தமிழ்மணம் நிர்வாகியிடமிருந்து ஒரு பொது மின்னஞ்சல் வந்தது. அது எல்லா பதிவாளர்களும் தத்தம் பதிவுகளில் மட்டுறுத்தலை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. இப்போது அசிங்கப் பின்னூட்டங்கள் வரும் சூழ்நிலையில் இம்மாதிரி செய்வது அவசியமே. இதை வற்புறுத்துவதற்காக பலர் குறை கூறலாம். ஆயினும் இந்த நடவடிக்கை மிக்க இன்றியமையானதே.
வற்புறுத்தல் இருந்ததால் மட்டுமே தமிழ் நாட்டுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் மழை நீர் சேமிப்புத் திட்டம் சாத்தியமாயிற்று. சில மிக அவசிய காரியங்கள் நடக்க வேண்டுமானால் வற்புறுத்தல் அவசியமே.
மிகச் சரியான செயலுக்காக தமிழ்மணம் காசி அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பயணம் என்பது அறிதலே
-
இந்தக் காணொளி மிஷிகன் ஏரியில் ஒரு சிறு கப்பலில் செல்லும்போது பதிவுசெய்தது.
ஐஃபோன் பதிவு. ஒலிப்பதிவுக்கருவி இல்லை. ஆகவே ஐஃபோனின் கேட்புக்கருவி
பயன்படுத்தப்ப...
35 minutes ago
94 comments:
இது உங்களுடைய முயற்சியா சார்?
எனக்கும் காசி சார்கிட்டருந்து மூனு மெய்ல் வந்திருக்கு. உடனே செஞ்சிட்டேன்.
நல்லதுக்குத்தான்.
இன்னையோட இந்த தொல்லை விட்டதுன்னு நினைக்கிறேன்.
Do something to avoid unnecessary comments wrttten by somebody in your name.He is taking you for granted.sivamgss
தாமதமான நடவடிக்கை என்றாலும் மிக நல்ல நடவடிக்கை.
தமிழ் மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.
சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க, இந்த மாதிரி இடுகைதான் இந்தத் தொல்லையை மேலும் தொல்லையாக்குகின்றன. அய்யா டோண்டு அவர்களே, இதுக்கு ஒரு இடுகையா? இருக்கும் எல்லாப் பதிவருக்கும் தான் அஞ்சல் போயிருக்கு, இதை மறுபடியும் இங்கே போட்டு என்ன சாதித்தீர்கள்? என்னமோ நீங்க 'முயற்சி' செய்து இது நடந்த மாதிரி ஒரு பில்டப் தேவையா? (நான் அப்படி எண்ணத்தில் எழுதவில்லை என்று சொல்லி பிரயோசனமில்லை) ஜோசஃப் அவர்களே, எங்களுக்கெல்லாம் புத்தியே இருக்காதா? இதுக்கெல்லாம் ஒருத்தர் முயற்சி செய்யணுமா? இதென்ன அரசு அலுவலகமா? அங்கே இங்கே அவரை இவரைப்பிடித்துக் காரியமாற்ற? உங்கள் பெயரில் மூணு பதிவிருந்தால் மூணு அஞ்சல்தான் வரும், இதில் என்னத்தை அதிசயத்தைக் கண்டீர்கள்?
ஹும்....
மன்னிக்க வேண்டும் காசி அவர்களே. என்னுடைய நன்றியைத்தான் தெரிவித்தேன். நிச்சயமாக உங்களுக்கு சங்கடம் உண்டாக்கும் எண்ணம் எனக்கில்லை.
மறுபடியும் மன்னிப்பு கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா,
இந்த போலி டோண்டு போடும் ஆட்டதுக்கு தூபம் போடுவதே நீங்கள் தான் .எப்போதெல்லாம் அந்த ஆட்டம் குறைந்து உங்களுக்கு கிடைக்கும் அனுதாபம் குறைகிறதோ ,அப்போதெல்லாம் எதாவது ஒரு வழியில் அதை மீண்டும் கிளறுவது உங்கள் வழக்கம் .அப்புறம் மீண்டும் அவன் ஆரம்பித்த உடன் "அய்யோ..குத்துது..குடையுது"ண்ணு ஊரைக் கூட்ட வேண்டியது..இதுவே உங்களுக்கு பொழப்பா போச்சு .
இந்த அசிங்கங்களை நிறுத்துவது உங்க கையில தான் இருக்கிறது.
ஜோ அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன். என்னுடைய பதிவிற்கு (ஒரு வார்த்தை என் பதிவுகளில் கண்ணியக் குறைவாக உள்ளதை யாரேனும் சுட்டுங்கள்!!). ஏனோ தெரியவில்லை ஒரு ஆபாசப் பின்னூட்டம் வந்தது. அதுவும் நட்சத்திர வாரத்தில்!!. 'மாயமான்' என்ற அந்தப் பதிவிற்கு பிறகு எழுதும் ஆர்வமே போய்விட்டது. பதிவுகளை தொடர்ந்து படித்தவர்களுக்கு அது புரியும். அதற்கு பிறகு வந்த பதிவுகளை பாதிப்புடனேயே எழுதினேன். வேறு மாதிரி பின்னூட்டம் வந்துவிடக் கூடாதே என்று அருமையாக எழுதியிருந்த ஒரு பதிவை.. பதிவிடாமலேயே விட்டேன். அந்த ஆபாசப் பின்னூட்டம் இங்கு (America) இரவாக இருக்கும்போது வந்திருக்கிறது அதை நான் மறுநாள் காலையில்தான் அதுவும்., முதல்நாள் வெகுநேரம் விழித்து பதிவெழுதியதால்., தாமதமாகத்தான் பார்த்தேன். அதுவரை எத்தனை பேர் கண்களில் அது பட்டதோ?. நல்லவேளை நான் இங்கு எழுதுவது என் நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் தெரியாது. நட்சத்திர வாரத்தால் புதிதாய் தெரிந்து கொண்டவர்கள் இருவர் மட்டுமே.
இப்படி என்னைப் போல் சம்பந்தமில்லாதவர்கள் ஏன் டோண்டு அவர்களே அவதியுற வேன்டும்?. அதற்கு பிறகும் நீங்கள் பிராமணர் மாநடு வெளிப்படையான எண்ணம் என் ஒரு பிதற்றல் இடுகையிட்டு இருந்ததாலேயே அதை நான் அப்படி கண்டிக்க வேண்டியதாயிற்று (என்னுடைய அந்தக் கருத்துக்களில் மாற்றமில்லை. அதை உங்களுக்கு தெரிவித்த விதத்தைச் சொல்கிறேன்). சரியாக அந்த அவதூறு (என்னுடைய 'மாயமான்' பதிவில்) பின்னூட்டத்திற்கு அடுத்த பின்னூட்டம் உங்களுடையது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என எனக்குத் தெரியவில்லை!!!. அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எங்கிருந்தாலும் அங்கு போய் அது 'போலி டோண்டு' (என்னய்யா... இதெல்லாம் உங்களுக்கே ஓவாரா தெரியலையா?). அந்தாளு என்ன பெயரில் எழுதியிருந்தாலும் நீங்களா ஏன் போலி டோண்டுன்னு விழிக்கிறீர்கள்? பொதுப்பேரு?.
இப்படி ஒருத்தரை ஓரங்கட்டும் வேலையை சரியாகச் செய்தீர்கள். பின்னூட்டங்களை படிப்பவர்களுக்குப் புரியும் அருவருப்பாக எழுதுவது ஒருவர் மட்டுமல்ல... பலர் வேறு பெயரில் பின்னூட்டம் கொடுக்கிறார்கள். நீங்கள் ஒருவரை மட்டும் குறிப்பிட்டதின் மர்மம் உங்களுக்குத்தான் தெரியும். மூர்த்தி (மூடி.. மூடி.. வச்சு என்னாத்த பண்ணப் போறிங்க?)தான் அவ்வாரு செய்வது என்பதுதான் நீங்கள் எல்லோருக்கும் சொல்லும் செய்தி. ஆள்தான் தெரிந்துவிட்டதே உங்களுக்கு? அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. டோண்டு அவ்வப்பது பரபரப்பு பண்ண போலி டோண்டு வேண்டும்?. சும்மா தூண்டி விடுவது மாதிரி எழுதுவது நீங்கள்தான். அவர் செய்கைக்கு 'பச்சை விளக்கை' அணைத்தார்கள் என்றால்... காசி அணைத்துவிட்டதால் இப்படி ஆரம்பித்து விட்டார் என விளம்பரப் படுத்தினீர்கள். ஒரு சில பிதற்றல்களில் ஓய்ந்திருக்கூடிய விதயம்., நீங்கள் தூண்ட காசியின் பேர் பதிவுக்கு பதிவு பின்னூட்டங்களில்.
மூர்த்தி..!, உங்களை இப்படி மனநிலை குன்றியவனைப் போல் அனைவரும் பார்க்கும் நிலை உங்களுக்குத் தேவையா?., தகுந்த விளக்கமளியுங்கள். பார்பனீயத்திற்கு எதிர்ப்பு சொல்பவர்கள் அனைவரும் அசிங்கமானவர்களைப் போல் சித்தரிப்பு சத்தமில்லாமல் எழுப்பப்படுகிறது இந்த 'போலிப்' பரபரப்பால்...!!. பின்னூட்ட தணிக்கையை அமல் படுத்துவதால் எல்லாரும் படிக்கிற கருமத்த... தனியாப் படிக்கப் போறோம்...நமக்கு வந்த கழிசடைய யாரும் பார்க்கலைங்கிற உணர்வு மட்டும் இருக்கும் . உங்கள் (போலி மற்றும் அதை அமுக்கிற மாதிரி ஊக்குவிக்கறது/தூண்டிவிடறவங்க எல்லாரையும்தான் ) மனநிலைகளில் அடித்திருக்கிற 'ஆப்பை' அகற்றுங்கள்., அது சீழ்பிடித்து அழுகியிருப்பதை முதலில் சுத்தம் செய்யுங்கள்., தமிழ்மணம் மட்டுமல்ல... வலைத் தமிழே சுத்தமாகும்.
டோண்டு அவர்களே, நான் உங்கள் பதிவுகளில் அதிகம் பின்னூட்டம் இட்டதில்லையாயினும் ரெகுலராக படித்து ரசிப்பவன். ஆயினும் போலி டோண்டு விதயத்தில் நீங்கள் உங்கள் அனுபவ முதுர்ச்சியொடு செயல்படவில்லை. ஜோ சொல்வதுபோல் அவனுக்கு பில்டப் கொடுத்ததே உங்கள் செயல்கள்தான். Provocateur என்றமுறையில் இந்நிலைக்கு நீங்களும் ஒரு காரணமே.
"எப்போதெல்லாம் அந்த ஆட்டம் குறைந்து உங்களுக்கு கிடைக்கும் அனுதாபம் குறைகிறதோ ,அப்போதெல்லாம் எதாவது ஒரு வழியில் அதை மீண்டும் கிளறுவது உங்கள் வழக்கம் .அப்புறம் மீண்டும் அவன் ஆரம்பித்த உடன் "அய்யோ..குத்துது..குடையுது"ண்ணு ஊரைக் கூட்ட வேண்டியது..இதுவே உங்களுக்கு பொழப்பா போச்சு.
இந்த அசிங்கங்களை நிறுத்துவது உங்க கையில தான் இருக்கிறது."
ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் அதை நிரூபிக்க வேண்டும். போலி டோண்டுவின் தொல்லை அது ஆரம்பித்து, கடந்த சில மாதங்களாக அப்படியேத்தான் இருந்து வருகிறது. அது எப்போது குறைந்தது என்பதை உங்களால் கூற முடியுமா?
அதற்காகத்தான் மற்றப் பதிவுகளில் என் பின்னூட்டங்களை என்னுடையத் தனிப்பதிவிலும் நகலிட ஆரம்பித்தேன். யாரிடமும் நான் அனுதாபம் கேட்கவில்லை. புரிதலைத்தான் கேட்டேன். கொடுத்தவர்களுக்கு நன்றி. கொடுக்காதவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கும் நன்றி, எனக்கு வாழ்க்கையில் இந்த வயதிலும்கூட மனித மனங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் நல்ல பாடம் கற்றுக் கொடுத்ததற்கு. சிலர் போலி டோண்டுவின் மேல் உள்ள பயத்தால் ஒதுக்கிக் கொண்டனர்.
இப்போது என்ன ஆயிற்று என்றால் அவன் எல்லோருடைய பதிவிலும் போய் பயமுறுத்தலாகப் பின்னூட்டமிட ஆரம்பித்தான். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரமாக கூற ஆரம்பித்தான். இது சம்பந்தமாகப் பலர் என்னிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
எது எப்படியானாலும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது நல்ல செயல்தானே. இஷ்டமிருப்பவர்கள் செய்கிறார்கள், மற்றவர்கள் செய்யவில்லை. இதில் யார் சுதந்திரம் பறிபோயிற்று என்று நினைக்கிறீர்கள்?
என் பெயரில் மற்றவர்களை அவதூறாக திட்டிய மனம் பிறழ்ந்தவனிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறீர்களா? எது எப்படியானாலும் இப்போது வந்த மட்டுறுத்தல் ஐடியா மிக நல்லதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எது எப்படியானாலும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது நல்ல செயல்தானே. இஷ்டமிருப்பவர்கள் செய்கிறார்கள், மற்றவர்கள் செய்யவில்லை. இதில் யார் சுதந்திரம் பறிபோயிற்று என்று நினைக்கிறீர்கள்?//
டோண்டு சார்,
இதை யாரிடம் கேட்கிறீர்கள்?மட்டுறுத்தலை நான் வரவேற்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது? தயவு செய்து மறைமுக திசை திருப்பல்களை கைவிடுங்கள்.
உங்கள் வயது ,அனுபவத்தின் காரணமாக உங்களை நான் மதித்து வருகிறேன்.தொடக்கத்தில் உங்கள் மேல் கொண்டிருந்த அனுதாபம் ,பிறகு உங்கள் தேவையில்லாத செய்கைகளினாலும் ,அதிகப் பிரசங்கித்தனத்தாலும் (கடுமைக்கு மன்னிக்கவும்) எரிச்சலாகவும் மாறியது .அதற்கு காரணம் நீங்கள் தேவைக்கு அதிகமாக பேசி ,போலி டோண்டுக்கு கொடுத்த ஒளிவட்டம் தான்.
தவறாக நினைக்க வேண்டாம் .சில நேரங்களில் உங்களைத்தவிர யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு நீங்கள் கொடுக்கும் வழ வழா கொழ கொழா விளக்கங்கள் எரிச்சலையே தந்திருக்கிறது .நீங்கள் இந்த பிரச்சனை முழுவதுமாக முடிவதை விரும்பவில்லையோ என்று கூட நினைக்குமளவுக்கு .மனதில் பட்டதை சொல்ல எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை .உங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜால்ரா போடுபவர்கள் தான் உங்கள் நலம் விரும்பிகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.அது உங்கள் விருப்பம்.
உங்களுக்கு இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு வயதும் தகுதியும் இல்லை.
"ஜோ அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்."
அது உங்கள் விருப்பம்.
"சரியாக அந்த அவதூறு (என்னுடைய 'மாயமான்' பதிவில்) பின்னூட்டத்திற்கு அடுத்த பின்னூட்டம் உங்களுடையது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என எனக்குத் தெரியவில்லை!!!. அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எங்கிருந்தாலும் அங்கு போய் அது 'போலி டோண்டு' (என்னய்யா... இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?). அந்தாளு என்ன பெயரில் எழுதியிருந்தாலும் நீங்களா ஏன் போலி டோண்டுன்னு விழிக்கிறீர்கள்? பொதுப்பேரு?."
நீங்கள் கூறும் மாய மான் பதிவில் போலி டோண்டுவின் பின்னூட்டத்திற்கு உடனடியாக அடுத்தப் பின்னூட்டம் என்னுடையதல்ல, அது முகமூடி அவர்கள் இட்டது. அதைப் பற்றி எனக்கு ஒரு நண்பர் தகவல் தெரிவிக்க அங்கு நான் வந்தேன். என்னுடையப் பின்னூட்டம் இதோ:
"போலிப் பின்னூட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். அவற்றைப் பற்றி நான் போட்டப் பதிவுகளைப் பார்க்கவும்.
1) http://dondu.blogspot.com/2005/12/2.html
2) http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
முகமூடி அவர்கள் கூறுவது நிஜம். போலி டோண்டு கொடுக்கும் (அவன்தான் எல்லா போலிப் பின்னூட்டங்களுக்கும் ஆதார ஊற்று) பிரச்சினையைப் புரிந்து கொள்ளவும். அவ்வளவுதான் கூற முடியும்.
என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்."
"இப்படி ஒருத்தரை ஓரங்கட்டும் வேலையை சரியாகச் செய்தீர்கள்."
கடந்த 7 மாதங்களாக என்னை பீடித்தவனை எதிர்க்க என்னால் முடிந்ததைச் செய்தேன். அதையும் செய்யக் கூடாது என்ற ரேஞ்சில் பேசினால் என்ன செய்வது?
தெருவில் இருவர் சண்டையிடுவதை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்தானே. அதில் மற்றவர்கள் சண்டையை விலக்கும்போது பாருங்கள். எல்லோரும் சேர்ந்து பலவீனமானவனைத்தான் கட்டிப் பிடிப்பார்கள். அடாவடிக்காரனை விட்டுவிடுவார்கள். அவனும் கட்டப்பட்டவனை குத்து குத்தென்று குத்தி விடுவான். பலவீனமானவனைத் தடுக்காமலிருந்தாலாவது அவன் வாங்கின பத்து குத்துக்கு ஒரு குத்தாவது திருப்பி விட்டிருப்பான். அதையும் சுற்றியிருப்பவர்கள் கெடுப்பார்கள்.
அதே போல இருவர் வாதம் செய்து கொண்டிருந்தால் முறையாக பேசுபவனுக்கு மட்டும் அட்வைஸ் எல்லாம் வரும். இன்னொருவனை சும்மா விட்டுவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவாயிருக்கும்? அது ஒன்றுமில்லை வலிமையானவனைப் பிடித்தால் அவர்களுக்கும் உதை விழும். அதே போல அடாவடி பேசுபவனிடம் ஏதாவது கூறினால் "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்றுதானே பதில் வரும். ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறுவார்களா? மாட்டார்களே. ஏனப்பா நீ நியாயம் தெரிந்தவன்தானே, அவனைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. விட்டுக் கொடுத்து போ அப்பா" என்று பதில் வரும். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயை திருப்பிக் கடிக்க வேண்டுமா என்ற ரேஞ்சில் உத்தமமாகப் பேசுவார்கள். ஆனால் வெறி நாய் என்று தெரிந்தால் அதைக் கொல்வதுதானே நலம். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஆயினும் போலி டோண்டு விதயத்தில் நீங்கள் உங்கள் அனுபவ முதுர்ச்சியொடு செயல்படவில்லை. ஜோ சொல்வதுபோல் அவனுக்கு பில்டப் கொடுத்ததே உங்கள் செயல்கள்தான். Provocateur என்றமுறையில் இந்நிலைக்கு நீங்களும் ஒரு காரணமே."
மணியன் அவர்களே, இதே மாதிரிக் கருத்தைத்தான் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக யூதர்களிடம் மற்றவர்கள் கூறி வந்துள்ளனர். யூதர்களே சலித்துப் போய் தங்களுக்கென்று இஸ்ரேலை ஸ்தாபித்து, தீவிரவாதிகளையும் ஆக்கிரமிப்பாளர்களையும் ஓட ஓட விரட்ட ஆரம்பித்தனர்.
மற்றவர்கள் கூறியதை கேட்பதும் சொந்த புத்தியை உபயோகித்துத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் அவரை எழுதக்கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.வியட்னாம் பற்றி எழுதக்கூடாது என்றால் ஜோ கேட்பாரா?//
போலி டோண்டை (ச்ச்... ) எழுதவிடாம பண்றதுக்கு டோண்டு அவர்கள் பண்ணுகிற முயற்சி மறைமுகம். இந்தா தெரிஞ்சுருச்சு அவன் சுயரூபம்னு குதித்துதான் கொஞ்ச நாள் அடங்கியிருந்த விதயம் மீண்டும் கிளறப்பட்டது.
//வியட்னாம் பற்றி எழுதக்கூடாது என்றால் ஜோ கேட்பாரா?//
அடப்பாவிகளா... அடுத்தவனுக்கு கிருக்குப் புடிக்கிற மாதிரி எழுதறதும்., வியட்னாம் பற்றி எழுதுவதும் ஒன்றா?. முதல்ல யாரு டோண்டு எழுதக் கூடாதுன்னு சொன்னது?. 'ஜட்டான்...' 'கிட்டான்'ன்னு உசுப்பேத்தி விடுற மாதிரி ஏன் எழுதணும்னுதான் கேட்கிறோம். நாட்டு ஆமை ஓட்டுக்குள்ள இருக்கிறவரை என்னாத்த வேணும்னாலும் பேசிக்கலாம். வெளிய வந்தா கொஞ்சம் நிதானமாத்தான் இருக்கனும். உங்கள் கேக்கேபிக்கே தனங்கள் எதிலும் சம்பந்தப்படாத எங்களை எழுதவிடாமல் தடுக்கிறது. கண்ட சாக்கைடையையும் எங்க கண்ணுல காட்டுது.
//But I will give my life to defend your right to speech"//
life எல்லாம் குடுக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு இந்தப் பிரச்சனைய ஊதிப் பெரிசாக்க வேண்டாம்னு நம்ம பெரி.... (பழக்கத்துல எழுதிட்டேன்...மன்னிச்சுக்கங்க!) நம்ம டோண்டு அய்யாகிட்ட சொல்லுங்க போதும்.
//அதே போல இருவர் வாதம் செய்து கொண்டிருந்தால் முறையாக பேசுபவனுக்கு மட்டும் அட்வைஸ் எல்லாம் வரும்//.
அவர் பார்பன வெறியர் டோண்டு என்று எழுதினால்., நீங்கள் மனம் பிறழ்ந்தவன் போலி டோண்டு என எழுதுகிறீர்கள். இதுல யார் முறையாப் பேசறது?. நீங்க பைத்தியங்காரங்கிறத அலங்காரமாச் சொன்னா முறையா எடுத்துக்கணுமா?. நீங்க ஜாட்டான்னு சொன்னா., அங்கிருந்து அசிங்கமான அர்ச்சனை கிடைக்கிறது.
//அது ஒன்றுமில்லை வலிமையானவனைப் பிடித்தால் அவர்களுக்கும் உதை விழும்//.
இதையேதான் பதிவுக்கு பதிவு சொல்லிட்டு வர்றிங்க இப்ப. ஆனா நம்மள அப்படிச் சொல்லாதிங்க... எங்க பலம் உங்களுக்குத் தெரியாது (நம்மூர்ல மட்டுமல்ல., சிங்கையிலும்தான்..) தேவைப்படும் வரை அதை வெளிக்காட்டவும் உத்தேசமில்லை.
//ஆனால் வெறி நாய் என்று தெரிந்தால் அதைக் கொல்வதுதானே நலம். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்//.
????????????????!!!!!!!!!!!!!. எத்தன பின்னூட்டத்த சத்தமில்லாம அழிச்சிங்களோ?.
இதுக்கு மேல இந்தப் பிரச்சனையைப் பற்றி பேசி விரையம் செய்ய எனக்கு போதிய நேரமில்லை.
//கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக யூதர்களிடம் //
யூதர்கள் நாங்கன்னு 21 ஆம் நூற்றாண்டுல ஆரம்பிச்சு இருக்கிங்க?. சொல்லிக்கங்க... நீங்க சொல்லிக்க வேண்டியதுதானே? மெட்ராஸ்ல உட்கார்ந்துகிட்டு (உங்களை மட்டுமில்ல...யூதர்கள் நாங்கள்னு சொல்றவங்க எல்லாரையும்தான்) டப்ன்னு இஸ்ரேலோட 'அலையன்ஸ்' போடுறிங்க?. இந்த மாதிரி விதயத்தில்; உங்கள் திறமைகளை எவர் மிஞ்ச முடியும்? :-)))).
அப்பிடி போடு அவர்களே,
உங்களுக்கு பின்னூட்டம் எழுதலாம் அன்று வந்தால் நாட்டாமையின் பின்னூட்டம் கூகள் டாக் முட்டையிலிருந்து மட்டுறுத்தலுக்காக சீறிக் கிளம்பியது. சரி அதைப் போய் முதலில் பார்த்தால் நான் என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அத்தனையும் அவரே கூறி விட்டார். ஆக, அதுதான் உங்களுக்கு நான் வைக்கும் பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு....
சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். :-).
மற்றபடி நான் டோண்டுவின் கருத்துக்களை(போலிப் பின்னூட்டம் பற்றி) ஆதரிக்கின்றேன்.
நன்றி மகேஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இது தான் நீங்க கொடுக்க நினைச்ச பதிலாக்கும்..அய்யகோ! இரண்டு பேருக்கிடையே பிரச்சனை வெடிக்கும் போது ,என்னைப் போன்ற மூன்றாம் நபர் ,பிரச்சனையை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று தோன்றுவதை யாரிடம் சொல்ல முடியுமோ,யாரை அறிந்து வைத்திருக்கிறேனோ அவரிடம் தான் சொல்ல முடியும் .உம்மை அது போல நினைத்து மனதில் பட்டதை உங்கள் நல்லதுக்காக சொன்னது என் தப்பு தான் ..நாட்டாமை சொன்ன மாதிரி நீங்கள் என்ன எழுதவேண்டும் என்று சொல்ல நான் யார்?தாராளமாய் எழுதுங்கள் ஐயா..நான் இனிமேல் கண்டுகொள்ள மாட்டேன் .அது போல மற்ற பதிவுகளில் நீங்கள் இடும் வழ வழா கொழ கொழா விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் ,புலம்பல்களையும் பார்த்துத் தான் ஆக வேண்டும் .படிக்காமல் இருப்பது நல்லது .
நீவிர் வழக்கம் போல ,நாட்டாமையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர் கருத்து சொல்பவர் அனைவரும் போலி டோண்டு-க்காக பரிந்து பேசுவதாக தீர்ப்பு சொல்லிவிட்டு ,"பாரீர் இந்த கொடுமை பாரீர் ..தாரீர் ஆதரவு தாரீர்"-ன்னு தினமும் ஒப்பாரி வைத்துக்கொண்டிருங்கள் ..நீங்களாச்சு உங்க ஜால்ராக்களாச்சு! ஆள விடுங்க சாமி!!
"அது போல மற்ற பதிவுகளில் நீங்கள் இடும் வழ வழா கொழ கொழா விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் ,புலம்பல்களையும் பார்த்துத் தான் ஆக வேண்டும்."
இதை நீங்கள் இரண்டாம் முறையாகக் கூறுகிறீர்கள். எங்கு நான் குழப்பமான விளக்கம் கொடுத்தேன் என்பதை எடுத்துக் கூறுங்கள். அதை நான் பார்த்து முடிந்தால் இன்னும் அதிக விளக்கமளிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பலர் இங்கே எதிர்ப்பதால், காசி அவர்கள் ஒரு ஓட்டெடுப்பு நடத்தி இந்த முறையை இங்கே அமல் படுத்தியிருந்தால் யாரும் எதுவும் பேசியிருக்க முடியாது. ஏனென்றால் வலைப்பதிவாளர்கள் இல்லையெனில் தமிழ்மணம் இல்லை, காசி இல்லை. ஆனால் ஒருவருக்கு ஒரு ஓட்டுதான் என்பதையும் அமல்படுத்த வேண்டும்.
டோண்டு இதைப்பற்றி நீண்ட நாள்களாக எழுத நினைத்து பின்பு எழுதாமலேயே விட்டுவிட்டேன். காரணம் உங்களிடமிருந்து அதற்கு எவ்விதமான மட்டையடி வருமென்று தெரியும். அதனாலேயே உங்களுக்கு மறுமொழி அளிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தேன்
நான் மற்றும் மற்றவர்கள் சொல்வது நீங்கள் ஏதும் கருத்து சொல்லக் கூடாது என்பதல்ல. ஆனால் விவாதத்தின் போது சின்ன பையன் நீ உனக்கு ஒன்றும் தெரியாது என்பது போலவும் குதிரைக்கு சேனம் கட்டியது போல் உங்களுக்கு தெரிந்ததை/தோன்றியதை அல்லாமல் மற்ற அனைத்தையும் ஒப்புக்கொள்ளாத அல்லது மறுபரிசீலினைக்கு உட்படுத்தக்கூட நினைக்காத மனோபாவத்தோடு மட்டையடியான வாதத்தை வைத்து எதிர் விவாதம் செய்பவரை கிறுக்குபிடிக்க வைக்கும் உங்கள் திறமையினை பற்றித்தான் பேசுகிறோம். அதேபோல் வார்தையை பிடித்துக்கொண்டு தொங்கி விவாதத்தை திரிக்கும் வேலையையும் தான் சொல்கிறோம்.
இதற்கு உங்கள் மட்டையடியையும் இப்போதே என்னால் யூகிக்க முடிவதால் அதற்கான பதிலையும் எழுதிவிடுகின்றேன்.
1. நான் எப்போது இவ்விதம் சொன்னேன் என்று நிறுவு பார்க்கலாம் என்பீர்கள்.
பதில்: இதற்கு உங்கள் பழைய விவாதங்களை படித்தாலே போதும். நான் ஒருநாள் செலவுசெய்தால் 4-5 பதிவு அளவிற்கு எடுத்து போடமுடியும். ஆனால் எவ்வளவு போட்டாலும் சத்தியமாக உங்களால் அதை புரிந்து கொள்ளமுடியாது. மாறாக நான்கொடுப்பதில் "சின்ன பையன்" ஐ Ctrl+F போட்டு தேடுவீர்கள்.
2. நான் "உங்களுக்கு தெரிந்ததை/தோன்றியதை அல்லாமல் மற்ற அனைத்தையும் ஒப்புக்கொள்ளாத" என்று சொன்னது தவறு என்பதற்கு உங்களிடமிருந்து எவ்விதமான உதாரணம் கிடைக்கும் என்பதும் தெரியும். எங்காவது " நீங்கள் அண்ணா மேம்பாலத்திற்கு "மவுண்ட் ரோடு" வழியாக செல்லலாம் என்று சொல்லியிருப்பீர்கள். யாராவது காந்திரோடு வழியாகவும் செல்லலாம் என்றால் அதை ஒப்புக்கொண்டிருப்பீர்கள். அதை ஒத்தி இங்கிட்டு நிறுவமுயல்வீர்கள்.
(தெய்வமே நான் எப்போ அண்ணா மேம்பாலத்திற்கு "மவுண்ட் ரோடு" வழியாக செல்லலாம் என்று சொன்னேன் என்று கேக்காதீங்க. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன். )
இதேதான் போலிவிவகாரத்திலும் நடந்தது. அந்த பதிவின் பின்னூட்டங்களை சுடச்சுட தொடர்ந்து படித்திருக்கிறேன் ஆனால் விவாதத்தில் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் யாரும் போலியாக எழுதவில்லை. இன்னும் சொன்னால் ஒருசில அனாமத்தேய பின்னூட்டங்களை தவிர வேறுயாரும் முகமூடி போட்டுகூட வரவில்லை. ஆனால் உங்கள் வாதத்திறமை அங்கு அனைத்தையும் கொண்டுவந்தது. உங்கள் பிரச்சனையே யாராவது மாற்று கருத்து சொன்னால் "விட்டேனா பார் என்று, கழியோடு, அவையம் அதிர ஒடி வந்து" மட்டயடியாய் சாத்தி எதிராளி பின்னங்கால் பிடறியில் பட ஓடவைக்க நினைப்பது தான். கொஞ்சநாள்முன்பு "அப்படிபோடு" உடனான உங்கள் விவாததில் பதில் எழுதவந்த நான் உங்கள் விவாததிறமையை பார்த்து விட்டு இப்படித்தான் ஓடினேன். இது குறித்து முத்துவை மற்றவர்கள் கிண்டல் செய்ததையும் கொஞ்சம் பாருங்கள். ஐயையோ இத உங்கள் வாதம் மீதான புகழ்ச்சியாய் கொண்டுவிடாதீர்கள். (பாத்தீங்களா இந்த ரேஞ்சுல disclaimer கொடுக்கும் அளவில் எங்கள் நிலை உள்ளது). மற்றுமொரு disclaimer நாட்டாமை இதனை நான் போலியை ஆதரிப்பதாக திரிக்க வேண்டாம். இங்கே மூலத்தை மட்டுமே சொல்கிறேன். விளைவை தொடவில்லை. காரணம் விளைவை பலர் அலசி பல பதிவுகள் இட்டுவிட்டமையால் இன்னும் சொல்ல ஒன்றுமில்லை.
அதேபோல் போலிக்கு அளவுக்கு மீறி வெளிச்சம் கொடுத்தது குறித்து "ஜோ" மற்றும் "அப்படிபோடு" ஆகியோரின் கருத்துக்களை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் இவ்விஷயத்தை இன்னும் சில பதிவர்கள் (பேரை சொல்ல விரும்பவில்லை) புறங்கையால் ஒதுக்கிவிட்டு தன் வழியில் அருமையாக சென்று வருவதை என்றாவது திரும்பிப் பார்த்ததுண்டா. நீங்கள்தான் அதீத பில்டப் கொடுப்பதாக தோன்றுகிறது.
போதுங்க இதுகுறித்து எழுதினால் முடிக்க முடியாது வளர்ந்து கொண்டே செல்லும்.
இறுதியான Disclaimer: இது உங்கள் விவாத முறை மீதான விமர்சனம். உங்கள் மீதானது அல்ல. அவ்வாறு கொள்ளப்படும் அபாயமிருப்பதால் இந்த Disclaimer.
சார் உங்க கோள்விகளுக்கு இங்க பதில் செல்லி இருக்கிறேன் கொஞ்சம் பாக்க முடியுமா?
http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html
Dondu
You always claimed to know Poli. Have you got any proof to prove PoliDondu? In that case, why havent you taken legal action?.
I remeber your suggestion to one of our fellow bloggers to put "Mottai Petition" when he/she wrote about a problem in office. Arent you really courage enough to take legal action when it comes to you??
I suspect your motive for long time. Also when I read this post for first time, I got an impression that you are trying to twist as if these things are happening bcoz of you. Your writing is like that.
"அய்யகோ! இரண்டு பேருக்கிடையே பிரச்சனை வெடிக்கும் போது ,என்னைப் போன்ற மூன்றாம் நபர் ,பிரச்சனையை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று தோன்றுவதை யாரிடம் சொல்ல முடியுமோ,யாரை அறிந்து வைத்திருக்கிறேனோ அவரிடம் தான் சொல்ல முடியும் .உம்மை அது போல நினைத்து மனதில் பட்டதை உங்கள் நல்லதுக்காக சொன்னது என் தப்பு தான்"
இருவர் சண்டையிடும்போது விலக்க வருபவர்கள் ஒருவரை மட்டும் கட்டிப் பிடித்து அவரை சண்டையிடமுடியாமல் தடுத்து, அதற்குள் இன்னொருவர் இந்த ஒருவரை நான்கைந்து அதிக உதைகள் கொடுக்க வைப்பது போல இருக்கிறது நீங்கள் சமரசம் செய்ய வைக்கும் லட்சணம். போலி டோண்டு ஆரம்பித்த முதல் அடியே எவ்வளவு தரக்குறைவாக இருந்தது என்பதைப் பார்க்க "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களின் முதல் பகுதிக்குச் செல்லுங்கள்.
ஆனால் ஒன்று கூற வேண்டும். அவனால் முன்பு பாதிக்கப்பட்ட பலர் பதிவு எழுதியதையே நிறுத்திக் கொண்டனர். அவனும் அதை தனக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து கொக்கரித்து வந்தான். அந்த சந்தோஷத்தை நான் அவனுக்கு கொடுக்கவில்லை. அதுதான் அவனுக்கு வெறி. அது எனக்கு புரிகிறது என்பதை திருப்தியுடன் கூறுவேன்.
அது மட்டுமல்ல, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நான் அவனை எதிர்த்தேன். ஒரு அடாவடிப் பேர்வழியை எதிர்க்க மற்றவர்கள் பயந்த போது நான் எதிர்த்தேன். அதனாலேயே எனக்கு ஆதரவு பலரிடமிருந்து கிடைத்தது என்பதை நான் இங்கு நன்றியுடன் நினைவு கூறுவேன்.
இப்போது மட்டுறுத்தல் வந்து விட்டது. நல்லதுதானே. பலர் நான் செய்த கூத்துக்களே இதற்கெல்லாம் காரணம் என்று சலிப்போடெல்லாம் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக பதிலளிப்பேன். இப்போது அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு.சந்தோஷ் அவர்களின் பதிவில் நான் இட்ட பதில் :
//சபைல வந்துட்டா எல்லாரும் ஏதாவது ஒண்ணு செல்லத்தான் செய்வாங்க(//
அப்போ சபை நாகரீகம் ?
உங்க அப்பா, அம்மா, தங்கை பத்தி என்ன வேனும்னாலும் எழுதலாம் அனா அதை பற்றி யாரும் எதுவும் பேச கூடாது.
//'ஜாதிகள் இல்லையடா தாத்தா' //
Correct.
இப்போ கூட எதோ "கூத்து"ன்னு பேர்ல ஒரு குறிப்பிட்ட ஜாதிய திட்டி பதிவு ஒன்னு போட்டாங்க.
அதில யாரும் "ஜாதி இல்லை" இப்படி ஜாதியை பற்றி பேச வேண்டாம்ன்னு சொன்ன மாதிரி தெரியல!
என் கேட்கவில்லை ?
உங்களுக்கு தேவைன்னா ஜாதிய திட்டுவிங்க, இல்ல நமக்கு வம்பு வருதுன்னு தெரிஞ்சவுடனே "ஜாதி இல்லை ஜாதி இல்லை" ன்னு பேசுவிங்க.
நிங்க ஒன்னும் பெரிய "ஜாதி ஒழிப்பு" செவை செய்யற மாதிரி தெரியல.
உங்க personal agenda தான் தெரியுது - அது இல்லை, "நாங்க நிஜமாவே ஜாதி பத்தி பேசறது தப்புன்னு சொல்லறோம்" அப்படின்னா ஒர் குறிப்பிட்ட ஜாதியை மிக கெவலமாக திட்டி எழுதும் சில பதிவுகளில் என் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை ?
ஒரு ஜாதியை திட்ட வேண்டும், அனால் அந்த ஜாதியை செர்ந்தவர் அதை சகித்து கொள்ள வேண்டும் - அவர்கள் எத்தனை அபாசமாக எழுதினாலும் சரி.மிக கெவலமாக உள்ளது.
ஜாதியை ஒழிக்க ஒரே வழிதான் உள்ளது.
அது "Levelling Up"
விவேகானந்தரை பற்றி படித்து நிஜமாகவே சமுக நிலைகள் பற்றி ஆய்வு செய்து, அதை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கும் மக்களுக்கு தெரியும் - சும்மா உதார் விடும் நபர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
காசி அவர்களுக்கு,
நான் டோண்டுவின் முயற்சியா என்று மட்டும்தானே கேட்டேன். அதை முடிவு செய்து பாராட்டவில்லையே.. அதற்கெதற்கு நீங்கள் கோபப்படவேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
இதை யார் செய்திருந்தாலும், யாருடைய தூண்டுதலில் செய்திருந்தாலும் பாராட்டப்பட வேண்டியதுதான். அதனால்தான் நல்லதுக்குத்தான் என்றேனேயொழிய இதற்கு யாருக்கும் க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.
"1. நான் எப்போது இவ்விதம் சொன்னேன் என்று நிறுவு பார்க்கலாம் என்பீர்கள்.
பதில்: இதற்கு உங்கள் பழைய விவாதங்களை படித்தாலே போதும். நான் ஒருநாள் செலவுசெய்தால் 4-5 பதிவு அளவிற்கு எடுத்து போடமுடியும். ஆனால் எவ்வளவு போட்டாலும் சத்தியமாக உங்களால் அதை புரிந்து கொள்ளமுடியாது."
இந்த நழுவல் வேலைதானே வேண்டாம் என்கிறது. ஒரு விஷயம் நடந்தது என்று நீங்கள் கூறினால் அதை நிரூபிக்க சான்றுகள் தருவது உங்கள் வேலை. அது பொய் என்று நிரூபிப்பது என் வேலையில்லை. இன்னொரு விஷயம், ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை நிரூபிக்க அந்த நிகழ்ச்சி நடந்த தருணத்தைக் காண்பித்தாலே போதும். ஆனால் அதே நிகழ்ச்சி நடக்கவில்லை என்று கூற எல்லா தருணங்களையும் பார்த்து அலச வேண்டும். இது தர்க்க சாஸ்திரத்தின் விதி. நீங்கள் இந்த சாஸ்திரம் அறிந்தவராக இருப்பினும் இல்லாதவராக இருப்பினும் இதுவே நிலை. இதை கூறுவது டோண்டு ராகவன் என்னும் தர்க்க சாஸ்திர மாணவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ஜோசஃப் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பார்பனீயத்திற்கு எதிர்ப்பு சொல்பவர்கள் அனைவரும் அசிங்கமானவர்களைப் போல் சித்தரிப்பு சத்தமில்லாமல் எழுப்பப்படுகிறது இந்த 'போலிப்' பரபரப்பால்...!!.
//
ராகவன் அவர்களின் சில செயல்பாடுகள் குறித்து உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், நீங்கள் கூறுவது போல் இப்பிரச்சினைக்கும் பார்ப்பனீய எதிர்ப்பு/ஆதரவு என்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை !!!!
கார்த்திக் அவர்களுடைய பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://thural.blogspot.com/2006/01/blog-post.html#comments
Dear Kartik,
This is quite serious. You have enabled the "other" option. Using that, one can leave comments in anyone's blogger name. That is what has happened here. I thank you for your email asking me for clarification. I take the liberty of reproducing our entire mail exchange and I request you not to delete this comment. Let others know what is happening elsewhere. Here goes:
Your mail:
"Thiru dondu avaragalae,
I see a comment in my blog
http://thural.blogspot.com given for "bayam" is that given by you?
The words used in the comment do not look good.
I have seen in your blog about the "boli dondu". I just wanted to cross check that this comment is given
by you or by the boli dondu.
Comments goes like this....."
My reply:
Dear Karthik,
Do you need to ask? These comments are definitely Poli Dondu's. The comments are a twisting of Nattamai's posting at http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_113807594206128329.html
The posting is worded thus:
ஊர் மெச்ச நியாயம் தந்து எங்கள் ஊருக்கு தலைமுறை தலைமுறையாய் நீதி சொல்லும் நீதிபதியாய் வாழ்ந்தவர் என் வம்சத்தவர்.அந்த ரத்தம் தான் என் உடம்பிலும் ஓடுகிறது.என்னை மிரட்டி எவனும் இதுவரை காரியம் சாதித்ததில்லை.எவனுக்கும் நான் அஞ்சியவனுமில்லை.
நான் மீசை வைத்த ஆண்மகன்.மிரட்டி என்னிடம் மீன் பிடிக்க எவனாலும் முடியாது.நான் யாருக்கு பின்னூட்டம் இடுவது என்பது என் விருப்பம்.ஏன் என்று கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
எந்த நடிகனை எனக்கு பிடிக்கும் என்பது எனது விருப்பம்.ஏன் அந்த நடிகனை பிடிக்கும் என்பதும் எனது விருப்பம்.ஏன் என்று கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
நான் நான் தான்.நானாகத்தான் இருப்பேன்.உனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நீ விரும்புவது போல் என்னால் இருக்க முடியாது.என் வாழ்க்கையை எனக்கு பிடித்த விதத்தில் தான் நான் வாழ்வேன்.நான் எப்படி வாழ வேண்டும்,யாரை எனக்கு பிடிக்க வேண்டும் என்று சொல்ல நீ யார்?
உயிரை விட்டாலும் விடுவேன்.சுய மானத்தை என்றும் விடமாட்டேன்.மிரட்டல் கடுதாசிக்கு பயந்து என்னை நான் மாற்றிக்கொண்டால் நான் பிறந்த தமிழ் மண்ணுக்கு அது அவமானம்.ஊர்மெச்ச வாழ்ந்த என் பாட்டன் முப்பாட்டனுக்கும் அது அவமானம்.
அன்புக்கும் பாசத்துக்கும் தான் இந்த நாட்டாமை கட்டுப்படுவான்.மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அஞ்ச மாட்டான்.உலகில் உயர்ந்தது நீதியும் நேர்மையும்தான்.அதற்கு மட்டும்தான் இந்த நாட்டாமை அடிபணிவான்.
நாட்டாமை
And the comments are as follows:
At 8:19 PM, dondu(#4800161) said…
அடாவடிக்கு சரியான பதிலடி கொடுக்கும் நாட்டாமை அவர்களே,
நீங்கள் வயதில் இளையவராக இருக்கலாம். ஆனால் மனமுதிர்ச்சியில் பல பெரிசுகளை மிஞ்சி விட்டீர்கள்.
உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள்.
இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
At 8:20 PM, நாட்டாமை said…
இந்த பதிவுக்கு என் அன்பு நண்பர் அனுப்பிய பதில்.அவருக்கு என் நன்றிகள்.
"நான் யாருக்குப் பின்னூட்டமிட வேண்டும் என்று கூற இந்த போலி டோண்டு யார்? டோண்டுவின் பதிவில் பின்னூட்டம் இடுவது என் இஷ்டம். அவர் பதிவில் நான் பின்னூட்டமிட ஏதேனும் விஷயமிருந்தால் பின்னூட்டமிடுவேன், இல்லையெனில் விட்டுவிடுவேன். ஆனால் முடிவு எடுப்பது என் கையில்தான் உள்ளது. அவனுக்கு இதில் பேச ஒன்றுமேயில்லை. அவன் இம்மாதிரியே பலருக்கும் பயமுறுத்தல் அனுப்பியிருக்கிறான் என்று அறிகிறேன்.
இப்போது அவ்வாறு பயமுறுத்தல் பெற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எவ்வளவு நாட்கள்தான் பயப்படுவது?
போலி டோண்டுவால் ஒன்றும் கழட்ட முடியாது என்பதற்கு நானே உதாரணம். மட்டுறுத்தலை உங்கள் பதிவுகளில் செயலாக்கவும். அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நீக்கவும். அது போதும். உங்கள் கடவுச் சொல்லை ரகசியமாக வைத்துக் கொலள்ளவும். அவ்வளவுதான், தீர்ந்தது விஷயம்.
எமெர்ஜென்ஸி காலத்தில் பல பத்திரிகைகள் பயந்து செயல்பட்டன என்பதை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் தலை குனியச் சொன்னால் இவர்கள் மொத்தமாக மண்டியிட்டனர். துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போல சில பத்திரிகைகள் தவிர எல்லாமே அம்மாதிரித்தான் நடந்து கொண்டன"
At 8:50 PM, நாட்டாமை said:
அன்பு நண்பர் டோண்டு அவர்களே,
ஒரு வாரமாய் தான் எனக்கு இந்த பிரச்சனை.வருடக்கணக்காய் இதை எதிர்த்து போரிடும் உங்கள் மனத்துணிவுக்கு முன் இதெல்லாம் ஒன்றுமில்லை.
At 6:07 AM, சுரேஷ் (penathal Suresh) said:
மாடரேஷன் இல்லாத பதிவுகளில் மட்டுமே சென்று தன் வீரத்தை(?!)க் காட்டிவருபவர்கள், பின்னூட்டம் தூக்கப்பட்டுவிடும் ஐந்தோ பத்தோ நிமிட மகிழ்ச்சிக்காக செய்யும் காரியங்களுக்காக பதட்டப்படுவதாய் இல்லை. - this was my comment in my blog.
I dont see any reason to wage a "WAR" against such a specimen.
At 7:05 AM, Thirupathi said:
நாட்டாமை, இந்தப் பயலோட கீர்த்தி உலகப்பிரசித்தம். இவன் இருக்குற இடத்துல அண்ணா அண்ணா அக்கா அக்கா என்று சுற்றி வந்தவர்களே இன்றைக்கு இவனைக் கண்டால் அருவருத்து வெறுத்து ஓடும் நிலையில் இருக்கிறான் இவன். புதிதாய் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்மணத்தில முன்னால்(ள்)) நீக்கப்பட்ட எல்லார் பிளாகையும் சேர்த்துக் கொண்ட காசி அவர்கள் இவனை எய்ட்ஸ் நோயாளி மாதிரி ஐஸொலேட் செய்து வைத்திருக்கிறார். அதுதான் வாலறுந்த நரி போல ஊளையிட்டுக் கொண்டிருக்கிறான். அந்த ஊளையும் இன்னும் கொஞ்ச நாள்தான். இவன் பயமுறுத்தலுக்கு எல்லாம் யாரும் பயப்படத் தேவையில்லை. நீங்க கவலைப்படாம யார் பதிவிலயும் பின்னூட்டம் கொடுங்க. பேயோட்ட நாங்க இருக்கோம்.
At 9:02 AM, நாட்டாமை said:
நன்றி திருப்பதி,சுரேஷ் அவர்களே,
பின்னூட்டம் இட்ட உங்களுக்கும்,டோண்டு அவர்களுக்கும் என் நன்றி.விரைவில் என் பதிவில் அறிவித்துவிட்டு அனைத்து பதிவிலும் பின்னூட்டம் இட தொடங்குகிறேன்.
நன்றி
At 9:47 AM, dondu(#4800161) said:
திருப்பதி அவர்களே,
நன்றி. தெருவில் இருவர் சண்டையிடுவதை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்தானே. அதில் மற்றவர்கள் சண்டையை விலக்கும்போது பாருங்கள். எல்லோரும் சேர்ந்து பலவீனமானவனைத்தான் கட்டிப் பிடிப்பார்கள். அடாவடிக்காரனை விட்டுவிடுவார்கள். அவனும் கட்டப்பட்டவனை குத்து குத்தென்று குத்தி விடுவான். பலவீனமானவனைத் தடுக்காமலிருந்தாலாவது அவன் வாங்கின பத்து குத்துக்கு ஒரு குத்தாவது திருப்பி விட்டிருப்பான். அதையும் சுற்றியிருப்பவர்கள் கெடுப்பார்கள்.
அதே போல இருவர் வாதம் செய்து கொண்டிருந்தால் முறையாக பேசுபவனுக்கு மட்டும் அட்வைஸ் எல்லாம் வரும். இன்னொருவனை சும்மா விட்டுவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவாயிருக்கும்? அது ஒன்றுமில்லை வலிமையானவனைப் பிடித்தால் அவர்களுக்கும் உதை விழும். அதே போல அடாவடி பேசுபவனிடம் ஏதாவது கூறினால் "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்றுதானே பதில் வரும். ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறுவார்களா? மாட்டார்களே. ஏனப்பா நீ நியாயம் தெரிந்தவன்தானே, அவனைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. விட்டுக் கொடுத்து போ அப்பா" என்று பதில் வரும். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயை திருப்பிக் கடிக்க வேண்டுமா என்ற ரேஞ்சில் உத்தமமாகப் பேசுவார்கள். ஆனால் வெறி நாய் என்று தெரிந்தால் அதைக் கொல்வதுதானே நலம்.
தமிழ் வலைப்பூ உலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பல முறை நாம் போலி டோண்டு போன்றவர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் வெறும் மிரட்டல் பேர்வழிகளே. எல்லா மிரட்டல் பேர்வழிகளைப் போல அவர்களும் கோழைகள்தான். அடப்போடா ஜாட்டான் என்று கூறினால் அவர்கள் விலகிப் போய்விடுவார்கள். என்ன, தூரத்திலிருந்து நாய் போல குலைப்பார்கள். உங்கள் பெயரில் அசிங்கமாக பின்னூட்டமிடுவார்கள். அதையெல்லாம் கடந்த 7 மாதங்களாக எதிர்நோக்கியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். போலி டோண்டு வெறும் வெத்துவேட்டு. அவனுக்கு போய் பயப்படுவது மீசை வைத்த ஆண்களுக்கு அழகில்லை.
இது நான் போலி டோண்டு பர்றிய என் பதிவில் போட்டப் பின்னூட்டத்தின் நகல். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
The only mistake committed by Nattamai is his extending support to me. Now do you see the seriousness? Do enable moderation of comments, disable the anonymous and other options and tell your friends about this menace of Poli Dondu. See the following URL's:
http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html
http://dondu.blogspot.com/2005/12/2.html
http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html
http://dondu.blogspot.com/2005/06/blog-post_25.html
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
By the way, I will be putting a copy of this comment in my blog post at http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
The crucial checks for seeing that the comments in my name are genuinely mine are as follows:
1. The name on mouseover shows the blogger number at the left boittom of the screen.
2. The comment is accompanied by my photo, if photos are enabled in your blog settings.
3. The copy of the comments is given as comments in one of my specified blogs.
All the 3 criteria have to be satisfied.
Regards,
Dondu N.Raghavan
சந்தோஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html
"அதுல அப்படிப்போடு, ஜோவிற்கும் பதில் செல்கிறேன் அப்படின்னு நம்மாளு அவருடைய நண்பர்களும் இந்த சப்பை பிரச்சனைக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம், வியட்னாம் பிரச்சனை ரேஞ்சிற்கு பில்டப் வேற குடுத்து இருக்கிறார். போலி பண்ணது தப்புத்தேன் ஒத்துக்கிறேன்.அதுக்காக இந்த அல்பை பிரச்சனைய இஸ்ரேல் பாலஸ்தின் பிரச்சனைக்கு ஒப்பிட்டு பேசறது ரொம்ப ஓவரா தெரியலை. அது வாழ்வா சாவா அப்படிங்கிற போராட்டம் சார் ஏதுக்கு எதை சம்மந்தப்படுத்து போசுறிங்க. ஏதோ உங்க வாழ்வு உரிமையே பறிச்சிடாங்க அப்படிங்கிற மாதிரி இல்ல பில்டப் குடுக்கறிங்க."
ஏதோ போலி டோண்டு பன்ணதும் தப்புத்தேன்னு ஒத்துக்கிறீங்க. அதற்கு முதற்கண் நன்றி.
கண்டிப்பாக இது என் வாழ்வின் உயிர் பிரச்சினைதான் ஐயா. சாதாரணமாக விவாதித்துக் கொண்டிருந்தபோது திடீரென தனித் தாக்குதலில் திட்டம் போட்டு இறங்கியது அந்த இழிபிறவிதான். என்னுடைய பெயரில் ஒரு ப்ளாக்கர் கணக்கை ஆரம்பித்து முதல் பின்னூட்டமே மிக அசிங்கமாகக் கொடுத்தது அதுதான். அது அது தனக்கு வந்தால் தெரியும். இங்கு இஸ்ரேலியப் பிரச்சினையை இழுத்ததற்கு காரணமே யூதர்களிடமும் கடந்த 2000 ஆண்டுகளாகவே இம்மாதிரி பாதிக்கப்படாத மூன்றாம் மனிதர்கள் செய்த போதனைதான். சரித்திரம் உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.
"இந்த பின்னுட்ட பிரச்சனை இந்த அளவிற்கு aggrevateஆனதுக்கு நீங்க காரணம் இல்லை அப்படின்னு செல்லுங்க பாக்கலாம். அந்த பின்னுட்டங்களை அப்படியே விட்டு இருந்தா ஒரு கட்டத்துல அவன் அப்படியே ஆதரவு இல்லாம போயி இருப்பான்."
அடடா என்ன தீர்க்கமான சிந்தனை! அவனும் நிறுத்தியிருப்பான்தான், நானும் அவனால் தாக்கப்பட்ட மற்றவர்களைப் போல பதிவிடுவதை நிறுத்தியிருந்தால். அதை நான் செய்யவில்லை, அதுதானே அவனுக்கு கோபம். மேலும் அவனை எதிர்க்க வேறு செய்தேன் அல்லவா? அதில்தானே உங்களைப் போன்றவர்களுக்கும் வருத்தம்? உங்கள் பெயரையும் அவ்வாறே பயன்படுத்தி அதே போல அவன் மற்றப் பதிவுகளில் அவர்களுடைய ஆத்தா, சகோதரி ஆகியோரைத் திட்டி, அவர்களும் அவ்வாறு பின்னூட்டமிட்டது நீங்கள்தான் என்று நினைத்து அவர்களுடன் உங்கள் நட்பே முறிந்து போனால் உங்கள் மன நிலை எவ்வாறு இருக்கும்? அவ்வாறுஆகிவிடக் கூடாது என்றுதான் நான் முதலிலிருந்தே ஜாக்கிரதையாக இருந்தேன் இனிமேலும் இருப்பேன். இது யுத்தம் ஐயா, உங்கள் பசப்பு நியாயங்களை வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். தெருவில் சண்டையிடும் இருவரில் பலகீனமானவனை பிடித்துக் கொண்டு பலமானவன் அவனை இன்னும் சில குத்துகள் விடுவதை அனுமதிப்பது போலத்தான் இருக்கிறன உங்கள் வார்த்தைகள்.
"ஒண்ணு செல்லுங்க சார் உங்களைப் பத்தி இந்த தமிழ்மணத்துல தெரியாதவங்க யாராவது இருக்காங்களா? போடுற பின்னுட்டத்தில் இருந்தே அது நீங்க போடறிங்களா? இல்லை அது வேற ஒருத்தன் போடுறானான்னு எங்களுக்கு தெரியாதா என்ன?"
எல்லோரும் உங்களைப் போலவே எல்லோரும் எப்போதும் விழிப்புடன் இருந்து விடுவார்களா என்ன? தேவையானால் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள், மூக்கு சுந்தர் அவர்கள், என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் ஆகியோரிடம் விசாரிக்கவும்
"எதுக்கு சார் என்ன சாதிச்சிங்க உங்க பின்னுட்டங்களை தனிப்பதிவா போட்டு?"
எனதல்லாத வேறொருவர் பதிவில் என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடையதுதான் என்பதை அறிந்து கொள்ள மூன்று சோதனைகள் உள்ளன. அவற்றில் மூன்றாவதுதான் இது. முதல் இரண்டும் பின்வருமாறு:
ப்ளாகர் பின்னூட்டமாக இருப்பின் போட்டோ இருக்க வேண்டும் மற்றும் எலிக்குட்டி சோதனையில் கீழே என்னுடைய சரியான ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
நான் இதனால் என்ன சாதித்தேன் என்றா கேட்கிறீர்கள்? அந்த தனிப்பதிவு ஒவ்வொரு முறையும் இற்றைப்படுத்தப்பட்டு போலி டோண்டுவை பற்றி புதிய பதிவாளர்களிடம் கூறி அவர்களை ஜாக்கிரதைப்படுத்தியதே. அது போதாதா. அதைத்தான் நீங்கள் ஓவர்பில்டப் கொடுப்பது என்கிறீர்களா. நான் செய்ததெல்லாம் வீட்டை மூன்று முறைகளால் பூட்டியதுதான். அதைக் கண்டு போலி டோண்டுதான் வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஏன் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்?
"நமக்குன்னு ஒரு சமுதாய பார்வை வேண்டாம் நம்ம பதிவை எவ்வளவு பேர் படிக்கிறாங்க நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க அப்படின்னு யோசிக்க வேணாம்."
அதேதான், என்னைப் பற்றி மத்தவங்க என்ன நினைச்சுப்பாங்க என்பதை யோசித்து பயந்துதான் நான் மேலே சொன்ன ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டேன்.
"உங்களுக்கு அவ்வளவு பிரச்சனை இருந்தா எவனும் கமெண்டு பண்ண கூடாதுன்னா தனியா எழுதுங்க."
மறுபடியும் தவறான புரிதலைத்தான் உங்களிடம் பார்க்கிறேன். பிரச்சினை என்னுடையப் பதிவில் வரும் பின்னூட்டங்கள் அல்ல என்று எத்தனை தரம் சொன்னாலும் நீங்கள் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே. என்னுடைய பதிவில் எனக்கு எதிரானக் கருத்துகள் வராமலா இருக்கின்றன? அவற்றை நான் எப்போதுமே தடுத்ததில்லையே?
"இதை எல்லாம் பாக்கும் போது எங்க சார் இருக்கோம் நாம் standardsல போய் ஆங்கில மற்றும் மாற்று மொழி(நம்க்கு தான் அந்த குடுப்பனை இல்ல எங்க படிக்க உட்டானுங்க மத்த மொழிய அதை கேட்டா அந்த மொழிய படிச்சா வேலை குடுப்பங்களா? இலவசமா பனியன் ஜட்டி குடுப்பங்களான்னு ஒரு கேள்வி வேறு.) போயி பாருங்க சார் எத்துனை பேர் பதிவு போட்டு வேலைய இழந்து இருக்கங்க, சமுதாயத்திற்கு என்ன என்ன நல்லது எல்லாம் செய்து இருக்காங்கன்னு. அதை விட்டு நாம் என்னடான்னா பின்னுட்டத்தை தடுக்கிறேன் அதுக்கு நன்றி தெரிவிச்சி ஒரு பதிவு போடுறேன் அப்படின்னு. இப்படியே இதை கட்டுப்படுத்த முடியாட்டி நான் ஒரு option செல்றேன் கேளுங்க இதுக்கு மேல எவனும் பின்னுட்டம் போடக்கூடாதுன்னு ஒரு புது சட்டம் கொண்டு வாங்க அப்படியும் உங்க பிரச்சனை முடியவில்லைன்னு வைங்க உங்க பெயருக்கு ஒரு காப்பிரைட் வாங்கிடுங்க எவனும் உங்க பெயரையோ அல்லது ஒரு பகுதியையோ, நேரடையாகவோ, ஜாடையாகவே அல்லது நீங்க செல்லும் பாணியிலோ உபயோகித்து எதும் எழுத கூடாதுன்னு அப்படி முடியலையா யாரும் பதிவு எழுத கூடாதுன்னு ஒரு சட்டம் போடுங்க.போங்க சார் நீங்களும் உங்க சட்டங்களும்."
மேலே கூறியது தேவையற்றக் கிண்டல் அதை நான் அலட்சியப்படுத்துகிறேன்.
"நீங்க என்ன சொன்னாலும் தமிழ்மணத்துல ஜாதி துவேஷத்தை கொண்டு வந்ததில் உங்களுக்கு பெரிய பங்கு இருக்கு அதை உங்களால் மறுக்க முடியுமா?"
கண்டிப்பாக மறுப்பேன். நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கிருக்கிறது. அதற்கு முன்னால் நான் எழுதியதையெல்லாம் படிக்க வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் நீங்கள் படித்ததாகத் தெரியவில்லை. நான் என் "வெளிப்படையான எண்ணங்கள்" எழுதியதே, ஆ ஊ என்றால் எல்லா பிரச்சினைக்கும் சம்பந்தமின்றி பார்ப்பனர்களை இழுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான். இப்போது அம்மாதிரி பதிவுகள் குறைந்து விட்டன என்றே எனக்குத் தோன்றுகிறது. இதில் ராமருக்கு உதவிய அணில் போல நானும் செயல்பட்டேன்.
"இப்ப அவனே தனிப் பதிவு போட்டு உங்களை திட்டினா என்ன சார் பண்ணுவிங்க? 10 நாட்களுக்கு ஒரு பதிவுன்னு புது புது பதிவா போட்டுடே இருந்தா என்ன சார் பண்ணுவிங்க. தேடி தேடி போய் தடுத்துட்டா இருப்பிங்க?"
அப்பதிவுகளும் தமிழ் மணத்தில் பட்டியலிடப்பட்டால் கண்டிப்பாக செய்வேன். டோண்டு ராகவனின் போராட்ட குணத்தைப் பற்றி நீங்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. அவற்றிலும் பின்னூட்டமிட்டு அதன் நகலை என் தனிப்பதிவில் போடும் அளவுக்கு இந்தக் கிழவனிடம் தெம்பை என் உள்ளம் கவர்ந்த என் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் கொடுத்தருளியிருக்கிறான்.
"இங்க பிரச்சனையே டோண்டு அவர்களின் ஓவர் பில்டப் குடுப்பது, அவர்களின் செய்கையால் தான் போலியின் ஆட்டம் அதிகமானது. அப்புறம் அவர்களின் செய்கை அவருக்கு யாராவது மாற்று கருத்து கூறினால் போது. உடனே ஒரு பெரிய கோஷ்டியே சேர்ந்து கொண்டு அவரை Ragging பண்ணுவது. அப்புறம் ஜாதிப்பிரச்சனையை தமிழ் மணத்தில் கொண்டு வருவது. நான் அவரிடம் சில கேள்விகளை கேட்டு இருக்கிறேன் அவர் பதில் செல்லட்டும்."
பதில்களை மேலே கூறியுள்ளேன்.
இப்பின்னூட்டமும் என்னுடைய "மிக்க நன்றி காசி அவர்களே" பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், செளக்கியமா.
இப்போது அம் மாதிரி பதிவுகள் குறைந்து விட்டதாகவும், அதற்கு நீங்கள் எழுதிய வெளிப்படையான எண்ணங்கள் பதிவுதான் காரணமென்கிறீர்கள். அது ஒருவகையில் சரிதான். அந்தப் பதிவுக்குப் பிறகுதான் நீங்கள் குறிப்பிடுகின்ற போலி டோண்டுவின் தொந்தரவு ஆரம்பித்து ஒரு எல்லையை தாண்டும் அளவுக்குச் சென்றது. அந்தக் கொடுமையை சகிக்க முடியாமல்தான் நிறைய பேர் நொந்து போய் எழுதுவதை நிறுத்தினார்கள். அந்த வகயில் போலிப் பேர்வழி உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு ஒரு வகையில் நல்லதுதான் செய்திருக்கிறார். புரிகிறதா..??
ஏன் சார். இந்தப் பிரச்சினையை விட்டு இந்த இழுவை இழுத்துகிட்டு இருக்கீங்க...?? மாடரேஷன் போட்டாயிடுச்சின்னா விடவேண்டியதுதானே. இதையும் தாண்டி வேறுவழிகளில் உன்னால் என்ன தொந்தரவு குடுத்துவிட முடியும் என்று போலி பேர்வழியைப் பார்த்து எகத்தாளம் செய்கிற மாதிரி இருக்கிறது. வீணாக எதற்கு இதெல்லாம்.போய் வேலையைப் பாருங்க ஸார்...:-)
//அவற்றையெல்லாம் நீங்கள் படித்ததாகத் தெரியவில்லை. நான் என் "வெளிப்படையான எண்ணங்கள்" எழுதியதே, ஆ ஊ என்றால் எல்லா பிரச்சினைக்கும் சம்பந்தமின்றி பார்ப்பனர்களை இழுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான். இப்போது அம்மாதிரி பதிவுகள் குறைந்து விட்டன என்றே எனக்குத் தோன்றுகிறது. இதில் ராமருக்கு உதவிய அணில் போல நானும் செயல்பட்டேன் //
வணக்கம் மூக்கு சுந்தர் அவர்களே,
உங்களுக்கு நூறு ஆயுசு. உங்களைப் பற்றியும் இப்போதுதான் சில பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: http://valaipadhivan.blogspot.com/
'ஆபாசப் பதிவு மட்டும் இல்லை, இன்னொருவர் பெயரில் அவர் கூறியிருக்க முடியாதக் கருத்துக்களைக் கூறுவதும் ஆட்சேபத்துக்குரியதே. அந்த வகையில் ஒரு உதாரணமாக மணிக்கூண்டு அவர்களின் இப்பதிவைப் பாருங்கள். http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட, அதற்கு மூக்கு சுந்தர் பதில் கொடுக்க, அது நான் இட்டதல்ல என நான் எதிர்வினை கொடுக்க, அதை ஏற்று மூக்கு சுந்தர் இம்மாதிரி எழுதுகிறார்:
"Mookku Sundar said...
டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் இடும் அந்த முகமில்லா நண்பருக்கு,
இது மாதிரியான விவகாரங்களின் மூலம் என்ன சாதிக்க முயல்கிறீகள் என்பது புரியவில்லை. அவர் பெயரை உபயோகப்படுத்தி, நீங்கள் இடும் பின்னூட்டங்கள் முற்றிலும் நாகரீகமில்லாத அணுகுமுறை. அவருடன் பிணக்கு என்றால், கருத்து வேறுபாடு என்றால், அதை அவருடன் விவாதித்து கொள்ள, உங்களுக்கு என்ன வேறு முகமூடிப்பெயர்களா கிட்டவில்லை..?? சற்றும் நேர்மை இல்லாத, கிழ்த்தரமான அணுகுமுறை. அதன் பலன்கள் அவருக்கும், கேடுகள் உங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருப்பது கண்கூடு. பலருக்கு இதனால் தர்மசங்கடம். நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??
வேலையை நேர்மையாக செய்யுங்கள் நண்பரே..! இதற்கும் எனக்கு கீழ்த்தரமான முறையில் பதில் தந்தால், நான் பதில் சொல்ல மாட்டேன். உங்கள தலையில் நீங்களே மண் அள்ளிப் போடுகிறீகள் என்று பேசாதிருந்து விடுவேன்."
அதாவது ஒரு அடிப்படையும் இல்லாது அம்மாதிரி லூசுத்தனமாகப் பேசுவேன் என்பது அவர் துணிபு.
இப்போது போலிடோண்டு இன்னொரு பின்னூட்டம் இட்டான்.
"//நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??//
உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.
என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி
வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது வலைப்பூவிலும் இடம்பெறும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"
சாதரணமாக எலிக்குட்டியை வைத்துப் பார்த்திருந்தாலே தெரிந்து போயிருக்கும் அது என்னுடையதில்லை என்று. அதைக் கூட செய்யாது மூக்கு சுந்தர் மறுபடியும் எழுதுகிறார்:
"Mookku Sundar said...
//உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.
என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி //
டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"
இந்த அழகில் ஸ்மைலி வேறு.
இப்போது நான் அதற்கு கொடுத்த எதிர்வினை:
"dondu(#4800161) said...
"டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"
மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். என்னைப் பற்றி இவ்வளவு தவறான அபிப்பிராயம் ஏன் மூக்கு சுந்தர் அவர்களே? டோண்டு அவ்வாறு பேசக் கூடியவர் என்று வேறு சப்பை கட்டு கட்டுவீர்கள். நான் கூறுவேன் நீங்கள் அவசரக்காரர் என்று. அருணிடம் கோபித்து கொண்டு பிரயோசனம் இல்லை. முதலில் உங்கள் அளவில் சரியாக பார்த்து எழுதவும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.
வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் வரும். http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதற்கு மூக்கு சுந்தர் பதிவில் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராத முறையில் என்றென்றும் பாலா பதிலளித்தார்.
12:27 AM
enRenRum-anbudan.BALA said...
Dear Sundar,
//மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
//
This is TOO MUCH !!! Sorry, THREE MUCH ;-)
FYI, I too failed to observe that the comment was from Duplicate Dondu :-)
I will take more care to check the Blogger ID, from now on !
மேலே உள்ளதுதான் பதிவில் கடைசிப் பின்னூட்டம் இன்றையத் தேதி வரை. மூக்கு சுந்தர் அவர்களுக்கு நான் இது பற்றி போட்ட மின்னஞ்சலும் அதற்கு அவரது பதிலும் பின்வருமாறு:
Dear Sundar,
You are aware of the travails I am going throrugh due to the antics of
false Dondu. In one blog of Manikkoondu you mistakenly thought that an outrageous comment in my name was made by me in actual fact. Buit it was not. You could have avoided the misunderstanding with the simple technique of a mouseover. No matter.
But why should you repeat the same mistake in the next blog of the
same Manikoondu? I refer to his blog on Saathiiyam, see
http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html
Kindly read my latest posting in my blog http://dondu.blogspot.com on
the subject. This false Dondu has opened a new blog with my user name and my profile details including photo. The only defence I have
against him now is the blogger number. But if experienced persons like
you neglect to do that simple test, I will be nowhere.
I take this opportunity to deny vehemently that at no time would I
have made the outrageous casteist comments that were expressed by
false Dondu. All I did earlier was to acknowledge my origins in face
of great hostility against Brahmins. Believe me, it is a crown of
thorns but then I willingly wore it as a matter of principle as a
reaction mainly against fellow Brahmins, who hide their Brahmin
identity for one reason or other and try to sound more anti-Brahmin
than everybody else. This I see as pathetic gesture on their part.
They know in their heart of hearts that the moment their Brahmin
origin is known they will face ridicule in the hands of others. I
repeat that nowhere I have said that Brahmins are the best of the lot.
I am old enough to know that each caste contains its great men as well
as riffraffs and as a student of logic, I will be the last one to make
any hasty generalization.
Sorry for this rambling mail, but I thought I will let you know.
Regards,
N.Raghavan
sundar reply to me:
More options 6/30/05
Hello Dondu Sir,
I understand your situation. Thanks for your mail.
From now on, I will avoid answering to whoever posts in your name. I really dont know why you are hesistant
to take action against that criminal.
I know you already have enough suggestions from all your friends and well wishers.
I dont want to bug you more. Have a Great day every day.
love
-sundarrajan
p.s: your post on Uppliyappan kovil was fine. My Grandma is from Nachchiyar koil. I have enjoyed Garuda
Sevai so many times.
போலிப் பின்னூட்டங்கள் அப்பதிவில் இன்றுவரை அப்படியே உள்ளன என்பது வேறு விஷயம்.
ஆபாசப் பின்னூட்டங்களைக் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் இம்மாதிரி நான் கூறாததை என் பெயரில் எழுதி மற்றவர்களும் அதை நம்பி விடுகிறார்கள், அதுதான் உண்மையான அபாயம். ஆகவேதான் நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன்."
இப்போது நீங்கள் இப்பின்னூட்டத்தில் இட்டதைப் பற்றிப் பேசுவேன்.
"இப்போது அம் மாதிரி பதிவுகள் குறைந்து விட்டதாகவும், அதற்கு நீங்கள் எழுதிய வெளிப்படையான எண்ணங்கள் பதிவுதான் காரணமென்கிறீர்கள். அது ஒருவகையில் சரிதான். அந்தப் பதிவுக்குப் பிறகுதான் நீங்கள் குறிப்பிடுகின்ற போலி டோண்டுவின் தொந்தரவு ஆரம்பித்து ஒரு எல்லையை தாண்டும் அளவுக்குச் சென்றது. அந்தக் கொடுமையை சகிக்க முடியாமல்தான் நிறைய பேர் நொந்து போய் எழுதுவதை நிறுத்தினார்கள். அந்த வகயில் போலிப் பேர்வழி உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு ஒரு வகையில் நல்லதுதான் செய்திருக்கிறார். புரிகிறதா..??"
நீங்கள் கூறுவது தவறு. என் வெளிப்படையான எண்ணங்கள் பதிவு வருவதற்கு முன்னமேயே பாரா மற்றும் வெங்கடேஷ் அந்தப் போலிப் பேர்வழியின் தொல்லை தாங்காமல் சென்றனர். "இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்பானவை" என்ற என்னுடைய பதிவில் சாதாரணமாக என்னிடம் விவாதம் செய்தவன் தன் கட்சி பலவீனப்பட்டுப் போனதால் வேறு பெயர்களில் வந்து அசிங்கமாகப் பின்னூட்டமிட்டான். அது படிப்படியாக வளர்ந்து அடையாளத் திருட்டு வரை வந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள பார்க்க: http://doanddo.blogspot.com/2005/05/blog-post_20.html
அப்புறம் என்ன கூறினீர்கள்? இதெல்லாம் ஆரம்பித்தப் பிறகு பலர் பதிப்பதை விட்டு விலகினர் என்று கூறினீர்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆதரவாளர்கள். அவர்கள் போனது என்னைப் போன்றவர்களுக்கு நல்லது என்று எந்த லாஜிக்கில் கூறுகிறீர்கள்?
சரி, இப்போது மறுபடியும் உங்களிடம் வருவோம். மயிலாடுதுறை சிவா அவர்கள் பதிவில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரே தவற்றை இருமுறை செய்தீர்கள். அதை சுட்டிக் காட்டியதற்கு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. என் மின்னஞ்சலுக்கு நீங்கள் அளித்த பதிலிலும் வருத்தம் ஒன்றும் தெரிவிக்கவில்லை. ஆனால் என்றென்றும் அன்புடன் பாலா தானும் அம்மாதிரித் தவறாகப் புரிந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். அது அவர் பெருந்தன்மை. உங்களிடம் சுத்தமாக அது இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சந்தோஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html
சமுத்ரா அவர்களே,
போலி டோண்டுவுக்கெதிரான யுத்தம் நடக்கும்போது எங்களுக்கென்று சில போர் யுக்திகள் உள்ளன. அதையெல்லாம் இங்கே கூறிக் கொண்டிருக்க முடியாது.
அவன் யார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால் என்னுடைய சம்பந்தப்பட்டப் பதிவுகளைப் பார்த்தாலே ஒரு ஐடியா கிடைக்குமே. சற்றே கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளவும். ஆனால் அதுவும் கஷ்டம்தான் ஐயா, ஒரு சாதாரண மௌஸோவர் செய்து பார்க்கவே சோம்பல்படும் பதிவாளர்கள் இருக்கும் நிலையில் I cannot be too careful.
ஒரு மிருகத்திடம் சண்டையிடுபவனிடம் போய் அவன் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறலாம். அதை எவ்வகையில் ஏற்றுக் கொள்வது என்பது யுத்தம் செய்பவனே தீர்மானிக்க வேண்டியது.
இவ்வளவு பெரிய அளவில் ஆவணப்படுத்தப்பட்ட யூதப்படுகொலைகளையே அவை நடக்கவில்லை என்று ஈரான் நாட்டு அதிபர் என்ற பெயரில் இருக்கும் கோமாளி கூற அதையும் ஆதரித்து இங்கு பதிவு போடும் "நண்பர்கள்" இங்கிருக்க, நான் இத்தருணத்தில் போலி யார் என்று கூறுவது, நோ சான்ஸ் ஐயா.
இப்பின்னூட்டமும் என்னுடைய "மிக்க நன்றி காசி அவர்களே" பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் அவரால் மட்டுறுத்தல் செய்யப்பட காதிருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/01/blog-post_26.html
"திரு.டோண்டு அவர்கள் இந்த நிமிடம் வரை போலி டோண்டு யார் என்பதை தைரியமாக வெளியில் சொன்னதாக தெரியவில்லை, சூசகமாய் இவர்தான் அவர்தான் என கிசுகிசு பாணியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யார் என்று தெளிவாய்ச் சொன்னால் நேரே அவர் வீட்டிற்கு(தளத்திற்கு) சென்று பேசலாமே...பிரச்சினைக்குத் தீர்வே இல்லாமல் இழுத்தடிப்பது அவர் இத்தகைய விளம்பரங்களை விரும்புகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது."
சதயம் அவர்களே, இப்போது நடப்பது போலி டோண்டுவிற்கு எதிரான ஓர் யுத்தம். எப்போது எதை எங்கு வெளியிடுவது என்பதெல்லாம் யுத்தம் செய்யும் என்னுடைய போர் யுக்தியில் நான் தீர்மானிக்க வேண்டியது. அதையெல்லாம் நீங்கள் கேட்டு விட்டீர்கள் என்பதற்காகவெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது. அதுவும் பல இன்னல்களை தவிர்க்கக்கூடிய மாடரேஷன் விஷயத்தையே மற்றவர்கள் கூறினார்கள் என்பதற்காகவும், அதனால் வரும் அதிகப்படி வேலைகளை நினைத்து சோம்பல்பட்டும் அதைச் செய்வதிற்கில்லை என்று அசட்டுப் பிடிவாதம் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களிடமா அதைக் கூறுவேன்?
மேலும் கூறுகிறீர்கள்: "பிரச்சினைக்குத் தீர்வே இல்லாமல் இழுத்தடிப்பது அவர் இத்தகைய விளம்பரங்களை விரும்புகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று.
நான் இப்போது கூறுகிறேன், மாடரேஷன் இல்லாத உங்கள் பதிவு போலி டோண்டுவுக்கு ஒரு வரப்பிரசாதமே. அதில் அவன் என் பெயரில் அசிங்கப் பின்னூட்டமிடுவான். நீங்களும் சில மணிநேரம் கழித்து சாவகாசமாக அவற்றைப் பார்த்து ரசித்து, பிறகு போனால் போகிறதென்று அழிப்பீர்கள். அதுதான் உங்கள் விருப்பம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நான் இவ்வாறு சளைக்காமல் யுத்தம் நடத்தியதால் இப்போது மாடரேஷன் முறை வந்து, பிரச்சினை பெருமளவில் தீர்ந்துள்ளது. அதில் உங்களுக்கென்ன வருத்தம்? இத்தனை நாள் அவன் ஒரு கட்டி போல பலருக்கு தொல்லை கொடுத்தான். அக்கட்டியை பழுக்கச் செய்து உடைத்ததுதான் என் வேலை.
போலி டோண்டுவால் முன்னால் பாதிக்கப்பட்டு களம் விட்டு விலகியவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள் மூலம் நன்றி தெரிவிக்கிறார்கள். அது போதும் எனக்கு.
"ஆனால் இந்த போலி விஷயத்தில் உங்கள் வேதனை புரிந்தாலும், ஒற்றை ஆளை குற்றம் சாட்டுவதில் சந்தேகம் உள்ளது. நல்லவர்கள்
போல வேடமிட்டு விட்டு, வேறு சிலரும் போலி பெயரில் மன வக்கிரத்தை வெளியிடுகிறார்கள் என்பது, எந்த சாட்சியும் இல்லாத என் எண்ணம்."
உஷா அவர்களே, நீங்கள் மூடிய பழைய நுனிப்புல் பதிவு ஒன்றில் உங்களுக்கு வந்தப் பின்னூட்டங்களைப் பார்த்துமா இவ்வாறு பேசுகிறீர்கள்? அதன் பிறகு உங்களைத் தனிப்பட்ட முறையில் அவன் தாகியதால்தானே நீங்களே சில காலம் பதிவுகள் போடாமல் இருந்தீர்கள். ஒன்றுக்கு மேல் அவ்வாறு மனிதர்கள் இருந்திருக்கலாம் என்று அப்போதும்தானே கூறினீர்கள். அதற்கான எதிர்வினைகளையும் அப்பேர்வழி கொடுத்தானே, இன்னுமா அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
யுத்தம் இப்போது ஏற்கனவே அடுத்தக் கட்டத்துக்கு சென்று விட்டது. அதாவது அந்த இழிபிறவி தமிழ்மணத்தில் இல்லாத மற்றத் தமிழ்பதிவுகளுக்குப் போய் இம்மாதிரி அசிங்கப் பின்னூட்டங்களை என் பெயரில் இட ஆரம்பித்து விட்டான். ஆங்கிலப் பதிவுகளையும் விடவில்லை. அங்கும் யுத்தம் செய்வேன். என் உள்ளமங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் எனக்கு அதற்கான சக்தியைக் கொடுப்பான்.
இப்பின்னூட்டம் நான் இட்ட "மிக்க நன்றி காசி அவர்களே" என்ற இப்பதிவில் பின்னூட்டமக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி நாட்டாமை அவர்களே.
கார்த்திக் அவர்கள் பதிவு ஒன்றில் உங்களை தூஷித்து என் பெயரில் போலி டோண்டு பின்னூட்டமிட்டிருந்தான். அது நான்தான் எழுதினேனா என்று கார்த்திக் அவர்கள் எனக்கு மின்னஞ்சலிட்டுக் கேட்டிருந்தார். அதன் பேரில் அங்கு நான் சென்று இட்டப் பின்னூட்டம் மேலே நகலிடப் பட்டுள்ளது. அதையும் படித்தீர்கள்தானே?
உங்களைப் போன்ற நண்பர்கள் துணை, என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் அருள் ஆகியவை இருக்கும்போது எனக்கு என்ன குறை இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
I dont understand the need for a post like this!!!
Rubbish.
-Mathy
டோண்டு சார்,
வெலை மெனக்கெட்டு உங்களுக்கு பதில் சொன்ன என் புத்தியை ஜோட்டால தான் அடிச்சுக்கணும்.
இந்த அனுகுமுறை உங்களிடமிருந்து போகாத வரைக்கும் உங்களுக்கு விடிவே இல்லை. என்னமாச்சும் பண்ணுங்க. போங்க. அநாவசியமா, நான் கொலைக் குத்தம் பண்ணா மாதிரி எல்லா இடத்திலேயும் என் பேரை இழுக்காதிங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
மதி அவர்களே, இப்பதிவில் என்ன குறை கண்டீர்கள்? மட்டுறுத்தலால் இப்போது தமிழ்மணத்தில் அசிங்கப் பின்னூட்டங்கள் குறைந்தனவா இல்லையா? அது இல்லாத உங்களது இப்பதிவில், அதாவது, http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302
ஓர் அசிங்கப் பின்னூட்டம் 10 மணி நேரத்துக்கு மேல் அப்படியே இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே. பிறகுதான் அது சாவகாசமாக அது அழிக்கப்பட்டது என்பதையும் பார்த்தீர்கள்தானே? ஏன் அவ்வாறு நடந்தது? நீங்கள் கணினி பக்கம் வர முடியாமல் ஏதாவது வேலை இருந்திருக்கும். அதுதானே உண்மை?
இப்போது மட்டுறுத்தல் வந்ததால் அந்த அபாயம் நீங்கியதா இல்லையா? அதற்காக நான் நன்றி கூறக்கூடாதா? மட்டுறுத்தலை குறை கூறி வரும் பதிவுகள், மட்டுறுத்தல் செய்யப்போவதில்லை என்று கூறும் பதிவுகளை விட என்னுடைய இந்தப் பதிவு எந்த வகையில் குறைந்தது? அதை ஏன் குப்பை என்று கூற வேண்டும் என்பதை விளக்குவீர்களா?
மேலும் உங்களுடைய பதிவில் செனட்டர் மக்கார்த்தியை பற்றி பின்னூட்டம் இட்டுள்ளேன். அப்பதிவில் இன்னமும் மட்டுறுத்தல் செயல் படுத்தப்படவில்லை. சற்றே கவனமாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
"வேலை மெனக்கெட்டு உங்களுக்கு பதில் சொன்ன என் புத்தியை ஜோட்டால தான் அடிச்சுக்கணும்.
இந்த அணுகுமுறை உங்களிடமிருந்து போகாத வரைக்கும் உங்களுக்கு விடிவே இல்லை. என்னமாச்சும் பண்ணுங்க. போங்க. அநாவசியமா, நான் கொலைக் குத்தம் பண்ணா மாதிரி எல்லா இடத்திலேயும் என் பேரை இழுக்காதிங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்."
நான் கூறியதில் உண்மைக்கு மாறானதாக ஏதேனும் இருந்ததா? அது உங்களை உறுத்தினால் நான் என்ன செய்ய முடியும். தவறு செய்வது சகஜம், ஆனால் அதை ஒத்துக் கொள்ளவும் தைரியம் வேண்டும். அதுவும் உங்களிடம் இல்லை.
ஒருவனுடைய பெயரைக் கெடுப்பது கொலைக் குத்தத்துக்கு சமமே. அதைத்தான் போலி டோண்டு செய்தான். "அவன் அவ்வாறு கூறாமலிருந்தால் உண்மை டோண்டுவே அதைச் செய்திருப்பான்" என்று கூறி குற்றத்துக்கு நீங்கள்தானே துணை போனீர்கள்?
மறுபடி மறுபடி நீங்கள் போலியை உண்மை என்று எண்ணியது உங்கள் முட்டாள்தனத்தைத்தானே காட்டியிருக்கிறது? பாலா அவர்கள் ஒரு வாக்கியத்தில் சரி செய்ததுபோல நீங்கள் இப்போது கூடச் செய்வதாகத் தெரியவில்லையே.
இப்போது இன்னொரு விஷயத்தைக் கூறுகிறேன். சம்பந்தப்பட்டப் போலி பேர்வழி தன்னைப் பற்றி தானுடைய முந்தைய ப்ளாக்கர் பதிவில் தன்னிடம் ஒரு சமயம் ராங்காக நடந்து கொண்ட "மூக்குப் பெருத்தவனை" உண்டு இல்லை என்று ஆக்கியதாகக் கூறி பெருமையடித்துக் கொண்டான். அந்த ப்ளாக் அழிக்கப்பட்டதால் அதன் சுட்டி தர இயலவில்லை, ஆகவே என்னுடைய ஞாபகத்திலிருந்து இதைக் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அய்யா நான் என்னுடைய பதிலை உங்களுக்கு தெரிவித்து விட்டோன் நம்ம பக்கத்துல இருக்கு மன்னிக்கவும் இங்க paste பண்ணமுடியவில்லை தட்டச்சு செய்தவற்றை close செய்து விட்டேன்.
ஏங்க டோண்டு,
என்னமோ தர்க்க சாஸ்திரமெல்லாம் படிச்சதா சொல்ரீங்க ஆனா சரியா தப்பானமுறையில் மட்டும் உங்களால் தர்கம் பண்ண முடியுது.
ஏற்கனவே உங்கள் பதிவை பார்த்து (அந்த அன்புமணி பற்றிய பதிவு) உங்களின் எந்த பதிவிற்கும் மறுமொழி அளிக்க கூடாதென்ற முடிவிலிருந்தேன். சரி இவ்ளோ நாள் ஆச்சே இந்த இடைப்பட்ட நாட்களில் கொஞ்சம் மற்ற பதிவுகளைப் படித்து அல்லது அவைகளைப் பார்த்து கொஞ்சமேனும் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்பீர்கள் என்று நினைத்தேன். ம்ஹ¤ம்... பழையபடி நான் மட்டும் தான் சரி மற்றவனெல்லாம் மயிர்புடுங்கிகள் என்ற மனோபாவம் மாறவில்லை. ஆதாரம் கேட்டீர்கள் அல்லவா அந்த அன்புமணி பதிவை யாரிடமாவது ஒரு மூன்றாம் மனிதரிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேளுங்கள். தெரியும். என் பின்னூட்டத்திற்கான பதில் நான் ஏற்கனவே சொன்ன அந்த கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான வாததின் படி அமைந்திருந்தது உங்கள் பதில்.
//
வெலை மெனக்கெட்டு உங்களுக்கு பதில் சொன்ன என் புத்தியை ஜோட்டால தான் அடிச்சுக்கணும்.
///
சுந்தர் இங்கேயும் அதே.............
btw.... நாட்டாமை ஒரு முடிவோட தான் இருக்கீங்க. உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
தர்க்க சாஸ்திரம் தெரியாத அதேசமயத்தில் மற்றவர்களை மண்டையில் களிமண் மட்டும் உள்ள மயிர்புடுங்கிகள் என்று நினைக்காத
சோழநாடன்
"ஆதாரம் கேட்டீர்கள் அல்லவா அந்த அன்புமணி பதிவை யாரிடமாவது ஒரு மூன்றாம் மனிதரிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேளுங்கள். தெரியும்"
அந்த நழுவல் எல்லாம் வேண்டாம் ஐயா. 308 பின்னூட்டங்கள் உள்ள அப்பதிவில் எங்கு நீங்கள் சொன்னது நிறுவப்படுகிறது என்பதை இங்கு சுட்டியாக இடுங்கள். ஏதாவது ஓரிரு உதாரணங்கள் போதும். பிறகு பார்க்கலாம். குற்றம் சாட்டியது நீங்கள். அதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லோருமே தான் சொல்வதுதான் சரி என்ற எண்ணத்தில் தான் வாதாடுகிறோம்.. இங்கே இருக்கிற 700 வலைப்பதிவரில் , ஒருவராவது தான் சொல்வது தவறு என்று சொல்லியிருக்கிறார்களா? டோண்டுவை மட்டும் குறை கூறுவது ஏன் என புரியவில்லை .. அவரும் எழுநூறு பேரில் ஒருவர் தான் நம்மைப்போலவே..
மிக்க நன்றி எல்.எல்.தாசு அவர்களே. எனக்கு ஆதரவு கொடுத்து போலி டோண்டுவால் ஆரம்பத்திலேயே தாக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் மறக்கவில்லை. அதுவும் என்னுடைய பல கருத்துகளுடன் உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனினும் நீங்களும் மற்றவர்களும் எனக்களித்த ஆதரவு மகத்தானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
posted at http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html
தான் வடகலை அய்யங்காராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக டோண்டு அவர்கள் கூறியது சரியில்லை தான். அவ்வாறு அவர் கூறியதற்கு காரணமாக, சில வலைப்பதிவர்கள் ஒரு சாராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து கொண்டு தங்களை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்று நம்புவதாகவும் கூறினார் !
ஆனால், தேவையில்லாமல் சாதியை முன்னிறுத்துவதை விடுத்து, ஒருவரின் எழுத்தும், குணமும், மனிதமும் எடுத்துக் காட்டும் (உண்மையான) தோற்றமே மிக அவசியமானது, சரியானது என்று அந்த வலைப்பதிவர்களும் (இன்னும் பலரும்!) நினைத்திருக்கலாம் !
அதே நேரத்தில், சாதி துவேஷப் போக்கு என்ற ஒன்றை டோண்டு தான் (கண்டுபிடித்து!) வளர்த்து வருவது போல் சிலர் கூறுவது மிகைப்படுத்தப் பட்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில், அவருக்கு முன்னரே, வலைச்சூழலில் அத்தகைய போக்கு விரவி இருந்தது என்பது நிதர்சனம். அப்போதிலிருந்தே, சிலர் subtle-ஆகவும், இன்னும் சிலர் வெளிப்படையாகவும் (ஏதோ ஒரு) சாதி சார்பு / எதிர்ப்பு என்ற நிலையில், விவாதம் என்ற பெயரில், பலவற்றையும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், பெரும்பான்மையினர் இவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பது ஓர் ஆறுதல் !!!
--- எ.அ.பாலா
"தான் வடகலை அய்யங்காராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக டோண்டு அவர்கள் கூறியது சரியில்லை தான். அவ்வாறு அவர் கூறியதற்கு காரணமாக, சில வலைப்பதிவர்கள் ஒரு சாராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து கொண்டு தங்களை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்று நம்புவதாகவும் கூறினார்!"
நான் அப்பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருவேன்.
"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?"
ஆக நீங்கள் கூறுவது போல சில வலைப்பதிவர்கள் ஒரு சாராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து கொண்டு தங்களை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்று நம்புவதாக நான் கூறவேயில்லை. ஏன் நம்ப வேண்டும், அதுதான் உண்மை ஸ்வாமி.
அப்பதிவை இங்கு பார்க்கலாம்: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், பின்னூட்டம், பின்னூட்டத்ற்கு ஒரு பின்னூட்டம் எனப் பதிந்து "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளீர்கள். உங்கள் சாமர்த்தியம் யாருக்கு வரும்?
//அடுத்தவனுக்கு பயந்து எழுத்தை மாத்திக்கறது ஸ்டாலினின் ரஷ்யாவில் நடக்கும்//.
//ஜனநாயகத்தை தற்காலிகமா நிறுத்த சொல்றீங்களா?//
சரிப்பா.... இது எந்தூரு நாட்டாமைன்னு நல்லாப் புரிஞ்சிருச்சு. அவர்கிட்ட வாதம் செஞ்சு புண்ணியமில்ல. நீ நடத்து ராசா...!
*****
//ராகவன் அவர்களின் சில செயல்பாடுகள் குறித்து உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், நீங்கள் கூறுவது போல் இப்பிரச்சினைக்கும் பார்ப்பனீய எதிர்ப்பு/ஆதரவு என்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை !!!!//
பாலா., விடிய, விடிய இராமயணம் கேட்ட கதைதான் இது.
---- நான் என் "வெளிப்படையான எண்ணங்கள்" எழுதியதே, ஆ ஊ என்றால் எல்லா பிரச்சினைக்கும் சம்பந்தமின்றி பார்ப்பனர்களை இழுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான். இப்போது அம்மாதிரி பதிவுகள் குறைந்து விட்டன என்றே எனக்குத் தோன்றுகிறது. இதில் ராமருக்கு உதவிய அணில் போல நானும் செயல்பட்டேன்----.
இவருகிட்டயே கேளுங்கப்பா நல்லா விளக்குவார். ஸ்ஸப்பா.....!
*******
மகேஸ்., பின்னூட்டத்திற்கு பின்னூட்டமில்ல... எங்கெங்க யார் யார் பதிவுக்கு பின்னூட்டம் போட்டாரோ... அதெல்லாம் திரும்பி இங்க பேஸ்ட் பண்றார். முன்பு போலி டேண்டுன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்ல... அதுல 500 சொச்சம் பின்னூட்டமா?., அதுலையும் அப்படித்தான் எல்லார் பதிவுக்கும் போட்ட பின்னூட்டத்த கட் பண்ணி, பேஸ் போட்டு ஒட்டியிருந்தார். இதெல்லாம் இல்லாம பின்னூடங்களை மட்டுமே சேகரித்து ஒரு பதிவும் வைத்திருக்கிறார். இதுதாஞ் சாமி இவர் போலிக்கு எதிராப் பண்ணுற யுத்தம்.... (வருடக் கணக்கா...) எனக்கு கிறுக்குப் புடிக்கிறதுக்குள்ளே எஸ்கேப்புடாங்கப்பா.....!!!!
மகேஸ் மற்றும் அப்பிடிப்போடு,
மற்றவர் பதிவுகளில் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை நான் தனிப்பதிவாக போட்டதன் நோக்கம் ஏற்கனவே விளக்கப்பட்டது. இருப்பினும் நீங்கள் புதிய பதிவாளர்கள் என்ற முறையில் அவற்றைப் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இவ்வாறு நீங்கள் இங்கு பின்னூட்டமிட்டிருக்க மாட்டீர்கள்தானே. ஆகவே மறுபடியும் விளக்குவேன்.
அன்பு வலைப்பதிவு நண்பர்களே,
இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.
ரோசா வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்டமிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.
இதை நான் கடந்த வருடம் மே 30-ஆம் தேதி ஆரம்பித்தேன். அதில் 547 பின்னூட்டங்கள். அதுமிகப் பெரிதாகப் போகவே அதே தலைப்பில் பகுதி-2 ஆரம்பித்து அதிலும் நூற்றுக்கு மேல் பின்னூட்டங்கள் போய் விட்டன.
இப்போது இன்னும் அவை அவசியமா என்றால், நிச்சயம் அவசியம் என்பேன். ஏனெனில் போலி டோண்டு அப்படியே இருக்கிறான். அப்பிடிப்போடு அவர்களே உங்கள் பதிவில் கூட அந்த போலி டோண்டு வந்தானே? ஞாபகம் இல்லையா? அவன் போலி என்பதை கண்டுணர 3 சோதனைகளைப் பற்றி நான் ஏற்கனவே கூறியிருந்தேனே. அதாவது:
1. பின்னூட்டத்தில் dondu(#4800161) என்று வரும் என் டிஸ்ப்ளே பெயரின் மேல் எலிக்குட்டியை வைத்து பார்த்தால் கீழே இடது மூலையில் என்னுடைய சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும். வேறு எண் தெரிந்தால் அது நான் இட்டதல்ல.
2. சில சமயம் சம்பந்தப்பட்டப் பதிவர் அதர் ஆப்ஷனை வைத்திருந்தால் பதிவு எண் சரியாக வரும் ஆனால் என் போட்டோ தெரியாது. ஆனால் சம்பந்தப்பட்டப் பதிவர் போட்டோ தெரிவதை செயலற்றதாக்கி வைத்திருந்தால் இந்தச் சோதனை பலிக்காது.
2. இந்த சாத்தியக்கூறுதான் என்னை மூன்றாவது நிலைக்குத் தள்ளியது. அதுதான் நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களை மேலே குறிப்பிட்ட என் தனிப்பதிவுகளிலும் பின்னூட்டமிடுவது. ப்ளாக்கர் அல்லாத மற்ற வலைப்பூ சேவையாளர்களிடம் தங்கள் வலைப்பூவை வைத்திருப்பவர்கள் விஷயத்திலும் மேலே கூறிய இரு சோதனைகளுமே பலன் தராது. ஆகவே மூன்றாவது சோதனையும் அவசியமாகிறது.
முக்கியமாக மூன்றாவது சோதனைக்கு ஆட்சேபம் தெரிவித்தது போலி டோண்டு. ஏனெனில் பல வலைப்பதிவர்கள் முதல் இரண்டு சோதனை செய்வதில் சோம்பல் காட்டினார்கள். எலிக்குட்டியை வைத்துக்கூட பார்க்க அவ்வளவு சோம்பல் அவர்களுக்கு. இதற்கு முக்கிய உதாரணம் மூக்கு சுந்தர் அவர்களே. இன்னொரு உதாரணம் இங்கு நான் பதிலளிக்கும் மகேஸும்தான்.
உங்கள் பதிவு http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html
இப்போது உங்களால் அழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அதில் நீங்கள் செய்த சொதப்பல்கள் என்னால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை இங்கே மீண்டும் இடுவேன்.
முகமூடி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://mugamoodi.blogspot.com/2005/12/blog-post_28.html
"இது போல போலிப் பின்னூட்டங்கள் என்னுடைய பதிவிலும் இடம்பெற்றன.
நானும் இது உங்கள் பதிவு போல் ஒரு செய்ய நினைத்தேன். ஆனால் அது புதிய போலிகளை உருவாக்கத் துணை செய்யக் கூடாது, என நினைத்து அதை பதியவில்லை.
--மகேஸ்"
அப்படியா மகேஸ் அவர்களே, இப்போது உங்கள் பதிவின் பின்னூட்ட பரிமாறல்களைப் பாருங்கள். அதாவது பதிவு:
http://mahendranmahesh.blogspot.com/2005/12/blog-post_19.html
1) At Tuesday, December 20, 2005 12:32:52 AM, காசி (Kasi) said:
ஒழுங்கு மரியாதையாக பார்ப்பனர்களை வாழ்த்தி உயர்வாக எழுதவும். இல்லை எனில் உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.
2) At Tuesday, December 20, 2005 1:02:37 AM, மகேஸ் said:
படித்த முட்டாள் காசி, என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
3) At Tuesday, December 20, 2005 1:05:27 AM, dondu(#4800161) said…
முதற்கண், மேலே பின்னூட்டமிட்டது காசி அவர்கள் அல்ல. அவர் பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டம் அது. அது தெரியாமல் வார்த்தைகளை விடாதீர்கள். Use mouseover technique for God's sake.
நான் ஜாதியைப் பற்றிப் பேச நேர்ந்ததன் பின்புலனை அறிய என்னுடைய இப்பதிவுக்கு செல்லவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html
அதில் "என் வெளிப்படையான எண்ணங்களை" பற்றிய ஹைப்பர் லிங்கைச் சொடுக்கவும். பதிவு மற்றும் அதன் பின்னூட்டங்களைப் பார்க்கவும். பிறகு முடிவு செய்யவும்.
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
4) At Tuesday, December 20, 2005 3:14:54 AM, dondu(#4800161) said…
"ஒரு கம்ப்யூட்டரும் பதிய ஒரு இடமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைப்பா?"
அதே கேள்வியை உங்களைக் கேட்கிறேன். ஒரு விஷயத்தின் பரிமாணங்களின் நீளம், அகலம் மற்றும் ஆழம் பற்றித் தெரியாமல் வாயை விடுவது ஏன்? காசி என்னும் கௌரவப்பட்ட தமிழ்மணம் நிர்வாகி இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவாரா என்ற பிரக்ஞை இன்றி தடித்த வார்த்தைகளை அவர் மேல் விடுவதற்கு யோசிப்பது என்பதே இல்லையா?
இப்படித்தான் உங்கள் வேலையிலும் செயல்படுவீர்களா?
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அலுப்புடன்,
டோண்டு ராகவன்
5) At Tuesday, December 20, 2005 3:56:09 AM, மகேஸ் said:
ஹா...ஹா...
காசி தமிழ்மணம் நிர்வாகியா?அவருடைய நிர்வாக தகுதி பற்றி அவருடைய பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
எனக்கு ஒரு விஷயத்தின் பரிமாணங்களின் நீளம், அகலம் மற்றும் ஆழம் பற்றித் தெரியவில்லையா?
ஹா...ஹா... என்னுடைய கொள்கை சிறியது, ஆனால் சக்தி வாய்ந்தது.
எந்த ஜாதியும் உயர்ந்ததும்/தாழ்ந்ததும் இல்லை. இது எனக்கு என் அம்மாவும்,ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்தது.உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைக்கவில்லை போலும்.
நான் எந்த ஒரு ஜாதியைப் பற்றியும் உயர்தியோ/தாழ்த்தியோ பேசமாட்டேன்.
இது என்னுடைய தீர்மானமான பதில்.
எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உங்களுக்கு?
6) At Tuesday, December 20, 2005 4:34:54 AM, dondu(#4800161) said:
"காசி தமிழ்மணம் நிர்வாகியா?அவருடைய நிர்வாக தகுதி பற்றி அவருடைய பதிலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்."
சுத்தமாக உங்களுக்கு அறிவு இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். காசி கூறிய பதிலாக நீங்கள் குறிப்பிடுவது அவருடையதே இல்லை என்று நான் கூறுகிறேன். அது புரியவில்லையா உமக்கு? தமிழும் அவுட்டா? அதுவும் தெரியாதா?
"எனக்கு நிறைய வேலை இருக்கிறது."
உண்மைதான். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும், மௌஸோவர் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள வேண்டும். அது வரைக்கும் உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதும் தெரியாமல் இருக்க வேண்டும். ரொம்பவேத்தான் வேலை இருக்கு உங்களுக்கு.
இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அலுப்புடன்,
டோண்டு ராகவன்
7) At Tuesday, December 20, 2005 5:23:02 AM, மகேஸ் said:
தமிழ்மணம் நிர்வாகி காசி அவர்களே,
தாங்கள் பின்னூட்டம் இடவில்லை என அறிந்தேன். உங்களைப் பற்றிக் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
நான் கூறிய அனைத்தும் அந்த போலியான மனிதனைச் சேரும்.
To sum up:
காசியை படித்த முட்டாள் என்று போலி பின்னூட்டத்தைப் பார்த்து ஏசி விட்டீர்கள். அது போலி என்பதை எடுத்துக் காட்டியும் மேலும் அவரை இன்ஸல்ட் செய்தீர்கள். கடைசியில் உண்மை தெரிந்ததும் வெறுமனே வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினால் போதுமா? ஒரு வருத்தம் தெரிவிப்பு அல்லது மன்னிப்பு கேட்டல் எதுவுமே கிடையாதா? இதுதான் நீங்கள் கற்ற நாகரிகமா?
குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது போல காசியை இழிவுபடுத்தியப் பின்னூட்டங்களையெல்லாம் அப்படியே வைத்து அழகு வேறு பார்க்கிறீர்கள்.
It actually makes you an accessory after the fact in the case of libel on Kasi.
It is only for people like you that Mugamudi had explained in detail how the misrepresenting comments are made in others' names.
Regards,
N.Raghavan
முகமூடி பதிவில் இவ்வாறு என்னிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்ட நீங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோலச் செயல்பட்டு சத்தமில்லாமல் உங்கள் பதிவை அழித்தீர்கள். இப்போது நான் எடுத்த மேற்கோள் என்னுடையத் தனிப்பதிவிலிருந்துதான். அதை பதிவைத் திறந்து கண்ட்ரோல்+F போட்டு ஒரு நொடியில் கண்டுபிடித்தேன்.
மறுபடியும் முகம்மூடியின் அப்பதிவுக்கு இப்போதுதான் போய் பார்த்தேன், ஒரு வேளை நீங்கள் ஏதாவது காசியிடம் மன்னிப்பு கேட்டீர்களோ என்று. நோ சான்ஸ்.
அப்பிடிப்போடு அவர்களே, இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எதையும் மேம்போக்காகப் பார்த்து வார்த்தைகள் விடக்கூடாது என்று.
மகேஸ் மற்றும் அப்பிடிப்போடு, நான் என் பதிவு எப்போதுன் மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியில் இருக்க வேண்டும் என நினைத்து என் தனிப்பதிவுகளைப் போடவில்லை. போலி டோண்டுதான் அதற்குக் காரணம். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியம் காரணமாக என்னைப் பற்றித் தவறான இம்ப்ரெஷன் வருமாறு செய்யும் மகேஸ், மூக்கு சுந்தர் போன்றவர்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்கள் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இருப்பினும் நீங்கள் புதிய பதிவாளர்கள் என்ற முறையில் அவற்றைப் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்//.
அய்யா சாமி., நீங்கள் பதிவெழுத வந்தது 08/2004 ல்., நான் வந்தது 05/2005 (இடையில என்ன ஒரு மாமாங்கமா இருக்கு?., 9 மாதம்தான்!!). எழுத வந்ததுதான் அப்ப., ஆனா., அந்த 'கமலஹாசன்' மேட்டருல இருந்து என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டுதான் வர்றோம்.. அதுக்கு முன்பு கூட என்ன நடந்ததுன்னு படித்து தெரிந்துதான் வைத்திருக்கிறோம் (தூ... இது ஒரு பெரிய வரலாறு..!!).
05/25/2005 அன்று நீங்கள் போலிக்கு எதிராக முதல் யுத்தம் துவங்கினீர்களே (காலக் கொடுமை இதெல்லாம்!!) அன்று., அந்தப் பதிவில் என் பதிவொன்றுக்கு நீங்கள் எழுதிய பின்னூடத்தை ஒட்டி வைத்திருக்கிறீர்கள். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.
06/25/2005 அன்று வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - அப்படின்னு இரண்டாம் யுத்தம் செய்தீர்களே., அப்போதும் நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
06/30/2005 அன்று மனம் பிறழ்ந்தவன் செய்யும் கூத்து என்று ஒரு கிளை யுத்தம் செய்தீர்களே., அப்போதும் நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
அதிலிருந்து இப்போ இந்த யுத்தம் முடியும் தருவாயில் (விட்ருவிங்க அம்புட்டு லேசுல?) காசி அவர்களுக்கு நன்றி கூறீனீர்களே இப்போதும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை புதிய பதிவாளர் என எழுதி எதைத் திரிக்கப் பார்க்கிறீர்கள்?.
//அப்பிடிப்போடு அவர்களே, இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எதையும் மேம்போக்காகப் பார்த்து வார்த்தைகள் விடக்கூடாது என்று//.
எதை மேம்போக்காக எழுதியிருக்கிறேன் என்று கூற முடியுமா?. மகேஸ்கிட்ட பேசிகிட்டு இருந்துட்டு., என்னைய எதுக்கு பட்டுன்னு இழுக்கிறிங்க?. சந்தடி சாக்குல புதிய பதிவர். அப்பப்பா உங்களைப் போன்றோரிடம் மாட்டினால் என்னாவோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
//இதை நான் கடந்த வருடம் மே 30-ஆம் தேதி ஆரம்பித்தேன். அதில் 547 பின்னூட்டங்கள்.// - இது உங்கள் பின்னூட்டத்திற்குள் இருந்த இன்னொரு பின்னூட்டம்.
உங்களுடைய 500 சொச்சம் பின்னூட்டங்கள் இதோ இந்தப் பதிவிற்கு 60 கொண்டாந்திட்டிங்க இதில் எவ்வளவு பின்னூட்டங்களை (நீங்கள் வேறு இடங்களில் இட்டது) ஒட்டியிருக்கிறீர்கள்?. உங்களுக்கு வந்த பின்னூட்டங்களையும் அதற்கு நீங்கள் கூறும் மறுமொழியும்தான் பின்னூட்டம் எனப்படுமே தவிர., நீங்கள் பல பதிவுகளில் பின்னூட்டி பதில் வாங்கியதை ஒட்டி, ஒட்டி 547 பின்னூட்டம் என உங்களை நீங்களே தட்டிக் கொள்கிறீர்களே?.
நீங்கள் பின்னூட்டத்திற்கு தனிப் பதிவு வைத்திருப்பது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலிருந்து மீண்டும் மீண்டும் வெட்டி உங்கள் தற்போதைய பதிவுவரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்களே அது ஏன்?.
போலிப் பின்னூட்டம் வரும் போதெல்லாம் தவறாமல் அங்கு சென்று 'போலி' எனக் குதிக்கிறீர்களே., அந்தப் பதிவிட்டருக்கு ஆபாசப் பின்னூட்டம் தெரியுமுன் உங்களுக்குத் தெரிவது எப்படி?. உங்களுக்கு ஆள் யார் என சூசகமாக சொல்லும் துணிவிருகிறதே அதை நேரடியாகச் சொன்னால் என்ன?.
"நீங்கள் பல பதிவுகளில் பின்னூட்டி பதில் வாங்கியதை ஒட்டி, ஒட்டி 547 பின்னூட்டம் என உங்களை நீங்களே தட்டிக் கொள்கிறீர்களே?"
547 பின்னூட்டங்கள் வந்ததால் ஒவ்வொரு முறையும் பதிவைத் திறக்க நேரமாகிறது என்பதற்காகத்தான் கூறினேனே தவிர என்னைத் தட்டிக் கொள்ளும் நோக்கம் இல்லையே அதில்.
மகேஸோடு உங்களையும் இழுத்ததற்கு காரணமே நீங்கள் மகேஸுக்கு கொடுத்த பதில்தான்.
கடந்த மே மாதத்திலிருந்து பதிவு செய்து வருகிறீர்கள், சந்தோஷம். இத்தனை நேரம் நீங்கள் புதியவர் என்று நினைத்து விளக்கம் கொடுத்ததற்கு மன்னிக்கவும். இனிமேல் தர மாட்டேன். ஏனெனில் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையென்று தெளிவாகி விட்டது. இல்லாவிட்டால் முகமூடியின் இப்போதையைப் பதிவில் அவ்வாறு பின்னூட்டமிட்டிருக்க மாட்டீர்கள்.
"போலிப் பின்னூட்டம் வரும் போதெல்லாம் தவறாமல் அங்கு சென்று 'போலி' எனக் குதிக்கிறீர்களே., அந்தப் பதிவிட்டருக்கு ஆபாசப் பின்னூட்டம் தெரியுமுன் உங்களுக்குத் தெரிவது எப்படி?"
உங்கள் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமா?
நீங்கள் இப்பதிவில் இட்டப் பின்னூட்டம்: "அந்த ஆபாசப் பின்னூட்டம் இங்கு (America) இரவாக இருக்கும்போது வந்திருக்கிறது அதை நான் மறுநாள் காலையில்தான் அதுவும்., முதல்நாள் வெகுநேரம் விழித்து பதிவெழுதியதால்., தாமதமாகத்தான் பார்த்தேன். அதுவரை எத்தனை பேர் கண்களில் அது பட்டதோ?. நல்லவேளை நான் இங்கு எழுதுவது என் நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் தெரியாது. நட்சத்திர வாரத்தால் புதிதாய் தெரிந்து கொண்டவர்கள் இருவர் மட்டுமே."
விஷயம் சிம்பிள். சம்பந்தப்பட்டப் பதிவர் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் உலகின் மற்ற பாகங்களில் பதிவு படிப்பவர்கள் விழித்திருக்கும் நேரம், முக்கியமாக நான். எப்போதுமே மறுமொழியப்பட்ட எல்லா பழைய ஆக்கங்களையுமே படிப்பவன் நான், ஏனெனில் போலி டோண்டு எங்கு வேண்டுமானாலும் வருவான். அப்படி வந்துதான் எல்லா இடங்களிலும் தெரிந்து கொண்டேன். நான் அப்படிப் பார்க்காத இடங்களைப் பற்றி எனக்கு என் நண்பர்கள் தகவல் கொடுத்தார்கள்.
உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் கவலைப் படுவதுபோலவே நானும் கவலைப்பட எனக்கு உரிமை இல்லையா?
உங்களையே உதாரணமாக வைத்துக இன்னொன்றும் கூறுவேன், மன்னிக்கவும்.
உங்கள் பெயர், லோகோ எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து, ஒரு புது பிளாக்கர் எண்ணை உருவாக்கி, எல்லா பதிவுகளிலும் போய் உங்கள் பெயரில் பின்னூட்டம் இட்டு சம்பந்தப்பட்ட பதிவரின் பெண் உறவினர்களை இழுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? என்ன செய்வீர்கள்? வலைப்பதிப்பதையே விட்டு ஓடி விடுவீர்கள் என நினைக்கிறேன், ஏனெனில் நட்சத்திர வாரத்தின்போது ஒரு பின்னூட்டத்திற்கே அம்மாதிரி ரியாக்ஷன் கொடுத்து ஒரு பதிவு போடாமல் விட்டேன் எனக் கூறினீர்கள்.
ஆனால் நான் ஓடவில்லை. அதைத்தான் போலி டோண்டு எதிர்ப்பார்த்தான். நீங்களும் அதைதான் எதிர்ப்பார்த்தீர்களோ?
ஆமாம், போலிப் பின்னூட்டங்களை எதிர்த்து நான் போட்டப் பதிவில் தமிழ்மணத்தில் அப்போதிருந்த கிட்டத்தட்ட எல்லா பதிவாளர்களும் ஆதரவுப் பின்னூட்டம் இட்டனர். உண்மையைக் கூறப்போனால், அவர்களது ஆதரவு அப்போது எனக்கு மன ஆறுதலாக இருந்தது, இப்போதும் நிலைமை அப்படியே. நீங்கள் அது சம்பந்தமாக ஒரு பின்னூட்டமும் தெரிவிக்காது வேடிக்கை பார்த்திருக்கிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஓர் அக்கிரமம் நடக்கும்போது அதைத் தட்டிக்கேட்காமல் இருப்பதும் அதற்கு ஒரு வகை ஆதரவு கொடுப்பதே என்பது உங்களுக்கு தெரியுமா? அதை நீங்கள் அப்போது ஏன் செய்யவில்லை என்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியும். அதையும் கூறுவேன். அப்படி ஆதரவு கொடுத்தால் போலி டோண்டு உங்கள் பதிவிலும் வந்து அசிங்கம் செய்வான் என்று பயந்துதானே அவ்வாறு செய்தீர்கள். இருந்தாலும் அவன் உங்கள் பதிவுக்கு கடைசியில் வராமலா இருந்தான்?
அது சரி, என்னுடைய பிராம்மணர் சங்கம் பதிவில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வருவேன் எனக் கூறியிருந்தீர்களே? இன்னும் பதிலைத் தயாரிக்க முடியவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்படிப்போடு,
தோழியாக உங்களிடம் ஒரு வார்த்தை!
தயவு செய்து உங்களுடைய நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.
மனம் பிறழ்ந்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள். எல்லோரிலும் இருக்கிறார்கள். என்ன வெளிப்படும் விதந்தான் வித்தியாசம்.
உங்களுடைய நேரத்தை இதைவிட நன்றாக பயனுள்ளமுறையில் செல்வழிக்கமுடியும் என்று எனக்குத் தெரியும். அதைச்செய்யுங்கள் தோழி.
-மதி
//ஏனெனில் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையென்று தெளிவாகி விட்டது//.
அநாவசியமாக தூண்டும் பதிவுகளால் பிரச்சனையில் சம்பந்தப் படாதவர்களும் பாதிக்கப் படுகின்றனர். இதை நீங்கள் எப்போது புரிந்து கொண்டாலும் சரி. உங்களைப் போல் "அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையென்று தெளிவாகி விட்டதுன்னு" விடமுடியவில்லை என்னால் ஏனெனில் என் புரிதலை விட உங்கள் புரிதல் முக்கியம். நான் சம்பந்தப்பட்ட பதிவுக்கு அப்பதிவில் மட்டும்தான் பின்னூட்டமிடுவேன். நீங்கள் அப்படியா?.
//உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் கவலைப் படுவதுபோலவே நானும் கவலைப்பட எனக்கு உரிமை இல்லையா?//
டோண்டு அய்யா., உண்மையாக நீங்கள் இதைப் பற்றி கவலைப் பட்டிருந்தீர்கள் என்றால்... இவ்வளவு தூரம் இதை வளர்த்தி வேடிக்கை பார்த்திருக்க மாட்டீர்கள் என நான் அறியிட்டுச் சொல்லுவேன்.
//பெண் உறவினர்களை இழுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? என்ன செய்வீர்கள்? வலைப்பதிப்பதையே விட்டு ஓடி விடுவீர்கள் என நினைக்கிறேன்//.
நிச்சயம் செய்திருப்பேன். யாருடைய வாய்க்கோ எங்கள் மானத்தை அவலாக கொடுத்திருக்க மாட்டேன். வேறு மாதிரி அணுகியிருப்பேன் இல்லை குறைந்தபட்சம் எரிவதில் எண்ணை ஊற்றாமல் இருந்திருப்பேன். மற்றுமொன்று ஏன் அய்யா நீங்கள் பெற்ற துன்பம் அனைவரும் பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
//ஆனால் நான் ஓடவில்லை. அதைத்தான் போலி டோண்டு எதிர்ப்பார்த்தான். நீங்களும் அதைதான் எதிர்ப்பார்த்தீர்களோ?//
நான் ஏன் அப்படி எதிர்பார்க்கப் போகிறேன்?. இந்தக் கேள்வி நியாயமாகப் படுகிறதா உங்களுக்கு?. ஒரு விதயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டால்... நான் நீங்கள் எழுதக் கூடாது என எதிர்பார்த்தீர்களோ? என்கிறீர்களே இதுதான் நீங்கள் அனைவரையும் தெரியுமா எனக் கேட்கும் தர்க்க சாஸ்திரமா?.
//தமிழ்மணத்தில் அப்போதிருந்த கிட்டத்தட்ட எல்லா பதிவாளர்களும் ஆதரவுப் பின்னூட்டம் இட்டனர்//
உங்கள் மனசாட்சிப் படி சொல்லுங்கள்., அனைவரும் வந்தார்களா?. உங்கள் பதிவில் பின்னூட்டவில்லையென்பதால் நான் கண்டிக்காததாகிவிடுமா?., எல்லோரையும் நீ அந்தப் பின்னூட்டத்தை அழிக்கவில்லை... இந்தப் பின்னூட்டத்தை ஏன் வைத்திருக்கிறாய் எனக் கேட்கும் நீங்கள். மிக ஆபாசமான ஒரு பின்னூட்டத்தை அப்படியே வைத்திருந்து மதி அவர்களின் தனி மடல் வேண்டுகோளின் படி அதை அழிக்கவில்லையா?. இங்கிருக்கும் பெண்கள் உங்கள் கண்ணிற்கு பெண்களாகத் தெரியவில்லையா?., அல்லது யாரும் உங்கள் பதிவிற்கு வரமாட்டார்கள் என நினைத்தீர்களா அய்யா?.
//அது சரி, என்னுடைய பிராம்மணர் சங்கம் பதிவில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வருவேன் எனக் கூறியிருந்தீர்களே? இன்னும் பதிலைத் தயாரிக்க முடியவில்லையா?//
இந்த மட்டும் தட்டும் வேலைக்கெல்லாம் மடங்குவதற்கு நான் ஆள் அல்ல ஐயா., உங்களிடம் தெரிவித்தபடி தனிப் பதிவில் உங்களுக்குப் பதில் கட்டாயம் உண்டு அய்யா.
//இல்லாவிட்டால் முகமூடியின் இப்போதையைப் பதிவில் அவ்வாறு பின்னூட்டமிட்டிருக்க மாட்டீர்கள்//.
******** அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு? ********
இப்படிப்பட்ட திரித்தலுக்கு நான் என்ன மெறுமொழியளித்திருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள் அய்யா?. இதை நீங்கள் ஏன் உங்கள் பதிவில் என்னிடம் கேட்கவில்லை அய்யா?.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் டோண்டு அய்யா அவர்களே., நீங்கள் போலியால் பாதிக்கப்பட்டதை அனைவரும் புரிந்து கொண்டு உங்களுக்கு ஆறுதல் ஆளிக்க ஓடிவர வேண்டும்., உங்கள் செய்கையால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றால் காது கொடுத்துக் கேட்கமாட்டீர்கள். சரி விடுங்கள். இங்கிருப்பவர்களில் மூத்த வலைபதிவர் நீங்கள்., அந்த மதிப்பு என்னிடம் எப்போது உண்டு., நீங்கள் உணர்ந்தாலும்., உணராவிட்டாலும். இதற்கு மேல் இப்பதிவில் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. நன்றி அய்யா.
//உங்களுடைய நேரத்தை இதைவிட நன்றாக பயனுள்ளமுறையில் செல்வழிக்கமுடியும் என்று எனக்குத் தெரியும். அதைச்செய்யுங்கள் தோழி//
நன்றி மதி., அருமையான பாடங்கள் கற்றுக் கொண்டேன் கடந்த மூன்று நாட்களாக.
"எல்லோரையும் நீ அந்தப் பின்னூட்டத்தை அழிக்கவில்லை... இந்தப் பின்னூட்டத்தை ஏன் வைத்திருக்கிறாய் எனக் கேட்கும் நீங்கள். மிக ஆபாசமான ஒரு பின்னூட்டத்தை அப்படியே வைத்திருந்து மதி அவர்களின் தனி மடல் வேண்டுகோளின் படி அதை அழிக்கவில்லையா?. இங்கிருக்கும் பெண்கள் உங்கள் கண்ணிற்கு பெண்களாகத் தெரியவில்லையா?., அல்லது யாரும் உங்கள் பதிவிற்கு வரமாட்டார்கள் என நினைத்தீர்களா அய்யா?"
மதி அவர்கள் என்னிடம் கேட்டது, நான் அவருக்கு பதிலளித்தது எல்லாம் கான்ஃபிப்டென்ஷியல் விஷயங்கள். அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. போன நவம்பர் மாதம் இது சம்பந்தமாக எங்களிடையில் 3 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவை பத்திரமாக என் ஆர்கைவ்ஸில் உள்ளன. அவற்றை எடுத்து இங்கே போட எனக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. போட்டாலே என் மேல் அந்த விஷயத்தில் ஒரு தவறும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகி விடும்.
இப்போது பேச்சு உங்கள் இந்தச் செய்கையைப் பற்றித்தான். மதி அவர்கள் பேச்சுவாக்கில் உங்களிடம் கூறியிருக்கலாம், அல்லது நீங்களும் மதியின் தோழியர் குழுவில் இருந்திருக்கலாம், இந்த மின்னஞ்சல்கள் பற்றி உங்களுக்கு முதலிலிருந்தே தெரிந்திருக்கலாம். எது எப்படியானாலும் இது முற்றிலும் பிரைவேட் விஷயம். அதை இங்கு வாதத்தில் வெளியிடுவது சரியானச் செயல் ஆகாது.
நீங்கள் அனுமதித்தால் உங்கள் இந்தப் பின்னூட்டத்தையும் அதற்கான இந்தப் பதிலையும் நீக்கி விடுகிறேன். சீக்கிரம் முடிவு சொல்லவும்.
இதற்கு உங்கள் தரப்பிலிருந்து பதிலே இல்லை அல்லது அப்படியே இருக்கட்டும் என்று நீங்கள் பதிலிறுக்கும் பட்சத்தில் கூட மதி அவர்கள் சரி என்று சொல்லாத வரை எங்கள் மின்னஞ்சல் பரிமாறலை இங்கு எடுத்துப் போடுவதாயில்லை. அதனால் என் பெயர் ரிப்பேரானாலும் சரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நன்றி மதி., அருமையான பாடங்கள் கற்றுக் கொண்டேன் கடந்த மூன்று நாட்களாக.//
எனக்கும் இந்த பாடம் கிடைத்தது சற்று முன்னதாகவே.
தூங்குற மாதிரி நடிப்பதிலும் ,விவாததில் நேர்மையின்றி அடுத்தவர் மீது அபாண்ட பழி சுமத்துவதிலும் (இதை கூட போலி டோண்டுவை அவர் அபாண்டமாக பழி சுமத்துவதாக திரித்து 2 பக்கத்துக்கும் அதே கிளிப்பிள்ளை கதைகளை சொல்லுவார் பாருங்கள்) .அவருடைய அணுகுமுறையில் இருக்கும் குறைபாட்டை சுட்டிக்காட்டினாலே ,போலி டோண்டுவுக்கு ஆதரவாகக் பேசுவதாக திசை திருப்புவார் .
ஒரு 10 வயது பையனுக்கு உள்ள விவாத அடிப்படை கூட தெரியாத இவர் ,தர்க்க சாஸ்திரம் பற்றி வேறு பீத்திக் கொள்ளுவார் .நகைச்சுவையின் உச்சம் இது.
அவருக்கு தெரிந்ததெல்லாம் ஒன்ரு தான் .கருத்து சொல்பவர் எல்லோரையும் டோண்டு ஆதரவாளர் ,இல்லையேல் போலி டோண்டு ஆதரவாளர் என்று மொட்டையாக இனம் பிரித்து வேண்டுமென்றே எரிச்சலை உண்டுபண்ணுவார் .
குருட்டுத்தனமாக சொன்னதையே சொல்லிக்கொண்டு ,அதையே உறுதி என்று நினைத்துக்கொண்டு சுய தம்பட்டம் அடிப்பார்.
இவை தான் நான் தெரிந்து கொண்டது .இவரிடம் விவாதம் செய்யாமல் இருப்பது மிக்க நல்லது.
// (இதை கூட போலி டோண்டுவை அவர் அபாண்டமாக பழி சுமத்துவதாக திரித்து 2 பக்கத்துக்கும் அதே கிளிப்பிள்ளை கதைகளை சொல்லுவார் பாருங்கள்)//
(இதை கூட போலி டோண்டுவை அவர் அபாண்டமாக பழி சுமத்துவதாக நான் சொன்னதாக திரித்து 2 பக்கத்துக்கும் அதே கிளிப்பிள்ளை கதைகளை சொல்லுவார் பாருங்கள்)
-என்று திருத்திப்படிக்கவும்
டோண்டு சார்,
உண்மையில் முகமூடி பதிவிற்கு பின்னூட்டம் இட்டதோடு சரி. பின்னர் நான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
காசி அவர்களுக்குப் பதில் கூறியது போதும் என நினைத்தேன்.
நான் காசியின் இடத்தில் இருந்தால் நான் மன்னிப்பெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். பிறரையும் அவ்வாறே எண்ணி விட்டேன். அது என் தவறுதான். நீங்கள் அவ்வாறு எதிர்பார்க்கும் பட்சத்தில்
"காசி அவர்களே உங்களைப் பற்றிக் கூறியதற்காக் மிகவும் வருத்தப் பட்டேன் என்பதே உண்மை. சில வாரங்கள் தமிழ்மணம் பக்கமே வராமல் இருந்தேன்.மண்னிப்புக் கோருவது பிறர் சொல்லிக் கேட்கக் கூடாது என்பதால்(என் பாலிசி), இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இங்கு என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்"
நான் யாரின் மனதையும் நோகடிபவன் இல்லை. இதே நேரம் தவறை தட்டிக் கேட்காமல் விட்டதில்லை.
நான் என் பதிவை அழிக்க மூன்று காரணங்கள்.
1.உண்னுடைய பதில்கள் மிகவும் காரமாக உள்ளது. இது வாழ்க்கையில் முன்னுக்கு வர நினைப்பவனுக்கு நல்லதல்ல என என் நண்பர்கள் அறிவுறை கூறியதால்
2.டோண்டு சாதி வெறியில் அந்த extreme என்றால் நீ சாதி ஒழிப்பில் இந்த extreme,சாதி ஒழிப்பை உன்னுடைய ஒரு அடையாளமாக்க வேண்டாம் என என் நண்பர்கள் அறிவுறை கூறியதால்
3.டோண்டு, உங்களைப் பற்றி சில அசிங்கப் பின்னூட்டங்கள் சில வந்தாதால்,தினமும் காலை அதை நீக்குவது ஒரு வேலையாகிப் போனதால்.
இது தான் உண்மை. இதை நம்பினால் நம்புங்கள்.
எனவே தேள் கொட்டவில்லை.
//மதி அவர்கள் என்னிடம் கேட்டது, நான் அவருக்கு பதிலளித்தது எல்லாம் கான்ஃபிப்டென்ஷியல் விஷயங்கள்.//
சரி போனாப் போகுது பெரிய மனிசன்னு பார்த்தா இவ்வளவுக்கு பிறகும் உங்களோட ஜலரா கூட்டத்துக்கிட்ட காட்டுற வித்தையை ஏன்னய்யா என்னிடம் காட்டுகிறீர்கள்?., என்னா பூச்சாண்டி?.,
//அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை//.
அடுத்த பிரச்ச்னைக்கு அச்சாரம் போடுகிறீரா?.
//இப்போது பேச்சு உங்கள் இந்தச் செய்கையைப் பற்றித்தான்//.
பல மணி நேரம் அந்த ஆபாச பின்னூட்டத்தை அப்படியே வைத்திருந்து. எனக்கு வேறு அப்பதிவுகளின் லிங்க் கொடுத்து ., வந்து பாருங்கள் என அழைப்பு விட்டது டோண்டு என்கிற நீர்தானே?. ஏன் ஆபாசப் பின்னூட்டத்தை வைத்திருந்தீர்கள் என்று கேட்டால்., எப்படி உளறி., இப்போது பேச்சு உங்கள் செய்கைன்னு என் மேல் திருப்புகிறீர்கள்?.
//எது எப்படியானாலும் இது முற்றிலும் பிரைவேட் விஷயம். அதை இங்கு வாதத்தில் வெளியிடுவது சரியானச் செயல் ஆகாது//.
உங்கள் மேல் தப்பிருந்தால் என்னன்ன பூச்சாண்டி காட்டி பாயமுறுத்துவீர்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். காசி பிரைவேட்டா அனுப்புன மெயில வைச்சு நீங்க பதிவு போடுவிங்க., பண்ணுன தப்ப சொன்னா பிரைவேட்டு, பப்ளிக்கு புடலங்கானுட்டு.
//நீங்கள் அனுமதித்தால் உங்கள் இந்தப் பின்னூட்டத்தையும் அதற்கான இந்தப் பதிலையும் நீக்கி விடுகிறேன். சீக்கிரம் முடிவு சொல்லவும்//
இந்த மிரட்டல், உருட்டல், பணிய வைத்தல்.... எத்தனை எடுத்துச் சொல்லியும் திருந்த மாட்டீர்களா? உங்கள் வயதிற்கு இது அழகா?. நான் ஏதோ குற்றம் புரிந்த மாதிரியில்ல திரிச்சுகிட்டு இருக்கிங்க?. சபை நாகரீகம் கருதி என்னால் எழுத முடிந்தது இதுதான்.
அப்பிடிப்போடு அவர்களே, நீங்கள் தேவையில்லாமல் டென்ஷன் ஆகிறீர்கள்.
1. காசி அவர்கள் அனுப்பித்தது பொது மெயில், அது அவரே கூறியது.
2. உங்கள் பதிலிலிருந்து நான் விஷயத்தை கிரகித்து செய்யப்போவது இதுதான். சம்பந்தப்பட்டப் பின்னூட்டங்களை அப்படியே வைத்து விடுவது, மதி அவர்கள் மற்றும் எனக்கும் நடுவில் நடந்த மின்னஞ்சல் பரிமாறலை வெளியிடாமல் இருத்தல் அவ்வளவுதான்.
3. "சரி போனாப் போகுது பெரிய மனிசன்னு பார்த்தா..."
அப்படியெல்லாம் நீங்கள் பார்த்ததாகத் தெரியவில்லை. உங்களிடம் அந்த நாகரிகங்களை எல்லாம் நானும் எதிர்ப்பார்க்கவில்லை.
4. இங்கு யாரும் பூச்சண்டி எல்லாம் காட்டவில்லை, அதற்கு எனக்கு நேரமும் இல்லை.
நன்றி,
டோண்டு ராகவன்
மகேஸ் அவர்களே,
இப்போதாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியதே, அது வரைக்கும் மகிழ்ச்சி. உங்கள் பதிவிலேயே காசி அவர்களிடம் வாபஸ் வாங்குகிறேன் என்றெல்லாம் கூறியபோது, மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் இரண்டே வார்த்தைகளில் காரியம் முடிந்திருக்கும்.
சரி விடுங்கள். என்னால்தான் காசி அவர்கள் பெயரில் போலி டோண்டு பின்னூட்டம் இட்டான் என்று எனக்கு பட்டதால்தான் உங்களிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதாயிற்று. அதற்காக நானும் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
மட்டுறுத்தலுக்கானப் பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற செட்டிங்ஸ் செய்து கொண்டால் பின்னூட்டமிடுபவரின் பெயர் டிஸ்ப்ளேயில் எலிக்குட்டியை வைத்துப் பார்க்க முடியும் என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மதி அவர்கள் என்னிடம் கேட்டது, நான் அவருக்கு பதிலளித்தது எல்லாம் கான்ஃபிப்டென்ஷியல் விஷயங்கள். அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. போன நவம்பர் மாதம் இது சம்பந்தமாக எங்களிடையில் 3 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவை பத்திரமாக என் ஆர்கைவ்ஸில் உள்ளன. அவற்றை எடுத்து இங்கே போட எனக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. போட்டாலே என் மேல் அந்த விஷயத்தில் ஒரு தவறும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகி விடும்.
இப்போது பேச்சு உங்கள் இந்தச் செய்கையைப் பற்றித்தான். மதி அவர்கள் பேச்சுவாக்கில் உங்களிடம் கூறியிருக்கலாம், அல்லது நீங்களும் மதியின் தோழியர் குழுவில் இருந்திருக்கலாம், இந்த மின்னஞ்சல்கள் பற்றி உங்களுக்கு முதலிலிருந்தே தெரிந்திருக்கலாம். எது எப்படியானாலும் இது முற்றிலும் பிரைவேட் விஷயம். அதை இங்கு வாதத்தில் வெளியிடுவது சரியானச் செயல் ஆகாது.
நீங்கள் அனுமதித்தால் உங்கள் இந்தப் பின்னூட்டத்தையும் அதற்கான இந்தப் பதிலையும் நீக்கி விடுகிறேன். சீக்கிரம் முடிவு சொல்லவும்.
இதற்கு உங்கள் தரப்பிலிருந்து பதிலே இல்லை அல்லது அப்படியே இருக்கட்டும் என்று நீங்கள் பதிலிறுக்கும் பட்சத்தில் கூட மதி அவர்கள் சரி என்று சொல்லாத வரை எங்கள் மின்னஞ்சல் பரிமாறலை இங்கு எடுத்துப் போடுவதாயில்லை. அதனால் என் பெயர் ரிப்பேரானாலும் சரி.
//
டோண்டு அவர்களே & அப்படிப்போடு,
நான் *பெரும்பாலும்* டோண்டு அவர்களின் இடுகைகளைப்படிப்பது கிடையாது. ஏன் படிப்பதில்லை. இடுகைகளைப்பற்றிய என் கருத்து என்ன என்றெல்லாம் இங்கே எழுதப்போவதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று, அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. இரண்டு, தர்க்கசாஸ்திர விதண்டாவாதம்... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! சரியா?
இப்போது விதயத்துக்கு வருவோம்.
டோண்டு அவர்களின் இடுகையில் இருந்த பின்னூட்டத்தை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததே 'அப்படிப்போடு'தான். பிறகுதான் வெஏரு சிலருடன் இதைப்பற்றிப் பேசினேன். அதற்குப்பிறகுதான் எப்போதும் இல்லாத அளவு மென்மையாக ஒரு கடிதம் எழுதினேன். 'அப்படிப்போடு', கடிதங்களை நீங்களும் டோண்டு அவர்களும் கேட்டுக்கொண்டபடி இங்கே பகிர்ந்துகொள்கிறேன்...
முன்பே சொன்னபடி: மனம் பிறழ்ந்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள். எல்லோரிலும் இருக்கிறார்கள். என்ன வெளிப்படும் விதந்தான் வித்தியாசம்.
அப்படிப்போடு, நீங்கள் திரும்பத்திரும்ப ''அநாவசியமாக தூண்டும் பதிவுகளால் பிரச்சனையில் சம்பந்தப் படாதவர்களும் பாதிக்கப் படுகின்றனர்." என்று காட்டுக் கத்தல் கத்தினாலும் காதில் விழும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. But, voices like yours and Joe's and Cholanaadan's are absolutely necessary.
-மதி
********
//ஏனெனில் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையென்று தெளிவாகி விட்டது//.
அநாவசியமாக தூண்டும் பதிவுகளால் பிரச்சனையில் சம்பந்தப் படாதவர்களும் பாதிக்கப் படுகின்றனர். இதை நீங்கள் எப்போது புரிந்து கொண்டாலும் சரி. உங்களைப் போல் "அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லையென்று தெளிவாகி விட்டதுன்னு" விடமுடியவில்லை என்னால் ஏனெனில் என் புரிதலை விட உங்கள் புரிதல் முக்கியம். நான் சம்பந்தப்பட்ட பதிவுக்கு அப்பதிவில் மட்டும்தான் பின்னூட்டமிடுவேன். நீங்கள் அப்படியா?.
//உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் கவலைப் படுவதுபோலவே நானும் கவலைப்பட எனக்கு உரிமை இல்லையா?//
டோண்டு அய்யா., உண்மையாக நீங்கள் இதைப் பற்றி கவலைப் பட்டிருந்தீர்கள் என்றால்... இவ்வளவு தூரம் இதை வளர்த்தி வேடிக்கை பார்த்திருக்க மாட்டீர்கள் என நான் அறியிட்டுச் சொல்லுவேன்.
//பெண் உறவினர்களை இழுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? என்ன செய்வீர்கள்? வலைப்பதிப்பதையே விட்டு ஓடி விடுவீர்கள் என நினைக்கிறேன்//.
நிச்சயம் செய்திருப்பேன். யாருடைய வாய்க்கோ எங்கள் மானத்தை அவலாக கொடுத்திருக்க மாட்டேன். வேறு மாதிரி அணுகியிருப்பேன் இல்லை குறைந்தபட்சம் எரிவதில் எண்ணை ஊற்றாமல் இருந்திருப்பேன். மற்றுமொன்று ஏன் அய்யா நீங்கள் பெற்ற துன்பம் அனைவரும் பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
//ஆனால் நான் ஓடவில்லை. அதைத்தான் போலி டோண்டு எதிர்ப்பார்த்தான். நீங்களும் அதைதான் எதிர்ப்பார்த்தீர்களோ?//
நான் ஏன் அப்படி எதிர்பார்க்கப் போகிறேன்?. இந்தக் கேள்வி நியாயமாகப் படுகிறதா உங்களுக்கு?. ஒரு விதயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டால்... நான் நீங்கள் எழுதக் கூடாது என எதிர்பார்த்தீர்களோ? என்கிறீர்களே இதுதான் நீங்கள் அனைவரையும் தெரியுமா எனக் கேட்கும் தர்க்க சாஸ்திரமா?.
//தமிழ்மணத்தில் அப்போதிருந்த கிட்டத்தட்ட எல்லா பதிவாளர்களும் ஆதரவுப் பின்னூட்டம் இட்டனர்//
உங்கள் மனசாட்சிப் படி சொல்லுங்கள்., அனைவரும் வந்தார்களா?. உங்கள் பதிவில் பின்னூட்டவில்லையென்பதால் நான் கண்டிக்காததாகிவிடுமா?., எல்லோரையும் நீ அந்தப் பின்னூட்டத்தை அழிக்கவில்லை... இந்தப் பின்னூட்டத்தை ஏன் வைத்திருக்கிறாய் எனக் கேட்கும் நீங்கள். மிக ஆபாசமான ஒரு பின்னூட்டத்தை அப்படியே வைத்திருந்து மதி அவர்களின் தனி மடல் வேண்டுகோளின் படி அதை அழிக்கவில்லையா?. இங்கிருக்கும் பெண்கள் உங்கள் கண்ணிற்கு பெண்களாகத் தெரியவில்லையா?., அல்லது யாரும் உங்கள் பதிவிற்கு வரமாட்டார்கள் என நினைத்தீர்களா அய்யா?.
//அது சரி, என்னுடைய பிராம்மணர் சங்கம் பதிவில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வருவேன் எனக் கூறியிருந்தீர்களே? இன்னும் பதிலைத் தயாரிக்க முடியவில்லையா?//
இந்த மட்டும் தட்டும் வேலைக்கெல்லாம் மடங்குவதற்கு நான் ஆள் அல்ல ஐயா., உங்களிடம் தெரிவித்தபடி தனிப் பதிவில் உங்களுக்குப் பதில் கட்டாயம் உண்டு அய்யா.
//இல்லாவிட்டால் முகமூடியின் இப்போதையைப் பதிவில் அவ்வாறு பின்னூட்டமிட்டிருக்க மாட்டீர்கள்//.
******** அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு? ********
இப்படிப்பட்ட திரித்தலுக்கு நான் என்ன மெறுமொழியளித்திருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள் அய்யா?. இதை நீங்கள் ஏன் உங்கள் பதிவில் என்னிடம் கேட்கவில்லை அய்யா?.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் டோண்டு அய்யா அவர்களே., நீங்கள் போலியால் பாதிக்கப்பட்டதை அனைவரும் புரிந்து கொண்டு உங்களுக்கு ஆறுதல் ஆளிக்க ஓடிவர வேண்டும்., உங்கள் செய்கையால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றால் காது கொடுத்துக் கேட்கமாட்டீர்கள். சரி விடுங்கள். இங்கிருப்பவர்களில் மூத்த வலைபதிவர் நீங்கள்., அந்த மதிப்பு என்னிடம் எப்போது உண்டு., நீங்கள் உணர்ந்தாலும்., உணராவிட்டாலும். இதற்கு மேல் இப்பதிவில் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. நன்றி அய்யா.
**********
என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பின்னூட்டமே ஒரு சான்று அப்படிப்போடு. நன்றி!
மதி
Mathy and Appdipodu,
I have nothing else to say to both of you on this subject except the following:
To Apdipodu:
My supposition was correct and you gave out confidential information. I will not descend to that level and reveal further information of confidential nature.
To Mathy:
You found my post on moderation thanking Kasi to be rubbish. Apparently the other posts dealing with the same subject by numerous other bloggers are not rubbish in your eyes. Well, that's your opinion and you are entitled to it just as I am entitled to my opposing opinion.
Anyhow the fact that you yourself have not resorted to moderation inspite of obscene comments on Kasi having stayed for hours in your post on your favorite blogs says volumes about your opinion.
Thanks,
N.Raghavan
//Anyhow the fact that you yourself have not resorted to moderation inspite of obscene comments on Kasi having stayed for hours in your post on your favorite blogs says volumes about your opinion.
//
Raghavan,
I suggest you read about wordpress and the plug-ins used there. Do read about spam-karma plugin in particular. Then you will find that the spam-karma v2.1 was released recently and there were compatibility problems.
ஏதோ ஊர் உலகத்தில உங்களுக்கு மட்டுந்தான் ஆபாசப்பின்னூட்டங்கள் வருவதுபோல ஒரு பில் அப் குடுக்காதீங்க. இங்க உங்களுடைய வலைப்பதிவிலேயே என்னைப்பற்றி மிக ஆபாசமான பின்னூட்டம் வந்திருந்தது. மாயவரத்தானுடையதிலும். மே, 2003இல் இருந்து வலைப்பதிவு வைத்திருக்கும் எனக்கும் எத்தனையோ காரணங்களுக்காக ஆபாசப்பின்னூட்டங்கள் வருகின்றன. வலைப்பூ - valaippoo.blogspot.com & valaippoo.yarl.net இருந்தபோது நீங்கள் வலைபதியவில்லை. ஏன் வாசகர்கூட அல்ல. அப்போது நடந்த விதயங்கள் உங்களுக்குத் தெரியாது. தெரிந்தும் இருக்கலாம். that's not my concern.
ஏதோ உங்களுக்கு மட்டுமே ஆபாசப்பின்னூட்டங்கள் வருவதாக பில்-அப் குடுக்காதீர்கள்.
ஊரில் இல்லாத காரணத்தால் spam-karma plug-in update குழறுபடிகளால் ஒரு நாள் நடந்த குழறுபடி அது. நல்லவேளையாக ஊரில் இருந்து வந்த கையோடு இரவோடு இரவாக 2-3மணி வாக்கில் பார்த்து அழித்தேன். பிறகு பிரச்சினையைச் சரி செய்தும் விட்டேன். என்ன precautions எடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ஊரைக்கூட்டாமல், நான் வீட்டில் பூட்டுப் போட்டிருக்கிறேன் என்று அறைகூவாமல் moderation enable செய்திருக்கிறார்கள்.
நானும் எனக்குச் சரி என்று படிவதைச் செய்து வந்திருகிறேன். செய்வேன். ஆனால், அதற்காக மற்றவர்களைத் தூண்டி விடுவதில்லை. அலை ஓயும்போது கிளறிவிடுவதும் இல்லை!
சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க.
enough of this distraction tactics. Why don't you continue your discussions with ApdipOdu. Many people are able to realise many things because of this discussion.
-மதி
I know I am being dragged into a vithandaavaatha tharkka saaSthiram... but here goes!
//You found my post on moderation thanking Kasi to be rubbish. Apparently the other posts dealing with the same subject by numerous other bloggers are not rubbish in your eyes. Well, that's your opinion and you are entitled to it just as I am entitled to my opposing opinion.//
Raghavan,
Do show me a single post where the blogger has thanked Kasi and where the blogger (subtly or otherwise) takes credit for such a step.
Most of the bloggers have correctly expressed their dismay. Most of them also understand why things have come to this extent. So, they are co-operating with Thamizmanam in this.
Most of them (should I say someof them) also are aware that if they dont enable moderation in their blogs, they are not going to lose anything. Just their blogs wont get displayed in the thamizmanam's ''அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்'' list.
What's the big deal was some of the bloggers' reaction. I actually am very happy about their reaction. They are not infringing on others rights. The same way, they dont want to be restricted.
No body has thanked Kasi or Thamizmanam for sucha step. They have all expressed their dismay. That's why your post is rubbish in my eyes.
Comprenez?
-Mathy
Mathy,
There are obscene comments and obscene comments. I personally give two hoots obscene comments abusing me in filthy language, with some other name as authors. I will just delete them.
Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi?
There are Poli Kasi, Poli Mayavarathan, Poli Halwa City Vijay et al.
I am always ready to discuss with Appdipodu whenever she comments but then it seems you have counseled her against commenting in my blog. Why then this sudden change of heart?
If the discussion continues people will have more insight about the ethics of keeping confidential information.
Thanks,
Dondu N.Raghavan
For this:
"Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi?"
Read:
"Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons, and that too in someone else's blog posts as comments. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi?"
//Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi? //
Raghavan,
Did you write to blogger in detail about that?
You were reluctant to write to them about it, as I recall. If you have written to them, I would like to see those mails. Do post a seperate post with those mails. I am sure that wont be such a hardship to you. Esp. when you could write this particular post, you would have time to gather your mails to them and google's responses to you.
I would also like to have the name of the person you communicated with in google.
If you want, I will take this up with them. Google keeps record of their communications with sensitive issues. They are quite concerned about identity theft. Infact everybody in the western world is.
Expecting your post on this matter today Raghavan. I am waiting ot help you in communicating with Google.
-Mathy
//For this:
"Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi?"
Read:
"Trouble is with obscene comments in my own name by somebody else abusing third persons, and that too in someone else's blog posts as comments. That's how the term Poli Dondu has come. Is there any Poli Mathi?" //
My response for this Raghavan is this.
Did you take this up with proper authorities.
Did you write to google about this?
I would like to see those mails. I would really love to help you on this. Do write a post with all your communication with google.com
I have written a comment on the same lines a few minutes ago..
-Mathy
Mathy,
I wrote to blogger and had a few bogus blogger accounts closed. But then Poli Dondu goes on creating more such accounts.
Thanks for your offer regarding Google people. Some of us suffering from identity theft have taken steps, which are now at a delicate stage. And I do not want to discuss this with outsiders like you, who do not have this id theft problem.
Thanks,
Dondu N.Ragahvan
மிக்க நன்றி நாட்டாமை அவர்களே. நன்றி கூறுவது தவறு போலிருக்கிறது. அதே சமயம் இந்த மட்டுறுத்தலுக்காக நான் க்ரெடிட் எடுத்துக் கொண்டேன் என்று பலரும் கூறுகின்றனர். அது அவர்கள் கருத்து.
நான் அவ்வாறு செய்யவில்லை என்பது உங்களுக்கும் எனக்கும்தான் தெரிகிறது போலிருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Mathy,
I wrote to blogger and had a few bogus blogger accounts closed. But then Poli Dondu goes on creating more such accounts.
Thanks for your offer regarding Google people. Some of us suffering from identity theft have taken steps, which are now at a delicate stage. And I do not want to discuss this with outsiders like you, who do not have this id theft problem.
Thanks,
Dondu N.Ragahvan
//
Raghavan,
I do know the steps that are being taken.
I am requesting you to atleast share the emails where you communicated iwth google about
//I wrote to blogger and had a few bogus blogger accounts closed.//
Since the accounts were closed, there wont be any problems in sharing them. If you are apprehensive about sharing them in public, do mail me those emails (where the problems are solved.) I am sure you would trust me with that much info.
I will respond here after your response (in public or in private).
-Mathy
டோண்டு சார் கலக்கிபுடிங்க.
சரி போற போக்க பாத்தா நீங்க உங்க "போரை" அப்படியே பதிவா போட்டு தெடர்விங்க போல. ஏவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன நமக்கு "War on Terrorism" தானே முக்கியம் கலக்குங்க. அதுல முக்கியமா மதி கந்தசாமிக்கு ஒரு பதில் செல்லி இருக்கிங்களே அடடா அங்க தான் சார் நீங்க நிக்கறிங்க. போலி மதி இருந்தா தான் அவருக்கு அதை அனுப்பிவிங்களாமா? நல்ல கதையா இருக்கே. மதி சார் அவர் தான் காமெடி பண்ணிட்டு இருக்கார்னா நீங்க வேற அதை ரொம்ப சீரியசா குடுங்க குடுங்கன்னு கேட்டுட்டு இருக்கிங்க. இருந்தா தானே தருவாரு. நீங்க வேணா ஒரு போலி மதியை தயார் பண்ணிட்டு கேட்டுப்பாருங்க(பாத்துங்க அப்புறம் அவர் கேக்க போறாரு நான் போலி டோண்டு கேட்டா தான் குடுப்பேன் போலி மதிக்கு எல்லாம் குடுக்க மாட்டேன் அப்படின்னு.அவர் தான் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர் அயிற்றே). சரி இப்ப நேரடையாவே நான் செல்கிறேன் போலி டோண்டு தான் நிஜ டோண்டு. மதி கேட்ட கேள்வியை திரும்ப கேட்கிறேன். அதற்கான தகுந்த ஆதாரமாக ஒவ்வொரு முறையும் போலி ஒரு பதிவில் பின்னுட்டம் இட்ட உடன் அது எப்படி உங்களுக்கு தெரியவருகிறது அதை விளக்குங்க. அப்படியே நான் சில கேள்விகளை கேட்டு இருக்கிறேன் சரி என்னோட பதிவுல போட்ட தான் உங்களுக்கு படிக்க நேரம் இருக்காது உங்க பின்னுட்டத்துலேயே போடுறேன் பதில் செல்லுவிங்கன்னு எதிர்ப்பாக்கிறேன். இல்லை நாட்டாமைக்கு மட்டும் தான் செல்லுவேன், போலி வைச்சிட்டு இருப்பவனுக்கு தான் எழுதுவேன் அப்படின்னு செல்லமாட்டிங்கன்னு எதிர்ப்பாக்கிறேன்.
அந்த மகர நெடுங்குழைகாதன் தான் வந்து இந்த உலகத்தை காப்பத்தணும். அப்புறம் நான் இந்த மறுமொழுயை வழக்கத்திற்கு மாறாக என்னுடைய பதிவில் போடுகிறேன்(என்னோட பதிவும் பாப்புலர் ஆகணும் இல்லையா? என்னோட பெயரும் அண்மையில் அந்த லிஸ்ட்ல வரணும் இல்லையா?)
"அவனோட பதிவும், ஹாக்கிங்க் சொல்லிகுடுக்கற குரூப்பும் போன வருசத்தில ஒரு நா காணா போயிடுச்சு.
உங்க கைங்கர்யம்தானா இது? மறுபடி முயற்சி பண்ணலாமே."
தெரியல்லியேப்பா (சிவாஜி குரல் கமல் ஸ்டைல்)
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனைப் பற்றி நான் போட்ட இப்பதிவைப் பார்க்கவும். http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
"எவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன நமக்கு "War on Terrorism" தானே முக்கியம் கலக்குங்க."
யார் என்ன கஷ்டப்பட்டான்னா நமக்கென்ன, நம்ம சகா போலி டோண்டுவை இப்படி ஓரங்கட்டிட்டாங்களே என்று சிவாஜி குரல் கமல் ஸ்டைலில் புலம்புவர்களளப் பற்றி எனக்கென்னக் கவலை இருக்க முடியும்?
அதே போல மாடரேஷன் பண்ண சோம்பேறித்தனத்தை மறைக்க உத்தமர் வேஷம் போடுபவர்களைப் பற்றியும் எனக்கேன் கவலை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mathy,
As far as Blogger accounts are concerned, there is no point talking with them. I was not aware of the possibility of contacting the Google people. If you can shed more light on this aspect, I request you to do so publicly. It will be of use to everybody.
Regarding the other actions being taken, you yourself are aware of them as mentioned by you.
Regards,
Dondu N.Raghavan
"சரி இப்ப நேரடையாவே நான் செல்கிறேன் போலி டோண்டு தான் நிஜ டோண்டு. மதி கேட்ட கேள்வியை திரும்ப கேட்கிறேன். அதற்கான தகுந்த ஆதாரமாக ஒவ்வொரு முறையும் போலி ஒரு பதிவில் பின்னுட்டம் இட்ட உடன் அது எப்படி உங்களுக்கு தெரியவருகிறது அதை விளக்குங்க. அப்படியே நான் சில கேள்விகளை கேட்டு இருக்கிறேன் சரி என்னோட பதிவுல போட்ட தான் உங்களுக்கு படிக்க நேரம் இருக்காது உங்க பின்னுட்டத்துலேயே போடுறேன் பதில் செல்லுவிங்கன்னு எதிர்ப்பாக்கிறேன்."
விஷயம் சிம்பிள். சம்பந்தப்பட்டப் பதிவர் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் உலகின் மற்ற பாகங்களில் பதிவு படிப்பவர்கள் விழித்திருக்கும் நேரம், முக்கியமாக நான். எப்போதுமே மறுமொழியப்பட்ட எல்லா பழைய ஆக்கங்களையுமே படிப்பவன் நான், ஏனெனில் போலி டோண்டு எங்கு வேண்டுமானாலும் வருவான். அப்படி வந்துதான் எல்லா இடங்களிலும் தெரிந்து கொண்டேன். நான் அப்படிப் பார்க்காத இடங்களைப் பற்றி எனக்கு என் நண்பர்கள் தகவல் கொடுத்தார்கள். இது அப்பிடிப் போடுக்கு நான் மேலே கொடுத்த பதில். வேறு கேள்விகள் ஒன்றும் இங்கில்லை போலிருக்கிறது. அடுத்த மெயிலில் வருகிறதோ?
போலி டோண்டுதான் நிஜ டோண்டு என்ற உங்கள் மகத்தான அபத்தக் கண்டுபிடிப்பைப் பற்றி என்பதைப் பற்றி காசி அவர்களிடம் கேட்கவும். எனக்கு உங்கள் மாதிரி ஆட்களைப் பார்த்தும் அதே சந்தேகம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Mathy,
As far as Blogger accounts are concerned, there is no point talking with them. I was not aware of the possibility of contacting the Google people. If you can shed more light on this aspect, I request you to do so publicly. It will be of use to everybody.
Regarding the other actions being taken, you yourself are aware of them as mentioned by you.
Regards,
Dondu N.Raghavan //
//I wrote to blogger and had a few bogus blogger accounts closed. But then Poli Dondu goes on creating more such accounts. //
Raghavan,
You are giving contradicting information. Did you or didnt you write to blogger people?
Earlier you claimed that you wrote to them and managed to stop some bogus accounts. Now you are claiming that you were not aware of the possibility of contacting google people.
What exactly is true?
-Mathy
There is no contradiction. I did write to them and had some bogus accounts closed. But more and more accounts started cropping up like Ravana's heads. Not only in my name but in others' names as well.
Hence I gave it up as futile exercise.
Compris? Est-ce que j'ai été assez claire cette fois ?
Merci,
Dondu N.Raghavan
Are Google and bloggers the same by any chance?
Regards,
Dondu N.Raghavan
//There is no contradiction. I did write to them and had some bogus accounts closed. But more and more accounts started cropping up like Ravana's heads. Not only in my name but in others' names as well.
Hence I gave it up as futile exercise.
Compris? Est-ce que j'ai été assez claire cette fois ?//
yes. I undeerstand what you are saying Raghavan.
Could you please kindly share those mails here or if you dont want to do that, could you please send it to me?
Merci!
-Mathy
கடந்த 9.5 மணி நேரங்களாக இப்பதிவிற்கு பின்னூட்டமே இடப்படாதது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது ;-)
இத்தோடு 99 பின்னூட்டங்கள் !!!! எல்லோரும் ஆட்டத்தை க்ளோஸ் பண்ணிக்கலாமே !!!!
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" அல்லவா :)
-- எ.அ. பாலா
டோண்டு,
தங்கள் பதிலுக்கு நன்றி, எதை சார் நீங்க எதிர்ப்பு என்கிறீர்கள், அவனுக்கு எதிராக தனி பதிவு போடுவதா? உங்களுக்கு தான் தெரியும் இல்ல பின்ன ஏன் உபயோகமான வகையில அதை எதிர்த்திங்களா? சும்மா அவனுக்கு எதிரா பதிவு போட்டு அவனன் உசுப்பி விட்டு இல்ல இருந்திங்க. ஆனா தனிமனித தாக்குதல் அப்படின்னு செல்லி ஒரு பெரிய காமெடி பண்ணி இருக்கிங்க பாருங்க. அய்யோ அய்யோ நீங்க உங்க பதிவுகளில் வருகிற பின்னுட்டங்களை படிக்கறது இல்லையா என்ன ஒருத்தர் யாராவது உங்களை எதிர்த்து கருத்து கூறி விட்டால் போதும் அப்படியே ரவுண்டு கட்டி காலி பண்ணிடுவிங்க. என்னோட பக்கத்துலேயே ஒருத்தர் சோழ நாடான் அப்படின்னு செல்லு இருக்கிறாரு பாருங்க. உடனே நான் எங்க பண்ணேன் அப்படின்னு கேக்க கூடாது உங்க பக்கத்துல நடந்ததை நீங்க தட்டி கேட்ட மாதிரி நான் தேடுன வரைகும் தெரியலை.
அய்யா சாக்கடைன்னு தெரிஞ்சா ஒண்ணு இறங்க சுத்தம் செய்யணும் இல்லாட்டி சுத்தம் செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட செல்லி சுத்தம் செய்ய செல்லணும், சும்மா கிண்டி ஊரை நாறடிக்க கூடாது. எதிர்ப்பதுன்னா எப்படி சார் ஏதாவது ஆக்கப்பூர்வமான் ஒரு நடவடிக்கை செல்லுங்க, தயவு செய்து நான் தான் என்னுடைய பின்னுட்டங்களை பதிவா போட்டு இருக்கேன் இல்ல, எதிர்ப்பு பதிவு போட்டேன் இல்ல அப்படின்னு சப்ப கட்டு கட்ட கூடாது. அய்யோ யுத்தம் தீவிரவாதம், உரிமை போர் சூப்பர் சார் வார்த்தைகளில் புகுந்து விளையாருறிங்க. அது சரி நண்பர்கள் அப்படின்னா என்ன சார் நீங்க எதை எழுதுவிங்க எதை எழுதமாட்டிங்கன்னு கூடவா அவங்களுக்கு தெரியாது. அது சரி சார் உங்க நண்பர்களுக்கு அடிக்கடி இதை நினனவு படுத்துவிங்களா என்ன? வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், என் பெயரில் வெளியாகும் பின்னுட்டங்கள் பற்றி(அதுல Ver 1, Ver 2) வேறு, நன்றி திரு காசி அவர்களே அது மாதிரி.
அய்யா உங்க போர் தந்திரம் சூப்பர் சார், அது எப்படி சார் அந்த ஆளு யாருன்னு யார்கிட்டேயும் செல்ல மாட்டிங்க. மாட்ரேஷன் பண்ணாதவங்க கிட்ட செல்ல மாட்டிங்க சைபர் போலீஸ்ல செல்ல மாட்டிங்க அப்பறம் எங்க எப்படி யார் கிட்ட செல்ல போறிங்க. அய்யா எனக்கு நல்லா நியபகம் இருக்கு அய்யா ஒரு முறை உங்க பதிவுல நீங்க என்ன ஜாதி அப்படின்னு பெருமையா செல்லி அதுல நான் பெருமை படுகிறேன்டா உங்களால என்னடா பண்ணமுடியும் அப்படின்னு ஏகத்தாளமா கேட்டு இருக்கிங்க பாத்திங்களா அன்னிக்கி விட்டவன் தான்யா உங்க பக்கத்துக்கு வருவதற்கு. ஆனா உங்க பதிவுகளில் ஜாதி துவேஷ்ம இல்லை அப்படின்னு இப்பவும் நீங்க சென்னிங்கன்னா, அதை மத்த வலை பதிவாளர்களும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில நான் ஒத்துக்கொள்கிறேன். அய்யா உங்க போராட்ட குணத்தை நான் போற்றுகிறேன் அதனால் மத்தவங்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது இல்லையா? பாருங்க காசியைப்பத்தியும் தப்பு தப்பா போட ஆரம்பிச்சிட்டான் அந்த போலி இப்பவாவது செல்லாம் இல்லையா அவன் யார் அப்படின்னு. இன்னமும் அதை நீங்க போர் தந்திரமா கருதிவிர்கள் என்றால் நாங்க அதை ஒண்ணுமோ செய்ய முடியாது.
உங்களுடைய கருத்து சுதந்திரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு, இந்த பதிவிலேயே நீங்க இராமச்சந்திரன் உஷா மற்றும் சதயத்திற்கு ஒரு பதில் செல்லி இருக்கிங்க பாருங்க அப்பா கருத்துக்கு என்னாமா மரியாதை கொடுத்து இருக்கிங்க பாருங்க. அதைவிட பெரிய எடுத்துக்காட்டு நம்ம நாட்டாமை அப்படிங்கிறவர் தனி மனித துவேஷத்தை எதிர்த்து போரிடுகிற உங்க பக்கங்களில் சும்மா சூப்பாரா பதில் குடுக்கிறார் அதை நீங்க தட்டி கொடுக்கிறிங்க பாருங்க. அது எப்படி சார் அந்த அதிமேதாவி ஒரு தீர்ப்பை குடுக்குறார் தமிழ்மணத்தில் இருக்கிற இளைஞர்களுக்கு போர் குணமே இல்லை அப்படின்னு அவ்வளவு உறுதியா செல்கிறார். அவனவன் எவ்வளவு பெரிய பதிவிகளில் எவ்வளவு பெரிய பொருப்புக்கள் சுமந்து கொண்டு கொடி கட்டி வாழ்கிறார்கள் அவங்களுக்கு எல்லாம் போர் குணம் இல்லையாம். நீங்க அவருக்கு ஒரு நன்றியை வேறு செல்றிங்க. அய்யோ உங்க போரை பாத்து உடம்பெல்லாம் புல்லரிக்குது போங்க. அது எப்படி சார் ஒரு நாட்டு அதிபர் உங்களுக்கு கோமாளியா தெரிகிறார், அவர் கோமாளி என்றார் அவரை தேர்ந்து எடுத்த அனைவரும் கோமாளிகளா? இது எந்த வகை துவேஷம் சார். அய்யா இன்னும் விளக்கம் ஏதாவது கொடுக்கணுமா அய்யா? .
வேலை பளுவின் காரணமாக உங்களுடைய கமெண்ட்ஸ் சரியாக approve பண்ண முடியவில்லை. இந்த பதில் இரவு 3 மணிக்கு எழுதியாதால் சரியாக serial ஆக எழுத முடியவில்லை மற்றும் align செய்ய முடியவில்லை மன்னிக்கவும்.
---
அருமையான பதில் சார் உங்க போர் தந்திரம் மிக அருமை சார் பாவம் சார் நீங்க தூங்காமா கொள்ளாம இந்த போரை மேற்கொள்கிறீர்கள் நான் வேண்டுமானால் நீங்க தூங்கும் போது உங்க போர் களத்தை பாத்துக்கொள்ளட்டுமா? அது சரி சார் இப்ப அந்த போலி டோண்டு பதில் அளித்தால் அது வெளியாக வாய்ப்புக்கள் கம்மி ஆனா அந்த பதிவர் உங்களைப்பத்தி தப்பா எடுத்துக்கொள்வாரே என்ன பண்ணலாம் சார் வேண்டுமானால் எல்லோருடைய userid and password வாங்கி வைத்துக்கொள்ளலாம? நமக்கு "war on terrorism" தானே முக்கியம். அப்புறம் இன்னொரு விஷயம் சார் அந்த போலியோட பெயரை யாரிடமும் செல்லிடாதிங்க. அப்புறம் உங்க போரின் அடுத்த கட்ட நடவடிக்கையா எப்போ சார் அடுத்த பதிவு போட போறிங்க? இப்பொழுது கணிசமான அளவு பின்னுட்டம் இருப்பதனால் இன்னும் கொஞ்ச நாள் எடுத்துக்கொள்வீர்கள் அப்படின்னு நினைக்கிறேன்.
Raghavan,
On 5/25/2005th you wrote
என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி
In it, I had left a comment. Let me reproduce it here.
//
Dondu,
I dont agree with most of your posts and comments. But, this has nothing to do with that.
Pls add your blogger nbr to each and every comment you make, under your name. it would be easy, for the readers to just scroll a few millimeters and check if it's you.
=====
write a detailed mail to blogspot.com
-Mathy
# posted by மதி கந்தசாமி (Mathy) : May 26, 2005 7:12 PM
//
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#111711495280509190
-Mathy
Mathy,
I don't understand your comment. Please clarify. It seems you are jumbling Google and blogger. I wrote to Blogger and all my correspondences with them have already been copied to Mr. Kasi. Please ask him.
You had mentioned Google also but I did not contact Google.
Regards,
Dondu Raghavan
"அருமையான பதில் சார் உங்க போர் தந்திரம் மிக அருமை சார் பாவம் சார் நீங்க தூங்காமா கொள்ளாம இந்த போரை மேற்கொள்கிறீர்கள் நான் வேண்டுமானால் நீங்க தூங்கும் போது உங்க போர் களத்தை பாத்துக்கொள்ளட்டுமா?"
உம்முடைய உதவியா? வேண்டவே வேண்டாம் சாமி, பூனையை மடியில் வெச்சுக்கிட்ட கதைதான். போலியை ஓரம் கட்டியதுக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ் கொடுக்கிறீங்க, உம்மை நம்ப நான் என்ன கேனையா. போய் வேறு வேலை இருந்தால் பாரும். யார் கண்டது நீங்களே குட போலி டோண்டுவாக இருக்கலாம். எதுக்கு வம்பு?
என்னுடைய அனுபவம் உம்ம வயசை விட அதிகமாகவே இருக்கும் ஐயா. என்னுடைய கஷ்டத்தை அலட்சியமாகப் பேசும் உம்மிடம் நான் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு விஷயம் கேட்டு விட்டு போங்கள். உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இடுகிறான் என்பதை காட்டவே நான் மூன்று வகை சோதனைகளுக்கு ஏற்பாடு செய்தேன். அப்படியிருக்கும்போதே சாதாரண எலிக்குட்டியை வைத்து சோதனை செய்யக்கூட சோம்பேறித்தனம் செய்தவர்கள் அனேகம். அவர்களில் சிலரது பெயரை இங்கே உள்ள பின்னூட்டங்களிலேயே கூறியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளும்.
சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பதிவுகளிலேயே எல்லா பின்புலத்தையும் கூறியுள்ளேன். முடிந்தால் போய் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 700 பின்னூட்டங்கள் வரும். இதற்கு முன்னோடியான இன்னொரு பதிவில் 308 பின்னூட்டங்கள். அல்லாவற்றையும் முடிந்தால் படிக்கவும். இன்னொரு விஷயம் பதிவாளராகிய நான் எழுதியதும் இந்த காண்டக்ஸ்டில் ப்ளாக்கர் டெஃபினிஷன் படி பின்னூட்டங்களாகக் கருதப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Mathy,
I don't understand your comment. Please clarify. It seems you are jumbling Google and blogger. I wrote to Blogger and all my correspondences with them have already been copied to Mr. Kasi. Please ask him.//
Raghavan,
Why should I ask Kasi.
This is your blog. The anonymous started with your name. It is you who wrote to blogspot people.
Ref: You wrote
//I wrote to blogger and had a few bogus blogger accounts closed.//
All I am asking for are these emails. Where you had written to blogspot people. And because of those mails blogspot.com closed some bogus accounts. And they would have responded to your emails. I am requesting to see those mails from blogspot too.
That's all I am asking. It is you who'se involved in this excercise at that point. So, I am asking you even now
pls do share those mails in public or in private (if you have any problems sharing them in public
-Mathy
டோண்டு கடைசி வரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதில் செல்றமாதிரி இல்லை. நானும் என்பதிவுல் போட்டேன் உங்க பதிவுல போட்டேன் வேலைகே ஆகலை .பின்ன சும்மாவா? என் வயசு உங்க experienceஆச்சே அதும் government ஆபீஸ் செல்லவே வேணாம். இவ்வளவு தூரம் செல்லியும் போலியை ஒரம் கட்ட நான் பீல் பண்ண மாதிரி பில்டப் குடுக்கறிங்க இது தானே வேணாங்கிறது.சோதனன வேதனை எல்லாம் சரி அதை சரியான வழிகளில் தீற்க்கும் வழியை பாருங்க. பின்னுட்டம் இடுவதை, தனி பதிவு போடுவதை விட்டு.
சந்தோஷ், நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். இன்னும் என்ன பதில் எதிர்ப்பார்க்கிறீர்கள்?
இப்போது சுருக்கிக் கூறுவேன்.
என்னை தாக்கிய பேர்வழி ஏற்கனவே மனம் பிறழ்ந்து பலரைத் தாக்கினவன். கண்ணைத் திறந்து தமிழ்மணத்தில் நடந்து வந்த விஷயத்தைப் பார்த்தால் புரியும். அவனால் பலர் வலைப்பதிவதையே விட்டு விட்டனர். நானும் அவ்வாறு ஓடிவிடுவேன் என எதிர்ப்பார்த்திருக்கிறான். நான் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இணையாக அவனே நிலைமையை எஸ்கலேட் செய்து கொண்டு போயிருக்கிறான். எனக்கும் வேறு வழி இல்லை. என் பாதுகாப்பை அதிகரித்துக் கொண்டே போக வேண்டியதாயிற்று.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைக்கும் விதமாக அவன் பலரது பதிவுகளுக்கு சென்று டோண்டுவிற்கு பின்னூட்டங்கள் கொடுக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறான். அதைப் பார்த்துத்தான் தமிழ்மணம் மட்டுறுத்தலைக் கொண்டு வந்தது. நல்லதுதானே, இப்போது பாருங்கள், போலி டோண்டு இங்கு அடங்கினானா இல்லையா. அதுதானே வேண்டியது.
இப்போது உங்கள் பிரச்சினை என்ன? நான் எதிர்த்துப் போராடியதா? இல்லை என்னுடைய முறையில் தவறா? இரண்டிற்கும் பதில் ஆம் என்றால் நான் ஒன்றும் செய்வதிற்கில்லை. எனக்கு வந்த பிரச்சினையை என் முறையில் தீர்த்துக் கொண்டேன். என்னைப் பொருத்தவரை வழிப்போக்கன் உங்களிடம் எவ்வளவு கூற முடியுமோ அவ்வளவு கூறியாகி விட்டது.
இன்னொரு விஷயம். இதனாலெல்லாம் நான் பதிவு போடுவது நின்று விடாது. அது பாட்டுக்கு அது நடந்து கொண்டிருக்கும். பிரச்சினை தலை விரித்து ஆடிக் கொண்டிருந்த காலத்திலேயே நான் பல விஷயங்களைப் பற்றி பதிவுகள் போட்டு வந்தவன். இனிமேலும் அவ்வாறு செய்யப் போகிறவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mathy,
Now let me be frank. I don't understand your insistence on getting my mail exchange with the blogger people. From the tone of your letter I gather that you consider my utterances in this matter as bluff. It is for that reason that I told you about having copied the mail exchanges to Kasi.
Now let me sum up.
1. I found that writing to blogger is not of much use given the antics of that deranged fellow.
2. You talked something about the Google people but now it seems that you confused Google with bloggers.
3. My mail exchanges with blogger have also been copied to some other bloggers who have been targeted by Poli Dondu. They had also reacted in their own manner and in the process this exchange contains a lot of sensitive information. The exchange of such comments are all contained in one string of gmail exchanges. Hence my reluctance to share them with you. It will not be fair to expose them in this manner.
4. Hence I am not willing to share them with you either in public or in private.
5. If in the bargain you come to the conclusion that I am just inventing my email exchanges, you are free to do so and can even express this in this post. I will not reject the comment.
Regards,
Dondu N.Raghavan
சந்தோஷ் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/02/39.html
சந்தோஷ் அவர்களே, உங்களைக் கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். "சொல்" என்று வரும் இடங்களிலெல்லாம் "செல்" என்று போட்டு படுத்துகிறீகளே. இது நியாயமா? ரொம்ப நாளாகவே உங்களிடம் கவனித்ததுதான் இது.
உதாரணங்கள்:
1. 0 பேர் கருத்து செல்லி இருக்காங்க நீங்க சென்னிங்களா?
2. தனிமனித தாக்குதல் அப்படின்னு செல்லி ஒரு பெரிய காமெடி பண்ணி இருக்கிங்க பாருங்க.
3. அய்யா சாக்கடைன்னு தெரிஞ்சா ஒண்ணு இறங்க சுத்தம் செய்யணும் இல்லாட்டி சுத்தம் செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட செல்லி சுத்தம் செய்ய செல்லணும்
4. அந்த ஆளு யாருன்னு யார்கிட்டேயும் செல்ல மாட்டிங்க. மாட்ரேஷன் பண்ணாதவங்க கிட்ட செல்ல மாட்டிங்க சைபர் போலீஸ்ல செல்ல மாட்டிங்க அப்பறம் எங்க எப்படி யார் கிட்ட செல்ல போறிங்க. அய்யா எனக்கு நல்லா நியபகம் இருக்கு அய்யா ஒரு முறை உங்க பதிவுல நீங்க என்ன ஜாதி அப்படின்னு பெருமையா செல்லி அதுல நான் பெருமை படுகிறேன்டா உங்களால என்னடா பண்ணமுடியும் அப்படின்னு ஏகத்தாளமா கேட்டு இருக்கிங்க பாத்திங்களா அன்னிக்கி விட்டவன் தான்யா உங்க பக்கத்துக்கு வருவதற்கு. ஆனா உங்க பதிவுகளில் ஜாதி துவேஷம் இல்லை அப்படின்னு இப்பவும் நீங்க சென்னிங்கன்னா...
உதாரணங்கள் போதும் என்று நினைக்கிறேன். சொல்லி என்று எழுதி செல்லிக்கு ஒரு கால் போட உங்களுக்கு கை வரவில்லையே.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை எனது தனிப்பதிவிலும் இடுகிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment