9/13/2005

விடாது துரத்தும் கேள்விகள்

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?

2. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

3. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

4. ஆங்கிலத் தேர்வில் ஆசிரியர் ராமுவிடம் entertainment-க்கு ஸ்பெல்லிங் கேட்டார். ராமு e n t e r t a i n m e n t என்று நிறுத்தி நிதானமாகக் கூற ஆசிரியர் கோபத்துடன் wrong get out என்று கத்த, ராமு வெளியேறினான். இதே மாதிரி மற்ற சரியான விடைகள் கூறிய ஒவ்வொரு மாணவனிடமும் இதையே கூற அவர்களும் வகுப்பிலிருந்து வெளியேறினர். கடைசியில் கஸ்தூரிரங்கன் மட்டும் சமாளித்து வகுப்பில் தங்கினான். எப்படி?

5. ஒரு குதிரை பாதிரியாரைத் தாண்டி குதித்து ஒரு மனிதன் மேல் விழ அவன் மறைந்து போனான். பாதிரியார் ஒன்றுமே நடக்காதது போல தன் வேலையைக் கவனித்தார். என்ன விஷயம்?

6. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் வெளிப்புறம் பெயின்ட் அடிக்க வேண்டியிருந்தது. பெயின்டர் வெளியே தொங்கவிடப்பட்ட நூலேணியின் கடைசி படிக்கட்டின் மேல் நின்று வேலை செய்கிறார். அப்படிக்கட்டு நீர்மட்டத்தின் மேல் இரண்டு அடி உயரத்தில் உள்ளது. கடல் ஏற்றம் (hightide) காரணமாக நீர்மட்டம் 10 அடி உயருகிறது. பெயின்டர் நீரில் கால் நனையாமல் இருக்க எவ்வளவு படிகள் மேலே ஏற வேண்டியிருக்கும்? ஒவ்வொரு படியும் ஒரு அடி உயரம்.

7. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாத்தா, இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள், ஒரு பேரன் ஆகியோர் வேட்டைக்கு செல்கின்றனர். 12 வாத்துக்கள் கிடைக்கின்றன. ஆளுக்கு எவ்வளவு வாத்துக்கள் கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

28 comments:

டி ராஜ்/ DRaj said...

1. It was a slow running race ;)

டி ராஜ்/ DRaj said...

No need for the painter to walk up the ladder. Coz the ship will also raise with the water level.

டி ராஜ்/ DRaj said...

7. There were only 3 people in total. so they get 4 each :)

துளசி கோபால் said...

7.
கப்பல் தானே தண்ணிக்குத்தகுந்தமாதிரி உயரும். அதனாலெ பெயிண்டர் ஒண்ணும் செய்ய வேணாம்.

8. ஆளுக்கு 4 வாத்து.

dondu(#11168674346665545885) said...

It was a slow running race ;)
தவறான விடை.

கப்பல் தானே உயரும் மற்றும் ஆளுக்கு 4 வாத்துகள் ஆகிய விடைகள் சரியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

5.
அந்த மனிதன் பாதிரியாரின் நிழல்

dondu(#11168674346665545885) said...

"அந்த மனிதன் பாதிரியாரின் நிழல்"

இல்லவே இல்லை.

டோண்டு ராகவன்

ரவியா said...

Ramanadan is a spectator?

Balamani said...

1.The competition was not conducted

Balamani said...

1. ஓட்டப் பந்தயம் பரிசுக்குமட்மே நடத்தப்படுவதில்லை

4. கஸ்தூரிரங்கன் அந்த வகுப்பின் ஆசிரியர்

dondu(#11168674346665545885) said...

Ramanadan is a spectator?
You mean Ramamurthi? No

Balamani, your answers to both the questions are wrong. Race was conducted and it attracted prize as well.
Questions 1 to 5 remain unanswered!

Regards,
Dondu Raghavan

mukin said...

1. He has got only the first "track" to run but he did not come 1st in the actual race.

dondu(#11168674346665545885) said...

"He has got only the first "track" to run but he did not come 1st in the actual race"

தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

1. It was a relay race.. so they got the Joint Prize

2. to the mathematician as per alphabetic order

4. He Spelt WRONG and GET OUT also

5. He was playing Chess

dondu(#11168674346665545885) said...

1. It was a relay race.. so they got the Joint Prize
தவறான விடை.

2. to the mathematician as per alphabetic order
தவறான விடை

4. He Spelt WRONG and GET OUT also
சரியான விடை

5. He was playing Chess
தவறான விடை ஆனால் சரியான விடையை நெருங்குகிறீர்கள். சற்றே மாடிஃபை செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

5. சதுரங்க ஆட்டத்தில் குதிரை வீரன், எதிரி சிப்பாயை வீழ்த்துவது :-))

லதா said...

1. STEROID போன்ற ஊக்கமூட்டும் மருந்து உட்கொண்டு முதலில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதா?

dondu(#11168674346665545885) said...

"சதுரங்க ஆட்டத்தில் குதிரை வீரன், எதிரி சிப்பாயை வீழ்த்துவது"
சரியான விடை என்று ஒத்துக்கொள்ளலாம். குதிரையின் பக்கத்து கட்டத்தில் பாதிரி (பிஷப்), அவருக்கு குறுக்காக சிப்பாய். குதிரையின் நகர்வை நினைவில் கொள்ளவும்.

"1. STEROID போன்ற ஊக்கமூட்டும் மருந்து உட்கொண்டு முதலில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதா?"
தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

என்ன அநியாயம் இது டோண்டு சார் ?
ஒரு கேள்வி கூட கிரிக்கெட் பற்றியோ,
திரைப்படங்களைப் பற்றியோ இல்லையே ? இதைக் கண்டித்து போட்டியிலிருந்து நான் விலகுகிறேன்
:-)),

dondu(#11168674346665545885) said...

முயற்சி திருவினையாகும். 1, 2 மற்றும் 3-ஆம் கேள்விகளுக்கான விடைகள் தேவை.

குறைந்த பட்சம் மூன்றாவது கேள்வி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kasi Arumugam said...

ராமமூர்த்தி என்பது குதிரையின் பெயர்? கிண்டி / ஊட்டி ரேஸ்?

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் காசி. சரியான விடை. இன்னும் இரண்டே கேள்விகள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Balamani said...

3.டொனால்ட் டக்கிற்கு இரண்டு கைகள் (இறக்கைகளா?)இருப்துபோல் வரைந்தது. சரியான விடைதானே டோண்டு சார், அடுத்த set of puzzles-க்கு போங்க சார்...)

dondu(#11168674346665545885) said...

டொனால்ட் டக்கிற்கான விடை தவறானது பாலாமணி அவர்களே. 2 மற்றும் 3-ஆம் கேள்விகள் பாக்கி உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

.:dYNo:. said...

The original Donald by Disney did not have a coat button?

.:dYNo:.

dondu(#11168674346665545885) said...

The original Donald by Disney did not have a coat button?
.:dYNo
Oh no!!!
அன்புடன்,
டோண்டு ராகவன்.

Lumbergh-in-training said...

donald duck: doesn't wear pants,but wraps a towel around his waist when he comes out of a bath.

dondu(#11168674346665545885) said...

"donald duck: doesn't wear pants,but wraps a towel around his waist when he comes out of a bath."

மன்னிக்கவும், தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது