நண்பர் மா.சிவகுமாரின் அன்பான அழைப்பை ஏற்கிறேன். அதற்கு முன்னரே நண்பர் நாட்டாமை என்னை சில கேள்விகள் கேட்டிருந்தார். அவற்றுக்கு பதிலாக நான் ஒரு தனி பதிவே போட்டேன். அதற்கு பிறகு பல பதிவுகள் என்னை பற்றி நான் சுதாரித்து அறிந்து கொண்டதை மையமாக வைத்து போட்டிருக்கிறேன்.
இப்போது எனது கிறுக்கு குணங்கள் பற்றி எழுத ஆரம்பிக்கிறேன்.
1. அச்சில் எது வந்தாலும் அதை படிப்பது என்ற எனது குணத்தால் எனது பல நண்பர்கள் என்னுடன் கூட வருவதையே தவிர்த்தனர். அதிலும் என் நண்பன் எம்.பி. சாரதிக்கு ஒரு அனுபவம். நானும் அவனும் திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் பேசிக் கொண்டே பீச் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, நான் திடீரென முரளி கஃபே எதிரில் ஒரு நடைபாதை புத்தகக் கடையில் நின்று விட, சாரதி மட்டும் நான் கூட வருவதாக நினைத்து கொண்டு பேசிக் கொண்டே சென்றிருந்திருக்கிறான். பக்கிங்காம் வாய்க்கால் அருகே திடீரென ஒரு அசாதாரண சூழ்நிலையை உணர்ந்திருக்கிறான். அதாவது எல்லோரும் அவனையே பார்ப்பது போன்ற நிலை. என்னிடம் கேட்கலாம் என நினைத்து திரும்பினால் நான் காணவில்லை. அதன் பிறகு அவன் என்னிடம் கோபித்து கொண்டு போய் வெகு நாள் காணவில்லை.
2. அதே நேரத்தில், இந்த கிறுக்கு குணமே சில சமயங்களில் சௌகரியமாகப் போனதும் நடந்திருக்கிறது. சமீபத்தில் பிப்ரவரி 1969-ல் நங்கநல்லூர் வீட்டிற்கு குடி புகுந்தோம். மாவரைப்பதற்காக மெஷினுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு எப்போதும் கும்பல் அதிகம். ஆகவே கையில் அமெரிக்க நூலகத்திலிருந்து எடுத்து வந்த ஒரு தலையணை சைஸ் நாவல். கியூவின் கடைசியில் போய் நிற்க, முதலாளி மெஷின் அருகிலிருந்தவர் என்னைப் பார்த்ததும் விரைந்து வந்து என் கையில் இருந்த பாத்திரத்தை எடுத்து சென்றார். அதை சில வயதான பாட்டிகள் ஆட்சேபிக்க அவ்ர் "இந்தா படிக்கிற பிள்ளை பாவம், கையிலே பாட புத்தகத்தோட வந்திருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பினா அங்கே போய் படிச்சுக்கும் இல்லையா" என்று அவர்களை அடக்க, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு என்னை நன்றாக படிக்குமாறு அறிவுரைகள் கூறினர். என் காது வரை சங்கடத்தால் உஷ்ணம் ஏறியது. அசடு வழிய பாத்திரத்தை மாவரைத்ததும் திரும்ப வாங்கி வீட்டுக்கு விரைந்தேன்.
3. அறுவை மன்னனின் படுத்தல்கள். பல அறுவை ஜோக்குகள், கதைகள் என்றெல்லாம் கூறி எல்லோரையும் பல ஆண்டுகளுக்கு படுத்தியிருக்கிறேன். என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர்.
4. பிறகு திடீரென என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வந்து என்னைத் திருத்தியது.
4. பிடிவாதம். மேலே 3 மற்றும் 4-ல் கூறப்பட்டவை அந்தந்தக் காலக் கட்டங்களில் தீவிரமாக அனுசரிக்கப்பட்டன. அறுவை என்றால் படு அறுவை, அவ்வளவு அறுவை. பிறகு அதன் நேர் எதிர் நிலையிலும் பிடிவாதமாக இருந்தேன். சில ஆசிரியர்களுக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டால் பிடிக்காது. நான் அவர்களிடம்தான் அதிகம் சந்தேகம் கேட்பேன். ஆகவே ஸ்கூல் நாட்களில் பெஞ்சு மேல் நின்றதோ அல்லது வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டதோ, அல்லது உதை வாங்கியதோ அல்லது எல்லாம் சேர்ந்தோ நடக்காத நாட்களை கையில் உள்ள விரல்களால் எண்ணிவிடலாம். ஆனால் அதே பிடிவாதம்தான் எனது முரட்டு வைத்தியங்களுக்கும் அடிப்படை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
5. ஞாபக சக்தி. இது என்னையே பலமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பற்றி ஏற்கனவே பதிவுகள் போட்டுள்ளேன். அதை விட என்னை ஆச்சரியப்பட வைத்தது ஹைப்பர் லிங்குகள் என்றால் மிகையாகாது.
6. மொழியார்வம். சாதாரணமாக பொறியாளர்களுக்கு மொழியறிவு கம்மி என்ற ரேஞ்சில் பேசுவார்கள். பல பொதுப்படுத்துதல்கள் போல இதுவும் முழு உண்மையல்லதான். இருப்பினும் இந்த எண்ணம் உலகெங்கும் பரவலாக உள்ளது. ஆகவே ஒரு பொறியாளராக இருந்து மொழிபெய்ர்ப்பு வேலைகளையும் பார்ப்பதென்றால் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆச்சரியம் தரும் விஷயம்தான். அதற்காகவே எனக்கு முதல் இண்ட்ர்வியூ கிடைத்து விடும். ஒரு முறை நல்ல வேலை செய்து அசத்தினால் அவர் ஏன் இன்னொரு சேவை அளிப்பவரிடம் போகப் போகிறார். ஆக இந்த கிறுக்கு குணமும் உதவியாகவே உள்ளது.
வேறு கிறுக்கு குணங்கள் என்னவென்று எழுதுவது. ஏற்கனவே அவற்றில் பல ஓவர்லேப் ஆகிவிட்டன. ஆகவே இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.
நான் அழைக்கும் 5 பேர்:
1. என்றென்றும் அன்புடன் பாலா
2. மதுசூதனன்
3. ம்யூஸ்
4. டி.பி.ஆர்.ஜோசஃப்
5. டாலர் செல்வன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
16 hours ago
14 comments:
3/5 எனக்கிருக்கிறது. எனக்கு கிறுக்கிருக்கிறது?
I want a man like you!
Namitha
"கிறுக்கு குணங்கள்" என்று கூறி உங்களையே நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் கூறிய அனைத்தும் கிறுக்குத்தனங்கள் போல எனக்கு தோன்றவில்லை.
3/5? அறுவையா? வினோத் துவாவா? சான்ஸே இல்லை.
ராஜாமணி அவர்களே, எனது கிறுக்கு குணங்கள் எல்லாவற்றுக்கும் அடிநாதமாக இருப்பது எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவதே ஆகும். அதைத்தான் 4-ஆம் இடத்தில் விளக்கியுள்ளேன்.
ஒரு முறை கற்பனையில் கார் லிஃப்ட் கொடுத்ததற்கு இவ்வளவு நன்றியா கற்பனை நமீதா அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"மீள்பதிவு புகழ்" டோண்டுவுக்கு ஜே.
அனானி ரசிகர் மன்றம் - டோண்டு பேரவை
மடிப்பாக்கம்,
தாம்பரம் குறுக்கு சந்து
எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவதே உங்கள் இயல்பா? You are just being yourself.
நமீதா விடும் ரீல்கள் சகிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறாளே. பட சான்ஸ் குறைந்து விட்டதோ? கற்பனை லிப்ட் எல்லாம் எதற்கு கொடுக்கிறீர்கள்? அவளுக்கில்லாத சரத்குமாரா?
//நமீதா விடும் ரீல்கள் சகிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறாளே.//
நீங்க வேற, அசின், ஷ்ரெயா, த்ரிஷால்லாம் காணல்லியேன்னு இருக்கேன். நாலு பேருக்கும் கற்பனையிலே லிஃப்ட் கொடுத்திருக்கேன்.
:)))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
எக்ஸ்சூஸ் மீ.
என்னை கூப்பிட்டீங்களா ?
sir kiruku thanam nu solli supuraana padhivu poututeenlae
அப்புறம் இதெல்லாம் கிறுக்கு தனம் இல்லை , உண்மையான கிறுக்கு தனம் னா என்னான்னு என் பக்கம் வந்து பாருங்க
சார் எத்தன பேர்தான் நம்மள கிறுக்கனாவறதுக்கு கூப்டுவீங்க?
மொதல்ல மா.சிவக்குமார், துளசி, இப்ப நீங்க... இன்னும் யார் யாரோ..
ஹூம்.. பாப்போம்.. மூனு நாளா ஊர்ல இல்லை.. திரும்பிவந்ததும் வேல பெண்டெடுக்குது... இனி திங்கள் கிழமைதான்..
முதல்ல என்னவெல்லாம் கிறுக்குத்தனம் எனக்குள்ள இருக்குன்னு லிஸ்ட் போடணுமே..
"ஜமைக்கா போலிஸ் said...
"மீள்பதிவு புகழ்" டோண்டுவுக்கு ஜே.
அனானி ரசிகர் மன்றம் - டோண்டு பேரவை
மடிப்பாக்கம்,
தாம்பரம் குறுக்கு சந்து "
வாங்க! வாங்க!
மடிப்பாக்கம் வந்து பாப் வுல்மர் விஷியமா விசாரனை பன்னரிங்களா?
ஐந்து குணங்களில் மூன்று எனக்கிருக்கிறது என்று குறிக்க நினைத்து, மூன்றின் கீழ் ஐந்து என்று போட நினைத்தேன், பரிக்ஷையில் நூத்துக்கு தொன்னூறு என்பது மாதிரி. இது ஐந்துக்கு மூன்று. ஐந்தும் மூன்றும் இல்லை.
எனிவே, அநிச்சமலருக்கு விருந்தோம்பும் தமிழர் நீங்கள். எனவே, எப்படியானாலும் உங்கள் பழைய பதிலைத்தான் இதற்கும் சொல்லப்போகிறீர்கள்.
////எனிவே, அநிச்சமலருக்கு விருந்தோம்பும் தமிழர் நீங்கள். எனவே, எப்படியானாலும் உங்கள் பழைய பதிலைத்தான் இதற்கும் சொல்லப்போகிறீர்கள்.///
வினோத் துவா உங்களை சரியாகத்தான் புரித்துவைத்துள்ளார் ஹி ஹி
//அதன் பிறகு அவன் என்னிடம் கோபித்து கொண்டு போய் வெகு நாள் காணவில்லை//
கிட்டத் தட்ட இதேபோல ஒரு அனுபவம் எனக்கும் உண்டு. அது ஒரு கனாக் காலம் :)
Post a Comment