12/18/2005

சோ அவர்களைப் பற்றி

ஆ ஊ என்றால் உடனே சோ அவர்களை இழுப்பதே இங்குத் தமிழ்ப் பதிவுகளில் எல்லோருக்கும் வேலையாகிப் போயிற்று. இப்போது சோ உத்தி என்று வேறு கூற ஆரம்பித்து விட்டார்கள். "அவருக்கு ஆதரவாக டோண்டு எழுதுவதற்குக் காரணமே சோ அவர்கள் பார்ர்ப்பனர் என்பதுதான் என்று அவரே கூறிவிட்டார்" என்று என்னைப் பற்றி எனக்கே புதுத் தகவலே தந்து அருள் பாலிக்கிறார் ஒருவர். "என்னுடைய எழுத்துக்களிலிருந்து அதை நிரூபிக்க முடியுமா" என்று சவால் விட்டால் என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு நிலையைக் காரணம் காட்டி மேலும் அசடு வழிகிறார். அதே சமயம் சோவை எதிர்ப்பது அவர் பார்ப்பனர் என்பதால் இல்லை என்று வேறு எழுதி அப்பா குதிருக்குள் இல்லையென்று போட்டு உடைத்து விடுகிறார்.

அருண் அவர்கள் இந்தப் பதிவில் நான் பார்த்தப் பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டது என்னவென்றால் பலருக்கு நானும் அருணும் வைக்கும் வாதங்களைப் பாயிண்ட் பை பாயிண்டுகளாக பதில் சொல்ல முடியவில்லை. அப்பதிவிலிருந்தும் வேறு சில பதிவிலிருந்தும் நான் பார்த்ததை இங்கே பட்டியலிட முயற்சிக்கிறேன். ஒரு பதிவில் இடமில்லையென்றால் பகுதி 2 கூட இப்பதிவுக்கு வரலாம்.

முதலில் அருண் அவர்கள் எழுதியது.
"(1) இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது இதிகாசங்களிலும், வேதங்களிலும் அவருக்குப் பெருத்த மரியாதையும் பண்டிதமும் உண்டு. அவற்றைப் பற்றி அவர் எழுதியிருக்கும் மஹாபாரதம் பேசுகிறது, இப்போது எழுதி வரும் இந்து மகா சமுத்திரம் போன்றவைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

(2) தமிழ் தமிழ் என்று மொழி மேல் உள்ள வெறியினால் மற்ற மொழிகளின் மீது தார் பூசுவதோ அல்லது அதற்காக பந்த், கடையடைப்பு போன்றவை நடத்துவதோ கடுமையாய் எதிர்ப்பவர். நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையைப் பல சமயங்களில் வெளிப்படுத்துபவர்.

(3) தீவிரவாத இயக்கங்களை பயங்கரமாய் எதிர்ப்பவர். அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருபவர். தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் …அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வருபவர்.

(4) பி.ஜே.பி தலைவர்கள், அந்தக் கட்சி மற்றும் த.மா.கா, மூப்பனார் போன்றோரிடம் மிகப் பரிவு கொண்டிருப்பவர். இருப்பினும் அவர்களை எங்கெங்கு திட்ட வேண்டுமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டுமோ அங்கே தயங்காமல் அவற்றையெல்லாம் செய்து, நார் நாராய் கிழிப்பவர்.

(5) வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்.

(6) எந்த ஒரு தலைவரின் தனிப் படத்தையும் அட்டையில் போட்டு கௌரவிக்காத துக்ளக் மூலம், நல்லகண்ணுவின் புகைப்படத்தைப் போட்டு, அவரின் நேர்மையான அரசியலைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து எழுதியவர். நேர்மையான அரசியல் தலைவர்களை, அவர்களின் திறமைகளை பாராட்டத் தயங்காதவர். தனக்குக் கருத்து ரீதியாகப் பிடிக்காத தலைவர்களிடம் கூட, பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தால்…சமயம் கிடைக்கும் போது, அதை வெளியே சொல்லத் தயங்காதவர்.

(7) இட ஒதுக்கீட்டை வைத்துத் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டு வங்கி அரசியலை எல்லாம் புள்ளி விவரங்களோடும், ஒரு வக்கீலின் வாதாடும் திறமையோடும் விவாதிப்பவர்.

(8) அசத்தலான நகைச்சுவையுணர்வும்,புத்தி கூர்மையும் கொண்டவர். அவர் இயக்கிய அரசியல் நகைச்சுவைப் படமான முகம்மது பின் துக்ளக், மற்றும் திரைப்படங்களைக் கிண்டலடித்து எடுத்த தொலைக்காட்சித் தொடரான சரஸ்வதியின் செல்வன் போன்றவற்றை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமளவுக்கு தீர்க்கதரிசனப் பார்வையோடு எழுதி,இயக்கியவர்.

(9) இது எல்லாவற்றையும் விட, சமீபத்திய குஷ்பு பிரச்சினை என்று மட்டுமல்ல, பெண்ணியம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்போதும் நக்கலும், கிண்டலும் அடிக்கக் கூடியவர். குஷ்பு சொன்ன கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஆனால் அவரை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

(10) அப்துல்கலாம் எது செய்தாலும் ‘ஆஹா ஓஹோ’ என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுத ஆரம்பிக்கவும், எப்படி அப்துல் கலாம் எது சொன்னாலும் வியாபாரமாக்கப்படுகிறது என்று அதையும் கிண்டலடித்துத் தள்ளியவர். தமிழில் நையாண்டி, கண்ணியமான அரசியல் நகைச்சுவை போன்றவற்றில் தனி இடம் பிடித்து வைத்திருப்பவர்.

அவரது பல கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வரும் ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவும் சில இடங்களில் இடறியிருக்கலாம், அவரது கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடு இல்லாமல் போகலாம்…ஆனால், தமிழகப் பத்திரிக்கையுலகிலும் இன்ன பிற கலைத்துறைகளிலும் அவருக்கென்று இருக்கும் இடம் அலாதியானது, அசைக்க முடியாதது! எல்லோருக்கும் பிடித்தமான விதமாக எந்த ஒரு மனிதராலும் இருந்து விட முடியாது…சோ மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், அவரது எழுத்தை ரசிப்பது என்பதும், அவரது பாணி அரசியல் விமர்சனமே சகுனித்தனம்,amusing என்றெல்லாம் வலைப்பதிவுலகில் அவ்வப்போது விமர்சனம் வைக்கப்படும் போது, அவரை ரசிப்பவர்களும் காரணங்களோடு பதிவு செய்வது அவசியமாகிறது. எனக்கும் கூட, சோ விமர்சகர் என்ற நிலையைத் தாண்டி த.மா.கா-தி.மு.க-ரஜினி கூட்டணியில் பெரும் ஆர்வம் காட்டியதிலும், பெண்கள் குறித்த அவரது அபிப்ராயத்திலும் கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பக்குவமும், அவற்றைக் கட்டுரையாய் எழுதினால் (நன்றாக இருந்தால்) பிரசுரிக்கும் தில்லும் சோவுக்கும், அவர் நடத்தும் துக்ளக்கிற்கும் உண்டு என்று நம்புகிறேன். துக்ளக் ஹேராமைப் பற்றி எழுதிய விமர்சனத்தை, நான் கிழித்து எழுதியதைப் பிரசுரித்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஆரம்பித்த விதமே "இது நாள் வரை அரசியலும் அரசியல் சார்ந்த இடத்திலுமே குப்பைக் கொட்டிக்கொண்டிருந்த துக்ளக், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலையும் கலை சார்ந்த இடத்தில் கொட்டியிருக்கிறது" என்று இருக்கும். அங்ஙனமே பிரசுரமும் ஆனது."

அருண் அவர்களே, நீங்கள் என்னதான் நம்பரெல்லாம் கொடுத்து எழுதினாலும் ஒரு பூட்டப்பட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு அவை புரியாது, அவற்றைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்தான்.

இப்போது கார்த்திக் அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு வருவோம். சோ அவர்கள் எம்.பி. யாக இருந்து ஆற்றியப் பணிகளை மறுக்க இயலாத நிலையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"//"எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக, சோவை "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று சொல்ல முடியா வண்ணம்" // என்று எழுதவேண்டும் என்றால், இது என்ன அயோக்கியத்தனமாக இருக்கவேண்டும்? சரி இவருக்காக பிற எல்லாகட்சிகளிலும் இருக்கிற/இருந்த எம்.பிக்கள் கட்டிய கக்கூஸ்களை, பள்ளிகளை, போட்ட ரோடுகளை,சமத்துவ புரங்களை, மதிய உணவுகளை, பழங்குடி முன்னேற்ற ஏற்பாடுகளை எங்காவது கஷ்டப்பட்டு தேடிபிடித்து பட்டியலிட்டால் அருண் என்ன எழுதிய வாக்கியத்தை திரும்பப்பெற்றுக்கொள்வாரா?"

அதற்கு நான் அங்கு கொடுத்த பதில்:
"அதைத்தான் செய்து பாருங்களேன். அதில் பெரும்பான்மையான கேஸ்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. அடித்தக் கமிஷன்களும் கூடவே வரும். சோ அவர்கள் ஏதாவது கமிஷன் அடித்தார் என்று உங்களால் நாக்கின் மேல் பல் போட்டுப் பேச முடியுமா?

அதைக் கூறினால் அவர் தன் கடமையைத்தானே செய்தார் எனக் கூறி விட வேண்டியது. மற்ற எம்.பி.க்கள் செய்ததைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஊரில் நடக்காததையா செய்து விட்டார்கள் என சப்பைக்கட்டு கூறிக் கொள்வது. இதே வேலையாகப் போயிற்று."

இப்போது முத்து அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு வருவோம்.

அவர் எழுதுகிறார்:
"இது போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்."
அதற்கு என் பதில்:
என்ன உளறல் ஐயா? நான் அவ்வாறு கூறியதை நிரூபிக்க முடியுமா? அவரைப் பற்றி மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். பல பதிவுகளிலும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். நான் கூறாத ஒன்றை கூறியதாகக் கூறுவது உங்களுக்கு அழகில்லை.

"திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
என் பதில்:
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ஆனால் என்னைப் போன்றவர்கள் சோவை ஆதரிப்பது மட்டும் எங்கள் பார்ப்பன ஆதரவைக் குறிப்பிடும் என்று நீங்கள் கூறுவதை என்னவென்று கூறுவது? அதற்கு மற்றவர்கள் போடும் பின்னூட்ட ஜிஞ்சாக்கள் காதைத் துளைக்கின்றன.

"அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?"

அதற்கு நான் இட்ட பதில்:
"சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லஞ்சம் வாங்குவதை விஞ்ஞான பூர்வமாகச் செய்தவர்கள் திமுகவினரே. அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது அவற்றைப் பற்றிப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்தவன் நான்.

அதே சோ 1975-ஜூன் மாதத்தில் எழுதியதைப் பற்றி நான் என் பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளேன். "வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
இந்த ஆண்மை எந்த வேறு எவ்வளவு பத்திரிகையாளருக்கு இருக்கிறது?

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.

ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விற்பனையை பெருக்கிக் கொள்ள இலவச பற்பொடி தரும் இக்காலத்தில், கவர்ச்சி, திரை செய்திகள், கிசு கிசுக்கள் இல்லாது இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை போட்டு வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியாவது நேர்மையுடன் நடந்து கொண்டாலே பத்திரிகை உலகம் உருப்பட்டுவிடும்."

முத்து அவர்கள் மேலும் எழுதினார்:
"dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா...
மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.. (emphasize mine)
அதற்கு நான் இட்ட பின்னூட்டம்:
"எவ்வளவு நாளைக்கு? நான் கூறிய மத்ததுகளை மறுபடியும் இங்கே திருப்பிக் கூறுவேன்.
1. நெருக்கடி நிலை வந்தப் போது (சமீபத்தில் 1975-ல்) அவர் தைரியமாக கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசியது. மற்ற பத்திரிகையாளர்கள் மாநில திமுக அரசுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்தப்போது மத்திய அரசை விமசரிக்க உரிமை இல்லாத நிலையில் மாநில அரசையும் விமசரிக்க மாட்டேன் என்று கூறியது.
2. கருணாநிதியின் அரசை சமீபத்தில் 1976-ல் கலைத்தப் போது தைரியமாக அவர் வீட்டுக்குச் சென்று தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்த ஆண்மையானச் செயல். வேறு எந்தப் பத்திரிகைக்காரரும் அக்காலத்தில் அதை செய்யத் துணியவில்லை. திமுகவினர் பலரே கருணாநிதியை தவிர்த்தனர். அந்த ஆண்மையைப் பற்றிக் கேட்டேன். அதுவும் நீங்கள் பதில் கூறவேண்டிய மற்றதுதான்.
3. மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போது துக்ளக் மட்டுமே தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இதுவும் நீங்கள் பதில் கூற வேண்டிய "மத்ததைச்" சேர்ந்ததுதான். இதற்கும் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
4. கேள்வி கேட்கவே பணம் வாங்கும் எம்.பி.க்களுக்கிடையில் தனக்களிக்கப்பாட்ட நிதியை இவர் நல்லக் காரியங்களுக்கு செலவழித்து பைசா விடாமல் கணக்கு காட்டுவது. எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.
5. சமீபத்தில் 1975 என்று நான் எழுதும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும், எல்லாவற்றையும் நானே அக்காலக் கட்டத்திலேயே நேரில் படித்து அறிந்தவன் என்று.
6. என்னமோ பார்ப்பனர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு என்று கூறுகிறீர்களே. வரும் பொங்கலன்று சென்னையில் இருந்தால் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வாருங்கள், வந்து பாருங்கள். ஒவ்வொரு அரசியல் வியாதியும் லாரி ஏற்பாடு செய்து பிரியாணிப் பொட்டலங்கள் கொடுத்து தங்கள் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் இக்காலத்தில் அது ஒன்றும் இல்லாமலேயே அவர் கூட்டத்துக்குத் திரளும் ஆட்களைப் பாருங்கள். அதில் எல்லா ஜாதியினரும், மதத்தவரும் இருப்பதைப் பார்க்கலாம். அது வரைக்கும் நான் போட்ட இப்பதிவையும் பார்க்கவும். பார்த்துவிட்டு அதையும் அந்த மத்ததில் சேர்த்து பதில் கூறவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"
இதில் என்ன கேலியோ தெரியவில்லை. தான் சேர்ந்த கட்சியானாலும் அவர் கிண்டல் செய்யாமல் விடுவதில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. ஆனால் தன் கட்சித் தலைவரோ, அவர் மகனோ விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒப்புக்கு கூறிக் கொண்டே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் சப்பைகட்டும் கொ.ப.செ.க்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

சோ தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வதையும் சிலர் விமரிசனம் செய்தனர். நான் கேட்கிறேன் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய முடியும் என்று?

மொத்தமாகக் கூறுகிறேன், அவர் பத்திரிகையை நாகரிகமான முறையில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் செய்கிறார் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?

அதுதானே முக்கியம். மற்றப்படி அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவுப்படித்தான் நடக்கும்."

முத்து அவர்கள் மேலும் எழுதியது:
"சோ வோட பிளஸ்ஸை பற்றி எழுதறததுக்கு நான் எதற்கு தனிப்பதிவு போடறேன்?. நான் சொன்னது அவரோட மைனஸ்.....

பிளஸ்ஸை பத்தி எனக்கு தெரியாது ..நான் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில தங்கமா இருந்து சமுதாயத்துக்கு நச்சு கலந்தா என்ன பண்ணறது?....

கொலைகாரன் கூட பக்திமான் வேடத்தில் ஏன் சாமியார் வேடத்தில் கூட வரும் காலம் இது.... நேர்மையில்லாத புத்திசாலித்தனம் ஆட்சி செய்யும் நேரம் இது......"
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால் நான் கொடுத்த சோ அவர்கள் பற்றிய ப்ளஸ் பாயிண்டுகளைப் பற்றி அவருக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாது என்பதுதான். அது தேவையும் இல்லை என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார். சந்தடி சாக்கில் சோ அவர்களை கொலைகாரன் ரேஞ்சுக்கு வேறு உயர்த்தியாகி விட்டது. ஒரு சீனியர் வக்கீல் தன் ஜூனியருக்கு கூறிய அட்வைஸ் ஞாபகத்துக்கு வருகிறது. "While arguing before the judge and when your point is weak, thump the table and shout like hell."

கார்த்திக் அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு மீண்டும் வருவோம்
அப்பதிவில் நான் மேலும் எழுதினேன்.
"சோவை எதிர்த்து பேசியவர்கள் பலர் தாங்கள் முதலில் சோ ஆதரவாளராக இருந்து பிறகு எதிர்ப்பாளராக ஆனவர்கள் எனக் கூறிக்கொண்டனர். அதை சுயபுத்தி வளர்ந்ததற்கு உதாரணமாகக் கூறினர். இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து ஒருவர், என் நெருங்கிய உறவினர், அதே மாதிரி ஏன் ஆனார் என்பதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் இங்கு கூறுவேன்.

அவர் துக்ளக்குக்கு ஒரு கடிதம் எழுதினார். போர்னோக்ராபி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் அவர் நிலை எடுத்திருந்தார். பேசாமல் தன் நிலையைக் கூறிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யாது தன் தாத்தா கூறியதாக இவ்வாறு எழுதினார். “போர்னொக்ராஃபி என்றெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள், அது பாட்டுக்கு அது மற்றப்படி நாட்டின் productivity-யைப் பார்க்கலாமே, அமெரிக்காவில் எல்லாம் அப்படித்தான் செய்கிறார்கள், என்று என் தாத்தா கூறுவார்” என்று எழுதப் போக சோ அவரைக் கிழித்துவிட்டார். இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபர் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னமேயே அவரது அன்னை வழி மற்றும் தந்தை வழித் தாத்தாக்கள் இருவருமே இறந்து விட்டனர். சோ எழுதுகையில் அவ்வாறு ஒரு தாத்தா இருந்ததையே சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டார். இதைப் பற்றி சோ அவர்கள் துக்ளக்கில் எழுதும்போது so and so ஊரிலிருந்து so and so இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று ஆரம்பித்து அவர் எழுதியதைக் கிழித்தார். கடைசியில் "இது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது தாத்தாவின் கருத்தா என்பது யோசிக்கத் தகுந்தது" என்று வேறு எழுதி விட்டார். இதைப் படித்த உடனேயே என் உறவினருக்கு எஸ்.டி.டி. கால் போட்டு இது அவர்தானா என்று கேட்க அவர் ஆமாம் என்றார். அதற்குப் பிறகு சோ மேல் மிகக் கோபம் கொண்டார், அவரை இன்றளவும் எதிர்த்து வருகிறார். இங்கும் பலருக்கு இம்மாதிரி காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது."

சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன் இருப்பினும் எனக்கு இது சம்பந்தமாக பல தொலைபேசிகள் வந்து விட்ட நிலையில் இதை மேலோட்டமாகக் கூறிவிடுகிறேன். நான் மேலே குறிப்பிட்ட முத்து அவர்களின் பதிவின் இறுதியில் அவர் இப்பதிவை லிங்காகக் கொடுத்துள்ளார். அது முக்கால்வாசி என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் பதிவு, என் ஜாதியை மட்டமான ஜாதி என்று வேறு கூறுகிறது. அதை எழுதியவர் தரம் பற்றி தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றி இங்கு பேச்சில்லை. அதை தன் பதிவில் லிங்காக வைத்திருக்கும் முத்து அவர்கள் மேல்தான் எனக்கு வருத்தம். வெறுமனே ஒப்புக்கு "என்ன ராசா இப்படி எழுதிவிட்டீர்களே" என்று செல்லமாக திட்டிவிட்டு இணைப்பை தன் பதிவில் வைத்திருக்கும் இவரது பதிவுகளுக்கு வந்து இனி நான் பின்னூட்டம் இடுவதாக இல்லை. ஆகவே அவரது பதிவுகளில் என் பெயரில் போலி டோண்டு என்ற இழி பிறவி வழக்கம் போலப் பின்னூட்டம் இட்டால் அது நான் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். தேவையானால் மீண்டும் வருவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

60 comments:

Muthu said...

அன்புள்ள டோண்டு ராகவன்,

உங்களுக்கும் திரு.மூர்த்தி அவர்களுக்கும் பிரச்சனை என்பதெல்லாம் எனக்கு முதலிலேயே தெரியாது. இப்போது அதே மூர்த்தி சொல்லித்தான் இந்த பதிவை பார்த்தேன்.

நான் எதுவும் லிங்க் கொடுக்கவில்லை. பிளாக்கரில் நமது பதிவுக்கு எங்கிருந்தாவது லிங்க கொடுக்கப்பட்டிருந்தால் அது நமது பதிவிலும் தெரியும் என்று நினைக்கிறேன்.
இதை செக் செய்யவும்.

மற்றபடி நீங்கள் வருத்தப்பட்டால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.

dondu(#11168674346665545885) said...

விளக்கத்திற்கு நன்றி முத்து அவர்களே. நான்தான் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டேன் போலிருக்கிறது. என்னை மன்னிக்கவும். அந்த பாராவில் கூறியதை வாபஸ் பெறுகிறேன்.

இந்த நிலையில் உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதிலிருந்து நான் எனக்கு விதித்துக் கொண்டத் தடையையும் நீக்கி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சதீஷ் அவர்களே. எழுத்தே என் வேலை என்று ஆகிவிட்டப் பிறகு எழுத அஞ்ச முடியாது அல்லவா.

உங்கள் மாற்றுக் கருத்துக்களை தாராளமாகக் கூறுங்கள். முடிந்த அளவு கருத்த் பரிமாற்றம் நடப்பதும் நல்லதுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில்

"இது நாள் வரை அரசியலும் அரசியல் சார்ந்த இடத்திலுமே குப்பைக் கொட்டிக்கொண்டிருந்த துக்ளக், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலையும் கலை சார்ந்த இடத்தில் கொட்டியிருக்கிறது"

என்று உங்கள் பல்லாண்டு துக்ளக் வாசிப்பில் கண்டுதெளிந்ததை நீங்களே உளமாற கூறி, அந்த இதழிலும் வெளியிடச்செய்துள்ளீர்கள்.

ஆனால், இப்போது தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டுவிட்டீர்களா அல்லது சும்மா... இங்கே ஆதரவு அறிக்கை பதிவு செய்கின்றீர்களா!?

dondu(#11168674346665545885) said...

""இது நாள் வரை அரசியலும் அரசியல் சார்ந்த இடத்திலுமே குப்பைக் கொட்டிக்கொண்டிருந்த துக்ளக், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலையும் கலை சார்ந்த இடத்தில் கொட்டியிருக்கிறது""

அன்பு அவர்களே,
சரியாகப் படியுங்கள். அவ்வாறு கூறியது நான் அல்ல. அருண் அவர்கள்.

அவர் எழுதியது கூட தனக்குப் பிடித்த பத்திரிகையிடம் எடுத்துக் கொண்ட உரிமை என்றுதான் எனக்குப் படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

வணக்கம் சார் வெள்ள நிவாரண வேலையினால் இணையதலத்தில் சரியாக நுலைய முடியவில்லை என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை சரி முழுமையாக பொருமையாக படித்துவிட்டு வருகிறேன்

dondu(#11168674346665545885) said...

நன்றி என்னார் அவர்களே,
பொறுமையாகப் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் மூர்த்தி அவர்களே. கேட்கிறேன்
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கேட்பதற்கு உருக்கமாக இருக்கிறது, ஆனால் எழுதியது உண்மையான மூர்த்தி அல்ல. உண்மையான மூர்த்தியின் ப்ளாக்கர் எண் 12113419. இங்கு எலிக்குட்டியை வைத்துப் பார்த்ததில் தெரியும் எண் 16240340.

ஆக there is no change in the situation.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

SnackDragon said...

அன்புள்ள டோண்டு அய்யா,
ஆமாம் உங்கள் தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
உங்கள் அறிவுக்கு முன் நான் வெறும் தூசி. உங்களிடம் வாக்குவாதம் செய்ய எனக்கு தைர்யம் இல்லை. உங்கள் சமூகப்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

மேலே உள்ளப் பின்னூட்டம் உண்மையான கார்த்திக் அவர்கள் இட்டதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SnackDragon said...

மேலே என் ப்யரில் உள்ள பின்னூட்டம் நான் எழுதியதுதான்.
சந்தேகத்தின் பேரில் பலனை அளித்ததற்கு மிக்க நன்றி.
மனதில் தோன்றியதை (இந்த பதிவை வாசித்த சமயத்தில்)தான் எழுதினேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி கார்த்திக் அவர்களே. நான் இப்பதிவில் சுட்டியிட்ட உங்கள் பதிவு ப்ளாக்ஸ்பாட்டில் வரவில்லை. ஆனால் உங்கள் பின்னூட்டத்தின் சுட்டி ப்ளாக்ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றது. ஆகவே அது உங்களுடையதாக இருக்க முடியாது என நினைத்தேன். அதுவும் போலி மூர்த்தியின் பின்னூட்டத்திற்கு பிறகு எதையும் ஃபேஸ் வேல்யூவில் எடுக்க முடியவில்லை. உங்கள் பெயரை யாரோ தவறாகப் பிரயோகம் செய்கிறார்கள் என நினைத்து விட்டேன். நீங்கள் மறுபடியும் அழுத்திக் கூறியவுடன் ராஜாஜி அவர்களைப் பற்றி நான் எழுதிய பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்தில் சோதித்ததில் இங்கு இப்பதிவில் பின்னூட்டம் இட்டது நீங்கள்தான் எனத் தெரியவந்தது.

மீண்டும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SnackDragon said...

//"அதைத்தான் செய்து பாருங்களேன். அதில் பெரும்பான்மையான கேஸ்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. அடித்தக் கமிஷன்களும் கூடவே வரும். சோ அவர்கள் ஏதாவது கமிஷன் அடித்தார் என்று உங்களால் நாக்கின் மேல் பல் போட்டுப் பேச முடியுமா?" //
அன்புள்ள டோண்டு அய்யா,
இங்கே நீங்கள் ஏன் "எல்லா கேஸ்களில் சம்பந்தபட்ட" என்று எழுதவில்லை என்று கொஞ்சம் விளக்கமுடியுமா?
நன்றி

dondu(#11168674346665545885) said...

கண்டிப்பாக விளக்குவேன் கார்த்திக் அவர்களே. சற்று நீண்ட விளக்கம் தர வேண்டியிருக்கும் இதற்கு.

நான் சோ அபிமானி என்பதற்காக மற்ற எல்லோரையும் மட்டம் தட்ட முடியுமா? சோ அவர்கள் போன்று, திரு. நல்லக்கண்ணு போன்று ஒரு எம்.பி. யும் இந்த விஷயத்தில் இருக்க மாட்டார் என்று நான் எப்படிக் கூற முடியும்? கண்டிப்பாக சிலர் அந்த லிஸ்டில் வரக்கூடும். முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எம்.பி. சிலர் அதில் இருப்பார்கள். ஆர்.எஸ்.எஸை சேர்ந்த சிலரும் அதில் இருப்பார்கள்.

நான் புகுமுக வகுப்பில் படித்த தர்க்க சாஸ்திரத்தில் படித்ததில் கற்றுக் கொண்ட முக்கிய விஷயங்களில் ஒன்றுதான் logical forms எனப்படும் வாக்கியங்கள். இதற்குப் பின் விளக்கங்கள் ஆங்கிலத்தில்.

There are 4 logical forms, namely Universal Affirmative, Universal Negative, Particular Affirmative and Particular Negative.

Examples:
1. All men are intelligent (U.A.)
2. No men are intelligent (U.N.)
3. Some men are intelligent (P.A.)
4. Some men are not intelligent (P.N.)
Even when I say that most M.P.'s are dishonest, it can be reduced only to the logical form of Some M.P.'s are dishonest. Here I have no business saying that all the other M.P.'s are dishonest. My training in logic will not allow me to speak that way.

மன்னிக்கவும் எதிர் பார்த்ததற்கு மேலேயே பின்னூட்டம் சற்று நீண்டு விட்டது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனால் தர்க்க சாஸ்திரம் பற்றி எழுதுவதற்கு தேவையான விஷயங்கள் ஒரு தனிப் பதிவு போடும் அளவுக்கு மனதில் உருவாகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தி பதிவாக்குவேன். அதற்கான தூண்டுதலைத் தந்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன் .

dondu(#11168674346665545885) said...

முதலில் மூர்த்தியின் பேரில் இரண்டு பின்னூட்டங்கள் வந்தன.

1. "முத்து எந்த நேரத்தில் சோ பதிவு எழுதினாரோ தெரியவில்லை! அவரைப் பிடித்துக் கொண்டு தர்ம அடிபோட முயற்சிகள் செய்கின்றன இந்த பார்ப்பன வெறிய கும்பல். விரைவில் கட்டம் கட்டப்படலாம் என எச்சரிக்கை செய்தேன் முத்துவை. அவர் கேட்கவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்!

//முத்து எந்த நேரத்தில் சோ பதிவு எழுதினாரோ தெரியவில்லை! அவரைப் பிடித்துக் கொண்டு தர்ம அடிபோட முயற்சிகள் செய்கின்றன இந்த பார்ப்பன வெறிய கும்பல். விரைவில் கட்டம் கட்டப்படலாம் என எச்சரிக்கை செய்தேன் முத்துவை. அவர் கேட்கவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்!//"

2. "நான் எனது ஜாதியைப் பற்றி எனது பதிவில் எங்காவது சொல்லியிருக்கேனா?" என்று ஒரு கேள்வியை எனது முந்தைய பதிவில் எழுப்பியிருந்தேன். "அட.மொச புடிக்கிற ___ மூஞ்சியப் பாத்தா தெரியாதா"ன்னு சொல்லி எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கு. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மொச புடிக்கும் ____-ஐ கேவலப்படுத்திய அந்த மின்ஞசல் அனுப்பிய நபருக்கு விரைவிலேயே நான் குத்த துடிக்குது மனசு அப்படீன்னு ஒரு பதிவு போடப்போறேன். "உனக்கெல்லாம் எங்கேடா மனசு இருக்கு?"ன்னு கேக்குற அண்ணா, சுவாமியே சரணம் அய்யப்பா."

மேலே காணப்படும் இரு பின்னூட்டங்களையும் அழித்தேன், காரணம் கூறத் தேவையிருக்காது என்பது எல்லா வலைப்பூவினருக்கும் தெரியும். அவற்றை நான் அழித்திருந்தாலும் அவை என் ஜி மெயில் ஆர்கைவ்ஸில் அப்படியே இருக்கும்.

அவற்றை அழித்த உடன் மூர்த்தியின் பெயரில் இன்னொஎரு பின்னூட்டம் இவ்வாறு வந்தது.

3. "ஏன் டோண்டு சார் என்னுடைய பின்னூட்டங்களை நீக்குகிறீர்கள்? மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறேன். செவி சாய்ப்பீர்களா?"

அதற்கு நான் அளித்த பதில்.
சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் மூர்த்தி அவர்களே. கேட்கிறேன்
அன்புடன்,
டோண்டு ராகவன்

மூர்த்தி இப்போது கூறியது:
"நீங்கள் மன்னிக்கும் அளவிற்க்கு எனக்கு தகுதி கிடையாது. நான் ஒரு பாவி. இந்த மூர்த்தி ஒரு பாவி. என்னுடைய பின்னூட்டங்களை படித்த எனது மனைவி என்னைக் காறித் துப்பி விட்டாள். அதனால் நான் கடும் மன உலைச்சலில் இருக்கிறேன். கொஞ்ச நாள் நான் பிதற்றுவதை நீங்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மன்னிக்க முடியாத பெரும்பாவி மூர்த்தி"

இது கொஞ்சம் ஓவராகப் பட்டதால் சுதாரித்து எலிக்குட்டியை வைத்துப் பரிசோதித்ததில் அது போலி மூர்த்தி என்று தெரிந்தது. ஆகவே இவ்வாறு எழுதினேன்:
"கேட்பதற்கு உருக்கமாக இருக்கிறது, ஆனால் எழுதியது உண்மையான மூர்த்தி அல்ல. உண்மையான மூர்த்தியின் ப்ளாக்கர் எண் 12113419. இங்கு எலிக்குட்டியை வைத்துப் பார்த்ததில் தெரியும் எண் 16240340.
ஆக there is no change in the situation."

நேற்று இரவு சம்பந்தப்பட்ட ப்ரொஃபைலில் மூர்த்தியின் வலைப்பூவில் வரும் வழமையான சிவ பெருமான் படம் வந்தது. காசி அவர்கள் கூட பார்த்து ஆச்சரியப்பட்டார். இன்று காலை பார்த்தால் அதில் முகமூடியின் படம் வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்னால் என் (டோண்டுவின்) படம் வந்தது என்று என் இனிய நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆக இந்தப் போலியும் நமக்கெல்லாம் தெரிந்த போலி டோண்டுதன் என்பது வெள்ளிடைமலை.

அவர் மென்பொருள் வித்தகர் அல்லவா, அடையாளம் இல்லாமல் தன் பின்னூட்டங்களை வேறு பதிவிலும் அழிக்கக் கூடியவர். ஆகவே இங்கு முழு விஷயமும் நகலிடப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

I strongly condemn somebody misusing Moorthi Id; . whoever does this is as bad as poli dondu.

dondu(#11168674346665545885) said...

"Whoever does this is as bad as poli dondu."
You are very innocent Suresh. I am sure it is Poli Dondu only. No other construct is possible under the circumstances.

By the way, after a long time, I got a mail from Blogger support telling me that I wanted some help to recover the password. I told them in categorical terms that I sent no such request and sent them the copy of all the old correspondences leading to the deletion of one of Pooli Dondu's bogus profiles. That fellow seems to be worse than Voldemort having many lives just for the sake of bothering others. There are bogus profiles for Kasi himself Mukamudi et al.

And for well meaning bloggers advising me to ignore this fellow, so that he will go away, let me say that there is no chance of that happening on that fellow's initiative. His wife is to be pitied.

Regards,
N.Raghavan

கசி said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

"அப்புறம் தமிழ்மணத்தில இதையெல்லாம் உலவவிட்டு வேடிக்கை பாத்து ரசிச்சிட்டிருக்கும் பெருமதிப்புக்குரிய காசி அவர்களை என்ன சொல்வது."

பச்சை விளக்கை அணைச்சாச்சு, அணைச்சாச்சு, அணைச்சாச்சு.... எதிரொலி!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//By the way, after a long time, I got a mail from Blogger support telling me that I wanted some help to recover the password.//

Surprisingly, me too got a similar mail from Blogger Support!!!

dondu(#11168674346665545885) said...

"Surprisingly, me too got a similar mail from Blogger Support!!!"

More the merrier?

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

கார்த்திக் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://karthikraamas.net/pathivu/?p=106

ராஜா அவர்களே,
நீங்கள் என்னுடைய சோ பற்றி நான் எழுதியப் பதிவில் கார்த்திக் அவர்கள் பின்னூட்டம் இட்டதையா குறிப்பிடுகிறீர்கள்? பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

முதலில் நான் கூட யாரோ அவர் பெயரில் போலியாகப் பதிவு இட்டிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். பிறகு அவர் அது தன்னுடையப் பின்னூட்டமே என்று கூறினாலும் அதையும் என் முறையில் சோதித்துத்தான் அவருடையப் பின்னூட்டம் என்று தெளிந்தேன். அந்தப் பின்னூட்டத்தையா எகத்தாளமானப் பின்னூட்டம் என்கிறீர்கள்? என்ன மிஸ்டர் கார்த்திக் அப்படித்தானா?

ஆனால் ஒரு சந்தேகம் அதற்குப் பிறகும் கார்த்திக் இன்னொரு கேள்வி கேட்க அதற்கும் நான் விடையளித்தேனே. அதுவே தர்க்க சாத்திரத்தைப் பற்றிய என்னுடைய தற்போதைய பதிப்புக்கும் அடிகோலியது என்றும் எழுதியிருந்தேனே.

கார்த்திக் அவர்கள் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னுடையப் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் கேட்டு கொள்கிறேன்.

"ரிடையராகி கையில் நேரத்தை வைத்துக்கொண்டு இருப்பவர் அவர்."
உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்தது அவ்வளவுதான். ஒரு நாளைக்கு சராசரியாக பத்து மணிகளுக்கு குறையாத அளவில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. விடுமுறைகள், மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்? மூச். இருப்பினும் இணையத்திலும் வர முடிகிறது என்றால் அது என்னுடைய நேர மேலாண்மை மற்றும் ஆர்வத்தால் வருவது. மேலும் நான் என் வீட்டிலேயே அமர்ந்து வேலை செய்வதால் எந்த மேலதிகாரிக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலை.

நிஜமாகவே சுறுசுறுப்பாக வேலை செய்பவனே பலப் புது விஷயத்துக்கும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளவும். இப்படி நான் தமிழில் தட்டச்சு செய்வதும், அதில் வேகம் அதிகரிப்பதும் என்னுடைய மொழி பெயர்ப்பு வேலைகளில் நான் அடையும் முன்னேற்றத்திற்கு ஏதுவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ளவும். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,

உங்க சோ பதிவையும் அதுல இது வரைக்கும் வந்த பின்னூட்டங்களையும் படிச்சேன். முழுசும் படிச்சி முடிக்க பத்து நிமிஷம் ஆச்சி.

படிச்சி முடிச்சதுக்கப்புறம் என்ன சொல்றதுன்னு தெரியலை.

சோவைப் பற்றிய உங்களுடைய கருத்து மிகச் சரி. அவர் திமுக மூப்பனார் இணைப்பிற்குப் பிறகு ஜெ வையும் பிஜேபியையும் இணைத்து வைத்து சந்தோஷப்பட்டபோது அவரைப் பற்றி நான் வைத்திருந்த மதிப்பு சற்றே குறைந்தது உண்மைதான்.

ஆனாலும் நீங்கள் கூறியதுபோலவே அவருடைய எழுத்தில் கண்ணியம் இருந்ததை ஒரு நாளும் மறுக்க முடியாது. தனக்கு சரியென்று பட்டதை எந்த சூழ்நிலையிலும் நெஞ்சுறுதியுடன் பேசுவதிலும் எழுதுவதிலும் தயங்காதவர். அவரை ஜாதி அடிப்படையில் பார்த்து எதிர்ப்பது ஒரு சிறுபிள்ளைத்தனம் என்றுதான் தோன்றுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவாழ்வில் ஈடுபடும் எல்லோரையுமே அவர் சார்ந்த ஜாதி அடிப்படையில் பார்க்காத மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். முக்கியமாக இக்கால இளைஞர்களுக்கு. அப்போதுதான் ஜனநாயகம் உறுதிப்பட்டு நிற்கும்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஜோசஃப் அவர்களே. நல்ல மெச்சூரான பின்னூட்டம். சோ அவர்கள் கண்ணியமாக எழுதுவதையே பலர் கணக்கில் எடுத்து கொள்ள மறுப்பதுதான் விந்தையாக உள்ளது.

சோவைப் பற்றி என்னுடைய பழைய பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரதீப் said...

டோண்டு அவர்களே,
சோ கண்ணியமாக எழுதுவது எல்லாம் உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் இப்போது கூட ஒரு திமுக எதிர்ப்பும் அதிமுக ஆதரவு நிலையும் அவர் கேள்வி பதில் உட்பட எங்குமே தெரியவில்லை என்கிறீர்களா?

அவர் முக்கியமாக ஜெ.யின் ஆட்சியில் பாராட்டுவது எல்லாம் தீவிரவாத எதிர்ப்புதான். மற்றபடி மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏன் பாராட்டுவதில்லை. முதல் முறையாக மத்திய அமைச்சராகி இருக்கும் தயாநிதி (ஐடி என்பதால் கொஞ்சம் எனக்கும் என்ன செய்கிறார் என்று தெரியும்), அன்புமணி போன்றவர்களுக்கு இவர் பாராட்டு தெரிவித்திருக்கிறாரா? அல்லது பல தரப்புகளில் இருந்தும் அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லாம் உள்நோக்கத்தோடுதான் பாராட்டுகிறார்களா? அப்ப நடுநிலைமைங்கறதுக்கு அர்த்தம் என்னங்க?
(உடனே திமுக அனுதாபி, அதிமுக எதிர்ப்பாளன் என்றெல்லாம் முத்திரை குத்தி விடாதீர்கள்)

நான் பிராமணீயத்தை எல்லாம் விட்டு விடுகிறேன். அவரது எங்கே பிராமணன்? கதையை நானும் படித்திருக்கிறேன். இதிலும் இன்னொரு கதையில் (கூவம் நதிக்கரையிலே...???) வரும் கதாபாத்திரங்கள் அனேகமாக திமுக அமைச்சர்களையும் மத்தியில் காங்கிரஸையும் மட்டுமே குறிவைத்திருந்தது. அங்கங்கு எம்ஜியாரையும் தாக்கினார். ரசித்தேன். அதே போல் இன்னொரு தொடர், எனக்கு பெயர் நினைவில்லை, தேர்தல் சமயத்தில் திமுக தலைவரின் வீட்டில் நடக்கும் கூத்துக்களை வரிசைக் கிரமமாகக் கற்பனையில் பதித்திருந்தார். அது போல் ஒரு தொடர் அதிமுக (குறிப்பாக ஜெ) பற்றி அவர் எழுதியதாக நினைவில்லை. அப்ப அதிமுகவில் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லைங்கறாரா?

நடுவில துக்ளக்கைப் படிக்கிறதை விட்டுட்டதால எனக்கு அந்த சமயத்தில எழுதியிருந்தா நிஜமாகவே தெரியாது. மன்னிச்சிருங்க.

dondu(#11168674346665545885) said...

நன்றி பிரதீப் அவர்களே. சோ கூறுவதை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் விருப்பம். ஆனால் அவர் கண்ணியமான முறையில் தன் கருத்துக்களை முன் வைத்து, தரமான பத்திரிகையை நடத்துவதை யாராலும் மறுக்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் தீவிரவாதிகள் சம்பந்தமாக எடுத்த நிலைப்பாட்டை அவர் ஆதரிக்கிறார். அதே தீவிரவாதிகள் விஷயத்தில் கருணாநிதி அவர்கள் செய்த சொதப்பல்களால் அவரை சோ எதிர்க்கிறார். இது மேக்ரோ அளவில் பார்க்க வேண்டிய விஷயம். மற்றப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் எது அவருக்கு சரி என்று படுகிறதோ அதை அவர் ஆதரிக்கிறார். உதாரணம் 1975-76-ல் கருணாநிதிக்கு ஆதரவாக அவர் எடுத்த நிலை. நெருக்கடி நிலையை நேரடியாக அனுபவித்தவர்களுக்குத்தான் நிலைமையின் தீவிரம் புரியும், அப்போது சோ அவர்கள் எவ்வளவு ஆண்மையுடன் தன் உயிரைப் பயணம் வைத்து செயல்பட்டார் என்பது புரியும். சமீபத்தில் 1952-ல் என்ற ரேஞ்சுக்கு எழுதும் எனக்கு இவை எல்லாம் இன்னும் அதிக சமீபத்திலேயே உள்ளன.

(உடனே திமுக அனுதாபி, அதிமுக எதிர்ப்பாளன் என்றெல்லாம் முத்திரை குத்தி விடாதீர்கள்)
கண்டிப்பாக அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் பிரதீப் அவர்களே. பின்னூட்டத்திற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sudhakar Kasturi said...

அன்பின் டோ ண்டு அவர்களே,
இந்த போலிப்பின்னூடங்களின் பின்னணி முதலில் எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது இப்போது. ஒருவர் தனதுகருத்துகளைச் சொல்வதை மதிக்கும் ஜனநாயகம் காயப்படுத்தப்படுகிறது- அக்கருத்துகளுக்கு உடன்பாடு இல்லையெனினும். இது வருந்துதற்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குமுரியது. கண்ணியம், எல்லை, ஒழுங்கு என்பது எழுதுவதில் கடைப்பிடிக்கப்படவேண்டியது அவசியம் என்பதை உணரும்வரை, தணிக்கைகளும், மட்டுறுத்துப்பணிகளும் பின்னூட்டங்களில் வேண்டியிருக்குமென இப்போது புரிகிறது.

உங்கள் கருத்துகளை தைரியமாக எழுதியும், போலிப்பின்னூட்டங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்தும் வருவதை இப்போதுதான் அறிகிறேன். இதற்கான எனது பாராட்டுதல்கள்.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் சுதாகர் அவர்களே. நன்றி. உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் எதிர் கொள்ளும் பிரச்சினையை பற்றி அறிய என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் - 2 ஐ பார்க்கவும். அதன் உரல்:
http://dondu.blogspot.com/2005/12/2.html#comments
அத்துடன் அதன் முந்தைய பகுதியையும் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

உங்களுக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி அமைதி விரும்பி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/02/20-feb-06.html
"இதற்கு ஒரு சரியான உதாரணம் "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-))"
அப்படியா? வேறு எந்த பத்திரிகையாளர் நடுநிலைமையுடன் இருக்கிறார் என்று கூறுவதாக உத்தேசம்? உங்கள் வார்த்தைகளின்படி ஒருவருமே நடுநிலைமை வகிப்பவர் என்று கூறமுடியாது என்றுதானே ஆகிறது? இதில் சோவை மட்டும் ஏன் இழுக்கிறீர்கள்?

நான் கூறுவேன் அவர் அளவுக்கு நியாயமாக எழுதினாலே பத்திரிகைத் துறை உருப்பட்டுவிடும் என்று. அவர் பா.ஜ.க. அனுதாபிதான், இருப்பினும் அக்கட்சியை விமசரிக்க நேரும்போது அவர் சப்பைக்கட்டு கட்டியதே இல்லை. அவரை விடக் கடுமையாக தான் ஆதரிக்கும் கட்சியை பற்றி மற்றப் பத்திரிகையாளர்கள் எழுதுவதில்லை என்பதே உண்மை.

பிரச்சினை என்னவென்றால் அவரைப் பற்றி எழுதும்போதுமட்டும் சோதனைகளைக் கடுமையாக்கி லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள். மற்ற பத்திரிகையாளர்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை.

இப்பின்னூட்டத்தை உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவில் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாணக்கியன் said...

டோண்டு ராகவன், மிக அருமையான பதிவு. பழுத்த பழம்தான் கல்லடிபடும் என்பது கூற்று. இது சோவுக்கும் உங்களுக்கும் பொருந்தும்.. தளராமல் எழுதுங்கள்!!

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி சாணக்கியன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/02/20-feb-06.html

"அப்போது இலுப்பைப்பூவை சர்க்கரை எனச் சொல்லச் சொல்கிறீர்களா?"
ஏன் உண்மையான சர்க்கரை யாரையாவது கண்டுபிடிப்பதுதானே?

"அப்போது அது முழு அளவு அல்ல என்பதை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?"
முதலில் அந்த அளவுக்காவது யாரையாவது கண்டுபிடியுங்கள். பிறகு முழு அளவு ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் சோ அவர்கள்தான் முழு அளவு.

"அவரைச்சுற்றி உள்ள நடுநிலை ஒளிவட்டம்.. வேறு யாரும் அதை இவ்வளவு கஷ்டப்பட்டு சுமப்பதில்லை. தம் சார்புகளை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைப்பதும் இல்லை."
அப்படியா, அவர் சார்புநிலை என்ன என்பதை எப்போதுமே மறைத்ததில்லையே. நாட்டுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து அவர் எழுதி வருகிறார். முதலில் பழைய காங்கிரஸை ஆதரித்தார், அது மறைந்த பிறகு ஜனதா, அதுவும் மறைந்த பிறகு பா.ஜ.க. இதில் அவர் தெளிவாகத்தானே இருக்கிறார்? அதே நேரத்தில் காங்கிரசும் அழிந்துவிடக்கூடாது என்றும் கூறுவதற்கு காரணம் ஜனநாயகத்துக்கு இரு சம பலம் வாய்ந்த கட்சிகள் தேவை என்பதால்தான்.

"சோ சம்மந்தப்பட்ட விவாதமாக திசை மாறுகிறதோ என்று தோன்றுகிறது. என் உத்தேசம் அது இல்லை."
என் உத்தேசமும் அதுவல்ல. தேவையில்லாமல் அவர் பெயரை இழுத்ததால்தான் வந்தான் இந்த டோண்டு ராகவன்.

இப்பின்னூட்டத்தையும் உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு அவர்களே,
இங்கு நான் சொல்ல் விரும்புவது கொஞ்சம் அதிகமாகவே உண்டு. நிச்சயமாய் அது சோ அவர்கள் பற்றியதல்ல. அவற்றை முடிந்தால் உங்களுக்கு தனிஅஞ்சலாகவாவது விரைவில் அனுப்புகிறேன்.

dondu(#11168674346665545885) said...

காத்திருக்கிறேன் முத்து அவர்களே. என் மின்னஞ்சல் raghtransint at gmail dot com.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/02/20-feb-06.html

நீங்கள் முதலில் எடுத்தது இந்த நிலை: "சோ"வின் நடுநிலைமை". (இது ஹிட்லரின் ஜீவகாருண்யம் போல Mutually Exclusive-ஆன பதம் என்பது என் கருத்து:-))

இப்போது எடுப்பது இந்த நிலை:
"இருப்பவர்களில் நடுநிலை என்பதால் சோவை ஆதரிக்கிறேன் என்கிறீர்கள் - அதை நான் மறுக்கவில்லை."

இந்த முன்னேற்றம் போதும் எனக்கு.

இப்பின்னூட்டத்தையும் உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய சோ அவர்கள் பற்றியப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_21.html
"இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என்ற இவர் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?"
"ஆனால் கலைஞர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து என்று அளக்க ஆரம்பிக்கும்போது மக்கள் டென்சன் ஆகின்றனர்."

அதாவது, சமீபத்தில் 1975-ல் சோ நெருக்கடி நிலை காலத்தில் என்ன செய்தார் என்று ஒரு பெருசு கூற ஆரம்பிக்க நீங்கள் டென்ஷன் ஆனதுபோல என்று வைத்து கொள்ளலாம் அல்லவா. அந்த பெருசு இதைப் பார்த்தாவது புரிந்து கொள்வார் என்று நம்பிக்கை உண்டா? எதற்கும் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்ளவும்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விடுகிறேனே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_23.html
"சோ: நான்தான் சொன்னேன்.காளிகாம்பாள் படத்துல கோவில் உண்டியல்ல விழுந்த ராம்கி திவ்யா உண்ணி குழந்தை எப்படி கடவுளுக்கு சொந்தமோ, எப்படி உண்டியல்ல விழுந்த விவேக் கடவுளின் குழந்தை ஆனாரோ அது மாதிரி வைகோவுக்கு விரிச்ச வலையில் இவர் விழுந்துட்டாரு..இவரை உங்கள் கூட்டணியில் சேர்க்க நான் தான் இவரை இந்த மூட்டைல விழ ஐடியா கொடுத்தேன்..இவரை நீங்க சேர்த்துட்டுத்தான் ஆகணும்..."

நல்ல காமெடி. ஜெயின் டென்ஷனை இமேஜின் செய்ய முடிகிறது. இப்படித்தான் 1977-ல் பிப்ரவரியில் சோ என்ன சொன்னார் என்றால் ....
அடேடே நீங்க டென்ஷன் ஆயிடாதீங்க சார் நான் மேலே சொல்லலை.

இப்பின்னூட்டதின் நகலை என்னுடைய சோ பற்றிய பதிவிலேயே பின்னூட்டமாக நகலிட்டு வைக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2006/02/blog-post_114095519426209082.html

சோ அவர்கள் சொன்னது:
"இதுபெரியார் சுயமரியாதை அல்ல, நிஜமான சுய மரியாதை. பெரியார் சுயமரியாதை இருப்பவர்கள் லஞ்சம் மூலம் சம்பாதித்ததை விட, வேறு யாரும் சம்பாதித்து விட முடியாது."

நீங்கள் இப்பதிவில் சொன்னது:
"பெரியாரின் அரசியல் வாரிசுகள் அவரது கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொள்வதாலோ,
அரசியல் லாபம் கருதி செய்யும் இழிவான தந்திரங்களாலோ பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது ஒருபோதும் கேலிக்குரியதாகி விடாது என்பதைக் கூட இந்த 'அரசியல் மேதை'யால் புரிந்து கொள்ள முடியவில்லை."

சோ அவர்கள் ஈ.வே.ரா அவர்களைத் தாக்கியதாகத் தோன்றவில்லை. அவரது வாரிசுகளைத்தான் கூறினார். நீங்களும் அதை ஒத்துக் கொண்டீர்கள். வாரிசுகளின் செயலால் சுயமரியாதைக்கு ஏதேனும் பெருமை மட்டும் வந்துவிட்டதா என்ன?

சரி, நான் இப்போது ஈ.வே.ரா அவர்கள் விஷயத்துக்கே வருகிறேன். பச்சைத் தமிழர் காமராஜ் கட்சி ஆட்சியில் இருந்தவரை அதாவது 1967 வரை காங்கிரஸுக்கே துதிபாடிவந்தார் அவர். அதைச் செய்யும்போது 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஹிந்திக்கு ஆதரவாகவே விடுதலையில் எழுதியும் வந்ததை நானே அக்காலக் கட்டத்தில் படித்து வந்திருக்கிறேன். 1967-ல் தி.மு.க. வெற்றி பெற்றதும் தன் சார்பு நிலையை மாற்றிக் கொண்டவரும் இதே சுயமரியாதைக்காரர்தான். மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்திக் கொள்ள ஆலோசனை கூறிவிட்டு தான் மட்டும் பதிவுத் திருமணம் செய்துகொண்ட சுயமரியாதை சிங்கம் இவர்.

அவர் வாரிசுக்காரர்களும் தங்கள் கல்லூரிகளைக் காத்துக்கொள்ள அம்மா காலில் விழுபவர்கள்தானே. தலைவன் வழித்தானே அவர்களும் சென்றார்கள்?

சோ அவர்கள் கூறியது எந்தவிதத்தில் தவறு?

இப்பின்னூட்டத்தின் நகல் நான் சோ அவர்கள் பற்றி எழுதிய பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2006/02/blog-post_114095519426209082.html

"பச்சைத் தமிழர் காமராஜ் கட்சி ஆட்சியில் இருந்தவரை அதாவது 1967 வரை காங்கிரஸுக்கே துதிபாடிவந்தார் அவர். அதைச் செய்யும்போது 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஹிந்திக்கு ஆதரவாகவே விடுதலையில் எழுதியும் வந்ததை நானே அக்காலக் கட்டத்தில் படித்து வந்திருக்கிறேன். 1967-ல் தி.மு.க. வெற்றி பெற்றதும் தன் சார்பு நிலையை மாற்றிக் கொண்டவரும் இதே சுயமரியாதைக்காரர்தான்."

இதற்கு பதில் கூறுங்கள். மேலும் இவரைப் பற்றி குமுதம் அந்தக் காலத்தில் எழுதியபோது "ஆள்வார்க்கு அடியார்" என்றே குறிப்பிட்டது.

ஈ.வே.ரா. அவர்களுடைய அகராதியில் சுயமரியாதை என்பது அவருக்கு மட்டுமே உரியது. மற்றவர்களை இவர் இன்ஸல்ட் செய்யும்போது பாதிக்கப்பட்டவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டால் அவர் தாங்க மாட்டார். கதிரேசன் என்ற புலவர் அவரிடம் வந்த போது அவருக்கு அருந்த பாலும் கொடுத்து கூடவே தமிழ்ப் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று அவரை இழிவுபடுத்த, மனம் நொந்த அந்த ஏழைப்புலவர் அவர் கொடுத்தப் பாலை வாயில் விரலைவிட்டு வாந்தியெடுத்து "உன்னிடம் போய் வந்து நின்றேனே, எனக்கு இந்த அவமானம் தேவைதான்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றதை பற்றி பெரியார் கூறும்போது கதிரேசன் என்பவர் அவர் வார்த்தையில் "வாயாடிப் புலவர்" ஆனார். இதை எந்தவிதமாக நியாயப்படுத்துவீர்கள்?

இப்பின்னூட்டத்தின் நகல் நான் சோ அவர்கள் பற்றி எழுதிய பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html


அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2006/02/blog-post_114095519426209082.html


நல்லது ஆசிஃப் மீரான் அவர்களே,

ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி நான் போட்ட பதிவுகளை அவற்றுக்கான பின்னூட்டங்களுடன் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். அவற்றுக்கான சுட்டிகள் கீழே தருகிறேன்:

1. http://dondu.blogspot.com/2005/03/1949.html

2. http://dondu.blogspot.com/2005/03/blog-post_24.html

3. http://dondu.blogspot.com/2005/03/blog-post_30.html

4. http://dondu.blogspot.com/2005/07/100.html

ஈ.வே.ரா. அவர்கள் பற்றி நீங்கள் எழுதப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மலர் மன்னன் அவர்களும் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் பார்க்கவும். அதன் சுட்டி இதோ:
http://malarmannan.blogspot.com/2006/02/blog-post_26.html

All the best.

இப்பின்னூட்டத்தின் நகல் நான் சோ அவர்கள் பற்றி எழுதிய பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/03/20-mar-06.html
"நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்."
அவற்றையெல்லாம் தைரியமாக மறுபடி வெளியிட்டு தன் நிலையிலும் உறுதியாக நிற்பார். பழைய நிலையிலும் புது நிலையிலும் மாறுதல்கள் இருந்தால் அவற்றையும் தைரியமாகக் குறிப்பிடுவார் சோ அவர்கள்.

அவரைப் போன்றவர்களை வைத்துத்தான் ஐயன் வள்ளுவர் கூறுகிறார்:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

அவரைப் போல மற்ற பத்திரிகையாளர்கள் இருந்தாலே நாடு உருப்பட்டுவிடும்.

இப்பின்னூட்டத்தை உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதன் நகலை சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். என்னுடைய பரம ரசிகரிடமிருந்து செந்தமிழில் மெயில் வேண்டுபவர் நான் குறிப்பிட்ட என்னுடைய சோ பற்றிய அப்பதிவில் இப்பின்னூட்டத்துக்கு எதிர்வினை தருக, தருக என வரவேற்று, முப்பத்தைந்தாம் வட்டச் செயலாளர் என்னிடம் காசுவாங்கி கொண்டு வந்த இம்மாலையை போட்டுக் கொண்டு செல்கிறேன். வணக்கம். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/03/20-mar-06.html

மற்றவர் கோணத்தைப் பார்த்து அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும்போது நான் என் நிலையில் இருப்பதுதானே நல்லது? அதைத்தான் பிடிவாதம் என்கிறீர்களா? என் பரம ரசிகனையே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் பார்வை கோணம் என்ன? எல்லோரும் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அவன் துரதிர்ஷ்டம் டோண்டு ராகவனிடம் போய் தன் மிரட்டலை வைத்துக் கொண்டான். போடா ஜாட்டான் என்று தூக்கி எறிந்து விட்டேன். அவனுடைய பழைய நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே அவனை ஒதுக்கி விட்டனர். தனியே கிடந்து ஊளையிடுகிறான்.

இப்போது இந்தப் பதிவின் மேட்டருக்கு வருவோம்.

"சிலர் தங்கள் குழந்தைப்பருவ ஆதர்சங்களைக் கலைத்துக்கொள்ள விரும்புவதில்லை."
நிச்சயம் அது எனக்கு பொருந்தாது. சோ அவர்களின் பத்திரிகையை நான் அதன் முதல் இதழிலிருந்தே படித்து வருபவன். அல்ப சலுகைகளுக்காகப் பல்லிளிக்கும் மற்றப் பத்திரிகையாளர்கள் நடுவில் அவர் ஒரு இமயமாக நிற்கிறார். அதற்காக அவர் சொல்லுவது எல்லாமே சரி என்று சொல்லிவிடுவேன் என்று பொருள் இல்லை. பத்திரிகையை அவர் நடத்தும் முறையையும் மற்றவர் நடத்தும் முறையையும் பார்த்துவிட்டு பேசுங்கள்.

அது சரி, நடுநிலை என்று எதைக் கருதுகிறீர்கள்? நடக்கும் விஷயம் ஒன்றைப் பற்றி எழுதும்போது அதைப் பற்றி அபிப்பிராயமே வைத்துக் கொள்ளக்கூடாதா? சோ என்ன செய்கிறார் என்றால் செய்திகளைக் கூறும்போது தன் விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பதில்லை. விமரிசனம் செய்யும்போது கருத்து கூறுகிறார்.

பாஜக ஆதரவாளராக இருந்தாலும் அக்கட்சியினர் அசடு வழியும்போது அதை கோட்டா செய்வதில் அவர்தான் முதல். தன்னம்பிக்கை உள்ள மனிதரால்தான் அவ்வாறு செய்ய முடியும்.

தன் பத்திரிகையில் தனிமனிதத் தாக்குதலை செய்யாத வெகு சில பத்திரிகையாளர்களில் அவர் முக்கியமானவர்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/03/30mar06.html

அசத்தி விட்டீர்கள் சுரேஷ் அவர்களே. அப்படியே துக்ளக்கின் ஒன்றரைப் பக்க நாளேட்டைப் படிப்பது போலவே இருந்தது.

சமீபத்தில் 1970-ல் "துக்ளக் படமெடுக்கிறார்" என்றத் தலைப்பில் ஒரு தொடர் கதை வந்தது. அதில் எடுத்த ஒரு படத்தைப் பற்றிய விமரிசனங்கள் ஒவ்வொரு பத்திரிகையும் எப்படி எழுதியிருக்கும் என்பதை கிண்டலடித்தியிருப்பார் சோ அவர்கள். அவர் துக்ளக்கையும் விடவில்லை. அதையும் கிண்டலடித்தார்.

சில மாதங்களுக்கு முன்னால் வந்த தொடர்கதையிலும் வீரப்பன் ரேஞ்சில் இருந்த கொள்ளைக்காரன் தெரியாத்தனமாக சோ அவர்களையே கடத்தி வந்து படும் அவஸ்தைகளையும் படிக்கக் காணலாம். அதிலும் அவர் பகவத் கீதை மற்றும் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிப் பேச ஆரம்பிக்க டென்ஷன் ஆன அந்த கொள்ளைக்காரன் இந்த ஆசாமி (சோ) தன்னை கிஸ்னனைப் பத்திப் பேசியே கொன்று விடுவார் என அஞ்சுவதால் விட்டால் போதும் என்று அவரை விட்டு விடுவதாக அக்கதையில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் சோ அவர்களை கிண்டலடித்துக் குறிப்பிட்டதையெல்லாம் ஏற்கனவே பல்வேறு சமயங்களில் கடந்த 36 ஆண்டுகளாக துக்ளக்கிலேயே குறிப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் எழுதாதவை கூட அதிலேயே கிடைக்கும்.

அதுதான் சோ.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் இப்பின்னூட்டத்தின் நகலை சோ அவர்களைப் பற்றி நான் போட்ட என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/03/30mar06.html

"ஆனால் அதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சோவே எதிர்பார்க்கமாட்டார் - இல்லையா?"

ஆயிரத்தில் ஒரு வார்த்தை பெனாத்தலாரே. "நினைவில் நின்றவள்" என்று முக்தா பிலிம்ஸின் படத்தில். அண்ணன் வி.எஸ். ராகவன் (?) அவர்கள் கொடுக்கும் யோசனையை தம்பியாக நடிக்கும் சோ அவர்கள் அப்படியே ஒத்துக் கொள்ள, அண்ணன் உடனே தன் யோசனையை வேகமாக வாபஸ் வாங்குவார். அவ்வளவு நம்பிக்கை தம்பியின் மேல். அவன் ஆதரிக்கும் எதுவும் உருப்படாது என்ற ரேஞ்சில் வேறு டயலாக். இப்படத்துக்கு கதை வசனம் சோ அவர்கள்தான்.

நான் சோ அவர்களை ஆதரித்துப் பின்னூட்டம் போடும்போது கூட அவர் கூறியதுடன் நான் ஒத்துப் போகிறேன் என்றுதான் கூறியிருப்பேன். அதுவும் என் சுய புத்தியில் கூறுவதே. எல்லோரும் அவர் சொல்வதை ஒத்துக் கொள்ள ஆரம்பித்தால் அவரே வாழ்க்கையை வெறுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. இம்மாதிரி லவ்-ஹேட் நிலையைத்தான் அவரும் எதிர்ப்பார்க்கிறார்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் இப்பின்னூட்டத்தின் நகலை சோ அவர்களைப் பற்றி நான் போட்ட என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கூத்தூர் ஸ்ரீராம் அவர்களே,

முதலில் உங்கள் பெயரை சரியாக எழுதியிருக்கிறேனா? இந்தப் பதிவில் சோ அவர்களைப் பற்றி வந்திருக்கும் எல்லா ஹைப்பர் லிங்குகளையும் படித்து விட்டீர்களா?

சோ ஒரு சிறந்த பத்திகையாளர் என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் நான் எழுதிய பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
துக்ளக் பத்திரிகையின் 35வது ஆண்டு விழா கூட்டம் பற்றிப் பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
துக்ளக் 36-ஆம் ஆண்டு விழா பற்றிப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/36.html
சோ அவர்களால் எழுதப்பட்ட யாருக்கும் வெட்கமில்லை என்ற நாடகத்தைக் குறிப்பிட்ட இப்பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அதே சமயம் மற்றவர்கள் சோ அவர்கள் பற்றிப் போட்ட பதிவுகளிலும் பின்னூட்டமிட்டுள்ளேன். சாவகாசமாகப் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி கூத்தூர் ஸ்ரீராம் அவர்களே,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தரப்பிலிருந்தும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்னுடைய இந்தப் பதிவிலேயே, மற்றவர் பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்களின் நகல்களும் உள்ளன. அவ்ற்றுக்கான சுட்டிகளும் உண்டு. இணையத்தின் தற்போதைய நிலையில் சோ எதிர்ப்புத்தான் அதிகம். ஆகவே அந்தத் தரப்பு நியாயங்களையும் படிப்பது நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ரோசா வசந்த் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_12.html
சோ அவர்கள் தன் எழுத்துக்களில் தெளிவாகவே இருந்தார். இந்தத் தேர்தலை பொருத்தவரை அவர் ஜெயை ஆதரித்தார். இருந்தாலும் எதிர்தரப்பு வாதங்களையும் அவர் புறக்கணிக்கவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பிளாங்கி அடித்தது. அதே தேதியில் சட்டசபை தேர்தல் நடந்திருந்தால் ஜெ இன்னும் மோசமாகவே தோற்றிருப்பார்.

முதலிலிருந்தே கருணாநிதி அவர்களின் கூட்டணையின் பலமே ஜெயின் பலவீனம் என்பதையும் தெளிவாகவே கூறி வந்திருக்கிறார் சோ அவர்கள்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது சோ கூறியபடி நடந்து கொண்டிருந்தால் ஜெக்கு இன்னும் அதிக சீட்டுகள் கிடைத்திருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. அவற்றில் முக்கியமானது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம். வெகு திறமையாகச் செயல்பட்டு வேலை நிறுத்தத்தின் முதுகெலும்பை முறியடித்தார் ஜெ.

உடனேயே ஊழியர்கள் வழிக்கு வந்தனர். அப்போது சோ அவர்கள் கூறினார், சட்டென்று எல்லொரையும் மன்னித்து வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி. ஆனால் ஜெ அதை கேட்காமல் போனதில் அவரது வெற்றி நீர்த்து போயிற்று. அப்போது மட்டும் அதை செய்திருந்தால் நிலைமை ஜெக்கு சாதகமானதாகவே இருந்திருக்கும். அதை கேட்காததில் ஜெக்குதான் நஷ்டம்.

பிறகு பல சட்டங்களை வாபஸ் பெற்று கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.

இப்படி ரொம்ப பாதகமான சூழ்நிலையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த ஜெ படிப்படியாக திமுகவின் வெற்றியை கேள்விக்குரியதாக்கினார். கடைசி கருத்துக் கணிப்பில் அவருக்கு 26 சீட்டுகள்தான் கிடைக்கும் என்று ஆரூடம் கூட கூறப்பட்டது. ஆனால் அவர் அவ்வளவு மோசமாகத் தோற்கவில்லைதானே. சோ கூறியபடி விஜயகாந்தை சேர்த்துக் கொண்டிருந்தால் நிலைமை இன்னும் சாதகமாகியிருக்கும். அதுவும் சோ கூறிய ஆலோசனைதான். ஆனால் ஜெ அதையும் கேட்கவில்லை. சோ அவர்கள் எல்லா சினோரியோவையும் அலசி எழுதியுள்ளார். இப்போது நடந்த விஷயத்தின் சாத்தியக்கூறையும் எழுதியுள்ளார் என்பதுதான் நிஜம்.

இப்பின்னூட்டத்தின் நகல் சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வணக்கத்துடன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vanakkathudan.blogspot.com/2006/08/blog-post_115557942002716940.html

"இருந்தாலும் அந்த விளக்கை அந்த நேரத்தில் சோவின் தலைக்கு பின்னால் வைத்து, அந்த தலையையும் மொட்டையாய் வைத்து, அந்த ஒளி அதில் பிரதிபலிக்க செய்து, தனக்கு சோவின் மேன்மையை விளக்கியது 'உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன்' தான் என தனக்கு தானே சொன்னபடி கிளம்பினார் - ஒரு பதிவு போட."
வாய்விட்டு சிரிக்க வைத்த கிண்டல். பலே.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவ்னே இட்டான் என்பதை உணர்த்த இதன் நகலை சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

ஈ.வே.ரா. அவர்களுடைய அகராதியில் சுயமரியாதை என்பது அவருக்கு மட்டுமே உரியது. மற்றவர்களை இவர் இன்ஸல்ட் செய்யும்போது பாதிக்கப்பட்டவர் சுயமரியாதையுடன் நடந்து கொண்டால் அவர் தாங்க மாட்டார். கதிரேசன் என்ற புலவர் அவரிடம் வந்த போது அவருக்கு அருந்த பாலும் கொடுத்து கூடவே தமிழ்ப் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று அவரை இழிவுபடுத்த, மனம் நொந்த அந்த ஏழைப்புலவர் அவர் கொடுத்தப் பாலை வாயில் விரலைவிட்டு வாந்தியெடுத்து "உன்னிடம் போய் வந்து நின்றேனே, எனக்கு இந்த அவமானம் தேவைதான்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றதை பற்றி பெரியார் கூறும்போது கதிரேசன் என்பவர் அவர் வார்த்தையில் "வாயாடிப் புலவர்" ஆனார். இதை எந்தவிதமாக நியாயப்படுத்துவீர்கள்?

தன்னுடைய பேச்சுக்களின் முடிவில் புத்தர் கூறியது போல சொந்தமாக யோசித்து முடிவு எடுக்கச் சொல்லும் ஈவேரா, உண்மையில் தனது கருத்துக்களிலிருந்து மாறுபடும் தன் குழுவினருக்கு முக்கியமான பொறுப்புக்கள் எதுவும் தருவதில்லை. கலைஞர் கருணாநிதியுடைய சுயசரிதையிலும் இதைக் காணலாம். தன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவராயினும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தன்னுடைய நம்பிக்கையை கேள்வி கேட்பாராயின்,ஈவேரா கோபம் கொள்ளுவது வழக்கம். இதுபோன்ற விஷயங்களில் கழகத்தார் அவரது துணைவியார் (இரண்டாவது) மூலம்தான் அவரை அணுகுவதும் வழக்கம் என்றும் படித்துள்ளேன்.

ஈவேராவின் வரலாற்றை எழுதிய ஒருவர் அந்த வரலாற்றிலேயே திரு. ஈவேரா எப்படி அவரிடம் நடந்துகொண்டார் என்பதையும் விளக்குகிறார். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கருத்து வேறுபாடுகொண்டவர்களில் ஒருவருக்கு இவர் உதவி செய்துவிடுகிறார். ஈவேரா என்ன சொல்லுவாரோ என்கிற பயத்துடன் அவர் வீட்டிற்குப் போகிறார். ராமசாமி அவரிடம் விளக்கம் கேட்க அந்த நபர் தான் செய்தது நியாயமானதுதான் என்ற வகையில் பேசிவிடுகிறார். உடனேயே ஈவேரா தன் கையிலுள்ள பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஒருவரிடம் இனி பேச விருப்பம் இல்லையென்றால் ஈவேரா இப்படித்தான் செய்வாராம். அடுத்த நாள் சுயசரிதையை பிற்காலத்தில் எழுதிய அந்த நபரின் பெயர் கண்ணீர்த்துளியாக கட்டம் கட்டப்பெற்றது. (இந்த "கட்டம்கட்டுதல்" என்கிற பாப்புலரான பதத்தின் அடிப்படையே ஈவேராவின் சர்வதிகாரப்போக்குத்தான். ஆனால், சில தமிழர்களின் தந்தையான அவர் மற்றவர்களுக்கு சொல்லுவதெல்லாம் அவர்களது சொந்தபுத்தியை உபயோகிக்கவேண்டும் என்பது.)

அவருடைய கழகத்திற்கு காரைக்குடியில் இருந்த ஒரு மிகப் ப்ரபலமான செட்டியார் ஒருவரிடமிருந்து வரவேண்டிய நன்கொடை வரத்தாமதமானது. உடனேயே அப்போது அவருடைய பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பில் இருந்த அண்ணாவிடம் செட்டியாரை காரசாரமாகத் திட்டி எழுதச் செய்தார். அண்ணாவின் தமிழ்தான் இந்த விஷயத்தில் துள்ளி விளையாடுமே. அருமையாகச் செய்திருந்தார். இதற்கிடையில் அந்த நன்கொடை வந்துவிட்டது. உடனேயே அண்ணாவின் கட்டுரையை தடுத்து நிறுத்தி ஒரு மழுப்பலான வடிவில் அதை ஈவேரா மாற்றிவிட்டார். வாரமலரில் நான் படித்தது இது.

கலைஞர் கருணாநிதி சோப் போட்டு குளிப்பதையே ஒரு பெரிய குறையாகக் கண்டவர் ஈவேரா. இந்த விஷயத்திற்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்க முடியாது என்பதால் மற்றவர்களிடம் இதைக் குறை சொல்லி திட்டுவதோடு, கழகத்தில் முக்கியமான பணிகளைத் தராமல் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்.

யாரெல்லாம் குளிக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்து ஈவேராவிடம் பெயர் வாங்கியவர்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவரின் பெயர்: வீரமணி.

dondu(#11168674346665545885) said...

"யாரெல்லாம் குளிக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்து ஈவேராவிடம் பெயர் வாங்கியவர்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவரின் பெயர்: வீரமணி."
ஹா ஹா ஹா. சிரிப்பை அடக்க முடியவில்லை. அவ்வாறெல்லாம் சுயமரியாதையுடன் அவர் செயல்பட்டதால்தான் அவரால் வாரிசாக வர முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

சுயசரிதையை பிற்காலத்தில் எழுதிய அந்த நபரின்

"சுயசரிதையை" என்பதை "சரிதையை" என்று படிக்க வேண்டுகிறேன். ஈவேராவின் சுயசரிதையை இவர் எழுதியிருந்தார்.

dondu(#11168674346665545885) said...

சரிதை சுயசரிதை விஷயத்தில் பலரும் இக்குழப்பத்தில் மாட்டிக் கொள்கின்றனர். பெரியாரே தன் சரிதையை எழுதியிருந்தால் அது சுயசரிதை, மற்றவர் பெரியார் வாழ்க்கையை எழுதினால் அது சரிதை. ஆனாலும் பலர் குழப்பிக் கொண்டதில் இது பெரிய தவறாகப் படவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஸார்,

ஊவ்வ். திரும்பவும் தவறு செய்துள்ளேன். பசி மயக்கம். பேசாமல், எல்லாரும் "வாழ்க்கை வரலாறு" என்று படித்துவிடுங்கள். கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் தவறாக இல்லை.

dondu(#11168674346665545885) said...

Don't worry Muse, in our English class, a student wrote in a composition that Boswell wrote the autobiography of Dr.Johnson.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

வெங்கட்ராமன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_05.html
துக்ளக்கின் தரம் மற்ற பத்திரிகைகளுக்கு வந்து விடுமா என்ன? சோ அவ்ர்களுக்கு ஈடு சோ மட்டுமே. அவருக்கு ஈடான உயர் தர பத்திரிகையாளர்கள் இப்போது அருகி விட்டனர் என்பதே உண்மை.

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை சோ பற்றிய என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மனிதனை மனிதன் அடிமை கொள்கிற, பெரும்பான்மை சமூகத்துக்கு அநீதி இழைக்கிற கருத்தக்காங்களைப் பற்றிக்கொண்டு ஒருவர் காட்டும் துணிவும், பத்திரிக்கை தரமும் இன்ன பலவுமால் பயனேதுமுண்டோ?

dondu(#11168674346665545885) said...

என்ன கூற வருகிறீர்கள் கர்ணன் அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது