12/12/2007

இடி போன்ற மௌனம்

ஆங்கிலத்தில் கூறுவார்கள், there was thundering silence. பார்வைக்கு வினோதமாகத் தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் சொல்ல வருவது புலப்படும். ஒரு உதாரணம் தருகிறேன்.

ராமநாதனின் வீடு ரயில்வே லைனுக்கு பக்கத்தில். அதில் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு வண்டி செல்லும். அது ஒரு தொழிற்சாலை சைடிங். ஆகவேதான் இவ்வளவு குறைச்சலான போக்குவரத்து. அச்சமயம் ராமநாதனின் வீடே ஆடும். இருந்தாலும் அவனது தூக்கத்துக்கு ஒரு பங்கமும் இல்லை, ஏனெனில் பழகி விட்டது. அன்று ஒரு நாள் மட்டும் ரயில் வரவில்லை. ஒரே நிசப்தம். சரியாக இரவு 12 மணிக்கு ராமநாதன் அலறி புடைத்து எழுந்தான். "அது என்ன சப்தம்" என்று குழறினான். விஷயம் என்னவென்றால் அவனது உடல் அந்த சத்தத்துக்கு பழகி விட்டது. அன்று இல்லாமல் போனதை அவன் உடல் ஏற்றுக் கொள்ளாது அவனை எழுப்பி விட்டு விட்டது.

ராமநாதனை விடுங்கள். அவன் இனிமேல் இப்பதிவுக்கு வரமாட்டான்.

போன வாரம் தமிழ்மண நட்சத்திரம் என்றென்றும் அன்புடன் பாலாவின் ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டிருந்தேன். அப்பதிவு பாலா அவர்களின் வடநாட்டு அனுபவத்தைப் பற்றியது. தனக்கு ஹிந்தி தெரியாததனால் வந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். அதில் ஒரு கேள்வியும் கேட்டார். "இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))

எனது பின்னுட்டம்:
"அதுவும் நீங்க ஹிந்தி பிரச்சார் சபையில் சேர்ந்து (திருவல்லிக்கேணி அக்பர் சாஹேப் தெருவில் உள்ளது) படித்திருந்தால் தேராதூனில் தூள் கிளப்பியிருக்கலாம். ஏனெனில் அங்கு பேசப்படுவது ஹிந்தி பிரச்சார் சபையில் கற்ற இலக்கணசுத்த ஹிந்தி. நான் ஹரித்துவார் ரிஷிகேஷுக்கு சமீபத்தில் 1967-ல் சென்றபோது எனக்கு ஒரு சிரமமும் இல்லை. இந்த அழகுக்கு அங்கு பார்ப்பவரிடம் எல்லாம் மாங்கு மாங்கென்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஹிந்தியிலேயே பேசி அறுத்தேன். :)

தமிழகத்தின் ஒரு முழுதலைமுறையின் எதிர்காலத்தை இவ்வாறுதான் திராவிட இயக்கம் நாசமாக்கியது. அதெல்லாம் செய்து விட்டு, தன் பேரன்களையும் பேத்திகளையும் மட்டும் திருட்டுத்தனமாக ஹிந்தி படிக்க வைத்து மந்திரிகளாக்கி மகிழ்ந்தது.

இதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள். அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.

நான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு"?

என்ன ஆயிற்று நமது பதிவர்களுக்கு? இப்பின்னூட்டத்துக்கு அவர்தம் பதில் இது வரை இடிபோன்ற மௌனமே.

இப்போது கூறுகிறேன். பார்ப்பனரல்லாதவர்கள் வன்கொடுமை செய்தாலும் அதையும் பார்ப்பனீயம் என்று எழுதுவது அபத்தமாக இல்லை? உயர்சாதீயம் என்று சொல்லிவிட்டு போங்கள். அத்துடன் ஒரு குறிப்பிட்ட வன்கொடுமை செய்தவன் என்ன ஜாதி என்பதையும் வேண்டுமானால் எழுதுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

யோசித்துப் பார்த்தால் உங்கள் கருத்து ஒத்துக் கொள்ளக் கூடியதே,எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என்று சொல்வதன் பின்னணி,அந்த அளவிற்கு அவர்கள் ஒரு காலத்தில் செய்த சமூக ஆக்கிரமிப்பாக இருக்கலாம்...

SurveySan said...

மொழங்காலுக்கும் வேற எதுக்கோவும், முடிச்சு போடற மாதிரி இருக்கு?

இந்தி எதிர்ப்புக்கும், சாதீயத்துக்கும் ஏன் 'நாட்' போடறேள்?

ஸ்மூத்தா போயிக்கினு இருக்கோமே? வை கிண்டிங்? :))

dondu(#11168674346665545885) said...

//எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என்று சொல்வதன் பின்னணி,அந்த அளவிற்கு அவர்கள் ஒரு காலத்தில் செய்த சமூக ஆக்கிரமிப்பாக இருக்கலாம்...//
ஒரு காலத்தில் இருந்தது என்று வாதத்துக்கு வைத்து கொண்டாலும் இப்போது நிலைமை என்ன?

இப்போதும் அதைப் படித்து தொங்குவது தாங்கள் செய்யும் வன்கொடுமைகள் தங்கள் ஜாதியினர் பெயரைக் கெடுக்கக்கூடாது அதே சமயம் பார்ப்பனர்கள் மேல் எல்லாவற்றையும் போட வேண்டும் என்னும் பேராசையே தெரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஸ்மூத்தா போயிக்கினு இருக்கோமே? வை கிண்டிங்? :))//
யாருக்கு ஸ்மூத்தா போயிண்டிருக்குன்னு சொல்றேள்?

பாதிக்கப்படாதவர்களுக்கு என்ன, அவாளுக்கு ஸ்மூத்தா போறது. பாதிக்கப்படறவா பேசறா. அவ்வளவுதான்.

பகுத்தறிவு என்றால் எல்லாவற்றிலும் கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இம்மாதிரி பகுத்தறிவு பூர்வமான கேள்விகள்தான் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு"?//

போட்டு தாக்கு

//யாருக்கு ஸ்மூத்தா போயிண்டிருக்குன்னு சொல்றேள்?//

ஸுமுதா போரவநெல்லாம் கோப்ரா பீர் அடிச்சிட்டு கிடக்கான்

Cobra -
So Smooth Anything Goes Down Well

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இது பார்ப்பனீய எதிர்ப்பு தடுப்பு மொக்கைன்னு வச்சிக்கலாமா?

வால்பையன் said...

மெதுவாக அணைந்து கொண்டிருக்கும் சாதி விளக்கை ஏன் மீண்டும் தூண்டி விடுகிறீர்கள், மொழி என்பது ஒரு அறிவு,
அதை தெரிந்து கொள்ள கூடாது என்று சொல்பவரும், லண்டனில் காய்கறி விற்பவன் கூட ஆங்கிலம் பேசுவானாமே என்று கேட்பவரும் ஒன்று,
மற்றபடி ஹிந்தி பர்பநியதுக்கு சொந்தம் என்று சொல்வது கூட பேத்தல் தான் என்று நினைக்கிறேன்,
சர்வேசனை இந்த விதத்தில் நான் ஆமோதிக்கிறேன்,

www.valpaiyan.blogspot.com

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//மெதுவாக அணைந்து கொண்டிருக்கும் சாதி விளக்கை ஏன் மீண்டும் தூண்டி விடுகிறீர்கள்,//

எங்கே அணைந்து கொண்டிருக்கிறது? ஆ ஊ என்றால் பாப்பானைத் திட்டறதுதான் நடக்கறது. மத்த ஜாதிக்காரங்க சந்தோஷமா வேடிக்கை பாக்கறதுதான் நடக்கிறது. அவனவன் கஷ்டத்தை அவனவந்தான் பார்த்துக்கோணும்.

மத்தவங்களுக்கு ஸ்மூத்தா இருந்தாலும் அது அமாதிரி ஸ்மூத்தா இல்லாம இருக்கறவங்களுக்காகதான் இப்பதிவு.

கண்டவனெல்லாம் பேசுவான், அதை நாங்கள் கேட்டுக் கொண்டு அமைதியா இருக்கணுமா?

இப்பதிவு திராவிட கொழுந்துகளுக்கு ஒரு கேள்வி வைக்கிறது. அதன் தலைவர்களின் இரட்டை நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. அதற்கான பதில் இதுவரை இன்னும் வரவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//வால்பையன் said...

மெதுவாக அணைந்து கொண்டிருக்கும் சாதி விளக்கை ஏன் மீண்டும் தூண்டி விடுகிறீர்கள், மொழி என்பது ஒரு அறிவு,
அதை தெரிந்து கொள்ள கூடாது என்று சொல்பவரும், லண்டனில் காய்கறி விற்பவன் கூட ஆங்கிலம் பேசுவானாமே என்று கேட்பவரும் ஒன்று,
மற்றபடி ஹிந்தி பர்பநியதுக்கு சொந்தம் என்று சொல்வது கூட பேத்தல் தான் என்று நினைக்கிறேன்,
சர்வேசனை இந்த விதத்தில் நான் ஆமோதிக்கிறேன்,

www.valpaiyan.blogspot.com

வால்பையன்//

வால்பையன் சார்
இதை கோவி கண்ணன், பாரி அரசு போன்ற பதிவர்களிடம் சொல்லாலமே

சுய அரிப்பை தணித்து கொள்ள அவர்கள் பதிவிடும் பதிவை படிப்பதில்லையா

வீட்டில் தெலுங்கு அல்லது கன்னடா பேசிவிட்டு தமிலு எனக்கு தாய் மொலின்னு கும்மி அடிக்கும் கேடி குண்ணனை பத்தி என்ன சொல்றீங்கோ?

வால்பையன் said...

ஹிந்தியை எதிர்த்த திராவிடர்கள் கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியவர்கள்,
ஒரு மொழி மற்றொரு மொழியை அழிக்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டின் 70% பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்க படுகிறது,
நிற்க,
என்னால் முடியும் என்பது வேறு, நான் தன் பெரியவன் என்பது வேறு,
ஹிந்தி தெரிந்தவர்கள் வட நாட்டில் பிழைக்கலாம், ஆனால் அதை விட சிறந்த மொழி இல்லை என்பது சற்று மிகை இல்லையா?
திராவிடர்களின் அரசியலில் அவர்கள் வெறும் வாயில் கிடைத்த அவல் ஹிந்தி,
இப்போது தண்ணீர்
அதை பற்றியும் கொஞ்சம் பேசுவோமே
வால்பையன்
வால்பையன்

வால்பையன் said...

"இதை கோவி கண்ணன், பாரி அரசு போன்ற பதிவர்களிடம் சொல்லாலமே"
சத்தியமாக அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது!
நான் ஒரு நடு நிலைவதியாக இருக்கவே விரும்பிகிறேன்,
தனி மனித தாக்குதலுக்கு என் எதிர்ப்பு என்றுமே உண்டு,
அவர்களின் url கொடுங்கள், என் கருத்தை அவர்களுக்கு சொல்கிறேன்

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//ஆனால் அதை விட சிறந்த மொழி இல்லை என்பது சற்று மிகை இல்லையா?//
அப்படி யாரும் சொல்லவில்லையே. 1965 காலக்கட்டத்தில் நடந்தது, இப்போது நடப்பது, எங்கு சாதிப் பிரச்சினை வந்தாலும் பார்ப்பனர்களை திட்டுவது ஆகிய விஷயங்களை எல்லாம் கோத்து எழுதப்பட்டது இப்பதிவு.

பகுத்தறிவை அவ்வளவு போற்றும் திராவிடக் கொழுந்துகளை கேள்வி கேட்டேன். அவ்வளவே.

மற்றப்படி ஹிந்தி படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அவர்களின் url கொடுங்கள், என் கருத்தை அவர்களுக்கு சொல்கிறேன்//
தேட வேண்டிய அவசியமே இல்லை. அவை அவ்வப்போது பார்வைக்கு வரும், அப்போது கருத்து கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவிஷா said...

அவர்கள் தோற்றுப்போனவர்கள் அல்லது தோற்பவர்கள் (loosers)! அவர்களுக்காக நம் நேரத்தை ஒதுக்குவதே அவர்களுக்கு ஒருவகையில் வெற்றிதான்.

இருந்தாலும், நீங்கள் சொல்லும் அந்த "ஹிந்தி எதிர்ப்பு" கும்பலின் வெறியை கண்ணால் பார்க்கும் அவலம் எனக்கு 80'களில் ஏற்பட்டது (அதே நங்கநல்லூரில் தான்)! எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களின் மேல் பழி போடும் கேவலம் அவர்களுக்கு கை வந்த கலைதான்! Big Time Loosers!

பாவம் உங்களுக்குத்தான் கஷ்டம், அந்த "மூஞ்சிகளை" அவ்வப்பொழுது பார்த்துதொலைக்க நேரிடும் :-(

Anonymous said...

மூலத் தமிழில் இருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என தமிழ்மண்ணில் இருந்து மண்ணும் மக்களும் பிரிந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல இப்போது தமிழுக்கும் தமிழ்னாட்டுக்கும் தொல்லை கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களின் குரலில் நியாயமே இல்லை என நினைக்க முடிகிறதா?

புள்ளிராஜா

Anonymous said...

டோண்டு சார்,

உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதிலும், இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கின்றேன்.

தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு. ஹிந்தி படிக்காதே, ஹிந்தி பேசுபவனை தரக்குறைவாகப் பேசு, ஹிந்தியை தார் பூசி அழி என்ற தலைவர்களின் சொல் கேட்டு ஆட்டுமந்தை போல் சென்ற/செல்லும் படித்த கூட்டங்களைக் கண்டால் வருத்தமாக இருக்கிறது.

இந்தத் தலைவர்களின் சொல்படி தார் பூசவேண்டுமென்றால் முதலில் தமிழீனத்தலைவரின் வாரிசுகளின் வாயில்தான் தார் ஊற்றவேண்டும். இந்தத் தலைவர் ஒருமுறை "என் மகள் கனிமொழி தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று பெருமையாகக் கூறினார். இதையும் வாயில் எதையோ வைத்துக் கொண்ட குரங்கு மாதிரி கேட்டு மகிழ்ந்தது ஒரு கூட்டம். இதைச் சொன்னபோதே தலைவரை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தியிருக்க வேண்டியதுதானே? அதற்கெல்லாம் இவர்களுக்கு தைரியம் கிடையாது.

இந்த ஆட்டு மந்தைகளுக்கு (ஆடுகள் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்) தெரிந்ததெல்லாம் பார்ப்பான், பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு போன்ற வீர தீர விளையாட்டுக்கள்.

இதை விட கொடுமை, தமிழை உரம் போட்டு வளர்க்கப் போவதாக ஒரு கும்பல் கிளம்பி தமிழகத்தில் நாயடி பேயடி வாங்கியது. இந்தக் கும்பலில் இருக்கும் ஒரு தலைவரின் பேரக் குழந்தைகள் தமிழ் என்றால் மருந்துக்கும் தெரியாத ஒரு பள்ளியில் படிக்கின்றன. அவர்களின் பெயரும் தமிழ் மொழிப் பெயர்களல்ல. சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை "தேவ பாடை" என்று அழைக்கும் இந்தக் காட்டு மிராண்டிக் கும்பல்கள் இந்த சமஸ்கிருதப் பெயர்களை தார் விட்டு அழிக்கவா போகிறார்கள்? இல்லை பா(வா)டை கட்டிக்கொள்ளப்போகிறார்களா?

Anonymous said...

""இல்லை பா(வா)டை கட்டிக்கொள்ளப்போகிறார்களா?""

அதெல்லாம் செய்ய மாட்டர்கள். நன்றாக திட்டுவார்கள். ஆரியம், திராவிடம், ஆடு மேய்க்க வந்தவன், கைபர் போலன், 2000 வருடம், வருணாசிரமம், பூணூல், குடுமி என்றுதான் பேசிக்கொண்டிருப்பார்கள். இதையும் கேட்டுகொண்டு சில பிரியாணி பொட்டல கூட்டங்கள் லாரியில் மந்தை போன்று வாழ்க ஒழிக என்று கூப்பாடு போட்டுக்கொண்டு போகும். அவர்கள் தலைவரோ அதை ரசித்தபடி தன் குடும்பத்துக்கும் அடுத்த 4 தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துக்கொண்டிருப்பார்!! இதையும் ஆதரித்து திராவிட கொழுந்துகள் இணையத்தில் பேசிக்கொண்டிருக்கும்!!!

Unknown said...

//இந்த ஆட்டு மந்தைகளுக்கு (ஆடுகள் என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்) தெரிந்ததெல்லாம் பார்ப்பான், பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு போன்ற வீர தீர விளையாட்டுக்கள்.
//

Anaani avargaleh,
well said ,
Why Pillaiyar silai odaikaradhu, ramar (ummachi) kutham sollaradhu, thanni (somabaanam) adipaarnu sollaradhu ellam vitutael. sonna muzhusa sollanum, mukiyama idhuellam avaa pannuvah. Pls note this point.

Anonymous said...

ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ?

ஏன் கிருஷ்ணர் சிலைகளை உடைப்பதில்லை ? கிருஷ்ணரைத் திட்டுவதில்லை இந்த போலி சமத்துவவாதிகள் ?

dondu(#11168674346665545885) said...

//ஏன் ராமனை மட்டும் போட்டுத் தாக்குகிறார்கள் ?//
ராமர் ஏகபத்தினி விரதம் கடைபிடித்தவர். ஆணாதிக்கம் மிகுந்த உலகில் அது அப்போதும் இப்போதும் எப்போதுமே கடினமானக் கோட்பாடுதான். அதை அனாயாசமாக கடைபிடித்தான் என் அப்பன் மரியாதை புருஷோத்தமன் ராமன்.

அதற்காக கிருஷ்ணரை குறைவாக மதிப்பிட முடியுமா என்ன? கீதாசார்யன் அவன்.

இருப்பினும் ராமன் கிருஷ்ணன் ஆகிய இருவரில் நம்ம வாத்தியார் கிருஷ்ணர் ஒரு ஜாலி பேர்வழி. மச்சக்காரர் என்று பலரால் பொறாமைக்குள்ளானவர். ஆனால் ராமன் அப்படியில்லை. அவனை மாதிரி இருத்தல் மிகக் கடினம். நம்மால் முடியாததை இன்னொருவன் அனாயாசமாக செய்து முடிப்பது பொறாமையைத்தானே தூண்டும்?

ஆகவே ராமன் சிலையை உடைக்கின்றனர். கிருஷ்ணனை மனவாடு மாதிரி பார்க்கின்றனர் அறியாமையில் இருப்பவர்கள். அவர்கள்தானே மெஜாரிட்டியில் உள்ளனர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால் தான் நாயக்கர்கள் பெரும்பாலும் போற்றும் கிருஷ்ணர் சிலையை உடைத்தால் தனக்குத் தன் சாதியிலேயே சப்போர்ட் கிடைக்காமல் போகும் என்பதனால் என்று சொல்கிறீர்களா ?

dondu(#11168674346665545885) said...

//ஈ.வே. ரா அவர்கள் ஒரு நாயக்கர் என்பதனால்...//
கண்டிப்பாக இல்லை. பெரியார் அவர்கள் தனது அவ்வப்போதையக் கருத்தில் திடமாக நின்றவர். அவை சரியான கருத்துக்களா இல்லையா என்பது இங்கு பிரச்சினையில்லை. அவரது மன உறுதியையே நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடவுள் மறுப்பு விஷயத்தில் தன் சொந்தத் தந்தையையே எதிர்த்தவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அநியாயம் !

இந்தியா எங்கே போகிறது?

இப்படிக்கு,

tamilhindu@googlegroups.com

Anonymous said...

Dondu said:

//// பெரியார் அவர்கள் தனது அவ்வப்போதையக் கருத்தில் திடமாக நின்றவர்.////

Are you sure?

Do you have any facts supporting that EVR has never changed his ideas?

If you want to tell anything good he has done, tell about the only good deed he did on December 24, 1973.

bala said...

டோண்டு அய்யா,
என்ன சொல்ல வர்றீங்க?எதற்கெடுத்தாலும் பார்ப்பான்,பார்ப்பனீயம் என்று பிரிவினை பேசியே காலம் தள்ளும் பிரியாணி திராவிட குஞ்சுகள் முதலில் மூடர்கள்,பிறகு தான் அயோக்யர்களா?அல்லது முதலில் அயோக்யர்கள்,பிறகு மூடர்களா?

பாலா

dondu(#11168674346665545885) said...

//Are you sure?
Do you have any facts supporting that EVR has never changed his ideas?//
அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என எப்போது கூறினேன்? நான் எழுதியதை நீங்கள் மறுபடியும் படியுங்கள்.

இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளாதிருந்தால்தான் ஆச்சரியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அதெல்லாம் சரி, டோண்டு ஸார்... நாட்டில் இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்க, ஒரு வாரமாய் பதிவே போடாமல் இருந்தால் எப்படி?! :-)

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலையில் போனால் இரவுதான் வரமுடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//// அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளவேயில்லை என எப்போது கூறினேன்? ////

I know the purpose of the words "அவ்வப்போதையக் கருத்தில்" in your sentence.

If somebody say something in public, and do something else in his personal life would you call it as a honesty?

செருப்பால் அடிப்பவனைப் புகழ்வதால்தான் பார்ப்பான்களுக்கு மரியாதையே யாரும் கொடுப்பதில்லை. எல்லா பார்ப்பனர்களும் அப்படி இல்லை. ஆனால், என்.ராம் மாதிரியும் டோண்டு ராகவன் மாதிரியும் இருப்பவர்கள்தான் புகழடைகிறார்கள். சர்க்கஸில் சிங்கத்தை அடக்குபவனை யாருக்கு ஞாபகம் இருக்கும்? கோமாளியைத்தான் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

எல்லாப் புகழும் கோமாளிகளுக்கே !

Anonymous said...

//என்ன செய்வது? நான்கு நாட்களாக துபாஷி வேலை. காலையில் போனால் இரவுதான் வரமுடிகிறது//

romba santhosam. pl maintain that

luckylook

suvanappiriyan said...

டோண்டு சார்,

உங்களின் எல்லாக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதிலும், இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி சுவனப்பிரியன் அவர்களே,

ஹாஜியார் நலமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mangai said...

I have personal experiences of being
'left out 'outside and even in Tamil Nadu(?) becoz of not knowing Hindi

I am planning to write about that.

So I agree with you on this.

dondu(#11168674346665545885) said...

தலைப்பைத் தேடுகிறேன் வலைப்பூவின் இந்த இடுகையில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
பார்க்க: http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_13.html


//உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”//
புரியவில்லையே. சேட்டில் எங்கே இவ்வாறு வருகிறது? ஒரு வேளை இமலாதித்தன் தேவரை குறிப்பிடுகிறீர்களா? அப்படியானால் அது நீங்கள் இல்லையா?

ஓ, நீங்கள் ஆந்தனி அல்லவா? கிறித்துவரான உங்களுக்கு இந்து மதத்தினர் பற்றி ஏன் இந்த ஆவல்? கிறித்துவரிடையேயும் வன்கொடுமை நிலவுவதற்கும் பார்ப்பனர்தான் காரணமா?

கிறித்துவர் இல்லையென்றால் ஏன் இந்த பெயர் முக்காடு?

ஈவேரா ராமசாமி நாயக்கர் பற்றி:
தள்ளாத வயதில் ஒரு சிறு பெண்ணை மணம் செய்தவர் அவருக்கு என்ன சுகம் தந்திருக்க முடியும்? ஒரு வேளை அந்த மனைவி வேறொரு ஆடவரிடம் சுகம் பெற்றுக் கொள்ளலாம் (ஈவேராவே பல பெண்களுக்கு கள்ள புருஷன் வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் என்பதை நினைவில் வைக்கவும்) என்று அவர் சுதந்திரம் தந்து அதையும் வெளிப்படையாக கூறியிருந்தால் நீங்கள் அவரைத்தான் மதிப்பீர்களா அல்லது அந்த மனைவியைத்தான் மதிப்பீர்களா?

கீழ் வெண்மணியில் பல தலித்துகளை எரித்தவர் கோபால கிருஷ்ண நாயுடு என்பதாலேயே ஈவேரா என்னும் பலீஜா நாயுடு அது பற்றிய சொதப்பல் அறிக்கை விட்டு, நாயுடுவின் பெயரை வெளிப்படையாகக் கூறி கண்டிக்க முயலாததற்கு அவரது சுயசாதி அபிமானம்தானே காரணம் என்னும் பகுத்தறிவு கேள்விக்கு உங்கள் பதிலென்ன?

இரட்டைக் குவளை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை எதிர்த்து அவர் எப்போதாவது போராட்ட நடத்தியாக காட்ட முடியுமா? வைக்கம் போராட்டம் கூட அவர் காங்கிரசில் இருந்தபோது அதன் ஒரு உறுப்பினராக அவர் நடத்தியது.

இமலாதித்தனாவது சேட்டை தனது மன்றத்தில் வைக்க ஹரிஹரனிடம் அனுமதி கேட்டார். வேறு இருவருக்கிடையே நடந்த சேட்டை இங்கு பதிவாக்க நீங்கள் யார்? பை தி வே, உங்கள் சாதி என்ன?

எனது இப்பின்னூட்டத்தை எனது இடுகை “இடி போன்ற மௌனம்” என்னும் பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post_12.html

டோண்டு ராகவையங்கார்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது