அமோல் பாலேக்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும். மராட்டிய நடிகர். பார்ப்பதற்கு நம்ம அடுத்த வீட்டுப் பையன் போல இருப்பவர். சிட் சோர், ரஜனி கந்தா, சோட்டீ ஸீ பாத், கோல்மால் (நம்ம ரஜனி நடித்த தில்லுமுல்லு) ஆகிய படங்கள் மூலம் அகில இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். அதிலும் முக்கியமாக தில்லு முல்லுவில் நடித்த ரஜனியை விட கோல் மாலில் நடித்த அமோல் பாலேக்கர் அந்த பாத்திரத்துக்கு அதிக பொருத்தமாக இருந்தார் என்பது என் கருத்து.
ஆனால் நான் இங்கு பேசப்போவது அவர் நடித்து நம்ம ஊர்களில் அதிகப் பிரபலம் ஆகாத படமான ராம் நகரி. 1982-ல் வந்தது. அப்போது தில்லியில் வசித்து வந்தேன். இப்படத்தைப் பற்றி அப்போதைக்கு அறியாமலிருந்தேன். திடீரென 1986-ல் தொலைகாட்சியில் பார்த்தேன். அப்போது வீ.சி.ஆர். வாங்கிய புதிது. படங்களை பதிவு செய்யும் பழக்கம் உண்டு. ஆகவே இதையும் பதித்து வைத்தேன். பிறகு பலமுறை போட்டுப் பார்த்தேன். என் மனதை கவர்ந்தது அப்படம்.
முதலில் கதை சுருக்கம். ராம் நகரி பிறப்பால் நாவிதர். மராட்டியக் கலைவடிவமான தமாஷாவில் ஈடுபாடு உடையவர். திருமணம் ஆகும் வரை தாய் தந்தையருடன் வசித்து வந்த அவருக்கு திருமணத்திற்கு பிறகு தனி வீடு தேவைப்படுகிறது. தனது தமாஷா நாடகங்களால் அவருக்கு பல அறிமுகங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து ஒரு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறது. அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரியும் அவர் நாடகம் போடுவதற்காக லீவு எடுக்க கூறும் காரணங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.
பிறகு பல நிகழ்ச்சிகள். கோர்வையில்லாதது போல தோற்றம் தந்து, பிறகு யோசிக்கும்போது அவற்றின் காரண காரியங்கள் விளங்குகின்றன. மொத்தத்தில் கூற வேண்டுமென்றால், சாதாரணமாக ஒருவர் வாழ்க்கையில் வரும் மாறுதல்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டவர் குண நலன்களை பாதிக்கின்றன என்பதைப் பார்க்க இயலுகிறது.
முதலிலிருந்தே காட்சிகளை எடுத்து கொள்வோம். ராம் நகரி ஒரு வசனம் இல்லாது வெறுமனே நடிப்புடன் கூடிய காமெடி காட்சியை ஒரு சக நடிகருடன் நடத்துகிறார். ஒருவர் இன்னொருவருக்கு முடிவெட்டுவதாகக் காட்சி. அப்போது இருவருடைய முகபாவங்களும் சிரிப்பை வரவழைப்பதற்காகச் செய்யப்பட்டவை. கையில் ஆயுதம் ஒன்றுமில்லாமல் எல்லாமே பாவனையாக, ஒரு வித pantomome ஆகக் காட்டியிருப்பார். எல்லோரும் சிரிக்க பார்வையாளர்களில் ஒருவர் மட்டும் சிரிக்காமல் கோபப்படுவார். அடுத்த காட்சியில்தான் தெரிகிறது அவர் ராம் நகரியின் அப்பா என்று. "அதெப்படி நம்ம குலத்தொழிலை நீ கேலி செய்யலாயிற்று" என்று கோபப்படுவார். அப்போதுதான் கதாநாயகன் நாவிதர் சாதி என்று தெரியும். படமும் சீரியஸ் வகை எனப் புரிந்து போயிற்று.
ஆபீசில் லீவு எடுக்கச் செய்யும் கூத்தை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். பிறகு ராம் நகரியின் கல்யாணம் நடக்கும். அங்கு அவர் சாதிக்கான திருமண சடங்குகள் எல்லாம் சம்பிரமாகக் காட்டப்படுகின்றன. எதுவானால் என்ன, கல்யாணம் கல்யாணம்தானே. நாமும் அந்த உல்லாசத்தில் இழுக்கப்படுகிறோம். கல்யாணம் முடிந்ததும் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. புதுமண தம்பதிகளுக்கு ஏற்ப தனிமை கிட்டவில்லை. அதில் சில குழப்பங்கள். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வேடிக்கை ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம். அப்போதுதான் தனது டிராமா செயற்பாடுகளால் கிடைத்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறதையும் ஏற்கனவே குறிப்பிட்டேன். இங்கு ஒரு தமாஷ். 24 மணி நேர தண்ணீர் என்பது இது வரை அவருக்கோ அவர் மனைவியின் பிறந்த வீட்டினருக்கோ கிடைத்ததே இல்லை. அதுதான் சாக்கு என அவர் மனைவி முதல் நாளே வீட்டிலிருக்கும் அத்தனை துணிகளையும் தோய்த்து போடுகிறார். அதுவே ஒரு பெரிய புகாராகப் போய் விடுகிறது.
இடையில் தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம் நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம் நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவ மனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்.
ஒரு தமாஷா நாடகத்தில் அவருடன் உயர் சாதியை சேர்ந்த நடிகை கதாநாயகியாக நடிக்க, அந்த நடிகையின் கணவர் நாடகம் முடிந்ததும் தலைமை தாங்குபவரிடம் தனது மனைவியின் புராணம் பாடி ராம் நகரியை சாதி காரணமாக ஓரம் கட்ட செய்கிறார். அப்போதுதான் ராம் நகரிக்கு எல்லோரும் தன்னிடம் காரியம் ஆகும் வரை குழையடித்து விட்டு ஆனவுடன் சாதியைக் காரணம் காட்டி அலட்சியம் செய்கிறார்கள் என்பது அவருக்கு புரிகிறது. இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கே கோபம் வரும் போது ராம் நகரியின் கோபத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இம்மாதிரி காட்சிகள் துணுக்குகளாக வந்தாலும் சொல்ல வந்த செய்தி பார்வையாளர்களை அடைந்து விடுகிறது. அது என்ன செய்தி? சாதி பிரச்சினை தீர்ப்பதற்கு இன்னமும் உழைக்க வேண்டும் என்பதே அது. இந்தப் படம் பற்றி தொண்ணூறுகளில் எனது மராத்திய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ராம் நகரி என்னும் தமாஷா நாடகக் கலைஞன் உண்மையாகவே வாழ்ந்தவன் என்று சொன்னார். அதனால்தானோ என்னவோ திரைப்படத்தில் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல முயலவில்லை. ஒரு மாதிரி டிராவிலேயே அதை முடித்து விட்டார்கள். கடைசி காட்சியில் ராம் நகரி தனது மகனுடன் பேசும்போது தனது சாதியை மறக்க மற்றவர்கள் தன்னை அனுமதிக்கவேயில்லை என குறைபட்டு கொள்கிறார். மகனது தலைமுறையிலாவது நல்லது நடக்கும் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையுடன் நாம் திருப்தி பட்டு கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு இந்த முடிவு மன நிறவை அளிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்வது வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பது போல இல்லையே. என்ன செய்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
21 hours ago

14 comments:
Me too like Amol Palekar, but I am not aware of the movie cited here. Anyhow, I like Gol Mal.
Parthasarathi
தலைவா, நேர்மையான பதிவு, எங்களுடைய வாழ்துக்கள் பாராட்டுக்கள்.
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
Interesting. Never heard of Amol Palekar.
GK
அருமை. நல்ல அறிமுகம். 'சமீபத்தில்' என்ற வார்த்தை இடம்பெறவில்லையே !!!
நன்றி உண்மைத் தமிழன்.
நன்றி அனானி, சமீபத்தில் என்று கூற விட்டுப் போயிற்று. :))
//Never heard of Amol Palekar// சுத்தம்.
//I like Gol Mal.//
எனக்கும் பிடிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு ரசிகர் மன்றம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதை கிளிக் பண்ணாலும் நேரா என் இடத்துக்கே வருதே சாமி.. அம்புட்டு டெக்னிக்கல் டேலண்ட்டோடல்ல இருக்கானுக நம்ம பய புள்ளைக..//
டெக்னிகல் டேலண்டுமில்லை ஒரு மண்ணுமில்லை. அதர் ஆப்ஷனை உபயோகிச்சிருக்கான் தமிழ்மணத்தின் சாபக்கேடான போலி டோண்டு. தவறு உங்கள் பேருலேயும் இருக்கிறது. உங்கள் பதிவர் எண்ணை நான் கொடுத்திருப்பது போல டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிக்குள்ளே கொடுக்கோணும், அத்துடன் ஏதாவது ஒரு இமேஜையும் அப்லோட் செஞ்சு ப்ரொஃபைலிலே போட்டிருக்கோணும். அப்பத்தான் இந்த டோண்டு ராகவனின் பிரசித்தி பெற்ற எலிக்குட்டி சோதனைகள் 1 மற்றும் 2 நடத்தி பார்க்கலாம். என்னை நம்புங்க, இப்பக் கூட நான் எலிக்குட்டி சோதனை செஞ்சுத்தான் பார்த்தேன். இப்ப நிலைமை என்னன்னா, நீங்கதான் ஒரிஜினலான்னு கூட தெரியாது. இருப்பினும் ஒரு நம்பிக்கையில் நீங்கள் கேட்டு கொண்டபடி முந்தைய பின்னூட்டத்தை அடையாளம் தெரியாமல் அழித்து விட்டேன்.
//டோண்டு ஸார்.. தயவு செஞ்சு, மறக்காம இதை பதிவு பண்ணிப்புட்டு முன்னாடி 2.20 மணிக்கு ஒரு பரதேசி போட்ட அந்தப் பின்னூட்டத்தை எடுத்திருங்க ஸார்.. அப்புறம் எனக்கு ஆணி வைச்சிருவாக.. நான் புள்ளைக்குட்டிக்காரன்.. உங்க விளையாட்டுக்கு நான் வரல சாமி..//
செஞ்சாச்சு, கவலைப்படாதீங்க. அது இருக்கட்டும், ஏன் இப்படி பயப்படணும்? என்ன கொலையா செய்து விடுவார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேலே பின்னூட்டம் போட்ட இரண்டு உண்மைத் தமிழனுங்களுமே போலியா தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.
நான் அதர் ஆப்ஷன் பயன்படுத்தி தான் இந்த பின்னூட்டத்தை உண்மைத் தமிழன் பெயரில் போடுகிறேன். இனியாவது உண்மைத் தமிழன் உங்கள் அறிவுரைகளை கேட்டு தன் பெயரோடு எண்ணை சேர்த்து கொள்ளட்டும். தயவுசெய்து அவசியம் கருதி இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள்
போலி உண்மைத் தமிழன்
டோண்டு ஸார்.. போலி டோண்டு 2.20 மணிக்கு இட்டப் பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி..
நான் இப்போதுதான் இதைப் பற்றி ஒரு புதிய பதிவை வலையேற்றியுள்ளேன்.
அங்கே போய் விட்டு மறுபடியும் இஇங்கே வருகிறேன். எனக்கு முன்பாக 4.07 மணிக்கு ஒரு போலி.. 4.18 மணிக்கு அதே போலி..
என்னதான் செய்வது? இனிமேல் உண்மைத்தமிழன் உங்களுக்குப் பின்னூட்டம் இட மாட்டான்.. உங்களுக்கு என் பெயரில் வந்தாலும் அதை ரிஜெக்ட் செய்து விடுங்கள்.
இப்போது புரிகிறது உங்களுக்குப் பின்னூட்டம் போட பலரும் ஏன் தயங்குகிறார்கள் என்று..?
வெரி ஸாரி ஸார்..
நான் வேறென்ன செய்ய முடியும்?
போலி பின்னுட்டங்கள் இடுபவனை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம். மதுரைல அடி வாங்குனா இங்க வந்து ஏன்டா ஓப்பாரி வைக்கிர போலி ஜந்து. அதுவும் உன் உடன் பிறப்பே தாக்குதே, ரொம்ப வலிக்குதோ, அதனாலதான் இங்க ஓப்பாரி வைக்கிறியா. ஓடிப்போயிறு இல்லனா நீங்க போட்ற ஜல்லியாலயே உங்கள அடிப்போம்.
ஐயா போலி உண்மைத் தமிழனுங்களா, டோண்டு ராகவன் கிட்டயா விளையாடுறீங்க? உங்க பப்பெல்லாம் எங்கிட்ட வேகாது கண்ணுங்களா. உண்மைத் தமிழனுக்கு மின்னஞ்சல் இட்டேன். அவர் கூறியபடி அவரது ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டும் அனுமதித்து மீதியை அழித்து விட்டேன்.
போலிகளா போங்க, போய் கோலாட்டம் ஆடுங்க.
உண்மைத் தமிழனுக்கு ஒரே ஒரு ஆலோசனை. நான் கூறியபடி சுயபாதுகாப்பு செய்து கொள்ளுங்கள். ஒரு சிறு திருத்தம். எனக்கு பின்னூட்டமிடத் தயங்குவதற்கு முக்கியக் காரணமே அவர்களுக்கு உடனேயே போலியிடமிருந்து செந்தமிழில் அன்புடன் அவர்களது பெண் உறவினர்களை விசாரித்து பின்னூட்டங்கள் போகும்.
இந்தச் சுட்டியப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல விஷயங்கள் புரியலாம். http://dondu.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இந்தச் சுட்டியப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல விஷயங்கள் புரியலாம். http://dondu.blogspot.com/search/label/%E0%AE%AA%E0"
ஐய்யா,
நீங்கள் கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லை. http://snipurl.com/ அதை கொடுத்து சிறிதாக வெட்டிவிட்டு அதை மீன்டும் இடுங்கள். நன்றி!.
மாநகர ் மன்ற தலைவர் - மதுரை
இல்லையே மதுரை வீரன், சுட்டி வேலை செய்கிறதே. அந்த சுட்டியை மொத்தமாக காப்பி செய்து தனி எக்ஸ்ப்ளோரர் பக்கத்தில் முகவரிப் பட்டையில் ஒட்டி கிளிக்கவும்.
அப்படியும் வாராவிட்டால், எனது இல்லப்பக்கத்துக்கு சென்று போலி டோண்டு என்று குறிப்பிட்டுள்ள லேபலை சுட்டவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது உண்மைத் தமிழன் அவர்களுக்கு இன்னொரு வார்த்தை. இதனால் எல்லாம் நீங்கள் பின்னூட்டம் இட பயந்து, அதை போலியும் உணர்ந்து கொண்டால், அவன் நீங்கள் பின்னூட்டமிடக்கூடிய எல்லா பதிவுகளிலும் இந்த வேலையையே செய்வான்.
போடா ஜாட்டான் என்று கூறி விட்டு நான் கொடுத்த ஆலோசனைகளை நடாத்தி பாதுகாப்பு செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.
பதிவர் கோபாலகிருஷ்ணுடுவும் அதையே செய்து விட்டிருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment