நண்பர் மா.சிவகுமார் அவர்களது ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் வந்த முக்கால்வாசி கேள்விகள் கேட்டவர்கள் தத்தம் படிப்பு நிலைக்கான வேலை வாய்ப்புகளையே கேட்டனர். சிவகுமார் அவர்கள் சொந்த தொழில் செய்வது சம்பந்தமான கேள்விகளை எதிர்க்கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே கிடைத்தது.
ஒரு சராசரி இந்தியக் குடிமகன் மாத சம்பள வேலையைத்தான் முதலில் விரும்புகிறான் என்பது நான் அறிந்தவரையில் நிலை. அதிலும் அரசு வேலை என்றால் டபுள் ஓக்கே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் மின்வாரியத்தில் இளம் பொறியாளர் வேலைக்குத்தான் மனு போட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அந்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு போட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அப்போது என் அதிர்ஷ்டம் நான் கடைசி ஆண்டு பரீட்சையில் கம்பார்ட்மெண்ட் வாங்கினேன். நிஜமாகவே எனது நல்வினைப்பயனே அது. இல்லாவிடில் ஜெர்மன் படித்திருக்க மாட்டேன். பின்னால் பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் படித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றி இல்லை.
நான் சொல்ல வந்தது என்னவென்றால், எனது டிஃபால்ட் விருப்பம் சம்பளத்துடன் கூடிய வேலைக்குத்தான். அதில் 23 ஆண்டுகள் கழித்த பிறகே இப்போதைய சொந்த தொழிலுக்கு வந்தேன்.
மற்ற தொழில்களை பற்றி எனக்கு சொந்த அனுபவம் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்புத் துறையை பற்றி ஒன்று கூற முடியும். எடுத்த எடுப்பிலேயே அதை முழுநேரத் தொழிலாகக் கொள்ள முடியாது என்பதே. ஒன்று உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்க வேண்டும், அதாவது உங்கள் அப்பாவிடம். அவரும் உங்களுக்கு முழுமனதோடு ஆதரவு தர வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் முதலில் நல்ல கணினி வேண்டும், அகலப் பட்டை இணைய இணைப்பு வேண்டும். அச்சடிக்கப்பட்ட நல்ல அகராதிகள் வேண்டும். அவையும் தொழில் நுட்ப சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் தனி கவனம் செலுத்த விரும்பும் துறைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம்? கணக்கு பார்ப்போமா?
கணினி ரூபாய் முப்பதாயிரத்துக்கு குறையாமல் ஆகும். தவறு என்றால் எனக்கு சரியான தொகையை பின்னூட்டமாக இடுங்கள். விண்டோஸ் எக்ஸ் பி ப்ரோ குறைந்தபட்ச தேவை. பிறகு அகலப்பட்டை இணைய இணைப்பு. மோடம் முதலியவை ரூபாய் 2000/க்கு மேல் ஆகும். மாதக் கட்டணம் குறைந்த பட்சம் ரூபாய் 800. அகராதிகள்? உதாரணத்துக்கு ஜெர்மன் -> ஆங்கில பொறியியல் அகராதி ரூபாய் 5000. பொது அகராதி ரூபாய் 1000. பிறகு இருக்கவே இருக்கின்றன கட்டட இயல் அகராதி, சிமெண்ட் சம்பந்தப்பட்ட அகராதி முதலியன. மற்ற துறைகளுக்கான அகராதியும் உண்டு. இதெல்லாம் சேர்த்து தேவையான முதல் தொகை அரை லகரத்தைத் தாண்டி விடும். ஆகவே பணக்கார, இளகிய மனதுடைய அப்பா தேவை. :)
சரி செட்டப் செய்து விட்டீர்கள். வாடிக்கையாளர்கள்? அவர்களை எப்படி பிடிப்பீர்கள்? அது சம்பந்தமாக நான் செய்ததை இங்கு எழுதியுள்ளேன். ஆனால் அதற்கெல்லாம் முக்கியமாக ஒன்று தேவை. அதாவது, உங்கள் வாழ்க்கையை தடையில்லாது நடத்த வேறு வகையில் பொருள் வரவு தேவை.
இப்போது எனது பதிவின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். வேறு வகையில் பொருள் வரவு? எல்லோருக்கும் பணக்கார அப்பாக்கள் மற்றும்/அல்லது மாமனார்கள் கிடைக்க மாட்டார்கள் அல்லவா? ஆகவே எங்காவது ஒரு நல்ல வேலை பார்த்து பிடித்து கொள்வது நலம். இப்போது இணைய தொடர்புகள் இருப்பதால் நான் மேலே கூறிய ஏற்பாடுகளை செய்து கொண்டால் உடனே தனியாக இந்த வேலையைத் துவங்கலாம். நான் பொறியாளனாக தொடர்ந்ததால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றுக்கு ஆபத்து இல்லை. சாவகாசமாக மொழிபெயர்ப்புக்கான வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது.
பொதுவாகவே பார்த்தாலும் முதலில் இம்மாதிரி வேலையில் சேருவதே நல்லது. உதாரணத்துக்கு நம்ம மா.சிவகுமாரையே எடுத்து கொள்வோம். முதலில் முழு நேர வேலை செய்துதான் அனுபவம் பெற்றார். தான் சேர்ந்த இடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் இது தனதில்லை எனக் கூறாது செய்து பல வகைகளில் அனுபவம் பெற்றார். கண்டிப்பாக மற்றவர்களுக்கும் உதவி செய்து அவர்தம் வேலை அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். அவரைப் போலத்தான் எல்லோரும் அனுபவங்களை தேடிச் செல்ல வேண்டும். அப்படியெல்லாம் செய்திருந்தாலும் முதலில் சொந்த தொழில் ஆரம்பிக்கும்போது அவர் சில தடங்கல்களை சந்தித்துள்ளார். அவற்றையெல்லாம் மீறி வருவதற்கு அவர் பெற்ற அனுபவங்களே உதவியுள்ளன எனக் கூறினால் மிகையாகாது. அது சரி எப்போது வேலையை விட்டு தொழில் ஆரம்பிப்பது? அது சற்று ரிஸ்க்கான காரியம். அதை எடுக்கத்தான் துணிவு வேண்டும்.
மறுபடியும் கூறுவேன். ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும் ஆனால் அதற்காக தேவையின்றி ஆபத்தை தேடக்கூடாது. எது எடுக்க வேண்டிய ரிஸ்க் எது தவிர்க்க வேண்டிய ஆபத்து என்பதை சம்பந்தப்பட்டவர் உள்ளுணர்வுதான் கூற வேண்டும்.
பதிவை முடிக்கும் முன்னால் எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில் நான் கேட்ட டயலாக்கை இடுகிறேன்.
சுந்தா: (நாடகத்தில் சேகரின் மாமா): சிகாமணி, எப்போதும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வேண்டும். என்னையே எடுத்துக்கோ, நான் ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நல்லா உழைத்து இரண்டே வருடங்களில் நானே ஒரு கடைக்கு முதலாளியாகிட்டேன்.
சேகர்: (நாடகத்தில் சிகாமணி): இப்பல்லாம் அது முடியாது மாமா. கல்லாவையெல்லாம் முதலாளிங்க இழுத்து பூட்டிடறாங்க.
அப்படியெல்லாம் செய்யப்படாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
23 hours ago
20 comments:
<
சேகர்: (நாடகத்தில் சிகாமணி): இப்பல்லாம் அது முடியாது மாமா. கல்லாவையெல்லாம் முதலாளிங்க இழுத்து பூட்டிடறாங்க --->
This is more intersting than your write-up
//This is more intersting than your write-up//
உண்மைதான். :):):)
அன்புடன்,
டோண்டு ராகவன்
The socialistic decades have killed the entreprising spirit of a whole generation and made them settle for 'safe' govt jobs. and in those days the climate was not condusive for self-employment with
a arrogant and powerful bureacracy and crony capitlalism..
i am from Karur, a town of entrepreuners ; in the past 25 years, Karur has transformed into a major textile exporting town with an annual turn-over of more than 3500 crores. Self-made millionares are dime a dozen ; there must be more than a thousand such acheivers who started with their bare hands and acheived big.
and most were hardly literate.
Dondu Sir, i knew of a gentleman who exports to France without knowing English or French. and he manages !!
Pls see this excellent link :
http://www.swaminomics.org/
et_articles/et20070314.htm
K.R.Athiyaman
nellikkani.blogspot.com
//I knew of a gentleman who exports to France without knowing English or French. and he manages!!//
உண்மைதான். மொழிதெரியாத அந்த அற்புத மனிதர் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கு வேலை தருபவர். யார் யாருக்கு எந்த வேலை வருமோ அதை செய்தால் எல்லோருக்கும் நல்லது. அதை விடுத்து ஆங்கிலம் தெரிந்தவர்கள் ரொம்பத்தான் அலட்டுகின்றனர்.
//The socialistic decades have killed the entreprising spirit of a whole generation and made them settle for 'safe' govt jobs. and in those days the climate was not condusive for self-employment with
an arrogant and powerful bureacracy and crony capitlalism..//
கொள்ளையடித்த வருமான வரியை விட்டு விட்டீர்களே. எழுபதுகளின் ஆரம்பத்தில் பத்து லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் வரி போக மிஞ்சியது வெறும் ரூபாய் முப்பதாயிரம் மட்டுமே. அப்புறம் நாடு எப்படி உருப்படும்?
ஏதோ தாமதமாக செய்தாலும் ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினார்களோ. நாடு பிழைத்ததோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்படியெல்லாம் செய்யப்படாது.//
எப்படியெல்லாம் செய்யப்படாது? கல்லாவை பூட்டறதையா?
கல்லாப்பெட்டி சிங்காரம்
I definitely believe that the biggest risk in life is not to take a risk at all. ...
Sabeer Bhatia
//I definitely believe that the biggest risk in life is not to take a risk at all. ...
Sabeer Bhatia//
வாங்க இளமுருகு. ரொம்ப நாளாச்சு பாத்து. நீங்களும் சபீர் பாட்டியாவும் சொல்றது சரிதான்.
அதாவது, நிறைய பேர் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் (சக ஊழியர்கள் அடங்கிய நட்பு வட்டம், சௌகரியமான வாடகை வீடு) காரணமாக அப்படியே இருந்த இடத்திலேயே இருந்து குப்பை கொட்டிவிடலாம்னு நினைக்கிறாங்க.
ஆனால் என்ன நடக்கலாம் என்றால், சக ஊழியர்கள் திடீரென வேலையை விட்டு வேறு நல்ல வேலை/ஊருக்கு சென்று விடலாம். வீட்டு சொந்தக்காரர் வீட்டை காலி செய்ய சொல்லலாம். கம்பெனியில் ஆள் குறைப்பில் வேலை போகலாம்.
ஆகவே அதுவும் சில சமயம் சரிபடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோஷலிஸக் கொள்கைகளால் தொழில் ஆர்வம் வளரவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.இந்தியா என்ற ஏழை நாட்டை
கலப்பு பொருளாதாரம் நிமிர்த்தி வைத்திருக்கிறது.உலக நாடுகளுடன் போட்டி போடும் தகுதி இருக்கிறது.ஆனால் அதற்கான மனநிலை நம் மக்களிடம் இல்லை.
நாம் இன்னும் பழைய சமுதாயப் படிநிலைகளையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.பிராமணன் உயர்ந்தவன்,மற்றவரெல்லாம் தாழ்ந்தவன்
என்பது போன்ற வேதகால கருத்துக்களைத் தான் குறிப்பிடுகிறேன்.
சீனாவில் படிப்பை முடிக்கும் பாதிபேர் சொந்தத்தொழில் கனவுகளோடு வெளியேறுகின்றனர்.உத்தியோகம் புருஷ லட்சணம் என்பதை நாம் தப்பாக புரிந்து கொண்டுவிட்டோம்.
Sir,
Do you teach german? If so, please let us know with your contact details.
Dear Rangarajan,
I do not teach German or any language for that matter.
Regards,
N.Raghavan
//
சோஷலிஸக் கொள்கைகளால் தொழில் ஆர்வம் வளரவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
//
ஜோக்கடிக்கிறார் ஜாலிஜம்பர்.
இந்தியர்களின் கொஞ்ச நஞ்ச தொழில் ஆர்வத்தை லைசன்ஸ் பெர்மிட் ராஜ் மூலம் நிர்மூலமாக்கிய பெருமை சோசியலிச பித்துப் பிடித்து அலைந்த அன்றைய இந்திய பிரதம மந்திரியையே சேரும்.
அன்றைய பிரதம மந்திரி தவிர அதை உளமாற வரவேற்ற ஜன சங் போன்ற எதிர் கட்சிகளுக்கும், முக்கியமாக இன்றும் அதையே சொல்லிக் கொண்டிருக்கும் பழமைவாத கம்யூனிஸ்டுகளுக்கும் சமமான பங்கு உள்ளது.
இவர்கள் சோசியலிச பித்தினால் பல அம்பானிகளும், டாடா க்களும், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். இன்று அவர்கள் மிகப்பெரும் நிலையில் இருக்கிறார்கள்.
அரசு எந்திரத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இல்லாமல் போனதால் தான் சோசியலிச பித்தில் அலைந்த காங்கிரஸ் கூட தன் பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொண்டுவிட்டது.
சோசியலிசத்தினால் தான் ஒரு தலைமுறையின் தொழில் முனையும் எண்ணம் சாகடிக்கப் பட்டது என்பதற்கு, வெளிநாடுகளில் சாதித்த இந்தியர்கள் பட்டியல் தான் ஆதாரம்.
உள் நாட்டில் அன்றைய சோசியலிச dark ages ல் சாதித்த இந்தியர்கள் நிச்சயம் நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இப்பொது வந்து சோசியலிசத்தினால் இந்தியர்களின் தொழில் ஆர்வம் குறையவில்லை என்று சொல்வது ஏற்க முடியாதது மட்டும் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாத வாதமாகும்.
இன்றும் சோசியலிசத்தினால் தான் பலர் மாத சம்பளத்தை எதிர்பார்த்து சொந்தத் தொழில் செய்யாமல் வீணடிக்கின்றனர்.
//இந்தியா என்ற ஏழை நாட்டை
கலப்பு பொருளாதாரம் நிமிர்த்தி வைத்திருக்கிறது//
நிமிர்ந்த இந்தியாவா??
athathaan naan romba naala theduren. konjam kaatringala jolly jumper.
சீனாவில் படிப்பை முடிக்கும் பாதிபேர் சொந்தத்தொழில் கனவுகளோடு வெளியேறுகின்றனர்.
athukku kaaranam china 1978 mudal kadaipidikkum Capitalism.
"To Get Rich Is Glorious" -deng xiaoping
"It doesn't matter if a cat is black(socilaism) or white(free arket), so long as it catches mice." -deng xiaoping
//இப்பொது வந்து சோசியலிசத்தினால் இந்தியர்களின் தொழில் ஆர்வம் குறையவில்லை என்று சொல்வது ஏற்க முடியாதது மட்டும் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாத வாதமாகும்.//
நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது ஸ்டாண்டர்ட்ஸ் மோட்டார்ஸ் கம்பெனிக்கு லோக்கல் விசிட்டுக்காக சென்றோம். அங்கு தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு கார்கள் உற்பத்தி செய்வதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் வசதியோ அதை விட இரட்டிப்பாக உற்பத்தி செய்யும் அளவுக்கு இருந்தது. கார்கள் புக்கிங் செய்து வருடக் கணக்காக காத்திருக்கும் நாட்கள் அவை. ஏன் என்று கேட்டதற்கு அரசின் வரிக் கொள்கை காரணமாக அவ்வாறு செய்தால் கன்னா பின்னாவென்று வரி ஏறிவிடும் என்ற பதில் கிடைத்தது.
நியாயம்தானே. பத்து லட்சம் கஷ்டப்பட்டு சம்பாதித்தால் 35 ஆயிரம்தான் வரிக்கு பிறகு மிச்சம் இருக்கும் என்றால் யாருக்கு சம்பாதிக்கும் ஆசை வரும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
விடுதலை பெற்ற இந்தியாவிற்கு என்ன தேவை என்பதில் காந்தி,நேருவை விட தெளிவான சிந்தனை கொண்டவர் வேறு யாரும் இல்லை.
அவர்கள் வகுத்த பாதையில் இந்தியா மெல்ல நடைபோட்டு இன்று மற்ற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.வஜ்ரா குறிப்பிடுவது போல்
இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று சாதித்தவர் எண்ணிக்கை உள்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுடன் ஒப்பிடும் போது
அது ஒரு அற்பத்தொகை.
//உள் நாட்டில் அன்றைய சோசியலிச dark ages ல் சாதித்த இந்தியர்கள் நிச்சயம் நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம்.//
அதே dark ages இல் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொண்டனர்.தொழிலாளியை
முதலாளியாக ஆக்குவது தான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.முதலாளியை
பெருமுதலாளியாக ஆக்குவதாக இருக்கக்கூடாது.
//இப்பொது வந்து சோசியலிசத்தினால் இந்தியர்களின் தொழில் ஆர்வம் குறையவில்லை என்று சொல்வது
ஏற்க முடியாதது மட்டும் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாத வாதமாகும்.//
தொழில்துறையை வளர்ப்பதை விட ,சராசரி இந்தியனின் சாப்பாட்டுப்பிரச்சினையை தீர்ப்பது தான் இந்தியாவின் மாபெரும் கடமையாக
இருந்தது.இருக்கிறது.சரி,ஒரு வழியாக சோசலிசத்திலிருந்து உலகச்சந்தை பொருளாதாரத்திற்கு மாறிவிட்டோம்.மக்களின் மனநிலையில்
மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளதா?இல்லை.இதற்குக் காரணமாக
//சம்பந்தப்பட்டவர் உள்ளுணர்வு// என்று டோண்டு கூறுகிறார்.பூமி தட்டை என்று ஒரு காலத்தில் நம்
உள்ளுணர்வு சொல்லியது.ஆனால் அறிவு வளர்ச்சியினால் அந்த உள்ளுணர்வை நாம் மாற்றிக்கொண்டோம்.
//விடுதலை பெற்ற இந்தியாவிற்கு என்ன தேவை என்பதில் காந்தி,நேருவை விட தெளிவான சிந்தனை கொண்டவர் வேறு யாரும் இல்லை.///
Jolly,
No, there were better visonaries like Rajaji and Patel, who were
unfortunately dubbed pro-rich, etc.
and the road to hell is paved with
good intentions, saying goes.
And thru socialism we neither reduced povery. hunger or unemployment. only increased them.
and more dangerously it corrupted us completely and we all lost the respect for law and govt.
We could have followed the polices implemented in Malaysia, Japan S.Korea or Taiwan which were in much worse postion than us in 1947, devastated by World War 2. those nations followed free market capitalism and prospered while we embraced socialism and created crony capitalism and license raj..
K.R.Athiyaman
nellikkani.blogpspot.com
athiyaman.blogspot.com
//
தொழில்துறையை வளர்ப்பதை விட ,சராசரி இந்தியனின் சாப்பாட்டுப்பிரச்சினையை தீர்ப்பது தான் இந்தியாவின் மாபெரும் கடமையாக
இருந்தது.இருக்கிறது.சரி,ஒரு வழியாக சோசலிசத்திலிருந்து உலகச்சந்தை பொருளாதாரத்திற்கு மாறிவிட்டோம்.மக்களின் மனநிலையில்
மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளதா?இல்லை.இதற்குக் காரணமாக
//சம்பந்தப்பட்டவர் உள்ளுணர்வு// என்று டோண்டு கூறுகிறார்.பூமி தட்டை என்று ஒரு காலத்தில் நம்
உள்ளுணர்வு சொல்லியது.ஆனால் அறிவு வளர்ச்சியினால் அந்த உள்ளுணர்வை நாம் மாற்றிக்கொண்டோம்.
//
ஜ. ஜ.
சாப்பாட்டை தானே தயாரித்துக் கொள்ளும் மன பக்குவமும், தொழில் மூலம் அபிவிருத்தி பெற்று தன் நிலையை உயர்த்திக் கொள்ளும் மன நிலையையும் தரத் தவறியது சோசியலிசம். இன்று நாம் கடைபிடிக்கும் free market economy கூட ஒன்றும் panacea இல்லை. ஆனால் சோசியலிசத்தினால் உயர்ந்தோம் உயர்கிறோம் என்று வாதாடிக் கொண்டு இருக்கவேண்டாம்.
சோசியலிசத்தினால் தாழ்ந்தோம், தேய்ந்தோம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது.
//
மக்களின் மனநிலையில்
மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளதா?
//
நம்பிக்கை நட்சத்திரங்களாக நாராயணமூர்த்திகளும், ஆசிம் பிரேம்ஜிக்களும், நரேஷ் கோயல்கள், பவன் கோயங்காக்கள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி கோடிகள் கொட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கு இவர்கள் ஏற்று நடத்தும் நிறுவனத்தின் வெற்றியே சாட்சி.
எந்த அரசு நிறுவனத்தின் தலைவரையாவது அல்லது ஒரு அரசியல்வாதியையாவது நம்பி ஒரு பைசா கொடுப்பார்களா ?
மக்களின் மனதில் எழுச்சி, புரட்சி எல்லாம் ஏற்படவேண்டாம், நம்பிக்கை ஏற்பட்டால் போதும். அதை கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க முடியும். சும்மா பிரியாணியும் குவாட்டரும் கொடுத்து வோட்டு வாங்கிவிட்டதால் கிடைத்துவிட்டது என்றாகிவிடாது. அப்படி எண்ணிக் கொண்டு தான் அரசு நிறுவனங்கள் நடக்கின்றன. வரிகள் எக்கச் செக்கமாக வசூலிக்கப்பட்டு அந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள் மூளையில்லாத சோசியலிச அரசியல் வாதிகள். விழைவு, வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், Black economy என்று பறந்தி விரிகிறது சோசியலிசத்தின் effect. The rich get richer, poor get poorer!
//No, there were better visonaries like Rajaji and Patel, who were
unfortunately dubbed pro-rich, etc.
and the road to hell is paved with
good intentions, saying goes.//
அதியமான்,
ராஜாஜி,படேல் இருவருமே ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக சிந்திக்கவில்லை.வலதுசாரி பழமைவாத இந்துத்துவ சக்திகள்
இவர்களை போற்றுவதிலிருந்தே இதை நாம் புரிந்துகொள்ளலாம்.
//And thru socialism we neither reduced povery. hunger or unemployment.//
ஏழ்மையை முழுவதுமாக ஒழிக்கமுடியாவிட்டாலும் கணிசமான அளவு நாம் முன்னேறியுள்ளோம்.
//We could have followed the polices implemented in Malaysia, Japan S.Korea or Taiwan which were in much worse postion than us in 1947,
devastated by World War 2.//
அவர்கள் உலகப்போரினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் நம் நாட்டில் இருந்த அளவுக்கு கல்விஅறிவின்மையோ,
சமூக ஏற்றத்தாழ்வுகளோ அங்கே இருந்தது இல்லை.விடுதலை பெற்றவுடன் முதலாளித்துவத்தை இங்கே
கொண்டு வந்திருக்க முடியாது.இப்போது அதற்கான சாதகமான சூழல் உள்ளது என்று சொல்லமுடியாவிட்டாலும்
அது வந்து விட்டது. வந்தாலும் தொழில் முனையும் ஆர்வம் நம்மிடையே இல்லை.டெங் ஆவி சொன்னது போல் இன்னும் பத்து,பதினைந்து
வருடங்கள் சென்ற பிறகு தொழில் முனையும் ஆர்வம் வரலாம் என்றிருந்தாலும் அதுவும் சரி தான்.
வஜ்ரா,
//சாப்பாட்டை தானே தயாரித்துக் கொள்ளும் மன பக்குவமும், தொழில் மூலம் அபிவிருத்தி பெற்று தன் நிலையை
உயர்த்திக் கொள்ளும் மன நிலையையும் தரத் தவறியது சோசியலிசம். //
எத்தியோப்பியாவிலும்,சோமாலியாவிலும் முதலாளித்துவம் கொண்டுவந்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்குமா
என்ன?அவர்கள் முதலாளித்துவத்திற்கு மாறுமுன் செய்ய வேண்டிய வேலைகள்,தேவைகள் நிறையவே
இருக்கின்றன.
//இன்று நாம் கடைபிடிக்கும் free market economy கூட ஒன்றும் panacea இல்லை.//
இது ஒன்று தான் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது.முதலாளித்துவம் என்னும் காட்டாறு ந்ம் ஊருக்குள்ளும்
வந்துவிட்டது.காட்டாற்றின் ஓரத்தில் நின்று தண்ணீர் மொண்டு தலையில் தெளித்துக்கொண்டு அகப்பொந்துக்குள்
ஆன்மீக எலியைத் தேடிக்கொண்டிருந்தோமென்றால் (நன்றி சன்னாசி)முதலாளித்துவத்தினால் என்ன பயன்?.நாம்
பழைய தத்துவ ஞானக்குப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிந்தனைகளை UPDATE செய்யவேண்டும்.
//நம்பிக்கை நட்சத்திரங்களாக நாராயணமூர்த்திகளும், ஆசிம் பிரேம்ஜிக்களும், நரேஷ் கோயல்கள்,
பவன் கோயங்காக்கள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி கோடிகள் கொட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதற்கு இவர்கள் ஏற்று நடத்தும் நிறுவனத்தின் வெற்றியே சாட்சி.//
மாபெரும் வணிக நிறுவனங்களும் உண்மையிலேயே சோசலிசத்தை நடைமுறைப்படுத்துகின்றன என்பதும்
நன்றாகவே புரிகிறது.ஆனால் இந்தியா முழுவதும் ஒருகோடி பேர் பங்குவணிகத்தில் ஈடுபட்டிருப்பார்களா?
அதில் பாதிபேர் பரம்பரை பணக்காரர்களாகவே இருப்பார்கள்.
மாபெரும் வணிக நிறுவனங்களும் உண்மையிலேயே சோசலிசத்தை நடைமுறைப்படுத்துகின்றன என்பதும்
நன்றாகவே புரிகிறது.ஆனால் இந்தியா முழுவதும் ஒருகோடி பேர் பங்குவணிகத்தில் ஈடுபட்டிருப்பார்களா?
அதில் பாதிபேர் பரம்பரை பணக்காரர்களாகவே இருப்பார்கள்.
உங்க கேள்விக்கு இந்த முகவரி ஏதேனும் பதில் சொல்லலாம்
பலே வஜ்ரா. எத்தனை முறை சொன்னாலும் பலருக்கு விளங்காது என்பதே நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment