கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.
ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.
இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.
இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.
1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.
2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.
3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.
4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.
(ஆனந்தவிகடன், 01.08.2012).
பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?
அன்புடன்
டோண்டு ராகவன்
வழிவழியாக வந்தமைவோர்
-
அன்புள்ள ஜெ வெண்முரசு நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்தபோது நான் உங்களுக்கு சில
கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். அந்நாவல்களைச் சுருக்கவேண்டும், எடிட்
செய்யவேண்டு...
22 hours ago
6 comments:
சரியாச் சொன்னீங்க! இந்த பச்சோந்தியின் நிறத்தை தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்!
இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in
உங்களுக்கென்ன, நொட்டை சொல்லீட்டு போய் பொட்டிக்கு முன்னால உக்காந்து பிரஞ்சுகாரனுக்கோ ஜெர்மன்காரனுக்கோ துபாஷியா வேலை பாத்து வெந்த திண்ணுக்கிட்டு அதுல திருப்தியும் பட்டுக்குவீங்க. எங்களுக்கு அப்படியா? பண்ணை வீட்ல குடியிருக்கணும், காலேஜு கட்டி கொள்ளையா சம்பாதிக்கணும், பையனை அமைச்சராக்கணும், கொலை கேஸுல இருந்து தப்பிக்கணும், இன்னும் எத்தனையோ. வெறும் டாக்டரா இருந்தா இதெல்லாம் முடியுமா? சும்மா உக்காந்துக்கிட்டு சொல்றதெல்லாம் ஈசிதான் அப்பு!! அதுக்கு கொஞ்சமாவது ஆசையோ முயற்சியோ இருந்தா தான் அதுல உள்ள வலி சிரமம் எல்லாம் தெரியும்.
ஆட்சிக்கு வந்தால் தானே மதுவிலக்கு எல்லாம் ... !!! சரி இன்னுமா அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன பத்திரிகைகள் .. இல்லை என்றால் காசுக் கொடுத்து பேட்டி எடுக்கச் சொல்கின்றார்களோ என்னவோ.
அட நீங்கவேற டோண்டு சார். மருத்துவர் மாலடிமை சவுக்காலடிக்கும் வசனத்தை நீங்க சொன்ன மாதிரி சொல்லலையாம். தம் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் தவறிழைத்தால் அவர்களை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம் என்றுதான் சொன்னாராம். தானோ தன் உறவினர்களோ பதவிக்கு வந்தால்-லாம் சவுக்கால் அடிக்க சொல்லலையாம். பா.ம.க-வோட ஊதுகுழலா இருக்கிற ஒரு பதிவர் சொன்னாரு ஒரு தடவை.
இன்னொரு தமாஷ் படிச்சேன். இனி சூர்ய சந்திரர் உள்ளவரை எந்த கட்சியோடும் கூட்டணி கிடையாதாமே ? அதுவும் விகடன் பேட்டியிலதானா ?
யப்பா யப்பா யப்பா .... வன்னியர்களே எப்படி இன்னும் இந்த ஜந்துவ நம்பி பின்னாடி ஓடுராங்களோ ?
விகடன் என்றாலே நகைச்சுவை இதழ்தானே அதனால்தான் அதில் இந்த மாதிரி காமெடி பேட்டி எல்லாம் வருகிறது
ப்ளாக் படித்து ரொம்ப மாசம் ஆச்சு. இப்ப எல்லாம் உங்க பதிவுக்கு அருள் வருவதில்லையா ? :-) என்ன அநியாயம் ! உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பாரே ?
Post a Comment