1/15/2008

துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் - 2

முந்தைய பதிவு இதோ.
ஒரே பதிவாக போட இயலவில்லை. நீண்ட நோட்டு புத்தகத்தில் 23 பக்கங்களுக்கு குறிப்பு எடுத்திருந்தேன். கீழே சப்பணம் போட்டு உட்கார கஷ்டப்பட்டேன். பல போஸ்களில் நெளிய வேண்டியதாயிற்று. இருந்தாலும் நல்ல பலன் கிடைத்ததால் வருந்தவில்லை.

சோ அவர்கள் பேச வந்தபோதுபார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மிகத் துல்லியமாக உணர முடிந்தது. முதலில் லோக்சபா தேர்தல் வரும் சாத்தியக்கூறை பற்றி பேசினார். இப்போதைக்கு அது வராது என்ற கருத்தை தெரிவித்தார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்களைக் கொண்டிருந்தது என்றார். அது இல்லாது அணுசக்தியிலிருந்து மின்சாரம் செய்யும் திறனை நாம் முழு அளவில் அடைய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றார். ஆகவே அதை கைவிடுவது நமக்குத்தான் பாதிப்பு என்ற கருத்தையும் வெளியிட்டார். போன ஆண்டு மீட்டிங் போது பாஜக அரசு இருந்திருந்தாலும் இந்த ஒப்பந்தத்தை போட்டிருக்கும் என்று தான் அப்போது கூறியதை அத்வானி அவர்கள் ஒத்து கொள்ளாது பேசினாலும் தனது கருத்து அப்படியே உள்ளது எனவும் கூறினார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் என்பதாலேயே இதை எதிர்ப்பது முட்டாள்தனம் என்றார். சீனாவுடன் என்றால் இடதுசாரிகள் வரவேற்றிருப்பார்கள் என கிண்டலுடன் கூறினார். அவர்தம் இரட்டை நிலைபாடுகளையும் சாடினார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் ஒரு வேளை பாராளுமன்றத்துக்கு இடைதேர்தல் வந்திருக்கும் என்றும், ஆக அது வராமல் போனதற்கு காரணம் மோடி அவர்களே என்று கைதட்டல்களிடையே கூறினார். இடதுசாரிகள் போட்டு படுத்தினதில் மன்மோஹன் சிங்கே ஒரு தருணத்தில் பொறுமை இழந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு ஆர்வமுடன் இல்லை என்றார் அவர். பங்களூர், ஹைதராபாத், லக்னோ என்றெல்லாம் அது பரவுவதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். அதை கட்டுப்படுத்த தவறுவதையும் குறிப்பிட்டார். பார்லிமெண்டை தாக்கின வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அக்ஸருக்கு மன்னிப்பு என்ற ஆபத்தான விஷயத்தையும் தொட்டார். POTA சட்டத்தை விலக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதனால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அதை இன்னும் கடுமையாக்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதை செய்யாது அதை கைவிட்டால் அதே வாதத்தை இந்தியன் குற்றச் சட்டத்துக்கு விரோதமாகவும் உபயோகிக்கலாம் என்றார்.

காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இசுலாமியருக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்ப்பது அந்த மதத்தவருக்கு அவமானம் செய்வதாகும் எனக் கூறினார். இதுதான் உண்மையான மதவாதம் என்றார் அவர். பெரும்பான்மையான இசுலாமியர் அமைதி விரும்புபவர்களாக இருக்கும்போது அவர்களை தீவிரவாதிகளுடன் குழப்பி கொள்வது காங்கிரசே என்றார். ஆனால் பாஜக அவ்வாறு செய்வது இல்லை. தீவிரவாதி என்றால் தீவிரவாதிதான். அவன் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் அடையாளம் காணப்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது என்றார் சோ அவர்கள். விடுதலைப்புலிகள் பெரும்பாலானோர் இந்துக்களே, அதையே நக்ஸலைட்டுகளுக்கும் கூறலாம்.

சச்சார் கமிட்டி பற்றியும் பேசினார். சாதாரணமாக் மார்வாரிகளைப் போல இசுலாமியர் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவதாலேயே படிப்பில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை என்றும், புது தலைமுறையில் அது மாறி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

பிறகு தஸ்லீமா விவகாரத்தையும் கையில் எடுத்தார். தஸ்லீமா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பவர்கள் எஃப்.எம். ஹுசேன் என்ன செய்தாலும் சரி என்று ஏன் போக வேண்டும் என்று கேட்டு விட்டு, அதற்கு காரணம் முன்னவர் இசுலாமியரை தாக்க பின்னவரோ இந்து கடவுளரை அவமானப்படுத்தினார் என்பதே என்றார். அதே நேரத்தில் யாரும் யாருடைய மத நம்பிக்கையயும் புண்படுத்த கூடாது ஆகவே தஸ்லீமா செய்ததும் தவறுதான், அதே சமயம் ஹுசேன் செய்ததும் மிகத் தவறுதான் என்றும் அதை பூசிமெழுகுவது சரியில்லை என்றும் குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கம் மற்றும் கேரளம் தவிர்த்து வேறு எங்கும் கேப்பிடலிசம் இருக்கக் கூடாது என்ற நிலை எடுப்பதை நையாண்டி செய்தார். க்வாட்ரோக்கி விவகாரத்தில் கோட்டை விட்டதற்கு காங்கிரசை சாடினார். காங்கிரஸ் நிர்வாகம் மொத்தத்தில் மோசம் என்றார்.

பிறகு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வாய்ப்புகளை பட்டியலிட்டார். இரு கட்சிகளுமே கஷ்டமான நிலையையே எதிர்நோக்குகின்றன என்றார் அவர். பாஜக போன லோக்சபா தேர்தலில் தோற்றதற்கு காரணமே சரியான கூட்டணிகள் அமையாது போனதே காரணம் என்றார். எது எப்படியாயினும் மூன்றாம் அணி கேலிக்கூத்து என்றார். பிறகு பொதுவாக எந்த கட்சிக்குமே தலைமை பலமானதாக அமைய வேண்டும் என்றார். அந்த வகையில் தலைக்குத்தலை நாட்டாமை செய்யக்கூடாது என்றும் கூறினார். சம்பந்தப்பட்ட தலைவர்கள் செய்வது நியாயமோ அநியாயமோ அது வேறு விஷயம் ஆனால் ஒரு கட்சி வளர பலமான தலைமை அவசியம் என்பதை அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைவரின் தனிப்பட்ட பலம் மிக அவசியம் என்றும் கூறினார். அதை வைத்துத்தான் ஓட்டே அளிக்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளை கட்சிக்காரர்களே மதிப்பதில்லை. இந்த நிலைபாட்டுக்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டது இந்திரா காந்தி, மார்க்கரெட் தாட்சர் ஆகியோரை. சரியோ தவறோ ஒரு வலிமையான தலைமை அவசியம் தேவை என்பதே அது. அதே முறையில் மாநிலங்களில் உள்ள வல்மையான தலைமைகளை இந்திரா காந்தி அவர்கள் தனது சுயநலத்துக்காக மட்டம் தட்டியதாலேயே (கர்நாடகா நிஜலிங்கப்பா, தமிழ்நாடு காமராஜ், ஆந்திரா சஞ்சீவ ரெட்டி) காங்கிரஸ் பல மாநிலங்களில் மரண அடி வாங்கியது என்பதையும் அவர் நினைவூட்டினார். அந்த சூழ்நிலையில் மோடி மாதிரி ஒரு தலைவர் எல்லா மாநிலங்களுக்கும் தேவை என்றார். மோடி நிச்சயமாக பிரதம மந்திரியாகும் தகுதி பெற்றவர். ஏனெனில் அவருக்காக இந்திய பத்திரிகைகள், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவ்வளவு உழைத்துள்ளார்கள் என கிண்டலோடு குறிப்பிட்டார். ஒரே சிரிப்பு.

இந்த நேரத்தில் ஒன்றை கூறியாக வேண்டும். அவ்வப்போது குருமூர்த்தியையும் மோடியையும் கேமரா காட்டியது. குருமூர்த்தியின் உதடுகள் அசைவிலிருந்தும் அப்போது தமிழில் சொல்லப்பட்டதை வைத்தும் அவர் மோடியிடம் எப்படி மொழி பெயர்த்து கூறுகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. என்னை விட்டிருந்தால் நான் ஹிந்தியிலேயே நேரடியாக மொழிபெயர்த்து கூறியிருப்பேன். இந்த அழகில் எனக்கு மோடி, குருமூர்த்தி சோ ஆகிய மூவரையும் நன்றாக தெரியும். என்ன, அவர்களுக்கு என்னைத் தெரியாது அவ்வளவே.

பாஜகவை பொருத்தவரை விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை ரொம்ப ஆட விடக்கூடாது அவ்வளவே என்பதையும் சோ அவர்கள் குறிப்பிட்டார். குஜராத் கலவரங்கள் குறித்து பேசுகையில் சோ அவர்கள் முதலில் கோத்ரா ரயில் எரிப்புக்கு என்னென்னவோ சப்பைகட்டு முதல் நாளில் கட்டினார்கள் என்றார். கரசேவைக்காரர்கள் உள்ளூர் மக்களை எரிச்சல் மூட்டினார்கள் என்றெல்லாம் கூட கூறினார்கள். அதை கண்டு கோபமடைந்த சிலர் கலவரம் துவங்க முதல் நாள் அன்றே மோடி அவர்கள் ராணுவத்தை அழைத்து விட்டார் என்பதையும் நினைவூட்டினார். துப்பாக்கி சூட்டில் பல ஹிந்துக்கள் இறந்தனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். பிறகு அவசரம் அவசரமாக அரைகுறை விசாரணை வைத்து கோத்ரா ரயில் பயணிகள் தங்களுக்கு தாங்களாகவே நெருப்பு வைத்து கொண்டனர் என்றும் கூறத் தலைப்பட்டனர். டெஹல்கா விஷயத்தில் அது எப்போதுமே காங்கிரசுக்கு எதிராக எதையும் கண்டு பிடிக்கக்கூட முயல்வதில்லை என்று சற்றே யோசனையுடமன் சோ அவர்கள் கூற, அரங்கில் மீண்டும் சிரிப்பு. மொத்தத்தில் டெஹெல்கா விவகாரமே புனைந்து கூறப்பட்ட ஒன்று என்றும், அது நம்பத் தகுந்ததல்ல என்றும் கூறி விட்டார். (இப்போது டோண்டு ராகவன் உள்ளே வருகிறான். டெஹல்கா டேப் உண்மை கூறுகிறது என்று வாதத்துக்கு வைத்து கொள்வோம். அப்படியானால் ஏன் கைதுகள் இல்லை? ஏனெனில் அவை கோர்ட்டில் நிற்காது என்று அர்த்தமா? அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் என்று இருந்தால் அவர்களை தப்பிக்க விடும் உத்தியா இது? பை தி வே டெஹல்கா ஏன் சீக்கியக் கொலைகளை பற்றி துப்பறிய முயல்வதில்லை? டோண்டு ராகவ்ன் இப்போது வெளியேறுகிறான். மீண்டும் சோ.) மோடி ஜெயலலிதா வீட்டில் நடந்த விருந்து நல்ல விளைவுகளைத் தரும் என எதிர்ப்பார்ப்பதாக சோ கூறினார்.

தமிழ்நாடு விஷயத்துக்கு வந்தார் சோ. கழகம் ஒரு குடும்பம் என்பது இப்போதுதான் நன்றாக புரிகிறது என்று கூற கொல்லென சிரிப்பு. ஏன் ஸ்டாலினுக்கு முடிசூட்டவில்லை என்பதற்கும் விளக்கம் அளித்தார் சோ. அதாவது குடும்பத் தலைவர் தனது கடைசி காலம் வரை சொத்து தன் கையில் இருக்கும்படித்தான் பார்த்து கொள்வார். இங்கு சொத்து பதவியே. அதே சமயம் இவ்வளவு குடும்ப அங்கத்தினர்களை உலவ விடுவது ஆபத்தில்தான் முடியும் என்றும் கூறினார். சென்னை சங்கமம் என்ற கூச்சல் அரங்கத்திலிருந்து எழுந்தது. அது பரவாயில்லை ஆனால் அதை செய்யும் காஸ்பர் புலி ஆதரவாளர் என்பதுதான் கவலை தருகிறது என்று கூறினார். மத்திய அரசு இதை அவதானிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யுமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் கூறினார் அவர். தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் புலிகள் அதிகம் தைரியம் பெற்றுள்ளனர் என்பதையும் சோ அவர்கள் குறிப்பிட்டார். இம்மாதிரி ஜெயலலிதாவின் ஆட்சியில் நடக்காது என்பதையும் கூறினார் அவர்.

மீனவர்கள் கொலை விஷயத்தில் முதலில் ஸ்ரீலங்கா அரசுதான் குற்றவாளி என நினைத்து சவுண்ட் விட்டவர்கள் அது புலிகளின் வேலை என்றறிந்ததும் வாயை மூடிக் கொண்டனர் என்றும் கூறினார். புலியின் மரணத்துக்கு கவிதை அஞ்சலி செய்கிறார் முதல்வர் என்பதையும் சாடினார் அவர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கூலிப்படை மூலம் கொலை செய்விக்கும் கலாச்சாரம் ஆகியவற்றையும் சோ குறிப்பிட்டார். இந்த அழகில் கலைஞர் குடும்ப நெருக்கடி. டில்லி, சென்னை, மதுரை மற்றும் சங்கமம்.எல்லா குடும்பங்களுக்கும் அது பொருந்தும். நடுவில் ராமதாஸ் அவர்கள் படுத்தல் வேறு. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்க வேண்டியது, பிறகு பின்வாங்க வேண்டியது. எதிலும் தெளிவு இல்லை. நிறைய பணம் இருப்பதாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியது, பிறகு மைய அரசிடம் நிதி கேட்பது. இந்து மதத்தை மட்டம் தட்டுவது. ராமர் குடிகாரர். துளசி ராமாயணத்தின்படி சீதைக்கு ராமர் அண்ணா. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

பிறகு கிரிக்கெட் பற்றி கேட்க, பக்னருக்கு கண் அவுட்டாகி விட்டது எனத் தோன்றுகிறது என்றார் அவர். ஆனாலும் 8 தண்ட அவுட்டுகள் நிஜமாகவே ரிகார்ட் என்றார் அவர். அதே சமயம் ஹர்பஜன் சிங்கும் ரொம்ப அலம்பல் செய்தார் என்றார் சோ. அசிங்கமான காரியங்களில் ஆஸ்திரேலியரை காப்பி அடிப்பது நல்லதில்லை. ஏனெனில் அவர்கள் இதில் நிபுணர்கள் என்றார். டூரை கேன்சல் செய்ய பயமுறுத்துவதும் தவறு என்றார் சோ.

பிறகு மோடியை பற்றி பேச ஆரம்பித்தார். தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஒருவரும் அவர் மேல் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற இயலவில்லை என்று அவர் சொன்ன போது கரகோஷம் எழுந்தது. இந்த அழகில் அவர் காங்கிரஸை போல எந்த மலிவு உத்தியிலும் இறங்கவில்லை. ஓசி டிவி எல்லாம் தருவதாகக் கூறவில்லை. இந்தியாவிலேயே முதன் முறையாக ஆட்சியிலிருக்கும் முதன் மந்திரிக்கு எதிராக ஒரு ஊழல் புகார் கூட கூறமுடியவில்லை என்பது பெருமைக்குரியது என்றார் அவர். தேர்தலில் 50சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிக்கெட் தரவில்லை. பாஜக அதிருப்தியாளர்கள் வேறு அவருக்கு எதிராக இருந்தனர். ஆனால் அவர்கள் அன்னிக்கு rebels இன்னிக்கு regrets என்றார் அவர்.

குஜராத்தில் நடந்த பொருளாதார முன்னேற்றங்களை அவர் பட்டியலிட்டார். 500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன. 50 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு. ஒரு லட்சம் சிறு அணைகள். 100 விழுக்காடு கிராமப்புற மின்சாரம். அதுவும் நம்ம ஆர்க்காட் வீராசாமி மின்சாரம் போல எப்போதாவது வருவதில்லை, 24 மணி நேரமும் உண்டு. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்ற வெள்ளை யானை திட்டத்தை மாற்றினார் அவர். விவசாயிகளிடம் எடுத்து கூறினார், அதாவது இலவச மின்சாரம் எப்போதாவதுதான் ஒரு தினத்தில் வரும், ஆனால் கட்டண மின்சாரம் 24 மணி நேரமும் வரும் என்பதை விவசாயிகள் ஏற்று கொண்டனர். சிலர் மின்சாரம் திருடியபோது தாட்சண்யம் காட்டாது 1,20,000 இணைப்புகளை துண்டித்தார். இந்த தில் இதுவரை எந்த முதல்வருக்கு இருந்தது என்று சோ கேட்ட கேள்விக்கு கரகோஷமே இல்லை என்று பதில் அளித்தது.

இத்தருணத்தில் சில விஷயங்களில் சில வினைகள் எதிர்ப்பார்க்கப் படுகின்ரன என்பதையும் சோ நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவை, பெண்ணுரிமை (அதுவும் மனைவிக்கு மட்டிமே, சகோதரிக்கோ அன்னைக்கோ இல்லை), தமிழ், சிறுபான்மை, விவசாயிகள்.

மீண்டும் மோடி பற்றி பேசுகையில் பூகம்ப நிவாரண வேலைகளை எல்லோருமே பாராட்டினர் என்பதையும் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட மனிதர் இங்கு இந்த மீட்டிங்குக்கு வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி விட்டு, ஒரு குண்டை போட்டார் சோ அவர்கள். சோனியா சொன்ன மோடி merchant of death என்பதை தானும் ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டு பார்வையாளர்களின் திகைப்பை அலட்சியம் செய்து மேலே கூறினார்:

Yes, I now invite this merchant of death:

- to corruption,
- to terrorism,
- to nepotism,
- to official lethargy,
- to bureaucratic negligence,
- to poverty and ignorance,
- to the doctrine of despair

to come and address this meeting.

இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல். மோடி அவர்கள் அரங்கத்துக்கு வந்தார். ஜெயகோஷம் அரங்கத்திலும் வெளியிலும். மணி மாலை 08.20. சோ மற்றும் மோடி என்னும் இருமாமனிதர்கள் மேடையில். மோடி அவர்கள் பேச ஆரம்பித்தார்.

அது அடுத்த பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

72 comments:

ரவிஷா said...

துக்ளக் ஆண்டு விழாவை நேரே பார்த்தது போன்ற ஒரு உணர்வு! துக்ளக்கில் பிரிண்ட் செய்யப்படும் முன்னரே நீங்கள் பதிவு செய்ததற்காக சோ கோபித்துக்கொள்ளப் போகிறார்!

ரகுநந்தன் said...

//மீனவர்கள் கொலை விஷயத்தில் முதலில் ஸ்ரீலங்கா அரசுதான் குற்றவாளி என நினைத்து சவுண்ட் விட்டவர்கள் அது புலிகளின் வேலை என்றறிந்ததும் வாயை மூடிக் கொண்டனர் என்றும் கூறினார். ....//

என்னங்க சொல்றார் இவர்? மீனவர் கொலை-புலிகளே காரணம், மாலைதீவு ஆயுதக்கடத்தல் - புலிகளே காரணம், மீன்களுக்கு கீழே பயங்கர ஆயுதங்கள்- பிடிபட்ட மீனவர் வாக்குமூலம்....இப்படி பல புலிக்கதை விட்டவர்கள் எல்லாம் தலைக்கீழாக மாற வாயைப்பொத்த ஈழத்தமிழர் தமது பின்புறத்தால் சிரித்துக்கொண்டனர் என்பது தான் உண்மை!!! விடுகிறார் 1971இல் ஈழக்காரர்...கேளுங்கள்...கேளுங்கள்!!!!

வஜ்ரா said...

மோடி பேச்சைக் கேட்க புதிய ரிப்போர்ட்டர் டோண்டுவின் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Anonymous said...

இது அட்டகாசம்!

முதல் பாகம் ஆற்றொழுக்கைப் போன்றதொரு இனிமை என்றால், இரண்டாவது பாகம் ஒரு கம்பீரமான உயர்ந்த நடை. அதுவும் அந்த கடைசி பாரா! ஒரு பொதுக் கூட்டத்தைப் பற்றிய வர்ணணையை இப்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரைப் போல எழுத முடியுமா? ச்சும்மா நின்று விளையாடி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.

அப்புறம், பெரிய நோட்புக்கில் அந்த 23 பக்க குறிப்புகளைப் பற்றி ஒரு வார்த்தை. ஒரு பதிவெழுத இந்த அளவு உழைப்பது உண்மையிலேயே அசாத்தியம். இளைய பதிவர்கள் இதை கவனிக்க வேண்டும். "கட் & பேஸ்ட்" பதிவர்களும், கும்மி பதிவர்களும் ஒருபுறம் இருந்தாலும் இது போல உழைத்து பதிவெழுதும் டோண்டு அவர்களும் மற்றும் இன்னும் (வெகு) சில பதிவர்களும் தமிழ் பதிவுலகத்தை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.

மோதி கலக்கப் போகும் மூன்றாவது பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!!!

Anonymous said...

'மீனவர்கள் கொலை விஷயத்தில் முதலில் ஸ்ரீலங்கா அரசுதான் குற்றவாளி என நினைத்து சவுண்ட் விட்டவர்கள் அது புலிகளின் வேலை என்றறிந்ததும் வாயை மூடிக் கொண்டனர் என்றும் கூறினார்'ன்
= சோ


இலங்கைக் கடற்படைதான் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். (பாதுகாப்பு அமைச்சர்
அந்தோனி)


என்ன உளறள்! சொப்பனமோ?

Anonymous said...

Eagerly waiting for your next post.
-Sreeni

Anonymous said...

டோண்டு சார்,

மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். நானே அரங்கத்தில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி.

மோடி சொன்னதை அப்படியே (சிரமம் பார்க்காமல்) எழுதவும்.

M Poovannan said...

//அப்படிப்பட்ட மனிதர் இங்கு இந்த மீட்டிங்குக்கு வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது//

மோடி வெற்றி பெற்றது இந்துத்வா ஆயுதத்தை கையில் எடுத்ததே. அப்படிப்பட்ட மோடி தமிழ் மண்ணை மிதித்ததே தவறு.என் அவதார நாயகன் ராமரை குடிகாரன் எனச் சொன்ன தமிழகத்திற்கு வரமாட்டேன் என மறுத்திருந்தால் மேஅடி அவதார புருஷனாக மேலும் மதிக்கப்பட்டிருப்பார். என்ன செய்வது மோடியும் சாப்பாட்டு ராமன் போல போயஸ் தோட்டத்து சாப்பாட்டுக்கு வந்து விட்டார்.

அச்சச்சோ 'சாப்பாட்டு ராமன்' எனச் சொல்லி ராமரை கொச்ச்சைபடுத்தி விட்டேனோ

Sri Srinivasan V said...

ராகவன் சார் நமஸ்காரம் .
உங்கள் சோ மோடி மீட்டிங் பதிவுக்கு நன்றி. .
மிக நன்றி.
திரவியம் தேடி திரைகடல் ஓடிய எனக்கு மனசும் நினைவும் முழுசாய் சென்னையிலே அம்மா அப்பாவுடனும் சோ மீட்டிங் பற்றியுமே இருந்தது.
நம்பமாட்டீர்கள்.
நேற்று காலை ௨005 சோ மீட்டிங் விசீடீ போட்டு சோ மீடிங்கை மீண்டும் இங்கே பார்த்தேன்.
உங்கள் விரிவான பதிவுக்கு மிகுந்த நன்றி.
உங்களை டோண்டு என அழைக்க சங்கடமாய் இருக்கு. அதன் பின்புலம் அறியாமல், பொடியன் நான் உங்களை ராகவன் சார் என்றே அழைக்க விரும்புகிறேன்.
உங்கள் பதிவுகளில் உள்ள மற்ற சோ கட்டுரைகளும் படித்து விட்டு பிறகு எழுதுகிறேன்.
அனேக நமஸ்காரம் . பொங்கல் வணக்கங்கள்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்
பெர்த், ஆஸ்திரேலியா.

நன்றி, வணக்கம், அன்புடன், ஸ்ரீனிவாசன்.

dondu(#11168674346665545885) said...

//என் அவதார நாயகன் ராமரை குடிகாரன் எனச் சொன்ன தமிழகத்திற்கு வரமாட்டேன் என மறுத்திருந்தால்...//
யாரோ உளறியதற்கெல்லாம் எதிர்வினை செய்ய முடியுமா என்ன? அப்படி உளறியவரும் பிறகு ராமரை ஏசு, அல்லா போன்றவர்களுக்கு சமமானவர் என பல்டி அடிக்க நேர்ந்ததே. அதற்கு என்ன கூறுவீர்கள்?

அது பற்றி பார்க்க எனது பதிவு: http://dondu.blogspot.com/2007/11/blog-post_08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Excellent presentation. As though we see and hear. Great Job.

Anonymous said...

Content வெத்துவேட்டு என்றாலும் coverage சூப்பர் ;)

ஜடாயு said...

// 23 பக்கங்களுக்கு குறிப்பு எடுத்திருந்தேன். //

உங்கள் சிரத்தையும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது டோண்டு.

நேரடியாக கூட்டத்திற்குச் சென்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அருமை. சோவின் 'ப்ஞ்ச்'களை அவற்றின் சுவை குன்றாமல் அப்படியே கேட்பது போல இருக்கிறது.

நரேந்திரர் பேச்சின் பதிவையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

மிக்க நன்றி. அடுத்த துகளக் படிக்கும் வேலை மிச்சமாகும் போலத் தெரிகிறது :))

Nat Murali said...

Dear Dondu Sir,
Though you are walking on grey lines -as per IPR of covering the meeting of Thuglak -Modi , you are doing us a yeoman service. I share your feeling of being the part of history in the making.
Long Live India and the Crusade of CHO, Modi and all the Indian loving people (You and me included)
Murali Natarajan,
Singapore

Anonymous said...

//இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல்.//
பாத்தோமே.......................
மேலும்..
மோடி தான் இருப்பது தமிழகம் என்று தெரிந்து பம்மிக்கொண்டே பேசியதை நேர்மையாக எழுதுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

Anonymous said...

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி' யை ஆதரிக்க முடிகிறது திரு.டோண்டு அவர்களே ?

மூவாயிரம் கொலைகளை நியாயப்படுத்தும் ஒருவரை நல்ல மனிதர் என்று முரட்டு நியாயம் சொல்கிறீர்களே ???

Anonymous said...

அந்த பின்னூட்டம் என்னுடையது தான், ரிலீஸ் செய்யவும்...

99160 84054.

Anonymous said...

//
மோடி வெற்றி பெற்றது இந்துத்வா ஆயுதத்தை கையில் எடுத்ததே. அப்படிப்பட்ட மோடி தமிழ் மண்ணை மிதித்ததே தவறு.என் அவதார நாயகன் ராமரை குடிகாரன் எனச் சொன்ன தமிழகத்திற்கு வரமாட்டேன் என மறுத்திருந்தால் மேஅடி அவதார புருஷனாக மேலும் மதிக்கப்பட்டிருப்பார். என்ன செய்வது மோடியும் சாப்பாட்டு ராமன் போல போயஸ் தோட்டத்து சாப்பாட்டுக்கு வந்து விட்டார்.

அச்சச்சோ 'சாப்பாட்டு ராமன்' எனச் சொல்லி ராமரை கொச்ச்சைபடுத்தி விட்டேனோ

//பூவண்ணன்,

இந்துத்வா ஆயுதம் என்றால் போலி மதச்சார்பின்மையும் அதைவிடப் பயங்கர ஆயுதம்.


தமிழ்மண்ணை மிதித்ததுடன் சேர்த்து திராவிட ஓநாய்களையும் மிதித்திருக்கவேண்டும்.


சூரியனைப் பார்த்து (திராவிட) நாய் குறைத்தால் வலி நாய்க்குத் தான் சூரியனுக்கு அல்ல.
சாப்பாட்டு ராமன் என்று சொன்னால் ராமனால் சாப்பாட்டுக்கு மதிப்பு கூடுகிறது.


திராவிட நாய் என்று சொன்னால் நாய்க்கு கொடுக்கப்படும் மதிப்பு குறைகிறது.

வடுவூர் குமார் said...

நன்றாக குறிப்பு எடுத்து கொடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றி.
ஒரு சந்தேகம் .. இப்படி குறிப்பு எடுப்பதற்கு பதிலாக ஒரு ரெக்கார்டர் இருந்தால் வேலை இன்னும் சுலபமாக முடிந்திருக்குமே??

bala said...

//திராவிட நாய் என்று சொன்னால் நாய்க்கு கொடுக்கப்படும் மதிப்பு குறைகிறது//


அட அப்படியா சங்கதி;இனிமே யாராவது கேவலமாக நடந்து கொண்டால் அந்த மூஞ்சியை "எலே திராவிடா"ன்னு சொன்னா போதுமானதா?

பாலா

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது சரியே வடுவூர் குமார் அவர்களே. ஆனால் சில பிரச்சினைகள். டேப் ரிகார்டர் எடுத்து உள்ளே போக அலவ் செய்ய மறுக்கலாம், கூடவே ப்ளக் பாயிண்ட் அருகில் அமர இடம் கிடைப்பது நிச்சயமாகாமல் இருக்கலாம். ஒலிப்பேழையில் ரிகார்ட் செய்யவும் அனுமதி தேவை என நினைக்கிறேன்.

இதெல்லாம் சரி செய்ய முடியும் என்றால் அப்படியே செய்யலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அடுத்த துகளக் படிக்கும் வேலை மிச்சமாகும் போலத் தெரிகிறது//

ஜடாயு, துக்ளக்கில் photos எல்லாம் இருக்கும்,அதுக்கானாச்சும் வாங்குங்க. அப்புறம், நரேந்திர மோடியின் பேட்டி கண்டிப்பா இருக்கும்.

ஆமா டோண்டு சார் அது எப்படி நிகழ்ச்சிய ரொம்ப அருமையா கவர் பண்ணிட்டு ஒரு போட்டோவக் கூட அப்லோட் செய்யல?

//எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி' யை ஆதரிக்க முடிகிறது திரு.டோண்டு அவர்களே
?//

செந்தழல் ரவி, மோடியை டோண்டு சார் அல்ல, கோடிக்கும் அதிகமான குஜராத் மக்கள் ஆதரித்திருக்கிறாங்க, தொடர்ந்து ஆதரிச்சுக்கிட்டு இருக்காங்க. நீங்க சொல்றதப் பார்த்தா அவங்களெல்லாமும் குற்ற உணர்ச்சி இல்லாதவங்களா?

அப்பாவி முஸ்லீம்கள் இறந்ததற்கு அந்த சமூகத்திலிருந்த மதவெறி சக்திகளே காரணம். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உட்பட எந்த இந்துவும் அடிப்படையில் மதவாதியோ, முஸ்லீம் எதிர்ப்பாளனோ கிடையாது. அவ்வாறு இருக்கவும் முடியாது.

ரவி நீங்க வேலை பாக்குற இடத்தில் - ரவி பற்றிய ஒரு பொதுவான அபிப்ராயம் என்று ஒன்று இருக்குமில்லையா, அது 100 சதவீதம் ரவி பற்றிய உண்மையான factஆக இருக்கவேண்டிய அவசியமில்லையே?! அதேபோல நரேந்திரமோடி பற்றி NDTV, Tehelka, ஆங்கில நாளேடுகள் போன்றவை உருவாக்கிய போலித்தோற்றம்தான் உங்களையும் இவ்வாறு பேச வைக்கக் காரணமாக இருக்கிறது.

தவிர, மோடி பிற்படுத்தப்பட்டவர் என்பதால் மேல்தட்டு அதிகார வர்க்க ஊடங்கங்களால் அவரது இமேஜை டேமேஜ் செய்ய அவங்களுக்கு ஈசியாயிடுச்சி.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். குஜராத்திகளும் ஏனைய இந்திய சமூகத்தினர் போலத்தான் - straightjacketed மனப்பான்மை அவர்களுக்கும் கிடையாது.

dondu(#11168674346665545885) said...

//ஆமா டோண்டு சார் அது எப்படி நிகழ்ச்சிய ரொம்ப அருமையா கவர் பண்ணிட்டு ஒரு போட்டோவக் கூட அப்லோட் செய்யல?//
நான் காமெரா எடுத்து செல்லவில்லை. செல்பேசியையே வீட்டில்தான் விட்டுவிட்டு சென்றேன். நான் வைத்திருந்தது ஒரு நீண்ட நோட்டு புத்தகமும் ஒரு பேனாவும் மட்டுமே. லாபியில் தரையில் அமர வேண்டியதாயிற்று. இருப்பதை வைத்துத்தானே வேலை செய்ய வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வாவ். ரொம்ப குயிக்கா ரெஸ்பாண்ட் பண்றீங்க.

//நான் காமெரா எடுத்து செல்லவில்லை.//

நானும் அதே மீட்டிங்குக்குக் கேமராவுடன் வந்திருந்தேன். ஆனா மறந்துபோயி வண்டியிலேயே வச்சுட்டேன். உள்ள எடுத்துக்கிட்டு வரல ஹிஹி.

சும்மா சொல்லக்கூடாது. உங்க வருணனை இருக்கே அதுவே போதும். காட்சிகளைக் கண்முன்னாடி கொண்டாந்து வச்சிடுது. கேமராலாம் தேவையே இல்ல. என்ன மோடியை ஒரு போட்டோ புடிச்சிருக்கலாம். இல்லாங்காட்டி, குருமூர்த்தியோடையாவது நின்னு எடுத்துகிட்டு இருக்கலாமேன்னு அப்புறம் தோணிச்சி.

ஆனா இந்த கூட்ட நெரிசல், செக்யூரிட்டி செக்கிங் இதுகளை சமாளிச்சுகிட்டு கேமராவோட உள்ள இருக்கறது கஷ்டம்தன். பாருங்க இடையில் டாய்லெட் போக எழுந்துபோய் மறுபடி வந்து பார்த்தா நம்ப சீட் அம்பேல். நின்னுகிட்டே பாக்கி நிகழ்ச்சியை பார்க்கவேண்டியதாய் போயிடுச்சு. :)

maduraikkaran said...

டோண்டு சார்...

முதலில் உங்க உரைநடை பதிவிற்கு நன்றி... நேரில் பார்த்தது போன்று இருந்தது.

ஏன் DMDK கூட்டணி பற்றி நீங்கள் கவர் செய்யவில்லை.

இவ்வளவு வெட்டி நியாயம் பேசும் சோ அவர்கள் ஏன் கட்சி ஆரம்பிக்காமல் இன்னும் BJP யின் south indian agent ஆகவே இருக்கிறார்?

அன்று MGR ஐ வைத்து திராவிட இயக்கத்தை எதிர்த்தவர் இன்று விஜயகாந்தை வைத்து வியாபாரம் செய்கிறார்...

பார்த்து ராமனுக்கு அடுத்து இந்த மோடிக்கு கோயில் கட்டப்போறங்க...!!!
அழகான பாட்டிலில் வழங்கப்பட்ட hindutva போதை...

எனினும் உங்கள் எழுத்துவண்மையில் மோடியின் பேச்சையும் படிக்க காத்திருக்கிறோம்.....

அய்யா தி.வி.ம.தே.ச உறுப்பினரே...

திராவிடம் என்பது பார்ப்பன விஷத்திற்கு மருந்து....

dondu(#11168674346665545885) said...

//மோடியின் பேச்சையும் படிக்க காத்திருக்கிறோம்.....//
அதையும் போட்டாகி விட்டதே. மூன்றாம் பகுதிக்கு செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி' யை ஆதரிக்க முடிகிறது திரு.டோண்டு அவர்களே ?

மூவாயிரம் கொலைகளை நியாயப்படுத்தும் ஒருவரை நல்ல மனிதர் என்று முரட்டு நியாயம் சொல்கிறீர்களே ???
//

மொத்தமே 1000சொச்சம் உயிர் பலி தான். அதில் 794 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் அடக்கம்.


3000 த்துக்கு கணக்கு, தொடுப்பு எல்லாம் கொடுங்கள் ரவி சார் தயவு செய்து.


எது குற்ற உணர்ச்சி ?


60 இந்துக்களை ரயில் பெட்டிய்ல் ரோஸ்ட் செய்தவர்களுக்கு இல்லாத குற்ற உணர்ச்சி எனக்கு எதுக்கு சார் வேணும் ?


அப்படி ரோஸ்ட் செய்யப்பட்டது தெரிந்தும் அது ஒரு விபத்து என்று சொல்லும் மானங்கெட்ட ஜந்துக்களுக்கு இல்லாத குற்ற உணர்ச்சி எனக்கு எதுக்கு சார் வேணும் ?

Anonymous said...

//அது ஒரு விபத்து என்று சொல்லும் மானங்கெட்ட ஜந்துக்களுக்கு இல்லாத குற்ற உணர்ச்சி எனக்கு எதுக்கு சார் வேணும் ?//

விபத்தா? தன்னைத்தானே கொளுத்துகிட்டு suicide பண்ணிக்கிட்டதா இல்ல நினைச்சேன்?!

Anonymous said...

//
அய்யா தி.வி.ம.தே.ச உறுப்பினரே...

திராவிடம் என்பது பார்ப்பன விஷத்திற்கு மருந்து....
//

சரிங்கண்ணே...நான் நம்பிட்டேன்...போதுமா.


திராவிடம்=Fascism=Racism=Totalitarianism

பார்ப்பானனைக் காரணம் காட்டி எல்லாவற்றையும் ஞாயப்படுத்தும் பாங்கு இன்றும் இருக்கிறது. (Racism என்பதற்கு இது தான் அடிப்படை)


தான், தன் குடும்பம் தான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று நினைப்பதும், எல்லாவற்றையும் தன் பிடியில் வைத்திருக்கவேண்டும் என்று நினைப்பது Totalitarianism

ஒரு கட்சியின் நன்மையே தமிழகத்தின் நன்மை என நம்பவைத்து ஏமாற்றுவது, தன்னை எதிர்த்தவர்களைப் போட்டுத் தள்ளுவது Fascism.


எல்லாத்துக்கும் தி.க, தி.மு.க, அ.தி.மு.க என்று எல்லா வகை திராவிடக் கட்சியும் வெவ்வேறு proportion களில் தன்னுள் அடக்கியிருக்கும் கொள்கைகள் தான் இந்த Totalitarianism, Fascism, Racism எல்லாம்.


அம்மா கட்சி, Totalitarian கட்சி. கலைஞர் கட்சி, Fascist கட்சி. இரண்டு கட்சியிலும் Racism கொஞ்சம் உள்ளது.

Anonymous said...

//அம்மா கட்சி, Totalitarian கட்சி. கலைஞர் கட்சி, Fascist கட்சி. இரண்டு கட்சியிலும் Racism கொஞ்சம் உள்ளது.//

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. நீங்க சொன்னதெல்லாமே இன்னிக்கு தேதில ஒசாமா-பின்-லேடன் பேரைக் கேட்டாலே ஒண்ணுக்குப் போகும் இஸங்கள்தான்.

என்னிக்குமே இவங்களுக்குத் தேவைப்படுவது - முஸ்லீம் போடும் ஓட்டும், முஸ்லீம் கொடுக்கும் நோட்டும்!

திராவிடக் கட்சிகள் நாட்டை வேணா மாறி மாறி ஆளலாம், ஆனால், திராவிடக் கட்சிகளை தொடர்ந்து ஆளுவது என்னவோ இந்த மைனாரிட்டிஸம்தான். நாஞ்சில் நாடன் எழுதிய 'வாக்குப் பொறுக்கிகள்' என்கிற சிறுகதைதான் நியாபகம் வருது நேக்கு.

Anonymous said...

ஒரு தலை ராகம் படத்துல வராமாதிரி 'பொழுதோட கோழி கூவுற வேள ராசாதிராசண்' என்று ஒம்போதுகள் கூடி நின்னு கும்மி அடிக்கிறாப்ல இந்தப் பதிவில் பார்ப்பனர்கள் கூடி நின்னு கும்மி அடிக்கறாய்ங்கன்னு கேள்விப்பட்டே இங்கு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது. சூ சூ சூ.. சூ கும்மி!
சூப்பர் கும்மி!

டோண்டு சாருக்கு ரெண்டு கேள்விகள்:

1. திருநாவுக்கரசரை துக்ளக் விழாவில் ப்ளாக் அவுட் பண்ணிட்டாய்ங்கன்னு பேசிக்கிட்டாங்களே?! நெசமாவா?
2. இல.கணேசன், குருமூர்த்தி, சோ, மோடி, எச்.ராஜா, இராம.கோவாலன், தினமலர் நிருபர்கள் என்று அரங்கு நிறைந்த பார்ப்பன கும்பலில் பார்ப்பனரல்லாத திருநாவுக்கரசர் ரொம்பவே சங்கடப்பட்டாராமே?! மெய்யாலுமாவா?

பணிவன்புடன்,
திண்டுக்கல் கிருபாகர்.

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

ஆற்றொழுக்கான நடை,விதயங்கள் சொன்னவிதம் அருமை....
உங்கள் தொழில் மொழி சார்ந்தது என்பதை நிரூபிக்கும் பதிவு !!!!!

dondu(#11168674346665545885) said...

//இல.கணேசன், குருமூர்த்தி, சோ, மோடி, எச்.ராஜா, இராம.கோவாலன், தினமலர் நிருபர்கள் என்று அரங்கு நிறைந்த பார்ப்பன கும்பலில் பார்ப்பனரல்லாத திருநாவுக்கரசர் ரொம்பவே சங்கடப்பட்டாராமே?! மெய்யாலுமாவா?//
உளறல். மோடி பார்ப்பனரா?

வெளியே செல்லும்சமயம் திருநாவக்கரசரை பார்த்தேன். அவருடன் பேசினேன். இம்முறையாவது அவர் தனது சொந்த தொகுதியில் பாஜக சார்பில் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இம்முறையாவது அவர் தனது சொந்த தொகுதியில் பாஜக சார்பில் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.//

அதிகுமவுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டாக்கா, திருநாவுக்கரசருக்கு சீட் கிடைக்காதுங்களே. கென்வாசிங்குக்கே வரக்கூடாதுன்னு அம்மணி கண்டிசன் போடுமே. இதப்பத்தியும் நீங்க அவருகிட்ட பேசினீங்களா?

உங்களுக்கு 'வலையுலக சோ' என்று பட்டம் கொடுத்தால் கோவிச்சுக்க மாட்டீங்களே?

திண்டுக்கல் கிருபாகர்

dondu(#11168674346665545885) said...

திருநாவுக்கரசரின் கார் மும்பலில் மாட்டி கொண்டு மேலே செல்ல வழியில்லாமல் நின்று கொண்டிருந்த அந்த குறுகிய நேரத்தில் நான் அவரிடம் சுருக்கமாகக் கூறியது, "நீங்கள் இம்முறையாவது நிச்சயம் உங்கள் தொகுதியில் நிற்க வேண்டும். கூட்டணி கட்சியினர் யாராக இருந்தாலும் இதில் தலையிட அனுமதிக்கலாகாது". இதற்கு மேல் பேச நேரமில்லை, ஏனெனில் மோடி அவர்கள் கார் எல்லையை தாண்டியதும் தடுப்பு விலக கூட்டம் நகர ஆரம்பித்தது, நானும் செல்ல வேண்டியதாயிற்று. நான் கூறியதை அவர் முழுக்கவே புரிந்து கொண்டு புன்னகை செய்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சொந்த தொகுதியா? எல்லாத்துக்கும் ஆப்பு வச்சாச்சு அப்பே. புதுக்கோட்டை தொகுதியே கிடையாது.
தெரியும்லே

Anonymous said...

//சொந்த தொகுதியா? எல்லாத்துக்கும் ஆப்பு வச்சாச்சு அப்பே//

டோண்டு இன்னாமோ கனா கண்டுகினு கிறான்னு விடுவியா. நீ வேற....

டோண்டு,
நீ உடு மாமே
உன் இட் கவுண்டர்* ரொம்பட்டும்

ஜாம்பஜார் ஜகன்னாத ஐயர்
-----------------------------------
* கவுண்டர் - counter

Anonymous said...

//ஒரு தலை ராகம் படத்துல வராமாதிரி 'பொழுதோட கோழி கூவுற வேள ராசாதிராசண்' என்று ஒம்போதுகள் கூடி நின்னு கும்மி அடிக்கிறாப்ல இந்தப் பதிவில் பார்ப்பனர்கள் கூடி நின்னு கும்மி அடிக்கறாய்ங்கன்னு கேள்விப்பட்டே இங்கு வந்தேன்//

இவர்களாவது பரிதாபத்துக்குரியவர்கள். சாக்கடையில் புரண்டு மனித கழிவினை தின்று கொண்டு அலையுமே ஒன்று அந்த இனத்தை விட கேவலமான திராவிட பகுத்தறிவு கும்பல் போடாத கும்மியா?

Anonymous said...

///இந்துக்களை ரயில் பெட்டிய்ல் ரோஸ்ட் செய்தவர்களுக்கு இல்லாத குற்ற உணர்ச்சி எனக்கு எதுக்கு சார் வேணும் ?///

சார்

இந்துக்களை ரயில்பெட்டியில் ரோஸ்ட் செய்தவர்கள் - அது யாராக இருந்தாலும் - குற்றவாளிகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள்...

சரி 1000 அப்படீன்னே வெச்சுக்குவோம்...அவர்கள் அப்பாவி மக்கள் அல்லவா ? அவர்களை கொல்ல அனுமதித்தது யார் ? உத்தரவிட்டது யார் ? இதைத்தான் இந்துமதம் சொல்கிறதா ? இதைத்தான் ஸ்ரீராமர் சொல்கிறாரா ? இதைத்தான் கீதை சொல்கிறதா ? இந்துமதத்தின் நியாயவாதிகள், யோகிகள் சொல்கிறார்களா ? இது தான் இந்துமதத்தின் நீதியா ? இது எந்த டைப் வதம் ? என்ன நியாயம் சார் இது ?

என் பார்வையில் அப்பாவி மக்களை கொன்ற / அந்த நிகழ்வை நியாயப்படுத்தும் - அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி - குற்றவாளிகளே...

அந்த வகையில்தான் நான் மோடியை பார்க்கிறேன்...இதில் சாதி எங்கே வந்தது, உயர்சாதியினரின் ஊடகங்கள் எங்கே வந்தனர் ?

Anonymous said...

//உயர்சாதியினரின் ஊடகங்கள் எங்கே வந்தனர் ?//

Mr.Ravi, it was the left leaning english media (both print and electronic) that made hue and cry against anything that BJP/RSS did while conveniently hiding the crime committed by the fundementalist muslims (i only mean those fundemantilists not the entire community is to be faulted). The whole issue was blown out or proportion and this is pure politics played through anti-BJP sentiment while religion does not have anything to do with it - do you agree the anti-muslim sentiment is prevalent among
non-Hindus too, particularly in the aftermath of twin tower strike, Al-Qaeda, the separatist movement in Kashmir - all have made even the Sikhs, Christians, Jains and Buddishts also to take the anti-Musilm line. The conversion of tribals is the only issue that stands between the Hindus and a sectino of Christians, otherwise there is perfect harmony between the two communities.

Modi was a made a scape goat that even BJP and RSS are not trying to sheild him when it mattered most. I hope you remember that the RSS in Gujarat distanced itself with election this time primarily due to the rebellion by a section of BJP. So Modi had to bank on his own personality and he won the hearts of millions of Gujaratis.

S.Dhayanidi

Anonymous said...

//
சரி 1000 அப்படீன்னே வெச்சுக்குவோம்...அவர்கள் அப்பாவி மக்கள் அல்லவா ? அவர்களை கொல்ல அனுமதித்தது யார் ? உத்தரவிட்டது யார் ? இதைத்தான் இந்துமதம் சொல்கிறதா ? இதைத்தான் ஸ்ரீராமர் சொல்கிறாரா ? இதைத்தான் கீதை சொல்கிறதா ? இந்துமதத்தின் நியாயவாதிகள், யோகிகள் சொல்கிறார்களா ? இது தான் இந்துமதத்தின் நீதியா ? இது எந்த டைப் வதம் ? என்ன நியாயம் சார் இது ?
//

அதென்ன சார் போகிற போக்கில ஒரு நம்பரை அடிச்சுவுட்றது, எவனும் எதிர்த்துக் கேக்காட்டி அதுவே உண்மையாகல்ல ஆகிருக்கும் ?

இந்து மதத்தின் நீதி, எல்லா இருக்க வேண்டிய எடத்துல தான் இருக்கு. அரசு யெந்திரம் எங்கும் போல் குஜராத்திலும் படு மெதுவாகத்தான் செயல்படுகிறது. கலவரம் வெடித்த அடுத்த நாளே ராணுவம் வந்தது.


கலவரத்தாருடன் கைகோர்த்திருந்தால் மோடி ஏன் அடுத்த நாளே ராணுவத்தை வரவழைத்து 254 "அப்பாவி" இந்துக்களைக் கொல்லச் செய்ய வேண்டும் ?தயவு செய்து, ஸ்ரீ ராமர் இது தான் சொன்னதா ? இல்லை இதெல்லம் சொல்லவில்லையா என்றெல்லாம் கேட்காதீர்கள். உங்களைப் போன்றவர்கள் உங்களுக்கு வசதி என்றால் ஸ்ரீ ராமர் அவதாரப் புருஷனாகவும் தேவையில்லை என்றால் ராமன் என்பவன் கற்பனைக் கதாப்பாத்திரம் என்று அவரை அவதூறுப் பிரச்சாரத்திற்கும் பயன் படுத்திக் கொள்ளாதீர்கள்.


கீதை, இந்த விஷயத்தில் தெள்ளத் தெளிவாக எதைச் சொல்லணுமே அதைச் சொல்லிவிட்டது. அதைக் கடைபிடித்திருந்தால் இன்னேரம் எந்தக் குல்லாவும் இந்தியா என்ன பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில்கூட இருந்திருக்காது, அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


//
என் பார்வையில் அப்பாவி மக்களை கொன்ற / அந்த நிகழ்வை நியாயப்படுத்தும் - அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி - குற்றவாளிகளே...

அந்த வகையில்தான் நான் மோடியை பார்க்கிறேன்...இதில் சாதி எங்கே வந்தது, உயர்சாதியினரின் ஊடகங்கள் எங்கே வந்தனர் ?

//


ரொம்ப நன்றி.


மோடி எந்த அப்பாவிகளையும் கொல்ல நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவவில்லை. அப்படி உதவியதாக உங்களிடம் ஆதாரம் இருந்தால் என்னிடம் காட்டுவதைவிட அதை கோர்ட்டில் காட்டி மோடியைத் தூக்கில் இடுங்கள்.


இது ஒரு சவாலாக மோடி அவர்களே இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தார்.


சும்மா, ஜோல்னா ப்பை தூக்கும் நேருவின் வழிவந்த அறிவாளிகள் சொல்வதைக் கேட்டுக் குட்டிச்சுவறாகாதீர்கள். உண்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

//
2. இல.கணேசன், குருமூர்த்தி, சோ, மோடி, எச்.ராஜா, இராம.கோவாலன், தினமலர் நிருபர்கள் என்று அரங்கு நிறைந்த பார்ப்பன கும்பலில் பார்ப்பனரல்லாத திருநாவுக்கரசர் ரொம்பவே சங்கடப்பட்டாராமே?! மெய்யாலுமாவா?
//

திண்டுக்கல் கிருக்கருக்கு, மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற விஷயம் தெரியாதா ?


மோடி ஒரு பார்ப்பானப் பன்னாடை இல்லை என்பதற்காகவே பலப் பலப் பார்ப்பானப் பன்னாடைகள் அவனை எதிர்க்கிறார்கள். பாதிக்கும் மேல் பத்திரிக்கை உலகை இத்தகய பன்னாடைகள் தான் நடத்துகிறார்கள்.

Anonymous said...

//சும்மா, ஜோல்னா ப்பை தூக்கும் நேருவின் வழிவந்த அறிவாளிகள் சொல்வதைக் கேட்டுக் குட்டிச்சுவறாகாதீர்கள். உண்மையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்//

I agree with you in toto.
yepporul yaaryaarvai kaetpinum
apporul meiyporul kaanbathu arivu!

Modi is a straightforward person and an entirely different politician compared to the voter hungry typical politician.

anbudan,
S.Dhayanidi

Anonymous said...

//Modi is a straightforward person //

straightforward-ஆ மறைக்காமல் நேராகவே அப்பாவி முசுலிம்களை கொன்ன மதவெறியன்

லக்கிலுக்

Anonymous said...

//அப்பாவி முசுலிம்களை கொன்ன மதவெறியன்

லக்கிலுக்//

அப்பாவி முசுலிம்களை கொன்ன மதவெறியன் லக்கிலுக்?!

what does that mean? luckylook killed many innocent muslims?

'<#@/#&/@^<$##'
yethaavathu purigirathaa?
that is how you will also not understand what the reality is.
or
are you trying to refuse believing the reality like our left parties?

S.Dhayanidhi

Anonymous said...

ஹிந்தோள ராகத்தில் ஒரு பாட்டு போடுங்கோன்னா :)

Anonymous said...

பகுத்தறிவற்ற உணர்ச்சியுமற்ற புடுக்கறுந்த பன்னாடைகள் என்னிக்குமே மோடியையும், சோவையும், உங்களையும் குறை சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. வங்கள்ளாம் திருந்தாத திருந்தாத வருந்தாத ஜென்மங்கள். நீங்கள் இந்தப் பன்னாடைப் ப்பசம்க்களோட பின்னூட்டத்தை எல்லாம் வேலமயிறா பதிவு பண்ணி Masochistன்னு பேரு வாங்கினது தான் மிச்சம்.

தமிழில் மொக்கை போடும் இந்தப் பதிவர்கள் மத்தியில் அதிகமான அளவிற்கு misinterpret செய்யப்பட்ட ஒரு நபர் இருக்காருன்னா, அது சாட்சாத் நம்ப டோண்டு ராகவந்தான்னு சொல்ற அளவுக்கு இருக்கீங்க.
நீங்க நல்லதைச் சொன்னாலும், பொதுவான சமாச்சாரங்களயோ, இல்லீன்னா உங்க வாழ்கையில நடந்த flashback சம்பவங்கள share பண்ணிக்கிட்டாலோ, அதிலும் இந்த டோண்டு எதனாச்சும் 'உள்குத்து' வச்சிருப்பாண்டான்னு நினைக்கிற அல்பைகளின் comments இனிமேலாச்சும் உங்க பதிவில் வராம பார்த்துக்குங்க ஐயா.

யாரோ ஒரு புண்ணியவான் இதுக்கும் மின்னாடி ஒரு பின்னூட்டம் போட்டார் - 'டோண்ட அவர்கள் தமிழ்மணத்திற்கு அடித்த ஜால்ரா' என்று. உண்மை ஐயா அது நூத்துக்கு நூறு உண்மை. இனியும் அடிக்காதீர்கள் ஐயா சால்ரா. Self inflicted injuries போதும். நமது இந்து சமுதாயத்தின் மிகப் பெரிய weakness இதுதாங்க.

அன்புடன்,
டோண்டுப் ப்ரியன்.

dondu(#11168674346665545885) said...

//'டோண்ட அவர்கள் தமிழ்மணத்திற்கு அடித்த ஜால்ரா'//
தமிழ்மணத்தின் ப்ளஸ் பாயிண்டுகளாக நான் எழுதியவை உண்மையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன. அவை அப்படியே உள்ளன. அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

மற்றப்படி திட்டுபவர்களை எல்லாம் புறக்கையால் விலக்கியே முன்னுக்கு செல்கிறேன்.

என் நிலைப்பாட்டை வற்புறுத்தி நான் பேசுவது மசோக்கிசம் என்றால் அப்படியே ஆகுக.

அதே சமயம் நீங்கள் என்மேல் உள்ள அக்கறையால் பேசுகிறீர்கள் என்பதையும் உணர்ந்து அதற்காக நன்றி கூறுகிறேன்.

மேலும் டோண்டு ராகவன் சிலருக்கு நன்றி கூறுகிறான் என்றால் அவ்வாறு நன்றி கூறப்படுபவர்கள் அலறுவதையும் பார்த்து புன்னகை புரிகிறேன். நீங்கள் அப்படியில்லை எனவும் நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//என் நிலைப்பாட்டை வற்புறுத்தி நான் பேசுவது மசோக்கிசம் என்றால் அப்படியே ஆகுக.//

உங்களது நிலைப்பாடு உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உருவானது என்றால் அது மசோக்கிசம் ஆகாது.

Anonymous said...

// நீங்கள் அப்படியில்லை எனவும் நம்புகிறேன். //

உங்க நம்பிக்கை வீண் போகாது.

அனா நாங்க என்னமோ, சொல்றதை சொல்லிட்டோம். நீங்களும் கேக்குறாப்புல இல்லை. இதுக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் தம்மாத்தூண்டு கூட பொருத்தமா இல்லை. இந்த விஷயத்துல எங்கள மாதிரி ஆட்களுக்கு உங்கமேல வருத்தம்தான்னு அறிவீங்களா?

எனக்கு ஒரு சந்தேகம் - வயசு ஆக ஆக 'பொறுமை' குணம் கூடுமா இல்லை 'i dont care for anybody' என்கிற மனப்பான்மை கூடுமா?

அன்புடன்,
டோண்டுப் பிரியன்

Anonymous said...

//பகுத்தறிவற்ற உணர்ச்சியுமற்ற புடுக்கறுந்த பன்னாடைகள் என்னிக்குமே மோடியையும், சோவையும், உங்களையும் குறை சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. //

Dear Mr.Dondu, I request you to disallow such comments aired with unparliamentry words like 'புடுக்கறுந்த' and all, irrespective of the concept/view of the comment. Though I fully agree with the content of what he said, I had to disapprove the language that he used in order to emphasize his point. Such vehemence is uncalled for, and is bound to create enimity among bloggers for no reason. And I honestly and sincerely hope, you would also agree with me in this.

I sincerly compliment you for your extensive and nonpartisan coverage of the Thuglak Annual function and I would also like to appreciate for the efforts that you took in allowing our views over your write-ups.

Cheers and wish you all the best.

Anbudan,
S.Dhayanihi

Anonymous said...

A nice blog and a very vivid discussion. Thanks for providing this oppurtunity for us. Please write your comments about CHO's 'yengae brahmanan' in which he has criticised brahminism and also tried his best to remove the stigma surrounding Hinduism.

Thanks.

Devraj Johnson

Anonymous said...

//எனக்கு ஒரு சந்தேகம் - வயசு ஆக ஆக 'பொறுமை' குணம் கூடுமா இல்லை 'i dont care for anybody' என்கிற மனப்பான்மை கூடுமா?//

இரண்டுமே கூடும்.

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1946-ல் பிறந்த எனக்கு அப்படி என்ன வயதாகி விட்டது என்று இந்த கேள்வி கேட்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சமீபத்தில் 1946-ல்//

What? சமீபத்தில்? 1946-ல்?

Is 1946 a recent past?

Sorry - if I had offended you feelings.

anbudan,
S.Dhayanidi

Anonymous said...

//What? சமீபத்தில்? 1946-ல்?
Is 1946 a recent past?//

இன்னா, தலீவா, ப்ளாக்குகு புச்சா? 1846-ஏ சமீபம்தான். புர்ரீதா?

Anonymous said...

samebathil december 6am thethi babar masuthi idithargale ahtuvum samebamthan

komanakrishnan (madipakkam)

Anonymous said...

//
samebathil december 6am thethi babar masuthi idithargale ahtuvum samebamthan

komanakrishnan (madipakkam)
//

சமீபத்தில், 725 ல் ஜுனாயத் என்ற அரபுக் கொள்ளைக்கூட்டத் தலைவன் சொம்நாத் கோவிலை உடைத்தானே,


சமீபத்தில், 1024 ல் முகம்மது கஜினி என்ற பாலைவனத்தில் பேயை வழிபடும் நாதாரி அதே கோவிலை உடைத்து அதன் லிங்கத்தை கட்டி இழுத்துச் சென்று வெள்ளிக் கிழமை மசூதிப் படிகளில் வைத்தானே...


சமீபத்தில் 1297 ல் மற்றும் 1394 ல் தில்லி சுல்தானும்

சமீபத்தில்
1706 ல் அவுரங்கசீப்பும் உடைத்தார்களேஎல்லாமே, சமீபம் தான் டா வெண்ணை.

Anonymous said...

//samebathil december 6am thethi babar masuthi idithargale ahtuvum samebamthan

komanakrishnan (madipakkam)//

And the congress govt. letting it happen for cheap political gain was also samebamthan Mr.komanakrishnan.

Anonymous said...

//சமீபத்தில், 725 ல் ஜுனாயத் என்ற அரபுக் கொள்ளைக்கூட்டத் தலைவன் சொம்நாத் கோவிலை உடைத்தானே,

சமீபத்தில், 1024 ல் முகம்மது கஜினி என்ற பாலைவனத்தில் பேயை வழிபடும் நாதாரி அதே கோவிலை உடைத்து அதன் லிங்கத்தை கட்டி இழுத்துச் சென்று வெள்ளிக் கிழமை மசூதிப் படிகளில் வைத்தானே...

சமீபத்தில் 1297 ல் மற்றும் 1394 ல் தில்லி சுல்தானும்

சமீபத்தில்
1706 ல் அவுரங்கசீப்பும் உடைத்தார்களே

எல்லாமே, சமீபம் தான் டா வெண்ணை//

ivaiyellam RSS, VHP, Sangparivar, dondu pondra hindu madhaveri gumbal kilappi vitta poikal. viramani ayya ezuthiyulla 'hindu mathaththin marupakkam' padithaal unmai vilangumda vennai

komanakrishnan (luckylook)

Anonymous said...

கோமணக் கிருட்டினனின் இந்து மத அறிவு வீரமணி முனிவர் எழுதிய இந்து மதத்தின் மறுபக்கம் என்ற புத்தகம் தான். அதை விட்டால் வேறு எத்தகய மத அறிவும் பெறவில்லை என்பது அவனது பின்னூட்டத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.அவன் பெயரில் இருக்கும் கோமணத்துணியின் அளவு கூட இந்து மத அறிவு இல்லாத அவங்கொய்யா வீரபெல்லு எழுதிய புத்தகம் தான் அவனுக்கு இந்து மதத்தைப் பற்றி சொல்லித் தந்திருக்கிறது, அதை அப்படியே நம்பும் அளவுக்குத்தான் அவனுக்கே அறிவு இருக்கிறது என்று அர்த்தம். இவன் கோமணக்கிருட்டினனா, கேணைக்கிருட்டினனா ?இத்தகய அறிவிலிகள் எல்லாம் இந்து மதத்தைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேச விடும் சுதந்திரம் இந்து மதத்தில் இருக்கிறது.

Anonymous said...

ங்கொய்யால கோமணக்கிருஷ்ணா,


அதெல்லாம் உண்மையில் நடந்த விசயம்லெ...எப்படி டிசம்பர் 6 ல் மசூதியை இடிச்சது உண்மையோ அதே அளவு
உண்மை அந்த அரபுத் தே%^&# மகன்கள் வந்து இந்துக் கோவிலை உடைத்தது.


RSS, எல்லாம் இதில் ஒண்ணியும் செய்ய முடியாது. இதெல்லாம் தப்பு என்றால் விக்கிப்பீடியாவே தப்பு தான் என்றாகிவிடும். நீ ஒருத்தன் வேணா முட்டாளா இருக்கலாம். ஒலகம் பூரா இருந்து விக்கிபீடியாவை நிர்மாணிக்கும் லட்சோப லட்சம் விக்கிபீடியா பயணர்கள் எல்லாம் முட்டாளா இருக்க முடியாது.


அந்த வெண்ணை வெட்டி வீரப்பன் எந்தப் பல்கலைக்கழகத்தில் இந்து மதத்தைப் பற்றிப் படித்து மறுபக்கம், பின்பக்கம், முன்பக்கம், சைடு பக்கம் என்று எழுதியிருக்கான் ? அவனுக்கு ஏதாவது ஒரு வேத மந்திரம் தெரியுமா ? இல்லை, ஆகம விதி தான் தெரியுமா ? இல்லை திருவாசகத்தைத் தான் படித்துணர்ந்தவனா ? இவனெல்லாம் எந்த மதத்தின் மறுபக்கத்தையும் எழுத லாயக்கில்லாதவன், அவன் மறுபக்கமே அவனுக்குத் தெரியாது, அவன் பேச்சைக் கேட்டால் நீ உருப்புடாமல் போவாய் என்பது திண்ணம். அதைப் படித்தேன் என்பதெல்லாம் வெளியில் சொல்லாதே, ஒரு பய ஒன்னைய மதிக்க மாட்டான்.

Anonymous said...

//அந்த வெண்ணை வெட்டி வீரப்பன் எந்தப் பல்கலைக்கழகத்தில் இந்து மதத்தைப் பற்றிப் படித்து மறுபக்கம், பின்பக்கம், முன்பக்கம், சைடு பக்கம் என்று எழுதியிருக்கான் ? அவனுக்கு ஏதாவது ஒரு வேத மந்திரம் தெரியுமா ? இல்லை, ஆகம விதி தான் தெரியுமா ? இல்லை திருவாசகத்தைத் தான் படித்துணர்ந்தவனா ?//
வீரமணி அய்யா சும்மா தாந்தோன்றிதனமாக எழுதவில்லை. நன்கு ஆய்ந்துதான் எழுதியுள்ளார். மேலும் பல இந்து ஆன்மீகவாதிக்களுக்கு தெரியாத சமசுகிருத சுலோகங்களும் அதன் அருத்தங்களும் அவருக்கு சூப்பராக தெரியும். அதனால்தான் பல இந்து மதத்தின் பல ஆபாச செய்யுட்களை புட்டு புட்டு வைத்துள்ளார். இவ்வளவு பேசும் வெண்ணைகளே இந்த ஆபாச இந்து மதத்தினால் தமிழனுக்கு என்ன நன்மை, சொல்ல முடியுமா?

கோமணகிருஷ்ணன்

Anonymous said...

Mr. Dondu,

I have given a fitty reply to Komanakrishnan (in tamil)... where is that post? you are not going to publish that?

Vikram

Anonymous said...

டேய் கோமணம், உன் அய்யாவுக்கு சொந்தமா உழைத்து கட்டிய ஒரு கோமணம் இருக்கா? சும்மா சாதிவெறியை தூண்டிவிட்டு மத்தவன கிளப்பிவிட வேண்டியது. பார்ப்பான் நோர்ப்பான் அப்படின்னு விடுதலையில திட்டி எழுதிவிட்டு பார்ப்பாத்தி காலில் விழுந்துவிட்டு பெரியார் டிரஸ்ட் பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டு விட்டு இப்போது திமுக பக்கம் பெரிய நல்லவர் மாதிரி நடித்து ஒட்டிகொண்டிருக்கிறாரே? ஏன் இந்த புத்தி முதலில் வரவில்லையோ? அவர் புத்தகம் என்ற பெயரில் எழுதிய ஒரு குப்பையை படித்து விட்டு நீயும் இங்கு வந்து உளறிக்கொண்டிருக்கிறாயே? உனக்கு சொந்தமா சிந்திக்கிற புத்தி கிடையாதா? உன் மாதிரி ஆட்களை தூண்டிவிட்டு திராவிடம் பேசுகிற தலைவர்கள் கோடி கோடியா சுருட்டி சுகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே. உனக்கு ஏதாவது உறைக்கிறதா? உனது அய்யாவுக்கு மற்ற மதத்தை பற்றி அவரது விடுதலையில் விமர்சித்து பேச தில் உண்டா? இஸ்லாத்தின் மறுபக்கம் அல்லது கிருத்துவத்தின் மறுபக்கம் என புத்தகம் எழுதுவாரா?

dondu(#11168674346665545885) said...

விக்ரம் அவர்களே,

அவன் இவன் என்றெல்லாம் வீரமணி அவர்களை பற்றி பேச வேண்டாமே. அவரது வயதுக்கு மரியாதை தரலாமே. ஆகவே உங்கள் பின்னூட்டத்தை சற்றே எடிட் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Thanks Dondu Sir, for your publishing of my comment and your advise.

"அவன் பெயரில் இருக்கும் கோமணத்துணியின் அளவு "

"அந்த வெண்ணை வெட்டி வீரப்பன்"

"அவனுக்கு ஏதாவது ஒரு வேத மந்திரம் தெரியுமா ? இல்லை, ஆகம விதி தான் தெரியுமா ? இல்லை திருவாசகத்தைத் தான் படித்துணர்ந்தவனா ? இவனெல்லாம் "

But, you have allowed the above similar comments by others in previous posts on veeramani? Just curious!!!

Vikram

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது புரிகிறது விக்ரம் அவர்களே. முதலில் அவ்வாறு அனுமதித்ததும் தவறுதான் என்பதை உணர்ந்ததும் அதை மீண்டும் செய்யாதிருக்கும் முயற்சியே அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோன்டு அய்யா, உங்கள் பதிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் நல்லெண்ணத்துடன்தான் சொல்கிறீர்கள். ஆனால்? வீரமணி வயதுக்கு தகுந்த மாதிரியா நடந்து கொள்கிறார்? பார்ப்பனர்களை இழிவாக பேசியும் விடுதலையில் எழுதியும் வருகிறாரே? அது தவறில்லையா? திராவிடம் பேசும் இணையர்களை பாருங்கள்? பார்ப்பனர் பற்றி எவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்? இவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்கிறீர்களா? ஏன் நாம் மட்டும் ஏன் பயந்து பதிலடி கொடுக்காமல் தண்மையாக பேசவேண்டும்? சொல்லுங்கள்?

வேல்ஸ்

dondu(#11168674346665545885) said...

//வீரமணி வயதுக்கு தகுந்த மாதிரியா நடந்து கொள்கிறார்? பார்ப்பனர்களை இழிவாக பேசியும் விடுதலையில் எழுதியும் வருகிறாரே? அது தவறில்லையா? திராவிடம் பேசும் இணையர்களை பாருங்கள்? பார்ப்பனர் பற்றி எவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்? இவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்கிறீர்களா? ஏன் நாம் மட்டும் ஏன் பயந்து பதிலடி கொடுக்காமல் தண்மையாக பேசவேண்டும்? சொல்லுங்கள்?//
முதற்கண் டோண்டு ராகவன் பயப்படுவான் என்று அவனது விரோதிகள் கூட கூற இயலாது. வீரமணியோ அல்லது திராவிட சிந்தனையுடைய இணைய நண்பர்களோ அவரவர் தரத்துக்கு தகுந்தபடிதான் நடந்து கொள்வார்கள். நாமும் அவர்கள் மரியாதைக் குறைவாக பேசுவதை போல பேச ஆரம்பித்தால் நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? இப்போது நான் விக்ரம் எழுதிய பின்னூட்டத்தை எடிட் செய்து போட்டாலும் கருத்தை சிதைக்கவில்லை. வசவுகளை, ஒருமை பிரயோகங்களை மட்டும் மாற்றினேன். இப்போதுதான் அது முழுவீச்சுடன் இருக்கிறது. ஐயா, நீங்கள், அவர் என்றெல்லாம் எழுதினாலும் நம் உணர்ச்சிகளை வலிமையுடன் கூற இயலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நாமும் அவர்கள் மரியாதைக் குறைவாக பேசுவதை போல பேச ஆரம்பித்தால் நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?//

adra sakka adra sakka

Anonymous said...

மாண்புமிகு கோமணத்தின் கவனத்துக்கு இன்னொரு விஷயம். வீரமணி அய்யா, நாய், பூனை, கழுதை குட்டிகளுக்கு பால் வாங்கிவரும்போதுதான் பார்ப்பன ஓட்டலா என்று பகுத்தறிவுடன் யோசிப்பார். பணம், பொருள், முக்கியமாக மேற்குறிப்பிட்ட பெரியார் டிரஸ்ட் போன்ற விஷயங்களில் முதல்வர் பார்ப்பாத்தியா என்றெல்லாம் பார்க்கமாட்டார். அப்போதுதானே பெரிய அளவில் சுருட்ட முடியும்!! ஆகவே தனக்கு தேவைப்படும்போது பார்ப்பனருடன் ஒட்டிக்கொள்வது, தேவைப்படாதபோது அவர்களை திட்டுவது, இதுதான் வீரமணி 'அய்யா(!)வின்' பகுத்தறிவு'!!!!

வேல்ஸ்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது