெரிகிறதே. உங்களுக்கு (மற்றவாளுக்கு ??) இந்நிகழ்ச்சி இவ்வளவு மகிழ்ச்சியளிக்கும்னு எனக்குத் தெரியாது.

ம.தி.சுதா said...

மிகவும் ரசனைக்கு தீனி போடும் நிகழ்ச்சியே...

அங்கே இருக்கும் சுட்டிகளுக்காகவே திருப்ப திருப்ப பார்க்கவே தோணும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

tamil said...

தருமியின் பதில் இட்ட பின்னூட்டம் இங்கும்

இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செல்லுபடியாகாது.ஏனெனில் ஒருவரின் வீடு பொது இடம் (உ-ம் சாலை,குளம்) அல்ல,அது அரசின் உடமையும் அல்ல.100% அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை இருக்கிறது.அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.ஹிந்துவின் கருத்தும், விளம்பரம் தருவோரின் கருத்தும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்.என் வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,யாருக்கு வாடகைக்க்கு விட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு.
இதில் இன்னாருக்கு விற்க வேண்டும் என்றெல்லாம் பிறர் கட்டளையிட முடியாது.
அரசு வேலை,கல்வி என்றால் இட ஒதுக்கீடு என்று சமத்துவத்தை மறுக்கிற பேர்வழிகள்,அதை ஆதரிக்கிற பேர்வழிகள் முதலில் அதற்கு வழி வகுக்கும் அரசியல் சட்டம்தான் ஒருவர் தன் விருப்பப்படி தன் சொத்தை விற்க/பயன்படுத்த உரிமை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
பிராமணர்களுக்கு எதிராக ஒரு கோடி தருமிகள் வந்தாலும் பிராமணர்கள் அத்தனை தடைகளையும் மீறித்தான்
சாதிக்கிறார்கள்.பெரியாரின் செல்வாக்கு இந்தியாவில்தான், பிராமணர்களுக்கு உலகமே வீடு என்றான பின் தருமிகள்,பெரியார் போன்ற விரோதிகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.
தருமி ஐயா, தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

dondu(#11168674346665545885) said...

சபாஷ் தமிழ்.

பார்ப்பன வெறுப்பளர்களுக்கு நம்மை மாதிரி சிலர் வந்து பதிலடி கொடுப்பது அவசியம்.

இதுவரை உங்கள் பின்னூட்டம் தருமியின் பதிவில் வரவில்லை. பின்னால் அனுமதிப்பாராக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தருமி said...

//இதுவரை உங்கள் பின்னூட்டம் தருமியின் பதிவில் வரவில்லை. பின்னால் அனுமதிப்பாராக இருக்கும்.//

dondu,
அதற்குள் பொறுக்க முடியவில்லையா? என்ன அவசரம் ...!!

Raghavan said...

Whenever I see arguments in the comments section, I remember a quote from a Clint Eastwood's movie (Dead Pool 1988):

Opinions are like assholes; everybody has one and everybody thinks everybody else's stinks..

So true...Honestly we are wasting times in haranguing over issues which is leading us nowhere...

நம்பள்கி said...

Let me add my two cents from Clint's movie that adds support to Mr. Ragavan, I suppose, he is right! People like Tamil comes in when X goes out...

"One bastard goes out; another bastard comes in."

Quote, unquote from the movie, "The Good, the bad and Ugly..

Sincerely,
Nambalki

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது