மற்றத் தொழில் நிபுணர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. தங்கள் விலை என்ன என்றுக் கூறுவதில் சற்றே கூச்சம் அவர்களுக்கு உண்டு. இதனால் பல வாடிக்கையாளர்கள் அவர்களைக் குறைந்தவிலைக்கு ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். முழு நேர வேலைகளில் கூட மொழிபெயர்ப்பாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். மேலும் ஒரு நிறுவனத்தில் ஆட் குறைப்பு வரும்போது சீட்டுக் கிழிவது அவர்களுக்கே முதலில் நடந்து விடுகிறது. முக்கியமாக, புதிதாக இத்தொழிலுக்கு வருபவனின் மனதில் மிகுந்த கலக்கம் ஏற்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து அவன் அகப்பட்ட விலைக்கு ஒத்துக் கொண்டுவிடுகிறான். சாதாரணமாகவே பிறருடன் சேர்ந்து பழகாது அவன் படிப்பதிலேயே காலம் கழிப்பதும் ஒரு முக்கியக் காரணமே. இதையெல்லாம் மீறி ஒருவன் வரும்போதுதான் வெற்றிபெற முடியும். அப்போது எதிர்க்கொள்ளவேண்டியவை வாடிக்கையாளர்களின் சவடால் வாக்குறுதிகளே.
அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். ஆகவே குறைந்தவிலைக்கு ஒத்துக் கொள்ளச் சொல்வார்கள். இது அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் என்றால் ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளனுக்கு ஏற்ற வேலை. ஆனால் எனக்கு முழுநேர வேலையில் நாட்டம் இல்லை. ஆகவே வாடிக்கையாளரிடம் வாரத்துக்கு மூன்று நாட்கள் தினம் 8 மணிநெரம் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து வேலை செய்வதாகவும், மணிக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடவேண்டியது என்று நான் முதலில் அடியெடுத்துக் கொடுப்பேன். ஒரு வருட ஒப்பந்தம் போடலாம் என்றும், ஒரு வருடத்துக்கு 156 நாள் அதாவது மாதத்துக்கு 13 நாள் என்று கணக்கு வரும் என்பேன். திடுக்கிடும் வாடிக்கையாளர் உடனே அவ்வளவு நாட்களுக்கு வேலை இல்லை என்று மழுப்புவார். உடனே வாரத்துக்கு இரு நாட்கள், அதுவும் இல்லையென்றால் வாரத்துக்கு ஒரு நாள் என இறங்கி வருவேன். வாடிக்கையாளரால் அதுவும் முடியாது போனால் அவரிடம் மரியாதையாக விலையைக் குறைக்க மறுத்து விடுவேன். பிறகு என்ன, பேரம் வேறு தளத்தில் தொடரும்.
ஒரு வாடிக்கையாளர் என்னிடம் தான் கேட்ட விலைக்கு வேலை செய்ய மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தயாராக இருக்கும்போது எனக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கெல்லாம் அதே தொனியில்தான் பதிலளிக்க வேண்டும். ஆகவே கூறினேன்: "என்னுடைய விலைக்கு என் மற்ற வாடிக்கையாளர்கள் வேலை கொடுக்கும்போது, உங்களுக்கு ஏன் நான் குறைந்த விலையில் வேலை செய்ய வேண்டும்?" வேலை கொடுத்தார்.
நான் மேலும் கூறுவேன். ஒரு முறை ஒரு வாடிக்கையாளருக்குக் குறைந்த விலைக்கு ஒத்துக் கொண்டு விட்டால், அவரிடம் பிறகு விலையை அதிகரிப்பது மிகக் கடினமே. ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் திரும்ப வருவதற்கானக் காரணம் நம் வேலை சுத்தம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். விலை குறைவு என்பதற்காக அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
மேலும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
20 hours ago

4 comments:
//மணிக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடவேண்டியது //
எவ்வள்வு தான் சார்? பிரன்ச் க்கும் ஜெர்மனுக்கும் வித்தியாசப் படுமா?
//மணிக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடவேண்டியது //
எவ்வளவு தான் சார்? பிரன்ச் க்கும் ஜெர்மனுக்கும் வித்தியாசப் படுமா?
என்னைப் பொருத்தவரை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு இரண்டுக்கும் ஒரே விலைதான். மணிக்கு குறிப்பிட்டத் தொகை + போக வர கால் டாக்ஸி கட்டணம் + காபி, டீ, சாப்பாடு ஆகியவை நேரத்துக்கு தகுந்த முறையில். குறைந்த பட்சம் இரண்டு மணிக்காகனக் கட்டணம். மணிக்கு எவ்வளவு என்பது தொழில் ரகசியம், கூறுவதற்கில்லை, மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களின் இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி
Post a Comment