பதிவு இப்பாடலுடன் துவங்கினாலும் பதிவு முழுக்க அது பற்றியே அல்ல. அது பற்றி பிறகு, முதலில் பாட்டைக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.
இப்படத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளுடனெயே என் பிரச்சினை. “நிகழும் பார்த்திப ஆண்டின் ஆவணித் திங்கள் 20-ஆம் நாள்” எனத் துவங்கும் அவ்வரிகளை கல்யாணங்களில் பாடும் மெல்லிசைக் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்யாணம் நடக்கும் சரியான தமிழாண்டு, மாதம் ஆகியவற்றுடன் பெண்ணின் தந்தையின் பெயரையும் நுழைத்துப் பாடுவார்கள்.
இருக்கட்டுமே இதில் உன் பிரச்சினை என்ன என கேட்கும் முரளி மனோகருக்கான எனது பதில் இதுதான்..
இப்பாடல், வரும் நெஞ்சிருக்கும் வரை என்னும் திரைப்படம் சமீபத்தில் அறுபதுகளில் வந்தது. சென்னை மெரீனா பீச்சருகில் இப்போதும் காணக்கிடைக்கும் உழைப்பவர் வெற்றி சிலை அப்படத்தில் காட்டப்படும். அச்சிலையோ சமீபத்தில் 1959-ல்தான் வந்தது. ஆனால் பார்த்திப ஆண்டு? 1945 ஏப்ரல் முதல் 1946 ஏப்ரல் வரை (நான் அந்த ஆண்டில்தான் பிறந்தேன்). ஆக, இதைத்தான் பொருட்குற்றம் என்பார்கள். ஆக, இப்பாட்டில் வரும் நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 20-ஆம் நாள், என்பது சுமாராக செப்டம்பர் மாதம் 5, 1945 ஆக இருக்கும். பை தி வே அன்று புதன்கிழமை.
ஆனால், சமீபத்தில் அறுப்துகளின் துவக்கத்தில் வந்த “பார் மகளே பார்” படத்தில் 18-கேரட் தங்கம் பற்றிய பிரஸ்தாபம் கதையின் காலகட்டத்திற்கு ஏற்ப வந்ததை நோக்கினால் காட்சிகளில் லாஜிக்குக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். எதற்கும் இருக்கட்டும் என அப்படத்திலிருந்தும் ஒரு பாடலை இங்கே போடுகிறேன்.
ஆனால் சில காட்சிப் பிழைகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விடுவதும் நடக்கும்.உதாரணத்துக்கு பார்த்தால் பசி தீரும் என்னும் படம்.
அது அறுபதுகளின் துவக்கத்தில் வந்தது. கதை நடக்கும் காலமோ 1945-46. அப்படத்தில் அறுபதுகளில் உற்பத்தியான ஸ்டேண்டர்ட் ஹெரால்ட் கார் வரும். இப்போது அப்படத்தைப் பார்த்தால் யாருக்கு அந்த உண்மை தெரியப் போகிறது?
நண்பர் ஆசாத் சொல்வது போல, “சல்தா ஹை”..
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
6 hours ago
5 comments:
Frankly, we would be so engrossed with the story, songs and of course, the great acting by Sivaji that such obvious errors might have missed our attention. Also, may be, then, we didn't have this much analytical skills. However, it is interesting to note them when you point out.
இருக்கலாம், ஆனால் நக்கீரன் ஒத்துக் கொள்ள மாட்டாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல அலசல்...
நன்றி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
டைமிங் பத்தி சொல்லுறீங்க...இன்னைக்கு ஆவணி அவிட்டம் அப்படீங்குறாங்க... மாசமோ ஆனி நட்சத்திரமோ உத்திராடம். ரெண்டுல ஒன்னு கூட பொருந்தல... இந்த விஷயத்தை எப்படி தீர்மானிக்கிறார்கள்...
//இன்னைக்கு ஆவணி அவிட்டம்//
அது பஞ்சாஙத்தைக் கணிப்பவர்களது வேலை. எனக்கும்தெரியாது.
ஆனால், வரும் ஆண்டுக்கான அத்தனை பண்டிகைகளும் அதில் வருட ஆரம்பத்திலேயேகாட்டபட்டுவிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment