நான் சாதாரணமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து பதிவுகள் போடுவது அவ்வளவாக இல்லை. ஆனால் அவ்வாறு கூறி முன்பு ஒரு முறை போட்டபோது பல எதிர் அலைகளைத் தோற்றுவித்தது அது. ஆகவே இப்பதிவு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இப்போதைக்குத் தெரியாது.
கேஷுவலாகத்தான் இந்தப் பெண்ணின் சாதனையைப் பற்றிய ரிப்போர்ட்டை இன்றைய ஹிந்துவில் (21-05-2007) பார்த்தேன்.
Vidya Ram tops class at Columbia University's journalism school என்றத் தலைப்பில் சம்பந்தப்பட்டப் பெண்ணின் படத்துடன். இந்த ரிப்போர்ட் தனது கடைசி பத்தியில் இந்தக் குழந்தை ஹிந்து ராமுடைய பெண் என்று சிக்கனமாக ஒரே வாக்கியத்தை எழுதிவிட்டு மேலே செல்கிறது.
சுட்டியை போட்டாலும் ஒரு சிந்தனை. அது அப்படியே இருக்குமா எனத் தெரியவில்லை. ஆகவே அந்த ரிப்போர்ட்டை இங்கே இப்பதிவின் முழுமை கருதி இடுகிறேன்.
Vidya Ram tops class at Columbia University's journalism school
NEW YORK: Vidya Ram, 27, from Chennai was designated the top student in the Class of 2007 of the Graduate School of Journalism of Columbia University, New York.
Ms. Ram topped a list of 28 honours students in the school's M.S. programme. She was also awarded a Pulitzer travelling fellowship. These fellowships are given to five outstanding graduates to enable them to study and travel abroad. Ms. Ram plans to use her Pulitzer fellowship travelling to, and writing about, China.
Ms. Ram's classmates gave her a big round of applause when the school announced on Journalism Day, the day before the convocation, that she was the student of the year. It is very rare for a foreign student to win top honours at the school.
More than 250 M.S. programme students took their degrees along with Ms. Ram at the May 16 convocation of one of the world's premier journalism schools. Ben Bradlee, vice-president at large of The Washington Post, gave the commencement address to students, faculty, and parents. He received the school's highest honour, the Columbia Journalism Award.
Ms. Ram is the daughter of N. Ram, Editor-in-Chief, The Hindu, who is an alumnus of the Columbia University journalism school. She studied at Sishya, Chennai, Oxford University, and the London School of Economics before going to Columbia University. Ms. Ram spent a year teaching English in Harbin, China; interned at The Hindu group's Frontline magazine in 2001-2002; and subsequently worked at the Hansard Society in London.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். என் தந்தை அமரர் ஆர்.நரசிம்மன் அவர்கள் 1970-ல் ஹிந்து நிருபர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அந்தக் காலக் கட்டத்தில் ராம் அவர்கள் எடிட்டோரியல் பக்கங்களுக்கு வந்து தூள் கிளப்ப ஆரம்பித்தார். அது வரை ரொம்பவும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹிந்து செய்திகள் நெருப்பைத் தாங்கி வர ஆரம்பித்தன. ஒரு கால்பந்து விளையாட்டு போது நடந்த கலாட்டாவை ராம் அவர்கள் போலீஸ் அராஜகம் (police brutality) என்ற ரேஞ்சில் போட்டோக்களுடன் எழுதிய போது என் தந்தை என்னிடம் வழமையான நிருபர்கள் யாரேனும் இதை எழுதியிருந்தால் அவர்களுக்கு சங்குதான் என்று கூறினார். ஆனாலும் ராம் இவ்வாறு எழுதுவது ஹிந்துவுக்கு ஒரு புது ரத்தத்தைக் கொடுத்தது என்றும் கூறினார்.
அப்போதிலிருந்தே ராம் அவர்களை கவனித்து வருகிறேன். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருப்பவர் அவர். 1979-ல் எனது தந்தை திடீரென மறைந்தபோது இரண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அவர் ஹிந்துவில் வைத்திருந்தார். அவர் பெயருடன் என்னுடைய பெயரையும் சேர்த்து கூட்டு டிபாசிட்டாக வைத்திருந்தார். மாதாந்திர வட்டி செக்குகள் அவர் பெயருக்குத்தான் வரும். அவர் இறந்ததற்கு பிறகு வந்த மாதத்துக்கான வட்டி செக் என்.ராகவன் என்று என் பெயருக்கு, அதுவும் ராம் அவர்களே கையெழுத்திட்டு வந்தது. இந்த அழகில் தந்தை இறந்த பிறகு அதற்கான மரணச் சான்றிதழைக்கூட ஹிந்துவுக்குத் தர நேரமில்லாது காரியங்களில் நான் ஆழ்ந்திருந்த நேரம் அது. உடனே ராம் அவர்களுக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்து, இன்னும் மரணச் சான்றிதழ் கூட நான் தரவில்லை எனக் குறிப்பிட்டபோது அவர் சர்வ சாதாரணமாகக் கூறினார், "அதெல்லாம் நீங்கள் தராமலா போகப் போகிறீர்கள், எங்கள் முன்னாள் ரிப்போர்டர் இறந்த ஒபிச்சுவரியை செய்தியாகப் போட்ட எங்களுக்கு இந்தச் சான்றிதழ் சிறு ஃபார்மாலிட்டியே" எனக் கூறி விட்டார்.
வித்யாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அப்பெண் மேலும் மேலும் எழுதி, தன்னை கௌரவித்த அதே பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவராகியத் தன் தந்தையின் பெயரை நன்கு காப்பாற்றுவார் என்ப்தில் ஐயம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
15 hours ago
65 comments:
An attempt to say personal thanks to Ram? :)
Well, to be more serious, Ram's gesture in sending on his own initiative the monthly interest is really great enough for you remember and tell it here after all these years.
I join you in wishing all the best to Vidya, who got her laurels on her own merit, doing our country proud.
GK
வித்யா மேலும் மேலும் வெற்றி பெறணும்னு நானும் வாழ்த்தறேன்.
கண்ணப்பன்
டோண்டு சார்,
நல்ல பதிவு, செல்வி.வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். திரு. ராம் அவர்கள் நல்ல மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் கமியுனிஸத்தையும் சொஷலிஸத்தையும் கட்டிகொண்டு அடம் பிடிப்பதுதான் பிடிக்கவில்லை. திரு. ராம் ் இப்படி செய்வது அவர் நேர்மை குறைந்தவர் போல காட்சி அளிக்கிறது. LSEல் படித்த் அவர் மகள்தான் திரு. ராம் பெயரையும், ஹிந்து பத்திரிக்கை[சமிப காலத்தில்] இழந்த புகழை காப்பாற்ற முடியும்.்
நன்றி மறப்பது நன்றன்றல்லவோ கோபாலகிருஷ்ணுடு அவர்களே. அதுவும் அந்த செக்கில் அவரே கையெழுத்திட்டதுதான் என் மனதில் நின்றது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி கண்ணப்பன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வதும் சரிதான் கொக்கி அவர்களே. ஆனால் ராமினுடைய கம்யூனிசம் வெறுமனே காக்டயில் கம்யூனிசம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஹிந்து பத்திரிகை அவர் மேலாண்மையின் கீழ் நன்றாகவே வள்ர்ந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ராமினுடைய கம்யூனிசம் வெறுமனே காக்டயில் கம்யூனிசம் என்றுதான் நான் நினைக்கிறேன்.//
சார், அது cock-tale அல்ல cock-tail'அ.
நான் சொன்ன சரிவு அந்த பத்திரிக்கையின் தரத்தில். ஏனென்றால் அவர்கள் இப்பொழுது ஒரு பக்க ஜால்ரா அடிக்கின்றனர், அது ஏன் என்று புரியவில்லை?. சரி போதும் இதை இப்படியே விட்டு விடலாம் வாழ்த்தும் பதிவில் குறைகளை சொல்லகூடாது, இந்த சண்டய தனியா வேற இடத்துல வெச்சிகலாம். ;-)
She is the only daughter of N.Ram.Her mother Susan and father Ram got separated.Susan wrote in
Frontline etc.She seems to have
gone back to UK.Anyway whether
Vidya will take an aggressive
anti-USA and pro-China stance
is yet to be seen. The Hindu
has lost its credibility as
it is too anti-BJP and too
pro CPI(M).
நான் சொன்னதும் cocktailதான். ஆனால் என்ன, தமிழில் எழுதும்போது இந்த குழப்பம் சகஜமே.
பெர்சனலாக எனக்கு ஹிந்து பத்திரிகை பிடிக்கும். பல புதுமைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். இப்போது எளிதாகத் தென்படும் ஃபேக்ஸ் தொழில்நுட்பம் உபயோகித்து அவர்கள் பல இடங்களிலிருந்து ஹிந்து எடிஷன்களை வெளியிட்டனர். அதற்கு முன்னால் சொந்த பிளேனே உபயோகித்து பேப்பர் பிரதிகளை பம்பாய் தில்லி போன்ற இடங்களுக்கு அனுப்பினர்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திரபிரசாத் அவர்கள் சென்னை மீனம்பாக்கத்தில் வந்திறங்கிய செய்தியை அவர் கார் ஹிந்து ஆஃபீஸ் அருகில் வரும்போது அவர் கையில் அன்றைய பேப்பரில் மீனம்பாக்கதுக்கு அவர் வந்த செய்தியை அச்சிட்டு அவர் கையில் பேப்பரை தந்து அசத்தினர். இது நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
மேலும் நான் குடியிருப்ப்பதும் இந்து காலனியில்தான் என்பதை வேறு தனியாகச் சொல்ல வேண்டுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//The Hindu
has lost its credibility as
it is too anti-BJP and too
pro CPI(M).//
இது என்னவோ உண்மைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மீண்டும் மீண்டும் நேர்மையை நிலைநாட்டிய எங்கள் பேருமைக்குரிய தலைவரை வணங்குகிறோம்.
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
டோண்டு ரசிகர் மன்றமே, உங்களுக்கே இது ஓவராத் தெரியல்லியா? :)))
பதிவு விஷயத்துக்கு வாங்க சார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்து பத்திரிக்கை அதன் தனித்தன்மையை இழந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணகர்த்தா இந்த ராம்தான். எந்த தேசிய வீரத்துடன் இந்த பத்திரிக்கை துவங்கப்பட்டதோ அதை கொன்று இன்று பளபளக்கும் ஒரு உயிரற்ற எழுத்துக்களை அது தினமும் தெருவெங்கும் கக்குகிறது. சந்தையில் இதன் இரும்புப்பிடியால் வேறு ஏதும் வாய்ப்பில்லாத விளம்பரதாரர்களும், படிக்கும் மக்களும் இதை நொந்துகொண்டு காலங்கடத்தி வருகிறார்கள். பெங்களூர், ஹைதராபாத் முதலான இடங்களில் டைம்ஸ் போன்று வெளியூர் பத்திரிக்கைகள் நுழைந்து உள்ளூர் பழம் பெருச்சாளிகளை இல்லை என்று ஆக்கினார்போல் இங்கும் ஆகும் காலம் ரொம்ப இல்லை என்று தோன்றுகிறது.
வித்யாவிற்கு வாழ்த்துக்கள். ஆனா இந்தியா திரும்பியவுடன் அப்பா மாதிரி பொய்களையும், செய்தி திரிபுகளையும் எழுதப் பழகாமல் இருக்க வேண்டுகின்றோம்.
நாங்கள் சொன்னது உண்மைதான். இருந்தாலும், இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா!
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
ஆக, பலருக்கும் ராமை பிடிக்கவில்லை போலிருக்கிறது. பல நாடுகளிலிருந்து அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கிறார் போல?
வித்யா இந்தியா திரும்புவாரா? ஏதோ ஒரு உந்துதலில் சில நிமிடங்களில் எழுதப்பட்டு இடப்பட்டது இந்தப் பதிவு. அப்பெண்ணின் கண்களில் இருந்த அறிவு ஒளி என்னைக் கவர்ந்தது. ராம்தான் தந்தை என்பதை மிக கேஷுவலாக கடைசி பத்தியில் ஒரே வரியில் கூறி விட்டுவிட்டதும் எனது மனதைக் கவர்ந்தது.
எனது சொந்த அனுவத்தைத் தவிர ராம் அவர்களது தற்கால ஸ்டேட்டஸ் பற்றி ரொம்ப அறிய மாட்டேன்.
வாசகர்களது பின்னூட்டங்களால் நிறைய கற்றுக் கொள்ளமுடியும் எனத் தோன்றுகிறது. மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் சொன்னதும் cocktailதான். ஆனால் என்ன, தமிழில் எழுதும்போது இந்த குழப்பம் சகஜமே.
//
சார் மன்னிக்கவும் தவறு நடந்துவிட்டது.் எனக்கு இவை இரண்டில் நீங்கள் எதை சொன்னிர்கள் என்றுதான் சந்தேகம்.
பதிலுக்கு நன்றி!
Best Wishes to Ms.Vidhya.
N.Ram is talented and forthright.
Leftist but as you had rightly said, ivory tower leftist. and Hindu is always run as business (with very high standards and integrity).
It is always decent and never sensational or yellow. There is a great variety and depth. Frontline is one of the best and serious magazines in India, in spite of its left leaning ways.
I wrote a strong mail to Frontline
in 2001 during the bus strike by
MTC and other corporations. JJ handled it well and with toughness.
Frontline covered it and published interviews from union members, officials and polticians, but no interview from one vital player :
the hapless commuter who travels in rickety old buses jam packed like sardine tins..
I advised N.Ram and other editorial team to travel by MTC buses to their offices for a month,
then we shall discuss the issue.
Unless delicensing and privatisation is done (like in Telecom, etc) things will not improve and the acutr shortages of
buses will continue...
Travelling by luxury cars, they can never really understand the plight of the bus commuters..
Anbudan
athiyaman.blogspot.com
அதியமான் அவர்களே,
பலதரப்பாரை இண்டர்வியூ செய்யும்போது ஒருவரையும் விட்டுவிடலாகாது. அந்த வகையில் நீங்கள் ராமுக்கு எழுதிய கடிதம் சரியே. உண்மை கூறப்போனால் பஸ்கள் ஒழுங்காக வந்தால் டூ வீலர் மற்றும் கார்கள் வாங்குவது குறையும், போக்குவரத்து நெரிசலும் குறையும். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராம் ஒரு இடதுசாரி என்பது அதிர்ச்சியாக இருக்கின்றது. so இடதுசாரித்தனம் என்றால் என்ன சார்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
//ராம் ஒரு இடதுசாரி என்பது அதிர்ச்சியாக இருக்கின்றது. so இடதுசாரித்தனம் என்றால் என்ன சார்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.//
ஐய்யா அனானி,
ஹிண்டு பேப்பரின் (or டெக்கன் கிரானிகல்)் நடு பக்கத்தை (editorial, opinion page) படி, பிறகு டைம்ஸ் அஃப் இன்டியா editorial, opinion page படி.... உனக்கு வித்தியாசம் புரியும்.
டிஸ்கி: ஆனால் டைம்ஸ் அஃப் இன்டியா வலது-சாரி கிடையாது.
"ராம் ஒரு இடதுசாரி என்பது அதிர்ச்சியாக இருக்கின்றது. so இடதுசாரித்தனம் என்றால் என்ன சார்?"
இடதுசாரித்தனம் என்றால் இப்படிதான் இருக்கும்.
1. ஹிந்து மதத்தை அவமதிக்கலாம் ஆனால் மைனாரிட்டி மதங்களை அவமதிக்க கூடாது. மைனாரிட்டி மத விழாக்களை கொண்டாட வேண்டும், ஹிந்து மத விழாக்களை புறக்கணிக்க வேண்டும்.
2. பொருளாதார சுதந்திரத்தை எதிர்ப்பது. அரசு ஒரு நாட்டின் பொருதாரத்தில் எல்லாவறறிலும் முக்கை நுழைக்க வேண்டும்/ கட்டுபடுத்த வேண்டும என்று நம்புவது்்.
3. தனிமனித சுதந்திரத்தை ஆதரிப்பது போல போலியாக நடந்துகொள்வது.
4. யுனியன் பேருச்சாளிகளை வோட்டுக்காக ஆதரித்துகொண்டு, அமைப்பு சாரா தொழிலாளிகளை கைவிடுவது/ கண்டுகொள்ளாமல் இருப்பது.
5. மனிதனுக்கு சொத்துரிமை தேவையில்லை என்று நம்புவது.
6. சந்தையில் போட்டி நாட்டுக்கு கேடுதல் என்று சொல்லுவது/நம்புவது.
7. அரசு வரி (மக்கள் வரி கட்டிய) பனத்தில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, உர்பத்தியாளருக்கு, வியாபரிகளுக்கு, உதவ (மானியம்) வேண்டும்.
8. வேளிநாட்டு வர்த்தகம் நாட்டுக்கு கேடுதல் என்று நம்புவது. அதனால் அதை கட்டுபடுத்த வேண்டும் என்று நினைப்பது.
இப்படி இந்த பட்டியல் நீண்டு கொன்டே போகும். நான் இங்கு நிறுத்திகொள்கிறேன்.
கேள்வி கேட்டதற்கு நன்றி!
மேலும்:
இந்த சுட்டியை பார்க்கவும்.
http://www.theadvocates.org/quiz.html
yes, the Hindu is anti-BJP.
they haven't forgotton or forgiven the communal riots in the wake of
Ayodhya build up in the late 80s to
1993 culmination of mumbai blasts.
Until then communal riots in post
independent India was never on this scale or wide spread. Only localised riots in sensitive cities like Ahemadabad, UP towns, etc. The BJP used the plank to
expand its vote base. but the nation had to pay a terrible price.
I voted for BJP in 1999 in spite of all this, as a matter of expediancey. the Hindu has not forgiven BJP for its violent past.
That doesn't mean the The Hindu blindly supports Congress or other
'secularists' like SP, etc. It has
condemned many appeasement polices and cynical ways of Congress and SP
in exploiting muslim vote banks.
And Bofors issue was exposed by
N.Ram and Chitra Subramanium, which
brought down Rajiv's govt in 1989.
every one has their right to opinion and the Hindu is free to
oppose BJP. But it is careful in
reporting facts and recently apologised in frontpage for publishing a unverified report of
Gujarat IG's report on fake encounters. (the truth is a open secret, but that is different).
The Hindu represents the best of
Indian journalism and decency.
Anbudan
K.R.Athiyaman
//மேலும்:
இந்த சுட்டியை பார்க்கவும்.
http://www.theadvocates.org/quiz.html//
இதில் உள்ள வினாடி வினாவுக்கு விடையளித்தேன். நான் செண்ட்ரிஸ்டாக சித்தரிக்கப்படுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//And Bofors issue was exposed by
N.Ram and Chitra Subramanium, which
brought down Rajiv's govt in 1989.//
நன்றி சித்ரா சுப்பிரமணியத்தின் பெயரை சொன்னதற்கு. இரண்டு நாளாக அவர் பெயரை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்து வந்திருக்கிறேன்.
ராமுக்கு முன்னால் ஹிந்துவில் பெண் ஊழியர்களே கிடையாது. ஆனால் இப்போது? கணிசமான அளவில் உள்ளனர். ராம்தான் காரணமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
////ராமுக்கு முன்னால் ஹிந்துவில் பெண் ஊழியர்களே கிடையாது. ஆனால் இப்போது? கணிசமான அளவில் உள்ளனர். ராம்தான் காரணமோ?////
அவ்வளவு பெரிய உமனைஸரா இந்த ராம் ?
//நான் செண்ட்ரிஸ்டாக சித்தரிக்கப்படுகிறேன்.//
டோண்டு ஸார்,
நீங்கள் Maybe என்ற option அதிகம் பயன்படுத்திருக்கலாம். Maybe option'னை மறந்துவிட்டு, ஹிந்து எடிடர் ராம் போல 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என Agree or Disagree மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.
in liberty,
Jay
நீங்கள் சொல்வது சரிதான் ஜெயகமல் அவர்களே. இருக்கலாம் என்ற தெரிவைத்தான் அதிகம் உபயோகித்தேன், ஏனெனில் என் மன நிலையை அதுதான் அதிகமாக சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை பிரதிபலித்தது.
ஆகவே நான் செண்ட்ரிஸ்ட் என்றால் அப்படியே ஆகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவ்வளவு பெரிய உமனைஸரா இந்த ராம்?//
மன்னிக்கவும் அனானி அவர்களே, ராம் அப்படி என்றெல்லாம் நினைக்கவில்லை நான்.
அதே சமயம் மரியாதைக்குரிய, வேலைக்கு வரும் தமிழ் நாட்டுப் பெண்களை நீங்கள் எவ்வளவு மட்டமாக மதிக்கிறீர்கள் என்பதுதான் உங்களது இக்கேள்வியில் புலப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
செல்வி வித்யா ராமின் வெற்றிக்கு பாராட்டுகள்.. எடுத்துக் கொடுத்தமைக்காக டோண்டு ஸாருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..
செல்வி வித்யா மிகப் பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. தேவைக்கேற்ற கல்வியை அவர் சென்னையிலேயே கற்றுக் கொண்டுவிட்டார். அதுவே அவரது பொருளாதார நிலைமைக்குப் போதுமானது. இருந்தாலும் தனக்கென்று ஒரு கல்வி, தனக்கென்று ஒரு பெயர் என்ற ரீதியில் அவரது இந்தப் படிப்பு கல்வியின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும் உணர்த்துகிறது.
நம் தேடி வைத்திருக்கும் செல்வத்திற்கு இது போதுமானது என்று சொல்லாமல் இதற்கு உறுதுணையாக இருந்திருக்கும் அவரது பெற்றோர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.
அதே கையோடு, "அவருக்கு வாய்ப்பிருக்கிறது, வசதியிருக்கிறது. அங்கு சென்று படித்தார்.. எங்களுக்கு..?" என்ற கூக்குரல்களுக்கு நடுவில், நாமும் யோசிக்க வேண்டும். இங்கேயும் நம் வீட்டுப் பெண்களை நாமும் இதே போல் நம்மால் முடிந்த அளவு படிக்க வைக்கலாம். ஆனால் எத்தனை பேர் படிக்க அனுமதிக்கிறார்கள்..?
"அதே சமயம் மரியாதைக்குரிய, வேலைக்கு வரும் தமிழ் நாட்டுப் பெண்களை நீங்கள் எவ்வளவு மட்டமாக மதிக்கிறீர்கள் என்பதுதான் உங்களது இக்கேள்வியில் புலப்படுகிறது" Sorry Mr. Dondu. You don't have any rights to comment like this. We all know very well of your 'recent' comments about call center girls. You described them as prostitutes now here you are commenting like this. Don't you feel guilty to comment like this?
dondu sir,
my result in that quiz was Libertarian.
and i heard that Ram was promoting 'secularism' thru an affair with the 4th wife of a famous Muslim Prince in Chennai. one of the reasons for the divorce.
Athiyaman
// You described them as prostitutes now here you are commenting like this. Don't you feel guilty to comment like this?//
தவறான புரிதல். கால் செண்டர்க பெண்களை அம்மாதிரி எல்லோருக்கும் ஃபோன் செய்ய வைக்கும் ஏற்ப்பாட்டை ம்யூஸ் அவர்கள் அது ஒருவகை விபசாரம் என்று கூறி சாடினார். நான் அதை ஆமோதித்தேன், ஏனெனில் அப்பெண்கள் நிஜமாகவே பல துன்பங்கள் அனுபவிக்கின்றனர். பலர் சள்ளென்று எரிந்து விழுவார்கள். அது சம்பந்தமாக அப்போதே விரிவான வாதம் நடந்து நானும் ம்யூஸும் சொல்ல நினைத்ததை தெளிவுபடுத்தியுள்ளோம். ஆகவே இப்போது அதை இங்கு கிளப்ப விரும்பவில்லை.
ஆனால் இந்தப் பதிவில் ராம் வுமனைசர் என்று வந்தப் பின்னூட்டத்துக்கு நான் கொடுத்தது சரியான எதிர்வினையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வது மிகவும் உண்மைதான் உண்மைத் தமிழன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//You don't have any rights to comment like this. We all know very well of your 'recent' comments about call center girls.//
யோவ் அனானி,
உன்ன மாதிறி அவதுறு பரப்புவர்களை நாங்கள் வண்மையாக கண்டிகிறோம்
டோண்டு ரசிகர் மன்றம்
I have nothing against Ms. Vidya Ram. May be she is very talented and I congratulate and wish her all the best. However, where is the newsworthiness of this report? Would she have made it to the pages of The Hindu had she not been the daughter of N. Ram?
// ராம்தான் தந்தை என்பதை மிக கேஷுவலாக கடைசி பத்தியில் ஒரே வரியில் கூறி விட்டுவிட்டதும் எனது மனதைக் கவர்ந்தது.//
I on the other hand, think it was obscene.
//However, where is the newsworthiness of this report? Would she have made it to the pages of The Hindu had she not been the daughter of N. Ram?//
அதற்கான பதில் பதிவிலேயே உள்ளது.
"It is very rare for a foreign student to win top honours at the school."
//// ராம்தான் தந்தை என்பதை மிக கேஷுவலாக கடைசி பத்தியில் ஒரே வரியில் கூறி விட்டுவிட்டதும் எனது மனதைக் கவர்ந்தது.
I on the other hand, think it was obscene.//
இதில் என்ன அப்ஸீனை பார்க்கிறீர்கள்? பத்திரிகை ராமுடையது. அதில் ராமைப் பற்றி ஒரு வரியுடன் விட்டது அவர்களது மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஹிந்து ஒன்றும் முரசொலி மாதிரி பத்திரிகை இல்லை என்பது வெள்ளிடை மலையாகிறது.
அன்புடன்.
டோண்டு ராகவன்
ஏமாத்தாதவன்!!!
ராம் ஒரு இடதுசாரி என்பது நடுப்பக்க தலையங்கம் மாத்திரம் போதாது.
எழுத்தில் இடதுசாரி. இந்து நிறுவனப் பங்கில் எத்தனை விழுக்காடு அதில் பணியாற்றும் தொழிலாளர்களூக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
நீ ஒரு ஏமாந்தவன் என்பது உன் பதிவில் இருந்து புரிகின்றது.
All I am saying is that there are several equally rare or rarer honours that get passed up on a regular basis (For God's sake, did you see the length of the article!?)
//ஹிந்து ஒன்றும் முரசொலி மாதிரி பத்திரிகை இல்லை என்பது வெள்ளிடை மலையாகிறது.//
Don't you think you are setting your expectations a bit low? :)
//ராம் ஒரு இடதுசாரி என்பது நடுப்பக்க தலையங்கம் மாத்திரம் போதாது.
எழுத்தில் இடதுசாரி. இந்து நிறுவனப் பங்கில் எத்தனை விழுக்காடு அதில் பணியாற்றும் தொழிலாளர்களூக்கு வழங்கப்பட்டிருக்கிறது?//
அதனால்தான் அவர் வெறும் காக்டைல் கம்யூஉனிஸ்ட் எனக் கூறினேன். நல்லக்கண்ணு, ஜோதி பாசு ஆகியவர்கள் தங்கள் வருமானம் அத்தனையும் கட்சிக்கு அளித்து விட்டு கட்சி செலவுக்குத் தரும் பணத்தில் வாழ்பவர்கள். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள். அதே சமயம் பன்னாட்டு கம்பெனி தரும் ஐந்திலக்க எச்சில் சம்பளத்தைத் திட்டிக் கொண்டே தாங்களும் அதை வாங்கி மஜா செய்பவர்கள் புரட்சியாளர்கள். இதற்கு மேல் அவர்களை ஒண்ணும் கேக்கப்படாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//All I am saying is that there are several equally rare or rarer honours that get passed up on a regular basis (For God's sake, did you see the length of the article!?)//
கட்டுரை கடைசி பக்கத்தில் சுமாரான நீளத்தில் வந்தது. அவ்வளவே.
//Don't you think you are setting your expectations a bit low? :)//
என்ன முரசொலியை இப்படி குறைச்சலாக மதிப்பிடுகிறீர்கள்? அன்புள்ள உடன் பிறப்பே ரேஞ்சில் கடிதங்கள் ஹிந்துவில் வருகின்றனவா? ராமின் கனவில் அடிக்கடி கஸ்தூரி ஸ்ரீனிவாசன் வந்து அவரை வழிநடத்துவதாக ஏதேனும் செய்திகள்தான் உண்டா? இந்த செய்திகள் இல்லாத ஹிந்துவும் பத்திரிகைதானா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹிந்து ஒரு கோடிஸ்வர முதலாளித்துவ குடும்பத்தின் தாத்தா காலத்து சொத்து.
உங்க தாத்தா சொத்தை தேடி வச்சிட்டு போயிருந்தா, நீங்கள் எதைக் கிறுக்கினாலும் ஆஹா! ஓஹோ! என புகழ்பாட பலர் வருவாங்க.
//ஹிந்து ஒரு கோடிஸ்வர முதலாளித்துவ குடும்பத்தின் தாத்தா காலத்து சொத்து.//
ஆனால் அந்த தாத்தா சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். உழைத்து பத்திரிகையை முன்னுக்கு கொண்டு வந்தவர். அதே சமயம் சொத்தை கட்டிக் காப்பதும் ஒரு பெரிய கலை தெரியுமல்லவா?
//உங்க தாத்தா சொத்தை தேடி வச்சிட்டு போயிருந்தா, நீங்கள் எதைக் கிறுக்கினாலும் ஆஹா! ஓஹோ! என புகழ்பாட பலர் வருவாங்க.//
இருக்கலாம், ஆனா வாசகருக்கு நீங்க எழுதறது பிடிக்கலைன்னா, பத்திரிகைக்கே சங்குதான்.
ஆனாக்க ஒண்ணு நிச்சயம். வித்யா அமெரிக்காவுல ஜெயிச்சது அவருடைய கொள்ளுத் தாத்தா தயவில் இல்லை, சொந்த முயற்சியாலேயேத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீ ஒரு ஏமாந்தவன் என்பது உன் பதிவில் இருந்து புரிகின்றது.//
அனானி
நீ இன்னும் ஏமாந்த கொக்கு எலி......... நக்கு
மறக்கல போல இருக்கு. கொத்தாயித்தா.
//அமெரிக்காவுல ஜெயிச்சது அவருடைய கொள்ளுத் தாத்தா தயவில் இல்லை, சொந்த முயற்சியாலேயேத்தான்.//
ஒரே கல்ல ரெண்டு மாங்கா! ஹி ஹி
//ராம் ஒரு இடதுசாரி என்பது நடுப்பக்க தலையங்கம் மாத்திரம் போதாது.
எழுத்தில் இடதுசாரி. இந்து நிறுவனப் பங்கில் எத்தனை விழுக்காடு அதில் பணியாற்றும் தொழிலாளர்களூக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
நீ ஒரு ஏமாந்தவன் என்பது உன் பதிவில் இருந்து புரிகின்றது.//
தம்பி உனக்கு சின்ன வயசா, அதான் சூடாயிட்ட. இடதுசாரித்தனம்னாலே முதல்ல நீ புரிஞ்சிக்க வேண்டியது
"ஊருக்கு தான் உபதேசம் நமக்கு கிடையாது".
இந்து மாதிரி பத்திரிகைகள் நிர்வாகமே சிக்கல்தான். அதுவும் உலகமயமாக்கப் பட்ட சூழலில் உள்ள போட்டியிலும் பொறாமையிலும் ஓரிடத்தில் நிலைத்து நிற்கவே மட்டும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறுவார்கள். அதுவும் போதாது முன்னாலும் வர வேண்டும். ஆகவே இன்னும் வேகமாக ஓட வேண்டும். தாத்தா சொத்தை மெயிண்டைன் பண்ணுவதும் பெரிய காரியமே.
இந்த விஷயத்தில் ராமும் தன் பங்கை சரியாகவே ஆற்றி வருகிறார் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
Ms. Ram spent a year teaching English in Harbin, China
//
I am a little concerned on this. Why would she go to china leaving out the rest of the 243 Countries in the world (excluding India ofcourse) ?
Columbia university is some sort of resort for Indian Leftists! All of them go there or atleast have a connection. Biju mathew the FOIL guy are from Columbia university only.
china is fast abandoning communism and embracing free markets. and it
is becomming the factory of the world. The Chinese are a shrewd and
pragmatic race. All talk about leftism is mere talk. Shangai is
becomming the New York of the east.
Frontline doen't talk about these
vital aspects....
Athiyaman
கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்துக்கு மாற்றாக கம்யூனிசம் வந்தது. வந்த நேரத்தில் அது சில ஆதர்ச கருத்துக்களை வைத்தது. ஆனால் முக்கிய விஷயத்தை மறந்தது. அதாவது எல்லோருமே தீவுகள்தான், தேவையானால் ஒன்று சேருவார்கள், மற்ற நேரங்களில் அவர்வர் வழி செல்வர். அவர்கள் எப்போதுமே ஒன்று போல செயல்பட வேண்டும் என நினைத்து படுத்தியது. From each according to ability and to each according to necessity என்ற தத்துவம் கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. இதை மறந்ததன் பலனே சோவியத் யூனியன் திவாலானது, கிழக்கு ஜெர்மனி அம்போவானது எல்லாம்.
சீனா புத்திசாலித்தனமாக் இதை உணர்ந்து கேப்பிடலிசத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆனால், எல்லோருமே ஒன்றை மறந்தனர். இவர்களை துதித்து வந்த இந்திய கம்யூனிஸ்டுகள் எங்கு போவார்கள்? பூஜித்த தெய்வம் பொய்த்ததே (The God that failed) என்று அவர்கள் புழுங்குகின்றனர். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்துக்கு மாற்றாக கம்யூனிசம் வந்தது.//
கட்டுபாடற்ற முதலாளித்துவம் என சொல்லுவது உண்மைக்கு புறம்பானது.
முன்பே உங்கள் பதிவில் இதற்கு இட்ட பின்னுட்டம் இதோ.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
September 15, 2006 10:44 AM
மா சிவகுமார் said: "கட்டுப்பாடற்ற முதலாளித்துவ சமூகம் என்பது காட்டு வாழ்க்கை போன்றது. அதை நெறிப்படுத்தி எல்லோரின் கூட்டு நன்மைக்காக வழிகளை ஏற்படுத்திக் கொள்வது அறிவுடமை."
Dear Mr Sivakumar,
Thank you for your comments.
If anyone thinks people who support Capitalism want unfetterd capitalism, then he is wrong.
Nobody here wants unfettered markets or capitalism. What we are discussing is that what kind of restrictions work best.
Economist Don Boudreaux sums it up the best. Please do read.
November 08, 2004
Fettered by Unfettered Language
Cafe Hayek
Don Boudreaux
Among the most loaded and most misleading phrases in popular use is "unfettered markets" – as in this sentence from an October 18th front-page article in the Wall Street Journal entitled "As Two Economists Debate Markets, The Tide Shifts":
As a product of Milton Friedman’s Chicago School of thought, which stresses the virtues of unfettered markets, Mr. [Eugene] Fama rose to prominence at the University of Chicago’s Graduate School of Business.
No one in his or her right mind believes that virtue exists in markets that are unfettered. An unfettered market would certainly be awful.
What Friedman, Hayek, Sowell, Walter Williams, Vernon Smith, Leland Yeager, Steven Landsburg, Bruce Yandle, Arnold Kling, and any other market-oriented economist you care to name (including yours truly) endorse are markets fettered principally by two general sets of institutions.
The first fetter is competition – competition for consumer dollars, as well as competition for the best access to supplies.
The second fetter is the common law of property, contract, and tort, all supplemented, when appropriate, by criminal law.
Reasonable people might believe that such fetters are too weak or too distorted or that they otherwise fall short of the fetters imposed by statutes and by bureaucratic regulation. But no reasonable person can believe that the likes of Milton Friedman and Walter Williams believe that markets are best that are truly unfettered.
Indeed, one important reason prompting many economists to support markets is that markets embedded in the common law are likely to be more tightly and more appropriately fettered than are markets in which statutory and bureaucratic regulation play a large role. (Show me a protectionist tariff and I’ll show you firms that are released from some fetters.)
The issue is not fetters vs. no fetters. The issue is what sort of fetters work best – what sort of fetters are most likely and most consistently to fetter firms and consumers to do what is best over the long run.
Posted by Don Boudreaux in Myths and Fallacies | Cafe Hayek
http://tinyurl.com/yofu7l
http://cafehayek.typepad.com
Related Post
மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம்
http://tinyurl.com/2kbwq7
உங்கள் பின்னூட்டம் நன்றாக நினைவிருக்கிறது ஜயகமல் அவர்களே. ஆனால் ஒன்று, யந்திரப் புரட்சி நடந்த புதிதில் ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணி நேர வேலை என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதையெல்லாம் எத்கிர்த்துத்தான் மே தினமே வந்தது. அதுவும் அமெரிக்காவில்தான், ரஷ்யாவில் அல்ல. மதகுருமார்களுக்ம் முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசி, உழைத்தால்தான் சொர்க்கம் என்று பிரசங்கங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். இது சரித்திர உண்மை. அந்த நேரத்தில் சோஷலிச சிந்தனைகள் புரட்சிகரமாக வந்து, ஒரு தேசமே ஸ்தாபிக்கப்பட்டது. அந்த சோஷலிச சொர்க்கமும் சொர்ர்க்கம் இல்லை என்பது அப்புறம் தெரிய வந்தது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர் ஆதரவு வருவதற்கு இது காரணமாயிற்று.
அதிக சம்பளம் அளித்து, தொழிலாளிகள் கூட கார் வாங்கும் அளவுக்கு ஃபோர்ட் போன்றவர்கள் செயல்பட்டு, பிறகுதான் வாழு வாழவிடு தத்துவம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யந்திரப் புரட்சி நடந்த புதிதில் ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணி நேர வேலை என்பது சர்வ சாதாரணமாக இருந்தது.//
டோண்டு ஐய்யா,
நீங்கள் கூறிப்பிடுவது காபிடலிஸம் கிடையாது, அது 'யந்திர புரட்சியின் ஆரம்பகாலத்தில் இருந்த காபிடாலிஸம்'.
அதிக (16 மணி) நேர வேலை 1800களில் இருந்த காரணம் அப்போது தொழிலாளிகளின் உற்பத்தி திறன் குறைவாக இருந்ததுதான்.
இன்னும் சில நூறு ஆண்டுகள் முன்பு சென்று பார்த்தால் யந்திர புரட்சி காலத்தை விட வாழ்க்கை தரம் மோசமாக இருந்திருக்கும்.
அப்போது நீங்கள் அரசனாக இருந்தால் கூட உங்கள் வீட்டில் குழாய் முலம் தண்னீர் வராது, ஃபிரிட்ஜ் கிடையாது, மின்சார விளக்கு கிடையாது.
அக்காலங்களை விட இப்போது வாழ்கை தரம் பல நூறு மடங்கு உயர்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் காபிடாலிஸம்தான்.
//அதுவும் அமெரிக்காவில்தான், ரஷ்யாவில் அல்ல.//
அமெரிக்கா ஒரு காபிடலிஸ்ட் நாடு கிடையாதே.
//ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர் ஆதரவு வருவதற்கு இது காரணமாயிற்று.//
யந்திர புரட்சிக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் செழுகைக்கு & வளர்ந்ததற்கும் இரு வேரு காரணங்கள் கூறபடுகின்றன.
1. அரசு கட்டுபாடுகள் (regulation) & யூனியன்கள்
2. (capital) முதலின் அளவு தொடர்ந்து அதிகரித்தது.
இடதுசாரிகள் அரசின் நடவடிக்கையால்தான் ்தான முன்னேற்றம் அடைந்தது் என நம்புகின்ரனர். மற்றவர்கள் capital accumualtion'னால் என்கின்றனர்.
இரண்டுக்கும் சரித்திர சாட்சிகள் உள்ளன.
//அதிக சம்பளம் அளித்து, தொழிலாளிகள் கூட கார் வாங்கும் அளவுக்கு ஃபோர்ட் போன்றவர்கள் செயல்பட்டு, பிறகுதான் வாழு வாழவிடு தத்துவம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது.//
ஹென்றி ஃபோர்டு இப்படி செய்ததற்கு காபிடலிஸமும்்மும் ஒரு காரண்ம் என்று நினைக்கிறேன்.
//ஹென்றி ஃபோர்டு இப்படி செய்ததற்கு காபிடலிஸமும்்மும் ஒரு காரண்ம் என்று நினைக்கிறேன்.//
கண்டிப்பாக. இதை அறிவார்ந்த சுயநலம் என்பார்கள்.
உங்களைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் வயதில் நான் என்னவெல்லாம் தீவிரமாக சிந்தித்தேனோ அதையே நீங்களும் சொல்கிறீர்கள். இக்கால இளைஞர்கள் கையில் இந்தியா நன்றாகவே இருக்கும்.
ஆனால் நான் சொல்ல வந்தது வேறு. கம்யூனிச கொள்கையில் இருந்த நல்லவை அது ஆட்சிக்கு வந்தால் மறைந்து போகும் என்பதற்கு சோவியத் யூனியனே சாட்சி. உதாரணத்துக்கு அங்கு ஸ்ட்ரைக் செய்ய அனுமதி இல்லை, ஏனெனில் அது தொழிலாள அரசு. இது எப்படி இருக்கு?
ஆனால் அது சொன்ன தொழிலாளர் ஆதரவு கொள்கைகள் ஓர் அளவுக்குள் செயல்படுத்தப்பட்டு அமெரிக்கா முன்னேறியது. அங்கு யூனியன் தலைவர்களுக்கு இருக்கும் பவர் தெரியுமல்லவா. அவர்களும் அதை முறை தவறி உபயோகிக்காததால்தான் அந்த நாடு உருப்படுகிறது. அங்கு யூனியன் தலைவன்கூட வேலை செய்யும்போது மனம் இருத்தி வேலை செய்வான். ஆனால் நம்மூரில் யூனியன் தலைவர்கள் என்ன செய்கிறார்களோ இல்லையோ, உடல் வருத்தி வேலை செய்ய மாட்டார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir,
France has rigid labout laws and
hence higher unemployment (esp for
blacks) ; the race riots last year
was mainly due to this. Whereas
Ireland had re-invented its polices
in the past twenty years, with free enterprise and hire / fire labout policy. hence it is propsering and growing fast, with many MNCs locating there...
Anbudan
Athiyaman
100% சரி அதியமான அவர்களே. நம்மூரிலும் அதே பிரச்சினை. வேலையிலிருந்து ஒருவரை எடுப்பது கஷ்டம், சட்டென்று நட்டம் தரும் கம்பெனியை மூட முடியாது. ஆகவே நம்மூரிலும் வேலையில்லாத் திண்டாட்டம்.
யெஸ் மினிஸ்டர் /பிரைம் மினிஸ்டர் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் முடிவில் பிரிட்டனும் அவ்வாறுதான் இருந்தாது. மார்கரெட் தாட்சர் வந்தார். எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்தார். பல அரசு கம்பெனிகள் தனியார் மயமாயின. நாடு உருப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
a mail to a frontline columnist :
To : Mr.C.P.Chandra Sekar, JNU, New Delhi
Dear Sir,
In your articles in Frontline, you use the term 'fiscal conservatisim' for deriding those
who oppose fiscal deficts.
Isn't it a proven fact that fiscal deficits are bad for the nation's economy by creating high inflation ? (esp in 1950s to 80s).
Keynesian concepts have been proved wrong time and again, but economists like you tend to ignore such basic facts.
Also Lord Keynes has said "..there is no surer way of undermining a nation's character than by undermining her currency.."
As former British Prime Minister James Callaghan put it in a courageous talk to a British Labour Party conference in
September 1976 : "We used to think that you could just spend your way out of a recession and increase employment by cutting taxes and
boosting government spending. I tell you, in all candour, that that option no longer exists;
and that insofar as it ever did exist, it only worked by injecting bigger doses of inflation into the economy followed by higher
levels of unemployment as the next step. and that is the histroy of the past twenty years."
Thanks & Regards
K.R.Athiyaman
Chennai
To : Union Carbide Ltd
Dear Sirs,
I am a Indian entrepreneur based in Chennai,India and very much intersted in economic polices
and free enterprise system.
Until 1991 India was in the vice like grip of socialistic economic polices intiated by Congress party from 1952. Free enterprise was
throttled and excessive goverment controls and regulations strangeled our economy and corrupted our system.
There was (and still is) no proper exit policy for loss making and failed industries. And labour
laws are still rigid.
I am trying to research about such aspects. There is very little data available about the business profits and losses of Union Carbide India Ltd and its Bhopal plant. Declining sales and profits were reported. Was the plant under
utilised ? Suppose if exit and labour policy in India were similar to USA in 1984, could the
tragedy been prevented ? Was UCIL unable to close or sell its assets or wind up its unviable operations in India due to legal and economic
polices followed in 1980s ?
Was the Bhopal plant making losses and unviable, but forced to operate due to polices of government ? Was UCIL prevented from closing or liquaditing
or selling its assets by socialistic polices of govt of India at that time (before 1984) ?
Fertiliser policy is still a muddle and has resulted in making many govt and private units sick.
Can you please send a detailed answer to my above queries ?
Thanks & Regards
K.R.Athiyaman
இக்கடிதங்களை எப்போது அனுப்பித்தீர்கள் அதியமான் அவர்களே? ஏதேனும் பதில் கிடைத்ததா?
அதாவது போபால் பிளாண்டை முன்னாலேயே மூட ஏதேனும் முயற்சி செய்யப்பட்டதா? இது எனக்கு புதிய செய்தி. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir,
i had forwarded the vague reply from Union Carbide to your id.
And as usual no reply from the JNU
prof.
I read an extract from Dominique
Lappiere's book, It is midnight at
Bhopal ; he has described about the lack of maintainance and apathy
at the UICL plant. It was unviable due to costs and rigid price controls by govt. But for our socilaistc polices then, the tragedy could have been averted.
Anbudan
Athiyaman
To : The Editor, Frontline, Chennai
Dear Sir,
This is with reference to the tribute you have paid to the
late Congress President Sitaram Kesari.
He may be a secularist but it is surprising that you have
forgotten that he toppled two United Front govts for flimsy
and selfish reasons, paving way for unnecessary and costly
elections and the BJP rule.
He was the treasurer of the Congress party for many years.
That means he was the conduit for hundreds of crores of black
money which changed hands between the industrialists and the politicians. He represented the worst in what you and other left wingers fight against.He was the prime example of the politician-bureaucrat-businessman nexus. During the license,permit, quota raj in the decades of Congress rule, he and the Congress high command threatened, cajoled and blackmailed the business community into donating huge amount, in return for 'favours' and licenses. The growth of Reliance Industries is a good example of such selective misuse of the License, Quota and permit Raj (which was forewarned precisely by Rajaji).
Worse than that, he was a loyal Congressman and he was indirectly responsible for the atrocities committed during emergency. (1975-77)
Just because he opposed the RSS (we too are bitter critics of
RSS and the Hindutuva brigade), he cannot be considered a honest and sincere secularist or patriot (like Nehru, Gandhi, etc).It is a pity that you have been blinded by anti-BJP stance and consider every enemy of BJP to be your friend. Enemy of enemy need not be your friend, There is the vital question of ethics,morals and personal integrity.
Further, he was allegedly involved in the murder of the husband of a lady with whom he had intimate relationship. There may not be proof or evidence that supports this allegation but as a journalist you may have a good idea about this cynical state of affairs in New Delhi's political life.
We request you to be more objective in your views about such matters and continue the excellent standards of Frontline.
Thanks & Regards
K.R.Athiayaman
1. First, I appreciate her efforts.
2. But this efforts going to help the way like his father means, then,I wont....
3. In future, in her hand, ohhh... Brahmam.... The Hindu will become atleast nonHindu instead of antiHindu
சிவாஜி திரைபடத்தை பார்க்க தவறாதீர்கள்..
உங்களுக்காக
These are the list of theatres screening Shivaji.
THEATRE
NO OF SHOWS
Expected Ticket Rates
Abirami
(Abirami, Bala, Annai, Sakthi Abirami)
(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows
50,40,10
Albert (Albert, Baby Albert)
(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows
50,45,10
AVM Rajeshwari
(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows
50,45,10
Bharath
* Not confirmed
(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows
50,45,10
Inox
(Inox 1,2,3)
(Jun 15,16,17) � 16 shows (includes 9:00 am show in all 4 screens)
Other days 12 Shows
120,20
Jayapradha
(Jayapradha, Raj)
(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows
50,10
Mayajaal
(Jun 15,16,17) � Shows from 8:00 am to 11:30 pm Nonstop screening approximately 25 shows or more.
80,70,10
Sathyam
(Sathyam, Santham/Sree)
(Jun 15,16,17) � 14 shows (includes 9:00 am show in Sathyam, Santham, Seasons, Sree, Studio 5,Six Degrees)
Other days 8/12 Shows
120,100,90,85, 75,60,10
Shanthi
(Shanthi, mini Shanthi)
(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows
50,45,10
Sri Brindha
(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows
50,45
Udhayam
(Udhayam, Sooriyan, Chandran, mini Udhayam)
(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows
48,50,10
* Note that Sathyam will not update the thecinema.in website on the first day of reservation. You got to check the tickets at theatre only.
* Inox Preference will be given for internet, SMS and Bulk booking to avoid crowd at City Center
* Theatre Agastya may also screen Shivaji
Other theaters in suburbs with expected minimum number of shows on first three days
Ambathur Raaki (15)
Chromepet Vettri (10 shows)
Thiruvanmiyur Thyagaraja (5)
Adyar GanapathyRam (5)
Prathana dive in (7)
Kolthur Ganga (15)
St Thomas Mt Jothi (5)
Karapakkam Aravind (5)
Poondhamalli Sundar (15)
Virugambakkam Sridevi (15)
Nanganallur Velan (15)
Kanchipuram Aruna (10)
Koyembedu Rohini (20 )
Thiruvottiyur Odean Mani (5)
டோண்டு சார்,
வித்யா என்ற பெண்ணின் கதையைப் பற்றியும் அவரது தந்தையைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள். ஆகக்கடைசியாக வந்த பின்னூட்டங்கள் இந்த தலைப்பை விட்டு விட்டு சிவாஜி திரைப்படத்துக்கு தாவி விட்டன. புதிய ஒரு பதிவைப் போடும் நேரம் உங்களுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
நேற்று பெற்ற உதவியை இன்றே மறந்து விடுகின்ற இந்தக் காலத்தில், என்றோ பெற்ற உதவியை இன்றைக்கும் நெஞ்சில் பூட்டி வைத்திருக்கிறீர்களே... மனதை நெகிழ வைக்கிறது. இப்படியல்லவா அனைவரும் இருக்க வேண்டும்.
நன்றி ராஜாமணி அவர்களே. எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த செக் அது. சாதாரணமாக பல சட்டவிதிகள் இருக்கும் இந்த விஷயத்தில் அனாயாசமாக ராம் செய்தது மிகப் பெரிய காரியம். எனக்குத் தெரியும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியிலும் இதே மாதிரி இருந்த வைப்பு நிதிகள் சில மாதங்கள் கழித்துத்தான் மாற்றப்பட்டன.
சிவாஜி பட அறிவிப்பு எனது நண்பர் இட்டது. அதை எனக்கு அனுப்பிவிட்டு அதைப் போடுமாறு மெனக்கெட்டு கேட்டுக் கொண்டார். நண்பரது இந்த சிறிய கோரிக்கை நிறைவேற்றுவதில் பிரச்சினை இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment