கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.
ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.
ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.
ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.
"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.
ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
22 hours ago
26 comments:
கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின.
A women needs a man like a fish needs a bicycle.
...and a man needs a woman like a bicylce needs a fish?
இதெல்லாம் கோஷங்களுக்கு மட்டும் தான் உதவும்.
ராகவன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை...
உங்கள் பதிவாவது பின்னூட்டங்களால் side track பண்னப் படாமல் சொல்ல வந்ததை சொல்லும்படி ஆகட்டும்
// ...and a man needs a woman like a bicylce needs a fish? //
;-))
ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று.
அவன் 'தந்தை என்ற கடமையை' நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி
அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும்.
சார் எனக்கு ஒரு சந்தேகம்.
எல்லாம் சரி. திருமணத்துக்கு முன்னும் அவன் மண்டையை போட்டதுக்கப்பாலும்
ஏன் இவளுக்கு கட்டுபாடுகள்னு கொஞ்சம் விளாக்க முடியுமா?
தந்தையின் கடமைதான் என்ன?
"திருமணத்துக்கு முன்னும் அவன் மண்டையை போட்டதுக்கப்பாலும்
ஏன் இவளுக்கு கட்டுபாடுகள்னு கொஞ்சம் விளாக்க முடியுமா?"
அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"A women needs a man like a fish needs a bicycle"
அப்படி சொல்லிவிடமுடியாது ஆதிரை அவர்களே. ஒருவருக்கொருவர் அவசியம் தேவைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"உங்கள் பதிவாவது பின்னூட்டங்களால் side track பண்னப் படாமல் சொல்ல வந்ததை சொல்லும்படி ஆகட்டும்"
ஆமென்
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\பல பெண்களுடன் ஆண் ((உறவு)) வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் ((நண்பர்கள்)) இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.\\
சினேகிதி அவர்களே, என் கருத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
neenga ((உறவு)) &((நண்பர்கள்)) i ore meaning ila ellthininga?
மன்னிக்கவும் சினேகிதி அவர்களே. இப்போதுதான் நீங்கள் கூற வந்ததை கவனித்தேன்.
இதுவும் பெண்ணுக்கு விதிக்கப்படும் அதிகக் கட்டுப்பாடே. விளக்குகிறேன். கணவன் தன் பெண் சினேகிதிகளை வீட்டிற்கு அழைக்கும்போது தன் மனைவி அவர்களை உபசரிக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறான். அதுவே ரிவர்ஸ் நிலையில் நடக்கிறதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondo sir,
appidi reverse niliyila ungada veetila nadantha nallathu...(allathu nadakatha thodangina)
"You must me the change you wish to see in the world"-(Some one)
"You must me the change you wish to see in the world"-(Some one)"
A meaningless sentence. I am afraid the main verb is missing.
As for your wish, my wife, when she was working in a bank way back in the sixties, used to invite her colleagues, male and female, for social get-together, just as I invited my colleagues too, male and female, and all had the same welcome.
Regards,
N.Raghavan
For "sixties" read "eighties". Sorry for the error in the previous comment of mine.
Regards,
Dondu Raghavan
வணக்கம் பல்லவி அவர்களே,
நீங்கள் கேட்டது ஒரு வரி கேள்வி. அதற்கு நீண்ட பதில் தேவை.
கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. "அது காரியத்துக்கு ஆகாது" என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின.
தந்தை என்ற கான்செப்ட் வராதிருந்தால் பெண் மட்டும்தானே குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அதைத்தான் கூறினேன்.
தாய் யாரை காட்டுகிறாரோ அவரே தந்தை என்பதுதானே இத்தனை காலம் நட்ந்து வந்தது. இப்போதுதானே டி.என்.ஏ. சோதனை வந்துள்ளது. அதுவும் பலருக்கு அதைப் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லை என்பது தெரியும்தானே.
அதுவரை ஒருவன் தன் குழந்தைதான் தன் மனைவியின் வயிற்றில் வளர்கிறது என்பதை நிச்சயித்துக் கொள்ளவே பெண்ணுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தது. இல்லாவிட்டால் காரியத்துக்கு ஆகாது என்று கூறினேன். சதி கொடுமை, கணவன் இறந்ததும் விதவை சந்தித்தக் கேவலங்கள் ஆகியவை இந்த எண்ண ஓட்டத்தின் பக்க விளைவுகளே.
பெண் கல்வியறிவு பெற்றால் எங்கே தன் கை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில்தான் அடுப்பூதும் பெண்களுக்கு ஏட்டுப் படிப்பெதற்கு என்று கூறப்பட்டது. இதெல்லாம் ஏன்? அவ்வாறு செய்யாவிட்டால் குடும்பம் என்ற அமைப்பு தோன்றும் காரியத்துக்கு ஆகாது என்று கூறினேன்.
ஆனால் இப்போதைய நிலைமை என்ன? பெண்கள் கல்வியறிவு பெற ஆரம்பித்து விட்டனர். நல்ல வேலைகளிலும் அமர்கின்றனர். இருப்பினும் ஒரு சிறு கயிற்றுக்கு அடிமைப்பட்டுக் கிடைக்கும் யானையின் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையை பற்றி நான் எழுதியதற்கு பதறியடித்துப் பின்னூட்டம் இட்டவர்களில் பெர்ம்பான்மையினர் ஆண்களே என்பதையும் பார்த்தீர்கள்தானே.
அவர்களில் ஒருவர் கூட புள்ளிராஜாவிற்கு எய்ட்ஸ் வந்தால் அவர் மனைவி உடல் சுகத்தைத் தியாகம் செய்ய வேண்டியதுதானா என்ற கேள்விக்கான விடையை கூறாமல் அதை சாமர்த்தியமாகத் தவிர்த்தனர்.
இப்போது ஒரு உண்மை நிகழ்ச்சியைக் கூறுகிறேன். இதயம் பேசுகிறது பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி பதில் பகுதியில் இரு கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன. கேட்டவர்கள் இரு தனி நபர்கள். இருவருமே பெண்கள்.
முதல் கேள்வியில் ஒரு பெண் தான் வேலை நிமித்தம் வெளியூர் செல்ல கணவன் பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் தொடர்பு கொண்டதை பற்றிக் கூறினார். இரண்டாம் கேள்வி அதற்கு நேர் எதிர். இங்கு கணவன் துபாயில் வருடக்கணக்காய் தங்கியிருக்க தன் பக்கத்து வீட்டுக்காரன் தன் மனதைக் கவர்ந்தது பற்றி எழுதப்பட்டிருந்தது.
முதல் கேள்விக்கு பதில் இவ்வாறு கொடுக்கப்பட்டது. "வேலைதான் முக்கியம் என்று நீங்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் கணவன் பாவம் இல்லையா, அவரைப் புரிந்து செயல்படுங்கள்."
இரண்டாம் கேள்விக்கு பதில் இவ்வாறு இருந்தது. "சீதை, கண்ணகி ஆகியோர் வழியில் வந்த பெண் இவ்வாறு பேசலாகாது. கேவலம் உடல் இச்சைக்கு வசப்படுதல் பெண்ணுக்கு அழகில்லை"
அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் போதாது.
இன்னொரு விஷயம். ஆசைநாயகி என்பதைப் போல கள்ளப் புருஷன் என்பதும் நூற்றாண்டுகளாக நடந்து வந்ததுதான். ஆயிரத்தோரு அரபுக் கதை முழுக்கக் கள்ளப் புருஷன்கள் விவகாரம்தான். அதற்கு தண்டனை அளிப்பது பற்றியே அப்புத்தகம் முழுக்கக் கதைகள். அதே சமயம் தினத்துக்கொரு பெண்ணை சுகித்து அடுத்த நாள் அவளை கொலை செய்யும் அரசனைப் பற்றி ஒப்புக்குக் கூட ஒரு கண்டனம் இல்லை.
இதையெல்லாம் எதிர்த்துத்தான் என் மூன்று பதிவுகளையும் போட்டேன். அதற்காக நான் வருந்தவில்லை.
ஆனால் வந்தப் பலபின்னூட்டங்கள் கோழைத்தனமாக என் மனைவி மக்களை இழுத்தன. இப்போது அதற்கும் பதில் கூறுகிறேன்.
எழுதியது நான். அவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை.
கருவில் ஆணோ பெண்ணோ உருவாவது க்ரொமோஸ்கோம்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் ஆணே அவன் கருவில் இருந்தச் சமயத்தில் நிலை வேறுவிதமாக இருந்திருந்தால் பெண்ணகப் பிறந்து அப்பெண்ணைப் பார்த்து மற்றவர்கள் ஜொள்ளுவிட்டிருப்பார்கள். ஆக நான் கூட அம்மாதிரி பெண்ணக பிறந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? கண்டிப்பாக என் நலன் எதுவோ அதை செய்திருப்பேன். அது விஷயமாக மற்றவர்கள் பெண்ணுக்களித்த கட்டுப்பாட்டை மீற நேர்ந்திருந்தால், அப்படியே ஆகட்டும். அவ்வளவுதான். என்ன, தேவையான எல்லா தற்காப்பு நடவடிக்கையும் எடுத்திருப்பேன். அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க....
தானா ஆடுற சாமி உறுமி சத்தத்த கேட்டா விடுமா....ன்னு.
ஏனோ ஞாபகம் வந்துச்சு.
அன்பு அவர்களே,
தயவு செய்து விளக்கவும். உங்களுக்கே தற்சமயம் விளங்கவில்லையென்றால் விளங்கின பிறகு கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புது பிளாக்கரில் லேபலிங் செய்யும் விவகாரத்தில் இப்பதிவு தானாகவே மீள்பதிவு ஆனது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
:) Good , Keep it up :) Every one likes you because of these type of posts :)
இது என்னங்க பழக்கம். அவர் ஆங்கிலத்துல கேட்டா நீங்களும் ஆங்கிலத்துலேயே பதில் சொல்லனுமா? அவர் தமிழ்-ல தான படிக்கிறார்
//அவர் ஆங்கிலத்துல கேட்டா நீங்களும் ஆங்கிலத்துலேயே பதில் சொல்லணுமா?//
நான் இப்பத்தானே பதிலே சொல்கிறேன். :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//"You must me the change you wish to see in the world"-(Some one)"
A meaningless sentence. I am afraid the main verb is missing.
As for your wish, my wife, when she was working in a bank way back in the sixties, used to invite her colleagues, male and female, for social get-together, just as I invited my colleagues too, male and female, and all had the same welcome.
Regards,
N.Raghavan//
இது நீங்க தானே?
தமிழ்மணத்துல இப்பதான் உங்க பதிவை பார்க்கிறேன். அதுக்கு முன்னாடியே கூக்ள் ரீடரில் பார்த்துட்டேன்.
மத்தபடி உங்களோட இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு. இது பழைய சிந்தனை தான்னாலும் இன்னும் நிறைய பேரால ஏத்துக்கப் படாம இருக்கு.
//இது நீங்க தானே?//
ஓ, இதைச் சொல்லறீங்களா? ஆங்கிலத்துல கேட்டா ஆங்கிலத்துல பதில் சொல்றதுல என்ன தப்பு? ஆனா ஒண்ணு சம்பந்தப்பட்டவர் தங்கிலீஷிலும் அக்கேள்வியைக் கேட்டிருந்தார்.
நான் நினைக்கிறது என்னன்னா ஒண்ணு தமிழை தமிழிலேயே கேகணும். அதை லத்தீன எழுத்துக்களில எழுதறது கொடுமை. அதுக்கு ஆங்கிலதிலே எழுதறதே உத்தமம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு சார்.
ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் பிளாக்கிற்கு வந்தா.. சில லிங்க்குகள் தாண்டி இந்த பதிவுக்கு வந்தாச்சு.
இந்த கற்பு பற்றி நீங்க எதாவது சொல்லிருகீங்களா/உங்கள் கருத்து கேக்கணும்னு நெனச்சேன். பரவாயில்லை ஒரு விவாதமே போயிருக்கு. முழுசா படிச்சுட்டு நம்ம கருத்த சொல்லுவோம்.
Hi., Nice article.
Just a question
"முதல் கேள்விக்கு பதில் இவ்வாறு கொடுக்கப்பட்டது. "வேலைதான் முக்கியம் என்று நீங்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் கணவன் பாவம் இல்லையா, அவரைப் புரிந்து செயல்படுங்கள்."
இரண்டாம் கேள்விக்கு பதில் இவ்வாறு இருந்தது. "சீதை, கண்ணகி ஆகியோர் வழியில் வந்த பெண் இவ்வாறு பேசலாகாது. கேவலம் உடல் இச்சைக்கு வசப்படுதல் பெண்ணுக்கு அழகில்லை"
அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் போதாது."
What do you think the answer would have been if the same questions were raised by 2 men? I think that the answer would have been the same. As a popular weekly, they don't want to preach extramarital sex to any sex. So I guess here you have to give the benefit of the doubt to the magazine.
Post a Comment