சட்டசபையின் ஆயுள் முடியும் முன்னாலேயே பதவியில் இருக்கும் முதலமைச்சரோ, பிரதம மந்திரியோ பொது தேர்தல் நடத்த கவர்னருக்கோ குடியரசுத் தலைவருக்கோ ஆலோசனை தரலாம். அவ்வாறுதான் சமீபத்தில் 1971-ல் அப்போதைய பிரதம மந்திரி இந்திரா காந்தி அவர்களும் அப்போதைய தமிழக முதல் மந்திரி கருணாநிதி அவர்களும் பொது தேர்தலை ஓர் ஆண்டுக்கு முன்னமேயே வைத்தனர். இதில் தவறு இல்லைதான். ஆளும் கட்சி தனக்கு சாதகமான நேரங்களில் பொது தேர்தல் வைப்பது பிரிட்டனிலும் நடப்பதுதான். அதே மாதிரித்தான் 2002-ல் மோதி அவர்கள் குஜராத்தில் பொது தேர்தல் வைக்குமாறு கவர்னருக்கு ஆலோசனை அளித்தார். அப்போது தேர்தலை நடத்த இயலாது என்பதற்கு பல நொண்டிச் சாக்குகளை தேர்தல் ஆணையம் கூறியது.
அதற்கும் மேலாக மோதி ஒரு கோமாளி என்றே அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் J. M. Lyngdoh திருவாய் மலர்ந்தருளினார். அதற்காக நிருபர்கள் அவரை கேள்விகளால் துளைத்த போது தான் அதை வெளியிட்டது தனது சொந்த கருத்து என்றும், மைக் இணைப்பை தான் கவனிக்கவில்லை என்றும் அசடு வழிந்தார். இவரெல்லாம் ஒரு தேர்தல் ஆணையர் என வந்து விட்டார், என்ன செய்வது விதி. ஆனால் ஒன்று, பிறகு தேர்தல் ஆணையமே நிர்ணையித்த தேர்தலில் மோதி அவர்கள் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையரை இன்னும் நெளிய வைத்தார். மிக்க மகிழ்ச்சி. அப்போது சோ அவர்கள் மோதி காங்கிரஸ் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகவே வெற்றி பெற்றார் என்று பொருள்பட எழுதினார்.
அதே தேர்தல் ஆணையம் சோனியா காந்தி அவர்கள் தனது எம்.பி. பதவியை துறக்க நேர்ந்தபோது அவசரம் அவசரமாக அவரது தொகுதிக்கு இடைதேர்தலை ஏற்பாடு செய்து, அவர் மீண்டும் ஜெயிக்கும் வாய்ப்பைத் தந்தது. அதற்கான செலவு ஏமாளி குடிமக்கள் மீதுதான்.
சமீபத்தில் 1984 சீக்கியக் கொலைகளுக்கு பிறகு உடனடியாக நடந்த தேர்தலை எந்தக் கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை? அத்தேர்தலில் தீவிரவாதிகள் என்று சர்தார்ஜிகளின் படத்தையே போட்டு ராஜீவ் காந்தி அவர்கள் பிரசாரம் செய்ததற்கு யாரை குறை கூற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
இப்போதைய குஜராத் தேர்தலையே பார்ப்போமா? சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. இன்று வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தெருக்களில் சங்கிலி விபத்து என்று நடக்கும். அதாவது ஒரு வண்டி இன்னொரு வண்டியில் மோதி, அந்த இன்னொரு வண்டி மூன்றாவது வண்டியின்மீது மோதி என்று தொடர்ச்சியாக நடக்கும் விபத்துகளையே இங்கு குறிக்கிறேன். அவற்றுக்கு முதல் குற்றவாளி முதலில் மோதிய வண்டி டிரைவர்தான். ஆக, அந்த விஷயத்தில் சோனியாஜிக்குத்தான் அதிக பொறுப்பு. அதைக் கூறாது தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: மோதி அவர்கள் இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கும் பத்திரிகைகளுக்கும் எதிராகப் பெற்ற வெற்றி மனதுக்கு நிறைவாக உள்ளது. குஜராத்தியினர் நல்ல அரசு பெற்றுள்ளனர். அவர்கட்கு எமது வாழ்த்துக்கள். ஓசி டெலிவிஷனுக்கெல்லாம் மயங்காத அவர்களுக்கு ஒரு பெரிய ஓ போடுகிறான் இந்த இளைஞன் டோண்டு ராகவன்.
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
12 hours ago
25 comments:
"அவற்றுக்கு முதல் குற்றவாளி முதலில் மோதிய வண்டி டிரைவர்தான். ஆக, அந்த விஷயத்தில் சோனியாஜிக்குத்தான் அதிக பொறுப்பு."
இருவருடைய பேச்சுக்களூமே பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகின்றது. ஆனால்
இருவருடைய பேச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புடையதா?
சோனியாஜி விசயத்தில் தேர்தல் ஆணையம் அடக்கி வாசிக்கிறது என்பது உண்மைதான். மக்கள் தான் மன்னர்கள். தேர்தல் முடிவை ஜனனாயகத் தீர்ப்பாக ஏற்கவேண்டும்,
புள்ளிராஜா
ராகவன்,இந்தியாவின் எந்த அமைப்பும் சமீப காலங்களில் ஆளும் தரப்பை எதிர்த்து உறுதியாக செயல்பட்டதாக என எனக்கு நினைவில்லை.
சேஷன் கூட அவ்வளவு உறுமிவிட்டு கடைசியில் ஆளும் கட்சிக்குப் பணிந்து போனதாகத்தான் நினைவு.
இது இன்றைய நாட்களில் சாதாரணம் என்று ஒத்துக் கொள்ளும் அளவிற்கு மக்களும் வந்து விட்டார்கள்...
மற்றபடி சோனியா,மோடி பற்றிக் கூறுகையில் மோடி பல மேடைப் பேச்சுக்களில் சவால் விடும் வகையில்தான் பேசினார்;மோடி குஜராத்தில் பல முன்னேற்றமான காரியங்கள் செய்திருந்தாலும்,அவரின் விமர்சனத்துக்குள்ளான செயல்களுக்கு அவர் பொறுப்பான பதிலை இதுவரை சொல்லவில்லை.
ஒருவர் திறமையாளராக இருக்கிறார் என்பதற்காக அவரின் குற்றச் செயல்களையும் ஆதரிக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை.
//ஆனால்
இருவருடைய பேச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புடையதா?//
ஆம். தேர்தல் கமிஷனின் பாரபட்ச மனப்பான்மைக்கு இத்தேர்தலில் நல்ல பதில் கிடைத்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ராகவன்,இந்தியாவின் எந்த அமைப்பும் சமீப காலங்களில் ஆளும் தரப்பை எதிர்த்து உறுதியாக செயல்பட்டதாக என எனக்கு நினைவில்லை.//
மன்னிக்கவும் அறிவன் அவர்களே. 2002-ல் மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி ஆட்சி, குஜராத் மாநிலத்தில் பி.ஜே.பி. ஆட்சி. அப்போதும் தேர்தல் தலைமை ஆணையர் காங்கிரஸ் ஆதரவாளராகவே செயல்பட்டார். என்பதைப் பார்க்கும்போது நீங்கள் கூறுவதை எப்படி ஒத்துக் கொள்ள இயலும்?
மோதியைக் கோமாளி என்று கூறிய அவரே கோமாளியாக்கப்பட்டதுதான் அப்போது நடந்தது என்பது வேறு விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதானே பார்த்தேன்! உங்கள் "இடி போன்ற மெளனம்" குஜராத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கலைந்துவிடும் என்று எதிர்பார்த்தது வீணாகவில்லை!
என்ன செய்வது அனானி? தேர்தல் தலைமை ஆணையரின் ரூலிங்க் நேற்றுத்தானே வெளியாயிற்று? அதுதானே இப்பதிவின் கருப்பொருள்? மோதி வென்றதை பின்குறிப்பாக பிறகுதானே சேர்த்தேன்?
அதிருக்கட்டும் உங்களது சொந்தப் பெயரில் வராது ஏன் இந்த இடி போன்ற மௌனம்? இன்னும் மோதி எதிர்ப்பு பதிவர்களின் இடி போன்ற மௌனமும் தொடர்கிறதே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மோதி எதிர்ப்பு பதிவர்கள் எழுந்திருக்கவே இன்னும் நாலு நாள் ஆகும் என்கிறார்கள்! வாணாம்...அடிக்காதீங்க...அழுதுடுவாங்க...
இப்படிக்கு
கைப்புள்ள வெடிவேலு
//
"அவற்றுக்கு முதல் குற்றவாளி முதலில் மோதிய வண்டி டிரைவர்தான். ஆக, அந்த விஷயத்தில் சோனியாஜிக்குத்தான் அதிக பொறுப்பு."
//
இந்தியாவில் பெரிய வண்டி யார் ஓட்டுகிறாரோ அவர் தான் குற்றவாளி. தப்பு சின்ன வண்டி ஓட்டியவன் மீது இருந்தாலும்.
//மோடி பல மேடைப் பேச்சுக்களில் சவால் விடும் வகையில்தான் பேசினார்//
அப்புறம் தலையில் முக்காடு போட்டு மூலையில் உக்கார்ந்து அழுவாருன்னு நெனைச்சீங்களா? தமிழ்நாட்டு அரசீயல் பழகிய உங்கள் கண்களுக்கு அழுகையும், ஒப்பாரியும், ஓசிச் சோறும் தான் தேர்தல் காலத்தில் தெரியும் - rewind - 14 ஆண்டு கால வனவாசம் போதாதா? MGR வந்த உடனே ஆட்சிய அவர் கிட்ட கொடுத்துவிடுவேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்றுதானே என்மீது இவ்வளவும் - இதெல்லாம் மோடியின் பிரசாரத்தில் கிடையாது. தீவிரவாதிக்கு கவிதை பாடுபனும் சரி, பாட நினைப்பவனும் சரி, வாழ அருகதை அற்றவர்கள். அவருடைய பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள் - தீவிரவாத எதிர்ப்பு, Integrity நம்பகத்தன்மை, நேர்மையான ஊழலற்ற நிர்வாகம், எழுச்சிமிகு குஜராத், தேசிய ஒற்றுமை. எப்போதுமே 5-1/2 கோடி குஜராத் மக்களுக்கு தான் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தினார் மோடி - ஜாதி வித்தியாசம் கிடையாது, மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் எனப்படும் ஓட்டுப் பிச்சை கிடையாது. குஜராத்தில் இருந்தால் குஜராத்தியாக இரு என்பது தான் அவருடைய கருத்து. ஒவ்வொரு கூட்ட முடிவிலும் 'பாரத் மாதா கீ ஜே!' என்கிற கோஷம் விண்முட்ட எழுப்பி நாட்டுப் பற்றை தூக்கி நிறுத்தியவர் மோடி. இங்குள்ள அறிவற்ற திரா'விட' கட்சிகள் எப்படி தங்கள் கூட்டத்தை நிறைவு செய்யும் என்பதை நினைத்தாலே குமட்டுகிறது. தனி நபர் துதி, வாழ்க/ஒழிக கோஷம். நமக்கும் மோடி போல ஒருவர் கிடைக்க மாட்டார என ஏங்க வைக்கிறார்.
(பி.கு: நான் வசிப்பது அஹமதாபாத் நகரில். ஆதலால் உங்கள் அனுமானங்களை தமிழ்நாட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளவும்).
//தேர்தல் முடிவை ஜனனாயகத் தீர்ப்பாக ஏற்கவேண்டும்,//
அப்படி போடுங்க. இதுக்கு பெயர் தான் ஜனநாயகம். அதை விட்டு என்னோட பதிவுலையும் சொல்றாங்க பாருங்க ஜனநாயகத்துக்கு விளக்கம். தாங்க முடியலை.
*********************************
//ஒருவர் திறமையாளராக இருக்கிறார் என்பதற்காக அவரின் குற்றச் செயல்களையும் ஆதரிக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை//
ஒரு பேச்சுக்கு இதை மோடி பற்றிய விஷயமல்லாமல் பொதுவான ஒரு கருத்தாக எடுத்துக் கொள்வோம். குற்றமற்ற திறமையானவர்களின் சதவிகிதம் என்ன என்று சொல்லுங்களேன்.
*********************************
//இந்தியாவில் பெரிய வண்டி யார் ஓட்டுகிறாரோ அவர் தான் குற்றவாளி. தப்பு சின்ன வண்டி ஓட்டியவன் மீது இருந்தாலும்.//
:) நல்லா சொன்னீங்க போங்க. நானும் நிறைய அனுபவப் பட்டுட்டேன்
*********************************
இது விஷயமா நான் எழுதின பதிவு இதோ...
This election has proved that people have voted for Hindutva. This is because they have realized that the other name of Hindutva is Development.
It is the development that Hindus, Muslims, and Christians want to have. It is Hindutva that Hindus, Muslims, and Christians want to have.
மத வெறியன் மோடிக்கு இவ்வளவு ஜால்ராவா? அவன் செய்த படு கொலைகளுக்கு உங்கள் பதில் என்ன? அதை பற்றி பேச உமக்கு வக்கு உண்டா? குஜராத்தில் பெரும்பாலோர் மதவெறியர்கள்தான். அதனால்தான் அந்த மோடி ஜெயித்துள்ளான். வளர்ச்சிப்பணி என்பதெல்லாம் சும்மா. கலைஞர் செய்யாத வளர்ச்சிப்பணியா அவன் செய்துவிட்டான்? இதை ஒப்புக்கொள்ள தைரியம் உண்டா டோண்டு அவர்களே?
விளம்பரத்துறையில் பணியாற்றிக்கொண்டே கட்சிபணியையும் கவனிப்பதால் இதற்கு மேல் எழுத முடியாது.
லக்கிலுக்
This issue (still doughting whether it is big issue?) because of the creation of delhi based media and their over coverage on Gujarat.
If this speech is something wrong, througout india, during elections, how vulgar campagin going on?. In that time, I never heard that election commission sent the notice to any person. Everything only to Gujarat.
Because of media coverage compulsion. Thats all.
//ஓசி டெலிவிஷனுக்கெல்லாம் மயங்காத அவர்களுக்கு//
biriyani pottalaththukkum mayangukira aattu manthai koottam unde namma ooril!!!
Selvan
//நமக்கும் மோடி போல ஒருவர் கிடைக்க மாட்டார என ஏங்க வைக்கிறார்//
ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!!!!
//Everything only to Gujarat.
Because of media coverage compulsion. Thats all.//
அதுவும் மோடிக்குத்தான் முதலில் அனுப்பினார்கள். பிறகு தாங்கள் நடுநிலையாக நடந்து கொள்வது போன்ற தோற்றம் தரவே வேண்டாவெறுப்பாக சோனியாவுக்கும் திக்விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
ஒரே ரூலிங்தான் மோதிக்கும் சோனியாஜிக்கும். ஆனால் கடுமையான வார்த்தைகள் மோடிக்கு மட்டுமே. இதுதான் இப்பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மத வெறியன் மோடிக்கு இவ்வளவு ஜால்ராவா? அவன் செய்த படு கொலைகளுக்கு உங்கள் பதில் என்ன? அதை பற்றி பேச உமக்கு வக்கு உண்டா? குஜராத்தில் பெரும்பாலோர் மதவெறியர்கள்தான். அதனால்தான் அந்த மோடி ஜெயித்துள்ளான். வளர்ச்சிப்பணி என்பதெல்லாம் சும்மா. கலைஞர் செய்யாத வளர்ச்சிப்பணியா அவன் செய்துவிட்டான்? இதை ஒப்புக்கொள்ள தைரியம் உண்டா டோண்டு அவர்களே?//
கலைஞரையும் மோடியையும் மக்கள் நலத் திட்டங்கள் விஷயத்தில் கம்பேர் எப்படி செய்ய இயலும்? கலைஞர் மகான் அல்லவா? ஓசி டிவி, கடன் தள்ளுபடி, அரை செண்ட் நிலம் எல்லாம் தன் கட்சிக்காரர்களாகப் பார்த்து கொடுத்தார். ஆனால் இந்த மோடியோ தன் கட்சிக்காரர்களையே கொள்ளை அடிக்க விடாது தடுக்கவேதானே அவ்வளவு எதிர்ப்பாளர்கள் அவரது கட்சிக்குள்ளேயே.
மோடி மாதிரியான முதலமைச்சர்களெல்லாம் கலைஞர் அளவு உயர முடியுமா என்ன? இப்போது தினசரி பல மணி நேரம் பவர்கட். குளிர்சாதனப் பெட்டியை டீஃப்ராஸ்ட் எல்லாம் செய்ய வேண்டாம். ஆனால் குஜராத்திலோ அந்த மோடி எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் அளித்து மற்ற முதல்வர்களுக்கு கெக்கலி காட்டுகிறார்.
கருணாநிதி அளவுக்கு எப்போதுதான் வருவாரோ தெரியவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I m not for MODI.
But one thing i admired was he penalised people who steal Electricity and made Govt Staff accountable for Functioning of Govt .
He has to change his tone little softer to gain more support across..
Ravi
ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. மோதியின் தலைமையில் குஜராத் அடுத்த 5 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி அடைந்திருக்கும். இப்போதைய வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால் கிட்டத்திட்ட 80 சதவிகித கிரமங்கள் நகர்புர வசதிகளைப் பெற்றிருக்கும்.
ஆனால் தமிழ்நாடு?
ஓசி டிவி காலாச்சாரத்திலிருந்து தமிழன் விடுபடாதவரையில் ஜெலுஸில் பின்னூட்டங்கள் போட்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
அன்புடன்
கு.அறிவாளன்.
//
He has to change his tone little softer to gain more support across..
//
He has enough support in Gujarat.
He does not have to parrot the politically correct tone that everybody in infected with. Thats what makes him different.
//
மத வெறியன் மோடிக்கு இவ்வளவு ஜால்ராவா? அவன் செய்த படு கொலைகளுக்கு உங்கள் பதில் என்ன? அதை பற்றி பேச உமக்கு வக்கு உண்டா? குஜராத்தில் பெரும்பாலோர் மதவெறியர்கள்தான். அதனால்தான் அந்த மோடி ஜெயித்துள்ளான்.
//
மோடி செய்வதை எந்த அரசியல் வாதியாவது செய்யமுடியுமா ?.அதைச் செய்ய அவர்களுக்கெல்லாம் Kஞ்சில் முடியிருக்கிறதா ?
நோண்பு கஞ்சி குடித்துவிட்டு இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொல்லும் மூடனா முதல்வன் ?
குஜராத்திகளெல்லாம் மதவெறியர்கள் என்றால் கஷ்மீர் இந்துக்களை விரட்டியடித்த கஷ்மீரிகள் எல்லோரும் என்ன ?
Everybody talking about riots and Modi. The fact is:
1. Feb 28th started
2. March 1, military came into the picture.
3. English intellectuals asking why you waited 3 days?
4. Where is 3 days, it is Feb
5. Riots did not meant that Hindus killing. It means that both side.
6. 200 Hindus killed in that riots.
7. Modi said that it is out of control. To see the death doll, it is correct.
8. Why it is high death doll in a few days?
9. Because a large number of scheduled peoples also participated in the riots. In a history, scheduled peoples never participated in any riots so far ( the great NGO report itself accepted)
10.Why now?
11. Usually, Mullah brokers are giving money for meter rate interest to tribal peoples; while in that connection many mullah brokers misbehaved and raped the tribal women.
12. This anger always inside in the tribal peoples and they used the Godhra train incident as one of the reason.
13. Now, suspected 100 tribal mens were in the jail. No bail for the last four years.
14.Court proceedings going on.
15. What else one govt.can do more than this?
16. The arqument is Modi involvment. (english media says)
17. If have strong evidence produce the court.
18. Even English media itself never reporting that modi trying to interfer the proceedings.
19. All are saying that need to speed up the process.
20. antisikh riots is still going on. similarly all other cases. But this has to very fast.
நான் அதிகம் படிக்கும் வலைபதிவுகளில்
மோடியின் வெற்றிதான் பிர(ச்சனை)தான செய்தி.
ஆனால் பிரச்சனையின் தீவிரம் என்னவெனில் கருத்து தெரிவிக்கும் எவரும்(நான் உள்பட)குஜராத்தில் இல்லை.நம் அனைவரும் பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகளில் வரும் எல்லாவற்றையும் அப்படியே மூலமாக எடுத்துக்கொண்டு
கருத்து தெரிவிக்கிறோம்(ஆனால் தீர்ப்பு குஜராத் மக்கள் குடுத்துட்டாங்க)
ஆனால் நமது ரிசர்வ் வங்கியின் கருத்து படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குஜராத்தின் வளர்ச்சி அதிகம் உள்ளது.(இதுவும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிந்தது.)
அதனால் எனது ஓட்டும் மோடிக்கே(செல்லாத ஓட்டு என்றாலும்)
அது சரி! மோடி ஜெயித்துவிட்டால் என்னவோ மைனாரிட்டிகளுக்கு உத்தரவாதம் இல்லை, மதவாதம் ஜெய்த்துவிட்டது என்று ஒரே ஓலமிடுகிறார்களே! அதுவும் 15-20 சதவிகிதம் மக்களுக்காக உயிரை விடுகிறார்களே, அவர்களுக்கு வெட்கம் மானம் என்று ஒன்று இருந்தால் ஊரை விட்டு ஓடி விடட்டும்! Rewind 50 years! இதே மாய்மாலக்காரர்கள் வெறும் மூன்று சதவிகிதமாக இருந்த மைனாரிட்டியை துரத்தி துரத்தி அடித்தபோது எங்கே போனது இந்த மைனாரிட்டி கோஷம்? இஃப்தார் கஞ்சியை குடித்துவிட்டு, இந்துக்களை கேவலமாக பேசும் வெட்கங்கெட்ட "கிழவர்களுக்கு" மோடி வைத்தார் ஒரு ஆப்பு!
//மத வெறியன் மோடிக்கு இவ்வளவு ஜால்ராவா? அவன் செய்த படு கொலைகளுக்கு உங்கள் பதில் என்ன? அதை பற்றி பேச உமக்கு வக்கு உண்டா? குஜராத்தில் பெரும்பாலோர் மதவெறியர்கள்தான். அதனால்தான் அந்த மோடி ஜெயித்துள்ளான். வளர்ச்சிப்பணி என்பதெல்லாம் சும்மா. கலைஞர் செய்யாத வளர்ச்சிப்பணியா அவன் செய்துவிட்டான்? இதை ஒப்புக்கொள்ள தைரியம் உண்டா டோண்டு அவர்களே?//
ஓசியில் நோன்பு கஞ்சி குடித்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.
அதுசரி டோண்டுசார், மேட்டர்டே பள்ளியில் பேரக் குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வைக்கும் தமிழ் இடிதாங்கி மரம்வெட்டி மருத்துவர் ராமதாசு அய்யாவும் அவனது சீமந்த புத்திரனும் இந்த விஷயத்தில் ஒன்னுமே சொல்லவில்லையே? ஏன் மவுனமா?
Post a Comment