முந்தா நேற்று திடீரென செல்பேசி தன் இருக்கையை சத்தத்துடன் காட்டியது. எடுத்து கேட்டால் நம்ம அதியமான். ஏதோ வேலையாக நங்கநல்லூர் வந்திருப்பதாகவும் என்னை வந்து பார்க்க இயலுமா என்று கேட்டார். தாராளமாக வாருங்கள் என்றேன். சில நாட்களுக்கு முன்னால் ஏற்கனவே வீட்டுக்கு வந்திருந்ததால் அவருக்கு கண்டிப்பாக வழியை கண்டுபிடிப்பதில் கஷ்டம் ஏதும் இருக்காது என்பதால் நிம்மதி. அதே போல அவரும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தபோது மணி கிட்டத்தட்ட காலை 10.50.
இன்னும் சிறிது நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் அம்பலம் டாட் காமில் சேட் செய்ய இயலும் என்னும் செய்தியைத் தெரிவித்தார். அவருடன் சேட் சேய்யும்போது என்னுடன் கூடவே இருக்குமாறு கூறினேன். அவரும் சம்மதித்தார். போன தடவை அவர் வந்தபோது எனக்களித்த ராஜாஜி அவர்களின் சரிதை (அவரது மற்றும் காந்திஜியின் பேரன் ராஜ்மோஹன் காந்தி எழுதியது) மற்றும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் அடங்கிய புத்தகத்தையும் திரும்பக் கொடுத்தேன். அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களைப் பற்றிய ஒரு புத்தகம் அவருக்கு படிக்கக் கொடுத்தேன்.
ஜெயகமலை பார்க்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவிக்க அவருடன் தொலைபேசி வரச் சொன்னேன். அவரும் தனது இணைபிரியா தோழர் சரவணனுடன் வந்து சேர என் வீடே ஒரு மின் வலைப்பதிவர் சந்திப்பின் களனாயிற்று.
இதற்குள் சுஜாதா அவர்களும் சேட்டில் வந்தார். ஆங்கிலத்தில்தான் சேட் நடந்தது. அவரிடம் நான் சமீபத்தில் 1971-ல் அவரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியை தேதி, இடம் விவரங்களுடன் எழுதியிருந்தேன். தனக்கு ஞாபகமில்லை என அவர் எழுத, நான் அதற்கு "Of course it is difficult for you to remember. While I met a celebrity, you did not" என எழுத அவர் அதெல்லாம் இல்லை தன் வயது காரணமாக மறந்துவிட்டது என எழுதினார். ஹாரி பாட்டர் புத்தகம் பற்றியும் அவருடன் பேசினேன். அதியமான் வந்திருப்பதையும் கூறினேன். அதியமானை விசாரித்ததாக அவர் கூறினார்.
அதியமான் சாரு நிவேதிதாவுடன் தான் பழகியதைப் பற்றி கூறினார். இந்த சந்திப்பில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நானும் சரி, அதியமானும் சரி ஜெயகமல் மற்றும் சரவணனும் சரி எல்லோருமே பயங்கரமான தனியுடைமை ஆதரவாளர்கள். உண்மை கூறப்போனால் எனக்கும் அதியமானுக்கும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துகள்.
பேச்சு ஒரு தடையோ பாசாங்கோ இன்றி பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் சந்திப்பு நீடித்தது. எல்லோரும் போன பிறகு அப்படி என்னதான் பேசினோம் என அதிசயித்தார் என் வீட்டம்மா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
23 hours ago
13 comments:
சந்திப்பில் போண்டா இருந்ததா ?
பதிவர் பட்டறை என வலையுலகமே அதிரும்போது இது மொக்கையான பதிவு என்பதில் ஐயமில்லை :))))
:))))))))))))
அதியமான் மற்றும் ஜெயபால் சுட்டிகளை அவரவர் பக்கங்களுக்கு கொடுத்திருக்கலாமே!!
//சந்திப்பில் போண்டா இருந்ததா ?//
போண்டா இல்லை :-(( ஆனால் டீ சூப்பர்.
அடுத்த சந்திப்பில் கோரியா ராமியன்் (ராமென் நுடுல்ஸ்) சாப்பிட்டு பார்க்க வேண்டும்.
//பதிவர் பட்டறை என வலையுலகமே அதிரும்போது இது மொக்கையான பதிவு என்பதில் ஐயமில்லை :))))
:))))))))))))//
அதானே, எல்லோரும் மொக்கை பதிவு போடும்போது இந்த டோண்டு ராகவன் என்னும் இளைஞனும் போடுவான் என்பதைக் காண்பிக்க வேண்டாமா?
:))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதியமான் மற்றும் ஜெயபால் சுட்டிகளை அவரவர் பக்கங்களுக்கு கொடுத்திருக்கலாமே!!//
கொடுத்திருக்கலாம்தான். ஆனால் ஜெயகமல் பதிவு என்று தனியாகப் போடவிலை. எனக்கு தினமும் பல விஷயங்கள் குறித்து மின்னஞ்சலிடுகிறார். பல பதிவுகள் அவற்றின் அடிப்படையில் நான் கொடுத்துள்ளேன்.
அதே போல அதியமான் அவர்களுக்கு நான் கொட்டுத்த சுட்டியிலேயே அவரது தமிழ் வலைப்பூவுக்கான சுட்டியும் இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Of course it is difficult for you to remember. While I met a celebrity, you did not"
இருந்தாலும் உமக்கு ஜாஸ்திதான். சொல்லியிருக்கலாமே, உமக்கு 1950 என்ன அதற்கு முன்பு அல்லது நீர் பிறக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்கும் என்று!!!
//உமக்கு 1950 என்ன அதற்கு முன்பு அல்லது நீர் பிறக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்கும் என்று!!!//
ஓ, சொன்னேனே. ஆனால் அதை சமீபத்தில் 1971-ல் அவரை சந்தித்தபோது சொன்னேன். அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நைலான் கயிறு நாவல் எங்கேயாவது இணையத்தில் ஓசியில் கிடைக்கிறதா ?
//நைலான் கயிறு நாவல் எங்கேயாவது இணையத்தில் ஓசியில் கிடைக்கிறதா//
தேசிகனைக் கேட்க வேண்டிய கேள்வி. அவருக்குத்தான் சுஜாதாவை பற்றி அத்தனை விவரங்களும் அத்துப்படி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
thanks for sharing information about this meeting,
you are a really a great man
//செந்தழல் ரவி said...
சந்திப்பில் போண்டா இருந்ததா ?
பதிவர் பட்டறை என வலையுலகமே அதிரும்போது இது மொக்கையான பதிவு என்பதில் ஐயமில்லை :))))
:))))))))))))//
itharku repeate poduvathil peru makilchi adaikirane
senshe
from sharjah
//itharku repeate poduvathil peru makilchi adaikirane//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறீர்கள் சென்ஷி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயன்மீர்...
டோண்டு மொக்கையோ கிக்கையோ, தினம் ஒரு பதிவு போட்டே ஆக வேண்டும்...இல்லாவிட்டால் இத்தளத்திற்கு தினமும் வந்து ஏமாறுபவர்களுக்கு ஒரு பதில் சொல்லியே ஆக வேண்ண்டும்...
என்ன னான் சொல்றது...சரியா ஓய் டோண்டூ?
Post a Comment