11/08/2007

கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்

கலைஞருக்கு வேண்டியவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள் அவருக்கு இப்போது ஆபத்து விளைவிக்கும் யோசனையை தெரிவித்து வருகின்றனர். அதாவது கலைஞர் அரசை கலைத்து பார்க்கட்டுமே என்று. அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்கள் இதோ.

"ஏன் இந்தக் கொலைவெறி. பாவம் கலைஞர் உங்களைப்போன்ற அவரது ஆதரவாளர்கள் இருக்கும்போது அவருக்கு விரோதிகளே தேவையில்லை.

ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.

1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.

அதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.

இப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள்? பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்?

இம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா"?

அதுவும் அந்த 1991 ஆட்சிக் கலைப்பு சமயத்தில் துக்ளக்கில் வந்த அந்த கார்டூன் இப்போதும் மனதில் நிற்கிறது. அப்போது சுப்பிரமணியம் ஸ்வாமியும் ஜெயலலிதாவும்தான் சேர்ந்து அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் கலைஞரை போட்டு கொடுத்து அவர் ஆட்சியை கலைக்க செய்தனர். முதலில், "சுப்பிரமணிய ஸ்வாமியா யாரது" என்று சீறிய கலைஞர் பிறகு பதறிப்போய் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆதரவை பெற முயன்றதை ஒரு கார்ட்டூனில் துக்ளக் இவ்வாறு காட்டியது. கலைஞர் சுப்பிரமணிய ஸ்வாமியின் வீட்டருகில் நின்று பாடுகிறார். "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய சுவாமி உனைமறந்தார் அந்தோ". அதைப் பார்த்து அக்காலக் கட்டத்தில் நான் விடாது சிரித்த சிரிப்பு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

மேலே சுட்டியிட்ட அதே பதிவில் இசை அவர்களின் பின்னூட்டம் இதோ:

"உணர்ச்சி இருக்குறவங்கள தானே உசுப்பேத்தமுடியும்?? மரக்கட்டைகளையும், மாராப்பு விரித்து மன்றம் பிடித்தவர்களையும் உதைத்தால் கூட ஒரு பயனும் இல்லை. நல்லது நடக்கும் என்று தெரிந்ததால் தான் உசுப்பேற்றுகிறோம் டோண்டு அவர்களே".

அதற்கு எனது பதில்:

"ஆயிரத்தில் ஒரு வார்த்தை இசை அவர்களே. கலைஞர் உணர்ச்சி மிக்கவர்தான். தனது குடும்பத்தினர் மட்டுமே கட்சியில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற பாச உணர்ச்சியில் இருப்பவர். தமிழ் உணர்ச்சிகள் மேலே சொன்ன உணர்ச்சிக்கு எதிராக வந்தால் அவற்றை அதற்காக தியாகம் செய்பவர்.

அவர் ஆட்சியை விட்டு விலகுவார் என நினைக்கிறீர்கள்? அதே சமயம் மன்மோகன் அரசு அவர் ஆட்சியை கலைத்தால் அவர்களுக்கே அது ஆப்புதானே.

இந்த நிலையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னென்று சொல்வது"?

இதனாலெல்லாம் கலைஞர் செய்வது தவறென்று நான் சொல்ல வரவில்லை. அவர் பாட்டுக்கு தேமேனென்று தன் குடும்ப நலனை கவனிக்கிறார். அது பொறுக்காதே ஜனங்களுக்கு. இப்படி உசுப்பேத்தினால் கலைஞர் ராஜினாமா செய்து விடுவாராமா? வேறு ஆளைப் பாருங்கள். ஆனானப்பட்ட அழகிரி விவகாரத்திலேயே அவர் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டார்? இப்போதைக்கு அச்சமயம் கொலை செய்யப்பட்ட 3 தினகரன் ஊழியர்களின் குடும்பத்தினர் தவிர இப்போது யார் அதைப் பற்றி நினைக்கிறார்கள்?

ராமர் குடிகாரன், தெய்வமே இல்லை என்றெல்லாம் கொடிபிடித்த அதே கலைஞர் வட இந்தியாவில் வந்த எதிர்ப்பைப் பார்த்து எவ்வளவு திறமையுடன் தனது பேச்சை மாற்றினார்?

இது சம்பந்தமாக வந்த 31.10.2007 தேதியிட்ட துக்ளக் அட்டைப்பட் கார்டூன் அதை அழகாக காட்டுகிறது. அது இதோ:



இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நியூஸ் செர்வீசில் வந்த இச்செய்தியை இங்கு பார்க்கலாம். எதற்கும் அதில் உள்ளதை இங்கு காப்பி ஏஸ்ட் செய்வதே நலம். திடீரென சுட்டி வேலை செய்யாவிட்டால் என்ன செய்வதாம்?

Ram, Jesus, Mohammed all one and same god: Karunanidhi
Friday October 19 2007 00:00 IST
Express News Service

CHENNAI: In a remarkable reversal Chief Minister M Karunanidhi, who has been in the midst of controversy over his remarks against Lord Ram, on Thursday declared that Ram was as much a god as Jesus and Prophet Mohammed.

Speaking in the Assembly, Karunanidhi asserted that neither he nor his party or government was against Ram.

“As far as we are concerned Rama, Jesus and the Prophet (Mohammed) are one and the same. All are one and the same God. This government has deeply embedded in its heart (the late Chief Minister) CN Annadurai's dictum of ‘One family, One god’ and never intends to wound (the religious feelings of) anyone,” he said.

His declaration came as a part of his fervent plea for implementation of Sethusumudram project. “If necessary name it as Sethu Raman project. All that we need is the implementation of the project, and thereby the progress of Tamil Nadu. We are pressing for the project only for this and not to denigrate Rama.”

The remarks come in the wake of the appeal by actor Rajnikanth two days ago to Karunanidhi to resolve the Ram Setu issue.

In fact, Karunanidhi referred to Rajnikanth's appeal, and said that the actor had pointed out that there was a propaganda in North India that he was Ram-hater.

He also recalled that he had told Rajnikanth that he (Rajnikanth) should tell the ‘Sants and mahants’ that he was did not despise Ram. “We do not have anything against Ram,” he said.

இப்போது சிறு கஷ்டம் வரக்கூடும். ராமரை முதலில் திட்டி விட்டு பிறகு அவரை ஏசு, முஹம்மது போன்றவர்களுடன் ஒன்றாக பட்டியலிட்டதால் அது வரக்கூடும். இப்போதைக்கு வரவில்லை. பரவாயில்லை. கலைஞருக்கு அது நல்லதே.

நான் மறுபடியும் கூறுகிறேன். கலைஞர் அவர்கள் செய்வது தவறே இல்லை. தனது சொந்த நலனை பார்த்து கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

Anonymous said...

மன்னிக்கவேண்டும். கலைஞரின் உளறல் தொடர்கிறது என்றே நினைக்கிறேன். முகம்மது கடவுள் அல்ல. ஒரு நபிதான். அவரை கடவுள் என்பவர்கள் ஷிர்க் செய்கிறார்கள். அப்படிச்சொல்பவரை கல்லால் அடித்துக்கொல்லவேண்டும். நான் ரெடி, நீங்க....

கொலைஞர் அனுதாபி

வழிப்போக்கன் said...

அன்புள்ள டோண்டு ஐயா அவர்களுக்கு,
தங்கள் பதிவுகளை விடாது படித்து ரசிப்பதும் சிந்திப்பதும் எனக்கு மிகவும் பிடித்த பணி. உங்கள் எழுத்துக்கள் விவாதத்திற்கு உரியது என்பதை அனைவரும் புரிந்துகொள்வர். விவாதமும் மாற்றுக்கருத்துகளும் ம்னிதனை விவேகியாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாத வாழைமட்டைகள் ஜாதியையும் நாமத்தையும் விபூதிப்டடையையும் முப்புரிநூலையும் வம்புக்கு இழுத்து தனக்கும் இழுக்கு தேடிக்கொள்ளுகிறார்கள் மற்றவர்களையும் துவேஷாக்னியில் குளிப்பாட்டுகிறார்கள். மனச்சாட்சி என்பது அவர்கள் அகராதியில் இல்லை. அவர்களைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் பயணத்தைத் தொடர்ந்து செலுத்துங்கள். போற்றுபவர் போற்றட்டும்; புழுதிவாறித் தூற்றுபவர் தூற்றட்டும்; கவலை கொள்ளற்க.
அன்புடன்
முகில்வண்ணன்

Anonymous said...

/// ராமர் குடிகாரன், தெய்வமே இல்லை என்றெல்லாம் கொடிபிடித்த அதே கலைஞர் வட இந்தியாவில் வந்த எதிர்ப்பைப் பார்த்து எவ்வளவு திறமையுடன் தனது பேச்சை மாற்றினார்? /////


Wrong again.

It is the apposition that arose from "within Tamilnadu" that changed Karunanidhi's stand.

In other situations the appositions to him in north India would have got attributed to Aryan north against Dravidian South. Why this has not happened now?

If you are courageous enough to admit, you will say clearly that since BJP became a ruling party in the center, all the dravidian parties are talking some sort of hindtva, including the newly formed but powerful parties of Vijayakanth and Sharathkumar.

Even Vaiko condemned Karunanidhi's speach.

Since BJP became ruling party,

1. Karunanidhi started wearing yellow cloth.

2. He allowed the media to print photoes of the pujaroom in his, his wives, his sons and daughters', and their wives and husbands and upkeeps' houses.

3. In an earlier election, he started his campain from Madurai in the presence of all Heads of Adhiinams and mutts, and said that any work started in Madurai will be successful, and with the blessings of these sanniyasis our campaign is going to win. If he had not got defeated in that election, he would have taken the strong hindu supporting stance. It is in this period that he called muslims as "Islamic terrorists" and got into the ire of the muslims aka tuluks aka jihadists aka terrorists.

வன்பாக்கம் விஜயராகவன் said...

"As far as we are concerned Rama, Jesus and the Prophet (Mohammed) are one and the same"

As usual Karunanidhi shows himself to be a semi-literate. Lord Rama is not same as Jesus or Prophet Mohammed. The latter two are only human prophets who don't come under the Hindu view of avatarams. Hindu religion is different from west asian religions.

Unknown said...

Athaneh,
AVar kudumbatha munnnuku konduvara avar kashtapadaraar, adhukaaga mull kridam sumakaraar, after his CM retirement he could enjoy with this new sat TV(Kalaingar TV) and earn little pension in laks/crores. Ithanai kashtapatu avar aatchila irukumbodhu thaneh pannamudiyum, kalachittu, pinnala adutha govt whoever it may be varisiya ivanga mela case podaradhu sarikatta panam vendamaa, Enna idhu chinna pulla thanama ella iruku kalaikasollaradhu. Usupethiyeh ranagalamaakaranga

Anonymous said...

Dondu,

Thuklak yenna bibile aa?

dondu(#11168674346665545885) said...

துக்ளக் பைபிள் என்று யார் சொன்னது? ஆனாலும் மிகம் தரம் வாய்ந்த வார இதழ். சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Thuglak is a magazine where you dont find cheap abuses but will find only quality, neutral criticizations. Pro DMK and DK fellows will always abuse him!!

max

Anonymous said...

Dondu,

"CHO" Ramasamy is a person, who will not agree any decision/resolution by anyone and the same time he will not give any acceptable thought except kanunanidhi's family issue

சாணக்கியன் said...

எல்லா அரசியல்வாதிகளும் ஏழை பங்காளர் ராமமூர்த்தி,ராஜாஜி,நம்பூதிரிபாட்,மருதைய்யன்,C.P.ராமசாமி அய்யர், காமராஜ் போன்று மக்கள் பணியே மகேசன் பணி என்று இருக்கமுடியுமா?
கலைஞர் தமிழர்களுக்கு போராடுவதாகவும், திராவிட இயக்கங்கள் தெலுங்கு,மலையாள,கன்னட திராவிடர்களின் நலனை விட்டு தமிழர் நலனுக்கு போராடுவதாகவும், ஞானி "ஆனந்தவிகடன்,ஜெயா TV" மூலம் பகுத்தறிவு இயக்கத்துக்கு தலமை தாங்கி தமிழகத்தில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாகவும்(Before retirment issue) நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காத முருகன் பழனி சென்றது போல, முதல்வர் பதவி கிடைக்கமல், அதை அழகிரியிடம் பரிகொடுத்த பின் கோபம் கொண்டு பாங்காக் சென்ற ஸ்டாலினை எப்படி சமாதானம் செய்வது என்று யோசிப்பாரா? அல்லது இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பதவியை தியாகம் செய்வாரா?
அவுஙகள்ளாம் இப்படியே maintain ஆனால் தான் நாம் எல்லாம் இப்படியே maintain ஆகமுடியும்.

Anonymous said...

When did you appoint Mr.Vidathu karuppu as your PRO.
He started publicising you beyond the reach of boggers
Did u read the article
http://www.keetru.com/literature/essays/karuppu_7.php

Anonymous said...

கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவில்லையே அது ஏன் ?

dondu(#11168674346665545885) said...

//கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவில்லையே அது ஏன்?//
தீபாவளி என்ன முசல்மான்களின் பண்டிகையா அல்லது கிறித்துவர்கள் பண்டிகையா? அவற்குத்தான் அவர் வாழ்த்து சொல்வார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அன்று பசுவும் கண்றும் என்று சொன்னவர்! காங்கிரஸ் என்ன நேருவீ்ட்டு சொத்தா என்றவர் இன்று என்னிப்பாருங்கள் (எண்ணிப்பாருங்கள்)

Anonymous said...

//
தீபாவளி என்ன முசல்மான்களின் பண்டிகையா அல்லது கிறித்துவர்கள் பண்டிகையா? அவற்குத்தான் அவர் வாழ்த்து சொல்வார்.
//
Even the vatican greets hindus on diwali, why not the head of state which has majority hindus ?

Anonymous said...

வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.

இதுபோன்ற புனிதமான மனிதர்களைக் கருணையுடன் பார்க்கிற திருநாள் வேறு எந்த மதத்திலும் இல்லை. ஒருவன் மற்றொருவனைக் கொன்றான் என்பதற்காகவும், சிலுவையில் செத்தான் என்பதற்காகவும்தான் கொண்டாடுகிறீர்கள்.

இவற்றில் கலந்துகொள்ளாததன்மூலம் கலைஞர் தன் மனசாட்சிப்படி நடக்கிறார் என்றும் கொள்ளலாம்.

dondu(#11168674346665545885) said...

//வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.//
தவறானப் புரிதல். நோன்புக் கஞ்சி குடிப்பதை யாரும் இங்கு குறை கூறவில்லை. வந்த இடத்தில் சும்மா இல்லாமல் இந்துக்களின் பண்டிகைகளை கேலி பேசுவது அவரது வழக்கம். அதைத்தான் சாடுகிறோம். மற்றப்படி நோன்புக்கஞ்சி குடிக்க நானும் நண்பார் ஆசாத் வீட்டுக்கு சென்றிருக்கிறேன்.

இசுலாமியத் தோழர்கள் எனக்கு அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.
//

Nobody is blaming muslims. The problem is with mr. kalaingar who has no qualms drinking nonbu kanji but when it comes to celebrating diwali, he will not even greet the people of Tamil nadu. If this is what secularism is, then this sort of secularism should be burnt to ashes along with fire crackers this diwali.

Anonymous said...

//மற்றப்படி நோன்புக்கஞ்சி குடிக்க நானும் நண்பார் ஆசாத் வீட்டுக்கு சென்றிருக்கிறேன்.
//

ஆசாத்தை போலியிடம் போட்டு கொடுக்கிறீரா? இதே வேலை அய்யா உமக்கு. இதனால் தான் உம்மை எவனும் சீந்தமாட்டேன் என்கிறான்.

ஏற்கனவே உங்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி

dondu(#11168674346665545885) said...

//ஆசாத்தை போலியிடம் போட்டு கொடுக்கிறீரா?//
போலியைத்தான் கண்டுபிடித்து குப்பைத் தொட்டியில் போட்டாயிற்றே. இன்னுமா அவனிடம் உமக்கு பயம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//போலியைத்தான் கண்டுபிடித்து குப்பைத் தொட்டியில் போட்டாயிற்றே. இன்னுமா அவனிடம் உமக்கு பயம்?//

என் பெயரில் ஆரம்பிக்கபட்ட பக்கங்கள் அப்படியே இருக்கிறது? உம்ம பதிவு வரைக்கும் தூக்கிட்டீர்கள்? நல்ல சுயநலவாதி அய்யா நீர்! உம்மால் தான் நான் அவனிடம் மாட்டினேன். நினைவிருக்கிறதா?

dondu(#11168674346665545885) said...

//உம்ம பதிவு வரைக்கும் தூக்கிட்டீர்கள்? நல்ல சுயநலவாதி அய்யா நீர்! உம்மால் தான் நான் அவனிடம் மாட்டினேன். நினைவிருக்கிறதா?//
முதலில் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே. அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பொருள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//முதலில் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே. அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பொருள்? //

விரிவாகவே சொல்கிறேன். ஒரு முறை உங்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாவத்துக்கு எனக்கு போலிபக்கம் ஆரம்பித்து அருவருக்கதக்க கதைகளை பதித்திருக்கிறான். போலி பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று சொல்லி கொண்டிருக்கிறீர்கள். என் போலிபக்கம் அப்படியே இருக்கிறது. உங்கள் போலி பக்கம் அழிக்கப்பட்டிருக்கிறது. அப்போ இத்தனை நாள் நீங்கள் போலியை ஒழிப்பேன், போலியை ஒழிப்பேன் என்று சொன்னதெல்லாம் உங்களுக்கு மட்டுமேயான போலிபக்கத்தை ஒழிப்பது மட்டுமேவா?

போலியை ஒழித்துவிட்டோம் என்று சொன்னால் எல்லா போலிபக்கங்களும் ஒழிந்திருக்க வேண்டுமா இல்லையா? பன்றியோடு சேர்ந்த கன்று கதை ஆகிவிட்டது எமக்கு.

என் பெயரையெல்லாம் உம்மிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இனி உங்களை வாழ்க்கையில் இன்னொரு முறை பார்க்கவும் விருப்பமில்லை.

dondu(#11168674346665545885) said...

//என் பெயரையெல்லாம் உம்மிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இனி உங்களை வாழ்க்கையில் இன்னொரு முறை பார்க்கவும் விருப்பமில்லை.//
அது உங்கள் விருப்பம் எனக்கு அது பற்றி கூற ஒன்றுமில்லை. இரண்டரை ஆண்டுகள் போலியோடு யுத்தம் செய்தவன் நான்.

அவன் போலி டோண்டு பதிவை மட்டும்தாம் மூடியுள்ளான். என் மனைவி மற்றும் மகள் பெயரில் திறந்த பதிவுகள் அப்படியே உள்ளன.

இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவனை பெயருடன் அடையாளம் காண்பித்து துரத்தியாகி விட்டது. எப்பதிவை வைப்பது எப்பதிவை மூடுவது என்பது அவனது முடிவே. அவ்வளவுதான்.

இனியும் நீங்கள் அவனைப் பார்த்து பயப்பட்டால் அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கூற விரும்பவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கடைசி இரண்டு அனானி பின்னூட்டங்கள் யாருடையது என்று தெரிந்து விட்டது. அம்மாதிரிப் பின்னூட்டங்களுக்கு இனி அனுமதியில்லை. ஏனெனில் அவை உண்மையாக பாதிக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என்பதை அறிய பெரிய யட்சிணி வித்தையெல்லாம் தேவைப்படாது. என்ன, சற்று நேரம் எடுத்தது, அதுவும் சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேச.

இப்போது தெரிகிறது இது போலி டோண்டு அல்லது அவனது அள்ளக்கைகள் ஒருவரின் வேலை என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

இந்த பதிவிற்க்கு நேரடி தொடர்பில்லாவிட்டாலும், இந்த பின்னேட்டம் பல காலங்களாக
தோன்றிய எண்ணங்களின் வெளிபாடாகும் :

தமிழக முதல்வர்கள் முன் ஆபாச நடனங்கள் :

முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழக முதல்வர்களுக்கு, சினிமாகாரர்கள் பாரட்டு விழா நடத்தினால், விழாவில் பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறும். ஆனால் செனற பத்தாண்டுகளாக, அரைகுறை உடைகள்
அணிந்த நடிகைகளின் ஆபாச நடனம் சர்வ சாதாரணாமாக நடக்கிறது. அதுவும் அரசு விழாவான திரைபட விருது வழங்கும் விழாவில், மகாரஷ்டர ஆளுனர், உயர் அதிகாரிகள், போலிஸ் தலைமை அதிகாரிகள் அனைவரும் முன், சிறுதும் லஜ்ஜை இல்லாமல் ஆடும் வெட்க்ககேடு. தமிழர் கலாசாரம் வாழ்க.

இதை போன்ற பொது நிகழ்சிகளை நடத்தி, கண்டுகளிக்கும்
சினிமாக்காரர்களையும்,அரசியல்வாதிகளையும், எங்க ஊர் பாசையில் சொன்னால் : 'சரியான தேவ்...யா பசங்க'

இதைவிடக் கொடுமை, சிறு நகர்புறங்களில் இருக்கும்
தனியார் நடுனிலைப் பள்ளிகளின் ஆண்டு விழாவில், தரமில்லாத சினிமா பாடல்களுக்கு, சிறுவர், சிறுமியர்
ஆடும் நடனங்கள். அவற்றை லோக்கல் கேபில் டி.வியில் ஒளிபரப்பும் கொடுமை வேறு.

வாழக தமிழர் பண்பாடு.....

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சியே ஆகும். முதல்வர்களுக்கு, அவர்கள் எக்கட்சியினராயினும், இதில் செய்ய வேண்டிய பொறுப்புகள் உண்டு. இம்மாதிரியான நிகழ்ச்சிகளைக் கண்டித்தாலே அவை பெரும்பானமை அளவில் குறையும்.

அதெல்லாம் செய்யாது பார்த்து ரசித்தால் அனர்த்தமே. ஆனால் என்ன செய்வது, யார் முதல்வராக இருப்பினும் அதுதான் இப்போது நடைபெறுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வழிப்போக்கன் said...

அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,
முதல்வர் குத்தாட்டம் பார்ப்பதும், அதைக் கண்கொட்டாது ரசிப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். தமிழர் கலாச்சாரத்தின் மகோன்னதமான பொற்காலம். உங்களுக்கு ரசனை போதாது. அவ்வளவுதான்.
முகில்வண்ணன்

Anonymous said...

சோ இராமஸ்சாமி போன்ற அறிவுக்குருடர்களின் துணைகொண்டு ஐயா கலைஞர் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு சரியில்லை.கண்டனத்திற்குரியது. திரு.நரேந்தீரமோடிதான் இந்தியாவிற்கு அடுத்த பிரதமராக வருவதற்கு சரியான நபர் என்று குமுதம்.காம் தளத்திற்கு இருமிக்கொண்டே பேட்டியளித்த வக்ரப்புத்திமதியாளன் சோவின் துணைக்கொண்டும் துக்ளக் இதழை துணைக்கழைத்தும் மேற்கோள் காட்டியும் பதிவு செய்வதும் இனம் இனத்தோடு இணையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. (சோ பேட்டியளித்த மறுவாரமே தெல்கா.காம் மூலமாக மோடி நாறிய விஷயம் வேறு கதை)நன்றி - அக்னி

dondu(#11168674346665545885) said...

//சோ பேட்டியளித்த மறுவாரமே தெல்கா.காம் மூலமாக மோடி நாறிய விஷயம் வேறு கதை//
கலைஞரை ஆதரித்துத்தானே எழுதியுள்ளேன்.

மோடி பற்றி கலைஞர் கருத்து அளித்ததும் சரியே. (கருத்தே இல்லை என்று கூறினதாகக் கேள்விப்பட்டேனே).

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

Sure, Modi was BJP govt CM of Gujarat when the state govt didnot contol the riots (or rather genocide) against innocent muslims.
and there is no doubting of the history of communal bias and violence induced by BJP & Co.

but Mu.Ka and DMK were in alliance with BJP and enjoyed ministeral berths in Central govt when Gujarat pogram was going on. they did not resign in protest, etc and continued the alliance. hence Mu.Ka and DMK and its 'supporters' have no moral right to condemn BJP's violence, now or ever. hypocrites all.

dondu(#11168674346665545885) said...

1984-ல் இந்திரா கொலைக்கு பிறகு நான்கு நாளைக்கு சட்டம் ஒழுங்கு அத்தனையையும் கிடப்பில் போட்டுவிட்டு சீக்கியர்களை சூறையாடினர் காங்கிரசாரும் மற்ற டில்லி ரௌடிகளும். தலைவர் அப்போது ராஜீவ். ஒரு ஆலமரம் விழுந்தால் பல சிறு செடிகொடிகளும் அழியும் என்று வெறுமனே திருவாய் மலர்ந்தருளினார் அவர்.

மதுரையில் ஒரு நாள் முழுக்க அழகிரி போராட்டம் நடந்தது. மூவர் கொலை. அது பற்றி கேள்வி கேட்ட நிருபரை நீதாண்டா கொலைக்காரன் என்று பண்புடன் கூறினார் முதல்வர்.

டெஹல்கா டேப் வந்து இவ்வளவு நாட்கள் கழித்தும் ஒன்றுமெ நடக்கவில்லையே? வேறு ஏதேனும் உள்விவகாரம் மற்றும் சமரசங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

//துக்ளக் பைபிள் என்று யார் சொன்னது? ஆனாலும் மிகம் தரம் வாய்ந்த வார இதழ். சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.//

நிச்சயமாக. பதிவுலகில் சிலர் அவர் பார்பணன் என்பதால் மட்டுமே அவர் மீது துவேஷத்தை உமிழ்கின்றனர். ஆனால் மதங்களைத் தாண்டி அவர் பேசுவதை பல முறை அவரின் பத்திரிக்கையில் காண முடியும். உங்கள் வயதை ஒத்தவரையும் என் வயதை ஒத்தவரையும் ஒருங்கே இணைத்து, ஒன்று போல் சிந்திக்க வைக்க வல்லது அவர் எழுத்து என்றால் அது மிகையாகாது. தவறு என்பதை தவறு என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் எவரிடம் பேசக் கூடிய மன உறுதி படைத்தவர் திரு. சோ அவர்கள்.

//தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது. ஆமாம், நீங்கள் என்ன தியாகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?//

இதில் என்ன இன்னொரு கூத்து என்றால், ஒருவர் தன் நாடாளுமன்ற உருப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் மந்திரியாக தொடரலாம். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நாடாளுமன்ற உருப்பினராக வேண்டும். அவ்வளவே.... ஆனால் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சியும் முடிந்துவிடும் என்பதால் அந்தக் கவலையும் இல்லை. என்னே அவரின் வீரம். என்ன இருந்தாலும் தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!

Anonymous said...

Tuglak is a communally biased media.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது