சமீபத்தில் 1980-ல் ஒரு நாள் சென்னை ஈகா தியேட்டருக்கு சென்றிருந்தேன், அட்வான்ஸ் புக்கிங்கிற்காக. அடுத்த நாள் மாலை காட்சிக்கு புக் செய்து விட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது சென்றபோது ஒரு வாலிபர் என்னிடம் வந்து நான் ஹிந்தி பேசுவேனா என்று உருதுவில் கேட்டார். ஆம் என்று உருதுவிலேயே பதிலளிக்க அவருக்கு ஒரே சந்தோஷம். அவர் பெயர் அப்துல் வஹாப். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு லக்னோவுக்கு வந்திருக்கிறார். அப்படியே போலீஸ் அனுமதி பெற்று தென் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார். அடுத்த நாள் காலை அவர் கிளம்ப வேண்டும் என்று போலீஸில் கூறிவிட்டார்கள் ஏனெனில் சென்னையில் இருப்பதற்கு அவரது அனுமதி அப்போது முடிவடைகிறது. அது தெரியாது அவர் அடுத்த நாள் மாலை ஈகாவில் ஹிந்தி படம் பார்க்க புக் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்த அமிதாப் பச்சனின் படம் அது (கூன் பஸீனா).
டிக்கட்டை கவுண்டரில் கொடுத்து பணம் பெற முயன்றபோது தியேட்டர்காரர்கள் மறுத்து விட்டனர். வேண்டுமானால் புக்கிங் செய்ய வருபவர்களிடம் விற்று கொள்ளுங்கள் என கூறிவிட்டிருக்கின்றனர். அதனால் என்னை உதவி செய்யுமாறு கேட்க நானும் சரி என்றேன். அந்த சாக்கில் தேனினும் இனிய உருது மொழியில் பேச வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஆசையே காரணம். உருது மொழியில் பேசும் வாய்ப்பை இழப்பதே இல்லை என்பதை இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். :))))))))))
சரி என்று இருவரும் கவுண்டர் அருகிலேயே நின்றோம். ஒருவர் வேகமாக வந்தார். அவரிடம் எந்த ஷோவுக்கு அவர் புக் செய்யப் போகிறார் எனக் கேட்க அவர் சொன்ன பதில் எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவரிடம் இந்த டிக்கெட்டை எடுத்துக் கொள்ளும்படி நான் கூற அவர் இரண்டு ஆட்சேபணைகளை வைத்தார். முதலாவதாக அவருக்கு டிக்கெட் செல்லுமா என்ற சந்தேகம், இரண்டாவதாக அவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் தேவைப் பட்டன அதுவும் அருகருகே உள்ள சீட்டுகளில். ஆனால் நான் விடவில்லை. அப்துலின் டிக்கெட்டைக் கையில் வைத்து கொண்டு புதிதாக வந்தவருடன் கவுண்டருக்கு சென்று முதலில் டிக்கெட் செல்லுமா என கேட்டேன். செல்லும் என பதில் வந்ததும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சீட்டுக்கு அருகே உள்ள சீட் காலியாக உள்ளதா எனக் கேட்க அதுவும் இருக்கிறது எனக்கூற அதை புதியவருக்கு ஒதுக்கச் செய்து ஒரு டிக்கட் அவருக்கு தரச் சொன்னேன். இன்னொரு டிக்கெட் அப்துலுடைய டிக்கெட். அவர் அப்துலிடம் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு சென்றார். அப்துலுக்கு ரொம்ப சந்தோஷம்.
என்னுடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தார். நானும் பேசிக்கொண்டே அவருடன் சேன்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். பாகிஸ்தானில் அவர் ஒரு கேரேஜ் வைத்திருக்கிறார். ஒரு சர்தார்ஜி நடத்தும் லஸ்ஸி கடைக்கு அழைத்து சென்றார். லஸ்ஸிக்கு நான் பணம் கொடுக்க முயற்சித்தபோது அவர் என்னை விடவில்லை. பாகிஸ்தானியருக்கே உரித்தான விருந்தோம்பல் அவரிடம் அதிகமாகவே காணப்பட்டது.
நான் ஏற்கனவே சொன்னது போல அவர் அமிதாப்பின் வெறிபிடித்த விசிறி. அவரை இமிடேட் செய்து நடிக்கும் பாகிஸ்தான் நடிகர் ஒருவர் அமீதாப்பின் அருகே கூட வரமுடியாது என்பது அவரது துணிபு. பாகிஸ்தானில் தினசரி வாழ்க்கை பற்றி கேட்டபோது, பாகிஸ்தானில் வாழ்வது நரகம் போல இருக்கிறது என்றார். அவ்வளவு தூரம் ஜியா உல் ஹக் மீது வெறுப்பு. அவர் புட்டோ கட்சி ஆதரவாளர். ஆகவே நான் அதற்கு முந்தைய வருடம் தூக்கிலிடப்பட்ட புட்டோவை பற்றி கேட்டபோது புட்டோ சாஹேப் கொல்லப்பட்டது பாகிஸ்தானின் பெரிய துரதிர்ஷ்டம் எனக் கூறினார். இந்தியாவில் அவருக்கு பிடித்ததே இங்குள்ள ஜனநாயகம் என்றும் கூறினார். பிறகு என்னிடம் பிரியாவிடை பெற்று தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்றார்.
இப்போது அதைப் பற்றி நினைக்கும்போது பல எண்ணங்கள் எனக்குள் எழுகின்றன. நேரில் பார்த்து பேசும்போது அவருக்கும் எனக்கும் இடையே ஒரு வேற்றுமையும் தெரியவில்லை. மேலும், நான் பார்த்த பாகிஸ்தானி சீரியல்கள் தமிழனான எனக்கு அதிகப் பாந்தமாகவே இருந்தன. ஒரு தடவை ஜீ.டி. ரோடில் என்னுடைய காரில் சென்று வாகா பார்டர் வழியாக பாகிஸ்தான் செல்ல ஆசை. முடியுமா என்று பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
17 hours ago
26 comments:
//தேனினும் இனிய உருது மொழியில் பேச//
அட, படிப்பதற்கே எவ்வளவு இனிமையாக இருக்கிறது! "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று எழுதிய பாரதிதான் "சுந்தரத் தெலுங்கு" என்றும் எழுதினான்.
அது இருக்கட்டும், தமிழ் நாட்டில் இன்னொரு மொழியை உயர்த்திப் பேசலாமா? என்ன தைரியம்? சற்று ஒதுங்கி நில்லுங்கள். ஓரு ஜல்லி கூட்டமே தட தட என்று வந்து கொண்டிருக்கிறது!
என்னைப் பொருத்தவரையில் எனது தாய் மொழி தமிழ், ஹிந்தியும் உருதுவும் அவளது இளைய சகோதரிகள். அன்னையின் சகோதரியை ஹிந்தி மற்றும் உருதுவில் mausi (மௌஸி) என்று அழைப்பார்கள். அது maa jaiSi (அன்னைக்கு ச்மமாக) என்பதன் சுருக்கம்.
என் சித்தியும் எனது அன்னையைப் போலவே என் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மத அடிப்படை வாதிகளைத தவிர்த்து பொதுவாக பாகிஸ்தான் தேசத்தவர் நட்பு பாராட்டுபர்களே.
அதுவும் இந்தியாவோ,பாகிஸ்தானோ அல்லாத வெளிநாட்டில்,இரு நாட்டவரும் பொதுவில் ஆசியர்கள்,எனவே எளிதாக ஒத்துப் போவார்கள்...
நானும் பாகிஸ்தானியர்களுடன் பழகியிருக்கிறேன் - இந்தியா அல்லாத நாட்டில் - சாதாரணமாக நட்புறவுடந்தான் இருக்கிறார்கள்.
ஆயினும் பெனாசிர் லண்டன் டைம்ஸ் ஷ்யாமுக்கு அளித்த ஒரு பேட்டியில்,'பொதுவாக பாகிஸ்தானிகள்,இந்தியர்களை விரும்பவதில்லை;யுத்தம் வரும் போன்ற காலங்களில் அது இந்திய ஹிந்துக்கள் மேல் அதீத வெறுப்பாகவும்,இந்திய முஸ்லீம்களின் மேல் சற்றே குறைந்த வெறுப்பாகவும் இருக்கும்' என்று சொல்லியிருந்தார்.
எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை.
This is the problem with indian mind. Immediately love with ohh...pakistani like this.
We lost more than 75000 lifes for pakistani terrorism. All are govt. funded one.
In Geetha, Krishna told that if Abimanyu kill that way, Karna has to kill the sam way.Thats it.
This kind of hard approach, we need now to handle pakistan. Only think what is our national advantage.
India and Pakistan have a love-hate relationship. When it is a question of war, there is no hobnobing with the enemy. But at peace time there should be friendship between people.
My talkin in Urdu helped.
Regards,
Dondu N.Raghavan
பேனசீர் பற்றி கரண் தாப்பர் எழுதியது இதோ. இதை எனக்கு மின்னஞ்சலாக அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு நன்றி.
A warm, understanding and caring person
Karan Thapar, Hindustan Times
December 28, 2007
Benazir was 19 when I first met her. I was the same age. At the time she was vice president of the Oxford Union and I was her counterpart at Cambridge. She had come to our union to propose the motion — 'This house would have sex before marriage'. It was a tongue-in-cheek joke debate but just the sort of thing to spark the union chamber. We were stuffed to the rafters and overflowing.
Halfway though her speech, I leaned across and grabbed the president's bell. I rang it sharply. Benazir stopped and a hush descended on the union's chamber. Rising to my feet, I said: "Madam, I see you are proposing sex before marriage. Would you care to practise what you preach?" The chamber erupted in laughter. Mine was the sort of interruption deliberately designed to produce softer humour.
Very cleverly. Benazir waited for the applause to die down. When it did, she swirled her feet, stared me in the face, removed her glasses, wrinkled her nose and with great aplomb replied, "Certainly, my dear, but not with you!" The laughter was even louder. Her reply had carried the day.
To my mind, that story encapsulates Benazir's sense of timing, her sense of humour and her deft ability to riposte. But there was another side to Benazir — the warm, understanding, caring and deeply human.
Many years later, in '89 when she was the Prime Minister of Pakistan for the first time, my wife was in a coma at a hospital in London with encephalitis. I had just returned from a visit to Pakistan where I had met Benazir. Suddenly, one morning when I visited the hospital, the nurses were all aflutter. There was an enormous bouquet that looked like a tree in Nisha's room. "What's this?" I asked. "It is from the Prime Minister of Pakistan!" one of the nurses blurted out excitedly.
Later that evening, Benazir rang and asked why I hadn't told her about Nisha. I muttered something but she interrupted and said, "Remember Karan, We are friends". For the next 3 weeks as Nisha lay dying in London, Benazir made a point of ringing late at night at least every other day. I never forgot what she repeatedly said: "Karan, you must learn to talk about what you are going through. Believe me, it is the only way of coming to terms with it. I have been through it and I know what I am saying."
Benazir was a supremely confident person. She had a great ability to determine how people saw her. But inside she was a lady who often had deep doubts. She never showed them but they made her human.
She told me about the last moments on the plane in 1986 which was the first time she returned to Pakistan and took the country by storm. She deliberately chose to fly back via Lahore. As she said, I have to make an impact in Lahore If I am going to make an impact in Pakistan. She took a Pakistan International Airline flight from Saudi Arabia to Lahore and sitting in first class, alone she stared out of the window into the clouds and said to herself, in just a couple of hours I will know if I have a future or not.
When the plane landed, she scanned the horizon from the windows dismayed that the airport looked empty and there wasn't a soul in sight. As she told me later, "my heart sank".
When she walked out of the plane, there were three solitary figures at the bottom of the stairs. They were from her party. They looked at her, "Bibi jaan, don't, there are a million people outside but Zia won't let anyone into the airport".
It took her over 19 hours to travel from the airport to the centre of town and in those 19 hours, a new political star was born. She repeated that performance days later in Peshawar, then Quetta and then finally, at her home, Karachi.
By the end of that first week, Pakistan knew its future prime minister would be Benazir Bhutto. It was just a matter of time before she took over.
My last conversation with Benazir was four days ago. Roughly a week before that, I had interviewed the National Security Adviser, MK Narayanan, who had expressed doubts about Benazir's ability to deliver on her promises to India. He pointedly mentioned that in 1988 she had made certain commitments to Rajiv Gandhi, which she had, he claimed, failed to deliver on.
This infuriated Benazir. Within hours of the interview being broadcast, she rang me, upset and angry.
"Why did he say this?" she asked. "If he had questioned my constitutional position caught between the President and army chief, I could have understood, but he didn't. Instead, he questioned my ability to deliver. He seemed to be questioning my integrity."
I tried to assure her. I told her that she was reading too much but she would not listen. "What is worse", Karan, she added, "is that he then went on to mention an incident in 1988 when he claims I made a commitment to Rajiv which I did not deliver on… The truth is that Rajiv made a commitment to me that Rajiv backed out of. But I never spoke about that and I never will. So why are these false allegations being made."
Days later, I mentioned this to G Parthasarthy. In '88, Partha was part of Rajiv's PMO and had visited Islamabad with Rajiv. Years later, Partha was high commissioner to Islamabad. Partha confirmed that what Benazir said was correct and the NSA's scepticism of Benazir was misplaced.
Partha told me that Rajiv had made commitment on Siachen which he had not been able to keep. When I said if he would say this in public and set the record straight, he laughed but declined: "I cant defend Benazir by letting down Rajiv."
Tonight, when Benazir is dead, and so tragically killed, I hope Partha will understand if I make this story public and I hope the NSA will appreciate the reason why I am sharing with the world Benazir's side of the story.
That conversation led to two or three more. I warned her to be careful.
"Don't take silly unnecessary risks," I said. Benazir laughed. It was an infectious little girl laugh.
"Karan, I can't live with fear in my heart. I can't fight terror scared of the terrorist. And if ordinary people have to face up to death, then politicians must be ready to face that situation first."
http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=bd39627c-d48b-4277-9d61-833a963f21feBenazirassassinated_Special&&Headline=A+warm%2c+understanding+and+caring+person
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் பணியிடத்தில் (சவூதி அரேபியா) எங்கள் நிறுவனத்தின் மற்றொரு கிளையிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். சில முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்ளுமுன் என்னை எந்த நாட்டவர் என்று கேட்க நான் இந்தியன் என்று கூற அவர் தன்னை பாகிஸ்தானி என்று கூறினார். நான் அதனால் பாரவாயில்லை நாம் இந்நிறுவன குடும்பத்தின் உறுப்பினர்களே என்று கூறவும், அவர் நிறுவனத்திற்கு வெளியிலும் நாம் சகோதரர்களே என்று கூறினார். எனது தவறான மற்றும் குறுகிய மனப்பான்மையை எண்ணி குறுகிப்போனேன்.
//But at peace time there should be friendship between people//
common. There is no peace time at all with pakistan.
war means not only direct war. proxy war also a war
All times are proxy war. Now, its decreased as compared with earlier. Everyone praising ohh..peace achieved. Greatly mistaken.
At present, pakistan concentration is shifted to afgan border. Major 80,000 troops are in afgan. Thats why kahmir border somehow see some stability.
But future, we do not know
we need a hard determintal approach.
Rangavan,
The whole essay from Karan is on the personal side of Benasir as an individual & warm person......no denials on that.
Incidentally,Shyam,representing London Times,whom I referred & benasir are also from same alma-mater & the subject matter is her opinion on the rivalry between indian & pakistani common man.
To that precise question,she gave that answer.
I remember,I had read the interview in Rediff.com
From India Uncut blog:
30 December, 2007
The Feudal Ms Bhutto
William Dalrymple writes in the Guardian:
[Benazir] Bhutto was no Aung San Suu Kyi. During her first 20-month premiership, astonishingly, she failed to pass a single piece of major legislation. Amnesty International accused her government of having one of the world’s worst records of custodial deaths, killings and torture. [...]
Benazir had a reputation for massive corruption. During her government, the anti-corruption organisation Transparency International named Pakistan one of the three most corrupt countries in the world.
Bhutto and her husband, Asif Zardari, widely known as ‘Mr 10 Per Cent’, faced allegations of plundering the country. Charges were filed in Pakistan, Switzerland, the United Kingdom and the United States to investigate their various bank accounts. [...]
Benazir Bhutto was a courageous, secular and liberal woman. But sadness at the demise of this courageous fighter should not mask the fact that as a pro-Western feudal leader who did little for the poor, she was as much a central part of Pakistan’s problems as the solution to them.
Also, Bhutto did not revoke the Hudood Ordinance during her stints as prime minister, and was alleged to have supported the Taliban. She was also shrill on the subject of relations between India and Pakistan. All her recent stands struck me as nothing more than positions of convenience.
And speaking of feudal, guess who became chairman of the PPP after her will was read out. She’s handed her political party to her 19-year-old son. Heh.
Bhutto’s assassination is certainly a tragedy for Pakistan, but the reason for that is its impact on the political landscape there. They haven’t lost a great leader.
http://indiauncut.com/iublog/article/the-feudal-ms-bhutto/
இது என்ன மீள் பதிவா?
//சமீபத்தில் 1980-ல் ஒரு நாள் சென்னை ஈகா தியேட்டருக்கு சென்றிருந்தேன்//
1980 சமீபமா? நான் அப்ப விரல் சூப்பிக் கொண்டு இருந்ததாய் ஞாபகம் :)
The only generalization that is correct is all generalizations are wrong; including all the common folks of Pakistanis love indians.
If they really love Indians why call muslims from India as Mujahirs, and treat them as lowly "brothers"?
//The only generalization that is correct is all generalizations are wrong;//
இதை நான் வேறு மாதிரி ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்துள்ளேனே. All generalizations are wrong including this generalization.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//1980 சமீபமா?//
சரிதான் என்னுடைய இந்தப் பதிவில் சமீபத்தில் 1954-ல் என்று கூட எழுதியுள்ளேனே. பார்க்க: http://dondu.blogspot.com/2007/10/blog-post_12.html அப்போது உங்கள் தந்தை கூட குழந்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும். :)))) என்ன செய்வது எல்லாமே நேற்றுத்தான் நடந்தது போலத் தோன்றுகின்றனவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//The whole essay from Karan is on the personal side of Benasir as an individual & warm person......no denials on that.//
அதே போல ஜுல்ஃபிகர் அலி புட்டோ சுதந்திரா கட்சி எம்.பி. பிலூ மோடியின் வகுப்புத் தோழர். Zulfy my Friend என்ற தலைப்பில் அவர் புத்தகம் கூட எழுதியிருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களுக்கு உருது மொழி பிடிக்கும்னா, சொல்லிட்டுப் போங்க! அதுக்காக பாகிஸ்தானியரை பிடிக்கும்னு சொல்றது கொஞ்சம் ஓவர்! இங்கே டல்லாஸில், பாக்கி'க்கள் எக்கச்சக்கம்! அவர்கள் கடை வைத்தால், அதில் "Indo" என்று pre-fix வைத்து வியாபாரம் செய்பவர்கள்!! இந்தியா-பாகிஸ்தான் "பாய் பாய்"" என்றெல்லாம் உடாலக்கடி விடுவார்கள்! ஆனால் நாம் இந்து என்று கேள்விப்பட்டார்களே போச்! சில பல அரபு நாட்டு நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டதில், பாகிஸ்தானியர்கள் தாம் religious fanatics ஆக இருப்பதாக தெரியவருகிறது! என்னைப் பொறுத்தவரை
1. அவர்களை இந்திரா காந்தி ஓட ஓட விரட்டியது இன்னும் மறக்கவில்லை
2. Rogue nation என்று 80's & 90's இல் பட்டம் வாங்கிக் கொடுத்ததில் நம்மவர்களுக்கு நிறைய பங்கு உண்டு என்று நம்புகிறார்கள்
3. கார்கில் போரில் அடிவாங்கியது அவமானம் + அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!!
இதெல்லாம் நான் சொல்வது 20's, 30's & 40's இல் இருப்பவர்களின் மன ஓட்டம்! நீங்கள் சொல்லும் ஆசாமிகள் எல்லாம் வழக்கொழிந்து போய் மாமாங்கம் ஆகியிருக்கும்!
\\
//சமீபத்தில் 1980-ல் ஒரு நாள்...//
இது என்ன மீள் பதிவா?
\\
கேள்வி சரியில்லியே. தம்பி ஊருக்கு புதுசா ?
//பாகிஸ்தானியரை பிடிக்கும்னு சொல்றது கொஞ்சம் ஓவர்!//
உனக்கு பிடிக்காது?
சூப்பர் பாகிஸ்தான் பிஃகர் வந்தா நீ பாக்க மாட்ட. நீ சொல்றது தான்யா ஓவரு.
// உனக்கு பிடிக்காது?
சூப்பர் பாகிஸ்தான் பிஃகர் வந்தா நீ பாக்க மாட்ட. நீ சொல்றது தான்யா ஓவரு.//
அது சரி! உண்மையை சொன்னா பொத்துக்குதோ? They are religious fanatics! இப்போ என்ன சொல்றே? தைரியம் இருந்தால் திரையை விட்டு வெளியே வா!
"என்னைப் பொருத்தவரையில் எனது தாய் மொழி தமிழ், ஹிந்தியும் உருதுவும் அவளது இளைய சகோதரிகள்"
ஆனால் பொளப்பு நடத்தவும் காசு சேர்க்கவும் வேற மொழிதான் தேவை!!
//ஆனால் பொளப்பு நடத்தவும் காசு சேர்க்கவும் வேற மொழிதான் தேவை!!//
தமிழிலும் மொழிபெயர்ப்பு நல்லா நடக்குதுங்கோவ்.
தமிழ் பதிவுகள் போட்டு போட்டு தமிழ் நல்லா வந்துடுச்சுங்கோவ். திருக்குறளிலேயே காசு பாத்தாச்சுங்கோவ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மனித நேயத்தை இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கு குறுக்கிட வேண்டுமென்பது இல்லை.
நீங்கள் இந்தியர் அவர் பாகிஸ்தானியர் என்பது மீறி இருவரும் மனிதர்கள்.
நன்று
//The truth is that Rajiv made a commitment to me that Rajiv backed out of. But I never spoke about that and I never will//
ஈழத்தமிழர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல!!!!
படித்து விட்டீர்களா?
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_7736.html
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
<==surveysan said
1980 சமீபமா?
=>
அன்னைக்கே சொன்னேன் டோண்டு அவர்களை ,ஒரு டிஸ்கி போடச்சொல்லி எங்க கேட்கிறார்? பாருங்க புதுசா வர்றவங்களுக்கு தெரிய மாட்டேங்குது
http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=1626c1b0-0914-4cd3-a166-26a80b4473b4Benazirassassinated_Special&&Headline=Benazir+Bhutto%2c+the+prodigal+daughter.
This is written by virsinghvi on benazir. This is more turthful than one sided "jollu" by karan thapar.
Karan thapar is a skirt chasing Nehruvian socialist secularist.
Post a Comment