4/28/2005

ராஜாஜி என்னும் மாமனிதர் - 3

1952 - 54 பற்றி இன்னும் சில வார்த்தைகள். நான் ஏற்கனவே கூறியபடி, ராஜாஜி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று காங்கிரஸார் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அவரும் யோசனை செய்ய ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டார். அவரின் தீவிர ஆதரவாளரானக் கல்கிக்கு அவர் முதல் மந்திரியாவதில் இஷ்டமே இல்லை. ஏனெனில் தலைவரின் உடல் நிலை பாதிக்கப்படும் என்றக் கவலையே அது.
1952 - ல் நாற்பது வருடங்கள் தேசத்துக்காக உழைத்த நிலையில் இருந்தவர் ராஜாஜி அவர்கள். கவர்னர் ஜெனெரல் பதவியே அவரால் கௌரவம் பெற்றது என்றால் மிகையாகாது. எல்லாவித கஷ்டமான வேலைகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டன. முதல் பதிவில் அவ்ர் ஒரு குள்ளநரித் தந்திரம் பொருந்திய அரசியல் வாதியாக ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார். 200 சீட்டுகள் இருந்தால்தான் நிலையான அரசு அமைக்க முடியும். காங்கிரஸிடம் இருந்ததோ 152 சீட்டுகள் மட்டுமே. அதையெல்லாம் சமாளிக்க சாதுர்யம் வேண்டும். அவர் அதைப் பயன்படுத்தினார். மனித உரிமை பற்றியும் பேசப்பட்டது. தூக்குமரத்தின் நிழலில் புத்தகத்தை எழுதிய திரு சி.ஏ. பாலன் அவர்களின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அவர் உயிரைக் காப்பாற்றியதில் ராஜாஜி அவர்களின் பங்கு மிகப் பெரியது. அதை பாலன் அவர்கள் தன் புத்தகத்தில் குறிப்பிட்டதை நான் படித்துள்ளேன்.

ராஜாஜி அவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றைப் பற்றி 8, ஜூன் 1952 இதழில் எழுதினார் கல்கி அவர்கள். அதாவது ராஜாஜி மக்களை சினிமா பார்ப்பதிலிருந்துத் தடுக்க முடியாது. இதைத் தவிர அவர் ஏறக்குறைய மற்ற எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.

அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடம் பதவியிலிருந்தார். இரண்டாம் வருடத்தில் காங்கிரஸாரிடமிருந்தே எதிர்ப்பு வந்தது. அவரை எதிர்த்துக் கையழுத்து வேட்டை ஆரம்பித்தனர் காங்கிரஸின் அதிருப்தியாளர்கள். டிசம்பர் 1953 - ல் அவர்கள் நேருவை தில்லியில் சந்தித்தனர். அவர் போட்ட சத்தத்தில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்னை திரும்பினர். கையெழுத்துப் போராட்டம் பிசுபிசுத்தது. 1954 - ல் ராஜாஜி அவர்களின் உடல் நலம் திடீரென்று சீரியசாகப் பாதிக்கப்பட்டது. கல்கி முதலானோர் மிகுந்தத் துயரம் அடைந்தனர். ஏப்ரல் 194 - ல் ராஜாஜி அவர்கள் ராஜிநாமா செய்தார். மே 1954 - ல் அவர் பிரேரிபித்த கல்வித் திட்டம் கைவிடப்பட்டது. பற்றற்ற ராஜரிஷி இலக்கியத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

28 comments:

SHIVAS said...

எதோ ஆராயிரம் துவக்க பள்ளிகளை மூடிவிட்டார் என்று ராஜாஜியின் மேல் உள்ள குற்றச்சாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

kirukan said...

Avaru MaaaaaaaManitharuma..... Ellathukumm ethavathu sappaaikattu Dondu Sir vachiruparu..

dondu(#11168674346665545885) said...

ஆறாயிரம் ஆரம்பப் பள்ளிகள் பற்றி எனக்கு ஒரு செய்தியும் கிட்டவில்லை. நான் மிகவும் முயற்சி செய்து பார்த்தென். உண்மையைக் கூற வேண்டுமென்றால் இக்குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் வலைப்பூவில்தான் படித்தேன். சற்றுக் கடுமையாகவே எழுதியிருந்தீர்கள், "ஆறாயிரம் பள்ளிகளை மூடிய ராஜகோபாலாச்சாரிக்கு கன்னத்தில் அறை" என்று.
இதை பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் நான் ஒன்றுதான் கூற முடியும். தயவு செய்து சுட்டிகள் ஏதேனும் இருந்தால் தாருங்கள். பெரியவர் சாலமன் பாப்பையாவிடமும் கேட்டுப் பார்த்தேன். அவருக்கும் விவரங்கள் தெரியவில்லை. இக்குற்றச்சாட்டை மட்டும் கேட்டிருப்பதாகவும் மேலே யாரும் விவரம் தரவில்லை என்றும் குறிப்பிட்டார். கல்கி அலுவலகத்தில் இந்தக் காலக்கட்டத்தில் உள்ள இதழ்களைப் பார்த்தேன். ஜனவரி 1953-ல் தொடங்கி, மார்ச் 1953 முடிய உள்ள இதழ்களின் வால்யூம் கிடைக்கவில்லை. அதில் ஏதேனும் இருந்திருக்குமோ? அப்படியே இருந்திருந்தாலும் இவ்வளவு பெரிய விஷயம் மற்ற வால்யூம்களில் நிச்சயம் வந்திருக்கும். ராஜாஜி அவர்கள் ராஜினாமா செய்தபோது அவர் ஆட்சியில் நடந்தவைகளைப் பட்டியலிட்டிருந்தார் கல்கி அவர்கள். அதிலும் இது பற்றி ஒன்றும் இல்லை. ஆகவே இது பற்றி ஏதேனும் ஆதாரம் இருந்தால் தருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குத் தெரிந்து அவர் மூடியதெல்லாம் கள்ளுக் கடைகளே. அவர் 1937 - ல் அறிமுகம் செய்த மதுவிலக்கு தமிழ்நாடெங்கும் பரவி சில தலைமுறைகள் குடியை மறந்திருந்தனர். பாண்டி சென்றுக் குடித்து வந்தவர்களும் அதை அவமானமாகவே கருதினர். இப்போது பள்ளிகள் அருகிலேயே டாஸ்மாக் கடைகளைப் பார்க்கிறோம்.
கிறுக்கன் அவர்களே, எல்லாம் உங்களுக்கு சப்பைக்கட்டாகத் தெரிகின்றனவா? அதற்கு நான் ஒன்றும் செய்வதிற்கில்லை
அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

"அவர் மூடியதெல்லாம் கள்ளுக் கடைகளே"

May be for many people "kallu kadaikall" are educational institutions. That could be the reasons why the post-Rajaji governments opened so many of them, leaving education in the hands of private institutions.

-L-L-D-a-s-u said...

//"kallu kadaikall" are educational institutions//

that is true ..

ரவி ஸ்ரீநிவாஸ் said...

prohibition was lifted only in 1970 or 1971.how does one expect any article criticising rajaji in kalki.but it is better not to blame dmk alone for lifiting prohibition as many congress govts. did the same to raise the revenue of the stste.muse should know that tdp govt in andhra pradesh did the same.rajaji was not against private industries.he was critical of license permit raj
and against excessive control by govt in all sectors.so logically he would not have been against private sector getting involved in education.the congress govt that succeeded rajai and the dmk govt extended support to educational insitutions started by private and charitable institutions by granting 100% assistance.this continued till mid 80s.even now it is true.but in 1980s govt permitted private sector to start educational institutions and charge fees for various reasons including fiscal crisis and imf and world bank insisted on cutting
subsidies.Muse should check facts before writing nonsense.the fact is kamaraj did more to education than rajaji and the inspiration was periyar.

Muse (# 01429798200730556938) said...

Dear Ravi Srinivas,

I have read your comments at various places and I understand your views. I guess, from your comments you have been recording, that you accept others' right to express their view, even though they are "nonsesnse" in your opinion.

My knowledge is certainly limited and I am always eager to expand it for I know becoming dogmatic, worshipping particular idealogy or individuals may make me intellectual, but not intelligent.

Now about my comments:

1. "but it is better not to blame dmk alone for lifiting prohibition as many congress govts"

I have not blamed any particular government but all the post-rajaji governments. Though DMK is the first to start the misery, congress should be blamed more, as their claimed idealogy is for prohibition of liquor.

2. "many congress govts. did the same to raise the revenue of the stste."

Prohibition is supported based on moral and ethical values as Gandhi saw them. I have read arguments of the both for/against. Those who support prohibition have raised an argument "if the revenue of the state is going to raise by permitting liquor shops, then why not open brothels that will bring more revenue than liquor". They are not in support of brothels but consider both of them as equally bad.

Personally I know the difference between those who drink and those who become drunkards. However, the global understanding is that the probability of those who drink becoming drunkards is more than who dont. Many (or may be almost all) of the social evils, including crimes against women, are done under the spell of alcohol.

Rajaji was against liquor in words and deeds. Politicians (DMK, or Congress, or BJP, or ...) followed him were against liquor in words and not in deeds. That makes a difference. A huge one.

3. "many congress govts. did the same to raise the revenue of the stste.muse should know that tdp govt in andhra pradesh did the same"

Thanks for the information. I do not know that TDP is the name of the congress in Andhra pradesh. Anyway that does not make the act holy, even if the Communist party in Kerala or WBengal does it.

4. "the congress govt that succeeded rajai and the dmk govt extended support to educational insitutions started by private and charitable institutions by granting 100% assistance"

That confirms my stand that all politicians are sometimes do good. This has saved tamilians from poor educational conditions. Privatisation has proved beneficial in almost all the times (though costly).

5. "Muse should check facts before writing nonsense."

5.a. "Muse should check facts before writing"

As I said earlier my knowledge is something I always want to expand. I learn from various sources, whether it is your comments and articles, or Mr. Dondu's or other bloggers. I consider all of them as well educated and knowledged unlike some who think that other bloggers are just apes in pants. Your information on IMF part in cutting subsidy to educational institution is new to me. Thanks.

5.b. "check facts before writing nonsense"

Sure. I will try to follow this. It is just the influence of association. Oflate, I have been reading comments from the so-called psecularists of India in various blogs and sites, who always put sweeping, flowery words when encountering facts instead of countering with facts. This includes the arguments that followed Aravinthan Nilakandan's views on Darwin and Marx to anything under earth on which the omniscient Indian intellectuals (as per their own claim) have a say. The influence of this type has made me to write this way.


6. "the fact is kamaraj did more to education than rajaji and the inspiration was periyar."

I trust this. Kamarajar knows better than Rajaji that education will make people not to become fools. I completely agree that "the inspiration was periyar."
Kamarajar could have thought that atleast education will save the young generation from following periyar.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://thatstamil.indiainfo.com/dalitmurasu/jan05/vallivinayagam.html

dondu(#11168674346665545885) said...

ரவி சிறீனிவாஸ் அவர்களே நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி. பார்ப்பனரை அவதூறாகப் பேசும் உங்களுக்கு பதில் மரியாதையாக நான் இப்புதகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

"வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?" ஆசிரியர் சோ அவர்கள். அல்லயன்ஸ் வெளியீடு. விலை ரூ. 30. முதலில் தமிழ் வலைப்பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவதை நிறுத்துங்கள். உங்களுக்காக சுரதாவின் எழுத்து மாற்றிக்கான உரலை இங்கு குறிப்பிடுகிறேன்.

பார்க்க: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அதை எதிர்த்தவர் உங்கள் பெரியார். அதற்கு என்னக் கூறுவீர்கள்? கொடுங்கோலனாம் நீலன் துரைக்கு சிலை வைக்கத் துணை போனவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் என்பதை அறிவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

நானும் மாற்றிக்கொள்கிறேன். ஆனால், ஒன்று. தமிழ் டைப்ரைட்டிங் தெரிந்த எனக்கு இது பெரிய வேதனை. தமிழ் டைப்ரைட்டிங் கீ போர்ட் உபயோகம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

ரவி, நான் நீங்கள் கொடுத்த URLஐ விசிட் செய்தேன். ஒருமுறை, இருமுறை படிதேன். ம்ஹீம். ராஜாஜியின் மதுவிலக்கு பற்றியோ அல்லது அவருடைய கல்வித் திட்டம் பற்றியோ அங்கு இல்லை. நீங்கள் எழுதியிருந்த (the fact is kamaraj did more to education than rajaji and the inspiration was periyar) விஷயமும் அங்கே இல்லை. காமராஜரைப் பற்றி எதுவும் இல்லை. ஒருவேளை காமராஜர் தன் குருவாக ஒரு பார்ப்பனரை நினைத்ததாலிருக்கலாம்.

பொய் சொன்னால் எங்க வீட்டில் சாப்பாடு இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஒருவேளை பொய் சொல்லாவிட்டால் பெரியார் சாமி கண்ணைக்குத்தி விடுவார் போலும்.

அம்மாடி. டைப் அடிச்சாச்சு. என்னை இதிலிருந்து காப்பாற்றினால், பெரியார் ஸ்வாமியின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

யளனகபக-விலா? இதில் முடியாது என்றுதான் அஞ்சுகிறேன் ம்யூஸ் அவர்களே. ஆனாலும் சிறிது பயிற்சிக்குப் பிறகு ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அடிப்பது புலப்பட்டு விடும், கவலை வேண்டாம்.

ரவி சிறீனிவாஸ் அவர்கள் ராஜாஜி 1937 - ல் இந்தியைப் புகுத்தியதைக் காட்டவே அந்தச் சுட்டியைக் கொடுத்தார் என நினைக்கிறேன். அதைப் பற்றி என் வரும் பதிவுகளில் எழுத இருக்கிறேன். ஆனால் அதே பெரியார் அவர்கள் 1965 - ல் எடுத்த ஹிந்தி ஆதரவு நிலையைப் பற்றி அவர் ஆதரவாளர்கள் வாயை இறுக்க மூடிக்கொள்கின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

SnackDragon said...

டோண்டு ஐயா,
இந்தாருங்கள் ஆதாரம். இது பற்றி நிச்சயம் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

// Committed to his version of 'socialism' meaning that "those who are backward should progress", Kamaraj remained truthful to the simple dictum of his 'socialism', providing 'what is essential for man's living' such as 'dwelling, job, food and education'.24 The great feature of Kamaraj rule was the ending of the retrogressive educational policies and setting the stage for universal and free schooling. Six thousand schools closed down by Rajagopalachari were revived and 12,000 schools added.25 The percentage of school going children in the age group between 6 and 11 increased from 45 per cent to 75 per cent within a span of seven years after he became the chief minister.26//

Refered Book :

25 Chinna Kuthusi Thiyagarajan, 'Ainthanduth Thittangal', p 2.

சுட்டி இங்கே:
http://www.tamilnation.org/hundredtamils/kamaraj.htm
# posted by karthikramas : 10:16 PM

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பெரியார் இந்தியை திணித்ததை ஆதரித்தது தவறு என்பது என் கருத்து.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

டோண்டு தன் பதிவில் ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்ற்த்தினைத் தருகிறார்.என் கருத்துக்கள், சுருக்கமாக.

அவ்ர் ம்துவிலக்கில் உறுதியாக நின்றார், வருவாயைப் பெருக்க விற்பனை வரியை அமுல் செய்தார்.லைசென்ஸ், பெர்மிட் முறையின் பாதக அம்சங்களை சுட்டிக் காட்டினார்.காங்கிரஸ் குறித்து அவரது விமர்சனத்தினை ஒதுக்கி விட முடியாது. தமிழில் அபேதவாதம் என்ற நூல் மூலம் சோசலிசத்தினை அறிமுகம் செய்தார். அவர் தாராளவாதி ஆனால் அவர வலதுசாரியாகவே பெரும்பாலும் செயல்பட்டார். காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1967 ல் பதவி இழந்தது, அகில இந்திய அளவில் ஒரு சரிவினைச் சந்தித்து. இதில் ராஜாஜிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அவரது சுதந்திரா கட்சி இதனால் பெரிய அளவில் பலன் பெறவில்லை. இந்திரா காந்தியின் சோசலிச கொள்கைகளும், வறுமையை ஒழிப்போம் என்ற கோஷமும் மக்களை கவர்ந்தன. காமராஜும், ராஜாஜியும் சேர்ந்தும் கூட இந்திரா காங்கிரஸ் திமுகக் கூட்ட்ணியின் வெற்றியினை தடுக்க முடியவில்லை. சுதந்திராக் கட்சி தொழிலதிபர்கள், ஜமீன் தார்கள் கட்சி என்றே கருதப்பட்டது. அமைப்பு ரீதியாக பலவீனமான அக்கட்சியால் மக்க்ளை எட்ட முடியவில்லை.
ஒரு விதத்தில் காங்கிர்ஸின் வீழ்ச்சி அவரது கனவினை பூர்த்தி செய்தது என்றாலும் திமுகவின் எழுச்சியும், திமுக பிரிந்தும் கூட காங்கிரஸால் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சியினைப் பிடிக்க முடியாமல் போனதும் அவர் எதிர்பார்த்திராதவையே. இது ஒரு முரண். அதே சமயம் அவர் முன் வைத்த பொருளாதாரக் கண்ணோட்டம் அவர் மரணமடைந்து பத்தாண்டுகள் கழித்து புதிய கவனம் பெற்றது. இந்திரா அமைத்த எல்.கே.ஜா கமிஷன் பரிந்துரைகள் ராஜிவ் காலத்தில் அரசின் கொள்கைகளை வகுப்பதில் உதவின. நேருவிய சோசலிசம் 1990களில் பெருமளவு கைவிடப்பட்டது. அரசியலில் தோற்ற ராஜாஜி காலம் தாழ்த்தியாவது வென்றது இதில்தான்.

.தனிப்பட்ட வாழ்வில் அவரது நேர்மை, பொது வாழ்வில் அவர் தனக்கென பொருள் சேர்க்க அதை பயன்படுத்தாது இவை பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் காங்கிரஸ் அரசு அமைக்க கையாள்ப்பட்ட தந்திரோபாயங்கள்,தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினராகியது இவை அவர் பிற அரசியல்வாதிகளைப் போன்றவர் என்பதை நீருபித்தன. இது ஒரு வீழ்ச்சி. அவர் அறியாத அறமா. அதை அவரே காற்றில்பற்ற்க்க விட்டார். எந்த காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதைச் செய்தாரோ அதன் எதிரியாக அவர் மாறினார். காங்கிர்சின் பலத்தினை குறைத்தார், ஆனால் அவரால அதனால் பலன் பெற முடியவில்லை.

எனவே ராஜாஜியை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது. என்னைப் பொருத்த அளவில் அவர் ராஜரிஷியும் அல்ல குல்லுக பட்டரும் அல்ல

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

பின்னூட்டமிட்ட கார்திக் ராம், ரவி சிறீனிவாஸ், விஸ்வாமித்ரா, ம்யூஸ் மற்றும் பலருக்கும் நன்றி. சூட்டியளித்த கார்திக்ராம்ஸுக்கு முதல் நன்றி. ஆனால் இதில் போகிற போக்கில் ஒரு வரியில் 6000 பள்ளிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் விவரங்கள் இல்லை. ஆகக் கூடி முதல் பார்வையில் இது ராஜாஜி அவர்களைப் பற்றி ஒரு பாதகமான கருத்துக்கு வழி செய்கிறது என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன். முழு விவரங்களை என் தரப்பிலிருந்தும் தேடுவேன். நிர்வாகக் கட்டாயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்கள் அறிமுகப்படுத்தியக் கல்வித் திட்டத்தில், இருப்பதை வைத்துக் கொண்டு அதிகக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதே நோக்கமாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். கார்திக் அவர்கள் கொடுத்தச் சுட்டியும் 1997 -ல் எழுதப் பட்டது. சமகால எழுத்துக்கள் (1952 - 54) இன்னும் உபயோகமாக இருந்திருக்கும். இந்தச் சுட்டி காமராஜ் அவர்களை மையப்படுத்தியதால் ராஜாஜி பற்றிய இக்கருத்தின் மேல் விவரங்கள் இருக்காது என்பதும் புரிந்துக் கொள்ளக் கூடியதே.

"டோண்டு தன் பதிவில் ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்ற்த்தினைத் தருகிறார்." டோண்டு வேறு எப்படித் தருவான் என்று எதிர்ப்பார்த்தீர்கள்? பொதுவாக பத்திரிகைகளில் ராஜாஜி அவர்களைத் தாக்கியே விமரிசனம் வரும்போது நான் செய்வது நாணயத்தின் மறுபக்கத்தை நிலைநிறுத்தும் செயல் ஆகும்.

"காங்கிரஸ் அரசு அமைக்க கையாள்ப்பட்ட தந்திரோபாயங்கள்,தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினராகியது இவை அவர் பிற அரசியல்வாதிகளைப் போன்றவர் என்பதை நீருபித்தன."

குடியே முழுகிவிடும் அபாயம் வந்த போது ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? 1952-ல் காங்கிரஸ் இருந்த நிலையில் சாவகாசமாக ராஜாஜி அவர்கள் ஒரு இடைத் தேர்தலை ஏற்படுத்தி அதில் நின்று ஜெயிக்க வேண்டும் என்று கூறுவது ப்ராக்டிகல் இல்லை. தேர்தலில் நின்றிருந்தால் அவரால் ஜெயித்திருக்க முடியாது என்பதும் நிச்சயமே, ஏனெனில் அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போல தேவையில்லாது பெரிய வாக்குறுதிகள் அளித்ததில்லை. அப்போதையத் தேவை காங்கிரஸைக் காப்பது. ஏனெனில் அது நடந்திராதிருக்கும் பட்சத்தில் விளைவுகள் மிகவும் விரும்பத்தகாததாயிருந்திருக்கும். 1952 - ல் ராஜாஜி தேவைப்பட்டார். இரண்டு வருடங்கள் பணி புரிந்து அப்பால் சென்றார். அவ்வளவுதான். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் சென்னையைத் தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொண்டார். காரியம் முடிந்ததும் போய்க்கொண்டே இருந்தார். இலக்கியத்தில் நாட்டம் கொண்டார். மற்றவர்கள் ஆதரிக்கிறார்களோ இல்லையோ விருப்பு வெறுப்பின்றி தன் கருத்துக்களை வெளியிட்டார். இவரை ராஜரிஷி என்று கூறாது வேறு யாரைக் கூற முடியும்?

" ராஜாஜியை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது." மிகவும் உண்மை. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தும். மனிதமனம் என்பது சிக்கலானது.
"பெரியார் இந்தியை திணித்ததை ஆதரித்தது தவறு என்பது என் கருத்து." நான் பெரியாருக்கு எதிராக இச்செய்தியை உபயோகித்தாலும் 1965 - ல் இது காலத்தின் கட்டாயமாக அவருக்குப் பட்டிருக்க வேண்டும் இதை குறித்து மனப் போராட்டத்தையும் சந்தித்திருக்க வேண்டும். பெரியாரை அவரின் வெளிப்படையானப் பேச்சுக்காக மதிக்கும் நான் இத்தருணத்தில் ராஜாஜி அவர்களின் ஆப்த நண்பர் என்பதையும் பதிவு செய்கிறேன். காலத்தை வென்ற இவர்கள் இருவரின் நட்பும் என்னை அசத்துகின்றன. மனிதமனம் என்பது நிஜமாகவே சிக்கலானதுதான்.

விஸ்வாமித்ரா அவர்கள் எழுதுகிறார்: "The only sin Rajaji committed was being born as a Bhramin that too in Tamil Nadu." மிகவும் கசப்பான உண்மை. ஆனால் இதை எப்படி எதிர் கொள்கிறேன் என்பதை "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை. இதைப் பற்றி ஒரு தகவல். நான் என் அப்பாவிடம் என் பெயரை கெஸட்டில் ராகவ ஐயங்கார் அல்லது ராகவாச்சாரி என்று மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அவர் கூடாது என்று தடுத்து விட்டார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது சான்றோர் வாக்கல்லவா?

சென்னை நேரம் விடியற்காலை 3 மணி. வீட்டம்மா வேறு என் அறைக்கு வந்து இவ்வாறு எழுதிக் கொண்டிருப்பதை செல்லமாகக் கண்டிது விட்டுச் சென்றிருக்கிறார். ஆகவே இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். காலை வணக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

காங்கிரசார் ராஜாஜி அவர்களை முதல்வர் பதவி ஏற்க கெஞ்சினர் என்றீர்களே அவர்கள் யாரென சற்று கூறுவீர்களா? அல்லது ஏதேனும் தீர்மானம் ஒரு மனதாக இயற்றப்பட்டதா?, கவர்னர் ஜெனரல் பதவியை ராஜாஜி அவர்கள் நேருவிடம் கேட்டுவாங்கியதாக படித்தேன் (சுட்டியை தேடிக்கொண்டுள்ளேன், கிடைத்தவுடன் நிச்சயமாக தருகிறேன்), ராஜாஜியை பற்றிய விவரங்களுக்கு கல்கி எழுதிய குறிப்புகள் வைத்து தரப்படும் செய்திகள் நிச்சயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாதது மட்டுமல்ல, அது ஒருதலைப்பட்சமானதும் கூட. இது காஞ்சிசங்கராச்சாரியர்கள் பற்றி சோ வின் கருத்தை பயன்படுத்துவது போல, இந்த உதாரணம் கூறியதற்கு பலர் என் மேல் கோபப்படுவர், எனவே கருணாநிதிப்பற்றி முரசொலி ஆசிரியர் எழுதும் கருத்துகளுக்கு ஒப்பாகும்

dondu(#11168674346665545885) said...

1952 -ல் ஏக மனதாகத் தீர்மானம் போடப்பட்டு ராஜாஜி அவர்களைப் பதவி ஏற்குமாறுக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர் சுலபத்தில் ஒத்துக் கொள்ள்வில்லை. 24 மணிநேர அவகாசம் கேட்டு அதன் பிறகே ஒத்துக் கொண்டார். தில்லியிலிருந்து வரும் முன்னரே நேரு அவர்களும் ராஜாஜியிடம் இது பற்றிப் பேசியுள்ளார். பிறகு சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக அவர் ஏகமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஒன்று கூற வேண்டும். உள்மனதில் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜி அவர்களை பிடிக்காது என்பது ஊரறிந்த விஷயம். வேறு வழியில்லாததாலேயே அவர்கள் ராஜாஜி அவர்களை நாடி வந்தனர். ராஜாஜி அவர்கள் ஒத்துக் கொள்ளக்கூடாது என்ற தொனியிலேயே கல்கி அவர்கள் முதலில் எழுதினார் என்பதையும் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
கவர்னர் ஜெனெரல் பதவியை அவர் கேட்டுப் பெற்றார் என்பது இது வரை நான் கேள்விப்படாதது. அப்பதவியால் அவர் பெருமை அடையவில்லை. அப்பதவிதான் பெருமை அடைந்தது என்று நான் கூறுவேன். கல்கி அவர்களுக்கு அவரிடம் பக்தி உண்டு என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் அவர் பொய்யுரைப்பவர் இல்லை.

கல்கி பத்திரிகை ஆரம்பித்த புதிதில் ஒரு தடவை கல்கி அவர்கள் அதில் எழுதினார்: "ராஜாஜி அவர்களிடம் எனக்கு பக்தி உண்டு என்பது உண்மையே. அதனால் அவர் சொல்வது சரியாக இருந்தால் சரி என்றுதான் கூற முடியும்." இதையே இப்போது நானும் எனக்குப் பொருத்திக் கூறுவேன்.

ஹா, ஹா, ஹா சிரிப்புத்தான் வருகிறது. என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். "ஏண்டா டோண்டு கொழுப்பா? சந்தில் சிந்து பாடுவது போல கல்கி என்னும் சிங்கத்துடன் உன்னை ஒப்பிட்டுக் கொள்கிறாய்?" மன்னிக்கவும் கல்கி அவர்களே!

அது சரி குழலி அவர்களே, ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்வித்திட்டத்தை பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

குலக்கல்வி பற்றி உங்கள் விளக்கம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. ஆணால் இந்த குலக்கல்வி என்ற பெயர் எப்படி வந்தது யார் இப்படி ஒரு பெயர் வைத்தது, கவர்ஜெனரல் பதவிபற்றிய சுட்டியை தேடிக்கொண்டுள்ளேன் விரைவில் தருகிறேன்.

dondu(#11168674346665545885) said...

"குலக்கல்வி பற்றி உங்கள் விளக்கம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. ஆணால் இந்த குலக்கல்வி என்ற பெயர் எப்படி வந்தது யார் இப்படி ஒரு பெயர் வைத்தது"
அதுதான் சோகம். அருமையான இந்தத் திட்டத்துக்கு இப்பெயரை வைத்தது திராவிடக் கழகத்தினரே. ஆரம்ப காலத்திலேயே கல்கி அதை மறுத்து எழுதும்போது (10-05௧953 கல்கி இதழ்) தச்சனின் மகன் தச்சனாகவே இருக்கவேண்டும் என்று முட்டாள்தனமாக யாராவது கூறுவார்களா என்று அங்கலாய்ப்புடன் கேட்டுவிட்டுப் பிறகு இத்திட்டத்தின் நன்மைகளைப் பட்டியலிடுகிறார். அவற்றை நான் மறுபடி இங்கு எழுதுவது கால விரயம். திராவிடக் கழகத்தினரையும் குற்றம் சொல்ல முடியாது. அரசுக்கு எதிர்தரப்பிலிருப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். கூடவே இருந்த காங்கிரஸார் மௌனமாக இருந்ததைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. நான் ஏற்கனவே கூறியபடி ராஜாஜி கட்சிக்காரர்களை அரசு அலுவகதினுள் வரவிடவில்லை. பலரது வளமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்லை கடித்துக் கொண்டு ராஜாஜி அவர்கள் நிலைமையை சீராக்கும் வரை காத்திருந்தனர். 1953 திசம்பரில் கூட நேருவிடம் சென்ற அதிருப்தியாளர்கள் நேருவின் ஆவேசக் கோபத்தைப் பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்னை திரும்பினர். ராஜாஜி அவர்கள் உடல்நலம் கெட்டதால் தானே ராஜினாமா செய்தார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அவர் எப்படியும் இன்னும் அதிக நாட்கள் நீடித்திருக்க முடியாது என்பதிலும் ஐயம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SnackDragon said...

// இந்தச் சுட்டி காமராஜ் அவர்களை மையப்படுத்தியதால் ராஜாஜி பற்றிய இக்கருத்தின் மேல் விவரங்கள் இருக்காது என்பதும் புரிந்துக் கொள்ளக் கூடியதே.
//
இது உங்களிடமிருந்து வரவில்லைட்யென்றால் ஆச்சரியப்பட்டிருப்பேன். நன்றி.

aathirai said...

raajaaji indha thittathukku enna peyar vaiththirundhar nnu sollalaye

dondu(#11168674346665545885) said...

தவறாக நினைக்காதீர்கள் ஆதிரை அவர்களே. உங்கள் பின்னூட்டம் 5 முறைகள் விழுந்து விட்டது. கடைசி நான்கை நீக்கி விடுகிறேன்.
கல்வித் திட்டம் 1953 அல்லது அது போன்ற வேறு தலைப்புகள் கொடுத்திருக்கலாம். எனக்குத் தெரியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் எழுதிய நூலில் ராஜாஜி தான் உலகின் மிகப் பெரிய மேதை என சொல்லியிருப்பதோடு, அந்த மாகானை சந்தித்த பின்னர் அவருடைய கருத்துக்கள்தான் தன்னை வழிப்படுத்துவதாகவும் சொல்லியிருக்கின்றார். ராஜாஜி சுத்த அமெரிக்க முதாலாளித்துவ கருத்துக்களுடன் ஒத்துப் போயிருந்தார் என்பதால் தான் இந்தப் பாராட்டு
என்கிறார்களே! உண்மையாக இருக்குமோ? டோண்டு சார் கொஞ்சமாவ‌து
உண்மையிருக்கும் இல்ல‌?

புள்ளிராஜா

dondu(#11168674346665545885) said...

//ராஜாஜி சுத்த அமெரிக்க முதாலாளித்துவ கருத்துக்களுடன் ஒத்துப் போயிருந்தார் என்பதால் தான் இந்தப் பாராட்டு
என்கிறார்களே! உண்மையாக இருக்குமோ? டோண்டு சார் கொஞ்சமாவ‌து
உண்மையிருக்கும் இல்ல‌?//
அதுவும் காரணமே. ஆனாலும் ராஜாஜி அவர்கள் இந்தியாவின் விசேஷ தூதராக அமெரிக்க சென்று கென்னடி அவர்களுடன் அணுஆயுதத்துக்கு எதிராகப் பேசியது அமெரிக்காவில் பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஒரு முறை அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் படித்தது. ஒரு இந்தியப் பெண்மணி ஒரு பார்ட்டியில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனுக்கு அறிமுகப்படுத்தப் பட்டபோது, அவர் இந்தியர் என்பதால் அவரிடம் நிக்ஸன் அவர்கள் முதலில் விசாரித்தது ராஜாஜி பற்றித்தானாம்.

ராஜாஜி தனது எளிமையால் அங்கு பலரைக் கவர்ந்தார். காந்திஜியுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் வேறு அவரை அதிகப் பிரபலமாக்கின.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அந்த மாகானை சந்தித்த பின்னர் அவருடைய கருத்துக்கள்தான் தன்னை வழிப்படுத்துவதாகவும் சொல்லியிருக்கின்றார்.//

திரு.நிக்ஸன் வாட்டர்கேட் ஊழலில் உலகப்புகழ்பெற்றவர். உங்களுக்கே நியாயமா புள்ளிராஜா, டோண்டு சாரை கலாய்க்க அளவே இல்லியா

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சாரை கலாய்க்க அளவே இல்லியா//
உங்க அங்கலாய்ப்புக்கு வேற ஆளப்பாருங்க, தகவல்.கோம்.

ஒரு விஷயம் ஞாபகத்துலே வச்சுக்குங்க. வெளிஉறவு விவகாரத்துலே நிக்ஸனை மிஞ்சற அமெரிக்க தலைவர் யாரும் இல்லை. நிக்ஸனை என்னென்னவோவெல்லாம் சொல்லி கேலி செஞ்சிருக்காங்க, ஆனா இந்தத் துறையில் மட்டும் பண்ணலை, ஏனெனில் நிக்ஸன் நிஜமாகவே அதுல பெரிய ஆள்தான்.

மத்தப்படி வாட்டர்கேட் விவகாரம். நம்ம அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி அவங்க செஞ்ச அடாவடிகளைப் பாத்தீங்கன்னா, வாட்டர்கேட்ங்கறது ஒரு ஜுஜூபி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

D. Chandramouli said...

Dear Mr Raghavan,

I often come across your name in the blog-world. Only today, somehow I got directed to one of your blogs through Sarada's postings. Sarada apparently is a hard-core fan of Sivaji Ganesan, and me too!

First and foremost, your writings on Rajaji are impressive, and many facts were really unknown to me (I belong to your age group, now living abroad).

In my younger days, I was very fond of Nehru. In fact, Rajaji himself, in his condolence message after Nehru's death, acknowledged that Indians loved Nehru a thousand times more than they loved Rajaji. I don't recall the exact words but his message in chaste English really touched me then. Kannadasan's condolence poem (titled Rose)on Nehru in Tamil made me cry.

I distinctly recall that once Nehru addressed a mammooth meeting in Marina. I was then studying shorthand. I went to the meeting and tried to take down a portion of Nehru's speech. He was roundly criticizing Swathanthra Party led by Rajaji, saying that Rajaji was still living in the "bullock-cart age". After returning from the meeting, I, being a staunch supporter of Nehru, picked up a quarrel with a tenant-friend by name Swami who was a great fan of Rajaji.

Later, I had read Rajaji's Chakravarthi Thirumagan and Vyasar Virundhu, his masterpieces.

I never knew much about 'Kulakalvi Thittam', except that the term was often used to criticize Rajaji. Now, I see your point.

I recall having read some issues of Swarajya, Swathanthra party's magazine. In my late twenties, I happened to get hold of a book by name, "I meet Rajaji" by Monica Felton. Only from that book, I came to know of the sterling qualities of Rajaji.

Again, I learnt that the wonderful song, "Kuraiyondrum Illai" was penned by Rajaji, and was beautifully sung by MS in the UN. To my knowledge, perhaps this is the only song where we don't seek any favors from God (Kuraiyondrum Illai). Whenever someone sings this song, I am moved by the verse as also the raga.

Today, we long for statesmen like Nehru, Rajaji, Patel and Kamaraj. That golden era has indeed passed, and would never return.

ON KALKI

As a teenager, I used to have running fight around the 'oonjal' at my home with my elder sister in Kumbakonam for snatching the Kalki weekly issues.

I was shocked to hear on radio that Kalki had passed away, and wondered who would be able to complete his 'Amarathara' novel in the magazine. Luckily, Kalki's daughter Anandhi took over the task and admirably completed the novel with the help of Kalki's jottings left behind. Well, those were the days!

Sorry to write in English in your Tamil Blog, but I'm too lazy to learn how to set my computer setting to record in Tamil.

Many thanks for evoking my younger days and sorry, quite a long post!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது