பலரும் இது பற்றி எழுதி விட்ட நிலையில் நானும் எழுதலாம் என இருக்கிறேன். .
லட்சியம் எல்லாம் ஓக்கேதான். ஆனால் அவை பிழைப்புக்கு எதிராக வரும்போது அவற்றுக்காக ரொம்பவும் அலட்டக் கூடாது என்பதுதான் எனது கொள்கையும். லீனாவின் தொழில் என்ன? படம் எடுப்பது. அதில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. அவருக்கு ஓர் ஆஃபர் வருகிறது. அதன்படி எடுக்கிறார். ஸ்க்ரிப்டை அவராக எழுதினாரா அல்லது எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை அவர் எடுக்க வேண்டியிருந்ததா என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். அவராகவே ஸ்க்ரிப்டை எழுதினாலும் அவர் என்ன எழுத வேண்டும் என்பது அவரிடம் கூறப்பட்டிருக்கும் என்பதே நிஜம்.
சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை அங்கவை சங்கவை காமெடிக்காக சாடினார்கள். அப்போதும் நான் சொல்வேன் அவர் அப்படத்தில் நடிகர், எழுதிக் கொடுத்ததைத்தான் நடித்தார் என. அவர் மாட்டேன் என்றால் என்ன நடக்கும். பேசாமல் அவரை தூக்கி விடுவார்கள். அதன் மூலம் வரும் பொருள் இழப்பை அவரை சாடிய சும்பன்களா கொடுப்பார்கள்? நல்லா வாயில வருது.
இவங்களே வாய்ப்பு கிடைச்சா அவ்வாறு செய்யக் கூடியவங்கதான். எனக்கு தெரிஞ்ச ஒரு பிளாக்கர் அமெரிக்காவை கண்டபடி சாடுபவர். ஆனால் கிரீன் கார்டுக்கும் அப்ளை செய்தவர். சொந்தப் பெயரில் எழுத தில் இன்றி புனைப்பெயரில் எழுதுபவர். எப்படி எழுதுவார்? அவர் அவ்வாறு செய்யாது சொந்தப் பெயரில் எழுதியிருந்தால், அவற்றை மொழிபெயர்த்து அமெரிக்கர்களுக்கு தெரிவித்திருந்தால்? ஒன்றும் தலையை எல்லாம் எடுக்க மாட்டார்கள். போடா உன் ஊருக்கே மயிராண்டி என்றுதான் அனுப்புவார்கள். அதுவே இவருக்கு இடிதானே.
கம்யூனிசத்தை விதந்தோதும் இரு பதிவர்கள் - அவர்கள் பெயர் வேண்டாமே - மல்டி நேஷனல் கம்பெனிகளில்தான் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் தான் செல்ஃப் அப்ரைசலில் 40% இன்க்ரிமெண்ட் பெற்றதை என்னிடம் சந்தோஷமாகக் கூறினார்.
நானே ஐடிபிஎல்-ல் வேலை பார்த்த சமயம் எல்லாமே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, ஒன்றைத் தவிர. அதாகப்பட்டது அல்ஜீரியாவுக்கு சென்று பணி புரிய வேண்டும் என்பதே. இஸ்ரேலுக்கு விரோதியான அந்த நாட்டுக்கு பணி செய்ய வேண்டுமா என்ற கலக்கம் இருந்தது வாஸ்தவமே. ஆனால் அதற்காக கிடைத்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா? இது வேறு, அது வேறு. ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை வரவிலை என்பதில் போனஸ் மகிழ்ச்சிதான்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தளம் ஒன்றிலிருந்து மொழிபெயர்ப்பு வேலை வந்தது. தயங்காமல் செய்து அனுப்பினேன். அவ்வளவுதான்.
ஆனால் சில இடங்களில் சட்டவிரோதம், பின்னால் மாட்டிக் கொள்ளலாம் என்பது தெரிந்தால் அவ்வேலைகளை ஏற்கலாகாது. ஆனால் அதுவும் சுயபாதுகாப்பில்தான் வரும்.
எது எப்படியானாலும் ஒரு செய்கையை மேற்கொள்ளும் முன்னால் எல்லாவற்றையும் பார்த்தல் நலம். ஆனால் அது சுய விருப்பத்தில் இருக்க வேண்டும். அவ்வளவே.
இதற்காக சாடும் மற்றவர்கள் நாசமாக போகட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
12 comments:
நல்லா இருக்கிங்களா சார். உடல்நிலைகள் வழக்கத்திற்கு வந்துவிட்டதா ?
அச்சச்சோ!நீங்கள் உடல் நலமின்றி இருக்கிறீர்களா?நலம் பெற வாழ்த்துக்கள் சொல்லி கூடவே தமிழ் பண்பையும் காப்பாற்றி விட்டேன்.
இப்பொழுதுதான் விவகாரம் பற்றி வருண் குழப்பினார்.நீங்க ஓரளவுக்கு பரவாயில்லை:)
இதெல்லம் 'செய்வதை தெளிந்து செய்யாததால் வரும்' சிக்கல். அல்லது தீவிர கம்யூனிசம் பேசுவோர் தமக்கென தெளிவான 'நன்னடத்தைக் கோட்பாடுகளை' (code of conduct) உருவாக்காததாலும் இருக்கலாம்.
ஆதாய முரண் (conflict of interest) என்பது எல்லா வேலைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, 'ட்வுன் டு எர்த்' எனும் சுற்றுச்சூழல் பத்திரிகை எல்லாவிதமான 'சுற்றுச்சூழல் எதிரிகளின்' விளம்பரங்களையும் வெளியிடும். அவர்களுக்கு எதிரான கட்டுரைகளையும் கூடவே வெளியிடும். விளம்பரங்களின் கருத்துக்கும் பத்திரிகைக்கும் தொடர்பில்லை என்கிற விளக்கமும் அதில் இருக்கும்.
இது ஒருவிதமான நன்னடத்தைக் கோட்பாடு (code of conduct) . இங்கே ஆதாய முரண் (conflict of interest) இருக்கலாம்.
அதுவே, புகையிலை எதிர்ப்பு குழுக்கள் அனைத்தும் உலக அளவில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இந்தக் கூட்டமைப்பில் சேர வேண்டுமானால் - நான் எந்த புகையிலை நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி எதுவும் பெற்றது இல்லை. இனி பெறவும் மாட்டேன் - என்று உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும்.
இது இன்னொரு விதமான நன்னடத்தைக் கோட்பாடு (code of conduct). இங்கே ஆதாய முரண் (conflict of interest) இருக்கக்கூடாது.
லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ், வினவு - இதுபோன்றோரின் நன்னடத்தைக் கோட்பாடு என்ன? ஆதாய முரண் என்று வரும்போது அதற்கு விடைதேடும் வழி என்ன? - என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை.
நாய் வித்த காசு குலைக்காது...என்று ரொம்ப சிம்பிளாக எடுத்துக்கொள்ளவேண்டும்..
ஐயா, நீங்கள் இப்படி எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. உதாரணத்துக்கு:
1. எனக்கு வயது 62 (ச்சும்மா ஒரு பேச்சுக்கு ;) ); ஒரு 20 வயதில் 'சிறுசா இளசா' ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி (அந்த பொண்ணு சம்மதத்தோட) நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்; அந்த நேரம் பார்த்து, என்னை விட வயசான ஒரு 'பெரிசு' "ஐயா இதென்ன அநியாயம்? அறுபது இருபதை மணப்பதா? அநியாயம்! சமூக அநீதி" என்றெல்லாம் 'முழங்கி', ஒரு கும்பலோடு வந்து, எனது (3வது) திருமணத்தை நிறுத்தி விடுகிறது. விதியை நொந்து கொண்டு வேறு வழி கிடைக்காமல், நானும் வாளாவிருந்து விடுகிறேன். ஆனால், என்னை விட பத்து வயது அதிகமுடைய அதே பெரிசு சில நாட்களுக்குப் பின் வெறும் 24 வயது நிரம்பிய ஒரு மங்கையை மணந்து கொள்கிறது. இப்போ நான் என்ன செய்ய வேண்டும்? "வாழ்கைன்னா சமரசங்கள் வேணும்" - என்று நான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு வாளாவிருந்து விட வேண்டுமா?
2. நான் ஒரு சராசரி இந்தியக் குடிமகன்; அன்றாட லௌகீக விஷயங்கள் அன்றைக்கு என்னென்ன அளவில் நடக்குமோ அவற்றைப் பின்பற்றுபவன்; உதாரணமாக ஒரு நிலம் வாங்கி அங்கு ஒரு கட்டிடம் எழுப்பப் போகிறேன் என்று வைத்துக் கொள்வோம்; அதற்கு நான் புரோகிதர்களை வைத்து பூமி பூஜை நடத்தி விட்டுத்தான் கட்டிடம் கட்ட ஆரம்பிப்பேன். ஒரு தொழில் துவங்கினால் புரோகிதர்களை வைத்து கணபதி ஹோமம் செய்து விட்டுத்தான் துவங்குவேன். ஆனால் பகுத்தறிவில் பல் துலக்கும் என்னுடைய நண்பன், அன்றாடம் என்னைப் பார்த்து எள்ளுவதோடு மட்டுமல்லாமல், நான் புனிதமாக மதிக்கும் சிலவற்றை அவமதிக்கிறான்; ஆனால் அவன், தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றைப் புரோகிதர்களைக் கொண்டு வேதங்கள் முழங்க நடாத்திக் கொள்கிறான்; மற்றும் அதற்குப் பலவிதமான சப்பைக் கட்டுகள் கட்டுகிறான். இதற்கும் நான் வாளாவிருந்து விட வேண்டுமா?
கொள்கை என்ற பெயரில் எல்லாவற்றையும் மூர்க்கமாக எதிர்க்கும் கொள்கைக் கொம்பன்கள், தங்களுக்கென்று வரும்போது சத்தமே இல்லாமல் சமரசம் செய்து கொள்வது; பிறகு, "ஆமாம் நான் இதுகாறும் தவறாகக் கருத்துக் கொண்டிருந்தேன்; இப்போது உணர்ந்து விட்டேன்" என ஒத்துக் கொள்ளாமல், அதற்கு பலவிதங்களிலும் சப்பைக் கட்டுவது; வருங்காலத்திலாவது தங்களை மாற்றிக் கொள்ளாமல் மீண்டும் அதே கொள்கையை முழங்குவது; குறைந்தபட்சம் அடுத்தவர் மனதையாவது நோகடிக்காமல் அமைதியாகவாவது இல்லாமல், அதே பழைய சவடாலை ஆரம்பிப்பது; இவற்றுக்கு அதனால் பாதிக்கப்பட்ட அல்லது மனம் நோகடிக்கப்பட்ட சாராரிடமிருந்து இந்த முணுமுணுப்புக் கூட கூடாதா? இதெல்லாம் ஒரு வடிகால் தானல்லவா?
கடந்த மற்றும் அதற்கு முந்தைய 'திராவிட மாயை' (சிவாஜி vs கருணாநிதி ஆலயப் பிரவேசம்) துக்ளக்கில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; கிட்டத்தட்ட இதேதான்.
ஈவேரா அதுக்கப்புறம் பொருந்தாத் திருமணம் பற்றி ஒண்ணுமே சொல்லல்லைன்ங்கறதை கவனிக்கலையா?
இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டதாக நான் கருதும் அந்த நாத்திகப் பதிவரும் இப்போ அடக்கித்தான் வாசிக்கிறாரு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திடீர்னு நாத்திகத்தை பட்றியும் திராவிட கட்சிய பட்றி ஒரு படம் பாராட்டி repeat பாராட்டி எடுக்கனும்.... neer எடுப்பீரா... மாட்டீரா
அய்யா நான் முன்னர் எழுதிய கமெண்ட் இடம் பெறவில்லை...
கேள்வி இதுதான்
1) பெரியாரைப் புகழ்ந்து (அவர் சொற்பொழிவு) ஒரு படத்தை நீங்கள் எடுத்தால் எப்படி இருக்கும்
2) திராவிட இயக்கங்களைப் போற்றி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும்
என்பதுதான் அது
@பத்ரினாத்
நான் மொஇ பெயர்ப்பாளன். ஆகவே அது சம்பந்தமான கேள்விகளுக்குத்தான் பதிலளிக்க இயலும்.
அம்மாதிரி மொழிபெயர்ப்புகள் வந்தால் கட்டாயம் செய்வேன், ஆனால் துட்டு வருமா என்பதை பார்த்துத்தான் செய்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அய்யா... என் கேள்விக்கு மீண்டும் பதில் (சரியான பதில்) இல்லை... பரவாயில்லை... மொழிபெயர்ப்பு என்பது வேறு.... டாடா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி என்று கம்யூனிஸ்டுகள் கோஷம் போடுகிறார்கள்... லீனா இடதுசாரி என்று தன்னைக் கூறிக் கொண்டால் எத்தனை முரண்
@பத்ரிநாத்
எல்லாம் நீங்கள் என்ன முறையில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.
டாடா நிறுவனத்தில் வேலை கிட்டாத வெளி ஆள் அதன் நிறுவனத்தில் வேலை செய்யும் இடது சாரியை குற்றம் சொல்வான்.
அதே போல லீனா அளவுக்கு படம் எடுக்க வக்கில்லாது, டாட்டாவினால் கூப்பிடப் பெறாத ஒன்றரையணா பேர்வழிகளும் லீனாவை குறை சொல்வர்.
அதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சமூகநீதித்தமிழன் சொல்வதுவே எனக்கு சரி என்று படுகிறது.
இவர்கள் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு வேலை பார்த்ததாகத் தோன்றவில்லை. மனசாட்சியை விற்று வெளிநாட்டுக் கைக்கூலியாக செயல்பட்டுள்ளார்கள் என்று நம்புவதைத் தவிற வேறு வழியில்லை என்று தோன்றுகிறது.
"Useful idiots" they are.
Post a Comment