11/07/2007

மூன்றாம் ஆண்டு நிறைவு

விளையாட்டுப்போல 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அந்த மூன்றாம் ஆண்டின் கடைசி நாள் (07.11.2007). இது 434-வது பதிவு. முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது. முதல் ஆண்டு முடிந்தபோது போட்ட பதிவு 173-வது. இரண்டாம் ஆண்டு நிறைவு பற்றி போட்ட பதிவு 321-வது ஆகும்.

இவை வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. அவற்றுக்கெல்லாம் மேலே எனது அனுபவங்கள் பற்றி எழுத வேண்டும். பெரும்பான்மையானவை நல்ல அனுபவங்களே. மிகச் சில அனுபவங்கள் அவ்வளவு நல்லவை அல்ல. ஆயினும் அவற்றையெல்லாம் மீறித்தான் நான் வந்தேன்.

நான் கெட்ட அனுபவம் எனக் குறிப்பிடுவது போலி டோண்டு என்னும் பெயரில் வந்த மூர்த்தி என்னும் பதிவர் மூலம் வந்தது. உபயோகமில்லாமல் என்னுடன் ஒரு பதிவு விஷயத்தில் போட்ட சண்டைக்காக விஷம் கக்கியவர் அவர். ஒரு மனிதனால் இந்த அளவுக்கு கீழே இறங்க முடியுமா என்று திகைப்பளிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்து கொண்டார் அவர். நல்ல வேளையாக அவர் பல பதிவர்களால் சரியானபடி அடையாளம் காண்பிக்கப்பட்டு அவர் தொல்லை ஒழிந்தது. இந்த விஷயத்தில் நான் நன்றிகூற வேண்டியவர்கள் குழலி, ஓசை செல்லா, செந்தழல் ரவி, சர்வேசன், உண்மைத் தமிழன் ஆகியோர். இதைத் தவிர மீதி எல்லாமே நல்ல அனுபவங்கள்தான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழ்மணம் எனது முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியது. அதற்கு எனது மனப்பூர்வமான நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். இந்த நன்றி தெரிவிக்கும் விஷயத்திலும புதிதாக ஒன்று பார்த்தேன். சில சமயங்களில் நான் மனப்பூர்வமாக தெரிவித்த நன்றியறிவிப்பு பலருக்கு சங்கடம் தந்தது என்பதை அறிய நேர்ந்தது. ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்து கொண்டேன். ஏனெனில் எனது அனுபவங்களில் பல விஷயங்கள் இம்மாதிரி நான்-லீனியராக அமைகின்றன என்பதே அது.

இந்த மூன்றாம் ஆண்டில் பெரும்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அது முடிந்த அன்றைக்கு நான் டப்பாங்குத்து நடனமே போட்டு ஒரு குழந்தையையும் அதன் அம்மாவையும் பயமுறுத்தியதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். தாய்மொழியில் மொழிபெயர்க்கும் ஆனந்தம் செய்துதான் உணரமுடியும். உதாரணத்துக்கு இப்பதிவுக்காக நான ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தபோது சொற்கள் இயந்திரத் துப்பாக்கியிலிருந்து வருவதுபோல வந்தன. கண்களில் நீர் திரையையே மறைத்தது. ஸ்ரீலங்காவிலிருந்து வந்த வாடிக்கையாளர் பற்றிய பதிவும் என்னையறியாத அளவுக்கு வேகமாக வந்தது.

எல்லா பதிவுகளுமே என் குழந்தைகள்தான் என்றாலும் மேலே கூறியது போன்ற சில பதிவுகள் ஏதோ காரணங்களால் என் நினைவில் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆரவாரப் பேய்கள் பற்றியது. இன்னொன்று ஷ்டாஸி பற்றியது.

இந்த ஆண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளிலும் அபார முன்னேற்றம். மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் நான் ப்ளாட்டினம் உறுப்பினராக முடிந்தது அவர்களது இணையப்பக்கங்களை தமிழாக்கம் செய்ததன் மூலமே. அதற்கு தேவையான தமிழில் எழுதும் திறமையே நான் வலைப்பூவுக்கு வந்ததாலேயே வந்தது. முக்கியமாக இகலப்பைக்கு மிக்க நன்றி. நண்பர்களுடன் எதிர்வினை செய்யும்போதும் அதற்கும் மேலாக எதிரியுடன் மோதும்போதும் போட்ட பதிவுகள் இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி அளித்தன என்றால் மிகையாகாது.
இன்னும் பல காலம் இருந்து உங்களையெல்லாம் படுத்த உத்தேசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

Arun Kumar said...

congrats dondu sir.

Krishnakumar said...

வாழ்த்துக்கள் !!

Bala said...

மூன்று வயது குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

K.R.அதியமான் said...

Dondu Sir,

Best Wishes and keep it up.

anbudan
Athiyaman

Aani Pidunganum said...

வாழ்த்துக்கள் dondu saaravl, goodluck

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அதுக்குள்ளே 2 வருடம் உருண்டோடிவிட்டதா?
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துக்கள் டோண்டு ஸார்...

dondu(#11168674346665545885) said...

துளசி, அருண்குமார், கிருஷ்ணகுமார், பாலா, அதியமான், ஆணி பிடுங்கணும், சிவா, ஜ்யோவ்ராம் அவர்களே நன்றி.

சிவா அவர்களே, இரண்டாண்டுகள் அல்ல, 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. நாளை நான்காம் ஆண்டு தொடங்குகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வாழ்துக்கள் சார்
மின்னஞ்சலுக்குப் பயந்து தான் இந்த அனானி

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கு நன்றி அனானி.

பயத்தை விட்டொழியுங்கள். வாழ்வில் முன்னேறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ore tharperumai. garvam koodathu. thannadakkam vendum. umathu moondru aandu postugalal yarukku enna nanmai?

ippadikku Luckylook

dondu(#11168674346665545885) said...

ஐயோ பாவம் அனானி. நீர் அனாமத்தாக பின்னூட்டம்போட போயும் போயும் லக்கிலுக்தானா கிடைத்தார்?

இம்மாதிரி முகம்தெரியாது பின்னூட்டம் இடுபவர் அவர் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது