எனக்கு தெரிந்து எந்த பாராளுமன்ற அல்லது சட்டசபை கூட்டத் தொடரோ அதனதன் முதல் நாளைக்கு முழுவதுமாக வேலை செய்ததில்லை. என்ன நடக்கும் என்றால், இடைகாலத்தில் யாராவது பழைய அல்லது செயலில் உள்ள அங்கத்தினர்கள் மண்டையைப் போட்டிருப்பார்கள். முதல் நாளன்று சபை கூடியதும் இறந்தவர்களை பற்றி இரங்கல் தீர்மானம் போட்டு விட்டு, சபையை அத்துடன் அன்றைக்கு ஒத்தி வைத்து விட்டு இறங்கி போய் கொண்டேயிருப்பார்கள். இதில் கட்சி வேறுபாடே கிடையாது.
நான் கேட்கிறேன், ஒரு நாளைக்கு சட்டசபை கூட்டம் நடக்க என்ன செலவாகும்? அத்தனையும் எள்ளுதானா? ஏன், இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து அஞ்சலி செலுத்தி விட்டு வேலையைத் தொடங்கினால் குடி முழுகி விடுமா என்ன?
இன்னொரு கொடுமை செயற்கைக்கோள் சேனல்கள் வருவதற்கு முன்னால் நடந்தது. அதாவது ஒரு தலைவர் இறந்தால் இரண்டு நாட்களுக்கும் மேல் சோக இசைதான் தொலைக் காட்சி மற்றும் ரேடியோவில். அதுவும் இந்திராகாந்தி இறந்த போது அவர் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. அடுத்த நாள் சடங்குகளும் அவ்வாறே. ராஜீவ் காந்தி கோட்டின் மேல் பூணூல் போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ததை முழுக்கவே காண்பித்தார்கள். நல்ல வேளையாக இப்போதெல்லாம் இந்த வேலை நடக்கவியலாது என்பதற்கு நாம் உலகமயமாக்கலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அதே போல பிரதம மந்திரி / குடியரசுத் தலைவர் இறந்தால் இரண்டு நாள் விடுமுறை. வெளி தேசத்து தலைவர்கள் இறந்தால் ஒரு நாள் விடுமுறை. என்ன இதெல்லாம் கூத்து? ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது?
இன்னொரு கொடுமை பிரதம மந்திரி இறந்தால் அரசு அவருக்களித்திருக்கும் இல்லத்தை நினைவுச் சின்னம் ஆக்குவது. நேரு காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது. தீன் மூர்த்தி பவன், 1, சஃப்தர்ஜங் சாலை ஆகிய கட்டடங்கள் மியூசியமாகின. நல்ல வேளை, ராஜீவ் காந்தி இறந்த போது அவர் அதிகாரத்தில் இல்லையோ 7, ரேஸ்கோர்ஸ் சாலை பிழைத்ததோ. அதுவும் இந்த விஷயத்தில் நேரு குடும்பத்தினருக்கு மட்டும் இந்த சலுகை. நாடு யார் அப்பன் வீட்டு சொத்து என நினைத்து கொண்டிருக்கிறார்கள்? நேரு தனது அலகாபாத் மாளிகையை நாட்டுக்கே எழுதிவைத்தார் எனப் பெருமை பேசுவார்கள். அங்கு போய் பார்த்தால்தானே தெரிகிறது அதுவும் நேரு மியூசியம் என்று. பிறகு சமாதிகள் வேறு. ஒவ்வொரு சமாதிக்கும் ரியல் எஸ்டேட் வளைத்து போடப்படுகிறது. சென்னையிலேயே பார்க்கிறோமே. இதனால் வரும் பொருள் நட்டம் எவ்வளவு?
வேறொரு கொடுமை விடுமுறைகள். அரசு ஊழியர்களுக்கு வருடத்துக்கு 16 விடுமுறை நாட்கள், 2 ரெஸ்ட்ரிக்டட் விடுமுறைகள். முதலாவதில் மூன்று கட்டாய விடுமுறை நாட்கள். அவை ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 மற்றும் ஜனவரி 26. இந்த 3 நாட்களுக்கும் தில்லியில் எல்லா கடைகளும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று வேலை செய்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் வேறு கட்ட வேண்டும் இல்லையெனில் கடமை தவறாத போலீசாருக்கு மாமூல் தர வேண்டும். உழைப்பின் உயர்வை அவ்வாறு உயர்த்திப் பேசிய உயர்ந்த மனிதர் காந்திக்கு நல்ல அவமரியாதை இது.
இதனால் என்ன ஆகிறது என்றால் பல நாட்களுக்கு தொடர்ந்தால் போல பேங்குகள் வேலை செய்வதில்லை. எவ்வளவு நஷ்டம்? இசுலாமியப் பண்டிகை ரெஸ்ட்ரிக்டட் லிஸ்டில் வந்தால் பல இந்துக்கள் அதை எடுத்து கொள்கிறார்கள். அதே போலத்தான் ரெஸ்ட்ரிக்டாட் லிஸ்டில் வரும் மற்ற மத பண்டிகைகளும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்கும்போது prefix suffix செய்வது வேறு.
இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அப்படியே எல்லா விடுமுறைகளையும் கட் செய்ய முடியாது. வேறு விதமாக செய்யலாம். மூன்று கட்டாய விடுமுறைகள் இருக்கட்டும். மீதி எல்லா பண்டிகை தினங்களும் ரெஸ்ட்ரிக்டட் வகைக்கு போகட்டும். சம்பந்தப்பட்ட மத சம்பந்தமில்லாதவர்கள் அவற்றை எடுக்க தடை செய்ய வேண்டும். அம்மாதிரி எடுத்து கொள்ளக்கூடிய விடுமுறைகள் ஆரம்பத்தில் 15 வைக்கலாம். பரவாயில்லை. ஏனெனில் எல்லோரும் அவற்றை ஒரே சமயத்தில் எடுக்க முடியாதாகையால் அரசு அலுவலகங்கள் பாட்டுக்கு இயங்கும். சம்பந்தப்பட்ட அலுவலக பொறுப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் விடுமுறை எடுப்பவர்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அதே போல இந்த மாதிரி தாரை வார்த்த அரசு கட்டிடங்களைத் திரும்பப்பெற வேண்டும்.
செய்வார்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
61 comments:
மெரினாவில் மூன்று மெமோரியல்களா? அண்ணா, எம்.ஜி. ஆர். தெரியும். மூன்றாவது? யுத்த மெமோரியல்?
முதல் இரண்டும் அடாவடிகள். மூன்றாவதை தாராளமாக ஒத்து கொள்ளல்லாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழக அரசாங்கமே படிக்க வேண்டிய பதிவு டோண்டு சார்.
நன்றி நாட்டாமை, தினகர் மற்றும் ஆதிசேஷன்.
தினகர் அவர்களே, பெரியார் மெமோரியல் இருப்பது மெரினாவில் அல்ல. வேப்பேரியில். அங்குதான் அவர் சமாதியும் உள்ளது.
ஆதிசேஷன் அவர்களே, தமிழக அரசுக்கு இதெல்லாம் தெரியாதா? நன்றாகவே தெரியும். ஆயினும் பூனைக்கு யார் மணி கட்டுவது என மயங்குகின்றனர் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
" கட்டிவராத டாம்பீகமும் " அன்னியன் பாஷை மாதிறி இருக்கு?? எனக்கு புரியல!! கொஞசம் விளக்குங்க பிலிஸ்.
"அதே போல இந்த மாதிரி தாரை வார்த்த அரசு கட்டிடங்களைத் திரும்பப்பெற வேண்டும்."
ஆமாம் இலங்கை கூட நெத்திக்கு விட்டு கொடுக்காம எங்கள அவமானபடுத்திடாங்க! அதனால கச்சத்திவை அவர்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும்
கட்டிவராத டாம்பீகம் --> Extravaganza that cannot be afforded. ஆனால் ஒன்று இம்மாதிரி செய்தால் அன்னியனில் தரும் தண்டனைகள் போலத்தான் தர வேண்டும்.
தீன் மூர்த்தி பவன், நம்பர் 1 சஃப்தர்ஜங் சாலை ஆகிய கட்டிடங்களின் மதிப்பு என்னவென்று ஐடியா உள்ளதா? அதையெல்லாம் செத்த தலைவர்கள் (அதுவும் நேரு குடும்பத்துக்கு மட்டும்) நினைவாலயங்களாக மாற்றுவது என்ன கொடுமை? ஒரு நாள் உற்பத்தி நின்றால் என்ன பொருளாதார நஷ்டம் என்பதை ரூபாய் அணா பைசா கணக்கில் பார்க்கவும்.
இதெல்லாம் நமக்கு தேவைதானா? கட்டுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
செய்வார்களா?
மாட்டொம் ஒட்டு போயிருமில்ல. எவன் நாசமா போன எனக்கென்ன, எனக்கு என் பதவியும் பணமும்தான் முக்கியம்!
விளக்கியதற்கு நன்றி டோண்டு ஸார்!
சரியாக சொன்னிங்க! இவங்களுக்கு எல்லாம் எண்ணை கொப்பரைதான்.
"முதல் நாளன்று சபை கூடியதும் இறந்தவர்களை பற்றி இரங்கல் தீர்மானம் போட்டு விட்டு, சபையை அத்துடன் அன்றைக்கு ஒத்தி வைத்து விட்டு இறங்கி போய் கொண்டேயிருப்பார்கள். இதில் கட்சி வேறுபாடே கிடையாது."
பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஒரு நாள் செலவு - 1.23 கோடி ரூபாய் (ரூ.1,23,00,000). எல்லா பணமும் டுமீல்!
இதொ செலவை பத்தி மில்டன் ஃப்ரிட்மென் சொன்னது.
These are called Milton Friedman's Four Laws on Spending Money.
-
There are four ways in which you can spend money.
1.You can spend your own money on yourself. When you do that, why then you really watch out what you’re doing, and you try to get the most for your money.
2.Then you can spend your own money on somebody else. For example, I buy a birthday present for someone. Well, then I’m not so careful about the content of the present, but I’m very careful about the cost.
3.Then, I can spend somebody else’s money on myself. And if I spend somebody else’s money on myself, then I’m sure going to have a good lunch!
4.Finally, I can spend somebody else’s money on somebody else. And if I spend somebody else’s money on somebody else, I’m not concerned about how much it is, and I’m not concerned about what I get. And that’s government. And that’s close to 40% of our national income.
மிக அதிகபடுத்தப் பட்ட யோசனைகள்.
சட்டமன்றங்கள் அவை உறுப்பினர் மறைவிற்காக ஒரு செஷனே தள்ளி வைக்கப் படுகின்றன.
நினைவிடங்கள் அத்தலைவர்களுக்கு மக்களிடையே இருந்த மதிப்பைப் போற்றுமுகமாகவே உள்ளன. அதை அவர்களது படங்களை வைத்து பாழடிப்பதை விட அவர்கள் நிலைநாட்டிய கொள்கைகளை நினைவுகூறுமுகமாக வாசகசாலைகளாகவோ கல்விக் கூடங்களாகவோ மாற்றலாம். உதாரணமாக தீன்மூர்த்தி பவனில் வெளியுறவுக் கொள்கைகளை கற்பிக்கும் கலாசாலையை அமைக்கலாம். காந்திமண்டபத்தில் சென்னை பல்கலையின் காந்தியன் ஸ்டடீஸ் பிரிவு நடத்தலாம். சொல்லப் போனால் வள்ளுவர் கோட்டத்தில் திருக்குறள் பாடம் நடத்தலாம். பெரியார் நினைவிடம் அந்த முறையில் இயங்குவது இதமளிக்கிறது.
விடுமுறைகள் நீங்கள் சொல்வதுபோல் முறைப் படுத்தப் படலாம்.
இன்று எல்லா சானலிலும் கிரிக்கெட் தோல்வி தான் ஆக்கிரமித்துள்ளது. சோக இசை மட்டுமே மிஸ்ஸிங். அப்படியாவது கர்நாடக இசையை ஊடகங்களில் பார்க்க முடிந்தது :((
ரொம்ப அழகாகச் சொன்னீர்கள் ஜயகமல் அவர்களே. தீன் மூர்த்தி பவன் ஒரு நூறு கோடி ரூபாய்க்கு குறைவில்லாமல் மதிப்பிடலாம் என நினைக்கிறேன். இது 1964-லிருந்து வெத்தாக உள்ளது. எவன் வீட்டுப் பணம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசு செலவு பன்னா அது எப்படி வேஸ்ட் ஆகும். வேஸ்ட் ஆகாது! பாருங்க சென்னை சங்கமத்துல எங்க கம்பேனிக்கு நல்ல வருமானம்!
தமிழ் மையம் வாழ்க!
முதல்வர் வாழ்க!
dondu sir
Correct neenga sonnadhu (i have thought this several times), ennatha pannaradhu, idhu ellam solli varuthapatukamudiyum, athaiyum thaandi oru yosanai vechalum koncha naal pesuvaanga then will be back to Square one. Romba kodumai ...
Aanipidunganum
குறுகிய காலத்தில் காலை ஆட்டிக்கொண்டு நிறைய சம்பாதிக்க வேண்டும், முடிந்தளவு வேலை செய்வதை குறைத்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்க வேண்டும் என்ற ரீதியில் தான் பலரது எண்ணங்களும் இருக்கின்றன. Work ethic என்ற ஒன்று பலருக்கு இருப்பதாகவே தெரியவில்லை. பேசுகின்ற பலர், தாங்கள் பதவிக்கு வந்தவுடன் அதே கதையை தொடர்கின்ற போது என்ன செய்வது?
நாட்டின் வரிப்பணம் எப்படியெல்லாம் செலவழிக்கப்படுகிறது என்பதை கேட்டால் குமட்டிக்கொண்டு வருகிறது.
பல வருடங்களுக்கு முன்பு, ஒரு வெளிநாட்டு எதிர்கட்சித்தலைவன், நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பினானாம். இறுதியில் அவன் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியேற்றப்பட்டான். அப்போது அவன் அனைவரையும் பார்த்து இவ்வாறு கத்திக்கொண்டே வெளியேறினானாம்!
"This is the parliament of the blind, of the unfeeling, unseeing, unthinking ....."
சபாஸ்! மை டியர் டோண்டு சார்! உருப்படியாக ஒரு கட்டுரை எழுதியதற்கு
மனதாரப் பாராட்டுகின்றேன்.
புள்ளிராஜா
உங்கள் அபிமான நாடான இஸ்ரேலில் எத்தனை விடுமுறை நாட்கள் என்று தெரியுமா?
ஏன் காங்கிரஸ், திராவிட அரசியல்வாதிகளை மட்டும் சாடுகிறீர்கள்? இந்து கட்சியில் அவ்வாறு செய்தவர்கள் உங்கள் கண்களுக்கு படவில்லையா?
மக்கள் உண்டியலில் உபயமாகப் போடும் பணத்தில் இறைவனுக்கு அபிசேகம் என்று சிவராத்திரிகளில் வீணாகும் பொருட்களின் மதிப்பு தெரியுமா?
சில விஷயங்கள ஆராயக்கூடாது!
//உங்கள் அபிமான நாடான இஸ்ரேலில் எத்தனை விடுமுறை நாட்கள் என்று தெரியுமா?//
இஸ்ரவேலர்களிடம் கற்று கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன. அதையெல்லாம் விட்டு இதை ஏன் பார்க்க வேண்டும்? நாம் இந்தியாவைப் பற்றி கவலைப்படுவோம். இஸ்ரேலை இதில் இழுத்ததால் இது மட்டும் கூறுவேன். அவர்களது மற்ற நல்ல கட்டுப்பாடுகளை எடுத்து கொள்ளவும். இது வேண்டாம்.
//ஏன் காங்கிரஸ், திராவிட அரசியல்வாதிகளை மட்டும் சாடுகிறீர்கள்? இந்து கட்சியில் அவ்வாறு செய்தவர்கள் உங்கள் கண்களுக்கு படவில்லையா?//
அப்படியா? தீன் மூர்த்தி பவன் மற்றும் நம்பர் 1 சஃப்தர்ஜங் சாலை போன்று ஏதேனும் உதாரணம் கூறுங்களேன். மற்றப்படி நான் இதில் எல்லா கட்சியினரையும்தான் சாடுவேன்.
//மக்கள் உண்டியலில் உபயமாகப் போடும் பணத்தில் இறைவனுக்கு அபிசேகம் என்று சிவராத்திரிகளில் வீணாகும் பொருட்களின் மதிப்பு தெரியுமா?//
அது ஆத்திகர்கள் அபிஷேகத்துக்கென்றே உண்டியலில் போடும் பணம். ஒரு திருவிழா என்றால் எல்லோருமே பிழைக்கிறார்கள். தீன் மூர்த்தி பவன் உதாரணத்தில் யார் யாரெல்லாம் பிழைக்கிறார்கள்?
//சில விஷயங்கள ஆராயக்கூடாது!//
கண்டிப்பாக ஆராய வேண்டும். அப்போதுதான் நியாயம் பிறக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
>>>>அவர்களது மற்ற நல்ல கட்டுப்பாடுகளை எடுத்து கொள்ளவும். இது வேண்டாம்.
அதையேத்தான் நானும் சொல்கிறேன் :). நமது நாட்டிலும் நல்லது எவ்வளவோ இருக்கிறதே. இந்தியா போன்ற செக்யூலர் நாட்டில் இத்தனை விடுமுறைகளும் பண்டிகைகளும் இருப்பது அவசியம். தன் பணி நேரத்தில் 'பார்ட் டைம்' ஜோலி பார்த்த சித்தார்தர் இப்போது புத்தராகிவிட்டாரோ?
>>>>நம்பர் 1 சஃப்தர்ஜங் சாலை போன்று ஏதேனும் உதாரணம் கூறுங்களேன்.
பிஜேபி ஆட்சி செய்த மாநிலங்களில் அவர்கள் எழுப்பிய சிலைகள் கட்டிடங்கள் எல்லாம் என்னப்பர் குகூளாண்டவரை வேண்டினால் நீங்களே பெறலாம்!
>>>>அது ஆத்திகர்கள் அபிஷேகத்துக்கென்றே உண்டியலில் போடும் பணம்.
என் பணமும் உண்டியலில் போகிறது... ஆனால் அது ஒரு ஏழையின் படிப்பிற்குபோனால் மகிழ்வேன். அபிஷேகமாகி ஜலதாரியில் போவதில் மனவருத்தமே! உண்டியலில் பணமிடும் பலருக்கும் அந்த எண்ணமே இருக்கும் என்று நம்புகிறேன்.
>>>>ஒரு திருவிழா என்றால் எல்லோருமே பிழைக்கிறார்கள். தீன் மூர்த்தி பவன் உதாரணத்தில் யார் யாரெல்லாம் பிழைக்கிறார்கள்?
ஒரு மியூசியத்தால் என்ன பயன் என்று கேட்பவருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? அதன் பயனை வரலாற்று ஆராய்ச்சியாளனைக் கேட்டால்தான் தெரியும். நீங்களோ நானோ கணினியின் முன் அமர்ந்து விடைகாணக்கூடிய விஷயமா இது?
>>>>கண்டிப்பாக ஆராய வேண்டும்.
சரி! கோவிலில் மூலவரும் உற்சவரும் மட்டுமே போதுமே? எதற்காக மற்ற சிற்பங்கள்? வீண்தானே? எதற்காக மண்டபங்கள்? எதற்காக வானுயர்ந்த கோபுரங்கள்? So, சில விஷயங்களை ஆராயக்கூடாது!
//இந்தியா போன்ற செக்யூலர் நாட்டில் இத்தனை விடுமுறைகளும் பண்டிகைகளும் இருப்பது அவசியம். தன் பணி நேரத்தில் 'பார்ட் டைம்' ஜோலி பார்த்த சித்தார்தர் இப்போது புத்தராகிவிட்டாரோ?//
இப்போதுள்ள அம்மாதிரியான விடுமுறைகளை திரும்பப் பெறமுடியாதுதான். ஆனால் மத சம்பந்தமான விடுமுறைகளை எப்படி அளிக்கலாம் என்பதற்கான ஆலோசனை கூறியுள்ளேனே, அது பற்றி பேசுங்களேன்.
தன் பணி நேரத்தில் பார்ட் டைம்? நீங்கள் சரியாக படிக்கவில்லை நான் எழுதியதை. அவ்வாறு செய்யாது வெறுமனே வம்பு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? எப்போதும் நிறுவனத்தின் வேலைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது. நான் வேலை கொடுத்த டைப்பிஸ்டுகளுக்கும் அதையே வலியுறுத்தி நடாத்தினேன். அதையும் எழுதியுள்ளேனே.
//என் பணமும் உண்டியலில் போகிறது...//
உங்களை உண்டியலில் பணம் போட யாராவது வற்புறுத்தினார்களா என்ன? கோவிலுக்கு போவதே உங்கள் விருப்பம்தானே.
//ஒரு மியூசியத்தால் என்ன பயன் என்று கேட்பவருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? அதன் பயனை வரலாற்று ஆராய்ச்சியாளனைக் கேட்டால்தான் தெரியும்.//
இந்த இரு மியூசியங்களும் நேருவுக்கும் இந்திராவுக்கும் மட்டுமே ஜால்ரா அடிக்கும் நிலையங்கள். மேலும் பிரதம மந்திரி இல்லம் என்று எதற்கு வைத்திருக்கிறார்கள்? இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு ஜாலரா அடிக்கும் மியூசியம் திறப்பதற்கா? என்ன பேசுகிறீர்கள்?
//சரி! கோவிலில் மூலவரும் உற்சவரும் மட்டுமே போதுமே? எதற்காக மற்ற சிற்பங்கள்? வீண்தானே? எதற்காக மண்டபங்கள்? எதற்காக வானுயர்ந்த கோபுரங்கள்?//
கோவில் எல்லாம் ஒரு சாஸ்திரத்துக்கு உட்பட்டு கட்டுவார்கள். மேலும் நான் ஏற்கனவே சொன்னபடி ஒரு கோவிலை கட்டுவதால் ஊரின் பொருளாதாரத்தில் நல்ல முறையில் பலன்கள் ஏற்படுகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
>>>>தன் பணி நேரத்தில் பார்ட் டைம்? நீங்கள் சரியாக படிக்கவில்லை நான் எழுதியதை.
நீங்கள் சொல்வது மெத்த சரி. நீங்கள் எழுதுவதை யாராலும் புரிந்துகொள்ளமுடிவதில்லை. காரணம் நீங்கள் கடைபிடித்ததுதான் சிறந்த வழி என்று நீங்கள் நம்புவதால் இருக்குமோ? Maybe, உங்கள் எண்ணங்களை மாற்ற இன்னொரு ஞாயிற்றுக்கிழமையை உங்கள் ஐய்யன் உங்களுக்கு வழங்கும் வரை மற்றவர்கள் காத்திருக்கவேண்டும் போல.
>>>>அவ்வாறு செய்யாது வெறுமனே வம்பு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?
இல்லை. ஒரு அலுவலகத்தில் அதைத்தவிர மற்ற பணிகளை கவனிக்கலாமே? மற்ற துறையினர்க்கு உதவலாமே? (அரசாங்கத்தில் மற்ற துறைகளில் வேலையே இல்லை என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!). அல்லது தொழிலை ராஜினாமா செய்து விட்டு உங்களுக்கு பிடித்த தொழிலை செய்திருந்தால், it would have ethically supported your stand. அதைவிடுத்து பார்ட் டைம் தொழிலும் செய்துவிட்டு, அரசாங்க பணமும் சம்பாதிப்பது, இப்போது ethic பேசும் உங்களுக்கு தவறாக படாதது ஆச்சர்யமே. எல்லைப்பணியில் அமர்த்தப்பட்ட வீரர் தனக்கு வேலையில் தோய்வு ஏற்பட்டதால் பார்ட் டைமாக வேறு வேலை செய்தால் ஒத்துக்கொள்வீர்களா? If your employer pays you to do nothing, then you have the right to do nothing என்றுதான் அரசாங்க தொழில் செய்தே உயிர்விட்ட என் தந்தை எனக்கு சொல்லித்தந்த பாடம். ஆனால் அதை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைத்தால் நானே முட்டாள் ஆவேன்.
>>>>உங்களை உண்டியலில் பணம் போட யாராவது வற்புறுத்தினார்களா என்ன?
உங்கள் வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது என்று அரசாங்கத்திற்கு நீங்கள் யோசனை கூறாவில்லையா? அவர்கள் செலவு செய்யும் முறைகள் தவறு என்று வாதிடுகிறீர்கள் இல்லையா? அதேபோலத்தான் நான் உண்டியலில் போடும் பணம் ஜலதாரியில் போவதை தட்டிக்கேட்க, குறைந்தபட்சம் அங்கலாய்க்க எனக்கும் தார்மீக உரிமையிருப்பதாக படுகிறது.
>>>>இந்த இரு மியூசியங்களும் நேருவுக்கும் இந்திராவுக்கும் மட்டுமே ஜால்ரா அடிக்கும் நிலையங்கள்.
இருக்கலாம். நீங்கள் இந்த நிலையங்களுக்கு சென்றிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. 80களில் நான் நேரு நிலையத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கு நேரு குடும்பத்திய அவணங்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷார் விட்டு சென்ற பல ஆவணங்களும், கட்டடம் எழுப்பட்ட சூழ்நிலைகளும் ஆவணமாக்கி உள்ளார்கள். இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள், கமலாவிற்கு எழுதிய கடிதங்கள், காந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பல விஷயங்கள் இருந்தது. என்னை நேருவின் புத்தகங்களை வாசிக்கவும் அந்த உலா உதவியது. அதனால் பொருளாதார ரீதியிலான பலன்கள் என்ன என்று இதுவரை கணக்கிட்டதில்லை, கணக்கிடவும் போவதில்லை.
>>>>கோவில் எல்லாம் ஒரு சாஸ்திரத்துக்கு உட்பட்டு கட்டுவார்கள். மேலும் நான் ஏற்கனவே சொன்னபடி ஒரு கோவிலை கட்டுவதால் ஊரின் பொருளாதாரத்தில் நல்ல முறையில் பலன்கள் ஏற்படுகின்றன
உங்களுக்கு சாஸ்த்திரம், அவர்களுக்கு வரலாறு, மற்றொருவருக்கு வேறு ஏதோ. ஒரு மியூசியம் கட்டுவதினால் பொருளாதாராம் மேம்பட்டுவிடாதுதான். ஆனால் உலகில் உள்ள அனைத்தும் பொருளாதார காரணங்களுக்காக இயங்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன?
முன்னர் இட்ட இரு ஆனானி பின்னூட்டங்களும் என்னுடையவையே!
நட்புடன்,
யு.எஸ்.தமிழன்
நன்றி அமெரிக்க தமிழரே,
//இல்லை. ஒரு அலுவலகத்தில் அதைத்தவிர மற்ற பணிகளை கவனிக்கலாமே? மற்ற துறையினர்க்கு உதவலாமே?//
ஏற்கனவே இரு வேலைக்கான டெஸிக்னேஷன் என்னுடையது. அது இரண்டிலும் எப்போதுமே என் வேலையில் சுணக்கம் வைத்ததில்லை. மற்றப்படி மற்றவர்கள் வேலையை என் தலையில் போட்டு செய்ய என்ன என் நெற்றியில் தியாகி என்ற பட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? இதில் ஒரு எதிக்ஸ் பிரச்சினையையும் நான் பார்க்கவில்லை. இன்னொரு விஷயம். நடுவில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மொழிபெயர்ப்பு வேலை இல்லை. இருப்பினும் திடீரென அந்தத் தேவை எழுந்தபோது பிராஜக்ட் டைரக்டரே வியக்கும் வண்ணம் அனாயாசமாக துபாஷி வேலை பார்க்க முடிந்தது. அதுவும் கம்பெனிக்கு நல்லதுதானே.
//Maybe, உங்கள் எண்ணங்களை மாற்ற இன்னொரு ஞாயிற்றுக்கிழமையை உங்கள் ஐய்யன் உங்களுக்கு வழங்கும் வரை மற்றவர்கள் காத்திருக்கவேண்டும் போல.//
வேண்டுமென்றால் காத்திருங்கள், உங்களுக்கு வேறு வேலை இல்லை என்றால். நான் என்னவோ மறுபடி போய் ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலையில் ஈடுபடப் போவதில்லை. ஆகவே நீங்கள் இந்த விஷயத்தில் காத்துக் கொண்ட்டேயிருக்க வேண்டியதுதான் என அஞ்சுகிறேன்.
//நீங்கள் இந்த நிலையங்களுக்கு சென்றிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.//
சென்றிருக்கிறேன்.
அடிப்படை கேள்வியை நீங்கள் தொடவேயில்லை. அது என்ன நேரு குடும்பம் மட்டும் நாட்டுக்கு இவ்வளவு வீண் செலவுகள் வைக்க வேண்டும்? அரசால் அளிக்கப்பட்ட வீட்டை இவ்வாறு துர்பிரயோகம் செய்வது சரியா என்பதுதான் கேள்வி. லால் பஹதூர் சாஸ்திரி கூடத்தான் பதவியில் இருக்கும்போது இறந்தார், ஜாகிர் ஹுசைன், ஃபக்ருத்தீன் அலி அஹமத் ஆகியோரும் அவ்வாறே. நேரு குடும்பத்தினர் நாட்டுக்கு என்ன கழற்றி விட்டனர் என்று அவ்வாறு செய்ய வேண்டும் என்பதுதான் என் கேள்வி.
அதே போல கோவில் விஷயம். வரிப்பணம் செலுத்துவதில் எனது இஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் கோவில் உண்டியல் பணம் அவ்வாறில்லை. சரியான உதாரணம் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
>>>>இதில் ஒரு எதிக்ஸ் பிரச்சினையையும் நான் பார்க்கவில்லை.
இப்போது கண்டிப்பாக பார்க்கமாட்டீர்கள் என்று தெரியும். ஏனெனில் அது அந்த மற்றைய ஞாயிற்றுக்கிழமை நீங்கள் தெளிவு பெற்றபின் சிந்திக்க வேண்டிய விஷயம்!
>>>>நான் என்னவோ மறுபடி போய் ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலையில் ஈடுபடப் போவதில்லை.
முழுநேரத்தொழில் பார்க்க வேண்டியதில்லை. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையில் ஈடுபட்டதாக பில் செய்வது என்னளவில் ethically wrong!
>>>>லால் பஹதூர் சாஸ்திரி கூடத்தான் பதவியில் இருக்கும்போது இறந்தார், ஜாகிர் ஹுசைன், ஃபக்ருத்தீன் அலி அஹமத் ஆகியோரும் அவ்வாறே.
கூகுளாண்டவாரைக் கேட்டீர்களா? அவர்களுக்கும் மியூசியங்கள் இருக்கிறதே? இந்திராகாந்தி இறந்த பிறகு பிரதமர் இல்லத்தை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தபின்னரே அவர் இருப்பிடம் மியூசியமாக மாற்றப்பட்டது. நேரு நாட்டின் முதல் பிரதமர் என்பதனால் அவருடைய இருப்பிடம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கலாம். நேரு குடுப்பத்தினர் அனைவருக்கும் அந்த சலுகை வழங்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த நிலையங்களை அரசு இப்போது கையகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கூறுவது அரசியல் உள்நோக்கமுள்ளது.
>>>>அதே போல கோவில் விஷயம். வரிப்பணம் செலுத்துவதில் எனது இஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் கோவில் உண்டியல் பணம் அவ்வாறில்லை. சரியான உதாரணம் கூறவும்.
உங்கள் வழியிலேயே பதில் சொல்கிறேனே. உங்களை யார் இந்திய நாட்டிற்கு வரிப்பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்தினார்கள். உங்கள் வரிபணத்தை பொருளாதார ரீதியாக பயன்படும் வகையில் செலவு செய்யும் நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு செலுத்தலாமே?
நட்புடன்,
யு.எஸ்.தமிழன்
//ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையில் ஈடுபட்டதாக பில் செய்வது என்னளவில் ethically wrong!//
புரியவில்லை. இப்போது நான் செய்வது பீஸ் வொர்க். வார்த்தை எண்ணிக்கையில் சம்பளம். மணி நேர வேலை வாடிக்கையாளர் அலுவலகத்தில் போய் வேலை செய்வது. கண்டிப்பாக அங்கு போய் வேறு வேலை பார்க்க இயலாது. ஆகவே நீங்கள் சொல்வது இப்போது எனக்கு எப்படி பொருந்தும்? மற்றப்படிஉங்கள் இஷ்டப்படியே நீங்கள் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு என்ன நஷ்டம்?
//இந்திராகாந்தி இறந்த பிறகு பிரதமர் இல்லத்தை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தபின்னரே அவர் இருப்பிடம் மியூசியமாக மாற்றப்பட்டது. நேரு நாட்டின் முதல் பிரதமர் என்பதனால் அவருடைய இருப்பிடம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கலாம். நேரு குடுப்பத்தினர் அனைவருக்கும் அந்த சலுகை வழங்கப்படவில்லை.//
என்ன சப்பைகட்டுகள். பிரதம மந்திரி இல்லமாக இருக்கவில்லையென்றால் வேறு ஏதாவது மந்திரி வீடு அல்லது அலுவலகமாக பயன்படுத்துவதுதானே. அது என்ன இந்திரா காந்திக்கு ஜாலரா அடிக்கும் மியூசியம்? அதுவும் நாட்டின் ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க எண்ணிய சர்வாதிகாரிக்கா? அது என்ன முதல் பிரதம மந்திரி? அதில் என்ன விசேஷம் வாழுகிறது? நீங்கள் என்ன சொன்னாலும் நேரு குடும்பத்தினர் என்றதால்தான் அது நடந்தது. வேறு யாருக்கும் அக்குடும்பத்தை சேர்ந்தவருக்கு இது தரப்படவில்லை என்று வேறு வருத்தமா? அதைத்தான் முதலிலேயே சொன்னேனே. நல்ல வேளையாக ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் அதிகாரத்தில் இல்லையென்று. இல்லாவிட்டால் 7, ரேஸ் கோர்ஸ் ரோடும் அம்போவாகியிருக்கும்.
//உங்களை யார் இந்திய நாட்டிற்கு வரிப்பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்தினார்கள். உங்கள் வரிபணத்தை பொருளாதார ரீதியாக பயன்படும் வகையில் செலவு செய்யும் நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு செலுத்தலாமே?//
எங்கு சென்றாலும் வரி கட்டத்தானே வேண்டும். அதுவும் இந்தியா எனது தாய்நாடு. அதில் எனக்கு அக்கறை இருப்பதால்தானே இத்தனையும் எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
US Tamizhan said it correctly...
perisu, neenga mattum govt. office-la velai seyyum pothu holidays enjoy pannalaya.. ippo mattum enna kelvi? athu poga government office-a misuse panni irukkeenga....
ooruku than upadesam.... poyaa po...
மத சம்பந்த விடுமுறைகள் இருந்தாலும் அவற்றை ரெஸ்ட்ரிக்டட் கேட்டகரிக்கு மாற்றினால் அரசு வேலைகள் தடையின்றி நடக்கும் என்பதுதான் எனது முக்கிய யோசனை. இந்த யோசனையை நான் வேலையில் இருக்கும் போதே பிரதம மந்திரி அலுவலகத்துக்கு கடிதமாக எழுதினேன். பல லட்சக்கணக்கான கடிதங்களுக்கிடையில் என் கடிதத்துக்கு பதில் வரும் என்று எதிர்ப்பார்க்கவும் இல்லை. ஆகவே அதில் ஏமாற்றமும் இல்லை.
அதிலும் சொல்லி வைத்தற்போல ஒவ்வொரு சட்டசபை அல்லது பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள் இம்மாதிரி அனாமத்தாக விரயம் ஆவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
மற்றப்படி நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் என்ன நினைத்தாலும், நான் என்ன நினைக்கிறேனோ அதன்படிதான் ந்டக்கவியலும். அதை வெற்றிகரமாக நடத்தியாகி விட்டது. அதை குறிப்பிட்டு இப்போது நான் கூறும் யோசனைகளை புறக்கணிப்பது உங்கள் இஷ்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வந்த எதிர் கேள்வியெல்லாம் பாத்தா...வாந்தி வருது.
கேக்குறாய்ங்க பாரு...வேற நாட்டுக்கு போயி வரி கட்டி வாழவேண்டியது தானே...? இதெல்லாம் ஒரு கேள்வியா..கேக்கும் போதே கேவலமா இல்லியா...?
ஆயிரம் சொன்னாலும் இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் ஒரு குடும்பத்துக்கு கூஜா தூக்குவோர் சங்கம் ஒன்று சர்காரி பாபுக்கள் ரூபத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நாள் வரை இந்த கேவலம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும் என்பது என் கருத்து. அதே மாடலை தமிழகத்தில் "அன்பகம் அறிவகம் கண்ட நிதி" குடும்பத்துக்கு வழங்க பலர் அரும் பாடு படுகின்றனர். கலைஞர் மண்டையைப் போடும் போது அவர் பதவியில் இருக்கக் கூடாது என்று தென் திருப்பேறை மகரநெடுங்குழைக்காதானை வணங்கவேண்டுகிறேன். இல்லையென்றால் மெரீனா வில் இன்னொரு நினைவிடம் உருதி. சுழையாய் ஒரு ரியல் எஸ்டேட் எதுக்கும் பயன் தராது வேஸ்டாகிப் போகும்.
சைடு கேப்பில் இஸ்ரேலை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். விடுமுறை விஷயத்தில். 24x7 வேலை பார்க்கும் அரசு நிருவனங்கள் அங்கும் உள்ளன. அங்கே அரசியல் திராவிடம் குடித்துவிட்டு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளோ, இல்லை குடும்பத்துக்கு கூஜா தூக்கி மேலே வரும் சர்காரி பாபூக்கள் இல்லை. அங்கே முதல் ஜனாதிபதி க்ஹைம் வைட்ஸ்மென்னுக்கான நினைவாலயம் கூட அவர் சொந்தச் செலவில் கட்டிக் கொண்ட வீட்டைத்தான் ஆக்கியிருக்கிறார்கள். சர்கார் வழங்கிய வீட்டை அல்ல.
//ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையில் ஈடுபட்டதாக பில் செய்வது என்னளவில் ethically wrong!\\
என்ன ஒரெ வயித்தெரிச்சல்லா?
//ஆமா சார்.\\
அன்டாசிட் மாத்திரை வாங்கி போடு
>>>>மற்றப்படிஉங்கள் இஷ்டப்படியே நீங்கள் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு என்ன நஷ்டம்?
யாருக்கும் நஷ்டமில்லை, அனைவருக்கும் லாபம்தான், அந்த ஞாயிற்றுக்கிழமை விடியும்வரை!
>>>>அது என்ன முதல் பிரதம மந்திரி? அதில் என்ன விசேஷம் வாழுகிறது?
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லமுடியும்? விசேஷங்களை அட்டவணையிடவா முடியும்? 200 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை வாங்கிய நாட்டிற்கு முதல் பிரதமர் என்பது விசேஷம்தான். உங்களுக்கு பிடித்த ஒரு தலைவருக்கு முதல் ஜனாதிபதி பதவி கிடைத்திருந்தால் இந்த கேள்வியை எப்படி மாற்றியிருப்பீர்கள்? Well, he didn't deserve it anyways!
>>>>அதில் எனக்கு அக்கறை இருப்பதால்தானே இத்தனையும் எழுதுகிறேன்.
இதையே ஏன் உங்களால் கோவில் குறித்த உதாரணத்திற்கு ஏற்றுகொள்ள முடியவில்லை? கோவில் நல்ல படியாக நடக்கவேண்டும் என்ற அக்கறை எனக்கும் உண்டு, ஆனால் ஜலதாரியில் அபிஷேகம் என்ற பெயரில் வீணாவது எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் கோவிலில் உள்ள உண்டியல் அனைத்தும் நீக்கவேண்டும் என்றோ அதை நீக்காத கோவில்களை மூடவேண்டுமென்றோ கூறினால் சிரிக்கமாட்டார்களா?
>>>>அதிலும் சொல்லி வைத்தற்போல ஒவ்வொரு சட்டசபை அல்லது பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள்...
அதனால் என்ன? முதல்நாள் இரங்கலுக்காக என்று ஒதுக்கிவிட்டால் பெரிய நஷ்டமில்லையே? அனாமத்தாக விரயமென்பது உங்கள் கருத்தாக இருக்கலாம், அரசியல் சம்பிரதாயமாக அவர்களுக்கு தெரியலாம். உங்கள் சம்பிரதாயத்தை மாற்றிக்கொள்ளாமல் அதை பாதுகாப்பதில் உங்களுக்கு எத்தனை உரிமையுள்ளதோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு.
>>>>இல்லாவிட்டால் 7, ரேஸ் கோர்ஸ் ரோடும் அம்போவாகியிருக்கும்.
இது சப்பைகட்டுதலில் எந்த வகை? அதுதான் எடுக்கவில்லையே? சஞ்சய் காந்திக்கும் எந்த மியூசியமும் அமைத்ததாக நினைவில்லை. அதனால் நாட்டின் முதல் பிரதமருக்கும், முதல் பெண் பிரதமருக்கும் ஒரு பத்து ஏக்கர் விட்டு கொடுப்பதில் எந்த தவறுமில்லை! அதை இப்போது அரசியலாக்கி குளிர்காய்வதைவிட பட்ஜட் பற்றி உருப்படியாக விவாதிக்கலாம்.
>>>>அதை வெற்றிகரமாக நடத்தியாகி விட்டது.
உங்கள் வெற்றியை மற்றவர்கள் சொல்லவேண்டுமென்று எங்கோ கேட்ட நினைவு.
>>>>அதை குறிப்பிட்டு இப்போது நான் கூறும் யோசனைகளை புறக்கணிப்பது உங்கள் இஷ்டம்.
ததாஸ்து!
நட்புடன்,
யு.எஸ்.தமிழன்
"சரி! கோவிலில் மூலவரும் உற்சவரும் மட்டுமே போதுமே? எதற்காக மற்ற சிற்பங்கள்? வீண்தானே? எதற்காக மண்டபங்கள்? எதற்காக வானுயர்ந்த கோபுரங்கள்?"
தம்பி, கோயில் என்ன அரசா கட்டி கொடுக்குது, இப்ப அரசு கோயில், சாமி சிலை எல்லாம் உடைக்குது,
ரிசென்டா பேப்பரெ படிக்கலியொ?
நாங்க சொல்றது அரசு 'மக்கள் வரி பணத்துல' வீன் செலவு பன்ன கூடாதுன்னு. நீ தப்பா புரிஞ்சிகினியா?
சொந்த பணத்துல என்ன வெனா பன்னிகோ. நாங்க கேக்க மாட்டொம். ஆனா மக்கள் வரி பனத்துல இந்த வெளாடெல்லாம் வேனாம்.
vajra,
கண்ணியமாக நடந்துவந்த விவாதத்தில் உங்களின் கூறுகெட்டதனமான பின்னூட்டம் தேவையா? ஏன் இங்கு திராவிடம் எல்லாம் வரவேண்டும். யாரையாவது தூண்டிவிடும் நோக்கமிருந்தால், sorry pal, I am not your subject!
கண்ணியமாக கேள்வியை அடுக்குங்கள் விவாதிப்போம், இல்லையேல், பை!
யு.எஸ்.தமிழன்
U.S thamizkudimagan said:
"சில விஷயங்களை ஆராயக்கூடாது"
unga logic sagikala
//உங்களுக்கு பிடித்த ஒரு தலைவருக்கு முதல் ஜனாதிபதி பதவி கிடைத்திருந்தால் இந்த கேள்வியை எப்படி மாற்றியிருப்பீர்கள்? Well, he didn't deserve it anyways!//
ஜனாதிபதி பதவி தருவது வேறு, அந்த தலைவர் பதவியில் இருக்கும்போது இறந்தால் அரசு அவருக்களித்த வீட்டை அவருக்கே மியூசியமாக்குவது வேறு. அதுவும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக முதல் பெண் பிரதம மந்திரி? அதற்காக பத்து ஏக்கரா, அதுவும் தில்லியில் மத்திய பாகத்தில். அது பரவாயில்லையாம். என்ன வாதம்?
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் செலவாகும் சட்டசபை தொடருக்கு ஒரு நாள் வெத்தாக விடுமுறை விடுவது உங்களுக்கு பரவாயில்லையா? அப்புறம் என்ன கூறுவது.
விடுமுறைகளை ரெஸ்ட்ரிக்டட் கேட்டகரிக்கு போடும் ஆலோசனை பற்றி ஒன்றும் கூறவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதையே ஏன் உங்களால் கோவில் குறித்த உதாரணத்திற்கு ஏற்றுகொள்ள முடியவில்லை? கோவில் நல்ல படியாக நடக்கவேண்டும் என்ற அக்கறை எனக்கும் உண்டு, ஆனால் ஜலதாரியில் அபிஷேகம் என்ற பெயரில் வீணாவது எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் கோவிலில் உள்ள உண்டியல் அனைத்தும் நீக்கவேண்டும் என்றோ அதை நீக்காத கோவில்களை மூடவேண்டுமென்றோ கூறினால் சிரிக்கமாட்டார்களா? //
அரசுபணம் விரயமாவதை கண்டிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.இன்னொரு விரயத்தை காட்டி இதை நியாயப்படுத்த முடியாது.முட்டாள்தனமாக பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடித்தால் வரிகட்டும் பொதுசனம் கேட்கத்தான் செய்வான்.உங்களுக்கு கோயில் விரயத்தை தடுக்கவேண்டுமானால் அதற்கு பதிவு போடுங்கள், ஊர்வலம் போங்கள்.யார் வேண்டாம் என்ரார்கள்?
//அதனால் என்ன? முதல்நாள் இரங்கலுக்காக என்று ஒதுக்கிவிட்டால் பெரிய நஷ்டமில்லையே? அனாமத்தாக விரயமென்பது உங்கள் கருத்தாக இருக்கலாம், அரசியல் சம்பிரதாயமாக அவர்களுக்கு தெரியலாம். உங்கள் சம்பிரதாயத்தை மாற்றிக்கொள்ளாமல் அதை பாதுகாப்பதில் உங்களுக்கு எத்தனை உரிமையுள்ளதோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு.//
பலகோடி ரூபாய் வீணாவ்து பெரிய நஷ்டமில்லையா?வரிகட்டும் குடிமகன் முட்டாள்தனமான அரசு சம்பிரதாயத்தை கேள்வி கேட்கத்தான் செய்வான்.இது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம்.மக்கள் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.சம்பிரதாயம், மண்னாங்கட்டி என்று சொல்லி அரசு தப்ப முடியாது.
//இது சப்பைகட்டுதலில் எந்த வகை? அதுதான் எடுக்கவில்லையே? சஞ்சய் காந்திக்கும் எந்த மியூசியமும் அமைத்ததாக நினைவில்லை. அதனால் நாட்டின் முதல் பிரதமருக்கும், முதல் பெண் பிரதமருக்கும் ஒரு பத்து ஏக்கர் விட்டு கொடுப்பதில் எந்த தவறுமில்லை! அதை இப்போது அரசியலாக்கி குளிர்காய்வதைவிட பட்ஜட் பற்றி உருப்படியாக விவாதிக்கலாம்//
அது வெறும் 10 ஏக்கர் விட்டுகொடுப்பது அல்ல. சக்தி ஸ்தல் என்ற இந்திரா சமாதிக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மக்களுக்கு சோற்றுக்கில்லாமல் சாகிறபோது இந்த மாதிரி வீணடித்துக்கொண்டிருந்தால் வயிறெறியும் மக்கள் கேள்வி கேட்காமலா இருப்பார்கள்?இது என்ன இந்திராகாந்தி அப்ப வீட்டு காசா எடுத்து எறிய?மக்கள் பணம்.
வஜ்ரா அவர்கள் ஒன்றும் தரம் கெட்டெல்லாம் பின்னூட்டமிடவில்லையே. உண்மையைத்தான் கூறுகிறார். அதுவும் அவர் இஸ்ரேலிலேயே இருப்பவர்.
இஸ்ரேலிய முதல் ஜனாதிபதியின் சொந்த வீட்டைத்தான் மியூசியமாக்கி உள்ளார்கள் என்பதுதான் இங்கு மிக்கியமான செய்தி.
அதே போல பைபிள் பழைய ஏற்பாட்டில் வரும் அரசர் தாவூதுக்கு குறைவில்லாத வகையில் இஸ்ரவேலர்களின் முதல் பிரதம மந்திரியாக இருந்த டேவிட் பென் குரியனை விடவா ஒரு தலைவர் இருக்க முடியும்? அவர் கூட பதவி விலகியதும் ஒரு சாதாரண கிப்புட்ஸ் வீட்டிற்குத்தான் சென்றார் என படித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
>>>>தரம் கெட்டெல்லாம் பின்னூட்டமிடவில்லையே.
மன்னிக்கவும்! தூங்குபவரைப்போல நடிப்பவரை எழுப்பும் திறனை நான் பெறவில்லை. பின்னூட்டத்தை முழுதும் படிக்கவும் and sorry I cannot stoop to those levels.
>>>>இஸ்ரேலிய முதல் ஜனாதிபதியின்
இஸ்ரேலை உதாரணம் கூறியது அங்கு நம் நாட்டைவிடவும் விடுமுறை தினங்கள் அதிகமென்ற காரணத்தினால்தான். இஸ்ரேலில்தான் உலகிலேயே அதிகமான தேசிய விடுமுறைகள் என்று நினைக்கிறேன்.
இஸ்ரேல் ஜனாதிபதி குறித்த உங்கள் கேள்விக்கு உங்கள் பதிலையே திரும்பச்சொல்கிறேன்... "நாம் இந்தியாவைப் பற்றி கவலைப்படுவோம்."
>>>>ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் செலவாகும் சட்டசபை...
எதிர்கட்சி என்ற பெயரில் செய்த அடாவடிகளால் நாடாளுமன்ற (/சட்டமன்ற) நடவடிக்கைகள் எத்தனை நாட்கள் தடைப்பட்டன என்ற கணக்கு இருக்கிறதா? So again, in the grand scale of things, ஒரு நாள் அனுதாபம் அனுசரிப்பதால் எந்த குடியும் மூழ்கிவிடாது!
>>>>விடுமுறைகளை ரெஸ்ட்ரிக்டட் கேட்டகரிக்கு போடும் ஆலோசனை பற்றி ஒன்றும் கூறவில்லையே.
காரணம் உங்கள் வாதம் "சம்பந்தப்பட்ட மத சம்பந்தமில்லாதவர்கள் அவற்றை எடுக்க தடை செய்ய வேண்டும்." என்பது அபத்தமாக இருந்ததால்.
அதில் பல சமுதாய பிரச்சனைகள் இருப்பதால். நான் இந்துவாக இருந்து இஸ்லாமிய பண்டிகையை கொண்டாடக்கூடாது என்று அரசாங்கம் கூறுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நான் முடிவெடுக்க வேண்டுமே ஒழிய அரசாங்கமல்ல!
>>>>இன்னொரு விரயத்தை காட்டி இதை நியாயப்படுத்த முடியாது.
விரயம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி! ஒருவருக்கு விரயமாகப்படுவது மற்றொருவருக்கு சம்பிரதாயமாக படலாம் என்பதை எடுத்துக்காட்டவே இந்த உதாரணம் பயன்படுத்தப்பட்டது.
மேலும் நீங்களும் நண்பர்களும் கோடி கோடி என்று கூறுவது எந்த கணக்கில் என்று புரியவில்லை. என்னைப்பொருத்த வரை ஒரு நாட்டுத்தலைவருக்காக மெமோரியல் அமைப்பதற்கு சில கோடிகள் செலவழித்தது பெரிய குற்றமில்லை அது நேரு குடும்பமாக இருந்தாலும் சரி வாஜ்பாயி குடும்பமாக இருந்தாலும் சரி!
நட்புடன்,
யு.எஸ்.தமிழன்
//விரயம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி! ஒருவருக்கு விரயமாகப்படுவது மற்றொருவருக்கு சம்பிரதாயமாக படலாம் என்பதை எடுத்துக்காட்டவே இந்த உதாரணம் பயன்படுத்தப்பட்டது//
உதாரணத்துக்கு நன்றி.மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்வதை சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டவே அந்த உதாரணத்தை மறுக்க நேரிட்டது.
//மேலும் நீங்களும் நண்பர்களும் கோடி கோடி என்று கூறுவது எந்த கணக்கில் என்று புரியவில்லை//
பாராளுமன்றம் ஒருநாள் இயங்க ஆகும் செலவு பற்றிய புள்ளீவிவரங்கள் அரசால் வெளியிடப்படுகின்றன.அதன் அடிப்படையிலேயே டோண்டு அந்த தகவலை தெரிவித்தார்
//என்னைப்பொருத்த வரை ஒரு நாட்டுத்தலைவருக்காக மெமோரியல் அமைப்பதற்கு சில கோடிகள் செலவழித்தது பெரிய குற்றமில்லை அது நேரு குடும்பமாக இருந்தாலும் சரி வாஜ்பாயி குடும்பமாக இருந்தாலும் சரி!//
சோறுதண்ணி இன்றி கும்பி எரிந்து குடல்கருகி சாகும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் தலைவர்களின் ஈகோவுக்கு செலவிடப்படுவது நாட்டுமக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது எனது மற்றும் டோண்டுவின் கருத்து.பசியால் துடித்து எவனோ எங்கோ சாகட்டும் அதற்கு செலவிடுவதை விட இந்திராகாந்திக்கு மணிமண்டபம் கட்டுவது தான் முக்கியம் என்று எங்களால் கருத இயலாது.
//மன்னிக்கவும்! தூங்குபவரைப்போல நடிப்பவரை எழுப்பும் திறனை நான் பெறவில்லை.//
அதே போல தூங்குவது போல நடிக்கும் உங்களையும் எழுப்ப எனக்கு நேரம் இல்லை.
சட்டசபை நடவடிக்கைகளை தடை செய்யும் எல்லா செயல்பாடுகளுமே கண்டிக்கப்பட வேண்டியவையே. இதில் கட்சி வேறுபாடு ஒன்றுமே இல்லை என நான் ஏற்கனவே கூறியாகி விட்டது.
இஸ்ரேலில் தேசீய விடுமுறைகள இருந்தாலும் அதனால் அரசு ஒன்றும் ஸ்தம்பித்து போவதில்லை நம்மூர் மாதிரி. இஸ்ரேலை பார்த்து கற்று கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன. ஆகவேதான் இஸ்ரேலை பற்றியும் நீங்கள் குறிப்பிட்டதும் மேலே பேசினேன்.
எந்த வேறு கட்சி மந்திரி இறந்ததும் அரசு அவருக்கு அளித்த பிரும்மாண்டமான வீட்டை நினைவாலயமாக்கினார்களா என்பதை கூகளிட்டு பாருங்களேன். சொன்னால் அதையும் கண்டிக்க என்ன தடை.
இந்த அழகில் சஞ்சய் காந்திக்கு ஒரு நினைவிடமும் வைக்கவில்லை என்று வேறு புலம்பல். ஏன், இன்னும் அவரை எரியூட்டிய இடமும் தில்லியில் தனியாக பராமரிக்கத்தானே படுகிறது? அது எவ்வளவு நிலம் எடுத்து கொள்கிறது என்பதை அறிவீர்களா?
சஞ்சய் காந்தி அப்படி என்ன ஐயா செய்து விட்டார், அவசர நிலை அத்துமீறல்கள் தவிர? அவர் இறந்தபோது மத்திய அரசு ராணுவ மரியாதை தரும் அளவுக்கு போய் விட்டது. முப்படைத் தலைவர்களும் சவப்பெட்டி அருகே வந்து சல்யூட் வைத்தனர். அது எவ்வகையில் செய்யலாயிற்று என கேட்டபோது அசடு வழிந்து ஏதோ சப்பை கட்டு கட்டினர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
கண்ணியமாக நடந்துவந்த விவாதத்தில் உங்களின் கூறுகெட்டதனமான பின்னூட்டம் தேவையா? ஏன் இங்கு திராவிடம் எல்லாம் வரவேண்டும். யாரையாவது தூண்டிவிடும் நோக்கமிருந்தால், sorry pal, I am not your subject!
//
வரிப்பணம் வீணாகிறது என்பதற்க்காக வரிகட்டாமல் இருக்கவேண்டியது தானே இல்லை எங்கே வரியை ஒழுங்காகச் செலவு செய்கிறார்களோ அந்த நாட்டுக்குப் போய் இருக்கவேண்டியது தானே என்று தர்க்க வாதம் செய்த சிகாமணி நீங்கள் தானா ? அதில் இல்லாத கூறு கெட்டத்தனம் ஒன்றும் என் பின்னூட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுடன் பேசுவதனால் எனக்கு ஒரு பைசா பிரயோசனம் இல்லை. என் பணத்தை வைத்து வெட்டிச்செலவு செய்யும் ஒரு feudal lord குடும்பத்தைக் கேள்வி கேட்பதற்கு இந்தியத் திருநாட்டில் பிறந்த எனக்கும் டோண்டுவுக்கும் இன்ன பிற மனிதர்களுக்கும் உரிமை உண்டு. அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று வந்து சப்பை கட்டு கட்டும் சில உயிரினங்களைப் பார்த்துத்தான் எனக்கு ஒமட்டிக் கொண்டு வந்தது. இன்னும் வருகிறது.
"ஒரு நாட்டுத்தலைவருக்காக மெமோரியல் அமைப்பதற்கு சில கோடிகள் செலவழித்தது பெரிய குற்றமில்லை அது நேரு குடும்பமாக இருந்தாலும் சரி வாஜ்பாயி குடும்பமாக இருந்தாலும் சரி!"
இங்க இருந்து வெளிநாட்டுக்கு போன செந்தேறிகள் எல்லாம் இந்தியா பத்தி பேச கூடாது. உனக்கு உன் தலைவன் செத்து போனா சமாதி கட்ட உன் பணத்தை கொடு, அதுக்கு மத்தவன் பணத்தை கேட்கவோ செலவு பன்னவோ யாருக்கும் உரிமை கிடையாது.
உ.எஸ். தமிழா, நீ தமிழா?
//இங்க இருந்து வெளிநாட்டுக்கு போன செந்தேறிகள் எல்லாம் இந்தியா பத்தி பேச கூடாது. உனக்கு உன் தலைவன் செத்து போனா சமாதி கட்ட உன் பணத்தை கொடு, அதுக்கு மத்தவன் பணத்தை கேட்கவோ செலவு பன்னவோ யாருக்கும் உரிமை கிடையாது.//
தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே. இங்கு கூட பேச்சு முக்கியமாக இருக்கும் அரசுக் கட்டிடங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு ஆக்கிரமித்துக் கொண்டு போவது பற்றித்தான்.
மற்றப்படி அமெரிக்கத் தமிழர் அமெரிக்கா சென்றாலும் தமிழ் உணர்வுடன் இருந்து தமிழ் பின்னூட்டம் இடுவது பாராட்டத் தக்கதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆமாம் யு.எஸ் தமிழன் நீங்க சொல்றது கரெக்ட். என்னோட மெமொரியல் கட்ட கலெக்சன் பன்றொம். நீங்க ஒரு $.1000 நன்கோடை கொடுத்த நல்லா இருக்கும். நீங்க கொடுக்கலனா இங்க கட்டின சப்பை எல்லாம் வீனாயிரும்.
Thamizhmagan
Naa USTamizhan comment pathi pesavaralai, its his opinion and Mr.Dondu's opinion he is putting forward. You cant say or have no rights to say that indians in foreign cant speak about india. (Dont generalize when you spot on some one) Everyone respects their opinion, hope you make your opinion in modest way.
UKThamizhan
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி யூகே தமிழன் அவர்களே. நீங்கள் கூறியதைத்தான் நானும் கூறியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,
பெங்களூரிலுள்ள ஒரு மிக மிகப் பெரிய அரசாங்க புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சஞ்சய் காந்தியின் பெயரை வைத்துள்ளார்கள்.
யார் இந்த சஞ்சய் காந்தி? இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தவரா? இல்லை இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற ஏதேனும் செய்தாரா? இல்லை மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதேனும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது இந்திய சமூகத்திற்கு ஏதேனும் செய்தாரா? இல்லை இந்திய அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினாரா? குறைந்தது எப்படியாவது பிழைத்தால்போதும் என நினைக்கும் மார்க்ஸின் கள்ளக்காதலிக்குப் பிறந்த கம்யூனலிஸம் பேசும் நடிகரா? அல்லது உலகின் மிகச்சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாரிசாய், "என்க்கு டமில் உயிர்போன்ரது" என்று அறைகூவும் தளபதியா?
இல்லாவிட்டால், இந்த மருத்துவமனைக்குப் பெயர் வைக்க மேலே நான் சொன்ன கேள்விகளில் சுட்டப்பட்ட அத்தனை துறைகளில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதித்த இந்தியர் யாருமே இல்லையா?
யு எஸ்ஸிலேயிருந்து பெங்களூர் வந்து வாழ்ந்துகொண்டிருக்கும்,
பெங்களூர் American
//யார் இந்த சஞ்சய் காந்தி?//
1. நேரு அவர்களின் பேரன், இந்திரா காந்தியின் மகன்.
2. அவசர நிலை சமயத்தில் கையில் அகப்பட்டவருக்கெல்லா வாஸெக்டமி செய்வித்த உத்தமர். சாதாரண ஜே வாக்கிங் செய்தால் நியூசன்ஸ் செக்ஷனில் அபராதம் போட்டு அனுப்ப வேண்டியவர்களும் அந்த அகப்பட்டவர் லிஸ்டில் அடங்குவர்.
3. இந்திரா காந்தி 20 அம்ச திட்டம் கொண்டு வர, இவர் 4 அம்ச திட்டம் கொண்டு வந்தார். அந்த இரு திட்டங்களையும் சேர்த்து மக்கள் 420-திட்டம் என நையாண்டி செய்தனர்.
4. தான் இறந்தது போதாது என, தன்னுடன் சக்ஸேனா என்னும் சகவிமானியையும் அழைத்து அவர் சாகவும் காரணமாக இருந்தவர்.
5. இந்த அழகில் சஞ்சய் காந்தி நினைவு தபால்தலை வேறு வெளியிட்டனர்.
பார்க்க http://www.indiapicks.com/stamps/Gandhi_Nehru/Nehru_Main.htm
6. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோ அவர்கள் துக்ளக்கில் இரு பக்கங்களில் சஞ்சயுடன் கூட இறந்த சக்ஸேனா ஸ்டாம்ப் வெளியிட்டார்.
6. விட்டால் சோனியா காந்தி மற்றும் க்வாட்ரோக்கிக்குக் கூட ஸ்டாம்ப் போட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விடுமுறை அளிப்பதற்கு தற்போது சில கம்பெனிகளில் ஒரு அருமையான திட்டம் கொண்டுவந்துள்ளார்கள். அதாவது சில நாட்களை கட்டாய விடுமுறை நாளாக (உதாரணம் இந்திய சுதந்திர தினம்) வைத்துவிட்டு மற்ற நாட்களை நெகிழ்ச்சியான விடுமுறைகளாக வைத்துவிடுவார்கள். அதாவது ஒரு தொழிலாளி அந்த நாளில் விடுப்பு எடுக்க விரும்பினால் அதற்கு விடுப்பு விண்ணப்பம் செய்து விடுமுறை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது பொதுவான ஹாலிடேயாகத்தான் கருதப்படும். உதாரணமாக என்னோடு வேலை பார்க்கும் சிவசுப்பிரமணிய பார்கவா ஷிவராத்திரியை விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம். என் ஆருயிர் நண்பர் முஹம்மத் ஜலீல் ஈத் அன்று விடுப்பில் செல்லலாம். நான் க்ருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று அலுவலகத்திற்கு வந்து கீதை காட்டிய கர்ம யோகம் நிகழ்த்தலாம்.
இதனால், ஒரு நாளை கொண்டாட அவசியம் இல்லாதவர்களும், விருப்பம் இல்லாதவர்களும் அவர்கள்பாட்டு வந்து வேலை பார்த்துக்கொள்ளலாம். அருமையான திட்டம் இது.
முன்னேயே இந்த விடுப்பு நாட்களை அறிவித்துவிட்டால் சரியாக பணிகளை திட்டமிடுதலும் பாதிப்படையாது.
இதனால் விடுப்பை அனுபவிக்க வழியில்லாதவர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கிறார்கள். கம்பெனிக்கும் லாபம்.
என்னைக் கேட்டால் சனி ஞாயிற்று கிழமைகளைக்கூட இந்த லிஸ்ட்டில் சேர்த்து விடலாம். இதை அரசாங்கத்திற்கும் கொண்டு வரலாம்.
ஆனால், உடனேயே சிகப்புத் துணியை குண்டாந்தடியில் சுற்றிக்கொண்டு அலுவலகத்திற்கு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டுவிடுவார்கள். மற்ற நாட்களில் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து என்ன வேலை செய்தார்களோ, அதே வேலையை வெளியே உட்கார்ந்துகொண்டு தொடர்வார்கள். அதாவது வெட்டி அரசியல் பேசுவது, சாதி காழ்ப்புணர்வை காட்டுவது, யார் யாரைவிட அதிகம் லஞ்சம் வாங்குகிறான் என்பதை நோட்டமிடுவது.........
--- பெங்களூர் American
//சில நாட்களை கட்டாய விடுமுறை நாளாக (உதாரணம் இந்திய சுதந்திர தினம்) வைத்துவிட்டு மற்ற நாட்களை நெகிழ்ச்சியான விடுமுறைகளாக வைத்துவிடுவார்கள்.//
இதையேதானே நான் இப்பதிவிலேயே கூறியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விட்டால் சோனியா காந்தி மற்றும் க்வாட்ரோக்கிக்குக் கூட ஸ்டாம்ப் போட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே.
இந்தியாவில இருக்கிற அத்தனை க்ரிமினல் வேலையிலயும் எங்க சொந்தக்காரங்கதான் இருக்காங்க. குண்டு வைப்பதில இருந்து, இந்திய சினிமாவை ஆட்டிப்படைப்பது, இன்கம்டாக்ஸ் மட்டுமே வெறும் முப்பத்தைந்தாயிரம் கோடி ரூபாய் கட்டாமல் இருப்பது, கள்ளக் கடத்தல் பண்ணுவது, அரசியல் கட்சிகளால் ஸெக்யூலரிஸம் வளர ஆதரிக்கப்படுவது என்று நாங்கதான் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஏதோ, எங்க இனத்துக்கு அவங்க கேட்டதைப் பண்னலைன்னு வேற வழியில்லாம என்னை மாட்டிவுட்டுட்டாங்க. ஆனா என்ன இருந்தாலும் அவுங்க என்னோட இனம். ஒண்ணும் பண்ண முடியாது. பண்ண நெனைச்சாலே சுவனம் இல்லைன்னு ஆயிப்புடும். ஆனா, இந்த நங்கநல்லூர்காரர் என்னை கவுத்திட்டாரே. இதைத்தான் தாங்க முடியல.
முன்னாடியே எனக்கு இந்த ஸ்டாம்ப் போடுகிற ஐடியாவ சொல்லிருக்கக்கூடாதா? ஸ்டாம்ப் பேப்பருக்குப் பதிலாய் இதைப் போட்டிருந்தால் இன்னேரம் ஜாலியாய் இருந்திருப்பேன். ஏதேனும் ஒரு நாட்டில் என்னை கைது செய்திருந்தாலும் உடனேயே ஸி பி ஐ வந்து விடுதலை செய்திருக்கும். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
அப்துல் கரீம் டெல்கி
இதையேதானே நான் இப்பதிவிலேயே கூறியுள்ளேன்.
Prophet Dondu Raghavan (ஸல்)
மூன்றாவது? யுத்த மெமோரியல்?
அதெல்லாம் வெள்ளைக்காரன் தனக்காகப்போராடிய இந்திய வீரர்களுக்காகக் கட்டியது. நமது இந்திய அரசாங்கம் இதுவரை உருப்படியாய் பாகிஸ்தான் சீன போர்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு எந்த மெமோரியலும் கட்டவில்லை.
ஏதோ அவசரத்திற்கு துப்பாக்கியை திருப்பிவைத்து அதில் தொப்பியை மாட்டி கேட்வே ஆஃப் இந்தியாவில் வைத்ததோடு சரி.
இவர்களுக்கு செலவு செய்ய இவர்கள் என்ன நேரு பரம்பரையில் பிறந்தவர்களா?
இங்கிலாந்து நாட்டின் அனைத்து இளவரசர்களும் ராணுவத்தில் சேர்ந்து ஏதேனும் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாதான் மஹாராஜாக்களால் ஆளப்படும் நாடாயிற்றே. எலெக்ஷன் நேரத்தில் அமேதியில் மும்மாரி பொழிந்ததா என்று கேட்பதோடு சரி.
அதுவுமில்லாமல் இந்த நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள் எல்லாம் நிஜமாகவே நாட்டிற்குச் சொந்தமானவையும் இல்லை. எனவே, வரும்படியும் தராது. ஏனென்றால் எவை எல்லாவற்றையும் நிர்வகிப்பது ஒரு பொதுவான ஃபௌன்டேஷன். இந்த ஃபௌன்டேஷனை கட்டுப்படுத்தும் பதவிகளில் இந்தக் குடும்பத்தினர் மட்டுமே இருக்க முடியும். இதுதான் இவர்கள் தங்கள் சொத்தை நாட்டிற்கு அர்ப்பணித்திருக்கும் லக்ஷணம்.
அப்புறம் ம்யூஸியம் பற்றிச் சொன்னீர்கள். இந்த ம்யூஸியத்திலுள்ள தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் பற்றி சொன்னீர்கள். மாமா பல மாமிகளுக்கு எழுதிய கடிதங்களும் உள்ளன. நேதாஜி பற்றிய பல விஷயங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் பார்க்க அந்த குடும்பத்தினர் அனுமதி வேண்டும். இதுதான் இந்த ம்யூஸியம் நடக்கும் லக்ஷணம்.
நேருவின் பெருமையைச் சொல்ல இந்த ம்யூஸியங்கள் எல்லாம் தேவையில்லை. ஸ்வதந்திரம் பெற்ற பத்தாண்டுகளுக்குள்ளாக பல பெரிய அணைக்கட்டுக்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஐ ஐ டிக்கள், அறிவியற் கூடங்கள் என்று அவரே தனக்கு ம்யூஸியங்கள் கட்டியுள்ளார். இவை அன்னாரின் பெயரை காலம் முழுதும் காத்து நிற்கும்.
தன்னுடைய குடும்பத்தார் மட்டுமே நாட்டை ஆள வழிசெய்தது, உலக அரங்கில் தான் நல்ல பெயர் எடுக்க நாட்டை எப்படி வேண்டுமானாலும் கெடுத்தது, ஜின்னாவிற்குப் போட்டியாக வக்கீல் தொழிலிருந்து நாட்டின் ஆட்சிவரை வெறும் போட்டிக்காகவே நடத்திவந்தது என்பது போன்றவை மற்றவர்களுக்குப் பாடங்கள்.
--- பெங்களூர் American
Nice point. UK thamizan
"You cant say or have no rights to say that indians in foreign cant speak about india."
same thing here:
you cannot say or have no rights to say to me i cannot say something. D :-)
//thamizmagan
same thing here:
you cannot say or have no rights to say to me i cannot say something. D :-) //
I hope you got it wrong thamizmagan
,I meant to say do not generalize when u dont agree with someone's view or point. Hope u got my point, i didnt meant to point you but only not to generalize.
UKThamizhan
"Hope u got my point, i didnt meant to point you but only not to generalize.
UKThamizhan"
I get it. The only gripe is being an NRI one doesn't pay taxes in India. While not paying taxes here, he should have no moral right to talk about spending public tax money that too for dubious purposes.
Got the Drift! UKthamizan
I stand by my comment
"உனக்கு உன் தலைவன் செத்து போனா சமாதி கட்ட உன் பணத்தை கொடு, அதுக்கு மத்தவன் பணத்தை கேட்கவோ செலவு பன்னவோ யாருக்கும் உரிமை கிடையாது."
//The only gripe is being an NRI one doesn't pay taxes in India. While not paying taxes here, he should have no moral right to talk about spending public tax money that too for dubious purposes.
//
Thru FX(Foreign exchange) NRI's too serve to their home country, i think you missed that point, so we do have moral rights 100% to talk about our HOME country.
UKThamizhan
Ah! You are stubborn.
You can choose to serve through Forex or not. But we poor Indians have no choice but pay tax, it is compulsory for us. It is not compulsory for NRI to send X amount of dollars to India every month, but we have to pay taxes. So NRI's pls shut up when it comes to spending OUR tax money. If we don't pay taxes we face prison, when we pay with such difficulty it is our responsibility to see that it is better spent.
NRI's moral rights on spending our tax money is therefore 0%.
The discussion ends here. Thanks!
Hi
Again i say you have NO RIGHTS to say shut up, everyone have their views to say, i never said any word about that with tax money to spend for leader or statues thing, You are diverting topic, i replied to your first post saying you cannot generalize about NRI's when you dont like some NRI views & thats FULLSTOP on my view. I didnt talk about topic of spending tax money and if you read my comments clearly you will know i havent touched that topic. (On that i stand its not worth spending for any leaders like statues etc - you too have the same view on this.) There is no more talk about it except NRI have rights to speak about their HOME COUNTRY India.
Still every INDIAN have rights to say his view about his country. No one dare to say you cant speak about it.
UKThamizhan
UKthamilan,
who are you talking to
The discussion ended already!
iam responding to tamilmagan. I think Mr.Dondu (blog owner) can say to close discussion or not, not tamilmagan to close the discussion.
NRI's don't have voting rights. Why aren't they allowed to vote?
b'cos they should not be allowed to decide things here while sitting comfortably in nicer country. NRI's are not allowed to vote!
Hello damilan. There was a move to allow dual citizenship. In that case NRI's need not give up Indian citizenship.
And NRI's do play an important role in keeping our forex reserves at a comfortable level. Let us not be ungrateful and forget it.
Regards,
Dondu N.Raghavan
//
Hello damilan. There was a move to allow dual citizenship. In that case NRI's need not give up Indian citizenship.
//
Dondu sir,
Good to see your comment,
Dual Citizenship papers been passed and few of my friends here has got it.
//
NRI's don't have voting rights. Why aren't they allowed to vote?
b'cos they should not be allowed to decide things here while sitting comfortably in nicer country. NRI's are not allowed to vote!//
damilan, iam not sure about this clause, NRI's can vote, iam hearing for the first time from you. (if NRI surrender their indian passport and get citizenship in other country, they lose voting rights as they become other country citizen). Still for Dual Citizens right to vote bill is to be passed in next session (parliament).
If you have been in foreign country and worked there you will know the how tough it will be (i dont know whether you had been or not). Its not a heaven (nicer country) but still only for the reason of Foreign Exchange (money conversion) many IT guys work outside India facing all odd consequences.
Cheers
UKThamizhan
Post a Comment