நான் இந்தப் பதிவில் இட்டப் பின்னூட்டம் இதுவரை வெளிவரவில்லை. அது பதிவரின் சாய்ஸ். ஆயினும் அக்கருத்தும் கூறப்பட வேண்டும் என்பதால் நான் அப்பின்னூட்டத்தையே இப்பதிவின் அங்கமாக வைக்கிறேன்.
"வேலைக்காரிகள் முக்கால்வாசி சமயங்களில் தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர்கள். தன்னைப் போல தன் குழந்தைகள் ஆகக்கூடாது என்னும் ஆசையில் தங்கள் சக்திக்கு மீறி அவர்களைப் படிக்க வைப்பவர்கள். அவர்களை உங்கள் நகைச்சுவைக்கு பாத்திரமாகப் போட்டது நல்ல டேஸ்ட் அல்ல.
மேலும் இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. எங்காவது வேலைக்காரன் ஜோக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு பெண்களுக்கு இழிவு தரும் இம்மாதிரி ஜோக்ஸ்களை பெண்ணான நீங்களே போட்டிருப்பது கொடுமை.
வேறு எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் போட்டதால் மட்டும் உங்கள் பொறுப்பு மறைந்து விடாது".
ஆனந்தவிகடன் எனக்கு பிடித்த பத்திரிகை. பல நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. ஆயினும் அவர்களிடம் எனக்கு பிடிக்காததே இந்த வேலைக்காரிகளை இழிவு செய்யும் ஜோக்குகள்தான். அது சம்பந்தமாக என்னால் பல உதாரணங்கள் காட்ட இயலும். ஆனாலும் அந்த உதாரணங்களையும் ஜோக்காக நினைத்து பலர் மகிழும் அபாயம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.
ஒரு சராசரி வேலைக்காரி பல வீடுகளில் வேலை எடுக்கிறார். ஏன்? கிட்டே சென்று பார்த்தால் தன் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கவே இந்தப் பாடுபடுகிறார் என்பது தெரியவரும். உதாரணமாக என் வீட்டில் வேலை செய்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். முதல் தலைமுறையாக அவர்கள் குடும்பத்தில் படிப்பவர்கள் ஆகையால் வீட்டில் வைத்து சொல்லிக் கொடுக்க அவர்களது தாய் தந்தையரால் இயலாது. ஆகவே டியூஷன் வேறு வைக்கின்றனர். இதற்கெல்லாம் பணம்? கூடவே இன்னொரு கொடுமை. வேலைக்காரிகளின் கணவன்மார்கள் சாதாரணமாக தாம் சம்பாதிப்பதையெல்லாம் பெரும்பகுதி குடித்துவிட்டு தொல்லை செய்பவரகள். சமயத்தில் மனைவியிடமே குடிக்க காசு கேட்டு தொந்திரவு செய்பவர்கள்.
காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் நான்கைந்து வீடுகளில் வேலை செய்துவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வர எப்படியும் 12 மணியாகி விடும். அதற்கப்புறம்தான் சோறு ஆக்குவது, துணிதுவைப்பது எல்லாமே. சில வீடுகளில் இரண்டு வேளையும் செல்ல வேண்டியிருக்கும். அப்போது ஓய்வு எடுக்கக் கூட நேரம் இருக்காது. சிலர் பூக்களை மொத்தமாக வாங்கிவந்து மாலையாகக் கட்டி சம்பாதிக்கிறார்கள். பலரது குழந்தைகள் வேறு அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனில் அவர் வேலை செய்யும் வீடுகளுக்கு வந்து அம்மாவுக்கு உதவியாக இருப்பது வேறு நடக்கிறது.
இவ்வளவும் செய்து வருபர்களை குறியாக வைத்து ஜோக்ஸ் போடுவது அவசியம்தானா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
6 comments:
மிகச் சரியாக எழுதி உள்ளீர்கள் - என் எண்ணத்தை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். தமிழ் இதழ்கள் இனியாவது திருந்தட்டும்.
ராஜப்பா
நவ 14
Well Said Sir.
They should improve on their attitude as well while writing immature things, they call as jokes.
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பிரச்சனையை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.))
உங்கள் கருத்தோடு முழுவதும் ஒத்துப் போகிறேன். பாராட்டுக்கள், ஐயா.
Mr. Dondu
You are right. The idea of dignity of labour is unfortunately absent in the Tamil society. Political movements and politicians may shout till they are hoarse about castes and 'upper castes', but they won't take any steps to instill dignity of labour among the population. Magazines , the 'popular' ones cash in on indignifying ordinary labour. The result of the Dravidian movement's anti-Labour Dignity attitude is that they have made the choice of professions like carpentry, bricklaying, boatmaking, metalworking, bootmaking, fishing, etc in favour of white collor jobs and government jobs by laying all the emphasis on reservations for white collor jobs as if one gets dignity only by doing office jobs.
In Britain, if you don't say 'please' even to manual workers while asking them something would be considered rude. Many of the manual labour professions - called trades in Britain - earn more per day than many white collor jobs. If you are good electrician or tile maker or carpenter, you will never be short of income or demand or dignity from customers in Britain.
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஜெ.ஜெ சோனியாஜி விவகாரத்தைக் கிளப்பி வம்பை வளர்க்கப்போறீங்களா என் நினைத்தேன். அனா...
good
புள்ளிராஜா
சார்,
http://dravidatamils.blogspot.com/2007/08/4.html
மேல் சுட்டிய பதிவில் இருக்கும் கருத்தோடு ஒத்து போய் இருக்கிறீர்கள்.
உங்கள் கருத்து சரியானது.
- வேல் -
Post a Comment