8/27/2007

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் தண்டனை?

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஹிந்தி மூலப்படத்தில் கமலஹாசன் தமிழில் ஏற்ற பாத்திரத்தில் நடித்த சஞ்சய்தத்தை கட்டிப்பிடித்து விடை கொடுத்த எரவாடா சிறை காவலாளி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு காவலாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இன்றைய ஹிந்துவில் வந்த பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

"Constable suspended
Pune: A constable has been suspended for hugging Sanjay Dutt and eight others will face a departmental probe for their friendly gestures towards the actor, jail superintendent Rajendra Dhamne said.— PTI"

சஞ்சய்தத் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளி என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இப்பதிவும் அது பற்றி பேசப்போவதில்லை. இடைஜாமீன் பெற்று வெளியே சென்ற அவரை நட்புடன் வழியனுப்பியதுதான் அந்தக் காவாலாளி செய்த தவறு என்றால் ஒன்று புரியவில்லை எனக்கு. சினேக பாவம் குற்றமா? அது நமது மரபணுக்களில் ஊறியதல்லவா? மேலும் சிறை காவலாளி என்பவரும் மனிதர்தானே? இவ்வாறு செய்யக் கூடாது என பஞ்சாப் சிறைவிதிகளின் கையேட்டில் கூறப்பட்டுள்ளதா? அப்படி என்றால் என்ன பிரிவில் அது வருகிறது? வழக்கறிஞர்/பதிவர் ராஜதுரை ஏதாவது இது பற்றி கூற இயலுமா?

சிறை தண்டனை என்பது திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக கருதுவதுதானே நல்லது? தூக்கு தண்டனை பெற்ற கைதிகளுடன் கூட அனுதாபத்துடன் பழகும் சிறை அதிகாரிகள் இல்லையா? போலீஸ் திருடன் விவகாரத்தில் காலப் போக்கில் ஒரு வித அந்நியோன்யம் ஏற்படுவது ஒன்றும் புதிதில்லையே? "என்னப்பா, திரும்பவும் மாமியார் வீட்டு வாசம்தானா" என சிறை அதிகாரி கேட்க, "அது இல்லாமல் போர் அடிக்கிறது" என கைதியும் பதில் தர மொத்தத்தில் சூழ்நிலையின் இருக்கம் குறைகிறது பல சமயங்களில்.

முதல் உலகப் போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது எல்லைகளில் சண்டையிடும் ஜெர்மானிய மற்றும் நேசப்படையினர் அந்த ஒரு நாளைக்கு நட்புடன் கைகுலுக்கிப் பழக, சீறி எழுந்தனர் ராணுவத் தலைவர்கள். அவ்வாறு விரோதியுடன் சினேக பாவத்தில் இருந்ததற்காக பலர் மிலிட்டரி கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை கூட அடைந்தனர். ஆனால் அதே போரில் கொழுப்பெடுத்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இரு தரப்பிலும் காவு கொடுக்கப்பட்டனர் என்பதை சரித்திரம் இப்போது உணர்த்துகிறது. கேனத்தனமாக திட்டமிட்டு இதற்கு வழிவகுத்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு தண்டனையும் கிடையாது.

ஆக வாழ்க்கை என்பது எப்போதுமே லாஜிகலாகலாக இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது என்பதே நிஜம். வாழ்க்கை பல சமயம் அபத்தமாகவே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Anonymous said...

போரின்போது எதிரியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எதற்கு? ராணுவ ரகசியம் ஏதாவது வெளீயே போய் விட்டால்?

ஆனால் கைதிகளை மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதை ஒத்து கொள்கிறேன்.காவலர்களும் அவர்களும் எதிரிகளாக பழக வேண்டியதில்லை. நன்னடத்தை உள்ள கைதிகளை காவலருடன் பழக அனுமதிக்கலாம்

Anonymous said...

கைதிகள் ஆம்பளை போலிசை கட்டிபிடிக்க அனுமதிக்கலாம். பொம்பளை போலிசை கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது.அதே மாதிரி ஆம்பளை போலிஸ் பொம்பளை கைதிகளை கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது.

Anonymous said...

சந்திரா said...
//கைதிகள் ஆம்பளை போலிசை கட்டிபிடிக்க அனுமதிக்கலாம். பொம்பளை போலிசை கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது.அதே மாதிரி ஆம்பளை போலிஸ் பொம்பளை கைதிகளை கட்டி பிடிக்க அனுமதிக்க கூடாது.//

Ayya yaruppa nee, sema comedy adikiraa. sirippula nan keela vulunthuten!

Ana yara irunthaalum katti pudikka anumathikanum, athan en karuthu.

வஜ்ரா said...

sanjay dutt is a convicted criminal.

why do police hug and shake hands with convicted criminal ? that too in front of a TV crew ? What kind of message are they passing to the public ?

Action taken on these police constables who hugged and shook hands with sanjay dutt, a convict in arms case, is absolutely justified.

dondu(#11168674346665545885) said...

It is not my case that Sajay Dutt is innocent. He is guilty and has rightly been convicted.

But this post is about being friendly. Even the convicting judge expressed kind words addressed to Sanjay. What is wrong about it? Life is complicated as it is, no?

Regards,
Dondu N.Raghavan

உண்மைத்தமிழன் said...

அந்தக் காவலர்கள் நடந்து கொண்டது சரிதான்.. காக்கிச் சட்டையைப் போட்டுவிட்டால் தங்களது மனதையும் மூடி மறைத்துவிட வேண்டுமா என்ன? மனம் என்ன மறைப்பதற்கு உருவமானதா?

காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம், இன்றுவரையிலும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் மீது மும்பை மக்களுக்கு இருக்கும் வெறுப்பு. அந்த வெறுப்பில் தங்களது பெயர் கலந்துவிடக்கூடாது என்பதில் மிக மிக ஜாக்கிரதையாக உள்ளனர் அரசியல்வாதிகள்..

சுகுணாதிவாகர் said...

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். காலையில் செய்தித்தாளைப் பார்க்கும்போதே எனக்கும் தோன்றியது. ஆனால் நீங்கள் எழுதிவிட்டீர்கள். கைதிகளை நடத்துவது குறித்த நமது சட்டமுறைகள் இன்னமும் பெருமளவும் பிரிட்டிஷ் காலத்தைத் தாண்டவில்லை என்பதுதான் உண்மை. கைதிகள் என்பவர்கள் மனிதர்க்ள் என்கிற மனோபாவம் காவல்துறைக்கும் கிடையாது, ஊடகங்களுக்கும் கிடையாது. ஆனால் இன்னொன்றையும் சேர்த்து நாம் யோசிக்க வேண்டும், சஞ்சய்தத் ஒரு பிரபலநடிகராக இல்லாமலிருந்தால் இந்தக் காவலர்கள் இதே சினேகபாவத்தோடு நடந்துகொண்டிருப்பார்களா?

Anonymous said...

நல்லா கட்டிபுடிங்க, அனா யூனிபோம் போட்டுகிட்டு அதைப் பண்ணாதீங்க சார்.

டோண்டுப் பையன். Dondo Boy

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு
மனிதநேயம் தொடர்பாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த பதிவு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது

தலைவர்
டோண்டு ரசிகர் மன்றம்
மடிப்பாக்கம் கிளை
சென்னை

Anonymous said...

Ayya yaruppa nee, sema comedy adikiraa. sirippula nan keela vulunthuten!

Ana yara irunthaalum katti pudikka anumathikanum, athan en karuthu.

நாண் அப்பா இல்லை. நான் ஒரு புதுமைபெண்.

சிறையில் பல தவறான சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அதனால் கட்டிபிடி வைத்தியத்தை அனுமதிப்பது ஆபத்தில் வந்து முடியும். குறிப்பாக ஆண்-ஆண் கட்டிபிடிக்கும் முறையால் எய்ட்ஸ் பரவிவிடும். அதனால் அதை அனுமதிக்க கூடாது.

Anonymous said...

ஆண்-ஆண் கட்டிபிடிக்கும் முறையால் எய்ட்ஸ் பரவிவிடும்

வஜ்ரா said...

//
But this post is about being friendly. Even the convicting judge expressed kind words addressed to Sanjay. What is wrong about it? Life is complicated as it is, no?
//

I am sorry that i have to disagree with you on this. What ever may be the reason, a police man in uniform may not have to flaunt his friendship with a convict in front of a TV CAMERA. That sends wrong signals.

வெந்தப் புண்ணில் வேலைப்பாய்ச்சுவதற்குச் சமம்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

Each job needs some dignity and decorum. Policeman's job needs to keep some distance from convicted criminals undergoing their sentence. It is the duty of the policeman to keep some distance away from convicted criminals. This is nothing to do with personal feelings or inhumane treatment. What the policeman did was wrong in embracing Dutt because

1. It brings down the dignity and decorum of his job.
2. It gives an impression (perhaps rightly) to other criminals that Dutt is getting preferential treatment compared with others. All inmates of the jail should be treated same by those in authority.
3. It can be a possible security risk. What if a man convicted of having illegal automatic rifles, suddenly takes the policeman as a hostage. ? Police should be highly security conscious both of themselves and the public.

It is highly stupid of the policeman to embrace Dutt, and not in keeping up with his job and putting himself and others to risk.

Vijayaraghavan

Anonymous said...

//மிகவும் நல்ல பதிவு
மனிதநேயம் தொடர்பாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த பதிவு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது

தலைவர்
டோண்டு ரசிகர் மன்றம்
மடிப்பாக்கம் கிளை
சென்னை//

dei vennai,
thalaivan ingirukka, nee yaraada, poli comment podugirai.

Aantha Policekku meendum velai koduthutaangaa.
http://timesofindia.indiatimes.com/CM_vetoes_deputy_says_cop_hugging_Dutt_no_big_deal/articleshow/2316148.cms

dondu(#11168674346665545885) said...

மஹராஷ்ட்ரா முதல் மந்திரி செய்தது பாராட்டுக்குரியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தர்மராஜ் said...

சஞ்சய்தத் காவலர்களை சிறைக்கு வெளியே கட்டிப்பிடித்ததும், கைகுலுக்கியதும் media-வால் பெரிதுபடுத்தபட்டு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிகழ்வை படம் பிடிக்காமல் இருந்தால் யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை. மேலும், சஞ்சய்தத் சிறைகுள் இருக்கும் போது எத்தனை உயர் அதிகாரிகள் வந்து சஞ்சயுடன் கைகுலுக்கி, கட்டிபிடித்து ஆட்டம் போட்டார்களோ? யாருக்கு தெரியும்..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது