"பிருந்தாவனத்தில் நந்தன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ" என்றப் பாடல் எம்.எஸ். அவர்களது தேனினுமினிய குரலில் கேட்டு மகிழாத காதும் ஒரு காதோ! பாடல் வரிகள் எழுதியது கல்கி அவர்கள் என்று ஞாபகம். மீரா படத்துக்காக எழுதியது என்று நினைக்கிறேன் (அதாவது 99% உறுதி).
இப்பதிவு அப்பாடலைப் பற்றியது அல்ல. வேறு எதைப் பற்றி? மேலே படியுங்கள்.
ராபர்ட் பென்ச்லீ என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இம்மாதிரியான அந்த நாளைப் பற்றி (the good old days) எழுதும்போது குறிப்பிட்டார். The good old days are those, which when they really come back, you cannot stand for more than 5 minutes.
பாகவதத்தில் கண்ணன் கோகுலத்தை விட்டு கிளம்பியதும் திரும்பவும் அங்கே வரவேயில்லை என்றும் கூறுபவர் உண்டு. யசோதை, நந்தகோபன் ஆகியோரும் பிறகு கிருஷ்ணர் வாழ்க்கையில் வருவதாகத் தெரியவில்லை. ராமநந்த் சாகர் அவர்களின் கிருஷ்ணா தொலைக்கட்சித் தொடரில் பலராமர் கிருஷ்ணரிடம் பேசும்போது, "தம்பி, நாம் கோகுலத்தில் இருந்த அந்த இனிமையானக் காலக்கட்டம்.." என்று பேச ஆரம்பிக்க உடனேயே கிருஷ்ணர் கூறுகிறார், "அண்ணா, கோகுலத்தின் காலம் நம்மைப் பொருத்தவரை முடிந்து விட்டது. அதற்கு திரும்பப் போவது இயலாது, நாம் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் பல உள்ளன" என்று. பேச்சையும் மாற்றி விடுகிறார்.
சற்றே யோசியுங்கள். கோகுலத்திலேயே கிருஷ்ணர் இருந்திருக்க இயலுமா? குழந்தை கிருஷ்ணனை பாதுகாக்க வேண்டிய தினங்கள் அவை. கிருஷ்ணர் வயதுக்கு வந்து தன்னை மட்டுமன்றி மற்றவரையும் பார்த்து கொண்டால்தானே அவதார காரியம் நிகழும்?
ராபர்ட் பென்ச்லீ கூறுவதும் கவனிக்கத் தக்கதே. ஐம்பதுகளில் நாம் ரேடியோ சிலோன், அறுபதுகளில் விவித பாரதி என்றெல்லாம் விரும்பிக் கேட்டோம். பினாகா கீத் மாலாவில் அமீன் சயானியின் ரீங்காரமிடும் குரலைக் கேட்டு மகிழ்ந்தோம். தமிழ் ரேடியோ சிலோனில் மயில்வாகனன், ராஜா ஆகியோர் பலருக்கு பிடிக்கும். ஆனால் இப்போது? முதலில் ரேடியோ யார் கேட்கிறார்கள்? அப்படியே கேட்டாலும் அது எஃப்.எம். ரேடியோவாகத்தான் இருக்கும். ஆனால் அதுவும் மிக அதிகமாக வந்து போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. டி.வி.யில் ஒளியும் ஒலியும், வாரம் ஒரு முறை திரைப்படம் என்றெல்லாம் இருந்தபோது எவ்வளவு ஆவலுடன் கேட்டோம்? இப்போது? ஹூம்.
எதுவுமே புதிதாக வரும்போது ஆவலாகத்தான் இருக்கும். முதலில் ஹிந்தி கற்று கொண்டபோது எல்லா தமிழ் ஆங்கில வார்த்தைகளுக்கும் ஹிந்தி சொற்களை தேடியுள்ளேன். இப்போது? தேடுவதில்லை, ஆனால் கிடைத்தால் உள்வாங்கிக் கொள்வேன் அவ்வளவுதான். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உருவான போது சுண்டல் மடிக்கும் காகிதத்தில் ஏதாவது அச்சிடப்பட்டிருந்தால் அதையும் விரும்பிப் படித்தேன். பிறகு மெதுவாக என்னைக் கவர வேண்டுமானால், சொன்ன விஷயத்தை சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. இந்த மாற்றம் முதலில் தமிழில் தொடங்கி, பிறகு ஆங்கிலம், ஜெர்மன். பிரெஞ்சு என்று வேவேறு காலக் கட்டங்களில் நிகழ்ந்தது. இப்போது? எந்த மொழியிலுமே சுவாரசியமாக இருந்தால்தான் படிப்பது என்றாகி விட்டது. அதற்காகப் படிக்காமல் விட்டுவிட முடியுமா? படிப்பேன், ஆனால் அதை தனியாக உணர்ந்து செய்வதில்லை.
என்னை மாதிரியே மற்றவருக்கும் அவரவர் நிலைக்கேற்ப மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என நினைக்கிறேன். சிறு வயதில் மெரினா கடற்கரையில் நின்று கப்பல்கள் தெற்கு நோக்கி நகரும்போது அவை ஏதோ பெயர் தெரியாத ஊர்களுக்கு செல்வதாக கற்பனை வளரும். ஆனால் இப்போது அவை எந்த ஊருக்கு போகின்றன என்பதை சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும் ஆனால் ஆர்வமில்லை. சிறுவனாக இருந்த போது தி.நகர் நடேசன் பூங்காவை ஒரு வனமாக பாவித்து விளையாடி இருக்கிறேன். அதன் ஊடே செல்லும் பாதைகள் எங்கு போகின்றன என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன். (ஐந்து வயது டோண்டு ராகவன் அந்தக் காலத்தில் தானாகவே அந்தப் பாதைகள் வழியாகச் செல்ல இயலாது. அப்படிச் சென்று பிறகு வீட்டில் உதை வாங்கியிருக்கிறான், அது இங்கு எதற்கு)?
ஐம்பதுகள் எனது இளம்பிராயக் காலம். அதற்கு திரும்பப் போக முடிந்தால் என்ன ஆகும்? ஆனால் எந்த ரூபத்தில் செல்வது? இப்போது இருக்கும் அறுபத்தோரு வயது வாலிபனாகவா? அல்லது இப்போது இருக்கும் நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்க, பத்துவயது பாலகனாகவா? ஒத்து வருமா? திருவல்லிக்கேணியிலிருந்து மாம்பலத்தில் இருந்த பெரியப்பா வீட்டுக்கு செல்ல தேவைப் பட்ட பஸ் சார்ஜ் மூன்றணா (19 பைசாக்கள்) கூட அப்பாதான் தரவேண்டும். என் கையில் காலணா கிடையாது. 1.37 ஆகும் டாக்சி கட்டணம் மட்டும் கிடைக்குமா? இருப்பினும் இப்போது இருக்கும் அறிவு இருந்தால் அதெல்லாம் துக்கத்தைத்தானே வருவிக்கும்? விட்டால் போதும் என்று சில நிமிடங்களிலேயே தற்காலத்துக்கு ஓடி வந்து விட மாட்டேனா? ஆக, மேலே ராபர்ட் பென்ச்லீ சொன்னதில் விஷயம் இருக்கிறது. மேலும் அக்கால இனிய நினைவுகள் திரும்ப வேண்டுமானால் அக்கால அறியாமையும் தேவைப்படும். அப்போது வைத்திருந்து, பிற்காலத்தில் தவறானவை என்று நிரூபணமான நம்பிக்கைகளையும் அதே அறியாமையுடன் வைத்திருக்க வேண்டும். நடக்கும் காரியமா? நடந்தாலும் அதுவிரும்பத்தக்கதா?
அதனால்தான் கூறுகிறேன். அந்த அறியாமையுடன் சேர்ந்த இனிய அனுபவங்கள் பெற புதிது புதிதாகக் கற்க வேண்டும். இப்போது தமிழில் தட்டச்சு செய்வதையே எடுத்து கொள்ளுங்கள். தினம் ஏதாவது புதிதாக கற்க முடிகிறது. இப்போதைக்கு பிரமிப்பை ஊட்டுகின்றன. இனிய அனுபவம். வயது குறைந்தது போன்ற உணர்ச்சி. புதிய நம்பிக்கைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். அவை பொய்க்கும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு முன்னேற அவை தேவை.
இங்கே நான் குறிப்பிட்டப் போராட்டத்தை மறுபடியும் நடத்துவேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அது நடந்த 4 ஆண்டுகள் என் வாழ்க்கை பார்வை கோணத்தை மாற்றியது. சினிமா பார்ப்பதற்கும் பரீட்சையில் தோல்வியடைவதற்கும் தொடர்பில்லை என்று இப்போது இருக்கும் அறிவு அப்போது இல்லை. ஆகவே வைத்தியம் அப்போது வெற்றியடைந்தது.
அதே சமயம் சில அனுபவங்கள் சில மாற்றங்களுடன் திரும்ப வருகின்றன. உதாரணத்துக்கு சமீபத்தில் 1971-ல் கிடைத்த இந்த அனுபவம் இந்த ஆண்டிலும் மாறுதல்களுடன் வந்தது. மாறுதல்களுக்கு காரணம் முதல் அனுபவத்தின்போது இருந்த பல அறியாமைகள் இப்போது இல்லாமல் போனதே என நினைக்கிறேன்.
இப்போதும் பல அறியாமைகள் இன்னும் என்னிடம் இருக்கத்தான் வேண்டும். அவை காலப் போக்கில் வெளிப்படும். அதுவரை அவற்றின் காரணமாக நான் பெறும் இனிய நினைவுகளை வைத்து கொள்ள விரும்புவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
43 comments:
" அந்த காலத்து வாழ்க்கைக்கு அந்த காலத்து அறியாமை வேண்டும் ! " - i think thats well said . isnt IGNORANCE bliss ?
வயசாயிடுத்தோல்யோ, என்னமோ பதிவுங்கற பேர்ல உளரரேள்...ஒரு மண்ணும் இல்ல.
// i think thats well said . isnt IGNORANCE bliss?//
ஆமாமாம். ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லும்போது சாதாரணமாக அதன் சமையறையைப் பார்க்கக் கூடாது என்பார்கள். :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வயசாயிடுத்தோல்யோ, என்னமோ பதிவுங்கற பேர்ல உளரரேள்...ஒரு மண்ணும் இல்ல.//
அப்படீங்கறேள்? நேக்கு என்னவோ காலையில் எதேச்சையாக எம்.எஸ். பாட்டைக் கேட்டதே ஒரு விசையாக அமைந்து மனதிலிருந்து வார்த்தைகள் விரல்கள் வழியாக யந்திரத் துப்பாக்கி குண்டுகளின் வேகத்தில் படபடவென்று வந்து விழுந்து ஐந்து நிமிடத்தில் பதிவுகள் ஓவர், மேலே இன்னொரு ஐந்து நிமிடங்கள் சுட்டிகளை பொருத்த.
பதிவு தயார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேட்டில் என் நண்பர் கூறியது போல அந்த எம்.எஸ். பாட்டின் சுட்டியையும் தந்துள்ளேன். அந்தப் பக்கத்திற்கு போனதும் சம்பந்தப்பட்ட பாடலை செலக்ட் செய்யலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Going back into the past has been the dream of many persons. Suppose you go back to your socalled "recent" 1954 and see yourself as 8 or 9 year old boy; you may recognize the boy but how about him?
How about writing a story along those lines?
GK
Anonymous said...
"வயசாயிடுத்தோல்யோ, என்னமோ பதிவுங்கற பேர்ல உளரரேள்...ஒரு மண்ணும் இல்ல"
ஓய் நீர் சொல்றது நூற்றுக்கு நூறு கரெக்ட். டோண்டுப் பயல் அந்த ஏஜில அப்படித்தான் உளருவான். பின்னூட்டம் போட நாலு அம்பிகள் இருந்தா.......
\\ஓய் நீர் சொல்றது நூற்றுக்கு நூறு கரெக்ட். டோண்டுப் பயல் அந்த ஏஜில அப்படித்தான் உளருவான். பின்னூட்டம் போட நாலு அம்பிகள் இருந்தா.......//
டோய் சரியாத்தான் சொல்றீர், உன்ன மாதிறி மறுமொழி இடுவபவர்கள் எங்களுக்கு தேவை். அறிஞர் அண்ணா சொன்னா மாதிறி " தயவுசெய்து எங்களை நன்றாக கேலி செய்யுங்கள். நாங்கள் வெட்கபடும் அளவுக்கு கேலி பேசுங்கள் .் அப்போதுதான் எங்களின் ஆர்வம் மேலும் பேருகும்!்்"
உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறோம்.
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
உண்மைதான். விரோதிகள்தான் நம்மை முன்னேற்றுவதில் முக்கியப் பங்காற்றுபவர்கள். அவர்கள் இருப்பதால்தான் நாமும் ஜாக்கிரதையாக இருந்து பாதுகாப்புகள் செய்து கொள்கிறோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடக்கஷ்டமே,
ஏதோ பார்பனன், பார்பன பாஷையில் பதிலளித்தால் எதிரி என்றா எண்ணுவது?....
என்னபண்ணுவது, திராவிடருடன் பீர் குடித்து, கோழிக்கால் கடிப்பவருக்கு பார்பன பாஷை பேசுவதே விரோதமாகத்தான் தெரியும். அதிலும் நண்பர் மிரட்டப்பட்டதிலிருந்து இந்த பயமும், திராவிட பற்றும் அதிகமாத்தான் ஆகும் என்ன செய்வது.
Aha, Very Very Very Great! But I am unable to understand What are you tring to tell....
Ennamooo Pooo .....
பரவாயில்லையே கோவை பாலம், புரிஞ்சுக்காமலேயே பதிவு நான்னா இருக்குன்னு சொல்லிட்டீங்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த பயமும், திராவிட பற்றும் அதிகமாத்தான் ஆகும் என்ன செய்வது.//
பயமா, டோண்டு ராகவனுக்கா? என்ன உளறல்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
பயம் இல்லைன்னா நண்பர் விஷயத்தில் நடந்ததை மிகத் தெளிவான முறையில் எதிர்த்திருக்க முடியும், ஆனால் நீங்க அதனை செய்யவில்லை, உமது நண்பர் எ.அ. பாலாவும் செய்யவில்லை. அந்த விஷயத்தில் நீங்க் போட்ட பதிவு ஒன்றும் ஏற்றுக்கொள்ளும் விதமாக, அல்லது மிக தெளிவான சாட்சியாகவும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன் நீங்க பயந்தவரென்று.
//திராவிட பற்றும் அதிகமாத்தான் ஆகும் என்ன செய்வது.//
ஆமா, குடுப்ப அரசியல் சண்டையால திரவிடர்களே வேட்டி அவுந்து அலையறானுங்க. பற்று இருந்தவனுக்கே எல்லாம் போச்சு. இப்ப பற்று வந்துறுச்சாமுல பற்று. போய் வேலை இருந்தா பாரு.
//அதனால்தான் சொல்கிறேன் நீங்க பயந்தவரென்று.//
எல்லாம் நேரந்தேன். எனக்கு நேரடியா பின்னூட்டமிட்டா போலி டோண்டு திட்டுவான்னு பெயரை மறைச்சு பின்னூட்டம் போடற உங்களை மாதிரி கோழைப்பசங்க கிட்ட நான் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமேயில்லை.
அதே சமயம் இந்த விஷயத்துல நான் போட்ட பதிவும் அப்படியேத்தான் இருக்கு. அதுல எழுப்பட்ட கேள்விகளும் அப்படியேத்தான் இருக்கு.
போலி டோண்டுவோட அள்ளக்கைகள் யாருன்னும் ஒரு மாதிரியா குன்ஸா புரிஞ்சு போச்சு. அவங்க சங்காத்தமே வேண்டாம்னு இருக்கவும் முடியும். இந்தப் பிரச்சினையில் நான் நல்லவங்க என்று சிலரைத் தவறாக எண்ணினேன் என்பதையும் பல நிகழ்ச்சிகளால் கன்ஃபர்ம் செஞ்சுக்க முடிஞ்சுது. அது வரைக்கும் கெட்டதுலேயும் நல்லது நடந்திருக்கு.
மறுபடியும் சொல்லறேன், உம்மை மாதிரி கோழைகளுக்கு எனக்கு சான்றிதழ் தரும் எந்த யோக்கியதையும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆமா, குடுப்ப அரசியல் சண்டையால திரவிடர்களே வேட்டி அவுந்து அலையறானுங்க.//
:)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hello Dondu Sir,
Thiru. M.K calls everyone as "Udanprappe", So we are all one family (Brothers). So what happen was our brothers fought each other, we last our 3 brothers ...
That is all .... So, we need not fight each other brother ....
I want to keep name as "Kovai fruit" and "Kovai bridge" as I am from Coimbatore and I am not toooo young still my age is in 2 digits ...
so., my first comment got published today ...
By the way, I am reading tamil blogs around six months.
I wish all of you to stop pull each other....
As a senior person, I request you to stop "unwanted arguments ...."
Hope you take this sugesstion ...
To be honest, I like both you and Vidathu Karuppu blogs ....
Both are great ... and Oposites ...
But use this space as for some good talk.....
As I don't have blog and yet to download tamil fonts.... request from here, beacause both parties
comes here
So... finally, you are good writer and use it for good cause.
What happended in Madurai is Bad, Pl. we don't talk abt bad ....
//toooo young still my age is in 2 digits//
எனக்கும் இரண்டு இலக்கத்தில்தான் வயது சார்.(61 வயது வாலிபன்)
:)
தமிழ் தட்டச்சு செய்ய இந்த சுட்டிக்கு செல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
So what happen was our brothers fought each other, we last our .....
ஏன்டா இங்கிலிஷ இப்படி கொல்றிங்க.
What happended in Madurai is Bad, Pl. we don't talk abt bad ....
தவறுகளை பேசாமல் இருப்பதே ஒரு தவறு.
My Dear Dondu Fans!
Thanks for your respect
I Did not studied in Convent dear,
So, I tried my level best.
(Poor tamil medium student,
What to do and 1st person to pass +2 in family .... )
You are always welcome to correct me ...
I will try to download Tamil Fonts ..
Again, if there is any Mistakes ... ???!!??? Don't do ....
KoVai,
மன்னிக்கவும். தமிழ் தட்டச்சுக்கான சுட்டி தர மறந்து விட்டேன். இதோ அது. http://sg.tamil.sg/beta/main.php
இதில் ammaa enRu அடித்தால் அம்மா என்று மாறும். n+space = ந். மீதியை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லது கெட்டதுமாய் பல விஷயங்களை நியாபகப்படுத்தியது உங்கள் பதிவு. எது எப்படியோ, அந்த நாட்க்கள் வராத வரை தான் அது இனிமை. ஏன் எனில் அது வந்தபின் வேறொரு விஷயம் இனிமையானதாகிவிடும். அக்கரைக்கு இக்கரை பச்சைதான்...
It is a little embarrassing sir. There are some bloggers, who say that I am u. A blogger by name Mahendran has even put up a post to that effect.
The reason for my raising this point here is relevant to this post and is as follows.
When you started blogging, did u by any chance anticipate all these things? Now that you know what is happening and the amount of hate comments that are coming in many places against you, dont u think that your initial excitement of being able to type in Tamil was mainly due to your ignorance of what was going to happen?
By the way, what is your reaction to my earlier comment in this post about your travel into the past?
GK
//dont u think that your initial excitement of being able to type in Tamil was mainly due to your ignorance of what was going to happen?//
கோபாலகிருஷ்ணுடு அவர்களே,
நாம் வாழ்க்கையில் பலதருணங்களில் ஒரு கேள்வியை அடிக்கடி நம்மையே கேட்டு கொண்டிருப்போம். வாழ்வின் திருப்பு முனைகளில் பல முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்க்கையும் அதன் திசையில் பயணம் செய்திருக்கும். அப்போது நாம் ஒருவேளை வேறு முடிவை எடுத்திருந்தால் வாழ்க்கை எந்த வடிவை அடைந்திருக்கும் என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.
நீங்கள் இங்கு கேட்ட கேள்விக்கே வருகிறேன். ஆம் தமிழில் தட்டச்சு செய்ய முடிவதை உணர்ந்த அந்தத் தருணத்தில் நீங்கள் சொன்ன அறியாமை இருந்தது என்றும் கூறலாம் இல்லை என்றும் கூறலாம். அதாவது வாழ்க்கையில் எதிர்ப்பாராதவை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது பொது விதி. அதே சமயம் அவை என்னென்ன என்பது அறியாமை.
தமிழ் இணையத்தில் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருந்தது கடவுளின் அருள். அவை ஒவ்வொன்றாக வந்தபோது அவற்றை என்னளவில் சமாளிக்க முடிந்ததற்கு மாற்றங்கள் பற்றிய இந்தப் பொதுவிதியை அறிந்ததே முக்கிய காரணம்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த மகேந்திரன் பதிவைப் பார்த்தேன். பொழுது போகாத சில நபர்கள் உண்டு. அவர்கள் ஏதாவது உளறுவார்கள்.
வால்டர் வெற்றிவேலின் பதிவு ஒன்றில் உங்களை மெனக்கெட்டு அழைத்து நீங்களும் அங்கு பின்னூட்டமிட்டீர்கள். என்ன ஆயிற்று? நீங்கள் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்காமல் பிதற்றினார் அவர். நீங்கள் அவரை இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் எல்லோருமே இவர்தான் என்று குறிப்பிட்டதும் நம்பத்தகுந்ததே.
நீங்கள் பதிவாளர் எண்ணை என்னைப்போல அடைப்புக் குறிகளுக்குள் போட்டு கொள்வதால் நானும் நீங்களும் ஒரே நபர் என்று கூறிய வால்டர் வெற்றிவேல், மெனக்கெட்டு பாரதியார் பற்றிய பதிவில் உங்கள் கருத்தை அளிக்குமாறு கூறிவிட்டு, நீங்கள் அளித்தவுடன் உங்களை டோண்டு என்று அழைத்ததிலிருந்தே தெரிகிறது அது போலி டோண்டு அல்லது அவனது அள்ளக்கைகளில் ஒன்று என்று. ஏனெனில் டோண்டு ஃபிக்ஸேஷன் உள்ளவன் போலி டோண்டுவாகத்தான் இருக்க முடியும்.
எதுவானால் என்ன அவரும் தவிர்க்கப்பட வேண்டிய நபர்தான். அம்மாதிரியானவர்களை மதிக்காதீர்கள் என்றே நான் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆமா எனக்கொரு சந்தேகம் உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடற யாரும் பதிவே எழுதறதில்லையே அது ஏனுங்க? உதாரணமா இந்த பதிவையே எடுத்துக்கோங்க யாருக்கும் பேருக்கு கூட ஒரு போஸ்ட் இல்லையே:?
இந்த சந்தேகம் பல நாளா இருக்கு :)
//இந்த சந்தேகம் பல நாளா இருக்கு :)//
அனானியா பின்னூட்டம் போடறவங்க பதிவு போடறதில்லைன்னு சொல்ல முடியுமா? மதுசூதனன் பதிவு போடுகிறார். இப்ப நீங்களும் பதிவு போடறவர்தானே.
ஆனால் எனக்கு வேறு ஒரு சந்தேகம். இம்மாதிரி ஒரு பதிவருக்கு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு ஒரு ஆள் சொல்லறான், மீறி போடறவங்களை போய் செந்தமிழில் திட்டறான். அதுதான் போலி டோண்டு என்கிற விடாது கருப்பு என்கிற கொசுபிடுங்கி என்கிற சிவனடியார் என்கிற வால்டர் வெற்றிவேல் என்கிற செம்புநக்கி. இவங்க பேரெல்லாம் நீங்க ஒத்துக்கலைன்னாலும் போலி டோண்டு இருப்பதை மறுக்க முடியாது. அவனை எங்காவது நீங்கள் கண்டித்துள்ளீர்களா? விடாது கருப்புவும் போலி டோண்டுவும் ஒரே ஆளுங்கறதை சந்தேகத்துக்கிடமில்லாமே மாயவரத்தான் ஐப்பி வச்சு கண்டுபிடிச்சார். அவனோட நீங்க கூட்டு வச்சிருக்கீங்க. முதல் தடவை அவனைத் தமிழ்மணம் தூக்கின போது நீங்கள் தனிப்பட்ட முறையில் உத்திரவாதம் அளித்து மீண்டும் கொண்டு வந்தீர்கள். ஆனால் இப்போது மறுபடி நீக்கப்பட்டப்போது நீங்களே வாயடைச்சுத்தானே நிக்கறீங்க.
அதே சமயம் விடாது கருப்புக்கு நன்றி கூறி நான் பெரியார் பதிவை இட்டேன். அதற்கான கருப்புவின் பின்னூட்டமே போலி டோண்டுவின் தரத்தில் வந்து காண்பித்து கொடுத்ததே. அதற்கு பிறகு எனக்கு சில பின்னூட்டங்கள் விடாது கருப்புவிடமிருந்து மிக தரம்கெட்ட மொழியில் வந்தனவே.
இம்மாதிரி ஆட்கள் இருக்கும்போது எனக்கு பதிவு போடுபவர்கள் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள். இதில் என்ன குற்றம் கண்டீர்கள்? அவ்வாறு பின்னூட்டம் போடுபவர்களும் நரசிம்மன் ஐயங்கார், ராம்தாஸ் அய்யர் ஆகியோரது தரத்திலா பின்னூட்டம் இடுகின்றனர்?
நான் இப்போது அனானி ஆப்ஷனை திறந்து விட்டிருப்பதால் பல பின்னூட்டங்கள் அனானியாகவே வருகின்றன. ஏதேனும் ஆட்சேபணை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் தனிப்பட்ட முறையில் உத்திரவாதம் அளித்து மீண்டும் கொண்டு வந்தீர்கள். ஆனால் இப்போது மறுபடி நீக்கப்பட்டப்போது நீங்களே வாயடைச்சுத்தானே நிக்கறீங்க.//
நல்ல கூத்து இது அவர் பதிவில் நான் எழுதியது ஒரே பதிவு அதே போல நான் அவருக்கு தனிப்பட உத்தரவாதம் எதுவும் அளித்து உள்ளே அழைத்துவரவில்லை அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை.... ஆனால் விடாது கருப்பு விலக்கப்பட்டு நான் வாயடைத்து இருப்பதாக எழுதுகிறீர்களே? அதுதான் கேலிக் கூத்து. உங்களை போல் சப்பைக்கட்டு கட்டுமளவுக்கு எனக்கு ஞானமில்லை, போகும் இடமெல்லாம் போலி போலி என புலம்பித் தள்ளும் உங்கள் வாதம் ஊசிப்போன வடை அதை இனியும் தமிழ்மணத்தில் பரப்ப ஏன் உங்களுக்கு இத்தனை ஆவல்? உங்கள் பக்கமிருந்து போலியாக எழுதி ஒருவர் மாட்டிக்கொண்டபோது சத்தம் போடாமல் அவர் செய்யவே இல்லை என சண்டித்தனம் செய்த நீங்கள் நீங்கள் எழுதி மாட்டிக்கொண்ட போது போர்த்தந்திரம் என பிதற்றிய நீங்கள் போலிகள் பற்றி விடாது கருப்பு பற்றி பேச எந்த அருகதையும் இல்லை, உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் எனது பெயரையும் சம்மந்தப் படுத்தி நான் போலியாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்ததே எனச் சொல்லியிருக்கும் உங்களை பார்த்து எனக்கு சிரிப்பும் பாவமுமாக இருக்கிறது ஒரு நல்ல நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது
//அதுதான் போலி டோண்டு என்கிற விடாது கருப்பு என்கிற கொசுபிடுங்கி என்கிற சிவனடியார் என்கிற வால்டர் வெற்றிவேல் என்கிற செம்புநக்கி. இவங்க பேரெல்லாம் நீங்க ஒத்துக்கலைன்னாலும் போலி டோண்டு இருப்பதை மறுக்க முடியாது. அவனை எங்காவது நீங்கள் கண்டித்துள்ளீர்களா? விடாது கருப்புவும் போலி டோண்டுவும் ஒரே ஆளுங்கறதை சந்தேகத்துக்கிடமில்லாமே மாயவரத்தான் ஐப்பி வச்சு கண்டுபிடிச்சார். //
கொசுபுடுங்கி உன்னைக் கண்டுபிடித்ததனே? அதுவும் ஆதாரத்துடன்? போய் தூக்கு மாட்டி தொங்க வேண்டியதுதானே?
அது போகட்டும்.
வரதன், பரதன், சர்வாண்டிஸ், ராபின்ஹூட், ஹேரிபொட்டர், கண்ணம்மா, தங்கம்மா, எல்லாம் நீங்க இல்லவே இல்லையா?
ஐப்பி வெச்சு நிரூபித்தால் தூக்கு மாட்டி சாகறியா?
//உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் எனது பெயரையும் சம்மந்தப் படுத்தி நான் போலியாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்ததே எனச் சொல்லியிருக்கும் உங்களை பார்த்து எனக்கு சிரிப்பும் பாவமுமாக இருக்கிறது ஒரு நல்ல நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது//
நிபுணரை நீங்கள்தான் பார்க்க வேண்டும். நான் எங்கு உங்கள் பெயரை சொன்னேன்?
இப்பதிவில் கோபாலகிருஷ்ணுடுவிடம் கூறியது இதுதான்.
"வால்டர் வெற்றிவேலின் பதிவு ஒன்றில் உங்களை மெனக்கெட்டு அழைத்து நீங்களும் அங்கு பின்னூட்டமிட்டீர்கள். என்ன ஆயிற்று? நீங்கள் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்காமல் பிதற்றினார் அவர். நீங்கள் அவரை இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் எல்லோருமே இவர்தான் என்று குறிப்பிட்டதும் நம்பத்தகுந்ததே".
ஆக, நான் கூறவில்லை. கோபால கிருஷ்ணுடு கூறியதை ஆமோதித்தேன் அவ்வளவே.
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், கோபாலகிருஷ்ணுடுவும் உங்கள் பெயரை குறிப்பிடவில்லை. வால்டர் வெற்றிவேல் மெனக்கெட்டு அவரைத் தன் பதிவைப் பார்க்கச் சொன்னார் என்பதற்காகவே வந்த கோபாலகிருஷ்ணுடுவை தூற்றியதாலேயே அவர் இப்பின்னூட்டம் இட்டார்.
//You invited me, I came. What makes you think, I am Dondu?
What nonsense r u talking, Vidaathu Karuppu/Sivanadiyaar/kosu pidunggi/sempunakki/Pooli Doondu/Walter Vetrivel?
Many of your aliases have been thrown out of thamizmaNam and I guess, Walter Vetrivel too will follow soon.
Do stick to the post topic. Having mentioned Dondu, do prove what you said about his saying that his caste is suprerior.// பார்க்க: http://vaaltarvetrivel.blogspot.com/2007/05/blog-post_08.html
அதை கோட் செய்து வால்டர் வெற்றிவேல் என்ற பதிவர் தன்பதிவிலேயே இட்டப் பின்னூட்டம் இதோ: "இன்னொரு கண்டுபிடிப்பும் சொன்னார். அதாவது போலி, கருப்பு, சிவமுருகன், நான், மகேந்திரன் எல்லோரும் ஒன்றாம்." பார்க்க: http://vaaltarvetrivel.blogspot.com/2007/05/blog-post_10.html
இப்ப புரிகிறதா, அப்பா குதிருக்குள்ள இல்லன்னு வால்டர் வெற்றிவேலே உங்க பெயரை இழுத்து விட்டிருக்கார். இதிலே சிவமுருகன் யார்னு தெரியல்லே. மேலும் முதலில் சொன்னது கோபாலகிருஷ்ணுடு. அதை நான் பின்னால் ஆமோதித்தேன் என்பது வேறு விஷயம். ஆக, உங்கள் பெயர் எப்போதுமே பிக்சரில் இல்லை. வால்டர் வெற்றிவேலாகவே உளறினதுதான் அது.
இப்ப விடாது கருப்புவிடம் செல்லலாமா?
//அவர் பதிவில் நான் எழுதியது ஒரே பதிவு அதே போல நான் அவருக்கு தனிப்பட உத்தரவாதம் எதுவும் அளித்து உள்ளே அழைத்துவரவில்லை அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை.... //
அப்படியா, ஆனாக்க அவர் உங்கள் ப்ரொஃபைலில்தானே இருக்கிறார்? பார்க்க: http://www.blogger.com/profile/17863131935297558260
அதான் சயாம இரட்டையர் போலத்தானே இருக்கிறீர்கள். மேலும் தமிழ்மணம் விகவை திரும்ப அனுமதித்த போது அந்த வலைப்பூவை நீங்கள் எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகத்தான் தமிழ்மண நிர்வாகத்தால் கூறப்பட்டது.
அது சரி, அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பதிவர் எல்லோரிடமும் போய் இன்னொரு பதிவரின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்று கூறுவது அடாவடியில்லையா? அதைப் பற்றி உங்கள் கருத்து?
//உங்கள் பக்கமிருந்து போலியாக எழுதி ஒருவர் மாட்டிக்கொண்டபோது சத்தம் போடாமல் அவர் செய்யவே இல்லை என சண்டித்தனம் செய்த நீங்கள், நீங்கள் எழுதி மாட்டிக்கொண்ட போது..//
அவர் செய்யவே இல்லை என்று இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன். இது சண்டித்தனமே இல்லை. உறுதியான நிலைப்பாடு.
மேலும் நான் புனைப்பெயர் வைத்து கொள்வதும் கொள்ளாததும் என் இஷ்டம். நீங்கள் துதிக்கும் பெரியாரே சித்திரகுப்தன் என்னும் பெயரிலும் எழுதியவர்தானே? அண்ணாத்துரை -சௌம்யன், கல்கி - தமிழ்த்தேனீ. ஜவஹர்லால் நேருவே புனைப்பெயரில் எழுதியவர். நான் முரளி மனோஹர் என்ற பெயரில் எழுதுவது என் இஷ்டம். வேறு யாராவது அதே பெயரில் பதிவர் இருந்து, போலி டோண்டு செய்வது போல அதை காப்பியடித்து அவர் எழுதியது போலவா செய்துவிட்டேன்? விட்டால் பேசிக்கொண்டே போவீர்களே?
உங்கள் நண்பர் கோவி கண்ணன் தனது பதிவில் வேண்டுமென்றே முரளி மனோஹரை இழுக்க அதற்கு நான் போட்ட பதிலை வெளியிட தைரியமின்றி மழுப்பினார். அப்பதிலை இங்கு வெளியிடுகிறேன்.
"//முரளி மனோகருக்கும், நாடக வித்தகர் ஆர் எஸ் மனோகருக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா..//
தொடர்புன்னு சொல்லறதை விட என்ன ஒத்துமைன்னு கேட்கலாம்.
இரண்டு பேருமே ஆபாசம் இல்லாமல் தரமாக எழுதுபவர்கள். அதிலும் முன்னவர் ஆபாசமாக எழுதினார் என்பதை நிரூபிக்க அத்தனை போலி டோண்டு ஆதரவாளர்களும் பல நாட்களாக இணையத்தைத் தேடி அலைந்து த்ரௌபதி புடவையைக் களைய முயன்ற துச்சாசனன் போல சோர்ந்து அமர்ந்தனர்.
முக்கி முக்கி ராஜாவனஜ் அவர்களது கம்பெனி பெயரைச் சொன்னதாக கூறினர். அதுவும் தவறு என்று ராஜ் வனஜே கூறிவிட்டார். பார்க்க: http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html
The only fig leaf, which the anti-Murali Manohar crowd was wearing remains blown away in the wind.
I am giving this comment just for giving you this good news. Thanks for the opportunity.
அதற்கு கோவி கண்ணன் அவர்கள் அளித்த மீசையில் மண் ஒட்டவில்லை ரீதியில் அளித்த பதில்:
//மிஸ்டர் டோண்டு,
வெளியில் உதாரணத்துக்கு செல்வானேன் என்பதற்காக மனோகர் & கோவைக் குறிப்பிட்டேன்.. அவரு ஆபாசமாக எழுதினாரா? ஆடை இன்றி எழுதினாரா என்பதெல்லாம் இங்கு தேவை இல்லாத செய்தி ... எனவே தங்கள் பின்னூட்டத்தை வெளியிட இயலாமைக்கு எனக்கும் வருத்தம் உண்டு.// பார்க்க: http://govikannan.blogspot.com/2007/05/blog-post_10.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கொசுபுடுங்கி உன்னைக் கண்டுபிடித்ததனே? அதுவும் ஆதாரத்துடன்? போய் தூக்கு மாட்டி தொங்க வேண்டியதுதானே?//
நான் ஏன் தூக்கு மாட்டிக்கணும் மூடனே? முரளிமனோஹர்ங்கறது புனைப்பெயர். அது வச்சுக்கிறதுக்கு எந்த ஜாட்டானுடைய அனுமதியும் தேவையில்லை. அதே சமயம் விடாது கருப்புவும் போலி டோண்டுவும் ஒரே ஆள்னு மாயவரத்தான் நிரூபிச்சாரே? அவங்கதான் தூக்குல தொங்கணும்.
கொசுபிடுங்கியைத்தான் தமிழ்மணத்துலேயிருந்து கடாசி வீசினாங்க. அதுக்கு என்ன சொல்லுவீர்?
எனக்கு வேணும்னா நான் எவ்வளவு புனைப்பெயர் வேணும்னாலும் வச்சுப்பேன். நீர் யாரையா அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க?
நீர் சொன்ன மத்தப் பெயர்கள் என் நண்பர்களுடையது.
போலி டோண்டுவோட அள்ளக்கையான உமக்கு இத்தனை பதில் தந்ததே அதிகம். மூடிண்டு போம். இனிமேல் இம்மாதிரி தரக்குறைவான பின்னூட்டங்கள் வந்தா அவை அழிக்கப்படும்.
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
வழக்கம் போல உங்களது இந்தக் கட்டுரையும் படிப்பதற்கு நன்றாக இருந்தது. அந்தப் பாடலுக்கான சுட்டியை தந்ததற்கு நன்றி.
எழுத்துத் திறமை கொண்ட நீங்கள் ஏன் கண்ட கண்ட பிரச்னைகளில் எல்லாம் மாட்டிக்கொண்டு உங்கள் நேரத்தை அதற்கு செலவழிக்கிறீர்கள்? அந்த நேரத்தில் மற்ற எவ்வளவோ நன்மைபயக்கின்ற வேலைகளை செய்யலாம். உங்களுக்கு வருகின்ற பின்னூட்டங்களில், தலைப்புக்கு ஏற்றதை மட்டும் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் எழுத்து மீது, திறமை மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். தயவு செய்து உங்களுக்கு பின்னூட்டம் இடும் ஒரு சிலரது தரத்துக்கு உங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் தலைப்புக்கு தொடர்பான பயனுள்ள பின்னூட்டம் என்றால் பதிலளியுங்கள்; இல்லையெனில் அடுத்த கட்டுரைக்கு சென்று விடுங்கள்.
நீங்கள் கூறுவது 100 % சரிதான். நானும் எவ்வளவோ கட்டுப்படுத்திக் கொண்டு பல பின்னூட்டங்களை நிராகரிக்கிறேன். இன்னும் என்னை அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இவ்வாறு பதிலளித்துக்கொண்டே போனால், அதற்கு ஒரு முடிவே இருக்காது. அவரவர்களுக்கு அவர்கள் சொல்வது தானே சரியாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் வேறு நல்ல கட்டுரைகளை எழுதிவிட முடியும். எதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தான் யோசிக்கிறேன். யார் என்ன சொன்னால் என்ன? They are only wasting their precious time. Or maybe they don't consider it precious?
//இவ்வாறு பதிலளித்துக்கொண்டே போனால், அதற்கு ஒரு முடிவே இருக்காது.//
நிச்சயமாக. உங்களது முந்தையப் பின்னூட்டத்துக்கு பிறகு வந்த பல பின்னூட்டங்களை இதற்காகவே ரிஜக்ட் செய்தேன்.
இப்பதிவில் வழக்கத்துக்கு மாறாக ஹார்ஷாக ரியேக்ட் செய்ததும் ஒரு வித கேல்குலேஷனே. ராஜவனஜ் விஷயத்தில் நான் செய்யாததை செய்ததாக இவ்வளவு நாள் கூறிக் கொண்டிருந்தனர். இந்த சந்தடி சாக்கில் அதையும் க்ளேரிஃபை செய்தேன். அப்படியே நான் புனைப்பெயர் வைத்துக் கொள்வதோ கொள்ளாததோ எனது இஷ்டம் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியாகி விட்டாது. செய்ய நினைத்ததை பிசகாமல் செய்தாயிற்று. இனிமேல் அந்த ஜாட்டான்களை நான் சீந்தப் போவதில்லை?
வாழ்த்து கூறி நாலைந்து பதிவர்கள் சேட்டில் வந்தனர். அவர்களுக்கும் சந்தோஷம். எனது நன்றி.
இனிமேல் என் வேலையை கவனிக்கலாம். நேருவின் லெகஸி பற்றி அடுத்தப் பதிவும் வரவுள்ளது.
என் நலத்தில் அக்கறையுடன் பின்னூட்டமிட்ட உங்களுக்கும் என் நன்றி.
//They are only wasting their precious time. Or maybe they don't consider it precious?//
இரண்டுக்கும் ஆம் என்ற அழுத்தம் திருத்தமான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இனிமேல் என் வேலையை கவனிக்கலாம். நேருவின் லெகஸி பற்றி அடுத்தப் பதிவும் வரவுள்ளது.//
உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
எதிரணியில் யார் யார் உள்ளனர் என்பதைத் தெளிவாக்கி, சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போதைக்கு அது சம்பந்தமான கும்மிகள் போதுமே.
இனிமேல் பதிவு சம்பந்தமானப் பின்னூட்டங்களே போடுமாறு கேட்டு கொள்கிறேன்.
நானே இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறேன்.
கோபாலகிருஷ்ணுடு கேட்டபடி காலப் பயணம் செய்து 1954-ஐ அடைந்து 8 வயது டோண்டு ராகவனைப் பார்ப்பது என்பது த்ரில்லிங்காகத்தான் இருக்கும். டெர்ரி பிராச்செட் (Terry Pratchett) எழுதிய, Johny and the bomb என்னும் புத்தகத்தில் 10 வயது பாலகன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்னால் தாங்கள் வசிக்கும் பகுதிக்கே வருகிறான். அங்கு அவன் ஒரு ஆறு வயது சிறுவனைப் பார்க்கிறான். அது அவனது அம்மாவழித் தாத்தா. மற்ற பையன்கள் இச்சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு தங்கள் காலத்துக்கு திரும்புகின்றனர். இச்சிறுவனின் தாத்தா குண்டு வெடிப்பில் இறந்துவிட, இச்சிறுவனை அவன் தாத்தாவின் பெற்றோர்களே தத்தெடுக்கின்றனர். அவன் சாவகாசமாக ஐம்பது ஆண்டுகள் கழித்து அதே ஊரில் தன் பத்து வயது நண்பர்களை சந்திக்கிறான். இவனுக்கு அப்போது வயது 60. இவன் தாத்தா இறந்துவிட்டதால் இவன் அம்மா பிறக்கவில்லை, இவனும் பிறக்கவில்லை. ஒரே கன்ஃப்யூஷன் (ஜனகராஜ் குரலில்). மற்ற பையன்களுக்கு ஆச்சரியம்.
திரும்பவும் கால யந்திரத்தின் மூலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்று, அங்கே விட்ட தங்கள் நண்பனை கண்டு கொண்டு, அவனது ஆறு வயது தாத்தாவின் உயிரையும் காப்பாற்றி, இந்தப் பையன் பிறக்கப் போவதை நிச்சயம் செய்து கொள்கின்றனர்.
தலை சுற்றுகிறதா? எனக்கும்தான். இப்புத்தகத்தில் ஆசிரியர் trousers of time என்ற கான்சப்டைத் தருகிறார். அதாவது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றுக்கு மேல்பட்ட நிகழ்ச்சியும் நடக்கலாம். அதற்கேற்ப ஒவ்வொரு கேசிலும் உலகம் வெவ்வேறு முறைகளில் உருப்பெறும். உண்மை கூறப்போனால் எண்ணிக்கைக்கு அடங்காத யூனிவெர்சுகள் உள்ளன. ட்ரௌஸரின் ஒரு கால் பகுதி வழியாக மேலே சென்று, இன்னொரு கால வழியாக வருவதுதான் அது.
இசாக் அசிமோவின் புத்தகம் ஒன்றிலும் இதே கான்சப்ட் உண்டு. அதில் ஒரு உலகத்தில் ஜெர்மனி யுத்தத்தில் வெற்றி பெறுகிறது. Harris என்னும் எழுத்தாளர் எழுதிய Fatherland என்ற நாவலிலும் ஜெர்மனி வெற்றிபெறும் இதே கான்சப்ட்தான்.
Alternate history என்றும் கூறுவார்கள்.
என்ன குழப்பிவிட்டேனா? நான் குழம்பியதை விடவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்.
என் பின்னோட்டங்களை தடை செய்த டோண்டுவுக்கு என் பலமான கண்டனம்
இனி இவர் பதிவுகளில் பின்னோட்டம் நான் இட போவதில்லை
யார் என்பது உங்களுக்கே தெரியும்
//யார் என்பது உங்களுக்கே தெரியும்//
இல்லை தெரியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//My Dear Dondu Fans!
Thanks for your respect
I Did not studied in Convent dear,
So, I tried my level best.
(Poor tamil medium student,
What to do and 1st person to pass +2 in family .... )
You are always welcome to correct me ... //
அய்யா கொவ்வாபழம் அவர்களே,
உங்கள் ஆர்வத்தை கன்டால் நீங்கள் எளிதில் ஆங்கிலம் கற்கலாம் என்று நினைக்கிறேன். ஆங்கிலம் கற்க Spoken English Made Easy என்ற புத்தகம் Higginbothams'ல் கிடைக்கிறது, விலையும் ரூ.100 போல உள்ளது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி!
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
//Poor tamil medium student,
What to do and 1st person to pass +2 in family .... //
தமிழில் படித்தால் என்ன கேவலமா? ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதற்கு மேல் அதை துதிக்கத் தேவையில்லை.
தமிழிலேயே நாம் கூற நினைப்பதை கூறிவிடலாம்.
நான் அறிந்த 6 மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
i have often wished that i was
born in the early 1900s and died before 1970, in my native village.
But i was born in 1968 and stuck here.
It seems those days, human relationships and family values were more deep and genuine ; and
less stress and more happieness..
less cynical than we are now..
i have often envied my great grandmother, born, brought up and
died in a remote village ; sturdy and strong surrounded by loving relations. but by our current standards, she was not rich, lower middle class..
ikkaraikku akkarai pachai. and i
am not sure if i am right.
and an old saying goes :
"today's stress is tommorow's nostalgia !"
anbudan
K.R.Athiyaman
//i have often envied my great grandmother, born, brought up and
died in a remote village ; sturdy and strong surrounded by loving relations. but by our current standards, she was not rich, lower middle class..//
இப்போது அந்தப் பாட்டி இருந்து, அவரிடம் இதைச் சொன்னால் அவர் சிரிப்பார் என நினைக்கிறேன்.
//ikkaraikku akkarai pachai. and i
am not sure if i am right.//
சரிதான். அதாவது இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment