ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி தோய்த்து எடுக்கப்படும் தயிர் பாலின் விலையை விட அதிகம். அதே போல தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, மிகுந்து போன மோரை விற்று, வெண்ணையையும் விற்றால் இன்னும் அதிகப் பணம் கிட்டும். அதே வெண்ணையை நெய்யாக்கினால் கிடைக்கும் பணமும் அதைவிட அதிகமே. அதே நெய்யை, இன்னும் பல பொருட்களுடன் சேர்த்து பட்சணம் செய்தால் பிய்த்துக் கொண்டு போகும் என்பதை அடையார் காந்தி நகரில் இரண்டாம் மெயின் ரோட்டில் உள்ள க்ராண்ட்ஸ் இனிப்பகத்தின் முதலாளி நன்கு அறிவார். இந்த ப்ராசஸின் எல்லா காலக் கட்டங்களிலும் வெவ்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ?
"இப்போது என்னதான் கூறவருகிறாய்" என்று முரளி மனோஹர் கூச்சலிடுவதால் நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
நான் கூறியது மதிப்புக் கூட்டலாகும். ஒரு சாதாரண நிலத்தில் தொழிற்சாலை கட்டினால், அது லாபம் ஈட்டினால் போட்ட முதல்களுக்கு பல மடங்கு லாபம் வருவதும் இந்த மதிப்புக் கூட்டலால்தான். பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது நம் நாட்டின் பஞ்சை லங்காஷயருக்கு ஏற்றுமதி செய்து ஆடைகளாக நெய்து, மதிப்பைப் பலமடங்கு கூட்டி நம்மூர் மார்க்கெட்டிலேயே விற்று ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினார்கள்.
என்னுடைய உதாரணத்தையே இங்கும் எடுக்கிறேன். நான் பொறியியல் படித்து வேலை தேடும்போது எனது மதிப்பு x என்று வைத்து கொள்வோம். அது வெறுமனே எனக்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியர் வேலை வாங்கிக் கொடுத்தது. பத்து ஆண்டுகள் அதே பதவியில்தான் இருந்தேன். அதன் கடைசி ஆண்டுகளில்தான் பதவி உயர்வுக்கான தேர்வைக் கொண்டு வந்தார்கள். நான் எடுத்த சுயமுடிவு காரணமாக அத்தேர்வை எழுதவில்லை. ஏனெனில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் வரும். எனது தந்தைக்கு ஒரே மகனாகிய நான் சென்னையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதெல்லாம் பை தி வே நிகழ்ச்சிகள். இப்பதிவுக்கு அது வேண்டாம். மதிப்பு கூட்டலுக்கு நான் ஒத்துக் கொள்ளாததால் நான் அதே நிலையில் இருந்தேன். ஆனால் இது நிலையானதல்ல. என் தந்தையின் மரணத்துக்கு பிறகு என்னை சென்னையில் நிறுத்திக் கொள்ள முக்கிய விஷயங்கள் ஒன்றும் இல்லை. அச்சமயம் நான் அறிந்த ஃபிரெஞ்சு மொழி எனக்கு மொழிபெயர்ப்பாளர் வேலை வாங்கிக் கொடுத்தது. நான் அச்சமயம் 425-700 ஸ்கேலில் இருந்தேன். மொழிபெயர்ப்பாளன் மற்றும் பொறியாளனாக நான் சென்ற பதவியின் ஸ்கேல் 700-1300. பயங்கர அளவில் மதிப்பு கூட்டல் அல்லவா? (மதிப்பு 2x)
தில்லியில் பொறியாளர் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தபோதுதான் மதிப்புக் கூட்டல் எந்த அளவுக்கு நடந்தது என்பதை நேரிடையாக உணர முடிந்தது. அதாவது பொறியாளர்கள் இருப்பில் குறைவேயில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் இருப்பிலும் அதே கதைதான். பலர் உண்டு. ஆனால் இரண்டு வேலைகளையும் செய்பவர்கள்? தில்லியைப் பொருத்தவரை அச்சமயம் யாருமே இல்லை, என்னைத் தவிர என்றுதான் நினைக்கிறேன். ஆகவே எனது மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. (3x)
வீ.ஆர்.எஸ். வாங்கியதும் நிலை என்ன? எனது மதிப்பை இன்னும் அதிகமாக்கினால்தான் நான் கேட்கும் ரேட்டில் வேலை கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம்? மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தரத் தயங்கும் அல்லது தர இயலாத சேவை அளிக்க வேண்டும். அதுதான் வாடிக்கையாளர் இடத்திற்கே சென்று மொழிபெயர்த்து தருவதாகும். (4x)
பிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆனபோது அடுத்த மதிப்புக் கூட்டல் நடந்தது. முதல் முறையாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கி எனது தில்லி வாடிக்கையாளருக்கு சேவை தொடர்ந்து அளித்தேன். ஆக சேவை அளிப்பவர் வசிக்கும் இடம் எங்கிருந்தாலும் அவர் வேறு எல்லா இடங்களிலும் வசிக்கும் வாடிக்கையாளருக்கு சேவை அளிக்க இயலும் என்பதே நிஜமாயிற்று. பிறகு சொந்தக் கணினி வாங்க மதிப்பு இன்னும் கூடியது. தமிழ்ப் பதிவுகள் போடப்போட அதுவரை எடுக்காத தமிழ் மொழிபெயர்ப்புகளும் செய்ய முடிந்தது. ஆக, மதிப்புக் கூட்டல் விடாமல் நடக்கிறது. (5x, 6x...). போதுமா இது? நிச்சயம் போதாது. உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரே இடத்தில் நிலை கொள்வதற்கே ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
"வேறு உதாரணங்கள் கூறு, போதும் உன் சுய அலம்பல்", என்று முரளி மனோஹர் மறுபடியும் கோபிக்கிறான். ஆகவே இதோ மற்ற சில உதாரணங்கள்.
சாதாரணமான குப்பை வாருவதை காண்ட்ராக்ட் எடுத்து விஞ்ஞான முறைப்படி அதைக் கையாண்டு வெற்றி பெற்ற நிறுவனங்கள் இல்லையா. மனிதக் கழிவுகளுக்காக சுலப் சவுச்சாலய் நிறுவி ஓகோ என்றெல்லாம் வந்து விட்டார்களே. எனது இந்தப் பதிவையே பாருங்களேன். எந்த சேவையுமே அதன் மதிப்பு கூட்டப்படும்போது அதன் விலையும் அதிகரித்து நல்ல லாபம் கிட்டுகிறதல்லவா?
எந்தச் சேவையையும் அளிக்கும் விதத்தில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் செருப்பு ரிப்பேர் செய்பவருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை. பல டூத்பிரஷ் கம்பெனிகள் தங்களது பிரஷ்கள் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்கின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் செய்யப்படும் பிரஷ்கள் கம்பெனி பிராண்ட் நேம் பெற்றவுடன் அதன் விலை எந்த அளவுக்கு உயர்கிறது!
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
18 hours ago
13 comments:
In certain cities like Mumbai and Delhi you can see barbers who run their business under a tree shade, with just one chair for the customer plus the accessories. And he will charge just Rs.10/ for hair cutting + shaving.
If you want to do the same thing in an a/c salon, it might cost you around Rs 75/-. Why? because of the ambience etc.
The example may hold good for others too.
Selvan
/எந்தச் சேவையையும் அளிக்கும் விதத்தில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் செருப்பு ரிப்பேர் செய்பவருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை. பல டூத்பிரஷ் கம்பெனிகள் தங்களது பிரஷ்கள் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்கின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் செய்யப்படும் பிரஷ்கள் கம்பெனி பிராண்ட் நேம் பெற்றவுடன் அதன் விலை எந்த அளவுக்கு உயர்கிறது! /
இதில் மதிப்பு கூடுதல் எங்கே வருகிறது.
they are just changing their business propositions (or) branding their products which may result in higher margins. but this does not amount to value addition.
Please post the transalation of this post and also look at the comments
http://chennai.metblogs.com/archives/2007/11/stereo_typing_a_brahmin.phtml#more
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இந்த எழுத்தால் உங்கள் மதிப்பு கூடித்தான் இருக்கும். இருக்கட்டும், தபால் துறை ஏதோ மதிப்புக்கூட்டுச் சேவை செய்வதுபோல, விளம்பரங்கள் வெளியிடுகிறதே. அது என்ன கூத்து? விபரம் அறிந்த நீங்கள் கொஞ்சம் தீர விசாரித்து எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முகில்வண்ணன்
ராஜாஜி சொன்னமாதிரி குலக்கல்வி முறையை கொண்டுவந்திருந்தால் எல்லார் மதிப்பும் அப்படியே இருந்திருக்கும் இல்லையா :))))
செந்தழல் ரவி பெயரில் வந்த பின்னூட்டம் அதர் ஆப்ஷனில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அவரே பல முறை அம்மாதிரி செய்துள்ளதால் இப்போது நிச்சயாகச் சொல்ல இயலவில்லை. செந்தழல் ரவி என்னுடன் மின்னஞ்சல் மூலமோ தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு தான் அதை இடவில்லை எனக்கூறினாலும் இப்பின்னூட்டம் நீக்கப்படும்.
மற்றப்படி ராஜாஜி அவர்க:ள் பற்றி இப்பின்னூட்டம் கூறுவதும் ஏற்புடையதல்ல. நான் சொன்ன சேவை மதிப்புக் கூட்டலில் இது வராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks for the terrific post. Those who can understand this and work hard, will succeed definitely.
Those feel envy about this should realise that, often the job that pays the most is also the most difficult. One has to work hard to achieve that.
//they are just changing their business propositions (or) branding their products which may result in higher margins. but this does not amount to value addition//.
இதை விளக்க மறுபடி எனது உதாரணத்தைத்தான் எடுத்து கொள்ள வேண்டும். முரளை மனோஹர் கோபித்தாலும் கவலை இல்லை.
சமீபத்தில் 1975-ல் மொழி பெயர்ப்பு வேலை செய்ய ஆரம்பித்தபோது, முதல் வேலையை கையால்தான் எழுதிக் கொடுத்தேன். அதையே டைப் செய்விக்க வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பாயிற்று. ஆனால் அடுத்த கட்டமாக நான் மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்வித்து பிழை திருத்தி கொடுக்க அதன் மதிப்பு கூடுகிறது அல்லவா?
அதே போலத்தான் பியூட்டி பார்லர்கள், பாட்டா நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைக்கு மதிப்பு ஏறுகிறது. வாடிக்கையாளருக்கு பல விதங்களில் சௌகரியம். பியூட்டி பார்லரில் இளம் பெண்கள் சிகையலங்காரம் செய்தால் கசக்கிறதா என்ன? அதன் அதிக விலையைத் தருகிறீர்களா இல்லையா?
கையேந்தி பவனில் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும், அதற்கு உடுப்பி ஹோட்டலுக்கு போகலாம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போகலாம். எப்படி வசதி?
அதே போல கையேந்தி பவனில் வேலை செய்பவனுக்கும் அதே சேவையை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செய்பவனுக்கும் ஒரே சம்பளமா?
இதைத்தான் நான் கூறப் புகுந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
value addition என்றால் பொருளின் மதிப்பு கூட வேண்டும். நீங்கள் முதலில் கொடுத்த பால், தயிர், பலகாரம் என்பதாக.
தெருமுனையில் இருக்கும் ஒரு செருப்பு 50 ரூபாய் என்றால், அதே செருப்பும் குளிரூட்டப்பட்ட கடையில் 75 ரூபாயாக இருக்கலாம்; இது எங்கே விற்பது என்ற முடிவு; விலையிலும் ஏற்றம் இருக்கலாம் ~ ஆனால் value addition என்று சொல்ல முடியாது.
Same way if a un-branded beedi is being sold for 10 paise per piece, a branded one will sell for 15 paise and if the company is able to place the brand in a much higher pedestal, they may even be able to sell it at 30 paise. But, this will not amount to value addition.
value additition என்பது பொருளின் மதிப்பைக் கூட்டுவது; விலையைக் கூட்டுவடு அல்ல.
விலை கூடுவதும் மதிப்பு கூடுதலில்தான் வரும். இந்த மதிப்புக் கூட்டல் கணிப்பில் பல காரணிகள் உள்ளன. நீங்கள் சொல்வது போல பொருளின் உள்ளிட்ட மதிப்பு மட்டுமல்ல. பேக்கிங், மற்றவை எல்லாமே அதில் வருகின்றன.
செருப்பு உதாரணத்தையே எடுத்து கொள்ளுங்கள். பிளாட்ஃபாரத்தில் தூசிகள் நடுவே நின்று வாங்குவதை விட குளிரூட்டப்பட்ட அறையில் வாங்குவது அதிக மகிழ்ச்சி அளிக்கிறதல்லவா? அதுதான் இங்கு மதிப்பூட்டல். இல்லாவிட்டால் தேவையின்றி அதிக விலை ஏன் தர வேண்டும்?
மேலும் பிளாட்பாரத் தொழிலாளி அதே வேலையை குளிரூட்டப்பட்ட அறையில் செய்யும்போது அதிகமாகத்தானே சம்பாதிக்கிறான்? இந்த சேவைக்கு அவன் பெரும் அதிகப் பணம் அவனைப் பொருத்தவரை அதிக மதிப்புடையதே. எல்லா காரணிகளுமே தத்தம் இடத்திலிருந்து ரியேக்ட் செய்வதால், சுலபமாக அவற்றை கணிக்க இயலாது என்று வேண்டுமானாலும் கூறலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்னொன்றும் கூறியாக வேண்டும். மதிப்புக் கூட்டல் என்பது இப்பதிவில் பொருளுக்கு மட்டுமல்ல, சேவைக்குமேதான் என்பதை நினைவு கூர்ந்தால் உங்கள் குழப்பம் விலகி விடும்.
பிளாட்ஃபாரத்தில் வைத்து முடிவெட்டிக் கொள்வதை விட சலூனில் வெட்டிக் கொள்வது சேவையின் மதிப்பூட்டலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/விலை கூடுவதும் மதிப்பு கூடுதலில்தான் வரும். இந்த மதிப்புக் கூட்டல் கணிப்பில் பல காரணிகள் உள்ளன. நீங்கள் சொல்வது போல பொருளின் உள்ளிட்ட மதிப்பு மட்டுமல்ல. பேக்கிங், மற்றவை எல்லாமே அதில் வருகின்றன. /
மதிப்பு கூடுவதால் விலை கண்டிப்பாகக் கூடும்; ஆனால் விலை கூடுவதெல்லாம் மதிப்பு கூடுவதாக அர்த்தம் இல்லை (அதாவது all computers are calculators but all calculators are not computers) நீங்கள் சொன்ன மாதிரி பேக்கிங் அல்லது வேறு ஏதாவது இருந்தால்தான் மதிப்பு கூடுவதாக இருக்கும். உதா: இட்லியாக மட்டுமே கையேந்திபவனிலும் ஏ.சி. அறையிலும் பரிமாறப் பட்டால் இரண்டுக்கும் விலை வித்தியாசம் இருக்கும்; ஆனால் ஒரு இடத்தில் இட்லி + சாம்பார், இன்னொரு இடத்தில் இட்லி + சாம்பாரி + சட்னி என்றால்தான் மதிப்பு கூடுவதாகும் (போண்டாவைப் பற்றிப் பேசவில்லை.))!.)
/மதிப்புக் கூட்டல் என்பது இப்பதிவில் பொருளுக்கு மட்டுமல்ல, சேவைக்குமேதான் என்பதை நினைவு கூர்ந்தால் உங்கள் குழப்பம் விலகி விடும்./
இதே விதி சேவைக்கும் பொருந்தும். உதா: (1) மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பது; மொழிபெயர்பை அவர்கள் இடத்திற்கே சென்று செய்து கொடுப்பது. (2) Customs clearance alone and bundling it with transportation also (எனக்குள்ளும் முரளி மனோஹர் வந்து விட்டான் போலும், நிறுத்து உன் சுயதொழில் புராணத்தை என்கிறான்).
/பிளாட்ஃபாரத்தில் வைத்து முடிவெட்டிக் கொள்வதை விட சலூனில் வெட்டிக் கொள்வது சேவையின் மதிப்பூட்டலே./
இது சேவையின் மதிப்புக் கூட்டல் இல்லை; எங்கு சேவையப் பெறுவது அல்லது கொடுப்பது என்பதுதான். ஆனால் முடிவெட்டிக் கொள்வதுடன் தலைச் சாயம் பூசுதல், bleaching செய்தால் அது மதிப்புக் கூட்டல்.
எனக்கு தோன்றியதைச் சரியாகச் சொன்னேனா என்பது தெரியவிலை. உரையாடுவோம்.
பிளாட்ஃபாரத்தில் முடிவெட்டிக் கொண்டால் தூசி படும். சலூனில் இல்லை. அதுவே மதிப்பு கூடல். மேலும் சலூனில் முடிவெட்டிக் கொள்ளாது பிளாட்பாரத்தில் வெட்டிக் கொள்ளும் வசதியானவன் கஞ்சப் பிசுனாறி என்று தன் உற்ற தோழர்களால் அன்புடன் அழைக்கப்படுவான்.
சேவை விஷயத்தில் கையேந்தி பவன் செர்வரை விட அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் செர்வரைப் பொருத்தவரை அவனுடைய வேலை மதிப்பு கூட்டப்பட்டது.
நான் முக்கியமாக இப்பதிவை போட்டதே ஒவ்வொருவரும் தாம் செய்யும் வேலையில் இம்மாதிரி சுதாரித்து தமக்கு அதிக மதிப்பைக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே.
மதிப்புக் கூட்டல் என்பது மன அளவிலும் வரும். உண்டா இல்லையா? இன்னும் விவாதிக்கலாம்.
வாடிக்கையாளரிடம் கண்டிப்பாக நடந்து கொண்டு எனக்கு வேண்டிய விலையைப் பெறுவதும் எனது மதிப்பை கூட்டத்தான் செய்கிறது. இவன் ஒரு சீரியஸ் தொழில்முறையாளன் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதால் என்னுடன் தேவையின்றி பேரம் பேசுவதில்லை. சில சமயம் பந்தாவும் காட்ட வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment