கடந்த ஒரு வாரமாக மழை, புயலாக இருந்தது. மழை மிகுந்த ஒரு பகலில் மனநெகிழ்வை அளித்த ஒரு காரியத்தை என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் செய்தார். அன்று அதை லைவ் ஆகப் பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.
அதே சமயம் என்னுடைய சில பதிவுகளும் புயலென பின்னூட்டங்களை சந்தித்தன. ஒரு சிலர் தவிர எல்லோரும் கண்ணியமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்ப்பு வரும் என்று தெரிந்தாலும் அப்பதிவுகளை நான் இட்டதால் அதிகம் பாதிக்கப்படவில்லை. தரக்குறைவான பின்னூட்டங்களை ஏற்கனவே எதிர்கொண்டவன் என்பதால் இம்முறை பாதிப்பு அவ்வளவு இல்லை.
எனக்கு நட்சத்திர வாய்ப்பை இரண்டாம் முறையாய் தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு - குறிப்பாக மதி மற்றும் காசி அவர்களுக்கு - என் நன்றி உரித்தாகுக. இவ்வார நட்சத்திரம் சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பரணி இடைக்காடர் சேரன்
-
*பரணி இடைக்காடர் சேரன்*
*மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துவது ஏன்?*
- *திறமைகளை வளர்த்தல், கண்டறிதல்*: போட்டிகள் மாணவர்களின் உள்ளார்ந்த
திறமைகளை...
3 hours ago

No comments:
Post a Comment