11/15/2007

இறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை

மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள். அதற்கு முந்தைய தினம் அபிமன்யு சக்ர வியூகத்தில் சென்று அற்புதமாகச் செயல்பட்டான் ஆனால் முடிவில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். அடுத்த நாளாகிய இன்று மாலை சொல்லி வைத்து அருச்சுனன் ஜயத்ரதனை கொன்றான். அதில் மாயோன் பார்த்தசாரதி தனது சக்கரத்தால் சூரியனையே மறைக்கச் செய்து, ஜயதரதனை அஜாக்கிரதையாக இருக்க வைத்து அருச்சுனன் மூலம் அவன் தலையைக் கொய்வித்தான். அது இப்பதிவின் விஷயம் அல்ல. அக்கதை இன்னொரு சமயம்.

முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்து விட யோசித்து கொண்டிருக்கிறார்.

இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.

பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'அஸ்வத்தாமன் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். அதுவும் இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.

இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.

அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.

இது எனக்கு வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்களைக் கூறியது. ஒரேயடியாக கடுமையான விரதங்களைக் மேற்கொள்ளவும் வேண்டாம், அவை பங்கப்பட்டால் தேவைக்கு அதிகமாக கெட்டப் பெயரையும் சுமக்க வேண்டாம். நாம் இயல்பாக இருப்பது போல இருப்பதே நலம். யுதிஷ்டிரன் எல்லாம் ஒரே போர். அப்படியெல்லாம் இருந்தால் இவன் ரொம்ப நல்லவண்டா என்று வடிவேலு பெற்ற பெயரைப் பெறுவதோடு உதையும் வாங்க வேண்டியதுதான். என்ன கூறுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

28 comments:

Anonymous said...

டோண்டு, நீ தருமன் என்று சொல்ல வருகிறாயா ? உன்னை மாதிரியே சிரிச்சிட்டு போய்விடுகிறேன்

மடிப்பாக்கம்

dondu(#11168674346665545885) said...

தருமனா, நானா? நோ சான்ஸ்.

டோண்டு ராகவன்

Pulliraja said...

டோண்டு சார்!
நான் தர்மன் தான் ஏத்துகிட்டு கம்மென்னு இருக்கவேண்டியதுதானே!.
இல்லாட்டி துச்சாதனனா எனக் கேக்கப்போறாங்க. உங்க பார்வையும் கொஞ்சம் திருட்டுத்தனமா இருந்து தொலைக்குதே!!!

புள்ளிராஜா

Anonymous said...

டோண்டு தருமன் இல்லை. நல்ல பருமன். கோச்சுகாதீங்க டோண்டு சார் :-))

Anonymous said...

காசி பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும் என்று குத்தி காண்பிக்கக்கூட யுதிஷ்டிரனை கேவலப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

யுதிஷ்டிரன் ரசிகர் மன்றம்
அஸ்தினாபுரம் கிளை கழகம்
பாண்டவர் பூமி

dondu(#11168674346665545885) said...

//நான் தர்மன் தான் ஏத்துகிட்டு கம்மென்னு இருக்கவேண்டியதுதானே!.
இல்லாட்டி துச்சாதனனா எனக் கேக்கப்போறாங்க. உங்க பார்வையும் கொஞ்சம் திருட்டுத்தனமா இருந்து தொலைக்குதே!!!//
இந்த துச்சாசனன் இருக்கிறானே, அவன் ஒரு அசடு. தன்னளவில் பெரிய வீரன் அவன். வியாசரே அவன் வீரத்தைப் புகழ்கிறார். போயும் போயும் இரண்டாம் கட்ட தலைவனாகவே இருந்து நாட்களை முடித்து கொண்டவன் அவன். அவனை மாதிரி யாரும் இருக்கக் கூடாது.

மேலும் இது என்ன கேள்வி? சரி, நான் இதில் யாராவதாகவாவது இருக்க வேண்டுமென்றால் என்ன சொல்லலாம்?

இதையெல்லாம் அப்சர்வ் செய்து எழுதியதால் நான் வியாசராக வேண்டுமானால் இருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நடராஜ்,

:))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

உதிஷ்டிரன் ரசிகர் மன்றம்,

யுதிஷ்டிரனை இங்கு நான் குறை கூறவில்லை. அவன் சீற வேண்டிய காலங்களில் சீறவில்லை. உண்மையை மாடிஃபை செய்ய வேண்டிய காலங்களில் எல்லாம் பேசாமலேயே இருந்தான்.

கடைசியில் சொன்ன பொய் கூட வேறு வழியில்லை. அதை அவன் சொல்லாது விட்டிருந்தால் துரோணர் பிரும்மாஸ்திரம் விட்டிருப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

காசியை யுதிஷ்டிரனோடு ஒப்பிட்டதற்கு வன்மையான கண்டனங்களை மீண்டும் பதிகிறோம்.

// யுதிஷ்டிரனை இங்கு நான் குறை கூறவில்லை. அவன் சீற வேண்டிய காலங்களில் சீறவில்லை. உண்மையை மாடிஃபை செய்ய வேண்டிய காலங்களில் எல்லாம் பேசாமலேயே இருந்தான். //

அது மாதிரி ஒரு தோற்றம் வரும்படி செய்ததுதான் அவன் திறமை. உண்மையில் யுதிஷ்டிரன் மேல் தப்பு இருந்தது. தாய ஆட்டம் ஆடுவதாக முடிவு செய்தது குற்றம். நெஞ்சில் உரமும் நேர்மை திறமும் இருந்தால் அதை ஒப்புக்கொண்டிருப்பான். ஆனால் நல்ல பேருக்கு ஆசைப்பட்டு மேலும் மேலும் தவறுகளாக செய்தான். யுதிஷ்டிரனின் உண்மையான சகுனி புத்தியோ திட்டம் போட்டு அமைதியாக இருந்தது. அதன் மூலம் உங்களை போன்ற பெரும்பாலானோர் சந்தேகத்தின் பேரிலும் அவன் யுதிஷ்டிரன் என்ற நம்பிக்கையிலும் அவனை நம்பும்படி ஆனது.

// கடைசியில் சொன்ன பொய் கூட வேறு வழியில்லை. அதை அவன் சொல்லாது விட்டிருந்தால் துரோணர் பிரும்மாஸ்திரம் விட்டிருப்பார். //

பாவம் நீங்கள்தான் துரோணர் ஆகிவிட்டீர்கள். உங்களை சிரச்சேதம் செய்து முண்டமே என்று விளித்துமா இன்னும் யுதிஷ்டிரன் பக்க நியாயம் பேசுகிறீர்கள். உங்களுக்கு பகவான் கிருஷ்ணன் நல்லருள் பாலிக்கட்டும்.

இவண்,
திரௌபதி கணவர்கள் கூட்டமைப்பு
அரக்கு மாளிகை குறுக்கு சந்து
இந்திரப்ரஸ்தம்
பாண்டவர் பூமி

dondu(#11168674346665545885) said...

//காசியை யுதிஷ்டிரனோடு ஒப்பிட்டதற்கு வன்மையான கண்டனங்களை மீண்டும் பதிகிறோம்.//
நான் காசி அவர்களை யாருடனும் ஒப்பிடவில்லை. இப்பதிவில் அவரைப் பற்றி பேச்சே இல்லை. ஆகவே உங்கள் கண்டனங்கள் ஏற்க இயலாது.

//தாய ஆட்டம் ஆடுவதாக முடிவு செய்தது குற்றம்.//
இது பற்றி நான் இன்னொரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன். "யுதிஷ்ட்ரர் சூதாடியதும் அவர் செய்த ஒரு பிரதிக்ஞை காரணமே என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள்? குல நாசம் ஏற்படப் போகிறது என்று தௌம்ய முனிவர் கூறிவைக்க, உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறது". பார்க்க: http://dondu.blogspot.com/2007/11/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்,

நிகழ்காலத்தில், பெரிய தாடிக்காரரை சகுனி என்று வைத்து பார்த்தால் ,துரியோதனன் அண்ணாவா,மஞ்ச துண்டா?

dondu(#11168674346665545885) said...

பெரியாரை எப்படி சகுனியுடன் ஒப்பிட முடியும்? பீஷ்மருடன் வேண்டுமானாலும் ஒப்பிடலாம்.

சகுனி என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. அவனைப் பற்றியே பல பதிவுகள் போடலாம். அப்படிப்பட்ட சுவாரசியமான கேரக்டர் அவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சிறு திருத்தம். அசுவத்தாமன் என்ற பெயருடன் யானை already இல்லை. ஒரு யானையை செய்து select அசுவத்தாமன் என்று நாமகரணம் செய்து (as per some naming rules and procedures) பிறகு கொன்றார்கள்

Anonymous said...

பெரியார் பீஷ்மரா?!! கடவுளே!!

Anonymous said...

டோண்டு சார்,

தருமன் தான் பொய் சொல்லவில்லையே! இறந்தது அசுவத்தாமன் என்னும் யானை என்று தானே சொல்கிறான். அப்புறம் எப்படி அது பொய்யாகும்??

லக்கிலுக்

dondu(#11168674346665545885) said...

அஸ்வத்தாமன் என்னும் பெயரில் யானை இருந்ததாகவும் அதைத் தேடிச் சென்று பீமன் கொன்றான் என்றுதான் நான் படித்திருக்கிறேன்.

பெரியார் பீஷ்மர் என்றது அவர் தி.க.காரார்கள் பார்வையில் என்றவாறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறத//

அப்படின்னா அஞ்ஞாத வாசம் முடிஞ்சவுடன 'ஊசி முனை நிலம் கூட கொடுக்க முடியாது'ன்னு சொன்ன துரியோதனன் பேச்ச கேட்டுட்டு பேசாம போக வேண்டிதான. எதுக்கு போர் தொடுக்கனும்? அப்படி போர் தொடுத்ததனாலதான உறவினர்கள் எல்லாம் இறந்து போனாங்க...

Anonymous said...

//பெரியாரை எப்படி சகுனியுடன் ஒப்பிட முடியும்? பீஷ்மருடன் வேண்டுமானாலும் ஒப்பிடலாம்//

அய்யோ அப்போ அண்ணா யுதிஷ்ட்ரன்,மஞ்ச துண்டு அர்ஜுனனா?அப்ப மானமிகு?

dondu(#11168674346665545885) said...

//அய்யோ அப்போ அண்ணா யுதிஷ்ட்ரன்,மஞ்ச துண்டு அர்ஜுனனா?அப்ப மானமிகு?//
பம்மல் கே சம்பந்த முதலியார் அவர்களின் குரலில்: இத்தப்பாரு நைனா, புராண ஒப்பீடுகளையெல்லாம் கேட்டு அனுபவிக்கணும். ரொம்ப விளக்கம் எல்லாம் கேக்கக் கூடாது, சர்யா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அப்படின்னா அஞ்ஞாத வாசம் முடிஞ்சவுடன 'ஊசி முனை நிலம் கூட கொடுக்க முடியாது'ன்னு சொன்ன துரியோதனன் பேச்ச கேட்டுட்டு பேசாம போக வேண்டிதான. எதுக்கு போர் தொடுக்கனும்?//
இப்படி ஒரு ஆசையா? 13 வருஷமா யுதிஷ்டிரர் பண்ண இந்த முட்டாள்தனத்தை சொல்லிச் சொல்லிக்காட்டியே பீமனும் துரௌபதியும் அவரை டரியல் ஆக்கினாங்க. இன்னும் ஒரு தபா அத்தச் செய்வாருன்னு நினைக்கிறீங்க?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///தருமன் தான் பொய் சொல்லவில்லையே! இறந்தது அசுவத்தாமன் என்னும் யானை என்று தானே சொல்கிறான். அப்புறம் எப்படி அது பொய்யாகும்??///

அதானே ?

ஒரிஜினல் செந்தழல் ரவி...(இன்னும் சிறிது நேரத்தில் மெயில் காண்பீர், இப்போது வெளியிடும்)

Aani Pidunganum said...

//சகுனி என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. அவனைப் பற்றியே பல பதிவுகள் போடலாம். அப்படிப்பட்ட சுவாரசியமான கேரக்டர் அவன்.
//

awaiting for this...

dondu(#11168674346665545885) said...

//தருமன் தான் பொய் சொல்லவில்லையே! இறந்தது அசுவத்தாமன் என்னும் யானை என்று தானே சொல்கிறான். அப்புறம் எப்படி அது பொய்யாகும்??//
சுவாரசியமானக் கேள்வி. இந்த காண்டக்ஸ்டில் அது பொய்யே. காரணம் அஸ்வத்தாமா குஞ்சரஹ ஹதஹ என்றிருக்க வேண்டிய முறையை அஸ்வத்தாமா ஹதஹ என்று முதலில் கூறிவிட்டு சிறிது இடைவெளி விட்டு பிறகு குஞ்சரஹ எனக் கூறுவது பொய்யைவிடக் கொடுமையே. இது பாதி உண்மை மட்டுமே. அதுவும் மீதி உண்மையைக் கூறப் புகுந்த போது பாஞ்சஜன்ய ஓசையால் அதை மறைப்பது என்பதும் நிலையை மேலும் மோசமாக்குகிறது.

ராமாயணத்தில் அனுமனும் இவ்வாறு வார்த்தை முறையை மாற்றுகிறான். ரகுநந்தனைடம் "கண்டேன் சீதையை" என்று பெருமையுடன் கூறுகிறான். "சீதையைக் கண்டேன்" என்ற வழமையான முறைமையை கையாண்டிருந்தால் ராமரால் சஸ்பென்ஸ் தாங்கியிருக்க முடியாதாம் என்று அழகாக விளக்கம் கூறுவர் பலர் இதற்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//..பாதி உண்மை மட்டுமே...
கூறுவது பொய்யைவிடக் கொடுமை..//

appana naan nallavana?

-arasiyalvathi

Anonymous said...

Ayya முக்கூரின் 'குறையொன்றுமில்லை' ஆறாம் அத்யாயத்தில் இது பற்றி தெளிவாக உள்ளது ,
- shivatma

Anonymous said...

Ayya
Yudishtra's chariot flying in air is an allegory,i have read.
He is in a plane of consiousness higher than normal human beings by always sticking to the truth.When he uttered that lie(tutored by Krishna), he "bites the dust".
Yudishtar is a kshatriya and because of this he was forced to accept the dice game challegnge thrown on him.it is kingly dharma to accept challenges.Yudishtra compared the war to acquire land to "dogs fighting over a piece of meat in the streets"

I think Dronacharya started using very powerful weapons(even brahmastram?) on normal soldiers and killed millions.To stop this carnage,Krishna devised this plan.Krishna knew that the only way to defeat Dronar was to make him put down his arms(like Bhishmar).Dronar was forced to behave in this adharmic manner because of duryodhana's constant provocation that he is secretly siding with pandavas because of his pasam to them.When Arjuna went after Jayadrathan, Drona was the first major warrior he had to confront.Krishna quietly advised Arjuna that it is impossible to defeat Dronar and so Arjuna pleaded with Dronar to let him go.Dronar agreeed and Krishna drove to chariot in circumbulatory manner around Dronar as a mark of respect and thanks.

The problem with fighting against God(Krishna) is that you have to be
another God like to defeat Him!if you have done a small bit of adharmam, he'll keep on using it against us till He destroys us.But,if you become God like, then you'll never end up fighting against Him!

Raja Harishchandra suffered more than Pandavas in his steadfastness to Truth and even Lord Rama suffered equally.

dondu(#11168674346665545885) said...

//Yudishtar is a kshatriya and because of this he was forced to accept the dice game challegnge thrown on him.it is kingly dharma to accept challenges//.

ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை. துரௌபதி வஸ்திராஹரணத்துக்கு பிறகு திருதிரார்ஷ்ட்ரன் அவர்கள் தோற்றதையெல்லாம் பாண்டவர்களுக்கு திருப்பித் தருகிறான்.

பிறகு மறுபடியும் யுதிஷ்டிரனை சூதுக்கு அழைக்கிறார்கள். அரசனான யுதிஷ்டிரன் இப்போது செய்திருக்க வேண்டியவை:

1. சூது ஆட மறுத்திருக்க வேண்டும்.
2. அப்படியே ஆடியிருந்தாலும் சகுனியுடன் ஆட ஒத்து கொண்டிருக்கக் கூடாது. துரியோதனனையே ஆடச் செய்திருக்க வேண்டும்.
3. பந்தயப் பொருளை க்ளியராகப் பேசியிருக்க வேண்டும். அதாவது எல்லா வனவாசம் மற்றும் அஞ்ஞாதவாசம் முடிந்த பிறகு ராஜ்ஜியத்தை ஒப்படைப்பதைப் பற்றியும் தெளிவு பெற்று கொண்டிருக்க வேண்டும்.
4. எதிராளி அழுகினி ஆட்டம் ஆடுபவனாதலால் இத்தனையும் செய்திருக்க வேண்டும்.

யுதிஷ்டிரனின் பலவீனமே தன்னை சூதில் சிறந்தவனாக நினைத்து கொண்டதேயன்றி வேறு ஒன்றும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழில் வில்லிபுத்துராரின் பாரதத்தில் (வில்லி பாரதம் என்றே அழைக்கப்படுகிறது!) இந்த கட்டம் ரொம்ப அழகாக கையாளப்பட்டு இருக்கிறது:

"அத்தனே, அடுவல்லாண்மை அஸ்வத்தாமா எனும் மெத்த வாரணத்திற்கு, ஐயகோ, மாருதி சிங்கமானான்" என்று யுதிஷ்டிரர் சொல்வதாக அமைத்திருக்கிறார், வில்லிபுத்தூர் ஆழ்வார்!

"சமீபத்தில்" 1979ல் புலவர் கீரன் சொல்லிக் கேட்டது இன்று நடந்தது போல் நினைவிற்கு வருகிறது!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது