எழுபதுகளில் வாடகை நூலகங்கள் என் வாழ்வில் பெரும் பங்கு வகித்தன. பிரிட்டிஷ் கௌன்சில், அமெரிக்க நூலகம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு நூலகங்களில் உறுப்பினராக இருந்தாலும் அங்கெல்லாம் கிடைக்காத புத்தகங்கள் வாடகை நூலகங்களில் கிடைத்தன.
இந்த வகையில் சென்னை லாயிட்ஸ் ரோடில் (அவ்வை ஷண்முகம் சாலை) இருந்த (இன்னும் இருக்கும்?) ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி மிக முக்கியமானது. அதன் உரிமையாளர் பழனி என்பவர். அதிகம் படிக்காதவர். இருப்பினும் புத்தகங்களை தேர்வு செய்து தன் நூலகத்தில் சேர்ப்பதில் மன்னன். ஒரு பேட்டியில் அவர் கூறினார்: "ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போதே அது தேறுமா தேறாதா என்பதை என் உள்ளுணர்வு கூறிவிடும்". நல்லவனுக்கு நல்லவன், அடாவடிப் பேர்வழிக்கு அடாவடி என்று அசத்தியவர். இந்த நூலகத்திலிருந்து நான் 1974-81 காலக் கட்டத்தில் பல புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறேன். நான் சாதாரணமாக மிக சீக்கிரம் புத்தகங்களைத் திருப்புவதால் ரீடிங் சார்ஜ் எனக்கு கம்மிதான். நான் உள்ளே வந்ததுமே அவர் நான் எடுக்கும் புத்தகங்களுக்கு ரீடிங் சார்ஜை தானே நிர்ணயிடத்து விடுவதாகத் தன் உதவியாளர்களிடம் கூறிவிடுவார். நானும் ஒரு சமயத்தில் இரண்டு புத்தகங்களுக்கு மேல் எடுத்ததில்லை.
அதே போல 1971-74-ல் பம்பாயில் இருந்த போது அங்கு மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.
சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார்.
அதெல்லாம் ஒரு பொற்காலம். இப்போதும் லெண்டிங் லைப்ரரிகள் உள்ளன. எனக்குத்தான் அங்கெல்லாம் போகும் பொறுமை போய் விட்டது. கணினி வந்ததில் இது ஒரு கஷ்டம். அதுவே நம் நேரத்தை ஆக்கிரமித்து விடுகிறது. புத்தகங்கள் மாறவில்லை. நான்தான் மாறி விட்டேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
5 comments:
ராகவன் சார், மும்பையில் துரை லெண்டிங் லைப்ரரி இன்னமும் இருக்கிறதா என்ன (சரோஜாதேவி புத்தகங்களுடன்) :)
சார், 1971 முதல் 1974 வரை மும்பையில் இருந்தீர்களல்லவா ? அப்போதைய மும்பையை பற்றி ஏதாவது பதிவு எழுதலாமே :-)
யளனகபக அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://knski.blogspot.com/2005/09/blog-post.html#comments
சென்னையில் இதே போல ஈஸ்வரி வாடகை நூல் நிலையம் பல வருடங்களாக பிரசித்தம். எழுபதுகளில் கொடி கட்டிப் பறந்தது. இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி நான் போட்டப் பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோம்பேறி பையன் அவர்களே. 1974-ல் பம்பாயை விட்டேன். அதன் பிறகு மூன்று முறை சென்றிருக்கிறேன். மூன்று முறைகளையும் சேர்த்து நான் அங்கு த்கங்கிய நாட்கள் நான்குதான். லெண்டிங் லைப்ரரி பக்கம் போய்ப் பார்க்க நேரம் இல்லை. இடம் கூறுகிறேன். முடிந்தால் பாருங்கள்.
மாதுங்கா ரயில் நிலைய படிக்கட்டிலிருந்து இறங்கி வந்து முதல் லெஃடில் கன்ஸர்ன்ஸ் வரும். அதில் திரும்பாமல் நேரே வந்தால் அம்பேத்கர் சாலை வரும். அதில்தான் அரோரா சினிமா இருக்கிறது. ஆக, தெருவின் இடப்பக்கமாக நடந்து வந்து அம்பேத்கர் தெருவில் இடப்பக்கமாகத் திரும்பினால் ப்ளாட்பாரத்தில் பல பழைய புத்தகங்கள் கடைகள் உண்டு. அவற்றில் ஒன்று துரையின் கடை. மைசூர் கபே என்ற ஹோட்டல் இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. அதன் வாசலில் அவர் கடை. அவர் பெயரைச் சொல்லிக் கேட்டால் தெரியும் என நினைக்கிறேன். 50%க்கு மேல் வாய்ப்பு உண்டு. சரோஜாதேவிப் புத்தகங்களும் கிடைக்கும்.
பம்பாய் நாட்கள் இனிமையானவை. ஒரு பதிவு போட்டிருந்தேனே. நீங்களும் அதை படித்தீர்களே? அது ஒரு ஹைப்பர்லிங்கைப் பற்றியது. நல்லது மேலும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தகவலுக்கு நன்றி, நேரம் கிடைக்கும்போது போய் பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்
Post a Comment