9/18/2012

விடுதலை புலிகளை பற்றிய ஒரு தூரப்பார்வை

19.9.2012 தேதியிட்டு வந்த "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை அபி அப்பா அவர்கள த்னது இப்பதிவில் வெளியிட்டிருந்தார். முதற்கண் அவருக்கு என் நன்றிகள்.

சோ அவர்கள் எழுதியது கீழே:

1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.

இப்போது டோண்டு ராகவன். புலிகள் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய விபரீதங்கள் இப்போதும் மன நடுக்கத்தையே கொடுக்கின்றன.

இப்போதைய நிலையில் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என சீன் போடும் பேர்வழிகள் தமிழர்கள் நலனுக்கு விரோதமாகவே உள்ளனர்ர் என்பேன்.


பை தி வே அவரது அப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டும்தான் இது வரை உள்ளது. மீதியை பிறகு மட்டுருத்துவார் போல.

சோ சொன்னது அத்தனையும் உண்மை.

அதை விடுங்கள். தனது குடும்பத்தினர் நலனுக்காக கடைசி வரை மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்தார் கலைஞ்ர் ஆட்சியில் இருந்தவரை.

இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவரை நம்ப வேண்டும் எனக் கூறும் உங்களைப் போல சில தீவிர கலைஞர் ஆதரவாளர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாதுதான்.

சரிஅவரை விடுங்கள். அவர் அப்படித்தான், அவரது கலைஞர் ஆதரவு வேறுவித்மாக எழுத விடாது அவரை.

இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு சம்பந்தமாக சோ அவர்கள் எழுதியதை அதே துக்ளக் கட்டுரையில் காணலாம். 

அன்புடன்,
டோண்டு ராகவன்.


28 comments:

indrayavanam.blogspot.com said...

சரியான பார்வை நல்ல அலசல்

baleno said...

நூறு வீதமும் உண்மைகள்:

யுவகிருஷ்ணா said...

இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் மாதிரி எழுதியிருக்கிறார் சோ :-(

மு மாலிக் said...

சோ அவர்கள் பல இடங்களில் சரியாக சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த கமெண்ட்டினை நான் இடுவதற்கு முக்கியக் காரணம், நான் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயம்.

அது என்னன்னா, அந்த வெளிநாட்டுப் புலி-பிரச்சாரகர்கள், தங்கள் ஊடகங்களில் இஸ்ரேல் சார்புப் போக்குகளையும் அது சார்ந்த கருத்துக்களையும் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் அந்த‌ நிலைப்பாடு உங்கள் நிலைப்பாட்டோடு ஒத்து போகக்கூடிய ஒன்று.

புலிகள் தாங்கள் செய்யும் தாக்குதல்களை இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களோடு ஒப்பிட்டுப் புலங்காகிதம் கொள்வார்கள். இஸ்ரேலின் பயங்கரவாதத்தினையே தனது பயங்கரவாதமாகக் கொண்டு செயல்பட்டக் கூட்டம் அந்த புலிகள். இப்போ அந்த ஊடகங்களில் சில மூடப்பட்டுவிட்டன. அவைகளில் ஒன்று, "புதினம்" என நினைக்கிறேன்.

இஸ்ரேல் போலவே இனவெறி கொண்டு திரிந்த கூட்டம் அந்த புலிகள்.

புலிகள் விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல் ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல‌ பொது மக்களைக் கொல்லுதல் என இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.

வில்லவன் கோதை said...

நூறு சதவீதம் ஜால்ரா.சோவுக்கு ஒரு ஒலிப்பெருக்கி அவ்ளவுதான்.

ஆதித்த கரிகாலன் said...

விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளில் ஒளித்து நின்று போர் புரிந்தார்கள் என்பதை சோ போய் பார்த்தாரா இல்லை ஞான திருஷ்டியில் உணரந்தாரா? அப்படியே ராஜபக்ச சொல்வதை வாந்தி எடுகின்றாரே?
சரி சோ ஞான திருஷ்டியில் பார்த்தது உண்மை என்றே ஒருவாததிற்கு வைத்துகொள்வோம். பாலியல் வல்லுறவு நடத்தி சிதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், சித்திரவதை செய்யப்பட்டு கட்டிவைத்து சுட்டு கொல்லப்படும் ஆண்கள் இவற்றை எல்லாம் எவ்வாறு நியாயப்படுதுவீர்கள்? இல்லை இதெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி அதனால் ராஜபக்சவுக்கு பாராட்டு தெரிவிக்கிண்றீர்களா?

dondu(#11168674346665545885) said...

//இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் மாதிரி எழுதியிருக்கிறார் சோ :-(//
புலிகளின் யோக்கியதையை ஆரம்பத்திலிருந்தே உரித்துக் காட்டியவர் சோ அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.

1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.

அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

புலிகளைப்பற்றிய ஒரு கணிப்புக்கு நூஃமனின் -ஒரு இலங்கை தமிழர் -இண்டெர்வ்யூ படிக்க.

http://www.kalachuvadu.com/issue-153/page42.asp

இந்த 30 வருடப் போராட்டத்திற்கும் இத்துணை இழப்புகளுக்கும் பிறகு இது போன்ற துயரம் தொடரக் காரணம் புலிகளின் அணுகுமுறைதானா?

அப்படித்தான் நான் சொல்லுவேன். புலிகள் இயக்கம் அடிப்படையிலேயே ஒரு ராணுவ அமைப்புத்தான். அவர்களுக்கு என்று தெளிவான, யதார்த்தமான அரசியல் பார்வை இல்லை. அரசியல் நெளிவுசுளிவுகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. 1987இல் இந்திய நிர்ப்பந்தத்தால் வந்த தீர்வை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டு, தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள். மக்களை அரசியல்மயப்படுத்தி மக்கள் சக்தியில் நம்பிக்கை வைக்காமல் ஆயுத முனையில் மக்களை வழிநடத்தினார்கள். தாங்கள், தாங்கள் மட்டுமே, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதில் உறுதியாக நின்றார்கள். தங்களுடன் கருத்துவேறுபட்டவர்களை எல்லாம் துரோகிகள் என்று அழித்தார்கள். அவர்கள் நம்பியிருந்த ஆயுதப்போர் என்னும் ஒற்றை அணுகுமுறையால் முதலில் தங்கள் மக்களிடமிருந்தே அன்னியப்பட்டார்கள். பிறகு வெளியிலிருக்கும் எல்லா ஆதரவுச் சக்திகளையும் இழந்தார்கள். அவர்களின் தோல்வி என்பது தவிர்க்க முடியாத தற்கொலைதான்.



புலம்பெயர் தமிழர்கள் இன்னும் தமிழ் ஈழக் கனவில் இருக்கிறார்கள். நாடுகடந்த தமிழ் ஈழம் ஒன்றையும் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்தலுக்கான முயற்சியாகவே தெரிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது எந்தவகையிலும் உதவாது.


இலங்கையின் எல்லாச் சிறுபான்மையினரையும் அது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிங்கள பௌத்த தீவிரத் தேசியவாதத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இதுதான் புலிகளின் இந்த 30 ஆண்டுக்காலப் போரின் பலன் என்பது துயரமான விடயம். சிங்கள இதழ் ஒன்றுக்கான நேர்காணலில் “புலிகள் தமிழ் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக் கடலில் மூழ்கிவிட்டனர்” எனச் சொல்லியிருந்தேன். இதுதான் யதார்த்தம். புலிகளின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். என்றாலும் பிரதான காரணம் புலிகளின் தற்கொலை அரசியல்தான். ஈழத் தமிழ் மக்களிலிருந்தும் ஏனைய இலங்கை மக்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சர்வதேச நாடுளிலிருந்தும் அவர்கள் தனிமைப்பட்டதற்கு அதுதான் காரணம்.


Unknown said...

/////இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி //

இந்த வரிகளை வாசிக்கும் ஒவ்வொரு ஈழ தமிழனுக்கும் இதை எழுதியவரை செருப்பாலே அடிக்க வேண்டும் போல தோணும்....வாழ்ந்தவர்களும் அனுபவித்தவர்களும் நாம்!

அந்த வரிகளுக்கு மேலும் வாசிக்க விரும்பவில்லை!

dondu(#11168674346665545885) said...

விடுதலைப் படையை தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசு த்வறிழைத்தத்து.தமிழ் தெரியாத வீரர்களை நியமித்தது.

மேலும் பெண்கள், குழந்தைகள் என சகட்டுமேனிக்கு பலரிடமும் பெல்ட் பாம் வைத்து அனுப்பினர் புலிகள்.

இன்னொரு விஷயம், எந்த ராணுவமாக இருந்தாலும் சில அத்துமீறல்கள் நடக்கும்தான். அதை நியாயப்படுத்தவில்லை, ஆனாலும் அதுவும் ஒரு நிஜம்.

எல்லாமே இங்கு ஒன்று சேர்ந்ததுதான் சோக்ம்.

//இந்த வரிகளை வாசிக்கும் ஒவ்வொரு ஈழ தமிழனுக்கும் இதை எழுதியவரை செருப்பாலே அடிக்க வேண்டும் போல தோணும்//.
அதே உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த புலிகளையும் செருப்பால் அடிக்க நான் விழைகிறேன். முக்கிய குற்றவாளி பிரபாகரன் தூக்கு தண்டனையிலிருந்து தஃப்பித்தது ஒரு வெட்கக்கேடு என்கிறேன் நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு மாலிக் said...

மாத்தியோசி-மணி எனும் பதிவர் உங்களோட இந்தப் பதிவுக்கு பதில் எழுதியிருக்கிறார். வெள்ளைக் காரன்கள் கூட அவர்களது போராட்டத்தினைக் கேட்டுவிட்டுப் போகிறானாம். வீடியோ கவேரேஜே பண்ணுறான். "மெக்டொனால்ட்ஸ் பர்கர்" சாப்பிட்டுக்கிட்டு உண்ணாவிரதம் இருந்து இங்கிலண்ட் அரசுக்கு 50 மில்லியன் பவுண்டு ஆப்பு வைத்த புலி ஆதரவாளர்களின் சாதனையைப் பற்றி "மாத்தியோசி-மணி" எனும் பதிவர் மூச்சு விடவே இல்லை. ரகசிய வீடியோவினை லண்டன் போலீசே எடுத்தது. இப்படித்தான் அவர்களது பிரச்சாரம். வெள்ளைக் காரன் நின்னு கேட்கிறானாம்.

Anonymous said...

//இன்னொரு விஷயம், எந்த ராணுவமாக இருந்தாலும் சில அத்துமீறல்கள் நடக்கும்தான். அதை நியாயப்படுத்தவில்லை, ஆனாலும் அதுவும் ஒரு நிஜம்.//

ஐயா (Narasimhan Raghavan) a.k.a. dondu, அப்படினா, தமிழ் நாட்டுல இராணுவ ஆட்சி நடக்கும் போது தற்செயலாக உங்கள் வீட்டு பெண்களை அவர்கள் கற்பழித்து விட்டால் (மன்னிக்கவும், எனக்கு வேறு உதாரனம் கிடைக்கவில்லை) நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா;? இல்லை, எந்த ராணுவமாக இருந்தாலும் அப்படித்தான் செய்யும் என்று இங்கு வந்து அதை செய்தியாக்கி ஒர் வலைப்பதிவு எழுதுவீர்களா?

உங்களை யாரு அந்கு அமைதிப்படை அனுப்பச்சொன்னது? எதற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தீர்கள்? (மொய் எழுதினீர்கள்?) இற்றும் இராமேஸ்வரம் மீனவர்களிடம் கேட்டுப்பாருங்கள், புலிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை, தங்களுக்கு சொந்தமான, கச்சத்தீவில் தமிழர்களால் எந்த பயமும் இன்றி மீண் பிடிக்க முட்ந்தது. ஆனால் இப்பொழுது என்ன நிலமை, கடந்த்த 2 வருடங்களில் மட்டும் ஏராளமான் மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமன்றி சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதெல்லாம், "சோ" விற்கு ஏன் தெரியவில்லை? ஏன் அவர், மீண் சாப்பிடுவதில்லை என்பதனாலா?

இயற்கை வளமான தண்ணீரை வேண்டுமென்றே கர்நாடகம் தேவைக்கும் அதிகமான dams கட்டி, தடுத்து, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறது. அது போதாமல், இன்றுவரை சகோதர சகோதரிகளாக இருந்த கேரள மக்களை பகைவர்களாக்கி, அரசியல் நோக்கிற்காக, போலியான காரணங்களைக் உருவாக்கி, முல்லைப் பெரியார் அணையை தரை மட்டமாக திட்டமிடுவது. இலங்கைக்கு மின்சாரம் விற்பதற்காக, கூடங்குளதிதில், அணுமின் உலை கட்டுவது. (அந்த பணத்தை வைத்து சரியான் solar power plant கட்டியிருக்கலாம்).

இதெல்லாம், ஏன் உங்களுக்கும் உங்கள் எழுட்தாளர் "சோ" விற்கும் தெரியவில்லை என்பது எங்களுக்கு புரியவில்லை.

ஒருவேளை, இதெல்லாம், சகஞம் என்று எழ்துவீர்களோ?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், ஒரே ஒரு மனிதனுக்கு(தமிழனோ, தெலுங்கனோ, மராத்தியோ, பாகித்தானனோ), துன்பம் இழைக்கப்பட்டாலும் அப்போது, அடுத்த மனிதன், அவனை காப்பாற்ற முயல்வதுதான் இயற்கை மற்றும் சகஞம் என்று சொல்லலாம். ஆனால அதை ஏற்றுக்கொள்வது ஐயோக்கியத்தனம்.

மொழிவாரியான மாநில பிரிவிணையின் போது, முதலில், நமது மொழியின் பெரும்பாண்மையை இழந்தோம், அடுத்து: பத்மநாபர் கோவில், அடுத்து: முல்லைப் பெரியார் அணை, அடுத்து: பெங்களூருவின் பெரும்பாண்மையான பகுதி இப்படியாக இன்னும் ஏராளம் இருக்கின்றன. இப்போது மனிதனுக்குரிய மாண்பினையும் இழந்து தமிழன் நடுத்தெருவில் இருக்கிறான். என்ன செய்யலாம், நிலாவிற்கு விமானம் ஏறி போய்விடலாமா?

poornam said...

அப்பாடா! வலையுலகில் புலிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பதிவுகளையே பார்த்து நொந்த மனதுக்கு ஆறுதல் உங்கள் பதிவு. முதுகெலும்புள்ள எழுத்துக்கு வணக்கம்.
பொதுவாக ரோட்டில் ஒரு கார்க்காரர் சைக்கிள் ஓட்டியை இடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், தவறு சைக்கிள் ஓட்டியிடம் இருக்கலாம் என்று யாருமே நினைப்பதில்லை. கார் வாங்கிட்டா பெரிய இவனா என்று சீறுவதன் மூலம் தங்கள் துணிச்சல், மனிதாபிமானம் எல்லாவற்றையும் காட்டிக் கொள்ளும் போக்கு பலரிடம் இருக்கிறது. இதில் வேடிக்கை விபத்து நடந்த போது அந்த இடத்திலேயே இல்லாதவர் கூட கார்க்காரரை நாலு பேர் மொத்தும் போது தானும் சேர்ந்து தனது வீரத்தைப் பறைசாற்றிக் கொள்வார். அப்போது நீங்கள் போய் ஏம்பா, தப்பு சைக்கிள்காரர் மேலயும் இருக்கலாமில்ல என்று கேட்டால் உங்களுக்கும் சாத்துமுறைதான். தமிழீழ ஆதரவும் தற்போது அந்த மாதிரி ஆகி விட்டது. நியாயம், பழைய உண்மைகள், வரலாறு எல்லாம் புதைக்கபட்டு வெகு காலமாகி விட்டது. போதாத குறைக்கு இதில் பார்ப்பன திராவிட காய்ச்சல் வேறு. இலங்கை எதிர்ப்பு/ ஆதரவுக்கும் பார்ப்பன/அபார்ப்பன கூத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நாள் முழுதும் யோசித்தாலும் எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை (ராஜபட்சே, பிரபாகரன் இருவருமே அபார்ப்பனர்கள் என்பதை வெற்று வேட்டு வெறுங்கூச்சல் வீரர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. உதா: பிரபாகரனின் தாயாருக்கு சென்னை வர அனுமதி மறுத்தது குறித்த உங்கள் பழைய பதிவுக்கான பின்னூட்டங்கள்) அமைதி திரும்புவதற்குத் தடையாக விளங்கி முள்ளிவாய்க்கால் உட்பட 2009ல் ஏற்பட்ட எல்லா அழிவுகளுக்கும் காரணமாக இருந்ததே புலிகள் தான் என்ற உண்மையை குருபரன் என்பவரது பதிவில் வாசித்தேன். இலங்கைத் தமிழர்கள் கண்ணீருக்கு இலங்கை அரசை விடப் புலிகள் தான் பொறுப்பு என்று ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார்.
ஆடு கசாப்புக் கடைக்காரரை நம்பிய கதையாக இலங்கைத் தமிழர்கள் பிரபாகரனை நம்பிக் கெட்டனர் என்பதே உண்மை.

ஊர்சுற்றி said...

// "மெக்டொனால்ட்ஸ் பர்கர்" சாப்பிட்டுக்கிட்டு உண்ணாவிரதம் இருந்து இங்கிலண்ட் அரசுக்கு 50 மில்லியன் பவுண்டு ஆப்பு வைத்த புலி ஆதரவாளர்களின் சாதனையைப் பற்றி "மாத்தியோசி-மணி" எனும் பதிவர் மூச்சு விடவே இல்லை. ரகசிய வீடியோவினை லண்டன் போலீசே எடுத்தது. //

அண்ணை மாலிக்...லண்டன் பேப்பர் இந்த பொய் செய்தியைப் போட்டதற்காக மன்னிப்பும் கேட்டு நட்ட ஈடும் (75 ஆயிரம் பவுண்டுகள்) கொடுத்து ஒரு வருஷம் ஆச்சு....இன்னும் எந்தக் காலகட்டத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஓஹோ....அமெரிக்க வீடியோ தூக்கத்தைக்கெடுத்து விட்டதோ? சாரி சார்!

இதையும் கொஞ்சம் படிங்க.

http://www.guardian.co.uk/media/2010/jul/29/daily-mail-sun-parameswaran-subramanyam

மு மாலிக் said...

ஊர்சுற்றி அவர்களே மன்னிக்கவும். நான் சொன்ன செய்திபற்றி, பிறகு நடந்த நிகழ்வுகளை நான் அறிந்திருக்கவில்லை. தெரிவித்ததற்கு நன்றி.

ஊர்சுற்றி said...

//..பிறகு நடந்த நிகழ்வுகளை நான் அறிந்திருக்கவில்லை. தெரிவித்ததற்கு நன்றி....///

கருத்து எழுத முன்னர் கண்ணைத்திறக்க வேண்டும் என இதற்குத்தான் !
மேலும் நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டியது உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனிடம் அன்றி என்னிடம் அல்ல.
மேலும் உண்ணாவிரதியை புலியுடன் இணைத்து கேலிபேசியதற்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா?

dondu(#11168674346665545885) said...

முதலில் புலிகள் தமிழ் ஈழத்திலிருது முசல்மான்களை ஓட ஓட விரட்டி கொன்றதற்கு மன்னிப்பு கேட்கட்டும்.

டோண்டு ராகவன்

ஊர்சுற்றி said...

டோண்டு அவர்களே,

திரு மாலிக் அவர்கள் என்னிடம் மன்னிப்புக்கேட்டார். அவர் அவமதித்ததோ உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியத்தை. ஆகவே தான் அவரிடம் சுப்பிரமணியத்திடம் மன்னிப்புக்கோரும்படி கோரினேன்.
நிற்க புலிகள் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆனால் இந்த முசல்மான்கள் இருக்கிறார்களே....குரானின்படி ஒழுகுபவர்கள். அவர்களிடையே சகோதர பாசம் பொங்கி வழியும், இன ஒற்றுமை ஓங்கி ஒழுகும். அடுத்தவனை நிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு நிந்திப்போருக்கு அல்ஹாவின் மன்றத்தில் என்ன நீதி கிடைக்கும் என்பதை அவர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்.

ஆகவே மாலிக் என்னிடம் மன்னிப்பு கோருவதை விடுத்து லண்டன் பத்திரிகைகள் கோரியது போலவும் நட்ட ஈடு கொடுத்தது போலவும் செய்தால் அல்ஹாவின் ராச்சியத்தில் அவர்களுக்கு சமாதானம் நிலவும். அதை விடுத்து புலிகளை இழுத்து வந்து விதண்டாவாதம் புரிவது ஈமானுக்கே அடுக்காது!

ஊர்சுற்றி said...

அது மட்டுமல்ல புலிகள் ‘ஓட ஓட விரட்டி கொன்றதற்கு’ (அடைப்புக்குள் இட்டிருக்கிறேன்) ஈடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் நோர்வே மத்தியஸ்ததுக்கு முன்னர் வன்னிக்க்கு புலிகளால் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் பிரபாகரனின் தலைமை பற்றியும் போராட்ட்ட நியாயம் பற்றியும் ம்ஸ்லிம் தமிழ் ஒற்றுமை பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பேட்டியும் கொடுத்தனர், படங்களும் எடுத்தனர். ஆகவே புலிகள் முதலில் மன்னிப்பு கோரவேண்டும் என்கின்ற உங்களின் கூற்றும் தாங்களும் இப்போதுதான் திருப்பள்ளி எழுச்சி கொள்கிறீர்கள் எனத்தெரிகிறது!

dondu(#11168674346665545885) said...

தாங்கள்தான் த்மிழருக்காக பேச வேண்டியவர்கள் என ஆட்டம் போட்டு பல மாற்று இயக்கத்தை சார்ந்தவர்கள்க் கொன்ற கொலைகார பாவிகள் புலிகள். அவர்களில் ஓரிருவர் விதிவிலக்காக நல்லவர்களாக அமைவதால் பாக்கி பேர் மகாத்மாக்கள் அல்ல.

அதிலும் பிரபாகரன் தூக்கிலிட்டு கொல்லப்பட வேண்டிய குற்றவாளி.

ஆளை விடுங்கள். ஒஇந்தார்கள் பாவிகள்.

டோண்டு ராகவன்

baleno said...

poornam said...
அப்பாடா! வலையுலகில் புலிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பதிவுகளையே பார்த்து நொந்த மனதுக்கு ஆறுதல் உங்கள் பதிவு. முதுகெலும்புள்ள எழுத்துக்கு வணக்கம்.

நான் தெரிவிக்க மறந்ததை நினைவுபடுத்தியுள்ளீர்கள். நன்றி.
மோசமான புலி வெறி பிடித்து அலையும் பதிவுலகில் டோண்டு அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

சகோ ஊர்சுற்றி, லண்டனில் பரமேஸ்வரன் "மெக்டொனால்ட்ஸ் பர்கர்" சாப்பிட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தார் என்ற செய்திக்கு ஆதாரம் பத்திரிக்கை தரவில்லை என்றே அடிப்படையியே நட்ட ஈடு தீர்ப்பு நீதிமன்றம் வழங்கியது. மெக்டொனால்ட்ஸ் பர்கர் பரமேஸ்வரன் சாப்பிட்டு கொண்டு தான் உண்ணாவிரதம் இருந்தாரா என்பது அவரது மனசாட்சிக்கும் அவரோடு கூடியிருந்தவர்களுக்கும் தெரியும். உண்ணாவிரதத்தின் 21 நாள் அவர் தமிழ் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்தார்.அவருடைய கம்பீரத்தையும் உற்சாகத்தையும் எல்லோரும் அப்போதே வியப்புடன் பார்த்தார்கள்.

ஊர்சுற்றி said...

//...சகோ ஊர்சுற்றி, லண்டனில் பரமேஸ்வரன் "மெக்டொனால்ட்ஸ் பர்கர்" சாப்பிட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தார் என்ற செய்திக்கு ஆதாரம் பத்திரிக்கை தரவில்லை என்றே அடிப்படையியே நட்ட ஈடு தீர்ப்பு நீதிமன்றம் வழங்கியது. ..////

அடடா !!!! சுப்பரோ சுப்பர் !
ஸ்கொட்லண்ட் யாட்காரர்கள் துல்லியமாக படம்பிடித்தனர் எனெ செய்தி போட்டார்கல். மட்டுமல்ல லண்டன் பொலிசுக்கு மில்லியன் பவுண்டுகள் செலவு வைத்தனர் எனவும் போட்டார்கள். அப்படியா என கேட்க லண்டன் பொலிஸ் கைவிரித்து விட்டது.
திரு பலேனோ...லண்டன் மிரரும் டெய்லி மெயிலும் தமது பத்திரிகையின் நம்பகத்தன்மையை காக்க லண்டன் பொலிஸ் மீது தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சொந்தமான பணத்தில் நடத்தப்பட்ம் பொலிசிடம் ஆதார வீடியோவை ஏன் கேட்கவில்லை?
எத்தனையோ மனித உரிமை மீறல் கேசுகள், தனிநபர் ரகசிய விடயங்கள், தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் தரும் விடயங்கள் என பல பல வழக்குகளை சந்தித்த லண்டன் பேப்பர் நட்ட ஈடு கொடுத்ததாம் பலேனோ சொல்கிறார் மனச்சாட்சிக்குத் தெரியுமாம்!
சுப்பர் அண்னை சுப்பர்!!!

ஊர்சுற்றி said...

ஒழிந்த பாவிகளைப்பற்றி 3 வருடத்துக்குப் பின்னரும் ‘சோ’ வின் பதிவுகலை ஏன் கட் & பேஸ்ற் செய்து வாழ்க்கையை ஓட்ட வேண்டும்? ஆளை விடுங்கள் என ஓட வேண்டும்?

மாற்று இயக்கக்காரர்கள் செய்த விடயங்கள் விக்கி லீக்ஸில் வந்ததே கவனிக்க வில்லையா?
கொலை, கொள்ளை, கப்பம், கற்பழிப்பு, கூட்டிக்கொடுப்பு, காட்டிக்கொடுப்பு என அமெரிகக் அம்பாசிடர் வோஷிங்ரனில் இருக்கும் ஸ்ரேற்டிப்பாட்மென்றுக்கு எழுதிய கடிதக்குறிப்புகள் படிக்கவில்லையா டோண்டு?
படிச்சுப்பாருங்க சுப்பராய் இருக்கும் இந்த மாற்று இயக்க அப்பாவிகளின் செயல்கள்.
அது மட்டுமல்ல இந்த மார்க்க ஒழுக்கம் உள்ல முசல்மான்கள் இருக்கிறார்களே அவர்கள்கூட இரகசியமாக அமெரிகக் அம்பாசிடரிடம் பசில் ராஜபக்சா, மகிந்தா, கோத்தபாயா, ஸ்ரீலங்கா மத்திய வங்கி பற்றி வத்தி வைத்துள்ளனர் (ஆம் உலக சைத்தான் அமெரிக்காவிடம் தான்)
அதாவது தமிழர்களிடம் கொள்ளை முடிந்து விட்டதாம் இப்போ சிங்கலவர்கள் முசல்மான்களிடம் கைவைக்கிறார்களாம் !
சுப்பராயில்லை?
டோண்டுவுக்கு ஆங்கிலப்புலமை உள்ளதுதானே? விக்கிலீக்சில் ஸ்ரீலங்கா அம்பாசிடர் சொன்ன விடயங்கள் இணையத்தில் பரவிக்கிடக்கிறது படித்துப்பார்க்கலாம்!

Indian said...

திரும்பத் திரும்ப புலிகள் செய்நன்றி கொன்றவர்கள் என்கிறீர்களே?

உங்களுக்கு அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங்கைத் தெரியுமா?
அவர் ஸ்ரீமான் JN தீக்க்ஷித்தைப் பற்றி என்ன சொன்னாரென்று தெரியுமா?

//புலிகள் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய விபரீதங்கள் இப்போதும் மன நடுக்கத்தையே கொடுக்கின்றன.//

அப்படி என்னதாங்க நடந்திருக்கும்?

ஊர்சுற்றி said...

//...முள்ளிவாய்க்கால் உட்பட 2009ல் ஏற்பட்ட எல்லா அழிவுகளுக்கும் காரணமாக இருந்ததே புலிகள் தான் என்ற உண்மையை குருபரன் என்பவரது பதிவில் வாசித்தேன்....//

அதேபோல ‘கொழும்பில் இருந்து விஜயன்’ என்பவரின் பதிவைப் படித்து ‘அறிந்து’ பின்னர் வியனின் சொந்த பதிவில் எல்லாம் தலைகீழாக இருப்பதை நான் சுட்டிக்காட்ட நீங்கள் அதிர்ச்சி அடைந்ததை ஒப்புக்கொண்டதை இங்கேயும் சொன்னீர்கள் என்றால் சிரப்பாக இருக்குமே!

மு மாலிக் said...

ஊர்சுற்றி அவர்களே,

திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் பண்ணி 12-ம் நாள் அவுட்டானார். 23 நாட்கள் ஆகியும் பரமேஸ்வரன் அவுட்டாகாமல், உயிர்வாழ்ந்த குற்றத்திற்காக அவரை மன்னிப்பு கேட்கசொல்லுங்கள். பிறகு நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது உலகமுழுக்க ஃபேமஸ். நம்ம அன்னாஹஸாரே ஒரு உதாரணம். நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்திருப்பாரானால் அவர் இவ்வளவு நாட்கள் உயிர் வாழ்ந்து இருக்க முடியாது, அவர் இந்த குற்றத்தினை செய்திருக்கவும் முடியாது. நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்திருந்தால் 10 நாட்களில் அவுட்டாகி குற்றவாளியாக இன்று அவர் இருக்கமாட்டார்

ஊர்சுற்றி said...

//..உயிர்வாழ்ந்த குற்றத்திற்காக அவரை மன்னிப்பு கேட்கசொல்லுங்கள். பிறகு நான் மன்னிப்பு கேட்கிறேன். ...//

மாலிக் அவர்களே இந்த ‘உண்மையை’ ஏன் லண்டன் டெய்லி மெயில், மிரர் பத்திரிகைகள் அறியாமல் 70,000 பவுண்கள் நட்டைஇடும் முதல்பக்கத்தில் மன்னிப்பும் கோரினார்கள். கேட்டிருக்கலாம் அல்லவா? லண்டம்ன் பொலிசுக்கு மில்லியன் பவுண்கள் செலவு (தண்டச்செலவு) வைத்த குற்ரத்துக்குக்காக பொலிசார் ஏன் கோட்டுக்குப் போகவில்லை?
ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த நீதிமண்ரத்தீர்மானத்தையே நீங்கள் அறியவில்லை. இன்னும் மன்னிப்புக்கேட்ட பேப்பர்களில் வந்த செய்தியையே இன்றுவரை நம்பிக்கொண்டிருந்தவர் நீங்கள். நான் சொல்லி உங்களுக்கு இந்த வழக்கு விடயமும் தண்டப்பணமும் மன்னிப்பும் தெரிய வேண்டி இருக்கிறது.

நீங்கள் கேட்க வேண்டியது உண்ணாவிரதம் இருந்து பொய்க்குற்ரச்சாட்டுக்கு கோட்டுக்குப்பொய்ய் நியாயம் கேட்டு 70,000 பவுண்கள் நியாயமாக பெற்ற உண்ணா விரதியிடம் ! என்னிடம் அல்ல!
இங்கே பிரச்சினை நீங்கள் இட்ட பொய்யான செய்தி. அது பொய்யென நிரூபிக்கப்ப்பட்ட பின்னர் சுத்திச் சுத்தி வருகிறீர்கள்!

இதே திலீபன் இறந்த போது இறந்தது உண்ணாவிரதம் இருந்தல்ல அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்று நோய் இருந்தது. அவர் எப்படி 10 நாளில் இறப்பார்? காந்தி எல்லாம் அப்படி இறக்கவில்லையே? புற்று நோயால் சாக இருந்தவரை புலிகள் உண்ணாவிரத மேடையில் தியாகி ஆக்கினர் என கதை அளந்த கோஷ்டிகள் ஈழத்திலும் இந்தியாவிலும் இருந்தனர்! நீங்கள் என்னடாவென்றால் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் இவர் எப்படித் தப்பினார் என பிளேற்றை திருப்பிப்போட்டு கதை விடுகிறீர்கள். இதொன்றும் ஈழமக்களுக்குப் புதிதல்ல. இந்த பிளேற்ரை திருப்பிப்போடும் கோஷ்டி மக்களிடையே கொண்டுள்ல வரவேற்பின் அளவு இப்போது தெரிகிறதே!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது