என்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல், ஆகவே ஸ்டாரே வேண்டாம் என்னும் முடிவுக்கு தமிழ்மணம் வந்து விட்டதா என்ன? இந்த வாரம் ஸ்டாரைக் காணோமே?
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது போல நம்ம பாலா மொத்தம் 33 பதிவுகளைப் போட்டு தாக்க எல்லோரும் திக்குமுக்காடி போய் விட்டனர் என நினைக்கிறேன். ஆகவே சற்று ஓய்வு எடுக்க தமிழ்மணம் எண்ணியிருந்தால் அது புரிந்து கொள்ளத் தக்கதே.
அதிலும் தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" போல் வாசிக்கவும்:)) அவரது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33!) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது :)
அடுத்து வருபவருக்கு சற்று கடினமான வேலை காத்திருக்கிறது என்பதுதான் நிஜம்.
மனிதர் எல்லாவற்றையும் தொட்டுள்ளார். அசைவ ஜோக்குகள் உட்பட!!!! லிஸ்டைப் பார்க்கவும். ரொம்பவும் தயார் நிலையில் இருந்து வந்திருக்கிறார்.
இங்கு எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
ஒரு எழுபது வயது பிரம்மச்சாரி பெரிசு ஒன்று கல்யாணம் செய்து கொண்டாராம். தான் மணக்கப் போகும் பெண்ணிடம் தான் நிறைய சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினாராம். முதலிரவுக்கு அடுத்த நாள் அப்பெண் களைப்புடன் வந்து தன் தோழியிடம் "அவர் ஏதோ காசு சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினார் என எண்ணினேன்" என்று பெருமூச்சு விட்டாளாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னால் (19.44 மணிக்கு) சேர்க்கப்பட்டது:
நட்சத்திர பதிவர் போட்டிருக்கிறார்கள். பிரதீப் என்பவர். ஆனால் இன்னும் கணக்கைத் துவக்கவில்லைப் போல.
இருப்பினும் பாலாவின் நட்சத்திர வாரத்தின் விமரிசனமாகவே இப்பதிவும் தொடரும்.
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
17 hours ago

2 comments:
ராகவன் சார்,
//ஒரு எழுபது வயது பிரம்மச்சாரி பெரிசு ஒன்று கல்யாணம் செய்து கொண்டாராம். தான் மணக்கப் போகும் பெண்ணிடம் தான் நிறைய சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினாராம். முதலிரவுக்கு அடுத்த நாள் அப்பெண் களைப்புடன் வந்து தன் தோழியிடம் "அவர் ஏதோ காசு சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினார் என எண்ணினேன்" என்று பெருமூச்சு விட்டாளாம்.
//
உங்களுக்குன்னு ஜோக் கிடைக்குது பாருங்க !!!!
எனக்கும் ஒரு பழமொழி ஞாபகம் வருது ! சொல்லவா ?
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம் :)
அப்புறம் உங்க ஜோக்கில யாரு பிரம்மச்சாரி, யாரு மணப்பெண் ?? ;-)
எ.அ.பாலா
//பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம் :)//
கிழவன் இல்லை, இளைஞன்.
//அப்புறம் உங்க ஜோக்கில யாரு பிரம்மச்சாரி, யாரு மணப்பெண் ?? ;-)//
பம்மல் கே சம்பந்தம் மற்றும் டோண்டு ராகவன் சொன்ன மாதிரி பழமொழி/ஜோக் எல்லாம் விளக்கம் கேக்கப்படாது, அனுபவிக்கணும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment