7/30/2012

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

பதிவு இப்பாடலுடன் துவங்கினாலும் பதிவு முழுக்க அது பற்றியே அல்ல. அது பற்றி பிறகு, முதலில் பாட்டைக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.



இப்படத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளுடனெயே என் பிரச்சினை. “நிகழும் பார்த்திப ஆண்டின் ஆவணித் திங்கள் 20-ஆம் நாள்” எனத் துவங்கும் அவ்வரிகளை கல்யாணங்களில் பாடும் மெல்லிசைக் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்யாணம் நடக்கும் சரியான தமிழாண்டு, மாதம் ஆகியவற்றுடன் பெண்ணின் தந்தையின் பெயரையும் நுழைத்துப் பாடுவார்கள்.

இருக்கட்டுமே இதில் உன் பிரச்சினை என்ன என கேட்கும் முரளி மனோகருக்கான எனது பதில் இதுதான்..

இப்பாடல், வரும் நெஞ்சிருக்கும் வரை என்னும் திரைப்படம் சமீபத்தில் அறுபதுகளில் வந்தது. சென்னை மெரீனா பீச்சருகில் இப்போதும் காணக்கிடைக்கும் உழைப்பவர் வெற்றி சிலை அப்படத்தில் காட்டப்படும். அச்சிலையோ சமீபத்தில் 1959-ல்தான் வந்தது. ஆனால் பார்த்திப ஆண்டு? 1945 ஏப்ரல் முதல் 1946 ஏப்ரல் வரை (நான் அந்த ஆண்டில்தான் பிறந்தேன்). ஆக, இதைத்தான் பொருட்குற்றம் என்பார்கள். ஆக, இப்பாட்டில் வரும் நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 20-ஆம் நாள், என்பது சுமாராக செப்டம்பர் மாதம் 5, 1945 ஆக இருக்கும். பை தி வே அன்று புதன்கிழமை.

ஆனால், சமீபத்தில் அறுப்துகளின் துவக்கத்தில் வந்த “பார் மகளே பார்” படத்தில் 18-கேரட் தங்கம் பற்றிய பிரஸ்தாபம் கதையின் காலகட்டத்திற்கு ஏற்ப வந்ததை நோக்கினால் காட்சிகளில் லாஜிக்குக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். எதற்கும் இருக்கட்டும் என அப்படத்திலிருந்தும் ஒரு பாடலை இங்கே போடுகிறேன்.



ஆனால் சில காட்சிப் பிழைகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விடுவதும் நடக்கும்.உதாரணத்துக்கு பார்த்தால் பசி தீரும் என்னும் படம்.

அது அறுபதுகளின் துவக்கத்தில் வந்தது. கதை நடக்கும் காலமோ 1945-46. அப்படத்தில் அறுபதுகளில் உற்பத்தியான ஸ்டேண்டர்ட் ஹெரால்ட் கார் வரும். இப்போது அப்படத்தைப் பார்த்தால் யாருக்கு அந்த உண்மை தெரியப் போகிறது? 


நண்பர் ஆசாத் சொல்வது போல, “சல்தா ஹை”..


அன்புடன்,
டோண்டு ராகவன்

7/28/2012

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு!!!!!!!

கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.

ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.

இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.

இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.

1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.

2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.

3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.

4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.

(ஆனந்தவிகடன், 01.08.2012).

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?

அன்புடன்
டோண்டு ராகவன்

7/08/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.07.2012

சில விசித்திரமான விளையாட்டு விபத்துகள்
விளையாட்டில் காயம் படுவது சகஜமே. அதற்காக இப்படியா?



 அல்லது இம்மாதிரியா?



ஸ்லோ மோஷனில் ரீப்ளேயை பார்த்து ஒரு பாட்டியம்மாள் கூறினாராம், பரவாயில்லையே இம்மாதிரி மெதுவாகவெல்லாம் ஆடினால் அடிபடாது அப்படித்தானே என்று.

செய்திகள் நம்மை பாதிக்கும் தருணஙகள்
மதியம் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஃபோன் ஒலித்தது. எடுத்து ஹலோ சொன்னல் எதிர்தரப்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர். போன மாதம் 27-ஆம் தேதி ஏதாவது டாக்சியில் சென்றீர்களா என என்னிடம் கேட்கப்பட்டது. ஆம் எனக் கூறி விட்டு டாக்சியில் எங்கிருந்து எங்கு சென்றேன் என்ற கேள்விக்கும் பதிலளித்தேன். பிறகு ஏன் என்னிடம் இக்கேள்விகளை கேட்டாகள் என்றால் அந்த டாக்சி டிரைவரை இம்மாதம் இரண்டாம் தேதி யாரோ கொலை செய்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது. அரவிந்த் என்னும் பெயருடைய அந்த டிரைவர் இளைய வயதினர்.

மனம் கனமாயிற்று. பிறகு பேப்பரில் தேடினால் மேல் விவரம் கிடைத்தது. சாதாரணமாக இம்மாதிரி பல செய்திகளைக் கேட்டு பழகிப் போனவர்களுக்கு இதுவும் ஒரு செய்தியே. ஆனால் சம்பந்தப்பட்டவரை பார்த்து முன்னால் பேசியுள்ளேன் என்னும் நிலையில் அச்செய்தி மிகவும் பாதிக்கிறது என்பதுதான் நிஜம்.

அது போலத்தான் எனது இப்பதிவில் நான் இவ்வாறு எழுதினேன், “ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்”.


எதுவுமே தனக்கு வந்தால்தான் புரியும் என்பதும் சரிதான்.

டூம்ஸ்டே வைரஸ்
எதற்கும் இந்தத் தளத்தைச் சுட்டவும். பச்சை வந்தால் ஓக்கே. சிவப்பு வந்தால் சங்குதாண்டி.

எனக்கு பச்சை வந்து விட்டது. ஜாலி. ஆனாலும் ஜாக்கிரதை என்கிறது அத்தளம். பார்க்கலாம். இது உண்மையான எச்சரிக்கையா அல்லது urban legend-ஆ என்று தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்



7/07/2012

பதிவர் தருமி அவர்களுக்கு நன்றி

அவரது இப்பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரிய வந்தது. முதற்கண் அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. கூகளில் தேடி நிகச்சியின் வீடியோவை பிடித்தேன். 22-06-2012 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை கீழே எம்பெட் செய்கிறேன். அந்த வாரம் முழுக்கவே அக்கிரகாரம் ஸ்பெஷல் என எண்ணுகிறேன். பார்ப்போம்.

 

பைதிவே அவரது பதிவின் முதற்பகுதி பற்றி நோ கமெண்ட்ஸ். அந்த விளம்பரத்தின் முழு பின்புலன் தெரியாமல் நான் கூற ஒன்றும் இல்லை.

மற்றப்படி ஜூனியர் சூப்பர் சிக்கர் நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.

தருமி அவர்கள் தனது பிடித்தமின்மையை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அதே போல எனக்கு பிடித்ததையையும் நான் கூறிவிட்டுப் போகிறேனே.

என்ன செய்வது தருமி சார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கர்நாடக சங்கீதத்தை ஆதரிப்பவர்களில் அதிக பட்சம் பார்ப்பனர்களே. ஆகவேதான் அக்கிரகாரம் ஸ்பெஷல் இயற்கையாகவே சோபித்தது. பார்ப்பனர்கள் தமது குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் காட்டும் அக்கறையை மற்ற சாதியினர் செய்ய வேண்டாம் என யார் தடுத்தது?

தமிழ்ழிசை சம்பந்தமாக ஜெயமோகன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு கோட் செய்கிறேன். மீதி வரிகளை அங்கு போய் படித்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஓர் விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல். திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் நண்பர்.
அந்த சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ்மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அந்த தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.
நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்? மரபிசைக்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இசைக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா? 

இப்போது நிகழ்ச்சி பற்றி மேலும் பேசுவேன்.

அடுத்தாத்து அம்புஜம் பற்றிய பாடல் சூப்பர் தூள். சக போட்டியாளர்களில் ஒருத்தியான அப்பெண் அதற்கு தன்னிடத்தில் அமர்ந்தவாறே பிடித்த அபிநயம் பலே ஜோர். சவுக்கார் ஜானகி கெட்டார் போங்கள்.

பலர் பிராமண பாஷை பேச கஷ்டப்பட்டாலும் முயற்சி பாராட்டத் தக்கதே. கீப் இட் அப்.

அன்புடன்,
டோண்டு ராகவன்  
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது