10/13/2005

வரதட்சிணை பற்றிய வெளிப்படையான எண்ணங்கள்

"எழுபதுகளில் காத்தாடி ராமமூர்த்தி தயாரித்து நடித்த "டௌரி கல்யாணமே வைபோகமே" என்ற நாடகம் அரங்கேறியது. அதில் அவர் தன் தங்கையின் கல்யாணத்தை நடத்தி முடிக்க நாய் படாத பாடு படுவார். கடைசி காட்சியில் அவர் தம்பிக்கு பெண்பார்க்கும் முறை வரும்போது அவரும் அவர் மனைவியும் தெம்பாக வரதட்சிணை கேட்க ஆரம்பிப்பார்கள்.

பழைய விகடன் ஜோக் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. போன வருடம் ராமசாமி வரதட்சிணையை எதிர்த்துப் பேசினான் ஆனால் இந்த வருடம் ஆதரித்துப் பேசினான். இதைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒருவர் இன்னொருவரிடம் இது ஏன் என்று கேட்க, அவர் பதில் கொடுக்கிறார்: "போன வருடம் ராமசாமி தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினான், இந்த வருடம் அவன் மகனுக்காக பெண் தேடுகிறான், அவ்வளவுதான்."

அதாவது நிலைமைக்கு ஏற்றவாறு வரதட்சிணைக்கு ஆதரவோ எதிர்ப்போ ஏற்படுகிறது. இதை கருப்பு வெள்ளை என பேதம் கொண்டு பார்க்க இயலாது. இது ஒரு இடியாப்பச் சிக்கல். எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய கற்பு பற்றிய பதிவில் பெண்ணிடம் எதிர்ப்பார்க்கப்படும் கற்பின் அளவு ஆணிடம் எதிர்ப்பார்ப்பதில்லை என்று பார்த்தோம். திருமணம் இல்லாமலே ஆண் தன் காம இச்சையை தணித்துக் கொள்ளலாம். அது வெளியே தெரிய வந்தாலும் ஆம்பிள்ளைனா இப்படி அப்படித்தான் இருப்பான் என்று கூறி விடுவார்கள். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் பெண் என்ன செய்வாள்? அவள் உடல் உறவை திருமணம் என்ற போர்வையின் கீழ்தான் பெற முடியும். ஆகவே பெண்ணுக்கு திருமணம் அதிக அவசியம் ஆகிறது. கேட்க கசப்பாயிருந்தாலும் இதுதான் உண்மை நிலை. வரதட்சணைக்கு இதுவே முக்கியக் காரணம். இதில் சரி தவறு என்பதையெல்லா பார்க்க இயலாது.

சரியோ தவறோ நாம் யதார்த்தத்தை எதிர்த்து போராடுவது கடினம். என் நண்பர் வரதட்சணையே வேண்டாம் என்று கூறினார். அவர் நல்ல வேலையில் இருந்தார். உடனேயே பெண்வீட்டாருக்கு சந்தேகம் வந்தது. பையனிடம் ஏதோ கோளாறு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்காகவே வரதட்சணை கேட்கிறார்கள் சிலர். இதன் தீர்வு என்ன?

யோசிக்க வேண்டியதுதான். சேர்ந்து யோசிப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

ENNAR said...

சார் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கட்டுமே. நீங்க உங்க பையனுக்கு வரதட்சிணை வாங்குறீர்கள் திருமணம் முடிந்து இரண்டுமாதம் கழிந்து தன்மனைவி பேச்சைக் கேட்டு தனியாகவோ தன் மாமனார் வீட்டுக்கோ போய் விட்டால் நீங்க என்ன பன்னுவீர்கள் வேண்டாம் பொடியன் திருமணத்தை நடத்திவைப்போம் வரதட்சிணை கேட்க வேண்டாம் நம் பெண்ணுக்கு கொடுப்போம் வரதட்சிணை.

என்னார்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் வரதட்சணை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் மாட்டுப் பெண் நினைத்தால் தனிக்குடித்தனம் போவாள். வரதட்சணை இதில் ஒன்றும் செய்யாது.
"பொடியன் திருமணத்தை நடத்திவைப்போம் வரதட்சிணை கேட்க வேண்டாம் நம் பெண்ணுக்கு கொடுப்போம் வரதட்சிணை."
விடை அவ்வளவு எளியதல்ல என்று மட்டும் கூறுவேன். பலர் தம் பிள்ளைகளுக்காக வாங்குவது தன் பெண்களை கரையேற்றவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

சரி சரி அப்படியா? இது எனக்குத்தெரியாது, எங்கபையன்கள் மாமனாரிடம் வாங்கிய பைக்கை தம்பிகே கொடுக்க மாட்டானுக.
இது எங்கள் கலாச்சாரம்

நல்லது
என்னார்

aathirai said...

idharku mundhiya padhivil naatu janathogaiyai perukuvadhu pengalin
kadamai endru sonnergal. ivargal desa kadamayai aatra neengal kodukkum
incentive idhudhaana.? ore muranaka ulladhe!

engal samugathil varadhatchinai, endrellam pesinale asingam endru ninaipavargal.

namakal pakkam penn kidaikamal niraya aangal AIDSku baliyanadhaga kelvi.

dondu(#11168674346665545885) said...

"idharku mundhiya padhivil naatu janathogaiyai perukuvadhu pengalin
kadamai endru sonnergal. ivargal desa kadamayai aatra neengal kodukkum
incentive idhudhaana.? ore muranaka ulladhe!"
இதில் என்ன முரண்? இரண்டுமே உண்மைதான். வேண்டுமானால் நகைமுரண் என்று கூறிக்கொள்ளலாம்.

"engal samugathil varadhatchinai, endrellam pesinale asingam endru ninaipavargal."
அப்படியா, ரொம்ப சந்தோஷம். தயவு செய்து உங்கள் சமூகத்தின் பெயரைக் கூறுங்களேன். அதை பெருமையுடன் இங்கே போடுகிறேன்.

"namakal pakkam penn kidaikamal niraya aangal AIDSku baliyanadhaga kelvi."
எய்ட்ஸ் வந்ததால் பெண் கிடைக்கவில்லையா அல்லது பெண்கிடைக்காததால் எய்ட்ஸ் வந்ததா? "கொடி அசைந்ததும் காற்று வந்ததா" பாட்டுப்போல இருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

namakal vivagaram thinnaiyil vandhadhu.

neengal kindaladithalum ennudaya samugathil ippadidhan. vilambaram thevai illai. en veetilo en sonthakarar vitilo yarukum dowry endru vangiyo kodutho nan kelvipatadhillai.

appadi yaaravadhu kettal avanukellam ponnu kudukkaradhillai endru dhan solvargal.

aathirai said...

உங்களுக்குத் தெரியாத 'நாகரிக' உலகம் இருக்கத்தான் செய்கிறது.

dondu(#11168674346665545885) said...

உங்களுக்குத் தெரியாத 'நாகரிக' உலகம் இருக்கத்தான் செய்கிறது.
அதைத்தான் நான் உங்களை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் நிச்சயமாக கிண்டல் ஏதும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"சத்தியமாக அய்யங்கார் கிழக்கு கலை இல்லை."
இது இல்லை, அது இல்லை என்றெல்லாம் சத்தியம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட இதோ நிஜமாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டால்/குறிப்பிட முடிந்தால் நேரம் மிச்சமாகாதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

கூத்தாடி said...

பல பேருக்கு அது பிரஷ்டீச் விசயம்.என் மருமக இவ்வுளவு நகைப் கொண்டாந்தா என்ற பெருமை பேசுபவர்களை நான் பார்த்துள்ளேன் .அவர்கள் எல்லோரும் படித்த நல்ல சமூக நிலையில் உள்ளவங்கத்தான்.
என்னார் சொல்வது சரிதான் ,பணம் பிரச்சினை இல்லாதவர்கள் செய்யலாமே .

dondu(#11168674346665545885) said...

"மாமா அய்யங்கார்ல கிழக்கு கலைன்னு ஒன்னு இருக்கா? சொல்ல்லுங்கோ!"
இதை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்னார் சொல்வது சரிதான் ,பணம் பிரச்சினை இல்லாதவர்கள் செய்யலாமே."
பிரச்சினை அவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விடுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

அது ஒரு கொங்கு நாட்டு சமூகம்.

என் நண்பர் வரதட்சணையே வேண்டாம் என்று கூறினார்.
அவர் நல்ல வேலையில் இருந்தார். உடனேயே பெண்வீட்டாருக்கு
சந்தேகம் வந்தது. பையனிடம் ஏதோ கோளாறு என்று
பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு கிருத்துவ நண்பர் இப்படி செய்தார். அப்பொழுது
இப்படிதான் பேசினார்கள்.

dondu(#11168674346665545885) said...

"அது ஒரு கொங்கு நாட்டு சமூகம்"

அந்த சமூகத்தில் பிறந்த நீங்கள் அதிர்ஷ்டக்காரர். வணங்குகிறேன் அந்த சமூகத்து பெரியவர்களை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது